Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருநங்கையை திருமணம் செய்த நபர்….. கட்டிப்போட்டு 110 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளை…. பரபரப்பு சம்பவம்….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மருங்காபுரி பகுதியில் திருநங்கையான பபிதா ரோஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழ்நாடு சிறப்பு காவல் படை கமாண்டிடம் புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த ஏப்ரல் மாதம் நான் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் நடைபெற்ற சித்திரை திருவிழாவில் கலந்து கொண்டேன். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு உணவு ஏற்பாடு செய்யும் பணியில் ஈடுபட்டேன். இதனால் சிறப்பு படையில் போலீஸ்காரராக வேலை பார்க்கும் கடலூர் மாவட்டத்தைச் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமாக இருக்கும்….?? பிறந்தநாளில் போலீஸ்காரர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ஏ.அகரம் கிராமத்தில் பாஸ்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 18-ஆம் தேதி பாஸ்கருக்கு பிறந்தநாள் ஆகும். அன்று காலை வேலைக்கு சென்ற பாஸ்கர் மதியம் சாப்பிடுவதற்காக தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென பாஸ்கர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்து அறிந்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தங்கையை கர்ப்பிணியாக்கிய அண்ணன்….. 3 மாதங்களாக அரங்கேறிய சம்பவம்….. போலீஸ் வலைவீச்சு….!!

சிறுமியை கர்ப்பமாக்கிய அண்ணனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி பகுதியில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 3 மாதங்களாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை அவளது உடன் பிறந்த அண்ணனே மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் 3 மாத கர்ப்பிணியாக இருந்த சிறுமிக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுமியை அவரது பெற்றோர் வேலூரில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கால் துண்டிக்கப்பட்டதால் வலியில் அலறிய தொழிலாளி…. காப்பாற்ற சென்ற மனைவியும் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்….!!

மரம் அறுக்கும் இயந்திரம் காலில் பட்டதால் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள காந்தி கணவாய் ஜெ.ஜெ நகர் பகுதியில் தச்சு தொழிலாளியான வரதராஜன்(68) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு முனியம்மா(63) என்ற மனைவி உள்ளார். நேற்று மாலை மரம் அறுக்கும் எந்திரம் மூலம் வரதராஜன் கட்டில் செய்வதற்காக மரத்தை அறுத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மரம் அறுக்கும் இயந்திரம் வரதராஜனின் காலில் பட்டது. இதனால் கால் துண்டிக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சங்க கால மக்கள் பயன்படுத்தியதா….?? 2000 ஆண்டுகள் பழமையான பொருட்கள் கண்டுபிடிப்பு…. தொல்லியல் ஆய்வாளரின் தகவல்…!!!

2000 ஆண்டுகளுக்கு முன்பு சங்க கால மக்கள் பயன்படுத்திய பழமையான பொருட்களை தொல்லியல் ஆய்வாளர் கண்டுபிடித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் கள ஆய்வு மேற்கொண்ட தொல்லியல் ஆய்வாளர் இமானுவேல் 2000 ஆண்டுகள் பழமையான பொருட்களை கண்டறிந்தார். இவை சங்க கால மக்கள் பயன்படுத்தியது ஆகும். இதுகுறித்து இமானுவேல் கூறியதாவது, சங்ககால மக்கள் பயன்படுத்திய கெண்டி மூக்கு பானை, சுடுமண் தாங்கி, அகல் விளக்கு, குறியீடு உள்ள பானை, ஓடு சிவப்பு நிற வழவழப்பான […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமி….. வாலிபருக்கு சாகும் வரை சிறை தண்டனை….. அதிரடி தீர்ப்பு….!!!

பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொலை செய்த வழக்கில் வட மாநில வாலிபருக்கு சாகும் வரை ஜெயில் தண்டனை வழங்கி நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி அருகே 8 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுமி மீண்டும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். மறுநாள் அப்பகுதியில் இருக்கும் காட்டுப்பகுதியில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திருமணம் முடிந்த ஒரு வாரத்தில்…. காதல் மனைவியின் பரபரப்பு புகார்…. கணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு…!!!

புதுப்பெண் அளித்த வரதட்சணை புகாரின் பேரில் கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள மலைப்பட்டி தெற்கு தெருவில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 13-ஆம் தேதி செல்வகுமாருக்கும், அவரது காதலியான தமிழரசி(27) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின்போது பெண்ணின் குடும்பத்தினர் 10 பவுன் தங்க நகை மற்றும் சீர்வரிசை பொருட்களை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இந்நிலையில் செல்வகுமாருக்கு அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“கணவரும் குற்றவாளி தான்” புதுப்பெண் தற்கொலை வழக்கு…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை….!!!

புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது கணவரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகில் பகுதியில் வினு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிராமி(22) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அபிராமிக்கு மனோஜ் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து அபிராமி 2 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கடந்த ஜூலை மாதம் 30-ஆம் தேதி அபிராமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து வினு பூதப்பாண்டி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“டீ” எடுத்து வருவதாக கூறிய இளம்பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தந்தையின் பரபரப்பு புகார்…!!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குஞ்சாலுவிளை பகுதியில் தொழிலாளியான அகஸ்டின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரி(29) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு அஸ்வினி(10), ஆஷிகா(8) என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். தற்போது அகஸ்டின் புதிதாக வீடு கட்டுவதால் தனது அண்ணன் வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் அகஸ்டின், மகேஸ்வரி மற்றும் உறவினர்கள் புதிய வீட்டில் சீரமைப்பு பணிகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது தான் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“காப்பாற்றுங்கள்” என அபயக்குரல் எழுப்பிய பெரியம்மா….. 8-ஆம் வகுப்பு மாணவிக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!!

8-ஆம் வகுப்பு மாணவி தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள நெய்தலூர் இந்திரா நகரில் கோபால்- ஜெயசக்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிருந்தா(13) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த பிருந்தா தனது பெரியம்மாவுடன் அருகே இருக்கும் கிணற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக கால் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (21.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 21) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்”….. 3 பேர் பலி…. 5 பேர் படுகாயம்…..கோர விபத்து…..!!!!!!

மோட்டார் சைக்கிள் மீது மோரிய கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிபட்டினம் அருகே இருக்கும் கலையனூரைச் சேர்ந்த சௌந்தர்ராஜன் என்பவரின் மகன் நீதிராஜன் தனது தந்தை பட்டறையில் வேலை பார்த்து வந்தார். இவர் சென்ற 18ஆம் தேதி இரவு வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவ்வழியாக வந்த கார் எதிர்பாரா விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“அரசு விடுதியில் தங்கி பயில வேண்டும்”…. ஆட்சியரிடம் மனு கொடுத்த மாணவர்கள்”….!!!!!!

அரசு விடுதியில் தங்கி பயில்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர். தலைமை தாங்கி மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார் அப்பொழுது பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு உயிரி தொழில்நுட்பவியல், நுண்ணறியியல் உள்ளிட்ட துறைகளில் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து பயிலும் மாணவர்கள் சார்பாக ஆட்சியரிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டது. […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த நிகழ்ச்சி”….. விழிப்புணர்வை ஏற்படுத்திய போலீசார்….!!!!!

பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை போலீசார் நடத்தினார்கள். பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேலூர் கிராம மக்களிடம் போலீசார், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்ட்டர் மருதமுத்து, போலீஸ் உமா உள்ளிட்டோர் சேர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். அவர்கள் கூறியதாவது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஒவ்வொரு காவல் நிலையத்தில் செயல்படும். பெண்கள் உதவி மைய […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“குடியிருப்புக்குள் புகுந்து பால், தயிர்களை ருசிக்கும் கரடி”…. பொதுமக்கள் கோரிக்கை…!!!!!

குடியிருப்புக்குள் புகுந்து பால் மற்றும் தயிர் பாக்கெட்டுகளை கரடி சேதம் செய்வதால் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் உபதமலை பகுதியில் விற்பனைக்கு கொண்டு செல்வதற்காக நேற்று முன்தினம் அதிகாலை 4 மணி அளவில் பால் மாற்றம் தயிர் பாக்கெட்கள் சரக்கு வாகனத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதை அப்பகுதிக்கு உணவு தேடி வந்த கரடி பால் மற்றும் தயிர் பாக்கெட்டுகளை ருசித்தது. இது அங்கு பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராவில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“சிறுமியை கர்ப்பமாகிய இளைஞர்”…. மீண்டும் பாய்ந்தது போக்சோ….!!!!!!

