Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அரசு பள்ளிகளில்…. “திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு”…..!!!!!!

பள்ளிப்பட்டு அருகே இருக்கும் அரசு பள்ளிகளில் ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு தாலுகாவிற்கு உட்பட்ட ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் அம்மையார்குப்பம் மற்றும் பாலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது ஆட்சியர் பள்ளி மாணவர்களிடம் ஏதாவது குறைகள் இருக்கின்றதா? என கேட்டறிந்தார். இதையடுத்து அவர் அம்மையார்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்குச் சென்று அங்கிருக்கும் சத்துணவு கூட்டத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் மாணவர்களுக்கு தயார் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (08.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 8) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசுகளிலிருந்து, 8ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“செய்யாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு”…. பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு….!!!!!

செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக பொதுமக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கலசப்பாக்கம் பகுதியில் சென்ற ஒரு மாதத்திற்கும் மேலாக மழை பெய்து வருவதால் செங்கம் குப்பநத்தம், கலசபாக்கம் மிருகண்டா அணை என இரண்டு அணைகளும் நிரம்பியதை தொடர்ந்து நீர்வரத்து ஏற்பட்டதால் அணைகளில் இருந்து செய்யாற்றிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் இரு கரைகளையும் தொட்டவாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது. இதன் காரணமாக கரையோரம் இருக்கும் மக்கள் யாரும் ஆற்று […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த விவசாயி”…. சாகும் வரை கடுங்காவல் சிறை தண்டனை….. கோர்ட் அதிரடி…!!!!!!

6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த விவசாயிக்கு சாகும் வரை கடுங்காமல் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நெடுவாசல் நடுத்தெருவை சேர்ந்த சரவணன்(50) என்பவர் சென்ற 2020 ஆம் வருடம் தனக்கு சொந்தமான டிராக்டரை எடுத்துக்கொண்டு ஒரு வயலுக்கு உழவு பணிக்கு சென்றார். அப்பொழுது அங்கு நின்று கொண்டிருந்த 6 வயதுடைய ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமியை அழைத்து சென்று சோளக்காட்டில் வைத்து பாலியல் வனஸ்காரம் செய்துள்ளார். இது […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“புதுமைப்பெண் திட்டம்”…. வங்கியில் செலுத்தப்பட்ட தொகை…. கல்லூரி மாணவிகள் மகிழ்ச்சி….!!!!!

புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் வேப்பூர் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் பயனடைதுள்ளார்கள். நமது தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் தங்களது உயர்கல்வியில் சேர்வதற்காக மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் தொகை திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமைதான திமுக அரசு புதுமைப்பெண் என்று மாற்றி அமைத்தது. இந்த திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் 6-ஆம்  வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள்  தங்களது உயர்கல்வியை தொடர்வதற்காக மாதந்தோறும் ஆயிரம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“வங்கியிலிருந்து பணம் எடுப்பவர்களை குறி வைத்து கொள்ளை”…. கணவன்-மனைவி உள்பட மூன்று பேர் கைது….!!!!!

வங்கியில் இருந்து பணம் எடுத்துச் செல்பவர்களை குறி வைத்து கொள்ளையில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தார்கள். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வங்கிகளில் பணம் எடுத்துச் செல்பவர்களை குறி வைத்து, அவர்களிடம் இருந்து 4 1/2 லட்சத்தை மர்ம நபர்கள் சென்ற 5 மாதங்களாக கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றார்கள். இது குறித்த புகாரின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தார்கள். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பிறந்த 2 நாட்களிலேயே இறந்த குழந்தை…. தம்பதி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குழந்தை இறந்ததால் தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சித்தக்குட்டை பகுதியில் காளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு வீரசின்னம்மாள் என்ற மகள் இருந்துள்ளார். இவர் ஒருவரை காதலித்து திருமணம் செய்த நிலையில் ஒரு வருடத்திலேயே கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். இந்நிலையில் வீரசின்னம்மாளுக்கும் அதே பகுதியில் வசிக்கும் பூபாலன் என்பவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஆட்டோவில் சென்ற மாணவர்கள்…. பள்ளிக்கு செல்லும் போது நேர்ந்த விபரீதம்…. அதிர்ச்சியில் பெற்றோர்….!!

