Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பேருந்து மீது மோதி கவிழ்ந்த லாரி…. காயமடைந்த 10 பேர்…. கோர விபத்து…!!

அரசு பேருந்து மீது லாரி மோதி சாலையில் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருந்து சர்க்கரை லோடு ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை ராஜேந்திரன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் மாற்ற ஓட்டுனரான செந்தில்குமார் என்பவர் இருந்துள்ளார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் முதல் வளைவில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (13.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 13) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பேருந்தில் தங்க நகையை தவறவிட்ட பயணி… “கண்டக்டரின் நேர்மையான செயல்”…. குவியும் பாராட்டு…!!!!!

பேருந்தில் தங்க நகையை தவறவிட்ட பயணியிடம் பத்திரமாக தங்க நகை கொடுத்துள்ளார் கண்டக்டர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து விரைவு பேருந்து சென்னைக்குச் சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் சென்னையிலிருந்து புறப்பட்டு தஞ்சைக்கு வந்தது. இதன் பின்னர் இந்தபேருந்தில் கண்டக்டராக பணியாற்றும் உதயகுமார் என்பவர் பேருந்தை சோதனை செய்ததில் இரண்டு பவுன் தங்கச் சங்கில் கிடந்துள்ளது. இதன் பின்னர் அவர் அதை எடுத்து பணிமனை மேலாளருக்கு தகவல் கொடுத்து இருக்கின்றார். இந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கூடலூரில் தினசரி ஒரு மணி நேரம் லாரிகளுக்கு தடை”…. போலீசார் அதிரடி…!!!!!

கூடலூரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தினமும் காலையில் ஒரு மணி நேரம் லாரிகளுக்கு போலீசார் தடை விதித்துள்ளனர். தமிழகம் கர்நாடகா கேரளா மூன்று மாநிலங்களை இணைக்கும் கூடலூர் நகரில் சாலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஈடுபடுகின்றது கூடலூரில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை மூடப்பட்டிருப்பது சரக்கு லாரிகள் இரவில் காத்திருந்து காலையில் வருவதால் பெரும் போக்குவரத்து நடிப்பது ஏற்படுகின்றது. மேலும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கனத்த மழையால் கிராமங்களுக்குள் புகுந்த வெள்ளம்”… சாலையில் மண் சரிவு…. போக்குவரத்து பாதிப்பு….!!!!!!

கனமழை காரணமாக கிராமங்களுக்கு வெள்ளம் புகுந்ததால் 16 பேர் முகாமில் தங்க வைக்கப்பட்டார்கள். நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள பாடந்தொரை, தேவச்சோலை, நெலாக்கோட்டை, பிதிற்காடு பாட்டாவயல் உள்ளிட்ட பகுதிகளில் சென்ற சில நாட்களாகவே கனமழை பெய்து வருகின்றது. மேலும் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கின்றது. இதன் காரணமாக சென்ற பத்தாம் தேதி தொரப்பள்ளி, இருவயல் கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் வீடுகளுக்குள்ளே வெள்ள நீர் புகுந்து மக்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள். இதை அடுத்து பலத்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

லாரி-அரசு பேருந்து மோதல்…. 4 பேர் காயம்…. போலீஸ் விசாரணை….!!

லாரி-அரசு பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது எட்டயபுரம் தேசிய நெடுஞ்சாலையில் விளாத்திகுளம் சந்திப்பு அருகில் வந்து கொண்டிருந்த போது தேனியில் இருந்து தூத்துக்குடி நோக்கி மளிகை பொருட்களை ஏற்றிக்கொண்டு முன்னால் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது லாரி மீது பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் அரசு பேருந்து டிரைவர் விஜயன், கண்டக்டர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய அரசு பேருந்து…. வாலிபர்களுக்கு நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அரசு பேருந்து மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுந்தரவேல்புரம் பகுதியில் வெள்ளத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் தனது உறவினரான கண்ணன் மற்றும் நண்பர் ஆசிக் ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென சத்தியாநகர் மேம்பாலத்தில் வந்துகொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் பயங்கரமாக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

துக்க அனுசரிப்பு…. “அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட தேசியக்கொடி”…..!!!!!

