கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட பகுதி நீர்நிலைகளிலுள்ள கட்டிடங்கள் மற்றும் வீடுகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில் கடலூர் ரோடு இந்திராநகரில் 4½ ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள முல்லா ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 66 கடைகள், வீடுகள் மற்றும் ஆலடி ரோட்டில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 95 கடைகள், வீடுகளை அகற்றுவதற்காக விருத்தாசலம் வருவாய்த்துறையினர் அளவீடு செய்தனர். இவற்றில் சென்ற சில நாட்களுக்கு முன் 2 வீடுகளின் சுற்றுச் சுவர், ஒரு வீடு […]
Tag: மாவட்ட செய்திகள்
கோவை மாவட்டம் கிணத்துக் கடவு பேரூராட்சியிலுள்ள குழந்தைகள் மையத்திற்கு சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் நேற்று திடீரென்று வந்தார். அப்போது அவரை சிறுமிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து அவர் குழந்தைகளுக்காக தயாரிக்கப்பட்ட உணவுகளை ஆய்வு மேற்கொண்டு சாப்பிட்டு பார்த்தார். அத்துடன் குழந்தைகளுக்கும் மதிய உணவு பரிமாறினார். அதன்பின் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவு சாப்பாடு எப்படி இருக்கிறது என மாணவ -மாணவிகளிடம் கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து சிங்கராம்பாளையம் பிரிவிலுள்ள சரணாலயத்தில் […]
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், என்.சந்திராபுரம் ஊராட்சியிலுள்ள சாலைப் புதூர் கிராமத்தில் 200க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள அங்கன்வாடி மையத்தில் 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இதற்கிடையில் அங்கன்வாடி மையம் ஓட்டுகள் வேய்ந்த சிறிய வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அத்துடன் இங்கு படிக்கும் குழந்தைகளுக்கு மதிய உணவு தயாரித்து கொடுக்க சமையல்கூடம் இல்லை. இதன் காரணமாக அருகிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் திறந்த வெளியில் குழந்தைகளுக்காக உணவு […]
சென்னை முடிச்சூர் ரோடு வரதராஜபுரத்தில் வசித்து வருபவர் தம்பி. இவருக்கு ஹன்னா நேசமணி (59) என்ற மனைவி இருக்கிறார். இதில் ஹன்னா நேசமணிக்கு கணவரின் மருத்துவ செலவு மற்றும் குழந்தைகளின் கல்விச்செலவுக்காக பணம் தேவைப்பட்டது. இந்நிலையில் ஹன்னா நேசமணிக்கு உறவினர் ஒருவரின் வாயிலாக ரியல் எஸ்டேட் புரோக்கர் சுந்தரசாமி (50) என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இதையடுத்து சுந்தரசாமி வீட்டு பத்திரத்தின் பேரில் கடன் தருவதாக ஹன்னா நேசமணியிடம் கூறியுள்ளார். இதன் காரணமாக அவர் தன் வீட்டு பத்திரத்தை […]
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வயலூர் காரத்திட்டு பகுதியில் வசித்து வந்தவர் நித்தியானந்தம் (28). இவர் கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வேலை காரணமாக கல்பாக்கம் அடுத்த காத்தான் கடை பகுதியிலுள்ள சாலை வளைவில் போகும்போதும் எதிர்பாராத வகையில் நித்தியானந்தம் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது எதிரேவந்த மணல் லாரி மோதியது. இதனால் நித்தியானந்தம் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தகவலறிந்து வந்த காவல்துறையினர் […]
சென்னை அயனாவரம் என்எம்கே தெருவில் வசித்து வந்தவர் விஜய் (24). இவரது தந்தை இறந்துவிட்டார். இதனால் விஜய் தனது தாய் மற்றும் தங்கையுடன் வசித்து வந்தார். இதில் விஜய் அதே தெருவிலுள்ள பிரபல மோட்டார்சைக்கிள் விற்பனை நிலையத்தின் சர்வீஸ் மையத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக விஜய் தான் பணிபுரிந்து வந்த கடையில் உதிரி பாகங்களை திருடி அதனை பல இடங்களில் விற்று வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த கடையின் பொதுமேலாளர் திலீப் என்பவர் விஜய் […]
