Categories
சினிமா தமிழ் சினிமா

“வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்த காதல் ஜோடி”…. காவல் நிலையத்தில் தஞ்சம்…!!!!

நல்லூர் காவல் நிலையத்தில் காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தார்கள். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கந்தம்பாளையம் அருகே இருக்கும் கவுண்டிபாளையத்தைச் சேர்ந்த பூபாலன் என்பவர் பிஎஸ்சி படித்துவிட்டு ரிக் வண்டியில் மேலாளராக வேலை செய்து வருகின்றார். இவரும் கொளந்தாபாளையத்தை சேர்ந்த தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் வருடம் படித்து வரும் பிரியதர்ஷினி என்பவரும் சென்ற 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்கள். இந்த நிலையில் திருமணம் செய்ய முடிவு செய்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருச்செங்கோடு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வீட்டின் மீது மோதிய லாரி…. பலத்த காயமடைந்த பெண்…. போலீஸ் விசாரணை….!!

வீட்டின் மீது லாரி மோதியதில் பெண் பலத்த காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆத்தூர் பகுதியில் சுடலை மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு மாலதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சுடலைமணி வீட்டிலிருந்துவெளியே சென்றிருந்தார். இதனையடுத்து வீட்டிலிருந்த மாலதி சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக உப்பு லோடு ஏற்றிக்கொண்டு வந்த லாரி திடீரென வீட்டின் மீது பயங்கரமாக மோதியது. இதில் மாலதி பலத்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பெண்ணை கடத்திய ரவுடி உள்பட 2 பேர்…. வீட்டில் அடைத்து வைத்து நடந்த கொடூர சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த ரவுடி உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுந்தரவேல்புரம் பகுதியில் முனியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகன் என்ற மகன் உள்ளார். பிரபல ரவுடியான இவர் மீது தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள காவல்நிலையங்களில் 18 வழக்குகள் உள்ளன. இந்நிலையில் முருகனும், அழகேசபுரம் பகுதியில் வசிக்கும் கோகுல்ராம் என்பவரும் மோட்டார் சைக்கிளில் தாளமுத்து நகர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“குறுகிய பாலம் வழியாக மூதாட்டியை கட்டிலில் தூக்கிச் சென்ற அவலம்”…. மக்கள் கோரிக்கை…!!!!!

சிகிச்சைக்காக மூதாட்டியை கட்டிலில் தூக்கிக்கொண்டு குறுகிய பாலம் வழியாக செல்லும் அவல நிலை ஏற்பட்டிருக்கின்றது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை அருகே இருக்கும் எட்டுக்குடி ஊராட்சியில் உள்ள நாகமரத்தடி தெரு பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றார்கள். இங்கு போதிய சாலை வசதி இல்லாததால் அங்கிருக்கும் குறுகிய பாலத்தை தான் மக்கள் பயன்படுத்தி வருகின்றார்கள். மேலும் இந்த பாலத்தில் தடுப்பு சுவர்களின்றி சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் இருக்கின்றது. இந்த பாலத்தில் ஆட்டோ, கார் உள்ளிட்ட […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“சினிமாவில் நடிக்க வாய்ப்பு” முகநூல் நட்பால் ஏமார்ந்த இளம்பெண்…. போலீஸ் விசாரணை….!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் இமானுவேல் ராஜா (35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இவருக்கு முகநூல் மூலம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு செல்போன் எண்களை பரிமாறி கொண்டு பேசி வந்தனர். அந்த பெண்ணிடம் தான் ஒரு சினிமா இயக்குனர் எனவும், சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாகவும் இமானுவேல் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இந்நிலையில் நேரில் பார்க்க வேண்டும் என கூறி இம்மானுவேல் அந்த […]

Categories
மாவட்ட செய்திகள்

“போதிய வசதி இல்லாமல் இருக்கும் தாலுகா அலுவலகம்”…. கீழே விழும் மேற்கூரை அட்டைகள்…. பொதுமக்கள் கோரிக்கை…!!!!!!

