நெல்லையில் மகனே தந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே இருக்கும் ஒரு தனியார் விடுதியில் தங்கி இருந்த 50 வயது மதிப்புதக்க ஒருவர் நேற்று நள்ளிரவில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். பின் […]
Tag: மாவட்ட செய்திகள்
படகில் கடலுக்குள் தவறி விழுந்து மாயமான மீனவரை கடலோரம் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பெரியசாமிபுரம் கிராமத்தில் தவமணி என்பவர் இருந்து வருகிறார். இவருக்கு மீனவரான எமில் லாரன்ஸ் என்ற மகன் உள்ளார். இவர் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மரியபுஷ்பம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரேச்சல், லியான் என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக தனபால் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடற்கரையிலிருந்து கேரள மாநிலம் […]
கல்லூரி மாணவிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தொட்டியத்திலிருந்து நாமக்கலுக்கு தினமும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக டவுன் பேருந்து இயக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென அந்த பேருந்தானது நிறுத்தப்பட்டதாக சொல்லப்படுகின்றது. இந்நிலையில் அந்த பேருந்து மூலம் கட்டணம் இல்லாமல் பயணம் செய்த அரசு மற்றும் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் நேற்று திருச்சி-நாமக்கல் சாலையில் இருக்கும் கார்த்திகைபட்டி பிரிவு ரோடு அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். […]
தாயுமானசுவாமி கோவிலுக்கு சொந்தமான ஏழு கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலுக்கு சொந்தமாக திருவெறும்பூர் எல்லக்குடி கிராமத்தில் ஆறு இடங்களில் 3 ஏக்கர் 49 சென்ட் நிலம் பல வருடங்களுக்கு முன்பாக தனியாருக்கு குத்தகை விடப்பட்ட நிலையில் குத்தகை பாக்கி செலுத்தாத காரணத்தினால் திருச்சி வருவாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் நீதிமன்றம் உரிய தொகையை செலுத்த உத்தரவிட்டும் அந்த தொகை செலுத்தப்படாத நிலையில் செயலாக்க வருவாய் ஆய்வாளரால் மேற்படி […]
தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் பகுதியில் சுடலைமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துக்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு செல்வி என்ற மனைவியும், ஒரு மகன், 3 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் முத்துக்குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் முத்துக்குமாரை மனைவி மற்றும் பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் மதுபோதையில் முத்துக்குமார் மோட்டார் சைக்கிளை ஓட்டி வரும்போது […]
ஆண்டிபட்டி அருகே தற்பொழுது சிமெண்ட் கலவையால் தடுப்பணை கட்டப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி அருகே இருக்கும் மரிக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட கோத்தலக்குண்டு மலை அடிவாரத்தில் வண்ணானூத்து ஓடை இருக்கின்றது. இந்த ஓடையின் குறுக்கே சென்ற 2020 ஆம் வருடம் ஜூலை மாதம் சிமெண்ட் கலவைக்கு பதிலாக செம்மண் கலவையால் தடுப்பணை கட்டப்பட்டது. இதனால் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் இரவோடு இரவாக தரமற்ற தடுப்பணை அகற்றப்பட்டது. இதனால் மாவட்ட ஆட்சியர் தடுப்பணை கட்டுவதற்கான ஒப்பந்ததாரரிடம் […]
போதை மருந்து விற்பனையில் 100 இடைத்தடகர்கள் ஈடுபட்டு வந்ததாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள சின்மனூரில் போதை ஊசி விற்பனை மற்றும் பயன்படுத்திய ஆறு பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்த நிலையில் கைதானவர்களில் ஜோனர்த்தன் மார்க் என்பவர் போதை மருந்து விற்பனையை செய்து வந்திருக்கின்றார். இவர் இதற்காக ஒரு தனியார் மருந்து விற்பனை நிறுவனம் ஆரம்பித்து அந்நிறுவனத்தின் பெயரில் ஊக்கம் மருந்துகளை மொத்தமாக கொள்முதல் செய்து பல மாவட்டங்களுக்கும் புதுச்சேரி […]