பாம்பு கடித்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவினாசிபாளையம் புதூர் ஜெ.நகரில் சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சந்திரன் தனது வீட்டின் அருகில் உள்ள தண்ணீர் தொட்டி அருகில் நடந்து சென்று கொண்டிருந்த போது ஒரு பாம்பு அவரது காலில் கடித்துவிட்டது. இதனையடுத்து சந்திரன் தனது குடும்பத்தினரிடம் இது குறித்து கூறியுள்ளார். அதன்பின் சந்திரனை அவரது குடும்பத்தினர் ஒரு ஆட்டோ மூலம் காங்கேயம் அரசு […]
லாரி மீது கார் மோதிய விபத்தில் டி.வி. மெக்கானிக் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆரோட்டுப்பாறைப் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜய் என்ற மகன் இருந்துள்ளார். இவர் டி.வி. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விஜய் அவரது நண்பர்களான அதே பகுதியில் வசிக்கும் ஆனந்தகுமார், திவான், நேதாஜி, தரணிஷ் ஆகியோருடன் காரில் ஈரோட்டிலிருந்து கூடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது நாதம்பாளையம் மேம்பாலம் அருகில் வந்து கொண்டிருந்தபோது […]
பந்தலூர் அருகே காட்டு யானை தேயிலைத் தோட்டத்தில் புகுந்து அட்டகாசம் செய்ததால் தொழிலாளர்கள் பீதி அடைந்தார்கள். நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் அருகே இருக்கும் இரும்புபாலம் பகுதியில் நேற்று முன்தினம் காட்டு யானை புகுந்து அட்டகாசம் செய்தது. அப்போது அந்த யானை பந்தலூர் அரசு மருத்துவமனை அருகே நோயாளிகளை ஏற்றுச் சென்ற 108 ஆம்புலன்ஸை நடுவழியில் மறித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனசரகர் அங்கு சென்று காட்டு யானையை விரட்டி அடித்தார்கள். இதனால் ஆவேசம் அடைந்த காட்டு யானை […]
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அறிவொளி நகரில் சுந்தரலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவரஞ்சன் என்ற மகன் உள்ளார். இவர் வீரபாண்டி அருகில் உள்ள தனியார் பனியன் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். இதனையடுத்து இருவரும் மாலை திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். […]
திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள படப்பகுளம் பகுதியில் ரோஸ்மேரி என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவரும் மகளும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டனர். இதனால் ரோஸ்மேரி தனது மகன் வினுராஜூடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த வினுராஜூவை அவரது தாயார் கண்டித்துள்ளார். மேலும் பல்வேறு இடங்களில் பெண் பார்த்தும் வினுராஜூக்கு சரியான வரன் அமையவில்லை. […]
மர்ம விலங்கு கடித்து ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் நல்ல தம்பி என்பவர் வசித்து வருகிறார். இவர் வில்லிசேரி குளம் பகுதியில் இருக்கும் தனக்கு சொந்தமான இடத்தில் மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை பட்டிக்கு சென்று பார்த்த போது 6 ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை கண்டு நல்லதம்பி அதிர்ச்சியடைந்தார். ஆடுகளின் கழுத்து பகுதியில் காயம் இருந்தது. மர்ம விலங்கு ஏதோ கடித்ததால் […]
வட மாநில தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டி அருகே இருக்கும் திடல் தடாகம் மலையடிவாரத்தில் உள்ள செங்கல் சூலையில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த குர்ஹட்டிகிரி என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவருடன் 12 வட மாநில தொழிலாளர்களும், சில உள்ளூர் தொழிலாளர்களும் பணிபுரிந்து வந்துள்ளனர். நேற்று காலை அறையில் மர்மமான முறையில் குர்ஹட்டிகிரி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த […]
மகனை கையில் தூக்கிக்கொண்டு தந்தை 1 1/2 கி.மீ தூரம் கலெக்டர் அலுவலகத்திற்கு நடந்து வந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேகேப்பள்ளி பகுதியில் ஆட்டோ டிரைவரான கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வாணி ஸ்ரீ என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மன வளர்ச்சியற்ற மாற்றுத்திறனாளியான ஹரிபிரசாத்(16) என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் தனது மனைவி மற்றும் மகளுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக ஓசூரில் பேருந்தில் ஏறியுள்ளார். […]
நீலகிரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் பொழுது பட்டாசு வெடிக்க கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கின்றார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசப்பட்டதாவது, விநாயகர் சிலையின் பாதுகாப்பிற்கு அந்தந்த அமைப்பினரே பொறுப்பேற்று சிலைகள் விசர்சனம் செய்யும் வரை இரவும் பகலும் குறைந்தபட்சம் 10 நபர்கள் பாதுகாப்புடன் போலீசாருக்கு உதவியாக இருக்க வேண்டும். அதன் நகல் சம்பந்தப்பட்ட […]
பட்டணம் முனியப்பம்பாளையத்தில் அடிபம்பை அகற்றாமல் கான்கிரீட் அமைத்தவரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் பட்டணம் முனியப்பன்பாளையம் பகுதியில் சில தினங்களாக சாக்கடை கால்வாயின் மேல் பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்திரா காலனி பகுதியில் சில வருடங்களாக பயன்படாத நிலையில் இருந்த அடிபம்பு அகற்றப்படாமல் கான்கிரீட் போடப்பட்டது. இதனால் இதுப்பற்றி ஒப்பந்ததாரர்களிடம் பொதுமக்கள் கேட்ட பொழுது அவர் சரியான பதில் […]
குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட குரூப் 1 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பித்த திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மூலமாக இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட இருக்கின்றது. மேற்காணும் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து […]
வந்தவாசி அருகே நாய்கள் கடித்ததில் புள்ளிமான் பரிதாபமாக உயிரிழந்தது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வந்தவாசி அருகே இருக்கும் இளங்காடு கிராமத்தில் செந்தில் ரங்கன் என்பவரின் விவசாய நிலத்தில் காட்டுப்பகுதியிலிருந்து புள்ளிமான் ஒன்று தண்ணீர் தேடி வந்துள்ளது. அப்பொழுது புள்ளிமான் கம்பு வேலியில் சிக்கிக் கொண்டது. இதை பார்த்து அங்கிருந்த நாய்கள் புள்ளி மானை கடித்து குதறியது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ர் வருவாய்த்துறைக்கு இது பற்றி தகவல் கொடுத்தார்கள். அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் ஆய்வாளர், கிராம […]
ஆரணி அரசு மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராத ஆக்சிஜன் தயாரிப்பு எந்திரத்தை திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி அரசு மருத்துவமனையில் 150 க்கும் மேற்பட்ட படுக்கை வசதி கொண்டுள்ளது. இந்த மருத்துவமனைக்கு ஆரணி சுற்றி இருக்கும் போளூர், செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு தாலுகா பகுதியில் உள்ளடக்கிய 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து செல்கின்றார்கள். இங்கு ஒரு வருடத்திற்கு முன்பு திருவண்ணாமலை இ சேவை […]
மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வேங்கிக்கால் மின்வாரிய அலுவலகம் முன்பாக தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு திருவண்ணாமலை கிளை சார்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்க, நிர்வாகிகள் மகாலிங்கம், பழனிவேல், கருணாகரன், ராமச்சந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக கௌரவ தலைவர், மாவட்ட செயலாளர், கூட்டமைப்பு மாவட்ட தலைவர் உள்ளிட்ட பல பங்கேற்று […]
கே.வி.குப்பத்தில் நம்ம ஊரு சூப்பரு திட்ட விளக்கக் கூட்டம் நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நம்ம ஊரு சூப்பர் திட்ட விளக்க கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட செயற்பொறியாளர் செந்தில் முன்னிலை வகித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திட்ட விளக்க உரையாற்றினார்கள். மேலும் இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றார்கள். இக்கூட்டத்தில் […]
