பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் பள்ளி தலைமை ஆசிரியருக்கு 5 வருட சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மாவட்டத்திலுள்ள அரசு தொடக்கப்பள்ளியில் சென்ற 2016ஆம் வருடம் தலைமை ஆசிரியராக பணிபுரிந்த சந்திர சேகரன் என்பவர் அந்த வருடம் மார்ச் மாதம் பள்ளியில் பயின்ற சில மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை தந்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டார்கள். அதன் பேரில் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. பின் […]
Tag: மாவட்ட செய்திகள்
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்த நிலையில் வேகத்தடை அமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். கடலூர் மாவட்டத்தில் உள்ள சேத்தியாத்தோப்பு அருகே இருக்கும் நெல்லிக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த ஜெகன் என்பவர் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு புறப்பட்டார். அவர் ஆணைவாரி பேருந்து நிறுத்தம் அருகே சென்ற பொழுது விருத்தாச்சலத்தில் இருந்து புவனகிரி நோக்கி வந்த கார் ஜெகன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் […]
உலகம் முதலுதவி தினத்தை முன்னிட்டு ஒரே இடத்தில் 5386 மாணவ-மாணவிகள் பயிற்சி பெற்று உலக சாதனை படைத்தார்கள். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மைதானத்தில் உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் இணைந்து மாபெரும் உலக சாதனையாக பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற முதல் உதவி விழிப்புணர்வு செய்முறை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்க அரசுப்பள்ளி கல்லூரி, அண்ணா […]
கந்துவட்டி புகாரின் பேரில் போலீசார் பைனான்ஸ் அதிபரை கைது செய்தார்கள். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் அருகே இருக்கும் இடையார்பாளையத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவர் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றார். இவர் பைனான்ஸ் அதிபர் சதீஷ்குமார் என்பவரிடம் வட்டிக்கு 5 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். மாணிக்கம் மாதம் தோறும் வட்டி பணம் கொடுத்து வந்த நிலையில் சென்ற மூன்று மாதங்களாக தொழில் சரியாக இல்லாத காரணத்தினால் சரியாக வட்டி பணத்தை […]
கல்லூரி மாணவர் மூளைச்சாவு அடைந்ததால் சிறுவனுக்கு மோட்டார் சைக்கிள் கொடுத்து அனுப்பிய தந்தையை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் வாக்கின் தெருவில் சுப்பிரமணி(52) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபக் பாலாஜி(18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஆவடியில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் தீபக் பாலாஜி தனது நண்பரான லோகேஷ் என்பவருடன் தந்தையின் மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு அயனாவரம் கான்ஸ்டபிள் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது […]
மணமகன் தாலி கட்டும் நேரத்தில் காதலன் தாலியை பறித்து இளம்பெண்ணின் கழுத்தில் கட்ட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள தண்டையார்பேட்டை கைலாசம் தெருவில் சதீஷ்குமார்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் நகை கடையில் வேலை பார்த்து வருகிறார். அதே கடையில் வேலை பார்த்த 20 வயது இளம்பெண்ணை சதீஷ்குமார் காதலித்கு வந்துள்ளார். அந்த இளம்பெண்ணுக்கு பெற்றோர் வேறு ஒருவருடன் திருமணம் நடத்த நிச்சயம் செய்தனர். இதனை அறிந்த சதீஷ்குமார் என்னை காதலித்து ஏமாற்றிவிட்டு […]
கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் உருக்கமான கடிதம் சிக்கியது. சென்னை மாவட்டத்தில் உள்ள திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் இருக்கும் பிரபல விடுதியில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த பிரசென்ஜித் கோஷ்(23), என்ற வாலிபரும் அர்பிதாபால்(20) என்ற இளம்பெண்ணும் அறை எடுத்து தங்கியுள்ளனர். முகவரியில் இருவரும் கணவன் மனைவி என குறிப்பிட்டுள்ளனர். கடந்த 7-ஆம் தேதி அறைக்குள் சடலமாக கடந்த இருவரையும் மீட்டு போலீசார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த […]
