ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அதங்கோடு பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான அஜித் குமார்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். கடந்த 27-ஆம் தேதி மது போதையில் மாமனார் வீட்டிற்கு சென்ற அஜித்குமாரை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் கோபத்தில் அஜித் குமார் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அங்கு கடந்த 2 நாட்களாக கதவு […]
Tag: மாவட்ட செய்திகள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காமராஜ் பேருந்து நிலையத்திற்கு தினமும் ஏராளமான பேருந்துகள் வந்து செல்கின்றன. இங்கு பத்மநாபபுரம் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களும், பயணிகளும் அதிகமாக கடைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் சிலர் பேருந்து நிலையத்திற்குள் நீண்ட நேரமாக வாகனத்தை நிறுத்திவிட்டு செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, விபத்து ஏற்படும் அபாயமும் இருக்கிறது. இதனால் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகளும், பயணிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். கடந்த சில நாட்களாக போலீசார் பேருந்து நிலையத்திற்குள் […]
வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று வாலிபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூரில் லாரி ஓட்டுனரான ஜானகிராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வெள்ளகேட் பகுதியில் நின்று கொண்டிருந்த லாரியில் பழுதை நீக்கியுள்ளார். அப்போது திடீரென வந்த மூன்று வாலிபர்கள் பட்டா கத்தியை வைத்து மிரட்டி ஜானகிராமனிடம் இருந்த 2500 ரூபாய் பணம், 20,000 ரூபாய் மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றனர். அப்போது வழிப்பறி செய்த வாலிபர் ஒருவர் […]
பாலக்கோடு அருகே உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு அருகே இருக்கும் மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்தது. இதனால் மாவட்ட ஆட்சியர் உணவு பாதுகாப்பு துறை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன் பேரில் நேற்று முன்தினம் பாலக்கோடு பகுதியில் இருக்கும் மளிகை கடைகள், பெட்டி கடைகள், உணவு […]
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ஒரு லட்சம் மோசடி செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளார்கள். கடலூர் மாவட்டத்தில் உள்ள கிளிஞ்சிக்குப்பம் பகுதியை சேர்ந்த வாசு என்பவர் முகநூலை பயன்படுத்தி கொண்டிருக்கும் போது விளம்பரத்தில் சிங்கப்பூரில் வேலை வாங்கித் தரப்படும் எனவும் வேலை தேடுபவர்கள் தனது செல்போனுக்கு தொடர்பு கொள்ளும் படியும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை அடுத்து வாசு அந்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசிய போது, தனது பெயர் பாண்டியன் எனவும் மதுரையைச் சேர்ந்த பல […]
காந்தி ஜெயந்தி மற்றும் மிலாடி நபி தினங்களில் டாஸ்மார்க் கடை செயல்பட கூடாது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் அறிவுரையின்படி காந்தி ஜெயந்தி (அக்2) மற்றும் மிலாடி நபி (அக்9) அன்று அனைத்து டாஸ்மாக் கடைகளும் உரிமை பெற்ற மதுபானக்கூடங்களும் உரிமை பெற்ற மதுபான பார்களையும் மூட வேண்டும். மேலும் சில்லறை மதுபான கடைகளின் மேற்பார்வையாளர்கள் காந்தி ஜெயந்தி மற்றும் மிலாடி நபி அன்று அனைத்து விதமான மதுபான கடைகளும் […]
நிர்வாக ரீதியான புகார்கள் காரணமாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சென்ற 2019 ஆம் வருடம் முதல் கண்காணிப்பாளராக டாக்டர் கலைச்செல்வி பொறுப்பு வகித்து வருகின்றார். இவர் மீது அடிக்கடி புகார்கள் துறை ரீதியாக கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பாக வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்து 34 பேர் படுகாயம் அடைந்தார்கள். அவர்களுக்கு ஆறுதல் […]