ராணி எலிசபெத் மறைவிற்கு அரை கம்பத்தில் தேசியக்கொடி பறக்க விடப்பட்டு துக்கம் அனுசரிக்கப்பட்டது. இங்கிலாந்து நாட்டு ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக நாடு முழுவதும் ஒரு நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் அரசு விழாக்கள் எதுவும் நடைபெறாது எனவும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் அரசு அறிவித்தது. இதையடுத்து நேற்று நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“கோவிலுக்கு சென்ற மாணவர்கள்”…. ஆற்றில் நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!!!!!

ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் நரசிங்கபுரம் ஊராட்சிக்குட்பட்ட வள்ளிகொல்லை காடு கிராமத்தைச் சேர்ந்த வைரமுத்து என்பவர் பிஎஸ்சி முதலாம் ஆண்டு பயின்று வருகின்றார். அதே பகுதியைச் சேர்ந்த நிதிஷ் என்பவர் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகின்றார். இவர்கள் இருவரும் நேற்று மதியம் அப்பகுதி வாலிபர்களுடன் சேர்ந்து சாமி கும்பிடுவதற்காக கோவிலுக்கு சென்றுள்ளார்கள். இதன் பின்னர் அங்குள்ள ஆற்றில் குளித்துள்ளனர். இதில் நிதிஷ் ஆற்றில் மூழ்கினார். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட…. “10 1/2 டன் பறிமுதல்”…. என்ன தெரியுமா…?????

உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட 10 1/2 டன் நெல் பறிமுதல் செய்யப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் அருகே இருக்கும் நீலத்தநல்லூர் சோதனை சாவடியில் குடிமை பொருள் வளங்கள் குற்றப்பிரிவு புலனாய்வுத் துறை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்கள். அப்பொழுது அரியலூர் மாவட்டத்தில் இருந்து வந்த லாரியை  சோதனை செய்ததில் நெல்மூட்டைகள் இருந்தது. அப்பொழுது போலீசார் அவர்களிடம் விசாரணை செய்தார்கள். அதில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள சாத்தாம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த டிரைவர் வெற்றிமணி, நாகமங்கலத்தைச் சேர்ந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“பரம்பிக்குளம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு”….. பாதுகாப்பு நடவடிக்கை…. உபரிநீர் வெளியேற்றம்…!!!!!

தொடர் கனமழை காரணமாக பரம்பிக்குளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே இருக்கும் பரம்பிக்குளம் அணையில் சென்ற சில மாதங்களாக பருவ மழை பெய்து வரும் காரணமாக அணையின் நீர்மட்டம் அதிகரித்தது. மேலும் சென்ற ஜூலை மாதம் அணை முழு கொள்ளளவை எட்டியது. இந்த நிலையில் சென்ற ஒரு வாரமாக மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை பெய்து வருவதால் வினாடிக்கு 5500 கன அடி நீர்வரத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தம்பதிகளுக்கு மட்டுமே அனுமதி…. “ஹோட்டல் பாதுகாவலரை தாக்குதல்”…. 4 பேர் மீது வழக்கு பதிவு…!!!!

தம்பதிகளுக்கு மட்டுமே அனுமதி எனக் கூறியதால் தகராறு ஏற்பட்டதில் ஹோட்டல் பாதுகாவலர்களை தாக்கிய நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருக்கும் தனியார் நட்சத்திர ஹோட்டலில் நேற்று முன்தினம் இரவு விருந்து மற்றும் நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இங்கு தம்பதிகளாக வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இரவு எட்டு முப்பது மணி அளவில் சொகுசு காரில் வந்த நான்கு […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“பட்டாசு விற்பனைக்கு தற்காலிக உரிமம் பெற விண்ணப்பம்”…. 30-ஆம் தேதியே கடைசி…. ஆட்சியர் தகவல்…!!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக உரிமம் பெற விரும்புவோர் வருகின்ற 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, செங்கல்பட்டு மாவட்டத்தில் தற்காலிகமாக பட்டாசுகள் விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளர்கள் தற்காலிக உரிமம் பெற இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். விண்ணப்பத்துடன் கடை அமைய உள்ள இடத்திற்கான சாலை வசதி, […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“நாளை (செப்13) மின் தடை”….. எங்கெல்லாம் தெரியுமா…????

