பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்து வந்த ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டை போலீசார் மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தெருவுக்க்கடை பகுதியில் விக்கிரமன்(58) என்பவர் வசித்து வருகிறார். இவர் போலீஸ் ஏட்டாக வேலை பார்த்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இவர் கேரளா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அவர்கள் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்நிலையில் களியக்காவிளை காவல் நிலையத்தில் வேலை […]
Tag: மாவட்ட செய்திகள்
இன்று முதல் நாகர்கோவிலில் அக்னிபத் திட்டத்திற்கு ஆள்சேர்ப்பு முகாமானது நடைபெறுகின்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் இருக்கும் அண்ணா விளையாட்டு அரங்கில் மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாமானது திருச்சி இராணுவ ஆள்சேர்ப்பு மையம் சார்பாக இன்று முதல் நடைபெறுகின்றது. இதில் பதினேழு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கின்றனர். இதற்கு 33,000-ற்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். இதில் விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைன் மூலமாக அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த முகாமானது […]
லிப்ட் பழுதானதால் உள்ளே சிக்கியிருந்த 10 பேரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன், மின்சாரதுறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர். விழா முடிந்ததும் […]
மதுபோதையில் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார். கரூர் மாவட்டத்தில் உள்ள ராஜேந்திரன் காளியம்மன் கோவில் தெருவில் தில்லைகண்ணன்(29) என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுபோதையில் கடம்பர் கோவில் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது பொதுமக்களை பார்த்து தில்லைகண்ணன் தகாத வார்த்தைகளால் பேசிக் கொண்டிருந்தார். இதனால் போலீசார் அங்கு சென்று தில்லைகண்ணனை தட்டி கேட்டனர். அப்போது தில்லை கண்ணன் போலீசாரையும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் தில்லை கண்ணனை கைது […]
தனியார் வங்கி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதிபாளையம் பகுதியில் பூபதி(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சரண்யா(28) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பூபதி புதிதாக வீடு கட்டுவதற்காக கடன் வாங்கியுள்ளார். ஆனால் கடனை திரும்ப செலுத்த இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த பூபதி நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த […]
காதல் திருமணம் செய்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதம்பாளையம் பகுதியில் தங்கவேல்(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூரில் இருக்கும் ஜவுளி ஆயத்த ஆடை நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக கடந்த 3 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அதே நிறுவனத்தில் வேலை பார்த்த ராமலட்சுமி என்பவரை தங்கவேல் காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் ராமலட்சுமிக்கு குறை பிரசவத்தில் குழந்தை பிறந்து இறந்துவிட்டது. இதனால் ராமலட்சுமி […]
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. கரூர் மாவட்டத்திலுள்ள கழுவூர் பகுதியில் கலையரசன்(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலாயுதம்பாளையம் பகுதியில் இருக்கும் பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சில பிரச்சினைகள் இருந்ததால் பரிகாரம் செய்வதற்காக கலையரசன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதனை அடுத்து பரிகாரம் செய்யப்பட்ட தகரத்தினாலான தகடை ஆற்றில் விடுவதற்காக கலையரசனுடன் சுரேந்தர்(17), அருண்குமார்(22) ஆகிய இருவரும் சென்றுள்ளனர். அந்த தகடை ஆற்றில் விட்டு விட்டு கலையரசன் […]
விவசாயி செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள செம்பியநத்தம் ஊராட்சியில் விவசாய ரமேஷ்(42) என்பவர் வசித்து வருகிறார். இவரது தோட்ட நிலத்திற்கு அருகே அதே பகுதியில் வசிக்கும் விவசாயி லோகநாதன்(43) என்பவரது நிலமும் அமைந்துள்ளது. இந்நிலையில் ரமேஷ் தனது வீட்டில் சேகரித்த குப்பைகளுக்கு தீ வைத்த போது லோகநாதன் வீட்டில் இருந்த வாழைமரம் மற்றும் பிற மரங்கள் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து லோகநாதன் பாலவிடுதி காவல் […]