பொள்ளாச்சியில் தனிப்படை போலீஸாருக்கு வந்த மிரட்டல் கடிதத்தை தொடர்ந்து போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றார்கள். கோவையில் சென்ற 22ஆம் தேதி பாரதிய ஜனதா, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் பிரமுகளின் வீடு உடைக்கப்பட்டு பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்யப்பட்டது. இதனால் ஏழு தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டார்கள். தொடர்பாக போலீசார் சிலரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். இதனிடையே பொள்ளாச்சி நகர மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. […]
நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 01) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கொந்தகை அகலாய்வில் கிடைத்த முதுமக்கள் தாழியில் இரும்புவாள், குவளைகள் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கொந்தகை, கீழடி, அகரம் உள்ளிட்ட பகுதிகளில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றது. கொந்தகையில் எட்டாம் கட்ட அகழ்வாராய்ச்சிக்காக நான்கு குழிகள் தோண்டப்பட்டதில் 57 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டது. இதில் பல முதுமக்கள் தாலிகள் திறக்கப்பட்டு அதிலிருந்து பொருட்கள் வெளியே எடுக்கப்பட்டபோது இரும்பு துண்டுகள், மண்டை ஓடுகள் என பல பொருட்கள் அதில் இருந்தது. இந்த நிலையில் இரண்டாவது குழியில் இருக்கும் முதுமக்கள் […]
கஞ்சா கும்பலுடன் ஏற்பட்ட மோதலால் பிரபல ரவுடி சரமாரி வெட்டி கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கரணை அம்பேத்கர் குறுக்கு தெருவில் சிலர் ஆயுதங்களுடன் சண்டை போடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தைத் தொடர்ந்து போலீஸ் கமிஷனரின் உத்தரவின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றார்கள். அங்கே 30 வயதுடைய இளைஞர் பிரைட் ஆல்வின் என்பவர் தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இருந்தார். […]
சிறந்த சுற்றுலா வழிகாட்டிக்கான விருது காரைக்குடியைச் சேர்ந்த ஆசிரியருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. தமிழக சுற்றுலா துறை சார்பாக சிறந்த சுற்றுலா இயக்குனர்கள், சிறந்த சுற்றுலா வழிகாட்டிகள், சிறந்த தங்கும் விடுதிகள், சிறந்த விமான நிறுவனங்கள் உள்ளிட்ட 17 விருதுகளை அறிவித்தது. வருடந்தோறும் செப்டம்பர் 27ஆம் தேதி உலக சுற்றுலா தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதில் சிறந்த சுற்றுலா வழிகாட்டிக்கான விருதுக்கு மொத்தம் ஐந்து பேர் தேர்வு செய்யப்பட்டார்கள். காரைக்குடியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் மணிகண்டன் என்பவருக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் […]
தனியார் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாற்றம் அடைந்தவர்கள் தாசில்தார் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள வையம்பட்டியில் உள்ள செந்தில்கணேஷ் என்ற தனியார் நிதி நிறுவனம் இயங்கி வந்துள்ளது. அந்த நிதி நிறுவனத்தில் பொதுமக்கள் பலர் பணம் செலுத்தி ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் மணப்பாறை தாசில்தார் அலுவலகத்தின் முன்பு பணத்தை மீட்டு தரக்கோரியும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காத காவல்துறையினரை கண்டித்தும் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். […]
வாலிபரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள பொதும்பு பகுதியில் ஸ்ரீகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீகண்டன் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சுல்தான்பேட்டையில் நடைபெற்று வந்த காங்கிரீட் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அங்கு சக தொழிலாளியான ஜெயராஜ் என்பவரும் தங்கியிருந்து வேலை செய்து வந்துள்ளார். கடந்த 2019-ஆம் வருடம் ஜூலை 6-ஆம் தேதி அன்று ஸ்ரீ கண்டனும், […]
