Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சொந்தமான நிலம்…. அறிவிப்பு பலகை வைத்த அதிகாரிகள்…. அதிரடி நடவடிக்கை….!!!

கோவிலுக்கு சொந்தமான நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நெல்லிதோப்பு கிராமத்தில் பிரம்மபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 1.12 ஏக்கர் விலை நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் நாகையா, ஆலய நிலங்கள் தாசில்தார் சங்கர் ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 1.12 ஏக்கர் கோவில் நிலத்தை மீட்டனர். மேலும் இந்த இடம் அறநிலையத்துறைக்கு சொந்தமானது. இதை யாரும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“குவைத்துக்குச் சென்ற கூத்தாநல்லூரை சேர்ந்த தொழிலாளி சுட்டுக்கொலை”…. கொடூர சம்பவம்…!!!!!!

வெளிநாட்டிற்கு வேலை பார்க்க சென்ற தொழிலாளி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாநல்லூரில் இருக்கும் மெயின் ரோட்டு தெருவை சேர்ந்த முத்துக்குமரன் என்பவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாட்டில் வேலை பார்ப்பதற்காக ஒன்றரை லட்சம் ரூபாயை ஒருவரிடம் இருந்து கடனாக வாங்கி ஹைதராபாத் சேர்ந்த நிறுவனம் மூலம் குவைத்துக்கு சென்று இருக்கின்றார். அவரிடம் கிளினிக் வேலை அல்லது சேல்ஸ்மேன் வேலை வாங்கி தருவதாக குவைத்துக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் அங்கு சென்ற முத்துக்குமரனுக்கு பணக்கார ஒருவரின் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“10,12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள்”…. மதிப்பெண் சான்றிதழ்களை வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்யலாம்….!!!!!

10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை வேலைவாய்ப்பை இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, 2021-22 ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு இணையதளத்தில் மாணவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்யும் நடைமுறை தற்பொழுது நிறுத்தப்பட்டிருக்கின்றது. இன்று 10 மற்றும் 12-ம் வகுப்பு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மனைவி கொடுத்த புகார்…. ஒரு மாதத்திற்கு பிறகு… “தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்ட ராணுவ வீரரின் உடல்”…!!!!!

முன்னாள் ராணுவ வீரர் உடலை பிரேத பரிசோதனை செய்யக்கோரி மனைவி கொடுத்த புகாரின் பேரில் ஒரு மாதத்திற்கு பின்னர் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை அடுத்திருக்கும் புள்ளானேரி புதூர் பகுதியை சேர்ந்த ரஜினி ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவரின் மனைவி ஜெயஸ்ரீ. இத்தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றார்கள். சென்ற மாதம் 20-ம் தேதி ஆம்பூர் பகுதியில் இருக்கும் ராணுவ கேண்டினைக்கு வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு தனது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“பாசனத்திற்காக திறந்து வைக்கப்பட்ட முல்லை பெரியாறு 18-ம் கால்வாய்”…. திறந்து வைத்த ஆட்சியர்…!!!!!

முல்லை பெரியாற்றில் பாசனத்திற்காக பதினெட்டாம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம், போடி தாலுகாவில் இருக்கும் கோம்பை, பண்ணைபுரம், தேவாரம், சிந்தலைசேரி, சங்கராபுரம், கோடாங்கிபட்டி, பொட்டிபுரம் ஆகிய பகுதிகள் பாசன வசதி பெரும் வகையில் முல்லைப் பெரியாற்றில் பதினெட்டாம் கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் பாசனத்திற்காக பதினெட்டாம் கால்வாயில் இருந்து தண்ணீரை திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டதையடுத்து இன்று பதினெட்டாம் கால்வாயில் தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்”…. 9 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் உத்தரவு….!!!!!

பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் வழக்கில் ஒன்பது பேரைக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி காவல் நிலைய எல்லையில் இருக்கும் ஐயப்பன் தாங்கல் பெரிய கொளுத்துவாஞ்சேரி பகுதியில் இரவு நேரத்தில் காரில் பயணம் செய்த பெண்ணை ஒன்பது பேர் கொண்ட கும்பல் கூட்டு பலாத்காரம் செய்தது. இந்த வழக்கில் கூட்டு பலாத்காரம் செய்த பிரகாஷ், கருப்பையா, தினேஷ், எபினேசர், சுனில், சூர்யா, ஆனந்த், முபாரக், வெங்கடேஷ் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மூட்டை மூட்டையாக குடோனில் இருந்த அயோடின் கலக்காத உப்பு”…. உணவு பாதுகாப்புத்துறை துறை அதிகாரிகள் பறிமுதல்…!!!!

அயோடின் கலக்காத 13 டன் உப்பு மூட்டைகளை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு உணவு தானிய அங்காடி வளாகத்தில் இருக்கும் குடோனில் சில பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. இதனால் நியமன அதிகாரி சதீஷ் தலைமையிலான அதிகாரிகள் இன்று குடோனிற்கு சென்று சோதனை செய்ததில் அங்கு மூட்டை மூட்டைகளாக அயோடின் கலக்காத உப்பு இருந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் 13 டன் அளவிலான […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு சந்தேகமா இருக்கு” வாலிபரின் உடலை சாலையில் வைத்து போராடிய உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!!

ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வளத்தாமங்களம் வடக்கு தெருவில் சாயிராம்(19) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் உப்புகாரன் ரயில்வே கேட் அருகே இருக்கும் தண்டவாளத்தை சாயிராம் கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரயிலில் அடிபட்டு சாய்ராம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு அரசு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த மகன்…. தந்தைக்கு நடந்த கொடூரம்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!

முதியவரை வெட்டி கொலை செய்த 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள செங்கமேடு பகுதியில் வீராசாமி(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் ஆனந்தராஜ்(32) பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இளைய மகன் முருகேசன்(30) கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு உறவினரான மதியழகன் என்பவரது மகள் லாவண்யாவை முருகேசன் காதலித்து திருமணம் செய்துள்ளார். இது தொடர்பாக வீராசாமி குடும்பத்தினருக்கும், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மாவட்ட கலெக்டருக்கு கிடைத்த தகவல்…. கிளினிக் நடத்தியவர் கைது…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!!

சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்துகள் மூலம் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த நபர் கைது செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிதம்பரநாதபுரம் பகுதியில் ராமன்(42) என்பவர் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். இவர் அக்குபஞ்சர் சிகிச்சை படித்துவிட்டு பொதுமக்களுக்கு சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்துகளை கொடுத்து சிகிச்சை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டிக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து மாவட்ட கலெக்டரின் உத்தரவின் படி தேவகோட்டை மருத்துவ அதிகாரி டாக்டர் செங்கதிர், சிவகங்கை மருத்துவம் மற்றும் ஊரக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

500 கல்லறைகள் இடித்து அகற்றம்….. எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்…. பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!!

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 500 கல்லறைகள் இடித்து அகற்றப்பட்டது. சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம் நகராட்சி 26-வது வார்டு சங்ககிரி மெயின் ரோட்டில் மயானம் இருக்கிறது. இங்குள்ள கல்லறைகளை எடுத்து அகற்றிவிட்டு பூங்காவுடன் கூடிய எரிவாயு தகனமேடை அமைக்க 1 1/2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் கல்லறைகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கினை நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார். நேற்று மயானத்தில் பூங்காவுடன் கூடிய எரிவாயு தகன […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

விளையாடி கொண்டிருந்த குழந்தை…. டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பலி…. கதறும் குடும்பத்தினர்…!!!

டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பெண் குழந்தை பலியான சம்பவம் சோழத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தாமரைப்பாக்கம் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரிசி ஆலையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு யாழினி(3) என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் யாழினி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு எதிரே நின்று விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திமிரியில் இருந்து ஆரணி நோக்கி வேகமாக சென்ற டிராக்டர் சக்கரத்தில் சிக்கி யாழினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“உடனே புகார் அளிக்கலாம்” சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

சிறுமியை கர்ப்பமாக்கி திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பென்னக்கோணம் கிழக்கு தெருவில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேஷ்(23) என்ற மகன் உள்ளார். கூலித் தொழிலாளியான வெங்கடேஷ் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானார். இதனை அடுத்து வெங்கடேஷ் சிறுமியை திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த குழந்தைகள் நல குழு உறுப்பினர் ராமு என்பவர் பெரம்பலூர் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மர்மமான முறையில் இறந்த ஆடுகள்…. வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பெண்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

மர்மமான முறையில் ஆறு ஆடுகள் இறந்து கிடந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேகுபட்டி ஊராட்சி பாண்டியம்மன் நகர் வீதியில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜோதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினர் தங்களது வீட்டிற்கு பின்புறத்தில் ஆடுகளை கட்டி வைத்துள்ளனர். நேற்று காலை மர்மமான முறையில் 6 ஆடுகள் இறந்து கிடந்ததை பார்த்து ஜோதி அதிர்ச்சி அடைந்தார். ஆடுகளின் உடம்பில் பல்வேறு இடங்களில் ரத்த காயங்கள் இருந்தது. […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“கருவை கலைத்து விடு” கணவரால் பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள செம்பியக்குடி கிராமத்தில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நதியா(23) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. நதியா தற்போது 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் பிரபு கருவை கலைக்குமாறு கூறியதால் தம்பதியினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த நதியா நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நடத்தை மீது சந்தேகப்பட்ட கணவர்….. மனைவிக்கு நடந்த கொடூரம்…. திண்டுக்கல்லில் பரபரப்பு சம்பவம்….!!

கணவர் தனது மனைவியை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குன்னுவாரன்கோட்டை அம்பேத்கர் நகரில் செல்லப்பாண்டி(46) என்பவர் வசித்து வருகிறார். இவர் செங்கல் சூழலில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அஞ்சுலட்சுமி(36) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மனைவியின் நடத்தை மீது செல்லபாண்டியனுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கணவன் மனைவிக்கு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“பேய் பிடித்திருப்பதாக கூறிய மக்கள்” குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழையூர் கிராமத்தில் ஜோசப் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேளாங்கண்ணி(25) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு சுகன்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. கடந்த 3 மாதங்களாக வேளாங்கண்ணிக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து அப்பகுதி மக்கள் வேளாங்கண்ணிக்கு பேய் பிடித்து இருப்பதாக கூறியதால் குடும்பத்தினர் அவரை பூசாரியிடம் அழைத்து சென்று பூஜை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி…. “கோடப்பந்து கால்வாயில் வெள்ளப்பெருக்கு”…!!!!!

ஊட்டியில் கனமழை காரணமாக பல இடங்களில் நீர் புகுந்தது‌. நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. சென்ற இரண்டு நாட்களாகவே கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் கனமழை பெய்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறையும் விடப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் வானம் மேகம் கூட்டமாக காணப்பட்டு பின்னர் 12 மணி அளவில் மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழையானது பல இடங்களில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக கொட்டி […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (15.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 15) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“பெண்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி முகாம்”…. அரசு மானியம் குறித்து விளக்கம்…!!!!

பெண்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி முகாம் கீழ் கோத்தகிரியில் நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கீழ் கோத்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த நீலகிரி பாதுகாப்பு சங்கம் சார்பாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி முகாம் நடந்தது. இந்த முகாமை கள இயக்குனர் சிங்கராஜ் தொடங்கி வைக்க வாழ்வாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களின் முக்கியத்துவம், வங்கி கடன்கள், பெண்கள் தொழில் செய்வதன் முக்கியத்துவம் என அரசு மானியங்கள் குறித்து பேசினார்கள். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அரசு பள்ளிகளில் “காலை உணவு வழங்கும் திட்டம்”… நாமக்கல்லில் நாளை தொடக்கம்…!!!!!