புதுமாப்பிள்ளை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பள்ளிபாளையம் பகுதியில் விவசாயியான சம்பத்குமார்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சம்பத்குமாருக்கு சரண்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று தோட்டத்தில் ஓடிக்கொண்டிருந்த மின் மோட்டாரை நிறுத்துவதற்காக சம்பத்குமார் சென்றுள்ளார். இந்நிலையில் கிணற்றில் தண்ணீர் எந்த உயரத்திற்கு உள்ளது என எட்டி பார்த்தபோது எதிர்பாராதவிதமாக சம்பத்குமார் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரது சத்தம் கேட்டு […]
மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக ஐடி நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கரட்டுப்பாளையம் பகுதியில் தீபக் என்பவர் வசித்து வருகிறார். பெங்களூரில் இருக்கும் ஐ.டி.நிறுவனத்தில் வேலை பார்க்கும் தீபக் கடந்த 2 ஆண்டுகளாக வீட்டில் இருந்தே பணிபுரிந்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மது நிஷா(12), தருணிகா(6) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர்.இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக விஜயலட்சுமி தனது இரண்டு மகள்களுடன் […]
கிறிஸ்தவ ஆலயங்களை சீரமைப்பதற்கான நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி கிறிஸ்தவ ஆலயங்களை பராமரிப்பதற்கான நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம். அதன் பிறகு கிறிஸ்தவ ஆலயங்களில் வயது, பழுதுகள் மற்றும் பராமரிப்புகள் போன்றவற்றைப் பொறுத்து நிதியுதவி வழங்கப்படும். இதனையடுத்து ஒரு கிறிஸ்தவ ஆலயம் கட்டப்பட்டு 10 முதல் 15 வருடங்கள் இருப்பின் 1 லட்ச ரூபாய் நிதி உதவியும், 15 முதல் 20 ஆண்டுகளுக்கு […]
மழை பெய்ய வலியுறுத்தி கிராம மக்கள் வேப்ப மரத்திற்கும், அரச மரத்திற்கும் திருமணம் நடத்தினர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குரியாண்டிகுளம் கிராமத்தில் புகழ்பெற்ற வலம்புரி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவில் வளாகத்தில் அரச மரக்கன்றை நட்டு வைத்து பராமரித்து வந்துள்ளனர். சில நாட்களில் அதன் அருகில் வேப்ப மரக்கன்று தானாக வளர்ந்தது. பின்னர் இரண்டு மரங்களும் ஒன்றாக பின்னிப்பிணைந்து வளர்ந்ததால் கிராம மக்கள் 2 மரங்களையும் தெய்வங்களாக பாவித்து வழிபாடு நடத்தி […]
காட்டு யானை விரட்டியதால் 2 பெண்கள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆயக்குடி மலையடிவார பகுதியில் இருக்கும் விவசாய தோட்டங்களில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் சுற்றி திரிகிறது. இந்த யானைகள் பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் நஷ்டம் அடைந்தனர். இந்நிலையில் பழைய ஆயக்குடியில் வசிக்கும் வள்ளிநாயகம்(45), முனியம்மாள்(60) உள்பட ஐந்து பெண்கள் பொன்னிமலை கரடு பகுதியில் மக்காச்சோள அறுவடை பணிக்கு சென்றுள்ளனர். அப்போது திடீரென காட்டு யானை வந்ததால் அவர்கள் […]
ஆம்னி வேன் சாலையில் கவிழ்ந்த விதத்தில் வாலிபர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கூம்பூரில் சூர்யா என்பவர் வசித்து வருகிறார். நேற்று மதியம் சூர்யா ஆம்னி வேனில் வேடந்தூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்றுள்ளார். இந்நிலையில் நாகம்பட்டி பிரிவு பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சூர்யாவை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு […]
பேருந்தின் மேற்கூரை வழியாக மழைநீர் ஒழுகுவதால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சித்தரேவு, அய்யம்பாளையம், மஞ்சள்பரப்பு, தடியன்குடிசை உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்கள் வழியாக வத்தலகுண்டுவில் இருந்து தாண்டிக்குடிக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. நேற்று மதியம் வழக்கம் போல அரசு பேருந்து தாண்டிக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது மழை பெய்ததால் பேருந்தின் மேற்கூரை வழியாக மழைநீர் ஒழுகியது. இதனால் பயணிகள் மழை நீரில் நனைந்தபடி பயணம் செய்துள்ளனர். சிலர் பேருந்துக்குள் குடை பிடித்தபடி […]