கடன் பிரச்சனையால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் கே.சி.சி நகரில் லோகேஷ்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேன் ஓட்டுனராக இருந்துள்ளார். இந்நிலையில் டிராவல்ஸ் தொழில் தொடர்பாக லோகேஷ் பல பேரிடமிருந்து கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை. இதற்கிடையில் கடன் கொடுத்தவர்கள் லோகேஷிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த லோகேஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். […]
கால்வாயில் தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோடல்பட்டி பகுதியில் மணிவண்ணன்-ஓவியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 வயதுடைய கனியாஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 3 மாதங்களாக ஓவியா திம்மாபுரம் பகுதியில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் அணை கால்வாயில் ஓவியா துணி துவைத்த போது, குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக குழந்தை கால்வாயில் தவறி விழுந்தது. […]
குட்டி ஈன முடியாமல் யானை உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொளுவபெட்டா காப்பு காட்டில் உள்ள தேன்கல்லை பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது பெண் யானை இறந்து கிடப்பதை பார்த்தனர். இது குறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் முருகேசன், உதவி வன பாதுகாவலர் மாரியப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து […]
காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட ஆறாவது வார்டு சத்யா நகர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் சார்பில் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.இதனால் கோபமடைந்த பொதுமக்கள் மதுரை- தேனி தேசிய நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் மற்றும் நகர மன்ற […]
கரூரில் 11 நாட்கள் புத்தகத் திருவிழா நடைபெறுகின்றது. கரூர் மாவட்டத்தில் உள்ள திருமாநிலையூரில் இருக்கும் புதிய பேருந்து நிலையம் அமைய இருக்கும் இடத்தில் சென்ற 19 தேதி புத்தகத் திருவிழா தொடங்கியுள்ளது. இப்புத்தகத் திருவிழாவிற்கு அமைச்சர் வி.செந்தில் பாலாஜி பங்கேற்று திறந்து வைத்தார். இப்ப புத்தகத் திருவிழாவானது வருகின்ற 29ஆம் தேதி வரை மொத்தம் 11 நாட்கள் நடைபெற இருக்கின்றது. இதில் நூறு அரங்கில் பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் வைக்கப்பட்டு இருக்கின்றது. காலை 10 மணி முதல் இரவு […]
சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு தினசரி பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். அதிலும் குறிப்பாக இங்கு நிலவும் சீதோஷ்ண சூழலை அனுபவிப்பதற்காக வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர். இந்நிலையில் கிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை என தொடர் விடுமுறை காரணமாக சென்ற 2 நாட்களாக கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து இருக்கிறது. அந்த வகையில் இன்று அதிகாலை முதலே பெரும்பாலான வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர். இதன் […]
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழைபெய்து வருகிறது. இதனிடையில் தமிழக கடலோர பகுதிகளில் பலத்த கடல் காற்று வீசும் என்று வானிலை மையம் எச்சரித்ததாக தெரிகிறது. இதனையடுத்து கடலூர் மீன் வளத்துறை அதிகாரிகள், துறைமுக பகுதி சிறிய ரக பைபர் படகுகள் மற்றும் விசைப்படகு மீனவர்கள் (அதாவது ஐ.பி. மற்றும் எஸ்.டி.பி. வகை விசைப்படகு மீனவர்கள்) மறு உத்தரவு வரும் வரையிலும் கடலுக்கு போக வேண்டாம் […]
கோவை -பொள்ளாச்சி இடையில் 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு வாகனப் போக்குவரத்து துவங்கியது. இந்நிலையில் சாலையில் வாகனஓட்டிகள் கவனமாக செல்ல வசதியாக ரோட்டின் நடுவில் மஞ்சள் நிறக் கோடுகள் அமைக்கப்பட்டு இருந்தது. இப்போது இந்த சாலை அமைக்கப்பட்டு இதில் போக்குவரத்து தொடங்கி 3 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் ஏரளமான இடங்களில் மஞ்சள்நிற கோடுகள் அழிந்துவிட்டது. இதன் காரணமாக 4 வழிசாலையில் வாகனங்கள் தாறுமாறாக செல்ல துவங்கியது. அத்துடன் தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் அடிக்கடி விபத்து நடந்தது. அதன்பின் […]
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள மாளிகைமேடு கிராமத்தில் வசித்து வந்தவர் திலீப்குமார்(58). இவர் முத்தாண்டிக் குப்பம் வல்லம் கிராமத்திலுள்ள ரேஷன்கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு அஞ்சலை தேவி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். நேற்றிரவு திலீப்குமார் இயற்கை உபாதை கழித்துவிட்டு வருவதாக வீட்டை விட்டு வெளியே சென்றார். இதையடுத்து நீண்ட நேரமாகியும் அவா் வீடு திரும்பவில்லை. இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் திலீப்குமாரை […]
திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரத்தில் வசித்து வந்தவர் சுப்ரியா (35). இவருக்கு வெங்கட் ராஜேஷ் என்ற தம்பி இருக்கிறார். என்ஜினீயரான இவருக்கு பிரான்ஸ் நாட்டில் மென் பொறியாளராக வேலை கிடைத்தது. இதனையடுத்து வேலையில் சேர பிரான்ஸ் செல்வதற்காக சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த வெங்கட்ராஜேஷை வழியனுப்புவதற்காக சகோதரி சுப்ரியா மற்றும் அவரது கணவர் கிரண்குமார் போன்றோர் உடன் வந்தனர். அதன்பின் விமானம் நிலைய வளாகத்திற்குள் சகோதரி சுப்ரியாவிடம் பேசிக் கொண்டிருந்த வெங்கட்ராஜேஷ் அவர்களிடமிருந்து விடைபெற்று விமான […]
சென்னை மயிலாப்பூர் பஜார் சாலையிலுள்ள ஒரு ஜூவல்லரியில் சென்ற 18ஆம் தேதியன்று 68 கிராம் பழைய நகைகளை கொடுத்து 6 சவரன் நகைகளை பெண் ஒருவர் வாங்கி சென்றார். அவர் சென்ற பிறகு கடையின் உரிமையாளர் ஜெயச்சந்திரன், அந்த நகையை சோதனை செய்தபோது அவை போலி என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பின் கடை மற்றும் வெளியேயிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது போலி நகைகளை கொடுத்து […]
சென்னை மயிலாப்பூர் சாந்தோம் நெடுஞ்சாலையில் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்திலுள்ள ஏ.டி.எம். எந்திரம் பழுதானபோது அதை வங்கி ஊழியர்கள் சரிபார்க்க சென்றனர். இந்நிலையில் அங்கு இருந்த எந்திரத்தில் வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். கார்டுகளிலுள்ள தகவல்களை திருடுவதற்காக பயன்படுத்தும் “ஸ்கிம்மர்” கருவி பொருத்தப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இது தொடர்பாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது விசாரணையில் […]
சென்னை மேற்கு மின்பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட அம்பத்தூரில் சென்ற 11ஆம் தேதி அமலாக்க அதிகாரிகள் கூட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் 14 மின்சார திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இழப்பீட்டு தொகையாக மின்சார நுகர்வோருக்கு ரூபாய்.10 லட்சத்து 30 ஆயிரத்து 539 விதிக்கப்பட்டது. இதற்கிடையில் சம்பந்தப்பட்ட மின்சார நுகர்வோர்கள், மின்சாரம் திருடிய குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன் வந்து அதற்குரிய சமரசத்தொகை ரூபாய்.99 ஆயிரம் செலுத்தியதால் அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் ஏதும் செய்யப்படவில்லை. […]
சென்னை மேற்கு அண்ணா நகரில் வசித்து வருபவர் மனோஜ் (36). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டார். இவர் தனது 3 வயதான மகன் யுவனுக்கு சாதி, மதம் இல்லை என்ற சான்றிதழ் கோரி அம்பத்தூர் தாசில்தாரிடம் இணையதளம் வாயிலாக சென்ற ஜூன் மாதம் விண்ணப்பித்தார். எனினும் அம்பத்தூர் தாசில்தார் சான்றிதழை வழங்கவில்லை. வரும் விஜயதசமி அன்று எனது மகனை பள்ளியில் சேர்க்க இருப்பதால் அதற்குள் சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என்று […]
நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட் 21) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 20ஆம் தேதி முதல் 10 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மதுபோதையில் தகராறு செய்த தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி சிவாஜி நகரில் கட்டிட தொழிலாளியான பாலமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி இவரது மனைவி பிரிந்து விட்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை மட்டும் உள்ளது. இந்த குழந்தை பாலமுருகனின் சித்தி வீட்டில் வளர்ந்து வருகிறது. மேலும் பாலமுருகன் அடிக்கடி மது அருந்தி விட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் பாலமுருகனிடம் கோவில்பட்டி வள்ளுவர் நகரில் வசிக்கும் […]
சங்கராபுரம் அருகே இருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே இருக்கும் கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது மாணவ-மாணவிகளின் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்தார். பின் மதிய உணவு தரமானதாகவும் சுவையாகவும் வழங்கப்படுகின்றதா என்பது குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார். இதையடுத்து மாணவ-மாணவிகளுக்கு தரமான, சத்தான உணவுகளை வழங்கிட தலைமையாசிரியருக்கு அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து பள்ளி வகுப்பறைகளை ஆய்வு செய்து பயன்பாட்டில் […]