அரியலூர் தா.பழூர் அருகேயுள்ள சோழமா தேவி கிராமத்தில் வசித்து வருபவர் விவசாய கூலிதொழிலாளி ராஜேந்திரன். இவருக்கு ராஜாமணி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினரின் மகன் கார்த்தி (24). இவர் திருவள்ளூரிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். சென்ற 20ஆம் தேதி இரவு திருவள்ளூரிலிருந்து வந்தவாசி நோக்கி தன் நண்பர் செந்தில் என்பவருடன் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத வகையில் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின் பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 […]
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் புது தெருவில் வசித்து வருபவர் நடராஜன். இவருடைய மகன் தினேஷ் (27) கடந்த 2 வருடங்களுக்கு முன் கடலூர் மாவட்டம் எள்ளேரி கிராமத்திலுள்ள உறவினர் சச்சிதானந்தத்தின் மகள் வைஷ்ணவியை (24) திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு 1 வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. இதில் தினேஷ் சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது அவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தினேசுக்கும், வைஷ்ணவிக்கும் […]
திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகேயுள்ள கூத்தூரில் செயல்படும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து இன்று காலை ஸ்ரீரங்கத்திலிருந்து 50 மாணவர்களுடன் கூத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தை கண்ணன் என்பவர் ஓட்டிவந்தார். இதையடுத்து பேருந்து ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் பாலத்தில் இறங்கும் போது அதன் வேகம் அதிகமாக இருந்துள்ளது. இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக ஓட்டுநர் கண்ணனால் பேருந்து ஓட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் ஓரத்தில் இருந்த ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் […]
இதர பிற்படுத்தப்பட்டவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சேர்ந்த 15ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டமானது மத்திய அரசு வாயிலாக செயல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தில் பயனடைய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் மற்றும் சீர் மரபினர் ஆக இருக்க வேண்டும். இதையடுத்து பெற்றோர், பாதுகாவலர்கள் ஆண்டு வருமானம் ரூபாய்.2½ லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அத்துடன் https://yet.nta.ac.in என்ற இணையதள முகவரியில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 (அல்லது) 11-ம் […]
தமிழகத்தில் மோசடி சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் மோசடி செய்யும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த மோசடி வலைக்குள் தெரியாமல் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஒரு மோசடி சம்பவம் அரங்கேறி உள்ளது. அதாவது, நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலம் அருகில் குச்சிபாளையத்தில் வசித்து வருபவர் விவசாயி கே.சபரிநாதன் (35) கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது “ஆகாஷ் சுருதி ஸ்பைஸ் […]
நாளுக்கு நாள் மோசடி சம்பவங்களானது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க சைபர் கிரைம் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் மக்கள் மோசடி வலைக்குள் சிக்கி ஏமார்ந்து விடுகின்றனர். அந்த வகையில் தற்போது காசோலைகளைத் திருடி ஊழியர் ஒருவர் மோசடி செய்த சம்பவம் கோவையில் அரங்கேறி உள்ளது. கோவை-திருச்சி சாலையில் தனியார் கார் விற்பனை ஷோரூம் இருக்கிறது. இங்கு திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வெங்கட சுப்பிரமணி (45) என்பவர் கணக்குப்பிரிவு ஊழியராக பணிபுரிந்து வந்தார். இதையடுத்து இவர் […]
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்குட்பட்ட கோட்டூர் குறுமைய அளவிலான விளையாட்டு போட்டிகள், அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இந்த போட்டியில் அரசு, தனியார் பள்ளிகள் உட்பட 31 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர். 14 வயதுக்கு உட்பட்டோருக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் மாணவிகள் பிரிவில் கோட்டூர் அரசு பெண்கள் பள்ளியானது முதலிடம் பிடித்தது. இதையடுத்து மாணவர்கள் பிரிவில் ஹேண்ட் பால் போட்டியில் 14, 17, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் கோட்டூர் […]