நாமக்கலில் முதல் கட்டமாக 50 அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் நாளை தொடங்கப்பட இருப்பதாக எம்பி கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களை கருத்தில் கொண்டு அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை வேலைகளில் சத்தான உணவு வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரையில் தொடங்கி வைக்க இருக்கின்றார். இதன் பிறகு நாளை அனைத்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நிறுத்தப்பட்ட முதியோர் உதவி தொகை… “கதறி அழுத மூதாட்டிகள்”… தாசில்தார் அலுவலகத்தில் பரபரப்பு…!!!!!

முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டதால் மூதாட்டிகள் கதறி அழுதார்கள். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பப்ளிக் ஆபீஸ் சாலையில் உள்ள பகுதியை சேர்ந்த சில மூதாட்டிகள் தங்களுக்கு வழங்கப்பட்டு வரும் முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டிருப்பதாகவும் மீண்டும் தொகை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்கள். ஆனால் அதிகாரிகள் விதிமுறைகள் மீறி வழங்கப்பட்டதால் உதவி தொகை நிறுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார்கள். இது குறித்து நாகை மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாவது, மாவட்டத்தில் நான்கு தாலுகா மூலமாக பயணிகளுக்கு அரசின் பல்வேறு திட்டத்தின் கீழ் […]

Categories
மாவட்ட செய்திகள்

திருமண நாளில்…. “காதல் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்”….. போலீசார் அதிரடி…!!!!!

காதல் மனைவியை திருமண நாளில் கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தார்கள். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள காமராஜர் சாலை அக்பர் காலனியை சேர்ந்த அருள் என்பவர் பேருந்து நிலையத்தில் புத்தகம் மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனை செய்து வருகின்றார். இவருடைய மனைவி ரேவதி. இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் ஸ்டீபன் ராஜ் என்ற மகனும் மகாரித்திகா என்ற மகளும் இருக்கின்றார்கள். மகன் சாப்ட்வேர் கம்பெனியில் என்ஜினீரியாக பணியாற்றி வருகின்றார். மேலும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ரயில் முன் பாய்ந்து குழந்தையுடன் இளம்பெண் தற்கொலை”… கணவர் உள்பட 2 பேருக்கு சிறை…!!!!!!

இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில் கணவர் உட்பட 2 பேருக்கு 14 வருடங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காப்பட்டணம் அருகே இருக்கும் அம்சி வேட்ட மங்கலத்தைச் சேர்ந்த அஜிதா என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஜெஸ்டின்சன் என்பவருக்கும் சென்ற 2005 ஆம் வருடம் செப்டம்பர் 14ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இத்தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் அஜிதாவின் கணவரின் தம்பி நிக்ஸன் சாமுவேலுக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பாதாள சாக்கடை திட்ட குழாய் இணைப்பு பணி”…. நாகர்கோவிலில் போக்குவரத்து மாற்றம்…!!!!!

பாதாள சாக்கடை திட்ட குழாய் இணைப்பு பணியால் நாகர்கோவிலில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாநகர பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் குடிநீர் திட்ட பணிகளுக்காக சாலைகள் தோன்றப்பட்டு குழாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றது. இதனால் நாகர்கோவில் காவல் நிலையம் முதல் சவேரியார் ஆலய சந்திப்பு வரை இருக்கும் சாலையில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக சாலைகள் தோண்டப்பட்டு குழாய்கள் அமைக்கும் பணியானது நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. இதையடுத்து பொக்லைன் எந்திரங்கள் மூலமாக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

தொழிலாளியை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அக்சார் பெயிண்ட் ரவுண்டானா அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் வசிக்கும் சுந்தர் சிவன் என்பதும் மேலும் அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த தொழிலாளி ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு கத்தியை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வேகமாக வந்த வாகனம்…. 3 வயது மயிலுக்கு நேர்ந்த விபரீதம்…. பொதுமக்களின் தகவல்….!!