எடப்பாடி அருகே திருமண மோசடியில் ஈடுபட்ட பெண் குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி அடுத்திருக்கும் சாணாராப்பட்டி பகுதியை சேர்ந்த செந்தில் என்பவரின் மனைவி ரம்யா. இவர் சென்ற ஒரு வருடத்திற்கு முன்பாக இறந்து விட்டார். இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகன் இருக்கின்றார். இந்த நிலையில் மறுமணம் செய்ய முடிவு எடுத்த செந்தில் ஆன்லைனில் திருமண செயலி ஒன்றில் பதிவு செய்து வரன் தேடி இருக்கின்றார். இந்த […]
தந்தை கண்டித்ததால் டிப்ளமோ மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் அடுத்திருக்கும் பச்சனம்பட்டி காலனியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் மணிகண்டன். இவர் மேச்சேரியில் இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இரண்டாம் வருடம் படித்து வந்த நிலையில் சென்ற 27 -ம் தேதி மாலை கல்லூரியில் இருந்து வீடு திரும்பிய மாணவர் மணிகண்டன் ஆடைகளை துவைப்பதற்காக அம்மாவிடம் கழற்றி கொடுத்துவிட்டு வீட்டுக்குள் சென்று இருக்கின்றார். பின்னர் வீட்டின் […]
நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 30) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்திய ராணுவ கல்லூரியில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம் என அரியலூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ராட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் ஜூலை 2023 ஆம் பருவத்தில் மாணவர்கள் சேருவதற்கான தேர்வு டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி நடைபெற இருக்கின்றது. இத்தேர்வானது சென்னையிலும் நடைபெற இருக்கின்றது. இந்தத் தேர்வு எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு என இரண்டு பிரிவுகளை உள்ளடக்கியதாக இருக்கின்றது. அதன்படி எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதி பெற்றவர்கள் மட்டுமே நேர்முக தேர்வில் கலந்து கொள்ள முடியும். விண்ணப்பதாரர் […]
வளநாடு அருகே 8 பேரை திருமணம் செய்து கொண்டு பணம், நகையை திருநங்கை மோசடி செய்ததாக போலீசார் விசாரணையில் தெரிய வந்திருக்கின்றது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சந்தைப்பேட்டை கனகனந்தல் பகுதியைச் சேர்ந்த பபிதா ரோஸ் என்பவர் திருநங்கை ஆவார். இவர் திருச்சி மாவட்டத்தில் உள்ள வளநாடு அருகே இருக்கும் அ.புதுப்பட்டியில் தோட்டத்துடன் வீடு கட்டியதாக சொல்லப்படுகின்றது. இதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரிடம் ஒரு சதுர அடி 1 லட்சத்து 70 ஆயிரத்துக்கு பேசி கூடுதலாக […]
சைபர் கிரைம் போலீசார் காணாமல் போன செல்போன்கள் மற்றும் பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தார்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் சென்ற மே மாதம் முதல் 130 ஸ்மார்ட் செல்போன்கள் காணாமல் போனது. மேலும் இணையதளம் மூலம் பண மோசடி நடந்ததாக சைபர் கிரைம் போலீசாருக்கு புகார்கள் வந்ததை தொடர்ந்து பெரம்பலூர் சைபர் க்ரைம் போலீசார் குழு அமைத்து மீட்பு வேட்டையில் ஈடுபட்டார்கள். இந்த நிலையில் காணாமல் போன 4 லட்சம் மதிப்பிலான 65 செல்போன்களும் இணையதள மோசடியில் இழந்த […]
விடுப்பு தர மறுத்ததால் மகளின் நிச்சயதார்த்தம் தடைபட்டதாக ஆடியோ வெளியிட்ட சிறப்பு சப் இன்ஸ்பெக்டருக்கு ஆறுதல் கூறி டிஜிபி சைலேந்திரபாபு கடிதம் எழுதியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனத்தைச் சேர்ந்த ஒரு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் தனது மகளின் நிச்சயதார்த்தத்திற்காக மாப்பிள்ளை வீட்டார் வர இருந்த நிலையில் பாதுகாப்பு பணிக்கு தன்னை அனுப்பியதால் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி தடைபட்டதாக ஆடியோ ஒன்றை வருத்தத்துடன் வெளியிட்டிருந்தார். இது இணையத்தில் வைரலாக பரவிய நிலையில் தகவல் அறிந்த தமிழ்நாடு […]