கோவையில் இருந்து தேனிக்கு கடத்தி வரப்பட்ட 13 மூட்டை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து கடத்திய 5 பேரை கைது செய்தார்கள். தேனி மாவட்டத்தில் உள்ள கோபாலபுரம் கிராமத்தில் புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அசோக் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டார்கள். அப்பொழுது அவ்வழியாக வந்த ஒரு கார், இரண்டு மோட்டார் சைக்கிள்களை சோதனை செய்ததில் காரில் 11 மூட்டைகள் மோட்டார் சைக்கிளில் தலா […]
நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 10) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசுகளிலிருந்து, 8ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செல்போன் திருடர்களை மடக்கிபிடித்த காவலரை கமிஷனர் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவல் பகுதியில் சென்ற இருபதாம் தேதி நள்ளிரவு ஆனந்த் என்பவரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் செல்போனை பறித்து சென்றதாக தகவல் கிடைத்ததன் பேரில் அவர்களை மடக்கி பிடிக்க போலீஸ் கமிஷனர் இரவு ரோந்து பணியில் இருந்த போலீசாருக்கு வாக்கி டாக்கி மூலம் தகவல் கொடுத்தார். அப்பொழுது செல்போன் பறித்து மூவரும் மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த ஒருவரிடம் […]
மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர் அருகே இருக்கும் அழகியமணவாளம் கைகாட்டியை சேர்ந்த ரமேஷ் மற்றும் உளுத்தங்குடியை சேர்ந்த ராஜமாணிக்கம் உள்ளிட்ட இருவரும் நேற்று முன்தினம் காலை மோட்டார் சைக்கிளில் உளுந்தங்குடியில் இருந்து தீராம்பாளையத்திற்கு வந்து கொண்டிருந்த பொழுது சரக்கு லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டார்கள். இதில் சம்பவ இடத்திலேயே ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். பின் படுகாயம் அடைந்த ராஜாமாணிக்கத்தை அங்கிருந்தவர்கள் […]
இறந்த தாயின் உடலை மகன் சக்கர நாற்காலியில் வைத்து மயானத்திற்கு கொண்டு வந்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பாரதியார் நகர் பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவரின் மனைவி ராஜேஸ்வரி, மகன் முருகானந்தம். முருகானந்தம்(60) எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகின்றார். இவருக்கு திருமணமான சில மாதங்களிலேயே அவரின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதன் பிறகு அவர் பெற்றோருடன் வசித்து வந்த நிலையில் சென்று நான்கு வருடங்களுக்கு முன்பாக ராஜேஸ்வரிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் முருகானந்தம் […]
பள்ளி மாணவர்களுக்கு குடற்பழு நீக்க மாத்திரைகளை ஆட்சியர் வழங்கினார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆசிரியர் நகர் பகுதியில் இருக்கும் தென்போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கி பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார். மேலும் இந்நிகழ்வில் பணிகள் துணை இயக்குனர், […]
பல்லி விழுந்த சத்துணவு சாப்பாட்டை சாப்பிட்ட 47 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதைத்தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டராம்பட்டு தானிப்பாடி அருகே இருக்கும் மோத்தக்கல் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக ஏழுமலை என்பவர் பணியாற்றி வருகின்ற நிலையில் அவர் உடல் நலக்குறைவால் விடுமுறையில் இருக்கின்றார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மதிய உணவை சமையலர் லட்சுமி மற்றும் சமையல் உதவியாளர் பல்ஹீத் உள்ளிட்ட இருவரும் சமைத்துள்ளார்கள். […]
தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 60 பவுன் நகைகளை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள பங்கஜம் ஹவுஸ் தெருவை சேர்ந்த ராஜா ராம் என்பவர் மஞ்சள் தூள் தயாரித்து விற்பனை செய்யும் தொழிற்சாலை வைத்திருக்கின்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தூத்துக்குடிக்கு சென்றுள்ளார். நேற்று அவரின் வீட்டிற்கு வேலை பார்க்கும் தொழிலாளி உமா என்பவர் வந்து பார்த்த பொழுது வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு […]