ஈரோடு அருகேயுள்ள வீரப்பம்பாளையத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சென்ற 2020-ம் வருடம் செப்டம்பர் மாதம் 8-ஆம் தேதி காவல்துறையினர் அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணை தடுத்துநிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்தபெண் வந்த மோட்டார்சைக்கிளில் 16 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் காவல்துறையினர் அப்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர், ஈரோடு பள்ளி பாளையத்தை சேர்ந்த ராஜசேகர் […]
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பாக மக்கும், மக்காத குப்பைகள் தரம்பிரித்தல் தொடர்பாக கண்காட்சி நடந்தது. இக்கண்காட்சிக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் தலைமை வகித்தார். அத்துடன் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக பால்வளத் துறை அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான ஆவடி சா.மு.நாசர், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.மஸ்தான் போன்றோர் ரிப்பன்வெட்டி துவங்கி வைத்து மக்கும், மக்காத குப்பை கண்காட்சியை […]
நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட் 26) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 20ஆம் தேதி முதல் 10 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாகர்கோவிலில் ஒரு வழி பாதையில் தடையை மீறி வந்த 50 ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் இருக்கும் ஒரு வழி சாலைகளில் தடையை மீறி ஆட்டோக்கள் செல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததின் பேரில் போலீஸ்சார் நேற்று மாலை அவ்வை சண்முகம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டார்கள். அப்பொழுது கட்டபொம்மன் சந்திப்பிலிருந்து மீனாட்சிபுரம் நோக்கி ஒரு வழி பாதையில் ஏராளமான ஆட்டோக்கள் வந்தது. இதனை போலீசார் தடுத்து நிறுத்தி அனைத்து ஆட்டோக்களையும் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு […]
நீர்நிலையை ஆக்கிரமித்து இருக்கும் வீடுகளை அகற்றுவதாக அதிகாரிகள் கூறியதால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். தற்பொழுது தமிழகத்தில் நீர்நிலைகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் குமரி மாவட்டத்தில் இருக்கும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதன்படி நாகர்கோவில் புத்தேரி குளத்தின் கரையில் மேல கலுங்கடி பகுதியில் 25க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்றது. இந்த வீடுகள் அனைத்தும் ஆக்கிரமிப்பில் கட்டியிருப்பதாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு மூன்று நோட்டீஸ் […]
உளுந்தூர்பேட்டை அருகே பள்ளி தலைமை ஆசிரியரை தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் சேந்தமங்கலம் அரசு தொடக்கப்பள்ளியில் சீனிவாசன் என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். இவரிடம் அதே கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி அந்தோணி ராஜ் என்பவர் தனது மகனுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்குமாறு கேட்டு இருக்கின்றார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் அந்தோணி ராஜ் ஆத்திரமடைந்து சீனிவாசனை ஆபாசமாக திட்டி தாக்கியதாக சொல்லப்படுகின்றது. பின் இதுகுறித்த […]
அரசு பள்ளி ஆசிரியை கண்ணீர் மல்க அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் பகுதியில் உள்ள அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் கண்ணீர் மல்க பேசிய வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, ஞாயிற்றுக்கிழமையான இன்று, நான் எழுதுவதா இல்லை, பள்ளி செல்வதற்கு தயார்படுத்துவதா, அம்மாவை கவனிப்பதா, சமையல் செய்வதா, நாளை, மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும். என்ன செய்வது என்று […]
கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி சிந்தாமணி நகரில் தச்சு தொழிலாளியான பேச்சிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் கடலையூர் ரோடு பகுதியில் உள்ள பழைய அரசு மாணவர் விடுதிக்கு வேலைக்காக சென்றிருந்தார். அப்போது அங்கு இருந்த கிணற்றுக்குள் இருந்து ஒரு பெண்ணின் குரல் கேட்டுள்ளது. இதனையடுத்து பேச்சிமுத்து அந்தக் கிணற்றில் எட்டி பார்த்துள்ளார். அப்போது கிணற்றின் உள்ளே ஒரு பெண் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தார். அதன்பின் […]