உற்பத்தி குறைவால் வெல்லம் விலை அதிகரித்துள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள மரவாபாளையம், நொய்யல், தவிட்டுப்பாளையம், ஓலப்பாளையம், நடையனூர், திருக்காடுதுறை என பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் கரும்பு நடவு செய்து வெள்ளம் தயாரிக்கும் அதிபர்களிடம் விற்பனை செய்கின்றார்கள். கரும்புகளை வாங்கிய வெள்ளம் தயாரிப்பு ஆலை, கரும்புகளை சாறு பிளிந்து பாகு காய்ச்சி அச்சு வெல்லம், உருண்டை வெல்லம், நாட்டு சர்க்கரை உள்ளிட்டவற்றை தயாரிக்கிறார்கள். இதன்பின் வெள்ளங்களை உலர வைத்து 30 கிலோ கொண்ட சிப்பங்களாக தயாரிக்கின்றார்கள். […]
அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காந்தலவாடி ஏரி அருகே 50 வயது மதிக்கத்தக்க பெண் அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த […]
தீ விபத்து ஏற்பட்டதால் 30 ஆடுகள் பரிதாபமாக இறந்தன. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொத்தாம்பாக்கம் புளியந்தோப்பு தெருவில் பெரியசாமி-அஞ்சலாட்சி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் 30-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் ஆட்டு கொட்டகைக்கு அருகே இருந்த வைக்கோல் போரில் நேற்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் தீ கொட்டகையில் வேகமாக பரவியதால் 30 ஆடுகள் தீயில் கருகி பரிதாபமாக இறந்தன. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
தாயை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எஸ்.என். புரம் பகுதியில் ஈஸ்வரி(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கூலி தொழிலாளியான அருணாச்சல பாண்டியன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அருணாச்சல பாண்டியன் மது குடிப்பதற்கு பணம் கேட்டு அடிக்கடி தனது தாயுடன் தகராறு செய்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு மது குடிக்க பணம் கேட்டு பாண்டியன் தகராறு செய்துள்ளார். அப்போது பணம் தர மறுத்த ஈஸ்வரியை […]
முதியவரை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆனைகுட்டத்தில் இருக்கும் அகதிகள் முகாமல் பெரியசாமி(77) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முதியோர் ஓய்வூதியம் பெற்று வந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு பெரியசாமியின் வீட்டிற்கு அருகே வசிக்கும் சுமன் என்பவர் முதியவரின் கழுத்தை நெரித்து 6000 ரூபாயை பறித்து சென்றுள்ளார். இதனை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெரியசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த […]
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் நேற்று உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு வளர்ப்பு பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது அதிகாரிகள் பொதுமக்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். இதனை அடுத்து இயற்கை பாதுகாப்பு மைய கால்நடை மருத்துவர்கள் பாரத் ஜோதி, சுகுமாரன் ஆகியோர் வளர்ப்பு பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது, வீட்டில் வளர்க்கும் நாய்களை தெருக்களில் விடக்கூடாது. கூடலூர், முதுமலை வனப்பகுதியில் இருக்கும் வனவிலங்குகளுக்கு நோய் பாதிப்பு இல்லை. […]
விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள், தொழில் முனைவோர் வங்கி கடன் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். இந்திய அரசின் கால்நடை பராமரிப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள், தொழில் முனைவோர், தனியார் மற்றும் சிறு,குறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு வங்கி கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள், தொழில் முனைவோர், தனியார் மற்றும் சிறுகுறு நடுத்தர நிறுவனங்கள் https://dahd.nic.in/ahid அல்லது https://ahidf.udyamimitra.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் தகுதியின் […]