ஆபத்தான முறையில் பயணம் செய்த 15 பேர் இருந்த சரக்கு வேனை போலீசார் பறிமுதல் செய்தார்கள். திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள கே.வி.குப்பத்தை அடுத்திருக்கும் பில்லாந்திபட்டு பேருந்து நிறுத்தம் அருகே குடியாத்தம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது குடியாத்தத்தில் இருந்து செதுவாலை நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை மேற்கொண்டார்கள். அந்த வேனில் ஆபத்தான முறையில் 15 பேர் பயணம் மேற்கொண்டது தெரிய வந்தது. மேலும் டிரைவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததையடுத்து வேனை பரிமுதல் செய்து […]
முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் முதலமைச்சர் காலை உணவு திட்டத்தினை முதல் முதலாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் செயல்படுத்துவது பற்றி ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது ஜமுனா மரத்தூரில் இருக்கும் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வதியன்கொட்டாய் கிராமத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் கோவிலூர் ஊராட்சி பெருங்காட்டூர் மற்றும் குண்டாளத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் பாக்குமுடையனுர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் கோவிலானுர் ஊராட்சி […]
தொழிலாளியை தாக்கியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினம் வடக்கூர் பகுதியில் பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரும் பரமன்குறிச்சி பகுதியில் வசிக்கும் பட்டுராஜன் என்பவரும் குலசேகரபட்டினம் பகுதியிலுள்ள ஒரு சிமெண்ட் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றனர். கடந்த 6-ஆம் தேதி பால்ராஜ் வேலை பார்க்கும் கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மது போதையில் வந்த பட்டுராஜன் பால்ராஜை சுத்தியலால் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பால்ராஜ் குலசேகரப்பட்டினம் […]
லாரி மோதிய விபத்தில் ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள களரம்பட்டி 3-வது வார்டுக்குட்பட்ட கிழக்கு தெருவில் அரசு பேருந்து ஓட்டுனரான செந்தில் (45) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி(35). இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று அப்பகுதியில் இருக்கும் காட்டு பகுதியில் 8 ஆடுகளை மேய்த்து விட்டு தனலட்சுமி மாலை 6.45 மணியளவில் வீட்டிற்கு ஓட்டி வந்தார். இந்நிலையில் பெரம்பலூர்-துறையூர் மாநில நெடுஞ்சாலையில் ஆடுகளை ஓட்டி […]
தேயிலை பறிக்கும் போது பெண் தொழிலாளி பாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோயில் மேடு பகுதியில் தோட்ட தொழிலாளியான ரெஜினா லூகாஸ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ரெஜினா லூகாஸுக்கு இசையில் அதிக ஆர்வம் உண்டு. இதனால் தேயிலை பறிக்கும் போது, சோர்வடையாமல் இருப்பதற்காக தனது இனிமையான குரல் வளத்துடன் பாட்டு பாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனை மற்ற தொழிலாளர்களும் உற்சாகமாக கேட்பது வழக்கம். இந்நிலையில் ரெஜினா லூகாஸ் சிட்டுக்குருவி […]
தமிழ் இலக்கிய திறனை மேம்படுத்துவதற்கான பிளஸ் 1 மாணவர்களுக்கான திறனறித் தேர்வு அக்டோபர் 1-ம் தேதி நடைபெறுகின்றது. அரசு தேர்வுகள் இயக்கம் மூலமாக தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் திறனறி தேர்வு 2022-23 கல்வியாண்டில் பயிலும் அனைத்து பள்ளி பிளஸ் 1 மாணவ-மாணவிகளுக்கு இத்தேர்வு நடத்தப்படுகின்றது. பத்தாம் வகுப்பு தமிழ் பாடம் தேர்வுக்கான பாட புத்தகம் ஆகும் தேர்வில் ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் மூலம் 100 கேள்விகள் கேட்கப்படுகின்றது. இந்த தேர்வானது வருகின்ற […]