கள்ளக்குறிச்சியில் அண்ணன்-தங்கை இடையே ஏற்பட்ட தகராறில், தந்தையே மகனை கடப்பாரையால் குத்திக் கொலை செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எலியத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மயில் என்பவர் மீன்பிடி தொழிலை கேரளாவில் செய்து வருகின்றார். இவரின் முதல் மனைவி சந்திரா. இவர்களுக்கு சசிகுமார் என்ற மகன் இருக்கின்றார். சென்ற 25 வருடங்களுக்கு முன்பாக சந்திரா இறந்து விட்டதால் மயில் இரண்டாவதாக வசந்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திவ்யா, தீபிகா உள்ளிட்ட இரண்டு மகள்கள் […]
காதல் மனைவியை மீட்டுத் தரக்கோரி வாலிபர் காவல்நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாநகர் பகுதியில் சதீஷ்சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவர் முத்தையாபுரம் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, நான் தூத்துக்குடியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறேன். கடந்த சில வருடங்களாக நானும் கடலூர் மாவட்டத்தில் வசிக்கும் நவ்சின்பானு என்பவரும் காதலித்து வந்தோம். அதற்கு நவ்சின்பானு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் நவம்பர் […]
உளுந்தூர்பேட்டை அருகே மின் மோட்டாரை திருடிய ஆசாமிக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் அயன்வேலூர் கிராமத்தில் அண்மைக்காலமாகவே மின் மோட்டார்கள் திருடப்பட்டு வந்தது. இதனால் கிராம மக்கள் குழுவாகப் பிரிந்து இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டார்கள். இந்நிலையில் பரமசிவம் என்பவரின் வீட்டின் முன்பு இருந்த மின்னோட்டாரை அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் திருடிக் கொண்டிருக்கும் பொழுது பொதுமக்கள் அவரை கையும் களவுமாக […]
கள்ளக்குறிச்சி அருகே திருமணமான நான்கு மாதத்தில் கர்ப்பிணி பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விளம்பார் கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி(25) என்பவர் சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மம்பாளையத்தை சேர்ந்த நித்யா(21) என்பவரை சென்ற 4 மாதத்துக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது நித்யா இரண்டு மாத கர்ப்பிணியாக இருப்பதால் அவருக்கு அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவர் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டு சென்ற ஒரு வாரத்திற்கு முன்பாக […]
மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய இரண்டு பேரை போலீசார் கைது செய்தார்கள். தமிழகத்தில் அடிக்கடி கஞ்சா கடத்தல், போதைப்பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்கள் நடந்து வருகின்றது. இதனால் போலீஸ்சார் ஆங்காங்கே சோதனையில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பர்கூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீஸ்சார் கர்நாடக எல்லைப் பகுதியில் சோதனையில் ஈடுபட்ட பொழுது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் சந்தேகப்படும்படி இருந்தார்கள். இதனால் போலீஸ்சார் அவர்களிடம் சோதனை மேற்கொண்டதில் இரண்டு […]
ஊஞ்சலூரில் அரசு டவுன் பேருந்தை பெண்கள் சிறைபிடித்தார்கள். கொடுமுடியில் இருந்து ஈரோட்டுக்கு 43 ஆம் எண் கொண்ட அரசு டவுன் பேருந்து இயக்கப்பட்டு வருகின்ற நிலையில் நேற்று பகல் 11 மணி அளவில் ஈரோட்டில் இருந்து கொடுமுடிக்கு வந்த இந்த பேருந்து ஊஞ்சலூர் அருகே இருக்கும் மணிமுத்தூர் பேருந்து நிறுத்தத்தில் பெண்கள் சிலர் நின்று கொண்டிருக்கும் பொழுது நிற்காமல் சென்றுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் நடந்தே ஊஞ்சலூர் பேருந்து நிறுத்தத்தில் வந்து காத்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது […]