சாதாரண விசைத்தறிகளில் மின்னணு பலகை பொருத்த மானியம் வழங்கப்படுவதாக ஆட்சியர் கூறியுள்ளார். வேலூர் மாவட்ட ஆட்சியர் செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, வேலூர் மாவட்டத்தில் சாதாரண விசைத்தறிகளை பயன்படுத்தும் நபர்கள் 50% மானியத்துடன் மின்னணு பலகை பொருத்த விண்ணப்பம் செய்யலாம். சாதாரண விசைக்தறிகளில் உற்பத்தி செய்யும் பொழுது நூலிழைகள் அடிக்கடி அறுந்து விழுகின்றது. இதனால் உற்பத்தி திறன் பாதிக்கப்படுகின்றது. ஆகையால் இதை தவிர்ப்பதற்கு மற்றும் உற்பத்தி திறனை அதிகப்படுத்துவதற்கு கூட்டுறவு மற்றும் கூட்டுறவு அமைப்பு […]
மதுரையில் உள்ள ஹைகோர்ட்டில் பாளையங்கோட்டை சேர்ந்த அய்யா என்பவர் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கடந்த 2013-ம் ஆண்டு மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் தடையை மீறி பல்வேறு மாவட்டங்களில் மனித கழிவுகளை மனிதனை அகற்றும் அவலம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. எனவே மனித கழிவுகளை இயந்திரங்களின் உதவியுடன் ரோபோட் மூலம் சுத்தம் செய்வதற்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. […]
வேலூர் மாவட்டத்தில் உள்ள விருதம்பட்டு பாலாற்றில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், காட்பாடி என்சிசி பத்தாவது பாட்டாலியன் மாணவர்கள் ஆகியோர் இணைந்து இந்த பணியை செய்தனர். இதனை அடுத்து பாட்டாலியன் கமாண்டிங் அலுவலர் லெப்டினன்ட் சஞ்சய் சர்மா தலைமையில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டு தூய்மை பணி நடைபெற்றது. இதற்கு நிர்வாக அலுவலர் லெப்டினன்ட் கர்னல் சுந்தரம், மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் ஒருவர் பலியான நிலையில், 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வாழக்காய்பட்டியில் அழகர்சாமி(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மேட்டுக்கடையில் கேபிள் டிவி ஆபரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று காலை அழகர்சாமி தனது நண்பரான சித்திக் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கவராயபட்டி பிரிவில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் அழகர்சாமியின் […]
லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக அண்ணா பல்கலைக்கழக கல்லூரி உதவி பேராசிரியரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி பகுதியில் பெருமாள்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் குளத்தில் இருந்து மண் அள்ளி வந்து தனது விவசாய நிலத்தை மேம்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளார். இதற்காக பெருமாள்சாமி கனிமவளத்துறையினரிடம் சென்று மண் அள்ளுவதற்கு அனுமதி தருமாறு கேட்டுள்ளார். அப்போது குளத்தின் மண்ணை பரிசோதனை செய்து அறிக்கை தந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் […]
மோட்டார் சைக்கிள் மீது டிராவல்ஸ் பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் காரியபெருமாள் கோவில் தெருயில் கருணாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு என்ஜினீயரான ராகுல்குமார்(32) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி செய்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் ஒரு கடையில் ராகுல் கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளார். இதனையடுத்து ராகுல் தனது […]
சுமார் 12 வாரங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட கோவை குற்றாலத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கோவை குற்றாலத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை தனி வாகனத்தில் வனத்துறையினர் அழைத்துச் செல்வதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் இந்த அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் சுமார் 12 வாரங்களுக்கு பிறகு அருவியில் […]
பல லட்ச ரூபாய் பண மோசடி செய்த 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெண்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள டி.புதூரில் வசிக்கும் 22 பெண்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்ற மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எங்கள் ஊரில் வசிக்கும் 4 பேர் எங்களிடம் தனியார் நிறுவனத்தில் மாதம் 300 ரூபாய் வீதம் 5 ஆண்டுகள் 10 மாதம் கட்ட வேண்டும் என கூறியுள்ளனர். […]