சங்கராபுரம், மூங்கில்துறைப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது சாராயம் விற்பனை செய்த 9 பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் சங்கராபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபொழுது தியாகராஜபுரம் ஏரிக்கரை அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த மீனாட்சி, மொட்டையம்மாள், முத்தம்மாள், ஏழுமலை உள்ளிட்ட ஐந்து பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 41 லிட்டர் சாராயப்பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அழித்தார்கள். […]
தாயை காப்பாற்ற முயன்ற சிறுவன் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குப்பனாபுரம் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அர்ச்சனா என்ற மனைவி உள்ளார். இவர் வாய் பேச முடியாதவர். இந்த தம்பதியினருக்கு கார்த்திக் ராஜா, சுபாஷ் என்ற 2 மகன்கள் இருந்தனர். இந்நிலையில் அர்ச்சனா வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டு சுவரின் அருகில் இருந்த சிறிய ஓட்டையில் நல்ல பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனை பார்த்த […]
மின்கசிவு காரணமாக அலுவலகத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கியாஸ் நிறுவன பதிவு அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அக்கம்பக்கத்தினர் அந்த அலுவலகத்தில் இருந்து புகை வெளியானதை பார்த்து திருச்செந்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அலுவலகத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்து […]
தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து ஈரோட்டுக்கு ரயில் மூலம் ஆயிரம் டன் நெல் வந்தடைந்தது. ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்திற்காக பல்வேறு மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து கோதுமை, அரசி, நெல் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து 1000 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நெல் மூட்டைகளானது 21 பெட்டிகள் கொண்ட தனி சரக்கு ரயில் மூலம் ஈரோடு ரயில்வே பணிமனைக்கு நேற்று வந்தடைந்தது. இதையடுத்து வந்தடைந்த […]
மானாமதுரை அருகே வாமன அவதார கோட்டோவியம் கொண்ட கற்களை வரலாற்று ஆர்வலர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை அருகே இருக்கும் சின்ன கண்ணனுர் கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவர் பாண்டியர் நாடு பண்பாட்டு மைய வரலாற்றை ஆர்வலர்களான மீனாட்சி சுந்தரம், தாமரைக்கண்ணன் உள்ளிட்டோருக்கு தகவல் கொடுத்துள்ளார். அங்கு மூன்று வாமன அவதார குறியீடு மற்றும் எழுத்து பொறிக்கப்பட்ட நிலக்கொடை கற்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. இதுகுறித்து வரலாற்று ஆர்வலர்கள் கூறியுள்ளதாவது, மூன்று திசைகளில் இந்த உருவம் பொறித்த கல் […]
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல்-வத்தலக்குண்டு பிரதான மலைப் பாதையில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக 10க்கும் அதிகமான இடங்களில் பாலங்கள் அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இப்பணிகள் துவங்கி ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை வேலை நிறைவடையவில்லை. இதன் காரணமாக மழைக் காலங்களில் பாலங்கள் உள்ள பகுதியில் தண்ணீர் தேங்கி அந்த மலைப் பாதை சகதிக்காடாக மாறி விடுகிறது. இந்நிலையில் வாகனங்கள் சகதியில் சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனிடையில் பகல் நேரங்களில் சகதியில் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயமானது பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இதனால் அணைகள், குளங்கள், ஆறுகள், திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் போன்றவை வாயிலாக பாசனம் செய்யப்படுகிறது. ஆகவே மழை நீரை சேமித்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் முயற்சியில் மாவட்ட நிர்வாகமானது ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ஊரக வளர்ச்சி முகமை வாயிலாக சென்ற வருடம் 21 நாட்களில் 605 மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு உலக சாதனை நிகழ்த்தப்பட்டது. இதையடுத்து மழைக் காலத்தில் வீணாக ஓடும் மழைநீரை, […]