திருச்சி மாவட்டம் முசிறி- துறையூர் ரோடு பகுதியில் வசித்து வந்தவர் பரமசிவம் (55). மின்வாரிய ஊழியரான இவர் முசிறி-துறையூர் சாலையில் மோட்டார்சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். இந்நிலையில் எதிரே பிரதீப், சஞ்சய் போன்றோர் ஓட்டிவந்த மோட்டார்சைக்கிள் பரமசிவம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் பலத்த காயமடைந்த பரமசிவம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அத்துடன் இந்த விபத்தில் காயமடைந்த பிரதீப், சஞ்சய் போன்றோர் சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனையில் […]
திருச்சி மாவட்டம் தா.பேட்டையை அடுத்த ஆராய்ச்சி ஊராட்சி சக்கம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் கந்தசாமி-ஜோதி தம்பதியினர். இவர்களின் மகன் முத்து என்ற மோகன்ராஜ் (24). பட்டதாரி வாலிபரான இவர் துறையூரிலுள்ள ஒரு பேக்கரில் கூலிவேலை செய்து வந்தார். நேற்று மாலை மோகன்ராஜ் சகதொழிலாளர்களுடன் புளியஞ்சோலை அருவிக்கு சென்றுள்ளார். அங்கு புளியஞ்சோலை நாட்டாமடு பகுதியிலுள்ள அருவியில் மோகன்ராஜ் சக தொழிலாளர்களுடன் குளித்தார். அண்மையில் பெய்த மழையால் அருவியில் தண்ணீர் அதிகளவில் வந்தது. இந்நிலையில் அபாயம் என வாசகம் எழுதப்பட்ட […]
2022-2023 ஆம் கல்வி ஆண்டுக்கான 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு பாரதியார் மற்றும் குடியரசுதின விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு கல்வி மாவட்டத்தில் 8 வட்டங்களில் கால் பந்து, கையுந்து பந்து, கபடி, ஆக்கி, கூடைப்பந்து, மேஜைப்பந்து, எறிபந்து, கைப்பந்து, இறகுப்பந்து, பூப்பந்து, கோ-கோ, மென்பந்து போன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று கால்பந்து போட்டியானது நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை […]
திண்டுக்கல் அருகேயுள்ள சிறுமலை தாழைக்கடை பகுதியில் வசித்து வருபவர் முத்தன் (65). இவர் சிறுமலை வனப் பகுதியில் புனுகு பூனையை வேட்டையாடி இறைச்சியை தன் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி உதவி வனப்பாதுகாவலர் நாகையா தலைமையிலான வனத்துறையினர் முத்தனின் வீட்டில் நேற்று முன்தினம் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் அந்த வீட்டிற்குள் அந்த பூனையின் உடல் பாகங்களை காய வைத்திருந்ததை வனத்துறையினர் கண்டறிந்தனர். இதையடுத்து முத்தனை பிடித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். […]
திண்டுக்கல் மாநகராட்சியில் மொத்தம் 48 வார்டுகள் இருக்கிறது. அவற்றில் 39 வார்டுகளில் ஆத்தூர் காமராஜர்அணை குடிநீர், காவிரி கூட்டு குடிநீர் போன்றவை மாறிமாறி விநியோகம் செய்யப்படுகிறது. எனினும் மீதம் உள்ள 9 வார்டுகளில் காவிரி கூட்டு குடிநீர் மட்டுமே வழங்கப்படுகிறது. இதன் காரணமாக அந்த வார்டுகளில் ஆத்தூர் காமராஜர் அணை குடிநீர் கிடைக்காத நிலை இருக்கிறது. அத்துடன் குழாய் உடைப்பு உள்ளிட்ட காரணங்களால் காவிரி கூட்டுகுடிநீர் விநியோகம் தடைபட்டால் 9 வார்டுகளிலும் குடிநீர் வழங்க முடியாத நிலை […]
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவிலிருந்து சித்தரேவு, பெரும்பாறை, தடியன்குடிசை, குப்பம்மாள்பட்டி, கே.சி.பட்டி வழியே தினசரி காலை 7:15 மணிக்கு அரசு பேருந்து இயக்கப்படுகிறது. அந்த வகையில் நேற்று காலை இந்த பேருந்து புறப்பட்டு சென்றது. இந்த பேருந்தில்தான் மலைத் தோட்டங்களுக்கு பணிக்கு வரும் தொழிலாளர்கள், பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பயணம் மேற்கோள்கின்றனர். இதன் காரணமாக இந்த பேருந்தில் எப்போதும் கூட்டம் அதிகமாக காணப்படும். இதற்கிடையில் தடியன் குடிசையிலிருந்து கருப்புசாமி கோயில் போகும் சாலை வரையிலும் […]
தேசிய கடல்சார்தேடுதல் மற்றும் மீட்பு தினத்தை முன்னிட்டு கடலில் சிக்கிதவிப்பர்களை மீட்கும் ஒத்திகை நிகழ்ச்சியானது சென்னை மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை பகுதியில் நேற்று மாலை 2வது நாளாக நடந்தது. அப்போது கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடுபவர்கள் எப்படி காப்பாற்றப்படுகிறார்கள்..? என்பதை கடலோர காவல்படையினர் ஒத்திகை வாயிலாக கடற்கரையில் கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் செய்துகாண்பித்தனர். இந்நிலையில் கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் கடல் மட்டத்திலிருந்து 20 மீட்டர் உயரத்தில் பறந்தது. அந்த ஹெலிகாப்டரிலிருந்த கடலோர காவல்படைவீரர் […]