வீட்டில் கழிவறை சுவரில் துளையிட்டு தங்க நகை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பட்டூரில் பச்சமுத்து(49) என்பவருக்கு சொந்தமான வீடு இருக்கிறது. இவர் சிங்கப்பூரில் கம்பெனி நடத்தி அங்கேயே வசித்து வந்துள்ளார். இதனால் சொந்த ஊரில் இருக்கும் வீட்டில் அனைத்து இடங்களிலும் கண்காணித்து கேமராவை பொருத்தி, அங்கு நடக்கும் நிகழ்வுகளை கண்காணித்து வந்துள்ளார். நேற்று கண்காணிப்பு கேமரா இயங்காததால் சந்தேகமடைந்த பச்சமுத்து தனது நண்பரை செல்போன் மூலம் தொடர்பு […]
நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 29) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விபத்தில் காயமடைந்த இளைஞருக்கு திருஷ்டி கழிக்க ஆட்டுக்குட்டியுடன் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் அருகே இருக்கும் கொத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவர் சென்ற 25ஆம் தேதி தனது சகோதரியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பொழுது எதிர்பாரா விதமாக பேரண்டப்பள்ளி பகுதியில் இரண்டு பேரும் தவறி விழுந்து பலத்த காயமடைந்தார்கள். முருகன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் முருகனின் உறவினர்கள் கண் திருஷ்டி காரணமாகவே விபத்தில் முருகன் சிக்கியதாக […]
அசாம் மாநிலத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளார்கள். அசாம் மாநிலத்தில் உள்ள காம்ருப் மாவட்டத்தில் இருக்கும் பகுருதியா பகுதியை சேர்ந்த அப்துல் வாகா என்ற இளைஞர் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் இருக்கும் சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வருகின்றார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படித்து வரும் 14 வயது மாணவியை காதலித்து வந்துள்ளார். இவர் சில […]
18 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளார்கள். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் அருகே இருக்கும் கத்திரிப்புலம் கிராமத்தில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக அசோகன்(38) என்பவர் பணியாற்றி வந்ததோடு பள்ளி அருகிலேயே டியூஷன் சென்டரும் நடத்தி வந்திருக்கின்றார். இவர் அப்பள்ளியில் பயிலும் +1 மற்றும் +2 படிக்கும் மாணவிகளுக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்திருக்கின்றார். மேலும் டியூஷன் […]
மாநகர பேருந்து மீது கிரேன் சரிந்ததால் ராட்சத இரும்பு கம்பிகள் விழுந்து மூன்று பேர் காயமடைந்தார்கள். சென்னையில் உள்ள ராமாபுரம் அருகே மெட்ரோ ரயில் பணிக்காக நேற்று முன்தினம் காலையில் கண்டெய்னர் லாரியில் கொண்டுவரப்பட்ட ராட்சத இரும்பு கம்பிகளால் கட்டப்பட்ட தூண்களை கிரேன் மூலம் தூக்கி நிறுத்தும் பணியில் மெட்ரோ ரயில் ஊழியர்கள் ஈடுபட்டார்கள். அப்போது அவ்வழியாக குன்றத்தூர் அரசு பேருந்து பணிமனையில் இருந்து ஊழியர்கள் ஏற்றிக்கொண்டு மாநகர பேருந்து ஆலந்தூர் பணிமனை நோக்கி சென்று கொண்டிருந்தது. […]
பெற்றோரை இழந்த குழந்தைங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட இருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, மத்திய அரசால் திருத்தி அமைக்கப்பட்ட வட்சாலயா மிஷன் மூலம் பயன்பெறுவோர் குடும்ப ஆண்டு வருமானம் கிராமங்களில் உள்ளவர்களுக்கு 72000, நகரங்களில் இருப்பவர்களுக்கு 96,000 மிகாமல் இருக்க வேண்டும் என திருத்தம் செய்யப்பட்டிருக்கின்றது. இத்திட்டத்தில் பெற்றோரில் ஒருவர் அல்லது இருவரை இழந்த […]
