சேலம் அரசு மருத்துவமனைக்கு நேற்று 2 வாலிபர்கள் டிப்டாப்பாக உடையணிந்து மருத்துவர் போல் கழுத்தில் ஸ்டெதஸ்கோப் அணிந்து வந்தனர். இவர்களை பார்த்த நோயாளிகள் இளம்வயது மருத்துவர்கள் என நினைத்து அவர்களுக்கு வழிவிட்டனர். இதையடுத்து இரண்டு பேரும் கண் அறுவைசிகிச்சை மையத்துக்கு சென்றனர். அதன்பின் அங்கிருந்த நர்சிடம் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் மருந்து மாத்திரைகளின் விபரங்களை கூறும்படி கேட்டனர். இந்நிலையில் நர்சுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதன் காரணமாக புதியதாக மருத்துவர் பணிக்கு சேர்ந்து […]
Tag: மாவட்ட செய்திகள்
தமிழகத்தில் திருட்டு, கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தினசரி ஒரு திருட்டு சம்பவங்கள் நடைபெறாத நாட்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு மர்ம நபர்கள் வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது புது ட்ரெண்டிங் ஆக செல்போன் கோபுரத்தை நூதனம் முறையில் ,மர்ம கும்பல் ஒன்று திருடி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகில் மேட்டுப்பட்டி பெருமாபாளையம் கிராமத்தில் தனியார் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள […]
சேலம் மாவட்டத்தின் பிரதான நீர் ஆதாரங்களில் கன்னங்குறிச்சி புது ஏரி முக்கியமான ஒன்றாகும். சென்ற சில நாட்களாக பெய்துவரும் மழையின் காரணமாக ஏற்காடு மலைப்பகுதியில் நீரோடைகளில் தண்ணீர்வரத்து ஏற்பட்டது. இதனால் ஏற்காடு மலையிலிருந்து அடிவாரம் வரை உள்ள இடங்களில் கட்டப்பட்டிருந்த அனைத்து தடுப்பணைகளும் நிரம்பி உபரி நீர் புது ஏரிக்கு அதிகளவில் வந்தது. இதன் காரணமாக ஏரியின் நீர்மட்டமானது கிடுகிடுவென உயர்ந்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை 8 மணிக்கு புதுஏரி நிரம்பியது. அதன்பின் உபரிநீர் மறுகால் […]
அடையாளம் தெரியாத வாகனம் மொபட் மீது மோதியதில் செவிலியர் உயிரிழந்தார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் அருகே இருக்கும் கொலக்கொம்பை பகுதி சேர்ந்த மருதை என்பவரின் மகள் மதுமதி. இவர் தனது மாமா மகேந்திரன் என்பவர் வீட்டில் தங்கி தனியார் மருத்துவமனையில் ஒரு வருடமாக செவிலியராக பணிபுரிந்து வந்த நிலையில் சென்ற மூன்று மாதங்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் விடுப்பு எடுத்து வீட்டிலேயே இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் […]
பள்ளி மாணவர்களுக்கு மதுபாட்டில்கள், போதை பொருட்கள் விற்பனை உள்ளிட்டவற்றை தடுத்து விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் மது கடைகள் தற்பொழுது திறக்கப்படுவதற்கு முன்பாக சில மதுபானக்கூடங்களில் இருந்து மது பாட்டில்கள் சட்ட விரோதமாக பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக சொல்லப்படுகின்றது. இதில் பள்ளி மாணவர்களுக்கு சிலர் மது விற்பனை செய்ததாக தெரிகின்றது. சென்ற 25 ஆம் தேதி காலை பள்ளி மாணவர்கள் […]
நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட் 29) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 15 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, 29ஆம் தேதி முதல் 15 காசுகள் குறைந்து 4 ரூபாய் 15 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டிரைவரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வசவபுரம் பகுதியில் சண்முக சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 25-ஆம் தேதி சண்முக சுந்தரம் லாரியை ஓட்டி செல்வதற்கு தயாராக இருந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சண்முக சுந்தரத்தை தாக்கிவிட்டு அவரிடம் இருந்த செல்போன், பவர் பேங்க், ஏடிஎம் கார்டு ஆகியவற்றை வாங்கி விட்டு அங்கிருந்து […]
மொபட்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கூரியர் ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆனந்தபுரம் பகுதியில் ரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெள்ளப்பாண்டி என்ற மகன் இருந்துள்ளார். இவர் நாசரேத்தில் உள்ள ஒரு தனியார் கூரியர் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வெள்ளப்பாண்டி தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து பிள்ளையன்மனை பகுதியில் வசிக்கும் ஏஞ்சல் என்பவர் மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஏஞ்சல் ஓட்டி […]