சென்னையில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின்படி கஞ்சா மற்றும் பொருட்களை கடத்தி வருபவர்கள், விற்பனை செய்பவர்களை கண்காணித்து காவல்துறையினர் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நுங்கம்பாக்கம் சுதந்திரதின பூங்கா அருகில் சந்தேகத்துக்கு உரிய அடிப்படையில் நின்றுக்கொண்டிருந்த பெண் உள்பட 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் வைத்திருந்த பையையும் காவல்துறையினர் சோதனையிட்டனர். அதில் 9 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. இதை ஆந்திராவிலிருந்து அவர்கள் கடத்தி வந்திருக்கின்றனர். […]
சென்னை மயிலாப்பூர் கேசவ பெருமாள் கோயில் தெருவில் வசித்து வருபவர் துர்காம்பாள் (74). இவர் சென்ற 15 ஆம் தேதியன்று மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்திருந்தார். அவற்றில் அவர் கூறியிருப்பதாவது, என் கணவர் குப்புசாமி (90) வயது முதிர்வு காரணமாக சென்ற மாதம் 3-ம் தேதி இறந்துவிட்டார். மேலும் மூத்த மகன் சென்ற வருடம் உயிரிழந்துவிட்டார். இதற்கிடையில் இளையமகன் ராமகிருஷ்ணன் திருமணமாகி அமெரிக்காவில் குடியேறி விட்டான். இதில் ராமகிருஷ்ணன் தந்தை இறப்புக்கு கூட அவன் […]
நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட் 25) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 20ஆம் தேதி முதல் 10 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சிறுமியை இன்ஸ்டாகிராமில் காதலித்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் 16 வயது சிறுமி ஒருவர் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தி வருகின்றார். அந்த சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சென்னையை சேர்ந்த 19 வயது வாலிபர் அறிமுகமாகியுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 2 வருடங்களாக இருவரும் பழகி வந்துள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்த அந்த வாலிபர் சிறுமியை சந்தித்து பேசியதுடன் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்த சிறுமியின் தாய் புதுக்கோட்டை […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். விநாயகர் சதுர்த்தி விழாவானது வருகின்ற 31-ம் தேதி கொண்டாடப்படுகின்றது. இதற்கு பல வழிமுறைகள் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பொதுமக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கின்றது. கடல், ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் நமக்கு குடிநீர் ஆதாயத்தை தருகின்றது. ஆகையால் நீர்நிலைகளை […]
செல்போன் கடையில் திருடி சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதுக்கோட்டை பாக்கியலட்சுமி நகர் பகுதியில் முத்துக்குமரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் புதுக்கோட்டையில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் முத்துக்குமரன் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். அதன்பின் மறுநாள் காலையில் வந்து பார்த்த போது கடையின் ஷட்டரில் போடப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு முத்துக்குமரன் அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த செல்போன், […]
கருங்கல் அருகே நண்பர் வீட்டில் குத்துவிளக்கு திருடிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல் அருகே இருக்கும் மாங்கரை கோட்டைவிளையைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் வீட்டிலிருந்த ஏழரை கிலோ எடை இருக்கும் வெண்கல குத்து விளக்கு மாயமானது. இதை மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றது தெரிய வந்தது. இதனால் விஜயகுமார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்கள். இந்நிலையில் தனிப்படை […]
சமையல்கார பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள தக்கலை அருகே இருக்கும் முளகுமூடு பகுதியைச் சேர்ந்த சாந்தகுமாரி என்பவர் சமையல் வேலை செய்து வருகின்றார். இவர் நேற்று மதியம் தக்கல் பேருந்து நிலையம் அருகே நடந்து கொண்டிருந்த பொழுது இவரை பின் தொடர்ந்து வந்த பெண் ஒருவர் அவர் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றார். ஆனால் அதிர்ச்சி அடைந்த அவர் […]