அரசு பேருந்து மீது ஆட்டோ மோதிய விபத்தில் 3 மாணவர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து ஒன்று பழனியில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்துகொண்டிருந்தது. அந்த பேருந்தை திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் தனியார் பெண்கள் கல்லூரி அருகில் வந்தபோது மாணவிகளை இறக்குவதற்காக பேருந்து நின்றுள்ளது. அப்போது பின்னால் பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த ஆட்டோ ஒன்று பேருந்தின் பின்புறம் பயங்கரமாக மோதியது. […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“அறுவடைக்கு தயாராக இருக்கும் சம்பா சாகுபடி”…. விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கும் நிகழ்ச்சி…!!!!!

கீழையூரில் இருக்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழையூர் ஒன்றிய பகுதியில் குறுவை சாகுபடி நிறைவு பெற்று அறுவடைக்கு தயாராகி உள்ளது. இந்நிலையில் சம்பா சாகுபடிக்கான பணிகள் தீவிரமடைந்து வருகின்றது. மேலும் அதற்காக கீழையூரில் இருக்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் சம்பா சாகுபடிக்கு பயிர் கடன் வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் பால்ராஜ் தலைமை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மாடு மேய்க்க சென்ற மூதாட்டி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவர் மாலை நேரத்தில் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து நீண்ட நேரம் ஆகியும் காளியம்மாள் வீட்டிற்கு வராததால் அவரது குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இந்நிலையில் மறுநாள் காலையில் அருகில் உள்ள தோட்டத்து கிணற்றில் காளியம்மாள் மிதந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கிய இளைஞர்”…. போலீசார் விசாரணை…!!!!!

வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கியதை தொடர்ந்து போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் அருகே இருக்கும் பள்ளிகொண்டான் கிராமத்தைச் சேர்ந்த மெய்ஞானமூர்த்தி என்பவரின் மகன் செந்தில்குமார். இவருக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இந்நிலையில் செந்தில்குமார் தனியாக வசித்து வந்துள்ளார். இவரின் தந்தை அதே பகுதியில் வேறு வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் செந்தில்குமார் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்குவதாக அக்கம் பக்கத்தினர் அவரின் தந்தைக்கு தகவல் கொடுத்தார்கள். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மரத்தில் மோதிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. திருப்பூரில் நடந்த சோகம்….!!

மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள சேரிப்பாளையம் பகுதியில் அருண்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தேங்காய் உரிக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பிரியதர்ஷினி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அருண்குமார் மோட்டார் சைக்கிளில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருப்பூர் உடுமலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து திருமண விழா முடிந்து மோட்டார் சைக்கிளில் சேரிப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது உடுமலை-பெதப்பம்பட்டி சாலையில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி மோசடியில் ஈடுபட்ட கோவில் பூசாரி”…. போலீசார் விசாரணை….!!!!!

பெண்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி பண மோசடியில் ஈடுபட்ட கோவில் பூசாரியிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு அருகே இருக்கும் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கோவில் இருக்கின்ற நிலையில் இக்கோவிலுக்கு மதுவூர் பகுதியை சேர்ந்த பூசாரி ஒருவருக்கு தங்குவதற்காக கிராம மக்கள் ஒரு வீட்டை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்கள். மேலும் அவர் அங்கு தங்கி மக்களுக்கு அருள் வாக்கு சொல்லி வந்திருக்கின்றார். அவ்வாறு வரும் பெண்களிடம் தங்க புதையல், பண புதையல் என […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“ஒரு வழி பாதையை முறையாக கடைபிடிக்க வேண்டும்”…. வாகன ஓட்டிகளுக்கு போலீசார் எச்சரிக்கை….!!!!!

கூடலூர் சாலையில் காலை, மாலை நேரங்களில் ஒரு வழி பாதையை முறையாக கடைபிடிக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தாலுகா அலுவலகம் செல்லும் சாலையில் வேலியில் இருந்து கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிக்கு காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை ஹெல்த் கேர் வழியாக கூடலூர் நகருக்குள் ஒரு வழி பாதையாக வாகனங்கள் இயக்கப்படுகின்றது. இந்த நடைமுறையை சில வாகன ஓட்டிகள் கடைபிடிப்பது […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“தந்தை, மகனைத் தாக்கி கொள்ளையடித்த கும்பல்”…. 4 பேர் கைது…. 4 பேருக்கு வலைவீச்சு….!!!!