சீர்காழியில் அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய தாலுகா அலுவலகம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகே பழைய தாலுகா அலுவலக வளாகம் இருக்கின்றது. இந்த கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட நிலையில் தாலுகா பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. தற்பொழுது அதில் போதிய வசதிகள் இல்லாததாலும் கட்டிடங்கள் சேதம் அடைந்து இருப்பதாலும் சென்ற ஐந்து வருடங்களுக்கு முன்பாக சீர்காழி பிடாரி தெற்கு வீதியில் இருக்கும் ஒரு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கல்லூரி வாகனம்- மோட்டார் சைக்கிள் மோதல்…. துடிதுடித்து இறந்த பிளம்பர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

கல்லூரி வாகனம் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்குறிச்சி மஞ்சனாவிளை பகுதியில் மணி(33) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆசீர் மனுவேல் என்ற மகன் இருந்துள்ளார். பிளம்பரான ஆசீருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த 11-ஆம் தேதி ஆசீர் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று விட்டு இரவு நேரத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் முத்தளக்குறிச்சியில் வைத்து கட்டுப்பாட்டை இழந்த ஆசிரியரின் மோட்டார் சைக்கிள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அசம்பாவிதங்களை தடுக்க…. விபத்தில் சிக்கிய பேருந்துக்கு பூஜை…. ஓட்டுநரின் செயல்….!!

பேருந்துக்கு ஓட்டுநர் கோவிலில் வைத்து பூஜை செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள பர்கூர் மலைப்பகுதியில் இருந்து செங்குளம், ஓசூர், மணியாச்சி கொங்காடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு பேருந்து இயக்கப்படுகிறது. கடந்த வாரம் அரசு பேருந்து மணியாச்சி பள்ளம் அருகே விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்த்தப்பினர். இதனை அடுத்து விபத்துக்குள்ளான பேருந்தை பொக்லைன் எந்திரம் மூலம் மீட்டனர். இந்நிலையில் அந்த பேருந்தின் ஓட்டுநர் அந்தியூரில் இருக்கும் பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு முன்பு பேருந்தை நிறுத்தி அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு சென்ற மாணவி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!!

கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கொந்தாளம் மண் திட்டு பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தேவதர்ஷினி(18) என்ற மகளும், சரவணன் என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் தேவதர்ஷினி கரூரில் இருக்கும் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு அருகில் இருக்கும் தோட்டத்திற்கு சென்ற தேவதர்ஷினி நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

திருமணமான 6 நாட்களில் இறந்த மனைவி…. புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குந்தலம்பட்டு கிராமத்தில் கட்டிட தொழிலாளியான முருகன்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 9-ஆம் தேதி முருகனுக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சந்தியா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் விருந்துக்கு சென்ற சந்தியா திடீரென மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சந்தியாவை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விருந்துக்கு சென்று வந்த தம்பதி…. மர்மமாக இறந்த புதுப்பெண்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

புதுப்பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நாட்டார் மங்கலம் பகுதியில் இன்ஜினியரான விநாயகமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 9-ஆம் தேதி விநாயகமூர்த்திக்கும், டிப்ளமோ இன்ஜினியரான ரஞ்சிதா(26) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த 14-ஆம் தேதி புதுமண தம்பதியினர் ரஞ்சிதாவின் தாய் வீட்டிற்கு விருந்துக்காக சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தனர். நேற்று காலை ரஞ்சிதாவின் தாய் பூங்கொடியை விநாயகமூர்த்தி செல்போன் மூலம் தொடர்பு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

டிப்பர் லாரி-கண்டெய்னர் நேருக்கு நேர் மோதல்…. உடல் நசுங்கி பலியான இருவர்…. பரபரப்பு சம்பவம்….!!