ஜாமீன் மூலம் வெளியே வந்தவர் சிறுமியை கர்ப்பமாகியதால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே இருக்கும் சேபட்டி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் சென்ற 2020 ஆம் வருடம் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார். பின் இவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஜாமின் மூலம் வெளியே வந்தார். இந்த நிலையில் அதே சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சாவிலும் இணை பிரியாத தம்பதி…. அக்கம்பக்கத்தினர் அளித்த தகவல்…. போலீஸ் விசாரணை….!!

தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பெருமாநல்லூர் எஸ்.எஸ். நகரில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தச்சுத்தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு வசந்தா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் திருமணமாகி திருப்பூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக வசந்தாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இருவரும் மன […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற இளைஞர்…. “ஆற்றில் குளிக்கும் போது நேர்ந்த சோகம்”…. போலீசார் விசாரணை….!!!!!

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரின் உடலை போலீசார் கைப்பற்றினார்கள். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சோழசிராமணி கதவணையின் இரண்டாவது மதகு பகுதியில் இளைஞர் ஒருவரின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். பின் பிணமாக கிடந்த இளைஞர் யார் என விசாரணை செய்ததில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“தொழிலாளியை கொலை செய்து தூக்கில் தொங்க விட்ட மர்ம கும்பல்”….. தீவிர வேட்டையில் தனிப்படை போலீசார்….!!!!!

தொழிலாளியை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட மர்ம நபர்களை தனிப்படை போலீஸ்சார் தேடி வருகின்றார்கள். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமகிரிபேட்டையில் இருக்கும் சின்ன அடியா கவுண்டம்பட்டி அண்ணா காலனியை சேர்ந்த பரமசிவம் என்பவர் நாமகிரிப்பேட்டை தேர்வுநிலை ஊராட்சியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். இதை தொடர்ந்து அவர் வேலை செய்யும் பொழுது காயம் ஏற்பட்டதால் சென்ற இரண்டு வருடங்களாக இரவு காவலாளியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் சென்ற 15ஆம் தேதி அவர் இரவு காவல் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு சென்ற குடும்பத்தினர்…. வனதுறை ஊழியருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!!

வனத்துறை ஊழியர் வீட்டில் தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கட்டிக்கானபள்ளி ராஜாஜி நகரில் வனத்துறை ஊழியரான ரகமத்துல்லா(37) என்பவர் வசித்து வருகிறார். அந்த வீட்டு மாடியில் ரகமத்துல்லாவின் தந்தை பாஷா தங்கியுள்ளார். இந்நிலையில் ரகமத்துல்லா தனது குடும்பத்தினருடன் ராயக்கோட்டையில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது பாஷா கீழே வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஏற்கனவே திருமணமான நபர்…. மகள் வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு….போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள அன்னதானப்பட்டி பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 8 வயதில் மகள் இருக்கிறார். இந்நிலையில் கார்த்திக் அதே பகுதியில் வசிக்கும் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பிறந்தது புரட்டாசி….! மீன் விலை வீழ்ச்சி…. “மீன் பிடிக்க செல்லாத மீனவர்கள்”….!!!!!!

புரட்டாசி மாதத்தால் மீன்கள் விலை வீழ்ச்சி அடையும் என்பதால் வேதாரண்யத்தில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யத்தை அடுத்து இருக்கும் ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ள பள்ளம், கோடிய கரை உள்ளிட்ட மீனவ கிராமத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலை செய்து வருகின்றார்கள். இந்த நிலையில் வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலானோர் புரட்டாசி மாத விரதம் மேற்கொள்ளுவதால் அசைவ உணவு சாப்பிட மாட்டார்கள். இதனால் மீன் விலை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“திருப்பி தர மறுக்கிறார் ” மகனுடன் தீக்குளிக்க முயன்ற தம்பதி…..பரபரப்பு சம்பவம்….!!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள நரசிங்கபுரம் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பிரேம்சந்திரன்(74) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவானந்த ஜோதி(63) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குருசந்திரமூர்த்தி(30) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பிரேம்சந்திரன் தனது மனைவி மற்றும் மகனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து பிரேம்சந்திரனும், அவரது குடும்பத்தினரும் உடல் முழுவதும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குடும்பத்துடன் வெளியூருக்கு சென்ற நபர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. மர்மநபருக்கு வலைவீச்சு….!!

வீடு புகுந்து 7 பவுன் நகையை திருடிய மர்மநபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கலியன்விளை கிராமத்தில் சடையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகன் என்ற மகன் உள்ளார். கடந்த 7-ஆம் தேதி முருகன் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது அங்கிருந்த கதவுகள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 7 பவுன் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“படிப்பதற்கு விருப்பமில்லை ” 8-ஆம் வகுப்பு மாணவனின் விபரீத முடிவு….. கதறி அழுத பெற்றோர்….!!!

சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மரவனேரி கோர்ட் ரோடு பகுதியில் சிவகுரு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரச குரு(13) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் மணக்காடு பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளான். மேலும் சிறுவனுக்கு படிப்பதற்கு விருப்பமில்லை. இதனால் கடந்த சில நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் அரச குரு வீட்டிலேயே இருந்துள்ளான். இந்நிலையில் பெற்றோர் பள்ளிக்கு செல்லுமாறு சிறுவனை […]

Categories
மாவட்ட செய்திகள்

“எம்.ஜி.ஆர் அரசு கலை, அறிவியல் கல்லூரியில்”…. ஊட்டச்சத்து மாத விழா…..!!!!!!!

எம்.ஜி.ஆர் அரசு கலைக்கல்லூரியில் ஊட்டச்சத்து மாத திருவிழா நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் அருகே இருக்கும் எம் ஜி ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஊட்டச்சத்து மாத விழாவானது சமூகநலம் மற்றும் மகளிர் உரிமை திறமை ஒருங்கிணைப்பு குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பாக நடந்தது. இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி தலைமை தாங்க அங்கன்வாடி பணியாளர்கள் சார்பாக அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்துக் கண்காட்சியை கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பார்வையிட்டார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பாக்கெட்டில் வைத்திருந்த போது…. செல்போன் வெடித்ததால் காயமடைந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!!

செல்போன் வெடித்து வாலிபர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள கொண்டகுப்பம் பகுதியில் முத்து என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் முத்து உறவினர் ஒருவரை ரயிலில் ஏற்றி விடுவதற்காக அம்மூரில் இருக்கும் வாலாஜா ரோடு ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து உறவினரை ரயிலில் ஏற்றிவிட்டு முத்து அம்மூர்- லாலாபேட்டை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் முத்துவின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் திடீரென வெடித்ததால் அவரது தொடை பகுதியில் காயம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அண்ணியுடன் ஏற்பட்ட கள்ளக்காதல்…. தட்டி கேட்ட சித்தப்பாவுக்கு நடந்த கொடூரம்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!#

தம்பியை கொலை செய்த வழக்கில் அண்ணன் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கூகனூர் கிராமத்தில் விவசாயியான பாலையா(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுப்பிரமணியன்(59) என்ற அண்ணன் உள்ளார். சுப்பிரமணியனுக்கு குமார், விக்னேஸ்வரன்(31) என்ற இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இதில் குமாருக்கு தேவி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதனை அடுத்து குமார் வேலை பார்ப்பதற்காக வெளிநாட்டிற்கு சென்று விட்டார். அந்த சமயம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த வாலிபர்….. 7 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபருக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருங்குடி பகுதியில் கிறிஸ்டோபர்(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் வேன் ஓட்டுனராக இருக்கிறார். இந்நிலையில் கிறிஸ்டோபர் அதே பகுதியில் வசிக்கும் 7 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் […]

Categories
மாவட்ட செய்திகள்

“ஆட்சியர் அலுவலகம் முன்பாக தர்ணாவில் ஈடுபட்ட வயதான தம்பதியினர்”…. கண்ணீர் மல்க மனு….!!!!!

ஆட்சியர் அலுவலகம் முன்பு வயதான தம்பதியினர் தர்ணாவில் ஈடுபட்டார்கள். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கோடங்குடி கிராமத்தைச் சேர்ந்த தங்கசாமி-சாராதாம்பாள் தம்பதியினருக்கு 4 மகன்கள் இருக்கின்றார்கள். சென்ற 2009 ஆம் வருடம் தனது மகன்களுக்கு இவர்கள் தனக்கென சிறிய நிலத்தையும் ஒரு குடிசை வீட்டையும் வைத்துக்கொண்டு மற்றதை பிரித்துக் கொடுத்து விட்டார்கள். இந்த நிலையில் இவர்களின் மகன்களில் ஒருவன் தந்தையை ஏமாற்றி அவரது பாகத்தையும் தனது பெயருக்கு மாற்றி எழுதி வீட்டிலிருந்து விரட்டி விட்டார். இதனால் இது குறித்து […]