திருப்பூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகபகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் இருக்கிறது. இங்கு யானை, புலி, சிறுத்தை, செந்நாய், காட்டு எருமை, மலைப் பாம்பு, சிங்கவால் குரங்கு உட்பட பெரும்பாலான வன விலங்குகள் வசித்து வருகிறது. அது தவிர்த்து அரியவகை உயிரினங்களும் மூலிகைகள், தாவரங்கள் வனப்பகுதியில் இருக்கிறது. வன விலங்குகளுக்கு தேவையான உணவு மற்றும் இருப்பிடத்தை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் பூர்த்திசெய்து தருகிறது. எனினும் கோடைக்காலங்களில் வனப்பகுதியில் உற்பத்தியாகிற ஆறுகள் வறட்சியின் பிடியில் சிக்கிக்கொள்வதுடன் […]
பாலியல் தொந்தரவு அளித்த சப்-இன்ஸ்பெக்டரை போலீசார் கைது செய்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள அப்பர் குன்னூர் காவல் நிலையத்தில் சரவணன்(50) என்பவர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் திருமணமாகி விவாகரத்து பெற்ற பெண் போலீசாரிடம் ஆசை வார்த்தைகள் கூறி சரவணன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இதனால் உயர் அதிகாரிகள் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டரை மஞ்சூர் காவல் நிலையத்திற்கு […]
வீட்டில் 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சமீப காலமாக கொலை, கொள்ளை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. சட்ட விரோத செயல்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்கின்றனர். அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புத்தந்தூர் கிராமத்தில் விவசாயியான அய்யாக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு […]
கிணற்றில் விழுந்த பசு மாட்டை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செம்பராம்பட்டு கிராமத்தில் சின்னபாண்டி-மாலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான பசு மாடு அப்பகுதியில் உள்ள வயல்வெளி பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக மாடு விவசாய கிணற்றில் தவறி விழுந்து தத்தளித்து கொண்டிருந்தது. இதுபற்றி அறிந்த சங்கராபுரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த பசு மாட்டை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் சிறிது […]
தரைப்பாலம் உடைந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் ஆறு, வாய்க்காலில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் ராகவன் வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஆத்திப்பட்டு கிராமத்தில் அமைக்கப்பட்ட தரைப்பாலம் அடித்து சென்று போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் ஆத்திப்பட்டு, அரும்பட்டு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றி பழைய பட்டிணம் வழியாக மடப்பட்டுக்கு […]
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விலந்தை கிராமத்தில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகள் சரண்யா(19) என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் வேலை எதுவும் செய்யாமல் இருந்த சரண்யாவை அவரது தாய் சரோஜா கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சரண்யா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் சரண்யாவை மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு […]
மாற்றுத்திறனாளிகளின் தாய்மார்களுக்கு தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கும் முறையை கடலூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் சுய தொழிலை ஊக்குவிக்க வெளியிட்டுள்ள செய்தி கூறியிருப்பதாவது “மாற்றுத்திறனாளிகளின் சுயதொழிலை ஊக்குவிக்கும் நோக்கில் ஆண்டுதோறும் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. அதன்படி 2022-23 ஆண்டுக்கான கால்கள் பாதிக்கப்பட்டு கைகள் நல்ல நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் காது கேளாதோர், வாய் பேச முடியாதோர், மிதமான மன வளர்ச்சி குறையுடைய மாற்றுத்திறனாளிகள், கடுமையான மன வளர்ச்சி […]