டிப்பர் லாரி மீது கண்டெய்னர் லாரியும் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலிருந்து சிமெண்ட் லோடு ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி அரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதேபோன்று அரூரில் இருந்து சேலம் நோக்கி கண்டெய்னர் லாரி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் மஞ்சவாடி கணவாய் அருகே சென்ற போது பிரேக் பிடிக்காததால் கண்டெய்னர் லாரி சாலையில் தாறுமாறாக ஓடி எதிரே வந்த டிப்பர் லாரி மீது பயங்கரமாக மோதி கவிழ்ந்துவிட்டது. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து…. முகத்தில் மிளகாய் பொடி தூவிய பெண்….. போலீஸ் வலைவீச்சு….!!

முகத்தில் மிளகாய் பொடி தூவி தங்க சங்கிலியை பறித்து சென்ற பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சமீபகாலமாக கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து தக்க நடவடிக்கை எடுக்கின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோவிலாங்குளம் பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஆர்த்தி என்ற மகள் உள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பயங்கரமாக மோதிய வாகனம்…. துடிதுடித்து இறந்த முதியவர்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏந்தூர் புது காலனி மாரியம்மன் கோவில் தெருவில் சுப்பராயன்(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டி.புதுப்பாக்கம் பகுதியில் இருக்கும் சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது திண்டிவனத்தில் இருந்து மரக்காணம் நோக்கி வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் முதியவர் மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த முதியவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நண்பர்களுடன் சென்ற சிறுவன்…. திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்….. கதறும் குடும்பத்தினர்…!!

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுவனின் உடல் நேற்று கரை ஒதுங்கியது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வா.பாளையம் மஞ்சாலம்மன் கோவில் தெருவில் அங்கப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லோகேஷ்(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி லோகேஷ் தனது நண்பர்களுடன் ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக லோகேஷ் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பேருந்தில் ஏற முடியாமல் தவித்த மாணவர்கள்…. கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

மாணவர்கள் பேருந்தின் கண்ணாடியை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காந்திகுப்பம், ஏமாப்பூர் ஆகிய பகுதிகளில் இருக்கும் பள்ளி, கல்லூரிக்கு பேருந்துகளில் சென்று வருகின்றனர். நேற்று காலை 8:30 மணிக்கு கொங்கராயநல்லூரில் இருந்து அரசு பேருந்து விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் பையூர் பேருந்து நிறுத்தத்தில் […]

Categories
ஆன்மிகம் திருவாரூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற ஆபத்சகாயேஸ்வரர் கோவில்…. சிறப்பு வழிபாட்டில்…. கலந்து கொண்ட திரளான பக்தர்கள்….!!!!

ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் வியாழக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலத்தில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வியாழன் கிழமை அன்று சிறப்பு வழிபாடு நடந்துள்ளது. இந்த விழாவை முன்னிட்டு கலங்காமர்காத்த விநாயகர், ஆபசகாயேஸ்வரர், ஏலவார் குழலி அம்மன், மூலவர் குருபகவான், வள்ளி தெய்வானை சுப்பிரமணியர், ஆக்ஞாயா கணபதி, நவகிரக சன்னதி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதியில் அபிஷேகங்களும் ஆராதனைகளும் அலங்காரங்களும் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மூலவரான குரு பகவானுக்கும் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (17.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 17) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“ஒட்டாண்குளத்தில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்”…. நோய் பரவும் அபாயம்…. மக்கள் கோரிக்கை…!!!!!

ஒட்டாண்குளத்தில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றது. தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர் நகர மையப்பகுதியில் ஒட்டாண்குளம் அமைந்திருக்கின்றது. இந்த குளத்தில் தான் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 18 ஆம் கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு வரப்படுகின்றது. இதன் வாயிலாக 46 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகின்றது. மேலும் கால்நடையின் குடிநீருக்காகவும் இந்த குளம் பயன்படுகின்றது. இந்த நிலையில் கூடலூர் நகரப் பகுதியில் இருக்கும் இறைச்சி கடைகளில் சேரும் கோழி இறைச்சி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“தேனியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்”…. வடிகால் தூர்வாரும் பணி தொடக்கம்….!!!!!

தேனியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வடிகால் தூர்வாரும் பணியானது தொடங்கியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட பொம்மையகவுண்டன்பட்டியிலிருந்து நேரு சிலை சிக்னல் வரை செல்லும் சாலையில் இருபுறமும் மழைநீர் வடிக்கால் அமைந்துள்ள நிலையில் பல வருடங்களாக தூர்வாரப்படாமல் இருக்கின்றது. இதனால் வடிக்கால் பகுதியில் ஆக்கிரமிப்புகளும் அதிகரித்து இருக்கின்றது. இதன் விளைவாக மழை காலங்களில் மழைநீர் வடிந்து செல்ல வழி இல்லாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் நகராட்சி நிர்வாகம் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி வாடிக்கையாளர் திட்டமிட்டதை தொடர்ந்து பொம்மையகவுண்டன்பட்டி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வேலைவாய்ப்பு இணையதளம்…. “சான்றிதழ்கள் பதிவு செய்து கொள்ளலாம்”… ஆட்சியர் தகவல்….!!!!!

10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை வேலைவாய்ப்பை இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, 2021-22 ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு இணையதளத்தில் மாணவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்யும் நடைமுறை தற்பொழுது நிறுத்தப்பட்டிருக்கின்றது. இன்று 10 மற்றும் 12-ம் வகுப்பு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“குவைத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர் வழக்கு”… 4 பேர் கைது….!!!!!

குவைத்தில் கூத்தாநல்லூரை சேர்ந்தவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாநல்லூரில் இருக்கும் மெயின் ரோட்டு தெருவை சேர்ந்த முத்துக்குமரன் என்பவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாட்டில் வேலை பார்ப்பதற்காக ஒன்றரை லட்சம் ரூபாயை ஒருவரிடம் இருந்து கடனாக வாங்கி ஹைதராபாத் சேர்ந்த நிறுவனம் மூலம் குவைத்துக்கு சென்று இருக்கின்றார். அவரிடம் கிளினிக் வேலை அல்லது சேல்ஸ்மேன் வேலை வாங்கி தருவதாக குவைத்துக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேன்”…. பரிதாபமாக டிரைவர் உயிரிழப்பு….!!!!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள நரசிங்கபுரம் ஒத்தவாடை தெருவை சேர்ந்த சிவபதி (டிரைவர்) என்பவர் நேற்று அதிகாலை தனது மோட்டார் சைக்கிளில் ஒரகடம் நோக்கி சென்று கொண்டிருந்தார். சிவபதி திருவள்ளுவரை அடுத்திருக்கும் கோவிந்தமேடு பஞ்சாயத்து அலுவலகம் எதிரே சென்ற பொழுது வேகமாக வந்த மினிவேன் அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“தீண்டாமை சுவர்”….. இடித்த அதிகாரிகள்…. மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி…!!!!!

தீண்டாமை சுவரை அதிகாரிகள் இடித்ததால் மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஊத்துக்கோட்டை அருகே இருக்கும் கச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட வாழவந்தான் கோட்டையில் 75க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பத்தினர் சென்ற ஐம்பது வருடங்களாகவே வசித்து வருகின்றார்கள். இவர்கள் செல்லும் பொது வழி பாதையை சிலர் ஆக்கிரமித்து தீண்டாமை சுவர் எழுப்பியதாக சொல்லப்படுகின்றது. இதனால் இந்த சுவற்றை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் தாசில்தார் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. இதனால் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“ஆட்சியர் அலுவலகம் புதிய கட்டிடம்”… அமைய உள்ள 6 தளங்கள்…. இதோ வசதிகள் விவரம்…!!!!!