ஊட்டியில் தந்தை, மகனை தாக்கி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவன் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தார்கள். திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறையை சேர்ந்த தங்கராஜ் என்பவரும் அவரின் மகன் யுவராஜ் என்பவரும் வியாபாரம் நிமிர்த்தமாக 32 லட்சத்துடன் திருச்சியிலிருந்து பேருந்தில் ஊட்டிக்குச் சென்ற நான்காம் தேதி வந்துள்ளார்கள். இவர்களை பின்தொடர்ந்து வந்த கும்பல் கத்தியால் குத்தி ஒன்பதாயிரம் இருந்த பணப்பையை பறித்து விட்டு தப்பி சென்றார்கள். இதுகுறித்து இருவரும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்கள். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் கண்டெய்னர் லாரி….. “நூதன முறையில் கொள்ளையர்கள் கைவசம்”…. போலீசார் அதிரடி…!!!!!

சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு துறைமுகம் மூலமாக ஏற்றுமதி செய்வதற்கான கண்டெய்னர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட 2 1/2 கோடி பொருட்கள் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் போலீசார் கொள்ளையர்களை கைது செய்தார்கள். சென்னை மாவட்டத்திலுள்ள தாம்பரத்தில் இருக்கும் சானடோரியத்தில் ஏற்றுமதி வளாகம் செயல்பட்டு வருகின்றது. இங்கிருந்து தனியார் மருந்து நிறுவனம் மூலம் சென்ற ஆகஸ்ட் 18ம் தேதி அன்று 14 ஆயிரத்து நானூறு கிலோ மருந்து பொருட்களை கண்டெய்னர் லாரி மூலம் ஜெர்மன் நாட்டிற்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“தமிழக அரசின் ஓராண்டு சாதனை மலரை வெளியிடும் நிகழ்ச்சி”…. முன்னிலை வகித்த அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான்….!!!!!!

தமிழக அரசின் ஓராண்டு சாதனை மலரை அமைச்சர்கள் பொன்முடி மற்றும் செஞ்சி மஸ்தான் வெளியிட்டார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை காலை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பு ஏற்று ஒரு வருடம் நிறைவு பெற்றதையொட்டி ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழர்களின் கனவுகளை தாங்கி என்று அரசின் சாதனை திட்டங்களை உள்ளடக்கிய ஓராண்டு சாதனை மலர் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்க எம்.பி, […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிளஸ்-1 மாணவர் கொலை வழக்கு…. “கொலையாளிக்கு உடந்தையாக இருந்த உறவினர் கைது”….!!!!!

பிளஸ் 1 மாணவர் கொலை வழக்கில் கொலையாளிக்கு குழந்தையாக இருந்த அவரின் உறவினரை போலீசார் கைது செய்தார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே இருக்கும் டி.கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த சக்ரவர்த்தி என்பவரின் மகன் கோகுல். அதே பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் பிளஸ்1 படித்து வந்த நிலையில் சென்ற சில நாட்களுக்கு முன்பாக தன்னை கிண்டல் செய்வதாக அப்பள்ளியில் பயின்று வந்த 17 வயதுடைய மாணவர் கோகுலை அறிவாளல் வெட்டி கொலை செய்தார். இதனால் போலீசார் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வாணியம்பாடி அருகே பதுக்கி வைக்கப்பட்ட ரேஷன் அரிசி”…. அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை….!!!!!

வாணியம்பாடி அருகே 1 1/2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி அருகே இருக்கும் திம்மாம்பேட்டை-கொல்லப்பள்ளி செக்போஸ்ட் பகுதியில் பல மணி நேரமாக புதுச்சேரி பதிவு எண் கொண்ட கார் ஒன்று நின்றுக் கொண்டிருப்பதாக வாணியம்பாடி வருவாய் கோட்டாச்சியர் காயத்ரி சுப்பிரமணிக்கு தகவல் கிடைத்ததன் பேரின் சம்பவ இடத்திற்கு சென்று வட்ட வழங்கல் அலுவலர் சிலம்பரசன் தலைமையிலான அதிகாரிகள் காரை சோதனை இட்டார்கள். இதில் 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“இப்ப பணம் தருகிறாயா, இல்லையா…?” பாட்டி தலையில் கல்லை போட்டு பேரன் வெறிச்செயல்…. போலீஸ் அதிரடி…!!!!!!!