பூதப்பாண்டியில் பேரூராட்சிக்கு சொந்தமான கடைகள் ஏலம் விடப்பட்டபொழுது நடந்த தகராறில் 11 பேர் கைது செய்யப்பட்டார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட திட்டுவிளையில் பேரூராட்சிக்கு சொந்தமான பொது வணிக வளாகம் இருக்கின்றது. இங்கு வாடகை தொகையை அதிகரித்து ஏலம் விடப் போவதாக பேரூராட்சி நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்ட நிலையில் எதிர்ப்பு தெரிவித்து அங்கு கடை நடத்திவரும் வியாபாரிகள் மற்றும் அனைத்து கட்சியினர் நேற்று முன்தினம் மறியலில் ஈடுபட்டார்கள். அவர்களை போலீசார் கைது செய்து மாலையில் […]
நாகர்கோவிலில் மாவட்ட மருத்துவர் சமுதாய மறுமலர்ச்சி மாநாடு நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் நேற்று மாவட்ட மருத்துவர் சமுதாய மறுமலர்ச்சி மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு கூட்டமைப்பு மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்க மாவட்ட செயலாளர் சுரேஷ் வரவேற்று பேசினார். மேலும் இதில் மாநகராட்சி மேயர் மகேஷ், இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட பலர் பங்கேற்றார்கள். இந்த மாநாட்டில் மருத்துவ சமுதாய மக்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் தனி உள் ஒதுக்கீடு வழங்க […]
கனியாமூர் கலவர வழக்கில் போலீசார் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியவர் உள்பட மேலும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை செய்து சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து வருகின்றார்கள். இந்நிலையில் வீடியோ ஆதாரத்தின் மூலம் பள்ளியில் நடந்த கலவரத்தின் போது வாட்ஸ் அப் குழுவில் வன்முறையை தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு காரணமாக […]
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் கடல் போல காட்சி அளிக்கின்றது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று முன்தினம் இடி மின்னலுடன் இரவில் பலத்த மழை பெய்தது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. தற்பொழுது நீர் ஆதாரமாக இருக்கும் ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைபாக்கம், நேமம் உள்ளிட்ட ஏரிகளும் நீர் நிரம்பி காணப்படுவதால் இந்த ஏரிகளில் இருந்தும், மழை நீருடன் கிருஷ்ணா நதி நீரும் வந்து கொண்டிருப்பதால் […]
மணிமங்கலம் பகுதியில் முன்விரோதம் காரணமாக மர்ம கும்பல் ஒன்று அறிவாளால் இரண்டு பேரை வெட்டியதில் பரிதாபமாக உயிரிழந்தார்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள படப்பை அடுத்திருக்கும் மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் விக்னேஷ் மற்றும் சுரேந்தர். இவர்கள் இருவரும் மணிமங்கலம் அருகே இருக்கும் சிவன் கோவில் பகுதியில் இருந்த பொழுது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் இருவரையும் சரமாரியாக வெட்டி விட்டு அங்கே இருந்து தப்பி சென்றார்கள். இதுப்பற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் இருந்த […]
தென் இந்தியாவின் மிகப் பெரிய மண்அணை எனும் பெருமை உடைய பவானி சாகர் அணையினுடைய நீர் மட்டம் உயரமானது 105 அடியாக கணக்கிடப்படுகிறது. நீலகிரி மலைப் பகுதியிலிருந்து வரும் பவானி ஆறும் கூடலூர் மலைப் பகுதியிலிருந்து வரும் மோயாரும் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து ஆதாரங்களாக திகழ்கிறது. இந்த அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாயநிலங்களும், கீழ்பவானி வாய்க்கால் வாயிலாக சுமார் 35 ஆயிரம் […]
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள்காப்பகத்தில் பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், கேர்மாளம் உட்பட மொத்தம் 10 வனச்சரகங்கள் இருக்கிறது. இந்த வனச்சரகங்களுக்கு உட்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை ஆகிய வன விலங்குகள் வசித்து வருகின்றன. அத்துடன் சத்தியமங்கலம் புலிகள் காப்பத்திற்கு உட்பட்ட வனப்பகுதி வழியாகத்தான் சத்தியமங்கலம்- மைசூரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையில் அடர்ந்த வனப் பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளை உடைய திம்பம் மலைப்பாதையானது இருக்கிறது. இம்மலைப்பாதையில் இரவுவேளையில் […]