புதிய ஆட்சியர் கட்டிடத்தில் ஆறு தளங்களிலும் அமைய உள்ள வசதிகளின் விவரம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஆறு தளங்களுடன் கட்டப்படும் ஒருங்கிணைந்த கட்டிடத்திற்கு நேற்று முதல்வர் அடிக்கல் நாட்டினார். இந்த கட்டிடத்தில் அமைய உள்ள வசதிகள் என்னவென்றால், தரைதளத்தில் அஞ்சலகம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், பொதுமக்கள் குறைத்திட்ட கூட்டம் அரங்கம், தேர்தல் பிரிவு அரங்கம், வாகனம் நிறுத்தம் உள்ளிட்டவையும் முதல் தளத்தில் தொழிலாக பாதுகாப்புத் துறை குற்ற வழக்குகள் பதிவுத்துறை புள்ளியல் துறை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தனியார் பேருந்து அடியில் புகுந்த மோட்டார் சைக்கிள்….. “தாய் மகனுக்கு நேர்ந்த சோகம்”… போலீசார் விசாரணை….!!!!!

தனியார் பேருந்தின் அடியில் புகுந்து மோட்டார் சைக்கிள் சிக்கியதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். விருதுநகர் மாவட்டத்திலிருந்து அருப்புக்கோட்டை நோக்கி 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக்கொண்டு தனியார் பேருந்து அருப்புக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது எதிரெதிரே வந்த மோட்டார் சைக்கிளும் பேருந்தும் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இரண்டு பேர் உடல் நசங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்கள். இதையடுத்து தகவல் அறிந்துசம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடலை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கிரிக்கெட்டால் ஏற்பட்ட விரோதம்…. “வாலிபரை கொலை செய்த எலக்ட்ரிஷன்”…. கோர்ட் தீர்ப்பு….!!!!!

வாலிபரை கொலை செய்த எலக்ட்ரீஷனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் அடுத்துள்ள ரோஷனை காந்திநகரை சேர்ந்த சரவணன் என்பவருக்கும் எலக்ட்ரிஷன் அன்பழகன் என்பவருக்கும் கிரிக்கெட் விளையாட்டின் பொழுது தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சென்ற 2017 ஆம் வருடம் சரவணன் அணிக்கும் அன்பு அணிக்கும் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்ற பொழுது அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதில் ராதாகிருஷ்ணன், லோகேஷ், சதீஷ், மணிகண்டன், […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“தோட்டக்கலை இயக்கத் திட்டம்”… “விவசாயிகள் பயன்பெற இணையத்தில் பதிவு செய்ய வேண்டும்”…. ஆட்சியர் தகவல்…!!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் தோட்டக்கலை துறையின் மானிய திட்டத்தில் விவசாயிகள் இணையதளம் மூலம் பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலமாக தேசிய தோட்டக்கலை இயக்க திட்டமானது மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தில் காய்கறிகள், பழப்பயிர்கள், பூச்செடிகள், மலைத்தோட்ட பயிர்கள், கலை மேலாண்மைக்கான நிலப் போர்வைகள், மண்புழு உரம் தயாரிக்க நிரந்தர மண்புழு உரம் படுக்கை, மினி டிராக்டர், பவர் டில்லர்கள், காய்கனி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆபாசமாக பாடம் நடத்தினாரா….?? மாணவிகள் அளித்த புகார்…. பரபரப்பு சம்பவம்….!!!

ஆபாசமாக பாடம் நடத்திய ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் இரண்டு மாணவிகள் சைல்ட் லைன் உதவி எண் 1098 தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளனர். அந்த புகாரியில் கணக்குப்பதிவியல் ஆசிரியராக வேலை பார்க்கும் கிறிஸ்துதாஸ் என்பவர் பாடத்திற்கு சம்பந்தமில்லாமல் பாலியல் தொடர்பான பாடம் நடத்தியதாக தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த மாணவிகளின் பெற்றோர் பள்ளியில் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!!

தண்ணீரில் மூழ்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பொன்மனை பண்டாரக்கோணம் பகுதியில் மாதவி(48) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மாதவியின் கணவர் பாஸ்கரன் இறந்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் மாதவி மாலை நேரத்தில் குளிக்க சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் மாதவியை தேடி அலைந்தனர். அப்போது குற்றியாணி பகுதியில் உள்ள […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தாயை கேலி செய்த நபர்….. தட்டி கேட்ட மகனுக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் அதிரடி…!!!