அய்யன்கொல்லி-கூடலூர் இடையே குறைவான பேருந்துகள் இயக்கப்படுவதால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றார்கள். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் இருந்து தேவாலா, பந்தலூர், கொலப்பள்ளி வழியாக அய்யன்கொல்லி, நம்பியார் குன்னூர், பந்தலூர், முக்கட்டி வழியாக நெலாக்கோட்டை, பிதிர்காடு வழியாக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த பேருந்துகளில் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பயணித்து வருகின்றார்கள். இதனிடையே போதுமான அளவு பேருந்து வசதிகள் இல்லாததால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு […]
வீடு புகுந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 3 வடமாநில வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எம்.ஊத்துக்குளி பகுதியில் தனியார் தொழிற்சாலை அமைந்துள்ளது. அங்கு அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கணவன்-மனைவி இருவரும் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கணவர் வேலைக்கு சென்று விட்டதால் மனைவி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் 3 வடமாநில வாலிபர்கள் அத்துமீறி நுழைந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். […]
திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் மார்பிங் செய்து இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்தார்கள். மதுரை மாவட்டத்திலுள்ள திருமோகூர் பெருங்குடியை சேர்ந்த ஒருவர் எனது மகளின் புகைப்படத்தை மார்பிங் செய்து இணையத்தில் வெளியிடுவதாக ஈரோட்டு மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மிரட்டுகின்றார் என போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் அந்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்திய பொழுது அவர் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்துவரும் வளர்ச்சிதிட்டப் பணிகள் தொடர்பாக துறை அதிகாரிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நாகர்கோவிலிலுள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை வகித்தார். இதில் அமைச்சர் மனோதங்கராஜ் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியிருப்பதாவது “குமரி மாவட்டத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பாக நடந்துவரும் இரணியல் கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட 97 பணிகள் தொடர்பாக கேட்டறியப்பட்டது. குழித்துறை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் கடந்த 2018-2019ன் கீழ் […]
தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்களில் மர்ம நபர்கள் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்கும் மர்மநபர்களின் செயல் அதிகரித்து வருகிறது. மேலும் தான் வேலை செய்து வரும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் நல்லவர்கள் போல் நாடகமாடி சிலர் பணத்தை சுருட்டுவது தற்போது அரங்கேறி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகேயுள்ள ஆளூர் உச்சிமாகாளியம்மன் கோயில் தெருவில் வசித்து வந்த சங்கரநாராயணனின் மனைவி ஜமுனா (47). இவர் குமரி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு […]
வேப்பனப்பள்ளி அருகே மலைப்பாம்பு ஒன்று நாயை சுற்றிக்கொண்டதில் நாய் பரிதாபமாக உயிரிழந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனப்பள்ளி அருகே இருக்கும் ஆந்திர எல்லையில் உள்ள வனப்பகுதியில் தெரு நாய் ஒன்று சுற்றிக்கொண்டு இருந்தபோது அப்பகுதியில் இருந்த மலைப்பாம்பு நாயை பிடித்து சுற்றிக் கொண்டது. இதனால் நாய் சத்தம் போட அப்பகுதி மக்கள் வந்து பார்த்தபொழுது மலைப்பாம்பு நாயை விழுங்க முயற்சி செய்தது. இதனால் பொதுமக்கள் அங்கு கூடி சத்தம் போட்டார்கள். பின் சத்தம் கேட்ட மலைபாம்பு நாயை […]
தொடர்ந்து பெய்யும் கனமழையால் கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்பொழுது தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர் வரத்தானது அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அதன்படி நேற்று முன்தினம் 623 கன அடியாக இருந்தது. தற்பொழுது கிழவரப்பள்ளி அணையில் இருந்தும் மார்க்கண்டேய நதியில் இருந்தும் தண்ணீர் வருவதால் கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 5800 கன அடியாக […]