வாகனம் மோதி உயிரிழந்த மயிலை வனத்துறை அதிகாரிகள் புதைத்தனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம்-தாராபுரம் சாலையில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அருகில் வந்த வாகனம் ஒன்று 3 வயது ஆண்மயில் மீது மோதியது. இதில் காயமடைந்த ஆண்மயில் சாலையோரத்தில் இறந்து கிடந்தது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் இறந்து கிடந்த மயிலை மீட்டு அருகில் புதைத்தனர்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“சுற்றுலா வேன்-பள்ளி வேன் மோதி விபத்து”…. 5 பேர் படுகாயம்…. மருத்துவமனையில் சிகிச்சை…!!!!!

கன்னியாகுமரியில் சுற்றுலாவேன்-பள்ளிவேன் மோதிக்கொண்டதில் ஐந்து பேர் படுகாயம் அடைந்தார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் பல்வேறு இடங்களைச் சுற்றி பார்ப்பதற்காக மராட்டிய மாநிலத்தில் இருந்து 18 பேர் சுற்றுலா வந்தார்கள். இவர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக சுசீந்திரம் கோவிலுக்கு புறப்பட்டார்கள். இதையடுத்து கன்னியாகுமரி நாகர்கோவில் இடையேயான தேசிய நெடுஞ்சாலைகளில் சுவாமிநாதபுரம் பகுதியில் சுற்றுலா வேன் சென்ற பொழுது கன்னியாகுமாரியில் இருக்கும் ஒரு தனியார் பள்ளி வேன் மாணவர்களை வீடுகளில் இறக்கிவிட்டு வந்து கொண்டிருந்தது. அப்பொழுது எதிர்பாரா விதமாக சுற்றுலா […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தேவாலயங்கள் சீரமைக்கும் பணி… “நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம்”… ஆட்சியர் தகவல்…!!!!!

தேவாலயங்கள் சீரமைக்கும் பணிக்கு நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்காக 2016-17 வருடம் முதல் நிதி உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறுவதற்கான தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ தேவாலயம் 10 வருடங்களுக்கு மேலாக சொந்த கட்டிடத்தில் இருக்க வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“மாணவிகளிடம் பேசுவதில் தகராறு”…. 2 கோஷ்டி பள்ளி மாணவர்கள் மோதல்….பரபரப்பு….!!!!!

மாணவிகளிடம் பேசுவதில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் அண்ணா பேருந்து நிலையம் இருக்கின்றது. இங்கே நேற்று முன்தினம் சில பள்ளி மாணவர்கள் இரு கோஷ்டியாக பிரிந்து கைகலப்பில் ஈடுபட்டார்கள். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பின் தகவல் அறிந்து வந்த போலீசார் கைகலப்பில் ஈடுபட்ட மாணவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டார்கள். அப்பொழுது மாணவர்கள் தெரிவித்ததாவது, மாணவிகளிடம் பேசுவது குறித்து ஏற்பட்ட தகராறில் 2 கோஷ்டியாக பிரிந்து சண்டை போட்டது தெரிய வந்தது. […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (14.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 14) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த ஷேர் ஆட்டோ… “பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து”…. 5 பெண்கள் படுகாயம்….!!!!!