நாளை கனகம்பட்டு துணை மின் நிலையத்திலிருந்து கோவளம் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள கண்ணகப்பட்டு துணை மின் நிலையத்திலிருந்து கோவளம் பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்குச் செல்லும் உயர் மின்னழுத்த பாதையில் அவசர கால பராமரிப்பு பணிகள் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற இருக்கின்றது. ஆகையால் நாளை சூலேறிக்காடு, பேரூர், நெம்மேலி, புதிய கல்பாக்கம், வடநெம்மேலி, தெற்குப்பட்டு, திருவிடந்தை மற்றும் அதனைச் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“திருச்சியில் மாவட்ட அளவிலான ஹேண்ட்பால் போட்டி”…. பல்வேறு பள்ளிகள் பங்கேற்பு…!!!!!

திருச்சியில் மாவட்ட அளவிலான ஹேண்ட் பால் போட்டி நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் ஹேண்ட்பால் சங்கம் சார்பாக மாவட்ட அளவிலான ஹேண்ட்பால் போட்டி கே.கே.நகர் அரசு பள்ளி மைதானத்தில் நேற்று முன் தினம் தொடங்கியது. இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 15 அணிகளும் பெண்கள் பிரிவில் 15 அணிகளும் பங்கேற்றது. இந்த போட்டியை மேயர் அன்பழகன் தொடங்கி வைக்க ஹேண்ட்பால் சங்க செயலாளர் கருணாகரன், பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். இந்த போட்டியில் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (12.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 12) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுநிலை படிப்பிற்கான விண்ணப்பம் ஆரம்பம்”….. 16-ம் தேதியே கடைசி நாள்…!!!!!

லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்நிலை படிப்பிற்கான விண்ணப்பம் ஆரம்பமாகி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022-23 ஆம் கல்வி ஆண்டிற்கான முதுநிலை முதலாம் ஆண்டு பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கையானது www.tngasapg.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த இணையதளத்தில் விண்ணப்பிக்க வருகின்ற 16ஆம் தேதி கடைசி நாள் ஆகும். ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாதவர்கள் கல்லூரியில் செயல்பட்டு வரும் உதவி மையத்தின் மூலமாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“ITI முடித்தவர்களா..?” இதோ, அகில இந்திய தொழில்நுட்ப தேர்வுக்கு விண்ணப்பம்… இன்றே கடைசி நாள்…!!!!!

அகில இந்திய தொழில்நுட்பத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, கைவினை பயிற்சி திட்டத்தின் கீழ் 2023 ஆம் வருடம் ஜூலை மாதம் தேசிய தொழில் பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழில் தேர்வு எழுத தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். தேசிய தொழிற்சான்றிதழ் பெற்றவர்கள் ஏற்கனவே ஏதேனும் ஒரு தொழில் பிரிவில் ஐடிஐ பயின்று தேர்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“உற்சாக குளியல் போடும் நெல்லையப்பர் கோவில் யானை”…. இந்து அறநிலையத்துறையினர் குறும்படம் வெளியீடு…!!!!!