எழும்பூர் கண் மருத்துவமனையில் ஆறு மாடி கட்டிடத்தில் முதல்வர் திறந்து வைத்தது குறித்து தமிழக அரசு செய்திக் குறிப்பில் வெளியிட்டுள்ளது. சென்னையில் உள்ள எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் 200 வது ஆண்டை முன்னிட்டு இந்த மருத்துவமனை வளாகத்தில் 65.60 கோடி செலவில் 6 மாடி கட்டிடம் கட்டப்பட்டு இருக்கின்றது. இந்த மருத்துவமனையில் 150 படுக்கை வசதிகள், புறநோயாளிகள் பிரிவு அவசர சிகிச்சை போன்று சிறப்பு கண் சிகிச்சைக்கு தனித்தனி அரங்குகள் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதனை நேற்று முதல்வர் […]
விபத்தில் இறந்தவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மூர்த்தியான் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தனது மகனுடன் ஆடுகளை மேய்த்துக்கொண்டு திருச்சி-சிதம்பரம் இடையேயான தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றார். அப்பொழுது அவ்வழியாக வந்த கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதில் உடன் வந்த மகன் பாலமுருகனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து போலீசார் செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]
காஞ்சீபுரம் மாவட்டம் ஆதனூர் ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் பகுதியில் 25 வருடங்களுக்கு முன் அரசு நிலம் என நினைத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 160-க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டி குடும்பத்துடன் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் வீடுகள் கட்டியுள்ள 12 ஏக்கர் 67 சென்ட் நிலப்பரப்பு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமானது என்பதால் லட்சுமிபுரம் பகுதியில் வீடுவீடாக சென்று நிலத்தை அளவிடும் பணியில் ஈடுபடுவதற்காக ஆதனூர் கிராம நிர்வாக அலுவலர் தலைமையில் 6 பேர் கொண்ட வருவாய்த்துறை […]
தற்போது பெண்கள் பல துறைகளில் பணிபுரிந்து சமூகத்தில் முன்னேற்றமடைந்து வருகின்றனர். இதற்கிடையில் ஒரு சில காமக் கொடூரர்களால் பெண்களின் வாழ்க்கை சீரழியும் நிலை ஏற்படுகிறது. கடந்த சில நாட்களாகவே ஒரு சில பள்ளிகளில் பாலியல் குற்றச்சாட்டு ஏற்படும் அவலநிலை தொடர்கிறது. இதனால் தமிழகத்தில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதாக அச்சம் நிலவுகிறது. அந்த வகையில் தற்போது பேருந்து ஓட்டுநரும் பள்ளி மாணவர்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபி அருகேயுள்ள புதுக்காடு […]
ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று முன் தினம் இரவு கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மேலும் பல்வேறு இடங்களில் வீடுகளிலும் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் உறக்கம் இன்றி பரிதவித்தனர். இந்நிலையில் ஈரோடு சூளை பகுதியில் கன மழை காரணமாக மண்அரிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பதிக்கப்பட்டிருந்த ஊராட்சிக்கோட்டை கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வெளியேறியது. இது தொடர்பாக தகவல் கிடைத்ததும் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று காலை […]
மாணவ,மாணவிகளை பள்ளிக்கூடத்திற்கு அழைத்து செல்ல தனியார் பள்ளிநிர்வாகங்கள் சார்பாக வாகன வசதியானது செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் பள்ளி வாகனங்கள் விபத்துகளில் சிக்காமல் இருக்கவும், நல்ல செயல்திறனுடன் இருக்கிறதா.? என்பதை கண்டறியவும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட பிறகே தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்படுகிறது. இந்நிலையில் பள்ளிவாகனங்களுக்குள் சி.சி.டி.வி கேமராக்களை பொருத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த வகையில் பள்ளிவாகனங்களில் டிரைவர் இருக்கைக்கு முன்புறமும், குழந்தைகள் தெரியும் வகையிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் […]
தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்களில் மர்ம நபர்கள் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்கும் மர்ம நபர்களின் செயல் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி தான் பணிபுரியும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் நல்லவர்கள் போல் நாடகமாடி சிலர் பணத்தை சுருட்டுவது தற்போது அரங்கேறி வருகிறது. தற்போது ஒருவர் உளவுத்துறை போலீஸ் போல் நாடகமாடி ஊராட்சி மன்ற தலைவரிடம் பணமோசடி செய்தது தெரியவந்தது. காஞ்சீபுரம் ஸ்ரீ பெரும்புதூரை அடுத்த செங்காடு ஊராட்சியை சேர்ந்த தி.மு.க-வை […]