கவரைப்பேட்டை அருகே ஷேர் ஆட்டோ கவிழ்ந்ததில் 5 பெண்கள் படுகாயம் அடைந்தார்கள். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்முடிபூண்டி அடுத்திருக்கும் கவரப்பேட்டை அருகே உள்ள ஏ.என்.குப்பத்திலிருந்து ஷேர் ஆட்டோவில் அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் பயணம் மேற்கொண்டார்கள். இந்த ஆட்டோ மேல்முதலம்பேடு சென்ற பொழுது சாலையோர பள்ளத்தில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த ஜெயந்தி, ஜெயா, வைலட், விமலா, ரோஸ் உள்ளிட்ட 5 பெண்கள் படுகாயம் அடைந்தார்கள். இவர்கள் அங்குள்ள ஆரம்ப சுகாதார […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி…. “பதாகைகளை ஏந்தியபடி சென்ற மாணவர்கள்”….!!!!!

அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை பொருட்களை கேதீராக மாணவர்கள் விழிப்புணர்வு நடத்தினார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்கோட்டையில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த பேரணி நடத்தினார்கள். இந்த பேரணிக்கு சிறப்பு விருந்தினராக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் உள்ளிட்டோர் வந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். இந்த பேரணியானது பள்ளியில் தொடங்கப்பட்டு முக்கிய சாலைகள் வழியாக மீண்டும் பள்ளி வந்தடைந்தது. பேரணியின் போது போதை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

8 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. தாய் அளித்த புகார்…. சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி….!!

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம் பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 27-10-2020 அன்று 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொட்டுத்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் தாயார் காங்கேயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் லோகநாதனை கைது […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“தெப்பத்தை பிரிக்கும் பணியில் ஈடுபட்ட நால்வர்”…. திடீரென ஒருவர் மாயம்…. கோவிலில் சோகம்…!!!!!

தெப்பத்தை பிரிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி குளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமானில் இருக்கும் மகாமாரியம்மன் கோவிலில் தெப்ப திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்காக தொழிலாளர்கள் ஒப்பந்த முறையில் வரவழைக்கப்பட்ட கோவில் அழகே தெப்பம் அமைக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்ட மகாமாரியம்மன் எழுந்தருளி மூன்று முறை சுற்றி வரப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்கள். இதன் பிறகு சிற்பத்தை பிரிக்கும் பணியில் நான்கு தொழிலாளர்கள் ஈடுபட்டார்கள். இதில் மூன்று பேர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய தந்தை-மகள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

காரில் புகையிலை பொருட்களை கடத்திய தந்தை மகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெங்களூருவில் இருந்து கோவில்பட்டிக்கு காரில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கோவில்பட்டி ராஜீவ்நகர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அங்கு வந்த காரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் காரில் பிளாஸ்டிக் காலி பெட்டிகள் இருந்துள்ளன. […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள்… “வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள்”… பாராட்டு விழா…!!!!!

குறுவட்ட அளவிலான தடகள போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டியில் பள்ளிக் கல்வித்துறை சார்பாக பாரதியார் பிறந்தநாள் மற்றும் குடியரசு தின விழாவையொட்டி குறுவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. மேலும் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் அளிக்கப்பட்டது. இவ்விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பாலு, பி.டி.ஏ தலைவர் அப்துல் முனாப், கட்டிமேடு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சொந்தமான…. ஆக்கிரமிக்கப்பட்ட 5 கோடி நிலங்கள் மீட்பு….!!!!!

தஞ்சை அருகே இருக்கும் கத்தரிநத்தம் கிராமத்தில் உள்ள கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகே இருக்கும் கந்தரி நத்தம் ஊராட்சியில் உள்ள கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான காலஹஸ்தீஸ்வரர் கோவில் இருக்கின்றது. மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு சொந்தமாக 56.61 ஏக்கர் விளை நிலங்கள் இருக்கின்றது. 20 வருடங்களாக ஆக்கிரமிப்பில் இருந்த விளைநிலங்களை அதிகாரிகள் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார்கள். இந்த நிலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலத்தில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 2 பேர்”…. பாய்ந்தது குண்டாஸ்…!!!!!