பாதை வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நல்லூர் மேற்குகளம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பள்ளி மாணவ- மாணவிகளுடன் சென்று மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நல்லூர் மேற்குளம் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். பல ஆண்டுகளாக நாங்கள் பயன்படுத்தி வந்த பாதையை அடைத்து விட்டனர். இதனால் மருத்துவமனை செல்லும் கர்ப்பிணிகள், நோயாளிகளும், […]
கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சங்குப்பம் செல்வ விநாயகர் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கடந்த ஜூலை மாதம் உண்டியலை உடைத்து பணத்தை திருட முயன்றனர். அப்போது அலாரம் ஒலித்ததால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். கடந்த 15-ஆம் தேதி மர்ம நபர்கள் பெண்ணையாறு ரோடு நாகம்மன் கோவில், புதுப்பாளையம் கங்கை அம்மன் கோவில், வினை தீர்த்த விநாயகர் கோவில் ஆகிய […]
3 மாத குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மங்கலம்பேட்டை பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்பரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அன்பரசிக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சபரிவாசன் என பெயரிட்டனர். நேற்று இரவு அன்பரசி தனது குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு தூங்க வைத்துள்ளார். காலை […]
தனது மகனுக்கு தவறான சிகிச்சை அளித்ததாக கூறி பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள செல்லங்குப்பம் சுனாமி நகரில் ரம்யா என்பவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று ஒரு மனுவை கொடுத்துள்ளார். அந்த மனதில் கூறியிருப்பதாவது, எனது மகன் சரண் சக்தி கடந்த மே மாதம் கீழே விழுந்துவிட்டான். அப்போது வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் சரண் சக்தியை […]
கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் காவல்துறையினர் மத்தம்பாளையம் தனியார் கல்லூரி அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கார், மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் காவல்துறையினரை பார்த்ததும் திரும்பி செல்ல முயன்றனர். இதையடுத்து அவர்களை பிடிக்க காவல்துறையினர் முயன்றபோது 2 பேர் மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு தப்பியோடினர். அதன்பின் காரில் வந்தவவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில், அவர் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அப்பாஸ் (45) என்பதும், தனியார் நிறுவனத்தில் வேலை செய்ததும் […]
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலை வழியே தினசரி 30 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் சென்று வருகிறது. கேரளாவுக்கு லாரி, கனரகவாகனங்கள் அதிகளவு சென்று வருவதால் பாலக்காடு சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து காணப்படும். இந்நிலையில் வாகன பெருக்கத்தால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டது. இதனால் இரு வழிச்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டது. இதற்கென ரூபாய்.70 கோடி நிதிஒதுக்கீடு செய்து பணிகள் நடந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ஜமீன் முத்தூர் வழியே போகும் ஆற்றின் குறுக்கே […]
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சென்ற வருடம் மார்ச்மாதம் இறுதியில் வறட்சி துவங்கியது. இதன் காரணமாக வால்பாறை வனப் பகுதியிலிருந்த காட்டு யானைகள் கூட்டம் கேரள வனப்பகுதிக்கு சென்றுவிட்டது. இப்போது தென் மேற்கு பருவமழை பெய்து வால்பாறை பகுதி முழுதும் பசுமையாக காட்சியளிக்கிறது. இதையடுத்து கேரள வனப் பகுதிகளிலிருந்து காட்டு யானைகள் மீண்டுமாக வால்பாறை வனப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வர தொடங்கி இருக்கிறது. தமிழக, கேரள எல்லையிலுள்ள வால்பாறை வனப் பகுதி, சாலக்குடி வனப் பகுதியில் காட்டு […]