சென்னை ஆர்.கே.நகரை சேர்ந்த ராஜா முகம்மது (26) சென்ற ஒரு வருடமாக திருவள்ளூர் லங்காகார தெருவிலுள்ள தன் மாமனார் வீட்டில் தங்கி இருந்து காக்களூர் பகுதியில் உள்ள இறைச்சி கடையில் வேலைசெய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சென்னை குற்றப் புலனாய்வு சிறப்பு பிரிவு காவல்துறையினர் இவரை திருவள்ளூரிலுள்ள அவரது மாமனார் வீட்டில் வைத்து திடீரென்று மடக்கி பிடித்து கைது செய்தனர். இதற்கிடையில் முன்பாக ராஜா முகம்மது சவுதி அரேபியாவில் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாகவும், […]
நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட் 28) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளிலிருந்து, 27ஆம் தேதி முதல் 10 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டிராக்டரில் இருந்து தவறி விழுந்த சிறுவன் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தாறு பகுதியில் விவசாயியான கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவுதம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அங்குள்ள பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே கிராமத்தில் வசிக்கும் மகாராஜன் என்பவர் டிராக்டர் மூலம் டேங்கில் இருந்து தண்ணீர் பிடித்து குளத்தில் இருந்து வெளியே ஓட்டி வந்துள்ளார். அப்போது அந்த டிராக்டர் மேல் கவின், […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஒர்க்ஷாப் உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வி.எம்.சத்திரம் பகுதியில் காளிதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சேரகுளத்தில் மோட்டார் சைக்கிள் ஒர்க்ஷாப் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளை பழுது பார்த்து விட்டு கடைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது சிரியந்தூர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது முன்னால் சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் […]
செல்போன் கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த வாலிபரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள லெவிஞ்சிபுரத்தில் சுந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தச்சு வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சுந்தர் தூத்துக்குடி ராஜகோபால் நகர் பகுதியில் இடம் வாங்கி அதில் ரூ.10 லட்சம் மதிப்பில் வீடு கட்டியுள்ளார். தற்போது சுந்தருக்கும் அந்த நிலத்தின் உரிமையாளருக்கும் இடம் வாங்கியது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் இடத்தின் உரிமையாளர் வீட்டுக்கு இடையூறு செய்து வந்துள்ளார். […]
12-ஆம் வகுப்பு மாணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சதாசிவபுரம் கிழக்கு காட்டு கொட்டகை பகுதியில் மகுடப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கிரிநாத்(17) என்ற மகனும், ஷர்மிளா(15) என்ற மகளும் இருக்கின்றனர். இதில் காட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் கிரிநாத் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை பள்ளியில் சிறப்பு வகுப்பு இருப்பதாக கூறிவிட்டு கிரிநாத் பள்ளிக்கு சென்றுள்ளார். […]
வீட்டை கேட்டு மாமியாரை கொடுமைப்படுத்திய மருமகள்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தார்கள். கடலூர் மாவட்டத்தில் உள்ள பரங்கிப்பேட்டை சேர்ந்த வசந்தா என்பவர் சம்பவத்தன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ஹலோ சீனியர் காவல் உதவி எண்ணின் மூலம் தொடர்பு கொண்டு புகார் கொடுத்தார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, தான் வசித்து வரும் வீட்டை தனது மகன் மற்றும் மருமகள்கள் இருவரும் கேட்டு தன்னை கொடுமை செய்வதாக கூறியுள்ளார். இதனால் இதுபற்றி உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் […]