நெல்லையப்பர் கோவிலில் உள்ள யானையின் குறும்படத்தை இந்து அறநிலையத்துறையினர் வெளியிட்டுள்ளார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் கோவில்கள் உள்ள யானைகளின் தினசரி நிகழ்வுகள் அனைத்தும் குறும்படமாக எடுத்து தொகுத்து வெளியிடப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார். அதன்படி திருநெல்வேலியில் இருக்கும் நெல்லையப்பர் கோவிலில் உள்ள யானை காந்திமதியின் அன்றாட நிகழ்வை ஐம்பது வினாடிகள் ஓடக்கூடிய குறும்படமாக அறநிலையத்துறையினர் தயாரித்துள்ளார்கள். அந்த குறும்படத்தில் யானை சவரில் குளிப்பது, புதிதாக கட்டப்பட்டுள்ள நீச்சல் குளத்தில் குளியல், நடைப்பயிற்சி, அதற்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த தொழிலாளி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கரையாளன் குடியேற்று பகுதியில் சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்திரைச் செல்வன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சித்திரைச் செல்வன் கடந்த சில நாட்களாக  உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சித்திரைச்செல்வன் மனைவி மற்றும் குழந்தைகளை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கரை ஒதுங்கி கிடந்த மூதாட்டியின் உடல்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. போலீஸ் விசாரணை….!!

திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் மூதாட்டி பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் கடற்கரையில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் உடல் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருச்செந்தூர் கடலோர காவல்துறையினர் கரை ஒதுங்கி கிடந்த மூதாட்டி உடலை கைப்பற்றி திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இறந்த மூதாட்டி யார்? எந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நெல்லையில் நடைபெற்ற 7பி தேர்வு”…. 1061 பேர் மட்டுமே பங்கேற்பு…!!!!!

திருநெல்வேலியில் நடைபெற்ற 7 பி தேர்வில் 1061 பேர் எழுதினார்கள். நேற்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பாக குரூப் 7பி மற்றும் குரூப் 8 தேர்வுகள் நடந்தது. இதில் திருநெல்வேலி மாவட்டத்தில் குரூப் 7பி தேர்வானது நேற்று நடந்தது. இத்தேர்விற்கு மொத்தம் 2078 பேர் தேர்வெழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் 1061 பேர் மட்டுமே வந்தார்கள். மொத்தம் தேர்வு எழுதிய சதவீதம் 51.05 மட்டுமே. இந்த தேர்வு எழுதும் அறைக்கு செல்போன்கள், கால்குலேட்டர் சாதனங்கள் எடுத்துச் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த 3 வயது சிறுமி…. கையும் களவுமாக சிக்கிய தொழிலாளி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

3 வயது குழந்தையிடன் சில்மிஷத்தில் ஈடுபட்ட தையல் தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் 3 வயது பெண் குழந்தை ஒன்று வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் குழந்தையுடன் நைசாக பேசி சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்த குழந்தையின் தாய் கூச்சல் போட்டுள்ளார். அந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அந்த நபரை பிடித்து திருப்பூர் கொங்குநகர் அனைத்து மகளிர் காவல் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“லட்சுமி பூஜை செய்ய வேண்டும்”….. தங்க நகைகள் அப்பேஸ்…. 2 பேர் கைது…!!!!!

 பூஜை செய்வதாக ஏமாற்றி தங்க நகைகளை மோசடி செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு ஆஞ்சநேயர் நகரில் வசித்து வரும் ரவீந்திர பாபு என்பவர் சோளிங்கர் ரோட்டில் வெங்கடேசன் என்பவரின் கடை பக்கத்தில் ஜோதிடம் பார்ப்பதற்கான போர்டு இருப்பதை கண்டு இரண்டு நாட்களுக்கு முன்பாக அங்கு சென்றுள்ளார். அங்கே இருந்த இரண்டு பேர் ஜோதிடம் பார்ப்பதாக கூறி அவரை அமர வைத்து உங்கள் கஷ்டங்கள் தீர அம்மன் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“விவசாயிகள், ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைக்கவில்லையா….?” இதோ உங்களுக்கான தகவல்…!!!!!

ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை விவசாயிகள் இணைப்பதற்கு அஞ்சலகங்களை அணுகலாம் என திருவண்ணாமலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கூறியுள்ளார். நாடு முழுவதும் இருக்கும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 வழங்கி வருகின்றது. இந்த நிதியானது விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகின்றது. இத்திட்டத்தில் பயன்பெரும் விவசாயிகள் தங்களின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை இணைப்பது அவசியம் என கூறப்பட்டுள்ளது. இதனால் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

போலி ஆவணங்கள்…. “அதிகாரி போல் கையெழுத்திட்டு வீட்டுமனை விற்பனை”…. பலே கில்லாடிகளுக்கு வலைவீச்சு…!!!!!

போலி ஆவணங்களை தயாரித்து அதிகாரிப்போல் கையெழுத்திட்டு வீட்டுமனைகள் விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணி பகுதியை சேர்ந்தவர்கள் அரசு மற்றும் தணிகைவேல். ஆரணியிலிருந்து ஆற்காடு செல்லும் நெடுஞ்சாலையில் இருக்கும் வெள்ளேரி பகுதியில் சென்ற 2019 வருடம் ஆர்.பி.ஜி கார்டன் தொடங்கப்பட்டு அங்கு வீட்டுமனைகள் விற்பனை நடைபெற்றது. இங்கு உள்ளாட்சி அமைப்பு நிர்வாகம் இல்லாததால் தனி அலுவலர்களாக இருந்த ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பெயரில் கையொப்பமிட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“பாலாற்றின் கரையோரம் 10,000 பனை விதைகள் நடும் பணி”…. இன்று தொடக்கம்…!!!!!

வேலூர் பாலாற்றின் கரையோரம் பத்தாயிரம் பனை விதைகள் நடும் பணியானது தொடங்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பாலாற்றின் கரையோரம் சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் மற்றும் தன்னார்வலர்கள் மூலமாக பனை மரங்கள் நடப்பட்டு வருகின்ற நிலையில் இந்த வருடம் கருங்கம்புத்தூர் பாலாற்றில்சுமார் 6 கிலோமீட்டர் தூரத்திற்கு பனை விதைகள் நட முடிவு செய்யப்பட்டு அதற்கான விதைகளும் சேகரிக்கப்பட்டது. இந்த நிலையில் 10 ஆயிரம் பனை விதைகள் நடும் பணியானது தொடங்கியுள்ளது. இதில் தன்னார்வலர்கள், பொதுமக்கள் என பலர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“வேலூர் மாநகருக்குள் பகலில் கனரக வாகனங்கள் நுழைய தடை”…. மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!!!!

வேலூர் மாநகருக்குள் பகலில் கனரக வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்படுவதாக ஆட்சியர் உத்தரவிட்டிருக்கின்றார். வேலூர் மாநகருக்குள் பகலில் கனரக வாகனங்கள் நுழைய தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கின்றார். இது குறித்து அவர் செய்து குறிப்புபில் கூறியுள்ளதாவது, வேலூர் மாநகரில் தினமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வாகன நெரிசலை தடுக்கும்  வகையில் கனரக சரக்கு வாகனங்கள் நுழைவது இன்று முதல் தடை செய்யப்படுகின்றது. சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்….. தீயில் கருகி நாசமான கார்…. பரபரப்பு சம்பவம்…!!

நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மணப்பாக்கம் கிராமத்தில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். நேற்று கணபதி தனது குடும்பத்தினருடன் சனீஸ்வர பகவான் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் மேடத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கணபதி மற்றும் அவரது குடும்பத்தினர் வேகமாக காரில் இருந்து கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிய […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சோதனையில் சிக்கிய ரூ.13 லட்சம் மதிப்புள்ள பொருள்…. வெளியான அதிர்ச்சி தகவல்…. போலீஸ் அதிரடி….!!

சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் கடத்தி சென்ற இருவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பர்கூர் போலீஸ் நிலையம் முன்பு போலீசார் நேற்று அதிகாலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது சோளத்தட்டுகளுக்கு அடியில் 50 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் சரக்கு ஆட்டோ ஓட்டுனர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“லஞ்சம் கொடுத்தால் தான் செய்வேன்” வசமாக சிக்கிய அரசு ஊழியர்…. போலீஸ் அதிரடி…!!

லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக கிராம நிர்வாக அலுவலரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள எண்ணமங்கலம் கிராம நிர்வாக அலுவலராக சதீஷ்குமார்(35) என்பவர் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் செல்வராஜ் என்பவர் பட்டா மாறுதல் பெறுவதற்காக கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது பட்டா மாறுதல் செய்து தருவதற்கு 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என சதீஷ்குமார் கூறியுள்ளார். இதுகுறித்து செல்வராஜ் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதனை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பிறந்து 12 நாட்களில்…. பச்சிளம் குழந்தைக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

குழந்தை தொட்டிலில் தூங்கிய போது உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள அத்தாணி குப்பாண்டபாளையம் பகுதியில் கூலி தொழிலாளியான கிருஷ்ணன்(23) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணன் பவித்ரா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த மாதம் 29-ஆம் தேதி பவித்ராவுக்கு சுக பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் பவித்ரா தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார். பின்னர் தொட்டிலில் தூங்க […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ராணுவ வீரர் செய்த காரியம்…. பெற்றோரிடம் கதறி அழுத சிறுமி…. போலீஸ் அதிரடி….!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ வீரர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை பகுதியில் லோகேஷ்(21) என்பவர் வசித்து வருகிறார். இவர் ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார். விடுமுறை சொந்த ஊருக்கு வந்த லோகேஷ் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காதலிப்பதாக கூறி கடத்தி சென்ற வாலிபர்….. பெற்றோரின் பரபரப்பு புகார்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!

சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அச்சனம்பட்டியில் பிரசாத்(29) என்பவர் வசித்து வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரசாத் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி அவரை ஊட்டிக்கு கடத்தி சென்ற பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் பிரசாத்தை கைது செய்தனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பேருந்து நிறுத்தத்தில் கட்டி புரண்டு சண்டையிட்ட இருவர்…. அலறியடித்து ஓடிய பெண்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

மது போதையில் 2 பேர் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு சண்டை போட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடந்தூர் பேருந்து நிறுத்தத்திற்கு குடிபோதையில் வந்த 2 பேருக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அதில் ஒருவர் வலி தாங்க முடியாமல் பயணிகளின் கூட்டத்திற்கு நடுவில் புகுந்து தப்பி ஓட முயற்சி செய்ததால் பேருந்துக்காக காத்திருந்த பெண்கள் அலறியடுத்து கொண்டு ஓடினர். சுமார் 20 […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

5 கி.மீ தூரம் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்…. கொடைக்கானலுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்….!!

ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு செல்கின்றனர். இதனால் வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனை சாவடி, ஏரிச்சாலை, அப்சர்வேட்டரி, நாயுடுபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் சுற்றுலா பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஒரே வாரத்தில் 140 பேர்…. தெரு நாய்களின் அட்டகாசம் அதிகரிப்பு…. பொதுமக்களின் கோரிக்கை….!!

சாலையில் நடக்க விடாமல் தெருநாய்கள் விரட்டி கடிப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கன்னிவாடியில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்நிலையில் தெரு நாய்கள் பொதுமக்களை தெருவில் நடக்க விடாமல் விரட்டி விரட்டி கடிக்கின்றன. இதனை அடுத்து பள்ளிக்கு செல்லும் குழந்தைகளையும் தெரு நாய்கள் விரட்டி கடிப்பதால் பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர். ஒரு வாரத்தில் மட்டும் தெரு நாய் கடித்ததாக கூறி சுமார் 140 பேர் வரிசையில் நின்று அரசு மருத்துவமனையில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மரத்தின் மீது மோதிய கார்…. வாலிபர் பலி; 2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழக்கொல்லை பகுதியில் ஜெயராமன் என்பவர்களுக்கு வருகிறார். இவருக்கு ஜெய்சங்கர்(34) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஜெய்சங்கர் தனது நண்பரான ஞானபிரகாஷ்(30), சிவஞானம்(25) ஆகியோருடன் காரில் மின் மோட்டார் வாங்குவதற்காக கோவை நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர்கள் மின் மோட்டாரை வாங்கி கொண்டு அதே காரில் பண்ருட்டி நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் அதிகாலை 5 மணி அளவில் விருதாச்சலம்- […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