கோவை மாவட்டம் வால்பாறை அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் முத்துக்குமார் (38). இவர் அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான மகேந்திரன் (50) என்பவரை தன் வீட்டில் மண் எடுக்கும் பணிக்காகவும், மரக்கிளைகளை வெட்டி அகற்றுவதற்காகவும் அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, அருகேயுள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்றுவதில் முத்துக்குமாருக்கும், மகேந்திரனுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக மகேந்திரன், முத்துக்குமாரை தாக்கியதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த முத்துக்குமார் வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து வந்து மகேந்திரனை […]
செங்கல்பட்டு மாமல்லபுரத்தில் பேரூராட்சி நிர்வாகம் சுற்றுலாவரும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கிறது. கடற்கரை கோயில், ஐந்து ரதம் பகுதியில் வாகனங்களை நிறுத்த உள்ளூர் திட்ட குழுமம் தனியாக ஒரு கட்டணம் வசூலிக்கிறது. இவற்றில் ஏற்பட்ட குழப்பத்தால் வாகன நுழைவுகட்டணம் மற்றும் வாகன நிறுத்துமிட கட்டணம் என 2 கட்டணங்களையும் ஒன்றாக வசூலிக்க பேரூராட்சிக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனிடையில் 2 கட்டணங்களையும் ஒன்றாக வசூலித்து அதன் சதவீத அடிப்படையில் பேரூராட்சியும், உள்ளூர் திட்ட குழுமமும் சதவீத […]
சென்னை மற்றும் புற நகர் பகுதியில் நேற்றிரவு 8 மணியிலிருந்து இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. துபாயிலிருந்து இரவு 8:30 மணிக்கு சென்னை வந்த பயணிகள் விமானமானது தரை இறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பியனுப்பப்பட்டது. அதேபோன்று இரவு 8:35 மணிக்கு லக்னோவிலிருந்து வந்த விமானமும், இரவு 8:50 மணிக்கு பக்ரைன் மற்றும் மும்பையிலிருந்து வந்த 2 விமானங்களும், 9:25 மணிக்கு ஹாங்காங்கிலிருந்து வந்த விமானமும் மழையால் சென்னையில் […]
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் சரத்குமார் (30) நேற்று முன்தினம் இரவு சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியிலிருந்து மணலி பெரியார் நகரில் மழை நீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு சிமெண்டு கலவை எந்திர லாரியை ஓட்டிச்சென்றார். இந்நிலையில் தெருவில் தாழ்வாக தொங்கியபடி இருந்த மின்சார கம்பியில் லாரி உரசியது. இதன் காரணமாக சிமெண்டு கலவை எந்திர லாரி முழுதும் மின்சாரம் பாய்ந்தது. மேலும் சரத்குமார் உடலிலும் மின்சாரமானது பாய்ந்தது. அப்போது அவ்வழியே ஆந்திராவிலிருந்து சவுக்கு கட்டைகளை ஏற்றிக் […]
சென்னையின் 2வது விமானநிலையம் காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமைக்கப்படும் என மத்திய-மாநில அரசுகள் அறிவித்திருக்கிறது. அதன்படி காஞ்சீபுரம் தாலுகாவுக்குட்பட்ட வளத்தூர், பரந்தூர், 144 தண்டலம், நெல்வாய், மேல்படவூர், மடப்புரம், மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவுக்கு உட்பட்ட ஏகனாபுரம், எடையார்பாக்கம், குணகரம்பாக்கம், மகாதேவி மங்கலம், அக்கமாபுரம், சிங்கிலிபாடி என 12 கிராமபகுதிகளில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பரந்தூரில் விமானம் நிலையம் அமைப்பது சென்னைக்கு மிக முக்கிய தேவை என்றும் அங்கு விமான நிலையம் […]
சென்னையில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று பெய்த மழையால் ஆங்காங்கே மழைநீர் குளம்போல் தேங்கி கிடந்தது. அந்த அடிப்படையில் டி.பி.சத்திரம் 14வது சாலையில் நேற்று முன்தினம் பெய்த மழையால் சாலை ஓரத்தில் மழைநீர் தேங்கியிருந்தது. அவ்வாறு தேங்கிய மழைநீரில் அருகில் மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் கசிந்தாக தெரிகிறது. இந்நிலையில் அவ்வழியே வந்த 2 தெருநாய்கள் தேங்கிய மழைநீரில் ஆபத்து இருப்பதை அறியாமல் நீரில் நடந்து சென்றது. இதனால் மின்சாரம் தாக்கியதில் 2 நாய்களும் தூக்கிவீசப்பட்டது. இதையடுத்து சம்பவ […]
நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட் 23) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 20ஆம் தேதி முதல் 10 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