கடலூர் அரசு மருத்துவமனையின் மேற்கூரை சிமெண்ட் காரைகள் அடிக்கடி பெயர்ந்து விழுவதால் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். கடலூர் மாவட்டத்திலுள்ள மஞ்சக்குப்பத்தில் அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. இந்த மருத்துவமனையில் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து பகுதிகளில் உள்ள நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றார்கள். பல வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்ட இந்த கட்டிடம் தற்பொழுது முறையான பராமரிப்பின்றி முற்றிலும் சேதம் அடைந்து இருக்கின்றது. அதிலும் குறிப்பாக முதல் தளத்தில் இருக்கும் அனைத்து அறைகளின் சிமெண்ட் காரைகளும் […]
அரசு பேருந்து-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஊர்க்காவல் படை வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அயன்வடமலாபுரம் பகுதியில் கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் விளாத்திகுளத்தில் ஊர்காவல்படை வீரராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வகுமார் மோட்டார் சைக்கிளில் அயன்வடமலாபுரம் கிராமத்திலிருந்து வீரப்பட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அரசு பேருந்து ஒன்று செல்வகுமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு […]
மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ராஜபாண்டி நகர் பகுதியில் தொழிலாளியான குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பழையகாயல் ரட்சன்யபுரத்தில் உள்ள உப்பு கிட்டங்கிகளில் உப்பு போடும் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் குமார் உப்பு பாக்கெட் ஓட்டுவதற்கான மின்சார போர்டில் பிளக்கை சொருகியபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். இதனை […]
சிவகங்கையில் அறிவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாமானது நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகே இருக்கும் அமராவதி புதூர் ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியில் மாவட்ட அறிவியல் ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாமானது நடந்தது. இப்பயிற்சி முகாமிற்கு கல்லூரி இயக்குனர் மீனலோச்சனி வரவேற்க கல்லூரியின் செயலர் யதீஸ்வரி சாரதேஸ்வரி பிரியா, யதீஸ்வரி ராமகிருஷ்ண பிரியா உள்ளிட்டோர் ஆசியுரை வழங்கினார்கள். மேலும் இக்கூட்டத்தில் பள்ளி மாணவர்களிடம் இயற்பியல் பாடத்தை எவ்வாறு எளிதாக புரிய வைப்பது என்பது […]
தென்காசி நகராட்சி அலுவலகத்தில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி கூட்டம் நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியானது நடந்தது. இக்கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் சாதிர் தலைமை தாங்கி உறுதி மொழியை வாசித்து நிகழ்ச்சி தொடங்கி வைத்தார். இக்கூட்டத்திற்கு துணைத் தலைவர் கே.என்.எல் சுப்பையா, ஆணையாளர் பாரிஜான் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள். தூய்மை இந்தியா திட்ட […]
நில பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காத நிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆடுகளை விவசாயி விட்டுச் சென்றார். தேனி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் காலியாக இருக்கும் இடத்தில் இன்று பகலில் இருபதுக்கும் மேற்பட்ட ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. அந்த ஆடுகள் மாலை வரை அங்கேயே இருந்தது. உரிமையாளர் யாரும் வந்து அழைத்துச் செல்லவில்லை. இதனால் தகவல் அறிந்து வந்த போலீசார் ஆடுகளை பார்வையிட்டு உரிமையாளர் யார் என விசாரணை மேற்கொண்டார்கள். போலீசார் விசாரணையில் ராயப்பன்பட்டி அருகே இருக்கும் […]
சின்மனூரில் போதை ஊசி விற்பனை செய்ததில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள சின்மனூரில் சென்ற சில நாட்களாக போதை ஊசி விற்பனை செய்ததாக போலீசார் பலரை அதிரடியாக கைது செய்தார்கள். இந்நிலையில் போலீசார் கைது செய்யப்பட்ட ஜோனத்தன் மார்க்கிடம் விசாரணை மேற்கொண்டதில் சின்னூரில் இருக்கும் அய்யனார்புரத்தைச் சேர்ந்த நிஷாந்த் சுமார் 20க்கும் மேற்பட்ட போதை மருந்து பாட்டில்களை வாங்கி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதனால் போலீசார் நிஷாந்தை […]