பர்கூர் பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து அமைக்கப்படும் கடைகள், அதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் மாற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்திருக்கின்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூரில் இருந்து போச்சம்பள்ளி, மத்தூர், காளி கோவில், வடமலைகுண்டா, பச்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு டவுன் பேருந்துகள் இயக்கப்படுகின்றது. பர்கூரிலிருந்து அரசு கல்லூரி, பொறியியல் கல்லூரி, அரசு நடுநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், தனியார் பள்ளிகளில் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் ஏராளமான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றார்கள். மேலும் வட்டார அலுவலகம், தாலுகா அலுவலகம், கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு […]
காசிமேடு அருகே பாமாயில் கொண்டு செல்லப்படும் ராட்சத குழாய் உடைந்ததால் பாமாயில் எண்ணெய் குளம் போல் தேங்கி நிற்கிறது. சென்னை துறைமுகத்துக்கு மலேசியாவில் இருந்து கப்பல் மூலம் கொண்டுவரப்படும் பாமாயில், ராட்சதக் குழாய் மூலம் திருவொற்றியூரில் இருக்கும் தனியார் தொழிற்சாலையில் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு காசிமேடு நாகூரான் தோட்டம் பகுதியில் விசை படகு கட்டும் இடம் அருகே பூமிக்கு அடியில் சென்ற ராட்சதக் குழாய் திடீரென விரிசல் ஏற்பட்டதில் […]
மாமனாரை கொலை செய்த மருமகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குல்லூர் சந்தை அகதிகள் முகாமல் கூலித்தொழிலாளியான நந்தகோபால்(39) என்பவர் வசித்து வருகிறார். இவரது முதல் மனைவி இறந்துவிட்டார். இதனால் முகாமில் வசித்த நாகராஜ்(53) என்பவரது மகள் ரோஸ்மேரியை நந்தகோபால் 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் ரோஸ்மேரி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் நந்தகோபால் […]
சிறுமியை கர்ப்பமாக்கிய நபருக்கு 25 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வாண்டையார் இருப்பு தெற்கு தெருவில் ரவிச்சந்திரன்(40) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020- ஆம் ஆண்டு உறவினருடைய 14 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது ரவிச்சந்திரன் அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மேலும் ஆசை வார்த்தைகள் கூறி அந்த சிறுமியை வெளியே அழைத்து சென்று ரவிச்சந்திரன் பாலியல் பலாத்காரம் செய்து, யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார். […]
சுடுகாட்டுக்கான இடத்தை ஒதுக்கி தர வேண்டும் என அணைக்கட்டுச்சேரி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடியை அடுத்திருக்கும் பட்டாபிராம் அருகே உள்ள சோராஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட அணைக்கட்டுச்சேரி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றார்கள். இவர்கள் சுமார் 50 வருடங்களுக்கும் மேலாக சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்க வேண்டும் என போராடி வருகின்றார்கள். இப்பகுதியில் இறந்தவர்களின் உடல்களை கூவம் ஆற்றை கடந்து மறுக்கரைக்குச் சென்றுதான் அடக்கம் செய்ய முடியும். இந்த நிலையில் நேற்று முன்தினம் […]
கட்டுப்பாட்டை இழந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலிருந்து பாமாயில் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செம்பியமாதேவி ஏரி அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லேசான காயத்துடன் ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்தில் டேங்கர் லாரி சேதமடைந்து பாமாயில் கீழே கொட்டியதை பார்த்த […]
லஞ்சம் வாங்கிய அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும் களவுமாக கைது செய்தார்கள். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள புதுவாணியங்குளம் தெருவை சேர்ந்த லியாகத் அலி என்பவர் காஞ்சிச்சாலையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக நிலநீர் எடுப்பு சான்று வழங்க கோரி சென்னையில் இருக்கும் தலைமை அலுவலகத்திற்கு சென்ற 15-ம் தேதி விண்ணப்பித்துள்ளார். இது பற்றி திருவண்ணாமலை உதவி நிலவியல் நிலைநீர் பிரிவு அதிகாரி சிந்தனைவளவன் என்பவரை கள ஆய்வு செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டார்கள். அதன் பேரில் சில நாட்களுக்கு […]