காணாமல் போன சர்வேயர் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாசரேத் பகுதியில் பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாபு சங்கர் என்ற மகன் இருந்துள்ளார். இவர் நெல்லை மாவட்டம் திசையன்விளை தாலுகா அலுவலகத்தில் சர்வேயராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பாபு சங்கர் கடந்த மார்ச் மாதம் 10-ந்தேதி காலையில் வேலைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு சென்றுள்ளார். ஆனால் வேலை முடிந்து மாலையில் பாபு சங்கர் வீட்டிற்கு வராததால் அவரது […]
தண்ணீரில் மூழ்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கண்ணசந்திரம் கிராமத்தில் அப்போஜியப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனோஜ் குமார்(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மனோஜ் குமார் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மனோஜ் குமார் தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர் அதற்குள் மனோஜ் […]
பாலிடெக்னிக் மாணவர் திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வரட்டனபள்ளி பகுதியில் முனிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவீன்(16) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக நவீனுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் முனிராஜ் தனது மகனை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே நவீன் பரிதாபமாக […]
பாம்பு கடித்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சொல்லே புரம் கிராமத்தில் விவசாயியான இருதயராஜ்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விவசாய நிலத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது பாம்பு ஒன்று இருதயராஜை கடித்தது. இதனால் வலியில் அலறி துடித்த இருதயராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இருதயராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ராயக்கோட்டை பகுதியில் தறி தொழிலாளியான முனுசாமி(43) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து முனுசாமி மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சஜ்ஜலப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது அவ்வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் முனுசாமி மற்றும் சாலையோரம் நடந்து சென்ற பெருமாள் ஆகியோர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் […]
இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி பகுதியில் திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக மினிலாரி வைத்துள்ளார். இவருக்கு ஜோதிகா(21) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிகாவும் திருப்பதியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஜோதிகா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது […]
புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளக்கோவில் டி.ஆர்.நகர் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு சந்தியா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சந்தியாவுக்கும் கோவை கணபதி பகுதியில் வசிக்கும் வினோத்குமார் என்பவருக்கும் இடையே திருமண தகவல் மையம் மூலமாக கடந்த மார்ச் மாதம் 21-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அதன்பின் வினோத்குமார், சந்தியா ஆகிய இருவரும் கோவையில் தனியாக வாடகைக்கு வீடு […]
சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வியாபாரியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி பகுதியில் சங்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரவிசங்கர் என்ற மகன் உள்ளார். இவர் சுக்குகாபி விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் ரவிசங்கர் அதே பகுதியில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது ரவிசங்கர் அங்குள்ள ஒரு வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த 12 வயது சிறுமியுடன் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். இதனையடுத்து சிறுமி வீட்டிற்குள் சென்று தண்ணீர் […]