சேலத்தில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த இரண்டு பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள அண்ணா பூங்கா அருகே சென்ற மாதம் 16ஆம் தேதி ராஜா என்பவர் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது கிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த சக்தி பிரபு மற்றும் குமாரசாமி பட்டியை சேர்ந்த ஸ்ரீ ரங்கன் உள்ளிட்டோர் மோட்டார் சைக்கிளில் வந்து வழிமறித்துள்ளார்கள். மேலும் கத்தியை காட்டி மிரட்டி ராஜாவிடம் இருந்து 2500 ரூபாய் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“மினி வேனில் கடத்த முயற்சி”… போலீசருக்கு கிடைத்த ரகசிய தகவல்…. அதிரடி நடவடிக்கை….!!!!!

மினி வேனில் கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து கடத்திய நபரை கைது செய்தார்கள். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் வாசுகி நகர் கொண்டாபுரம் பகுதியில் இருக்கும் சந்திரசேகரன் என்பவர் ரேஷன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் விரைந்து சென்று போலீசார் சோதனை செய்தார்கள். இதில் மினி வேனில் 25 மூட்டைகளில் சுமார் 4 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து போலீசார் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல்… “பதுக்கி வைத்திருந்த 150 கிலோ கடல் அட்டைகள்”… அதிரடி நடவடிக்கை…!!!!!

பதுக்கி வைத்திருந்த 150 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிபட்டினம் கடற்கரை பகுதியில் கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டதில் சித்திக் என்பவரின் வீட்டில் கடல் அட்டைகளை அவித்துக் கொண்டிருந்தநிலையில் வனத்துறையினர் கைப்பற்றினார்கள். சுமார் 150 கிலோ எடையுள்ள கடல் அட்டைகளை கைப்பற்றி முள்ளிமுனை பகுதியைச் சேர்ந்த சையது என்பவரின் மகன் நைனார் முகமது என்பவரை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“திருவெற்றியூர் பாகம் பிரியாள் கோவில் உண்டியல் வசூல்”… எவ்வளவு தெரியுமா…????

ராமநாதபுரம் திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவில் உண்டியலில் 28 1/2 லட்சம் ரூபாய் வசூலானது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடனை தாலுகாவிற்கு உட்பட்ட திருவெற்றியூரில் பாகம்பிரியாள் சமேத வால்மீக நாத கோவில் இருக்கின்றது. இங்கு நேற்று இந்து சமய அறநிலையத்துறை உதவியாளர் குணசேகரன் முன்னிலையில் உண்டியல் என்னும் பணியானது நடந்தது. இதில் 28 லட்சத்து 58 ஆயிரத்து 503 ரூபாய் பணமும் 410 கிராம் தங்கமும் 4,22,500 கிராம் வெள்ளி உள்ளிட்டவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருக்கின்றனர். இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வெள்ள அபாய எச்சரிக்கை…. அதிகாரிகளின் துரித நடவடிக்கை… “கிராமங்களுக்குள் நீர் போகாமல் தவிர்ப்பு”…!!!!!

வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொண்டதால் கிராமங்களுக்குள் தண்ணீர் போகாமல் தடுக்கப்பட்டது. தமிழக முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் வைகை அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் உபரி நீர் திறந்து விடப்பட்டு இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்தது. மேலும் தண்ணீரை வீணாக்காமல் பெரிய கண்மாய் என வழியில் உள்ள கண்மாய்களுக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டது. பின்னர் முழு கொள்ளளவை எட்டியதையடுத்து தண்ணிர் கடலுக்கு திறந்து விடப்பட்டது. வைகை […]

Categories
ஆன்மிகம் திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பௌர்ணமியை முன்னிட்டு…. அலைமோதிய கூட்டம்…. தி.மலையில் பரபரப்பு….!!!!

பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்று திருவண்ணாமலை அருணாச்சல அருணாச்சலேஸ்வரர் கோவில். இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். மேலும் கோவிலின் பின்புறம் உள்ள கிரிவல பாதையில் விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். அதேபோல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை நாட்களிலும் இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்த நிலையில் கடந்த 9 தேதி மாலை 6.30 மணியளவில் தொடங்கிய பௌர்ணமி நேற்று முன்தினம் மாலை 4:30 மணிக்கு முடிவடைந்தது. இந்த […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தாய் கண் முன்னையே…. அண்ணனை குத்திக்கொன்ற சிறுவன்…. பரபரப்பு சம்பவம்….!!

தாய் கண்முன்னேயே தம்பி தனது அண்ணனை குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஓரிக்கை திருவேகம்பன் நகரில் செல்வராணி என்பவர் வசித்து வருகிறார். இவர் காஞ்சிபுரம் சி.எஸ்.ஐ பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு செல்வ ராணியின் கணவர் பிரபுதாஸ் இறந்துவிட்டார். இதனால் செல்வராணி வின்சென்ட்(21), ஷெர்லி ஜான்(19) என்ற தனது இரண்டு மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இதில் வின்சென்ட் பச்சையப்பன் கல்லூரியில் மூன்றாம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“அண்ணியின் ஆபாச புகைப்படம்” உல்லாசத்திற்கு அழைத்த வாலிபர் கைது…. போலீஸ் விசாரணை…!!

அண்ணியை ஆபாசமாக படம் பிடித்து உல்லாசத்திற்கு அழைத்த வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள மேச்சேரிபாளையம் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நூல் மில்லில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது அண்ணன் முறையான சித்தப்பா மகன் வீட்டிற்கு அடிக்கடி சென்று அண்ணியுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பெண்ணிற்கு தெரியாமலேயே செல்வகுமார் அவரை செல்போனில் ஆபாசமாக படம் பிடித்து உல்லாசத்திற்கு வருமாறு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உனது மகளை அடக்கி வைக்க மாட்டியா….??? சிறுமியை தாக்கிய பெண்ணுக்கு சிறை தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!

சிறுமியை தாக்கிய பெண்ணுக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள முல்லைவாடி ரங்கன் நகர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அருணா(14) என்ற மகள் உள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு சிறுமி அப்பகுதியில் இருக்கும் மரத்தில் கயிற்றால் ஊஞ்சல் கட்டி விளையாடி கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் சத்யா என்பவர் உனது மகளை அடக்கி வைக்க […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. பெண் வழக்கறிஞர் உள்பட 2 பேர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

கார் தலைக்குப்புற கவிழ்ந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூரில் வழக்கறிஞரான மைக்கேல் பாரதி(53) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மைக்கேல் பாரதி தனது ஜூனியர் வக்கீல் மோனிகா(25) என்பவருடன் வழக்கு தொடர்பாக சேலம் நீதிமன்றத்திற்கு நேற்று காரில் சென்றுள்ளனர். பின்னர் இருவரும் மீண்டும் சாத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்த காரை அசோக் குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் ஜெ.மெட்டூர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மாட்டு இறைச்சி கலந்து விற்பனை செய்யப்படுகிறதா….?? அதிகாரிகளின் அதிரடி சோதனை…. கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை….!!

இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணம்பாளையம், கருங்கல்பாளையம் ஆகிய பகுதிகளில் இருக்கும் 15 இறைச்சி கடைகளில் அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டுள்ள இறைச்சிகளை எடுத்து அதிகாரிகள் பார்வையிட்டனர். அப்போது கெட்டுப்போன இறைச்சிகளை வைத்திருந்தது தெரியவந்தது. இதனால் சுமார் 4 இறைச்சி கடைகளில் இருந்து அதிகாரிகள் 8 கிலோ இறைச்சிகளை பறிமுதல் செய்தனர். அந்த இறைச்சிகள் பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. மேலும் ஆட்டு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கம்” அதிர்ச்சியடைந்த பெற்றோர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

பள்ளி மாணவியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை பகுதியில் 18 வயது மாணவி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 5-ஆம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரியின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் காணாமல் போன மாணவியை […]

Categories

Tech |