பாட்டி தலையில் கல்லை போட்டு பேரன் கொலை செய்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள சோமரசம் பேட்டை அருகே இருக்கும் செக்கடி தெருவை சேர்ந்தவர் கோவிந்தன். இவரின் மனைவி அமிர்தம். இத்தம்பதியினருக்கு நான்கு மகள்களும் இரண்டு மகன்களும் இருக்கின்றார்கள். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மூன்று மகள்களும் திருமணம் ஆகி குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகின்றார்கள். கோவிந்தன் இறந்த நிலையில் அமிர்தம் சின்னதுரை மற்றும் மூத்த மருமகள் உள்ளிட்டவர்களுடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் ஒரு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“விபத்தில் சிக்கியவரை காப்பாற்றுவது போல் மர்ம நபர்கள் கைவரிசை”…. போலீசார் வலைவீச்சு….!!!!!

விபத்தில் சிக்கியவரை காப்பாற்றுவது போல் பணம் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றார்கள். தேனி மாவட்டத்திலுள்ள தேவதானப்பட்டி அருகே இருக்கும் கெங்குவார்பட்டியை சேர்ந்த கார்த்திக் என்பவர் ஹோட்டல் நடத்தி வருகின்றார். இவர் நேற்று இரவு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் தேனி மாவட்டத்தில் உள்ள கெங்குவார்பட்டிக்கு வந்து கொண்டிருந்த பொழுது பெரியகுளம்-வத்தலகுண்டு இடையேயான மெயின் ரோடு சாலையில் இருந்த கல்லில் மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் தவறை கீழே விழுந்தார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“பத்திர எழுத்தர் அலுவலகத்தில் 6 லட்சம் கொள்ளை”…. 5 கடைகளில் கைவரிசை முயற்சி….. போலீசார் விசாரணை…‌!!!!!!

தேனியில் பத்திர எழுத்தர் அலுவலகத்தில் ரூபாய் 6 லட்சம் கொள்ளையடிக்கபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள பெரிய குளம் புறாவழிச் சாலை பகுதியைச் சேர்ந்த நவநீத கிருஷ்ணன் என்பவர் ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் பத்திரம் எழுதும் அலுவலகம் வைத்திருக்கின்றார். இந்நிலையில் இன்று காலை அலுவலகத்தை திறப்பதற்காக சென்ற பொழுது அலுவலகத்தின் கதவில் இருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் ஆவணங்கள் சிதறி கிடந்தது. அங்குள்ள மேஜை டிராயரில் வைக்கப்பட்டிருந்த 6 லட்சம் ரூபாய் கொள்ளை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அரசு கல்லூரி மாணவிகள் போராட்டம்…. “தாசில்தார் அலுவலகத்தை முற்றுகை”…. பரபரப்பு….!!!!!

அரசு கல்லூரி மாணவிகள் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் அரசு மகளிர் கல்லூரியில் சென்ற 2019-20-ம் கல்வியாண்டில் ஆரம்பிக்கப்பட்டு மூன்று வருடங்களாக வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகின்றது. தற்பொழுது பிகாம், பிபிஏ, கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாட வகுப்புகளில் 750 மாணவிகள் பயின்று வருகின்றார்கள். இந்நிலையில் போதிய இட வசதி இல்லை என கூறி அரசு மகளிர் கல்லூரி மாணவிகளை நெல்லை காந்தி நகரில் இருக்கும் ராணி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“ராஞ்சியில் நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டி”…. இந்திய அணிக்கு நம்ப சேலத்து வீரர் தேர்வு….!!!!!!!