ஈரோடு மாவட்டம் சிவகிரி பாலமேட்டு புதூரில் தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணி நூல் துறையின் கீழ் பஞ்சாலை கழகத்திற்கு சொந்தமான விசைத்தறி கூடம் இருக்கிறது. இந்த கூடத்தில் 25 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை, பள்ளி சீருடைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் திடீரென்று தறிகள் செயல்படுவது நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. இதனை கண்டித்து தொழிலாளர்கள் பஞ்சாலை வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அதாவது, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தறிகளை வழக்கம்போல […]
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சென்ற 5-ஆம் தேதி மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு துவங்கியது. இதனையடுத்து மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் முதல் கட்டமாக மொழிப் பாடம் தவிர முதன்மை பாடங்களில் 400 மதிப்பெண்ணுக்கு 330 வரை எடுத்த மாணவிகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு சென்ற 12-ம் தேதி வரை நடந்தது. அதன்பின் காலியாகவுள்ள பாடப் பிரிவுக்கான இடங்களுக்கு வரும் 22-ஆம் தேதி முதல் 2ம் கட்ட கலந்தாய்வு துவங்குகிறது. அந்த வகையில் வரும் 22-ஆம் தேதி […]
ஒடிசாவை சேர்ந்த மோகன் பதான் என்பவரின் மகள் மேகா ஸ்ரீ (30). இவர் டெல்லியில் எம்.டெக்., பி.எச்டி., முனைவர் பட்டப் படிப்பை படித்தவர் ஆவார். இந்நிலையில் மேகா ஸ்ரீ சென்னை அடையாறு ஐஐடி-யில் 3 மாத ஆராய்ச்சிபடிப்பு பயிற்சிக்காக வந்ததாக தெரிகிறது. அதன்படி அடையாறு கல்லூரி விடுதியில் தங்கி ஆராய்ச்சி படிப்பை படித்துக் கொண்டிருந்த மேகா ஸ்ரீ, நேற்று காலை ஆவடி-இந்துக் கல்லூரி ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள தண்டவாளத்தில் தலையில் காயத்துடன் ரத்தவெள்ளத்தில் மர்மமான முறையில் […]
சென்னை ஆவடி அடுத்த கோவில்பதாகை பகுதியில் வசித்து வருபவர் பிரேம்குமார். இவருடைய மனைவி சந்தியா(24) எம்பிஏ பட்டதாரியாவார். இவர் சென்ற மே மாதம் வீட்டிலிருந்து பணியாற்றும் வகையில் ஆன்லைனில் வேலை தேடினார். இந்நிலையில் வர்த்தக செயலி வாயிலாக வார சம்பளத்திற்கு வீட்டில் இருந்து சோப்பு பேக்கிங் செய்யும் வேலை தொடர்பான விளம்பரத்தை கண்டுள்ளார். அதில் ரூபாய்.5 ஆயிரம் -ரூ.20 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து சந்தியா அந்த எண்ணுக்கு தொடர்புகொண்டபோது, வாட்ஸ்-அப் வாயிலாக பேசிய […]
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமானம் நிலையத்துக்கு மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து 156 பயணிகளுடன் விமானம் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, மனைவியுடன் பயணம் மேற்கொண்ட மலேசியா நாட்டைச் சேர்ந்த கோபாலன் அழகன் (52) என்பவர் தான் மறைத்து வைத்திருந்த சிகரெட்டை எடுத்து விமானத்துக்குள்ளேயே புகைபிடிக்க தொடங்கி இருக்கிறார். இதற்கு சக பயணிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும் விமானம் பணிப் பெண்களும் அவரிடம் விமான பாதுகாப்புசட்ட விதிகளின் அடிப்படையில் விமானத்திற்குள் புகைபிடிப்பது […]
சென்னை கிண்டி தொழிற்பேட்டை பகுதியிலுள்ள அரசு மற்றும் தனியார் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்தது. அதன்படி அடையாறு போலீஸ் துணை கமிஷனர் மகேந்திரன் உத்தரவின்படி, கிண்டி போலீஸ் உதவி கமிஷனர் சிவா, இன்ஸ்பெக்டர் பிரவின் ராஜேஷ் கொண்ட தனிப் படையினர்போதை மாத்திரையை விற்றதாக பரங்கிமலையை சேர்ந்த லோகேஷ் (27), ஆண்டர்சன் ஜான் (23), ஜெகதீஸ் (20) போன்றோரை கைது செய்தனர். இவர்கள் 3 பேரும் கொல்கத்தாவிலிருந்து வலிநிவாரணி மாத்திரைகளை […]
நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட் 20) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 20ஆம் தேதி முதல் 10 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் பேட்டால் பெண்ணை தாக்கியவரை போலீசார் கைது செய்தார்கள். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகே இருக்கும் கல்லல் மங்கம்மா சாலை இந்திரா நகரை சேர்ந்த முருகானந்தம் என்பவரின் மனைவி தேவிகா. இவர் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகின்றார். முருகானந்தத்திற்கும் அவரது அண்ணன் குமாரவேலுக்கும் முன் விரோதம் இருக்கின்றது. இந்த நிலையில் குமாரவேலு வளர்க்கும் கோழிகள் முருகானந்தம் வீட்டிற்குள் சென்று அசுத்தம் செய்ததாக சொல்லப்படுகின்றது. இதனால் தேவிகா குமாரவேலுவிடம் கேட்ட பொழுது அவர் ஆத்திரமடைந்து […]