2 வயது குழந்தையை பேருந்து நிலையத்தில் விட்டு சென்ற தாய்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

பேருந்து நிலையத்தில் விட்டு சென்ற தாயிடம் 2 வயது பெண் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. தர்மபுரி பேருந்து நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண் 2 வயது குழந்தையை விட்டு சென்றுள்ளார். அந்த குழந்தை தனியாக அழுது கொண்டிருந்ததை போலீசார் பார்த்தனர். பின்னர் போலீசார் தர்மபுரி அரசு மருத்துவமனையில் இருக்கும் காப்பகத்தில் குழந்தையை ஒப்படைத்தனர். இந்நிலையில் பேருந்து நிலையத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இதற்கிடையில் சேலம் மாவட்டத்தை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கார் மீது சாய்ந்து விழுந்த கம்பம்….. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கார் மீது சிக்னல் கம்பம் சாய்ந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள குண்டூர் பகுதியில் ஓட்டுநரான முத்துவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் காரில் பெண் ஒருவரை ஏற்றிக்கொண்டு திருப்பாதிரிப்புலியூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அண்ணா பாலம் அருகே சென்ற போது சாலையோரம் இருந்த சிக்னல் கம்பம் எதிர்பாராதவிதமாக சாய்ந்து காரின் முன் பகுதி மீது விழுந்தது. இந்த விபத்தில் முத்துவேல் உள்பட இரண்டு பேரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பவளபாறையில் இருந்து செய்யப்பட்ட பொருள்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!

பவளப்பாறை மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். தமிழக வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் படி அழிந்து வரும் இனப்பட்டியலில் இருக்கும் பவள பாறையில் இருந்து பொருட்களை தயாரித்து விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனை கடத்தி சிலர் விற்பனை செய்வதாக தமிழக தலைமை செயலாளருக்கு புகார் வந்தது. அவரின் அறிவுறுத்தலின்படி கோவை நகர போலீஸ் கமிஷனர் பாலசுப்பிரமணியன் இது குறித்த நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு அதிரடியாக உத்தரவிட்டார். அதன்படி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மூட்டை மூட்டையாக கிடக்கும் கழிவுகள்…. மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு அபாயம்…. அதிகாரிகளின் தகவல்…!!

மருத்துவமனையில் மூட்டை மூட்டையாக குப்பைகளை சேகரித்து வைத்திருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அங்கு 300-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அரசு மருத்துவமனையில் சேகரிக்கப்படும் குப்பைகள் நகராட்சி வாகனங்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது மருத்துவமனையின் கழிப்பிடம் முன்பு மூட்டை, மூட்டையாக குப்பைகளை குவித்து வைத்துள்ளனர். மேலும் கழிவு நீரும், மழை நீரும் மூட்டைகளுக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அத்துமீறி நுழைந்த நூலக அதிகாரி…. பெண் ஊழியருக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி….!!

பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு அளித்த அதிகாரியை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் கரும்பு கடை பகுதியில் சுல்தான் மியாமணியம்(47) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் இருக்கும் அனைத்து நூலகங்களிலும் புத்தகம் இருப்பு கணக்கிடும் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் காரமடை பகுதியில் இருக்கும் நூலகத்திற்கு சென்று புத்தக இருப்புகளை சரிபார்த்த போது சுல்தான் பெண் ஊழியரிடம் இரண்டு அர்த்தத்தில் பேசி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (11.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 11) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசுகளிலிருந்து, 8ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாவட்ட செய்திகள்

வீட்டில் கோபித்துக் கொண்டு வந்த இளைஞர்…. “ரயிலில் அடிபட்டு பலி”…. போலீசார் விசாரணை…!!!!!!