Categories
ஆன்மிகம் கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில்…. ஸ்தல வரலாற்றினை அறிய…. கோவில் நிர்வாகத்தின் புதிய ஏற்பாடு….!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு உள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். அவ்வாறு வருகின்ற பக்தர்களுக்கு கோவில் பற்றிய ஸ்தல வரலாற்றினை தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக திருக்கோவில் நிர்வாகம் கோவிலின் உள்ளே திருக்கோவில் நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாய் செலவில் ஆன்மீக புத்தக நிலையம் ஒன்று நிருவப்பட்டுள்ளது. இந்த புத்தக நிலையம் இன்று முதல் செயல்பட தொடங்கியது. மேலும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“மகளுடன் தற்கொலை செய்ய அனுமதி வேண்டும்” பெண் அளித்த மனு…. பரபரப்பு சம்பவம்….!!!

மகளுடன் தற்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என பெண் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுந்தப்பாடி பகுதியில் 37 வயதுடைய பெண் தனது 14 வயது மகளுடன் வசித்து வருகிறார். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று ஒரு மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 2007-ஆம் ஆண்டு எனக்கு திருமணம் நடைபெற்றது. 14 வயதில் எனக்கு மகள் இருக்கிறார். அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக வேலை பார்த்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“உயிருக்கு ஆபத்து இருக்கிறது” பசு மாடுகளுடன் மனு கொடுக்க வந்த பெண்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பெண் ஒருவர் பசு மாடுகளுடன் வந்து மனு கொடுத்துள்ளார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது புகையிலைப்பட்டியில் வசிக்கும் ஆரோக்கிய ஜென்சி என்பவர் தனது இரண்டு பசு மாடுகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம். சிலர் அந்த நிலத்தை அபகரிக்க முயற்சி செய்கின்றனர். இதுகுறித்து தட்டி கேட்ட என்னையும், எனது […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும்”… போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடி கைது….. பரபரப்பு சம்பவம்….!!

லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சமுட்டிகுப்பம் பகுதியில் ரவுடியான ஸ்ரீகாந்த்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலவையில் இருக்கிறது. கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி குள்ளஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் என்பவர் ஸ்ரீகாந்தை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து கடலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்பகுதி சான்றிதழ் வாங்குவதற்காக அழைத்து சென்றுள்ளார். அங்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த மினி லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. போலீஸ் விசாரணை….!!

மினி லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடியில் இருந்து தக்காளி பாரம் ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி மினிலாரி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மினி லாரி திம்பம் மலைப்பாதையின் 11- வது கொண்டே ஊசி வளைவு அருகே சென்றது. அப்போது வளைவில் திரும்ப முயன்ற மினிலாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். ஆனால் வாகனத்தில் இருந்த தக்காளி பெட்டிகள் சாலையில் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (20.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 20) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“ரயிலில் குளிர்சாதன எந்திரம் பழுது”…. 2 மணி நேரம் தாமதமாக சென்ற ரயில்….!!!!!!

ரயிலில் குளிசாதனை எந்திரம் பழுதானால் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டு இரண்டு மணி நேரம் தாமதமாக சென்றது. பெங்களூருவில் இருந்து நேற்று முன்தினம் மதியம் 2:50 மணி அளவில் பிருந்தாவனம் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை நோக்கி புறப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் பங்காரப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்ற பொழுது குளிர்சாதன பெட்டியில் குளிர்சாதன எந்திரம் வேலை செய்யவில்லை. இதையடுத்து டிக்கெட் பரிசோதகர் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதனால் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“வாணியம்பாடியில் 3-ம் வகுப்பு மாணவர்கள் நடத்திய கருத்தரங்கம்”….. சான்றிதழ்கள் வழங்கல்….!!!!!!!

வாணியம்பாடியில் மூன்றாம் வகுப்பு மாணவர்கள் கருத்தரங்கை நடத்தினார்கள். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு மாணவர்கள் சார்பாக கருத்தரங்கம், பள்ளி தாளாளர் தலைமையில் நடந்தது. இதனை பள்ளி இயக்குனர் ஷபானா பேகம் வரவேற்க தொடக்கம் முதல் இறுதி வரை மாணவர்களே தொகுத்து வழங்கினார்கள். பள்ளி நிர்வாகம், மாணவர்கள் தங்களின் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்வதற்காகவும் தன்னம்பிக்கையோடு செயல்படுவதற்காகவும் தங்களுக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மைகளை போக்கவும் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. மேலும் பங்கேற்ற […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“பூட்டியே கிடக்கும் கணினி வரி வசூல் மையம்”….. செயல்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை….!!!!!