ராஞ்சியில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு ஜலகண்டாபுரம் வீரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள ஜலகண்டாபுரம் வீரர் ராஞ்சியில் நடைபெறும் ஆட்சித் திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றார். இவர் சேலம் மாவட்டத்தில் உள்ள ஜலகண்டாபுரத்தில் உள்ள தோரமங்கலம் பகுதியை சேர்ந்த ஞானேஸ்வரன் என்பவரின் மகன் மணிவண்ணன். மாற்றுத்திறனாளியான இவர் ஈரோட்டில் இருக்கும் ஒரு பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகின்றார். மேலும் மாவட்டம் மற்றும் மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு….. “சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்”…. ரயில்வே கோட்ட அதிகாரிகள் தகவல்….!!!!!!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியுள்ளார்கள். ஓணம் பண்டிகை முன்னிட்டு சேலம் வழியாக கேரள மாநிலத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அந்த வகையில் ஹைதராபாத்-திருவனந்தபுரம் சிறப்பு ரயில் ஹைதராபாத்தில் இருந்து நேற்று மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு சேலம் கோவை வழியாக இன்று திருவனந்தபுரம் செல்கின்றது. பின் திருவனந்தபுரத்திலிருந்து வருகின்ற 10-ம் தேதி இரவு 10 மணிக்கு புறப்பட்டு கோவை வழியாக 11ஆம் தேதி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலம் ஆட்சியர் அலுவலகத்திற்கு கொசுவலையுடன் வந்தவர்கள்”…. தடுத்து நிறுத்திய போலீசார்…. பரபரப்பு….!!!!!

சேலம் ஆட்சியர் அலுவலகத்திற்கு கொசு வலையுடன் வந்தவர்களால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக ஆட்சியரிடம் கொடுத்தார்கள். இதனிடையே அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தை சேர்ந்தவர்கள் சிலர் உடலில் கொசு வலை சுற்றியபடி மனு கொடுக்க வந்தார்கள். இதனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கொசுவலைகளை நீக்கிவிட்டு மனு கொடுக்க செல்லும்படி அறிவுறுத்தினார்கள். இதன் பின்னர் அவர்கள் கொசுவலைகளை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்….!!

சாலைகளில் மழை நீர் குளம் போல தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. நேற்று காலை கடுமையான வெப்பம் நிலவியது. இதனை அடுத்து மாலை 4 மணிக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் பல்லடம் ரோடு சூடாமணி கூட்டுறவு சங்கத்திற்கு எதிரே மழைநீருடன் கழிவுநீர் சேர்ந்து ஓடியது. சில […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 80-க்கும் மேற்பட்டோர்….. பரபரப்பு சம்பவம்…!!

அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 80-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு- தாண்டிக்குடி இடைய அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. நேற்று காலை அரசு பேருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வத்தலகுண்டுவில் இருந்து தாண்டிக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. இதே போல் மற்றொரு அரசு பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் தாண்டிகுடியிலிருந்து வத்தலகுண்டு நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் கோழிஊத்து மற்றும் முருகன் கோவில் இடையே வனத்துறையினர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“உங்களுக்கு வேலை ரெடியா இருக்கு” 12 லட்ச ரூபாய் மோசடி…. வாலிபர்களின் பரபரப்பு புகார்…!!

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 12 லட்ச ரூபாய் பணம் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள என்.எஸ் நகரில் வசிக்கும் அரவிந்த் பிரேம்குமார்(30), அரவிந்த் (30) ஆகியோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, செட்டிநாயக்கன்பட்டியில் வசிக்கும் அரசு பெண் ஊழியரின் தந்தை எங்களுக்கு அறிமுகமானார். அவர் தனது மகள் மூலம் எங்களுக்கு கூட்டுறவுத் துறையில் உதவியாளர் பணி வாங்கி தர முடியும் என […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. கொடைக்கானல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு…. சிரமப்படும் பொதுமக்கள்…!!

தொடர்ந்து மழை பெய்ததால் கொடைக்கானல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று இரவு கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள மலைப்பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாம்பார் அருவி, தேவதை அருவி, வெள்ளி நீர்வீழ்ச்சி, பியர்சோழா அருவி ஆகிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஆற்றில் வெள்ளப்பெருக்கு…. ஆடு, மாடுகளுடன் சிக்கி கொண்ட 3 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஆடு, மாடுகளுடன் 3 பேர் சிக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொல்லைகாது பகுதியில் சின்னசாமி(48)- கௌரம்மாள்(45) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குமார்(30) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சின்னச்சாமி அவரது மனைவி, மகன் மற்றும் அதே பகுதியில் வசிக்கும் மகேஸ்வரி(33) ஆகியோர் 10 ஆடுகள், 7 கரவை மாடுகளுடன் தொல்லைகாது ஆற்றி நடுவே இருக்கும் காலி நிலத்திற்கு மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றுள்ளனர். அப்போது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (06.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 6) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசுகளிலிருந்து, 3ஆம் தேதி முதல் 50 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீபாவளி பண்டிகை முன்னிட்டு…. “தற்காலிக பட்டாசு கடைக்கு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்”….. ஆட்சியர் தகவல்….!!!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைக்கு உரிமை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்ட ஆட்சியர் தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் குறித்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அடுத்த மாதம் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பண்டிகையை விபத்தில்லா பண்டிகையாக கொண்டாடுவதற்கு பட்டாசு விற்பனை உரிமம் பெற்றவர்கள் மட்டுமே பட்டாசு சில்லறை விற்பனை செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது. ஆகையால் நிரந்தர […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நெல்லைக்கு வருகை புரியவுள்ள முதல்வர்”…. மும்முரமாக நடைபெற்று வரும் பணிகள்…!!!!!