மயிலாடுதுறையில் ரயிலில் அடிபட்டு இளைஞர் உயிரிழந்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள குத்தாலம் அருகே இருக்கும் சேத்திரபாலபுரம் ரயில்வேகேட் பகுதியில் நேற்று முன் தினம் காலை ரயிலில் அடிபட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். பின் இது குறித்து விசாரணை மேற்கொண்டதில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தவர் குற்றாலம் அருகே உள்ள பிடாரி அம்மன் […]

Categories
மாவட்ட செய்திகள்

“4-வது முறையாக கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு”…. கரையோர கிராமங்களை சூழ்ந்த நீர்….!!!!!

கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். கர்நாடக நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பியதையடுத்து உபரி நீர் மேட்டூர் அணைக்கு திறந்து விடப்படுகின்றது. இந்த தண்ணீரானது திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கொம்பு மேலணையை வந்தடைந்து அங்கிருந்து கல்லணைக்கு திறந்து விடப்படுகின்றது. பின் கல்லணையிலிருந்து காவிரி கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கப்படுகின்றது. கொள்ளிடம் ஆற்றில் சென்ற சில நாட்களாக தண்ணீரின் வரத்து குறைந்திருந்த நிலையில் நேற்று முன்தினம் […]

Categories
மாவட்ட செய்திகள்

“பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்”…. தவறி விழுந்ததால் பரபரப்பு…!!!!!

அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர் தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மணல்மேட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகின்ற நிலையில் நேற்று முன்தினம் மாணவர்கள் கல்லூரி முடிந்து பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவ்வழியாக கும்பகோணத்தை நோக்கி செல்லும் அரசு பேருந்து வந்தது. அதில் மாணவ-மாணவிகள் முண்டியடித்துக் கொண்டு ஏறி பயணம் மேற்கொண்டார்கள். பேருந்து சிறிது தூரம் சென்ற பொழுது படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மாணவர் அருண் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“சரக்கு ஆட்டோ-மொபட் நேருக்கு நேர் மோதல்”…. தொழிலாளி பலி….!!!!!!

மொபட் மற்றும் சரக்கு ஆட்டோ நேருக்கு நேர் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமருகல் அருகே இருக்கும் மேலப்பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரும் அவரின் நண்பர் ராமகிருஷ்ணன் என்பவரும் நேற்று காலை டீ குடிப்பதற்காக புத்தகரத்தை நோக்கி மொபட்டில் சென்றுள்ளார்கள். அப்பொழுது எதிரே வந்த சரக்கு ஆட்டோவும் மொபட்டும் நேருக்கு நேர் மோதியதில் மாணிக்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ராமகிருஷ்ணன் படுகாயம் அடைந்தார். இதுயடுத்து அங்கிருந்தவர்கள் ராமகிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக அரசு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

கஞ்சா விற்பனை செய்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுற்றுவட்டாரப் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் முதியவர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் சிவந்தாகுளம் பகுதியில் வசிக்கும் செல்வம் என்பதும், மேலும் அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் செல்வத்தை கைது […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்”….. மக்கள் கோரிக்கை…!!!!!

நாகூர் வழியாக திருவாரூர் செல்லும் பேருந்தில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வதால் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து தினம் தோறும் காலை மற்றும் மாலை நேரத்தில் நாகூர் வழியாக திருவாரூருக்கு அரசு பேருந்து இயக்கப்படுகின்றது. இந்த பேருந்தானது ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே இயக்கப்படுகின்றது. இதில் பள்ளி, கல்லூரி பயிலும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் இதில்தான் பயணம் மேற்கொள்கின்றார்கள். இதனால் கூட்டம் […]

Categories

Tech |