கணினி வரி வசூல் மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே காய்கறி மார்க்கெட் இருக்கின்றது. இங்கே நகராட்சி கணினி வரி வசூல் மையம் இருக்கின்ற நிலையில் சென்ற ஒரு ஆண்டுக்கு மேலாக திறக்கப்படாமல் பூட்டியே உள்ளது. இதனால் கட்டிடம் பழுதாகும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. ஆகையால் இந்த கணினி வரி வசூல் மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்கள்”….. பொதுமக்கள் சாலை மறியல்…. போக்குவரத்து பாதிப்பு….!!!!!!

திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாலிபர்களின் உடலை மீட்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் அருகே இருக்கும் பேரங்கியூர் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் மற்றும் பரத் உள்ளிட்டோர் சென்ற 17ஆம் தேதி தென்பெண்ணை ஆற்றில் சக நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்கள். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு சென்ற மாணவி மாயம்…. தந்தை அளித்த புகார்…. வலைவீசி தேடும் போலீஸ்….!!

பள்ளிக்கு சென்ற பிளஸ்-1 மாணவியை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் பகுதியில் தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு பிளஸ்-1 படிக்கும் 16 வயது மகள் இருந்துள்ளார். அப்போது மாணவியும் அதே பகுதியில் வசிக்கும் வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த தொழிலாளி மகளின் படிப்பை நிறுத்திவிட்டு திருச்செந்தூர் பகுதியில் உள்ள அரசு விடுதியில் சேர்த்துள்ளார். அங்கிருந்து மாணவி ஒரு பள்ளியில் படித்து வந்துள்ளார். கடந்த 16-ஆம் தேதி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“விழுப்புரம் அருகே பிரசித்தி பெற்ற கன்னிமார் கோவில்”….. ஏழு சிலைகள் திருட்டு…!!!!!

விழுப்புரம் அருகே பிரசித்தி பெற்ற கன்னிமார் கோவிலில் ஏழு சாமி சிலைகள் திருடப்பட்டுள்ளது.  விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அகரத்துமேட்டில்புகழ் பெற்ற கன்னிமார் கோவில் இருக்கின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவிலில் பூஜைகசெய்து விட்டு கோவிலை பூட்டிவிட்டு பூசாரி வழக்கம்போல் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று காலை வந்து பார்த்த பொழுது கோவில் வளாகத்தில் இருந்த ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 7 சிலைகள் உடைக்கப்பட்டு திருடப்பட்டிருந்தது. இதை கண்ட அவர் அதிர்ச்சி அடைந்து காவல் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“மீன் பிடித்துக் கொண்டிருந்த சிறுவன்”…. எதிர்பாரவிதமாக நேர்ந்த சோகம்….!!!!!

விக்கிரவாண்டி அருகே ஏரியில் பள்ளி மாணவன் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி அடுத்திருக்கும் புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் ஜெகன் அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தான். சிறுவன் நேற்று முன்தினம் மாலை அந்த ஊரில் இருக்கும் ஏரியில் நண்பர்களோடு மீன் பிடித்துக் கொண்டிருந்த பொழுது எதிர்ப்பாரா விதமாக சேற்றில் சிக்கி நீரில் மூழ்கினான். இதைப்பார்த்த ஜெகனின் நண்பர்கள் கூச்சலிட்டதால் அங்கிருந்தவர்கள் ஓடி வந்து ஜெகனை மீட்டு அரசு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தமிழக கோயிலில் காசு மட்டுமே பிரதானம்…. “2 மணி நேரம் காத்திருந்த பக்தர் ட்விட்”…. விரைந்து செயல்பட்ட இந்து அறநிலையத்துறை…!!!!!

தமிழக கோவில்களில் காசு மட்டுமே பிரதானம் என பக்தர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டதால் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சலசலப்பு ஏற்பட்டது. நேற்று புரட்டாசி மாத பிறப்பு என்பதால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வழக்கத்தை விட கூட்டம் அலைமோதியது. சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தார்கள். பொது தரிசனம் மட்டுமல்லாமல் 50 ரூபாய்க்காண கட்டண தரிசன வரிசையிலும் பக்தர்களின் கூட்டம் அழைமோதியது. இந்த நிலையில் நேற்று முக்கிய பிரமுகர்களுக்கு முக்கியத்துவம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“வந்தவாசியில் இளைஞர் திறன் பயிற்சி திருவிழா”…. 500 இளைஞர்கள் தேர்வு….!!!!!