முதல்வர் மு.க.ஸ்டாலின் நெல்லைக்கு வருகை புரியுள்ள நிலையில் பிரம்மாண்ட மேடை, பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. நல திட்ட உதவிகள் வழங்கவும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் வருகின்ற 8-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருநெல்வேலிக்கு வருகை புரிய உள்ளார். இந்நிகழ்வானது பாளையங்கோட்டை ஐகிரவுண்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மைதானத்தில் நடைபெற உள்ளது. தற்பொழுது இந்நிகழ்ச்சிக்கான பிரம்மாண்ட மேடை, பந்தல் அமைக்கப்படுகின்றது. மைதானம் முழுவதும் சீரமைக்கப்பட்டு அங்கே இரும்புத் தூண்கள் நடப்பட்டு அதன் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“முக்கொம்பு மேலணை பாலத்தில் சிக்கிக்கொண்ட ஆம்புலன்ஸ்-கார்”…. போக்குவரத்து நெரிசல்…!!!!!

முக்கொம்பு மேலணை பாலத்தில் கார்-ஆம்புலன்ஸ் சிக்கிக்கொண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருச்சி மாவட்டத்தில் பிரபல சுற்றுலா தளமாக முக்கொம்பு இருக்கின்றது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ஏராளமான பேர் அங்கு வந்தார்கள். இதில் மேலணை அப்பர் அணை கட்டுப்பகுதியிலிருந்து வந்த கார் ஒன்றும் வாத்தலை நோக்கி சென்ற 108 ஆம்புலன்ஸும் முக்கொம்பு நுழைவாயிலில் உரசி கொண்டு இரு வாகனங்களும் செல்ல முடியாமல் நின்றது. நீண்ட நேர போராட்டத்திற்குப் பின் ஆம்புலன்ஸும் காரும் நகர்ந்து சென்றது. இதனால் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“சீட்டாட்டத்தால் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல்”…. நாட்டு வெடிகுண்டு வீச்சு…. போலீஸ் விசாரணை….!!!!

சீட்டாட்டத்தால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதில் ஒரு கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி பணத்தை பறிக்க முயன்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் அருகே இருக்கும் சின்னசூரி பகுதி சேர்ந்த ஆர்.எஸ்.ஆர் ரமேஷ் என்பவரது ஆதரவாளர்களுக்கும் திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்த பப்ளு என்பவரின் ஆதரவாளர்களுக்கும் இடையே சீட்டாடிய பணத்தை பிரித்துக் கொள்வதில் பிரச்சனை இருந்து வந்திருக்கின்றது. நேற்று முன்தினம் ரமேஷின் பனந்தோப்பில் வெட்டு சீட்டாட்டத்தில் ஈடுபட்ட பொழுது அங்கு வந்த பத்திற்கும் மேற்பட்ட பப்ளு தரப்பினர்  ரமேஷ் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனி பேருந்து நிலையம்…. “தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி”…. ஆட்சியர் திறந்து வாய்ப்பு…..!!!!!!!

தேனி பழைய பேருந்து நிலைய வளாகத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படம் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. தேனி மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலைய வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாக தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி ஏற்படுத்தப்பட்டது. இந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் முரளிதரன் திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும் இந்த கண்காட்சியில் பெரியகுளம் எம்.எல்.ஏ சரவணக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் விஜயகுமார், அல்லிநகரம் நகராட்சி துணைத் தலைவர் செல்வம், […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“டாஸ்மாக் கடை சுவரை துளையிட்டு திருட முயன்ற ஆசாமிகள்”…. மடக்கிப் பிடித்த போலீசார்….!!!!!

டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு திருட முயன்றவர்கள் கடைக்குள் மது அருந்திய பொழுது போலீசார் அவர்களை மடக்கி பிடித்தார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்முடிபூண்டி அடுத்துள்ள கவரைப்பேட்டை அருகே தண்டலச்சேரி கிராமம் இருக்கின்றது. இங்கிருக்கும் மதுபான கடையில் இரவு நேரத்தில் இரண்டு மர்ம நபர்கள் திருடுவதற்காக கடையில் பின்பக்க சுவரை கடப்பாறை கொண்டு துளையிட்டு உள்ளே சென்றார்கள். ஆனால் உள்ளே சென்றவர்கள் மது குடித்ததில் போதை தலைக்கேறி வந்த வேலையை மறந்து அங்கேயே அமர்ந்து சத்தமாக பேசிக் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“திருத்தணியில் சுமார் 100 ஜோடிகளுக்கு நடைபெற்ற திருமணம்”…. கடும் போக்குவரத்து நெரிசல்….!!!!!!

திருத்தணியில் இன்று சுப முகூர்த்தம் என்பதால் நூறுக்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடந்ததால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி முருகன் கோவிலில் திருமண கோலத்தில் இருக்கும் முருகன் பெருமானை திருமணம் ஜோடிகள் அதிக அளவில் வந்து தரிசனம் செய்கின்றார்கள். மேலும் முகூர்த்த தினங்களில் கோவிலில் கூட்டம் அலைமோதுகின்றது. இந்நிலையில் இன்று சுப முகூர்த்தம் என்பதால் கோவிலில் 30க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. மேலும் கோவிலை சுற்றியுள்ள 70 மண்டபங்களில் திருமணம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. தப்பியோடிய டிரைவர்…. போலீஸ் வலைவீச்சு….!!

ரேஷன் அரிசி கடத்திய டிரைவர் உள்பட 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாலாட்டின் புத்தூர் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது லிங்கம்பட்டி கிராம சாலையில் எதிரே வந்த லோடு ஆட்டோவை காவல்துறையினர் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். இதனையடுத்து ஆட்டோவில் இருந்த டிரைவர் உள்ளிட்ட 2 பேரும் ஆட்டோவை நிறுத்திவிட்டு தப்பிசென்று விட்டனர். அதன்பின் காவல்துறையினர் லோடு ஆட்டோவில் செய்த சோதனையில் 50 கிலோ எடையுள்ள 40 மூட்டை ரேஷன் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“தமிழக ஆரம்பபள்ளி ஆசிரியர் வட்டார செயற்குழு கூட்டம்”….. ஜேக்டோ-ஜியோ மாநில மாநாடு….. தீர்மானம் நிறைவேற்றம்….!!!!!!

கீழ்பென்னாத்தூரில் தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயற்குழு கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்பென்னாத்தூர் மேற்கு தொடர்ச்சி பள்ளியில் தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயற்குழு கூட்டம் தலைவர் திலகம் தலைமையில் நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்திற்கு துணைத்தலைவர் முன்னிலை வகிக்க பொருளாளர் வரவேற்றார். இதன்பின் செயலாளர் குமார் அறிக்கை வாசித்து சமர்ப்பித்தார். இதையடுத்து சிறப்பு விருந்தினராக மாநில துணை பொதுச்செயலாளர் சி.ஆர்.முருகன் பங்கேற்று சிறப்புரை வழங்கினார். அப்பொழுது சென்னையில் வருகின்ற […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்…. “வேலூரில் 788 இடங்களில்”….. பூஸ்டர் தடுப்பூசிக்கு முக்கியத்துவம்….!!!!!