வாலிபரை கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் அக்கரை பகுதியில் மணிகண்டன்(23) என்பவர் வசித்து வருகிறார். இவர் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் வேலை பார்த்து வருகிறார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு மணிகண்டனின் தாயாரை ராமமூர்த்தி(52) என்பவர் கேலி செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அக்கரை பகுதியில் இருக்கும் கோழிக்கடை முன்பு மணிகண்டன் ராமமூர்த்தியை சந்தித்து ஏன் எனது தாயை கேலி செய்தீர்கள்? என தட்டி கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த ராமமூர்த்தி மணிகண்டனை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சைக்கிளில் சென்ற சிறுவன்…. டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பலி…. கதறும் குடும்பத்தினர்…!!!

டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள வெங்கமேடு பகுதியில் பொன் கதிரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் புதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி உமாமகேஸ்வரி வெள்ளகோவில் பகுதியில் இருக்கும் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினரின் மூத்த மகன் பொன் வெற்றி தமிழ்(10) பள்ளக்காட்டூரில் இருக்கும் தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தேடி அலைந்த உறவினர்கள்…. சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!

கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பூசாரி பாளையம் பகுதியில் சரண்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நகுல்(10) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் செண்பகப்புதூரில் இருக்கும் தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நகுலை காணவில்லை. இதனால் உறவினர்கள் சிறுவனை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் சரண்யா சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சவுக்கு தோப்பிற்கு அழைத்து சென்ற வாலிபர்…. மாணவிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். கடலூர் மாவட்டத்தில் உள்ள தம்பிபேட்டை காலனியில் ராஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ்(22) என்ற மகன் உள்ளார். கடந்த 2020- ஆம் ஆண்டு கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தா எட்டாம் வகுப்பு மாணவியை விக்னேஷ் பின் தொடர்ந்து சென்று காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். மேலும் அருகில் இருந்த சவுக்கு தோப்புக்கு மாணவியை அழைத்துச் சென்று […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திருமணமான 3-வது நாளில்….. புது மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி….. போலீஸ் விசாரணை….!!!

திருமணமான மூன்று நாளில் புதுப்பெண் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கரை பகுதியில் 39 வயதுடைய பட்டதாரி வசித்து வருகிறார். கடந்த 8-ஆம் தேதி இவருக்கும் 33 வயதுடைய பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த 16-ஆம் தேதி புதுமண தம்பதியினர் துணி எடுப்பதற்காக ஒப்பந்தக்கார வீதியில் இருக்கும் ஜவுளி கடைக்கு சென்றுள்ளனர் இந்நிலையில் துணிகளை தேர்வு செய்து கொண்டிருந்த பெண் திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் புது மாப்பிள்ளை தனது மனைவியை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

குளியல் அறைக்கு சென்ற மாணவி…. நள்ளிரவில் புகுந்த வாலிபர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!!

குளியல் அறைக்குள் புகுந்து மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் ஏணிகாரன் தோட்டம் பகுதியில் எலக்ட்ரீசியனான ஆகாஷ்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பத்தாம் வகுப்பு மாணவியை காதலித்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று நள்ளிரவு 12 மணிக்கு மாணவி தனது வீட்டு குளியல் அறைக்கு சென்றுள்ளார். அப்போது ஆகாஷ் அங்கு சென்று மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“என் மகளை கடத்தி விட்டனர்” தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவி திடீரென காணாமல் போய்விட்டார். இந்நிலையில் தனது மகளை யாரோ கடத்தி சென்று விட்டதாக மாணவியின் தாயார் திட்டக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த தர்மன்(20) […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஆப்ரேட்டர்கள் மீது கற்களை வீசிய நபர்கள்….. போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றம்…. பரபரப்பு சம்பவம்….!!!

ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றும் இயந்திர ஆபரேட்டர்கள் மீது சிலர் கற்களை வீசி தாக்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் நகராட்சிக்கு உட்பட்ட நீர் நிலைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் மற்றும் வீடுகளை அகற்றுமாறு அதிரடியாக உத்தரவிட்டது. அதன்படி கடந்த சில நாட்களாக 4 1/2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள முல்லா ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் மற்றும் 66 கடைகளை அகற்றும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. நேற்று 3 நவீன […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ராணுவத்தில் சேர விண்ணப்பித்த வாலிபர்….. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புதுக்குடி நடுத்தெருவில் பிச்சையா கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேலு(எ)சதீஷ்(23) என்ற மகன் இருந்துள்ளார். பட்டதாரியான வேலு அக்னிபத் திட்டத்தின் கீழ் இராணுவத்தில் சேருவதற்காக கடந்த மாதம் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் எழுத்து மற்றும் உடல் தகுதி தேர்வில் வேலு தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால் மருத்துவ பரிசோதனையில் சிறிது கண் பார்வை குறைபாடு காரணமாக சதீஷ் தோல்வி அடைந்ததாக தெரிகிறது. இதனால் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மனைவி இறந்த துக்கம்…. 20-வது நாளில் கணவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மனைவி இறந்த 20-வது நாளில் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கோட்டப்பட்டி பகுதியில் கூலித்தொழிலாளியான சிவகுமார்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சிவகாமி(38) என்ற மனைவி இருந்துள்ளார், கடந்த மாதம் 26-ஆம் தேதி சிவகாமி மேச்சேரி பத்ரகாளி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து நண்பர் ஒருவருடன் மொபட்டில் சிவகாமி வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அவர்கள் ஓமலூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது எதிரே வேகமாக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு பாதுகாப்பு தாங்க” கல்லூரியில் சேர வேண்டிய நேரத்தில் திருமணம்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஊ.மாரமங்கலம் பள்ளக்காட்டூர் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரான அஜித்(22) என்ற மகன் உள்ளார். இவர் சொந்தமாக விசைத்தறி கூடம் வைத்துள்ளார். கடந்த 1 1/2 ஆண்டுகளாக அஜித்தும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ரூபினி(19) என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். 12-ஆம் வகுப்பு படித்து முடித்த ரூபினி கல்லூரியில் சேர்வதற்காக விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் ரூபினியின் காதல் விவகாரம் அவரது பெற்றோருக்கு […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (16.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 16) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“பெட்டி கடைகளில் பணம் கேட்டு மிரட்டிய போலி போலீஸ்காரர்கள்”…… போலீசார் அதிரடி….!!!!!!

கும்முடிபூண்டி அருகே பெட்டி கடையில் ஆய்வு செய்வதுபோல் பணம் கேட்டு மிரட்டியை இரண்டு போலி போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி அடுத்திருக்கும் புதுப்பேட்டை பகுதியில் 2 பேர் தங்களை போலீசார் எனக் கூறி குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றா என சோதனை மேற்கொண்டார்கள். அப்பொழுது கடைக்காரர்களை மிரட்டி பணம் கேட்டதாக சொல்லப்படுகின்றது. இதனால் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அவர்கள் இருவரையும் கைது […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர்”…. போலீசார் கைது செய்து விசாரணை…!!!!!

வெங்கல் கிராமத்தில் மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள எல்லாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கல் கிராமத்தில் உள்ள பஜாரில் கிளினிக் ஒன்று சென்ற 15 வருடங்களாக செயல்பட்டு வருகின்ற நிலையில் ராமச்சந்திரன் என்பவர் பியூசி படித்துவிட்டு அலோபதி மருத்துவம் பார்த்து வந்ததாக சுகாதாரத் துறையினருக்கு புகார் வந்து கொண்டே இருந்தது. இதனால் நேற்று சுகாதார துறை இணை இயக்குனர் தலைமையிலான சுகாதாரத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள். அதில் ராமச்சந்திரன் பியூசி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தொழிற்சாலை ஊழியர்களை தாக்குதல்…. “25 பேர் மீது வழக்குப் பதிவு”… போலீசார் விசாரணை….!!!!!!