சக்தி மாரியம்மன் கோவிலில் நேற்று வெகு விமர்சையாக கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் வீரகேரளம் திம்மையா நகர் அமைந்துள்ளது. இந்த நகரில் சக்தி விநாயகர், சக்தி மாரியம்மன், முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழாவானது கடந்த 6 ஆம் தேதி முளைப்பாரி ஊர்வலத்துடன் தொடங்கி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து பிள்ளையார் வழிபாடு, திருவிளக்கு வழிபாடு போன்ற பல்வேறு பூஜைகள் நடைபெற்றுள்ளது. பின்னர் 7ஆம் தேதி காலை விமான கலசம் நிறுவுதலும் மூன்றாம் கால வேள்வி […]
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த தண்டலம் கிராமத்தில் வசித்து வருபவர் ஜெயச்சந்திரன். இவர் தி.மு.க மாவட்ட கவுன்சிலராக இருக்கிறார். இவருக்கு சொந்தமாக திருப்போரூர் கந்தசுவாமி கோயில் சரவண பொய்கைகுளம் அருகில் 2 தளத்துடன் வீடு மற்றும் வணிகவளாகம் இருக்கிறது. இதற்கிடையில் இவரது மனைவி மேகலா உடல்நிலை சரியில்லாத காரணத்தால், திருப்போரூர் வீட்டில் 2வது தளத்தில் ஒரு மாதமாக தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் நேற்றுகாலை மேகலா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது 40 […]
நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 9) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசுகளிலிருந்து, 8ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திருச்சி காவிரி பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் திருச்சி காவிரி பாலத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் காவிரி பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ஐந்து மாதம் பாலத்தின் மீது போக்குவரத்தை வருகின்ற 10-ம் தேதி இரவு 12 மணி முதல் மாற்றுப் பாதையில் செல்லும் வகையில் மாற்றியமைக்கப்படுகின்றது. ஆகையால் வாகன ஓட்டிகள் மாற்றிப் பாதையில் பயணம் செய்து ஒத்துழைப்பு வழங்க […]
பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியில் அரசு பள்ளி முதலிடம் பிடித்தது. திருச்சி மாவட்டத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பாக பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 50 பள்ளிகளை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டது. இந்த போட்டியில் 19 வயதுக்குட்டபட்ட பிரிவு இறுதி ஆட்டத்தில் பிஷப்ஹீபர் பள்ளி அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. 17 வயது குட்பட்ட பிரிவில் திருச்செந்துறை […]
திருச்சியில் வேலை வாய்ப்பு உதவி தேவை பெற விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து வேலை கிடைக்காமல் பல வருடங்களாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு 3வருடத்திற்கு உதவித்தொகை வழங்கப்படுகின்றது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவர்கள் 5 வருடத்திற்கு மேல் வெள்ளை இல்லாமல் காத்திருப்பவராக இருக்க வேண்டும். மேலும் ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும் மற்றவர்கள் 40 வயதுக்கு மிகவும் இருக்க வேண்டும். அவரின் […]
மரபணு மாற்றம் செய்த பயிர் விதைகளை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வு துணை இயக்குனர் எச்சரிக்கை எடுத்துள்ளார். மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தியில் களைக்கொல்லி தாங்கி வளரக்கூடிய வகையில் இருக்கும் விதைகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு அங்கீகாரம் கொடுக்கவில்லை. அதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கின்றது. இது போன்ற தடை செய்யப்பட்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர் விதைகளை விற்பனை செய்வதும் வாங்கி பயிரிடுவதும் சட்டப்படி குற்றமாகும். இதை விற்பனை செய்வது தெரியவந்தால் […]
வாணியம்பாடி அருகே புல்லூர் தடுப்பணையிலிருந்து நீர் திறந்து விடப்பட்டதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அரசு அறிவுறித்தியுள்ளது. ஆந்திர அரசானது பாலாற்றின் குறுக்கே பெரும்பள்ளம் பகுதியில் 15 அடி உயர புல்லூர் தடுப்பணையை கட்டி இருக்கின்றது. இந்நிலையில் சென்ற 4 நாட்களாக வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியில் கன மழை பெய்து வருகின்றது. இதனால் மூன்றாவது முறையாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது. ஆற்றின் மறுக்கரையில் கனகநாச்சிஅம்மன் கோவில் இருக்கின்றது. தடுப்பணையை தாண்டி தான் அம்மன் […]