வேலூர் மாவட்டத்தில் 788 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. தமிழக முழுவதும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் நேற்று 35 வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மாவட்டத்தில் மொத்தம் 788 இடங்களில் இந்த சிறப்பு முகமானது நடந்தது. இதுபற்றி பொதுமக்களிலேயே விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. இதுகுறித்து சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளதாவது, வேலூர் மாவட்டத்தில் முதல் மற்றும் இரண்டாம் தவணை பெரும்பாலானோர் செலுத்தி இருக்கின்றார்கள். இந்த சிறப்பு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திடீரென சுற்றி வளைத்த மர்ம நபர்கள்….. ஆட்டோ ஓட்டுநருக்கு நடந்த கொடூரம்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

ஆட்டோ ஓட்டுநர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கோவில் பாப்பாக்குடி பகுதியில் ரவி(29) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்துள்ளார். இவருக்கு பிரியா(24) என்ற மனைவி உள்ளார். நேற்று ரவி அப்பகுதியில் நின்று கொண்டிருந்தபோது திடீரென வந்த மர்ம நபர்கள் ரவியை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால் படுகாயமடைந்த ரவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பேருந்து நிறுத்தத்தில் சடலமாக கிடந்த வாலிபர்….. அதிர்ச்சியடைந்த உறவினர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கோனமாக்கனப்பள்ளி கிராமத்தில் எல்லப்பா(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே சென்ற எல்லப்பா நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் உறவினர்கள் அவரை தேடி அலைந்தனர். அப்போது பூதட்டிகொட்டாய் பேருந்து நிறுத்தம் அருகே எல்லப்பா இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

திடீரென வந்த காட்டு யானைகள்…. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்…. வனத்துறையினரின் முயற்சி….!!

காட்டு யானைகள் கிராமத்திற்குள் புகுந்ததால் பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நொகனூர் வனப்பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இந்த காட்டு யானைகள் இரவு நேரத்தில் லக்கச்சந்திரம், மரக்கட்டா, நொகனூர் மரக்கட்டா உள்ளிட்ட கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்துவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நேற்று காலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 5 காட்டு யானைகள் கொத்தூர் கிராமத்திற்குள் நுழைவதை பார்த்து அதிர்ச்சிமடைந்த பொதுமக்கள் அலறியடித்து கொண்டு வீடுகளுக்கு ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மது போதையில் தள்ளிவிட்ட வாலிபர்…. சக்கரத்தில் சிக்கி பலியான தொழிலாளி…. குமரியில் பரபரப்பு…!!

மது போதையில் வாலிபர் தள்ளிவிட்டதால் தொழிலாளி பேருந்து சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஈத்தவிளை பகுதியில் தொழிலாளியான முத்தையன்(63) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் முத்தையன் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக குழித்துறைக்கு நடந்து சென்றுள்ளார். பின்னர் பொருட்களை வாங்கி விட்டு சாலையோரமாக நடந்து சென்ற போது மருதங்கோடு கோணம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீஜித் என்பவர் குடிபோதையில் முத்தையனை வழி மறித்துள்ளார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள் வானிலை

குமரியில் கொட்டி தீர்த்த கனமழை…. வெள்ள அபாய அளவை கடந்த அணையின் நீர்மட்டம்…. தீவிர கண்காணிப்பு…!!

பேச்சிப்பாறை அணைப்பகுதியில் ஒரு மணி நேரத்தில் மட்டும் 58 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. நேற்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை மட்டும் பேச்சிப்பாறை அணை பகுதியில் 58 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல் பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் மழை பெய்ததால் நீர்மட்டம் 71 அடியை எட்டியுள்ளது. இந்நிலையில் பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (05.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 5) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசுகளிலிருந்து, 3ஆம் தேதி முதல் 50 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேசிய ஊட்டச்சத்து மாதம்…. குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை…. “1852 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு”….!!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட 1852 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது குறித்து கூறியுள்ளதாவது, தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு மாவட்ட முழுவதும் இருக்கும் ஐந்து வயது உட்பட்ட 73 ஆயிரம் குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 1852 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதற்கு கூடுதலாக ஊட்டச்சத்து உருண்டைகள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“6 மாதங்களுக்கு பூந்தமல்லியில் போக்குவரத்து மாற்றம்”…. எப்படி செல்லலாம்…? இதோ உங்களுக்காக….!!!!!

பூந்தமல்லி ட்ரங்க் சாலையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடந்து வருவதால் மேலும் ஆறு மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி ட்ரங்க் சாலையில் பூந்தமல்லி பேருந்து நிலையம் முதல் கரையான்சாவடி வரை மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடந்து வருகின்றது. இதன் காரணமாக சென்ற மே மாதம் 4-ம் தேதி முதல் செப்டம்பர் 3ஆம் தேதி வரை பகல் மற்றும் இரவு முழுவதும் போக்குவரத்து […]

Categories

Tech |