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகேயுள்ள அசூர் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவர் அசூர் ஊராட்சிமன்ற செயலாளராக இருக்கிறார். இவருடைய மகன் ரஞ்சித்குமார்(21) மற்றும் அதே பகுதியை சேர்ந்த தாண்டமுத்துவின் மகன் மேகநாதன்(21) ஆகிய இருவரும் எழுமூர் சாலையில் அசூர், ஆய்க்குடி கிராமத்திற்கும் இடையேயுள்ள ஏரியில் மீன் பிடிப்பதற்காக சென்றனர். இதையடுத்து அங்கு அவர்கள் ஏரியில் இறங்கி வலைவீசி மீன்பிடித்தனர். இந்நிலையில் இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது எதிர்பாராத வகையில் ஏரியில் நின்ற 2 பேர் […]
கடலூர் மாவட்டம் பரங்கிப் பேட்டை அருகேயுள்ள தோப்பிருப்பு பகுதியில் வசித்து வருபவர் விவசாயி அன்பழகன் (38). இவர் தன் தந்தை பெயரிலுள்ள நிலத்தை தனது பெயரில் பட்டா மாற்றம் செய்வதற்கு கொத்தட்டை கிராம நிர்வாக அலுவலர் பார்த்தசாரதியை தொடர்புகொண்டார். அதற்கு அவர் பேரம்பேசி ரூபாய்.10 ஆயிரம் லஞ்சமாக கேட்டதாக தெரிகிறது. ஆனால் அப்பணத்தை கொடுக்க விரும்பாத அன்பழகன் இதுகுறித்து லஞ்சஒழிப்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்படி லஞ்சஒழிப்பு போலீசார் அறிவுரைபடி, அன்பழகன் 10 ஆயிரம் ரூபாயை […]
தமிழகத்தில் மழைக்காலம் மற்றும் அவ்வப்போது திடீரென பெய்யும் மழையின் காரணமாக கூரைவீடு மற்றும் மண்சுவர் வீட்டில் இருப்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதிலும் குறிப்பாக கன மழை பெய்யும் போது மண்சுவர் வீடுகள் இடிந்து விழும் அபாயம் ஏற்படுகிறது. இதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. அந்த வகையில் தற்போது வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேச்சேரி அருகேயுள்ள சின்ன சாத்தப்பாடி பகுதியில் வசித்து வந்தவர் கோவிந்தம்மாள் […]
பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ-மாணவிகளுக்கு கல்வி கற்றுக்கொடுப்பது மட்டுமின்றி அவர்களின் திறமையை வெளிப்படுத்த அவ்வப்போது விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் மாணவ-மாணவிகள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று தங்களுக்குள் இருக்கும் திறமையை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்று வருகின்றனர். அதன்படி கோவை மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் இருக்கும் அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இடையில் மண்டல அளவிலான பல போட்டிகள் கோட்டூரில் நடந்தது. இவற்றில் வால்பாறை பகுதியிலுள்ள அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். […]
கோவை மாவட்டத்தை அடுத்த கிணத்துக் கடவு ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரியில் மத்திய அரசின் சார்பாக ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் எனும் தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான 36 மணிநேர மென் பொருள் வடிவமைக்கும் போட்டியானது நேற்று துவங்கியது. இவற்றில் மாற்றுத்திறனாளிகள் அன்றாடம் சந்திக்கும் 6 பிரச்சனைகள், மத்திய அரசின் சமூக நீதித்துறையால் பட்டியலிடப்பட்டு அவற்றுக்கான மென் பொருள் தீர்வு வழங்க மாணவர் குழுக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இப்போட்டி தொடக்கவிழா, புது டெல்லியிலிருந்து காணொலி வாயிலாக நடத்தப்பட்டது. இதில் மத்திய […]
தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்களில் மர்ம நபர்கள் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்கும் மர்ம நபர்களின் செயல் அதிகரித்து வருகிறது. மேலும் தான் பணிபுரியும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் நல்லவர்கள் போல் நாடகமாடி சிலர் பணத்தை சுருட்டுவது தற்போது அரங்கேறி வருகிறது. அந்த வகையில் இப்போது சென்னையில் வங்கி மண்டல மேலாளர் ஒருவர் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து தங்கநகைகளை கொள்ளையடித்தது அம்பலமாகியுள்ளது. அதாவது சென்னை அரும்பாக்கம் ராசாக்கார்டன் பகுதியில் தனியாருக்கு […]
சென்னை மாநகராட்சியின் சார்பாக மழைக் காலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்வழித் தடங்கள், மழைநீர் வடிகால்கள், வீடுகள்தோறும் சென்று கொசுக்கள் மற்றும் கொசுப் புழுக்களை ஒழிக்கும் பணிகளானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசுக்கள் மற்றும் கொசுப் புழுக்களை அழிக்கும் விதமாக தீவிர பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியில் 1,262 நிரந்தர பணியாளர்கள், 2,359 ஒப்பந்தப் பணியாளர்கள் என மொத்தம் 3,621 பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அத்துடன் கொசு ஒழிப்புப்பணி மேற்கொள்ள 224 மருந்து […]
நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட் 27) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 20ஆம் தேதி முதல் 10 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஊத்துக்கோட்டை அருகே மேம்பாலம் அமைக்கும் பணி ஆனது வரும் மார்ச் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டு இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டியில் தண்ணீர் திறக்கும் போதெல்லாம் ஒதப்பையில் இருக்கும் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இருக்கும் தரைப்பாலம் மூழ்கிவிடும். இந்த சமயத்தில் அவ்வழியாக செல்லும் போக்குவரத்து மாற்று பாதையில் திருப்பி விடப்படுகிறது. இந்த தருணத்தில் பொதுமக்கள் கூடுதல் கட்டணம் செலுத்தி செல்கின்றார்கள். இதனால் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க 11 கோடியே 30 லட்சம் […]
வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக ரயில்கள் ஆங்காங்கே நடுவில் நிறுத்தப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி புதிய டவுன் ரயில்வே ஸ்டேஷனில் ரயில்வே ஊழியராக கணேஷ் என்பவர் பணிபுரிகின்றார். இவர் தண்டவாள கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த பொழுது வாணியம்பாடி புதியடவுன் ரயில்வே கேட் பகுதியில் சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது தண்டவாளத்தில் இருந்து அதிகம் சத்தம் கேட்டதால் அப்பகுதிக்கு சென்று பார்த்தபொழுது அந்த இடத்தில் சுமார் ஒரு அடி அளவில் விரிசல் […]
கொரோனாவிற்கு பின்னர் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு அதிகரித்து இருப்பதாக அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிர்வாக இயக்குனர் மகேசுவரன் கூறியுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு வனத்துறை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் சூழல் மேம்பாட்டு கூட்டம் சார்பாக அயல்நாட்டு வேலை வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு, சூழல் இளையோர் விளையாட்டு மன்றம் தொடங்குதல், விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்க மருந்துகள் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் வரவேற்க […]
இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சித்த மருத்துவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் பகுதியில் பத்மநாபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்த மருத்துவரான ராபின்சன் என்ற மகன் உள்ளார். இவர் விளாத்திகுளத்தில் தனியார் ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். இந்நிலையில் விளாத்திகுளம் அருகிலுள்ள கிராமத்தில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் அவருடைய ஆண் குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாததால் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது மருத்துவர் ராபின்சன் குழந்தைக்கு சிகிச்சை அளிப்பது போன்று நடித்து இளம்பெண்ணுக்கு […]
ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் டிரைவர் உள்பட 2 பேர் பலத்த காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டினம் பகுதியில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆட்டோ டிரைவரான ஹேம்குமார் என்ற மகன் உள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். இந்நிலையில் ஹேம்குமார் காயல்பட்டினத்தில் இருந்து ஆறுமுகநேரிக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது காயல் பட்டினம் முத்தாரம்மன் கோவில் தெருவில் வசிக்கும் இசக்கிமுத்து என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், ஹேம்குமார் […]
தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் பகுதியில் சிவக்குமார் என்பவர் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இந்நிலையில் சிவக்குமாருக்கு முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சிவக்குமார் தனது 2 குழந்தைகளுடன் குடும்பத்தை விட்டு வெளியேறி 2-வதாக ராஜி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் சிவகுமார் தினமும் மது அருந்திவிட்டு 2-வது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து திடீரென சிவக்குமார் வீட்டிற்குள் சென்று […]