3 கடைகளில் பூட்டை உடைத்து ரூ.67 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள நெய்க்காரன்பாளையம் பகுதியில் செல்வகார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெய்க்காரன்பாளையம் பேருந்து நிலையம் அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் செல்வாகார்த்திகேயன் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது மளிகை கடையில் கதவு பூட்டிக் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் பின் ஷட்டரை திறந்து […]
பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் பொது கழிவறையை கண்டு மக்கள் புலம்பி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அம்மன் குளம் பகுதியில் பொது கழிவறை ஒன்று உள்ளது. இந்த கழிவறையானது மிக மோசமான நிலைமையில் இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் இரு பேஷன்களும் அருகருகேவும் கதவுகள் இல்லாத நிலையிலும் இருக்கிறது. இந்த கழிப்பிடம் பயன்பாட்டுக்கு வந்தாலும் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றது என அப்பகுதி மக்கள் புலம்பித் தவிக்கின்றனர். இது குறித்து சமூக ஆர்வலரான ஒருவர் கூறியதாவது “பொதுக்கழிப்பிடம் […]
வடக்கு ரத வீதியில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடத்தை நெடுஞ்சாலை துறையினர் அகற்றி உள்ளனர். விருதாச்சலம் மாவட்டத்தில் விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் சன்னதி வீதி மற்றும் வடக்கு ரத வீதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் சாலையை புதுப்பிக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்தப் பணியின் போது வடக்கு ரத வீதி சாலையின் ஒரு பக்கத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனால் கால்வாய் அமைய உள்ள […]
நெல்லையில் விபத்தை தடுப்பதற்காக 18 இடங்களில் ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை விபத்துக்களை தடுப்பதற்காக பல்வேறு சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றார்கள். அந்த வகையில் கன்னியாகுமாரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அரியக்குளம் அருகே படைசாமி ராசா கோவில், மூன்றடைப்பு சந்திப்பு, பானாங்குளம் சந்திப்பு, மறுகால்குறிச்சி, வாகைகுளம் அப்பா கல்லூரி, வாகைகுளம், பெருமளஞ்சி சந்திப்பு, தளபதி சமுத்திரம், வள்ளியூர் சந்திப்பு, மாஞ்சில் சந்திப்பு, வள்ளியூர், கலந்தபனை சந்திப்பு, லெப்பைகுடியிருப்பு, பணகுடி தெற்கு பாலம், […]
கூலி தொழிலாளியின் வீட்டிற்கு 95 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் செலுத்துமாறு வந்த குறுந்தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள மல்குத்திபுரம் தொட்டி பகுதியில் ரேவண்ணா(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு காளி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் இருக்கின்றனர். இவர்கள் வசிக்கும் சிமெண்ட் ஓடு வீட்டின் மின் இணைப்பு காளி பெயரில் இருக்கிறது. இந்நிலையில் ரேவண்ணா தனது வீட்டிற்கு 40 முதல் 50 யூனிட் வரைய மின்சாரம் பயன்படுத்தி […]
மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கருங்கடல் பகுதியில் சுடலை முத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் சைக்கிளில் சென்று சம்சா வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் விஜயராமபுரத்தில் வியாபாரத்திற்கு சென்றுவிட்டு சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சுடலைமுத்து மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுடலைமுத்துவை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி நாகதேவன்பாளையம் பகுதியில் செங்கோட்டையன்(59) என்பவர் வசித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் செங்கோட்டையன் கருக்கம்பள்ளியில் இருக்கும் வாகன பழுது நீக்கும் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு தனியாக இருந்த 9 வயது சிறுமிக்கு செங்கோட்டையன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ […]