வந்தவாசியில் இளைஞர் திறன் பயிற்சி திருவிழா நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வந்தவாசியில் இருக்கும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு மாநில அரசு வாழ்வாதார இயக்கம் சார்பாக இளைஞர் திறன் பயிற்சி திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் தீன் தயாள் உபாத்தியாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்புடன் கூடிய தொழில் திறன் பயிற்சி பெற 500 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றார்கள். இவ்விழாவிற்கு மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் திட்ட இயக்குனர் சையத் கலைமான் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஆரணி அருகே குடிநீர் தொட்டியில் தண்ணீர் குடித்த சிறுவர், சிறுமிகள்….. “வாந்தி, மயக்கம்”…. மருத்துவமனையில் சிகிச்சை….!!!!!!

ஆரணி அருகே குடிநீர் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்த சிறுவர், சிறுமிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணி அருகே இருக்கும் பூசிமலைகுப்பம் கிராமத்தில் இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்த குடிநீரை குடித்த பூபதின், ரித்தீஷ், கோபிகா, ஆர்.தர்ஷன், தர்ஷன், சுஷ்மிதா, காயத்ரி, பூவரசன் உள்ளிட்ட சிறுவர்-சிறுமிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் அவர்களை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். இது போலவே காமக்கூர்பாளையத்தில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட வெற்றிச்செல்வன், கோபாலகிருஷ்ணன், […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

முதல் தலைமுறை தொழில் முனைவோர்…. “மானிய தொகை 75 லட்சமாக உயர்வு”…. ஆட்சியர் தகவல்…!!!!!!

முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு மானியத்தொகை 75 லட்சம் ஆக உயர்த்தப்பட்டிருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, படித்த தொழில் தொடங்க விருப்பம் இருக்கும் முதல் தலைமுறையினர் பயன்பெறும் வகையில் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனம் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. இத்திட்டத்தில் தமிழக அரசு 5 கோடி வரையிலான திட்ட முதலீட்டிற்கு 25 சதவீதம் அதிகபட்ச மானியமாக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து-லாரி மோதல்…. படுகாயம் அடைந்த 9 பேர்…. கோர விபத்து….!!!

அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 9 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் இருந்து 20 பயணிகளை ஏற்றி கொண்டு திருமயம் வழியாக புதுக்கோட்டை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது . இந்நிலையில் நம்மணசமுத்திரம் பைபாஸ் சாலையில் இருந்து புதுக்கோட்டைக்கு செல்ல பேருந்து திரும்பியது. அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த டாரஸ் லாரி பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்து, லாரி ஓட்டுனர்கள் மற்றும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சிகரெட் வாங்க சென்ற வாலிபர்கள்…. வயதான தம்பதி மீது தாக்குதல்…. போலீஸ் அதிரடி….!!!

வயதான தம்பதியினரை தாக்கிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குளமங்கலம் தெற்கு தெருவில் செல்லையா(67) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்னக்கொடி என்ற மனைவி உள்ளார். இவர்கள் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் கணவன் மனைவி இருவரும் கடையை பூட்டி விட்டு வாசலில் இருக்கும் கட்டிலில் படுத்து தூங்கியுள்ளனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் பனங்குளம் பகுதியைச் சேர்ந்த விக்ரம்(20), ராஜதுரை(20) சசிசுதன்(22) ஆகிய 3 பேரும் மோட்டார் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

செல்போனை தூக்கி எரிந்த வாலிபர்….. மரத்தில் கட்டி வைத்து அடித்த 4 பேர்…. போலீஸ் விசாரணை….!!!!

வாலிபரை தாக்கிய நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பாதிரகுடி கீழ தெருவில் புனித வள்ளி என்பவர் வசித்து வருகிறார். இவர் தோகூர் காவல் நிலையத்தில் புகார் மனுவை அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, எனக்கு வீரராகவன்(32) என்ற தம்பி இருக்கிறார். இவர் திருக்காட்டு பள்ளியில் இருந்து பேருந்தில் பாதிரக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தபோது செல்போன் வேலை செய்யவில்லை என அதனை தூக்கி எரிந்துள்ளார். அந்த செல்போன் பேருந்தில் பயணித்த அதே ஊரைச் […]

Categories

Tech |