தொழிற்சாலை ஊழியர்களை தாக்கியதாக 25 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். திருவள்ளூர் அடுத்திருக்கும் கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அதிகத்தூர் கிராமத்தில் தனியார் கார் தயாரிக்கும் தொழிற்சாலை இருக்கின்றது. இந்த தொழிற்சாலையானது சில வருடங்களுக்கு முன்பாக வேறு ஒரு நிறுவனத்திடம் சென்றது. இதையடுத்து புதிய தொழிற்சாலை நிர்வாகத்தினர் பணியில் இருந்த 178 பணியாளர்களை வேலையில் இருந்து நிறுத்தினார்கள். இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு மீண்டும் வேலை வழங்க கோரி சென்ற நான்கு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மாவட்ட அளவிலான கபடி போட்டி…. “கட்டக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம்”…!!!!!!

மாவட்ட அளவிலான கபடி போட்டியில் அரசு உயர்நிலை பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்கள். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி தரணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இதில் கட்டக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முதலிடமும் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் இரண்டாம் இடமும் பெற்று பலரின் பாராட்டுகளை பெற்று வருகின்றார்கள். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் உதயகுமார், தலைமை ஆசிரியர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்…. உறவினர்களின் செயல்…!!!

மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள ராமலிங்காபுரம் பகுதியில் செல்வராஜ்(31) என்பவர் வசித்து வந்துள்ளார். விபத்தில் சிக்கி படுகாயமடைந்த செல்வராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் நேற்று முன்தினம் செல்வராஜ் மூளைச்சாவு அடைந்தார். இதனை அடுத்து செல்வராஜின் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவது குறித்து உறவினர்களிடம் மருத்துவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதனை ஏற்றுக்கொண்ட உறவினர்கள் வாலிபரின் உடல் உறுப்புகளை தானம் கொடுக்க சம்மதித்தனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் கிடந்த சடலம்….. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பரபரப்பு சம்பவம்…!!!

பூட்டிய வீட்டிற்குள் வாலிபர் அழுகிய நிலையில் சடலமாக கடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கன்குளத்தில் மைக்கேல் ஜார்ஜ் பிரபு(39) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மேரி அஸ்வதி(33) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர். வெளிநாட்டில் வேலை பார்த்த மைக்கேல் கடந்த ஜூன் மாதம் சொந்த ஊருக்கு வந்து வீட்டில் இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மேரி தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர்…. பாதிரியார் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு…. போலீஸ் விசாரணை…!!!

இளம்பெண்ணை ஏமாற்றிய விவகாரம் தொடர்பாக பாதிரியாரின் மகன் உள்பட 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கலந்தபனை சீயோன்புரம் பகுதியில் டேவிட் ஜேக்கப் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கலந்தபடை கிறிஸ்தவ சபையில் பாதிரியாராக இருக்கிறார். இவருக்கு அனிஸ் பவுல்(25) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் 22 வயதுடைய இளம்பெண் கிறிஸ்தவ சபைக்கு சென்று வந்த போது அனிஸ் பவுலுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் பல்வேறு இடங்களில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. துடிதுடித்து இறந்த வாலிபர்கள்…. கோர விபத்து…!!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் கிராமத்தில் ஆகாஷ்(23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தற்காலிகமாக சுப்புலாபுரத்தில் சுகாதார ஆய்வாளராக வேலை பார்த்து வந்துள்ளார். அதே ஊரில் வசித்த மகேந்திரன்(20) என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த வாரம் விடுமுறையில் மகேந்திரன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் ஆகாஷூம் மகேந்திரனும், மோட்டார் சைக்கிளில் செங்கோட்டைக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு […]

Categories

Tech |