தாழ்வாக பறந்த விமானத்தால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மேலவாணியங்குடி பகுதியில் நேற்று முன்தினம் மாலை தனியார் பயணிகள் விமானம் ஒன்று தாழ்வாக பரந்தபடியே சென்றது. பின் சிறிது நேரத்தில் அவ்வழியாக அந்த விமானம் மீண்டும் தாழ்வாக பறந்து சென்றது. இவ்வாறு தொடர்ந்து மூன்று முறை பறந்தது. பின் மதுரையை நோக்கிச் சென்றது. இதனால் அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு நின்று வேடிக்கை பார்த்தார்கள். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சட்ட விரோதமாக மது விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள தோகைமலை பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது குமார் என்பவர் வீட்டிற்கு பின்புறம் மது விற்பனை செய்துள்ளார். மேலும் மாரி என்ற பெண் தனது பெட்டி கடையில் மது விற்பனை செய்துள்ளார். இது குறித்து அறிந்த போலீசார் குமார் மற்றும் மாரி ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்த போலீசார் […]
மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள வலையூர் தெற்கு தெருவில் முத்தையா(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சாலாகாடு என்ற இடத்தில் சென்ற போது எதுமலை நோக்கி சென்ற தனியார் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முத்தையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். […]
மணல் கடத்திய ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள காரைக்காடு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காவிரி ஆற்றில் இருந்து 7 மணல் முட்டைகளை ஆட்டோவில் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் நடத்தி விசாரணையில் ஆட்டோ ஓட்டுநர் அரசலூரில் வசிக்கும் கோவிந்தன் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து கோவிந்தனை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்கு […]
மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்ட குழந்தைகள் நல குழு உறுப்பினராக பவுலின் சோபியா ராணி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் திருச்சி ஸ்ரீரங்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் திருச்சியை சேர்ந்த 17 வயதுடைய 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு கடந்த 2 வருடங்களாக அவரது தந்தை பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராணி […]
தண்ணீரில் மூழ்கி மெக்கானிக் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள புதூர் உத்தமனூர் நடுத்தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவா(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஏ.சி மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக சிவா மின் மோட்டாரை இயக்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்த சிவா தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
மரத்தின் மீது ஸ்கூட்டர் மோதி விபத்தில் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல் மேட்டு தெருவில் பன்னீர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லாவண்யா(17) என்ற மகள் இருந்துள்ளார். அதே பகுதியில் மணி மகள் கோபிகா(17) என்பவரும் வசித்து வருகிறார். இருவரும் அன்னவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளனர். கடந்த 15-ஆம் தேதி பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் லாவண்யாவும், கோபிகாவும் கலந்து கொண்டனர். […]
பல்பொருள் விற்பனை அங்காடியில் இருந்த பணத்தை மூதாட்டி திருடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி சுலைமான் நகர் பகுதியில் பீர்முகமது(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் பல்பொருள் விற்பனை அங்காடி நடத்தி வருகிறார். நேற்று காலை வாடிக்கையாளர் கேட்ட பொருளை எடுப்பதற்காக கடைக்கு அருகில் இருந்த குடோனுக்கு பீர்முகமது சென்றுள்ளார். அந்த சமயம் வேலை ஆட்கள் யாரும் கடையில் இல்லை. இந்நிலையில் எடுத்து வந்த பொருளை […]
15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் தாலுகாவில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு டிராக்டர் டிரைவரான ராகவன்(20) என்ற மகன் உள்ளார். இவரும் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் ராகவன் பாலியல் பலாத்காரம் செய்தால் மாணவி கர்ப்பமானார். இது தொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் மாணவியின் […]
மின்வாரிய ஊழியர் குடும்பத்தினருடன் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்திற்கு முன்பு 4 பேர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியதில் தர்ணாவில் ஈடுபட்டவர்கள் சோமண்டாபுதூர் தெற்கு தெருவை சேர்ந்த கணேசன்(48), அவரது மனைவி அஞ்சலை, மகன் இன்பராஜ், மகள் மகேஸ்வரி என்பது தெரியவந்தது. இதில் கணேசன் எசனை மின்வாரிய பிரிவு அலுவலகத்தில் கம்பியாளராக வேலை பார்த்து […]