பேருந்து பள்ளத்திற்குள் பாய்ந்த விபத்தில் 17 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூரில் இருந்து கொங்காடை கிராமத்திற்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை வெங்கடசாமி(39) என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இதில் சதாம்(39) என்பவர் கண்டக்டராக இருந்துள்ளார். அந்த பேருந்தில் 59 பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் மலைப்பகுதியில் மணியாச்சி பள்ளம் அருகே சென்ற போது எதிரே ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அந்த மோட்டார் சைக்கிளுக்கு இடம் விடுவதற்காக ஓட்டுநர் பேருந்தை […]
குளத்தில் மூழ்கி தச்சுத் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோட்டாறுவிளை பகுதியில் பால்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தச்சு தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பால்குமார் மீன்பிடிப்பதற்காக மறுகால் ஓடைப்பக்கம் சென்றுள்ளார். அப்போது பால்குமார் திடீரென தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அதிக நேரமாகியும் பால்குமார் வராததால் குடும்பத்தினர் அவரை தேடி பார்த்துள்ளனர். அதன்பின் குடும்பத்தினர் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ […]
ஆன்லைன் மூலம் மோசடி செய்யப்பட்ட பணத்தை போலீசார் மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையத்தில் 24 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதிலிருந்த லிங்கை தொட்டவுடன் வங்கி கணக்கு குறித்த தகவல்களை பதிவிடுமாறு கேட்கப்பட்டது. அப்போது அந்த இளம்பெண் அறியாமல் வங்கி கணக்கு தகவல்களை பதிவிட்டார். உடனடியாக வங்கியில் இருந்து 77 ஆயிரத்து 950 பணம் எடுக்கப்பட்டதாக அவரது செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் வந்தது. இதனை […]
போலீசாரின் கால் விழுந்து தம்பதியினர் கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லதா உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் மன்னவராதி பகுதியில் வசிக்கும் தெய்வ முருகன்-மணிமேகலை தம்பதியினர் மனு கொடுப்பதற்காக சென்றுள்ளனர். அந்த தம்பதியினர் திடீரென நுழைவு வாயிலில் நின்று கொண்டிருந்த போலீசரின் காலில் விழுந்து தங்களது நிலத்தை சிலர் ஆக்கிரமித்து செய்ததோடு, தங்களையும் […]
சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கடனை திரும்பி அடைக்க பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற என்ஜினியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்ச்செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மகளுடன் கடந்த 5 ஆம் தேதி சென்னை மேற்கு மாம்பழத்தில் உள்ள தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளார். இந்நிலையில் அவர்கள் இருவரும் மண்டபத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு வாலிபர் தமிழ்ச்செல்வி […]
20 வருடங்களுக்குப் பிறகு நாயனத்தியூர் ஏரி கோடி போனதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட அம்மணாங்கோவில் ஊராட்சி பகுதிக்குட்பட்ட நாயனத்தியூர் ஏரி 20 வருடங்களாக நிரம்பாமல் இருந்து வந்தது. மேலும் சென்ற வருடம் பெய்த மழையிலும் தற்பொழுது பெய்து வரும் மலையாலும் இந்த ஏரி நேற்று முன்கொள்ளவை எட்டியுள்ளது. 20 வருடங்களுக்கு பிறகு கோடி போனது. இதனால் மகிழ்ச்சியடைந்த மக்கள் அனைவரும் கோடிகும் பகுதியில் சிறப்பு பூஜைகள் செய்து கிடா வெட்டி […]
சாலை விதிகளை மீறி வாகனங்கள் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார். துணை போலீஸ் சூப்பிரண்டு திருத்தணியில் சாலை விதிகளை மீறி வாகனங்கள் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருக்கின்றார். இது குறித்து அவர் பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளதாவது, வாகன ஓட்டிகள் சிலரின் அலட்சிய போக்கால் சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றது. இதில் பெரும்பாலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக செல்வதால் ஏற்படுகின்றது. […]