வேலூர் மாவட்டத்தில் உள்ள சிஎம்சி காலனியில் சாலை பணிகளை ஒரு வாரத்துக்குள் முடிக்க வேண்டும் என மேயர் அறிவுறுத்திருக்கின்றார். வேலூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலம் ஆட்சியர் அலுவலகம் அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதை நேற்று மேயர் சுஜாதா அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே இருக்கும் பகுதிகளில் சாலையோரம் மழை நீர் தேங்காதவாறு சாலை அமைக்க வேண்டும். மேலும் தென்றல் […]
Tag: மாவட்ட செய்திகள்
பேரணாம்பட்டு நகரில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளார்கள். வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு பகுதியில் சென்ற சில நாட்களுக்கு முன்பாக தொடர் மழை பெய்தது. இதன் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கொசு புழுக்கள் உற்பத்தியாகி வருகின்றது. மேலும் நகராட்சியில் குப்பை கிடங்கு இல்லாததனால் சென்ற ஒரு மாதமாக நகரின் பல இடங்களில் குப்பைகள் மழை போல் தேங்கி இருக்கின்றது. மேலும் […]
வாலிபர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தெங்கம்புதூர் ஒரசவிளை பகுதியில் ஜெகன்(31) என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று ஜெகன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தரையில் அவர்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் போலீசார் ஜெகனை அழைத்து விசாரித்தனர். அப்போது ஜெகன் கூறியதாவது, எனக்கு நாகர்கோவில் காற்றாடிவிளை வழிதடத்தில் பணி வழங்கப்பட்ட நிலையில், […]
தந்தையை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பணமுகம் பகுதியில் கிராஸ்பென் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அகில் பென், அனில் பென் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் அனில் பென் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் டிரைவிங் லைசன்ஸ் எடுப்பது தொடர்பாக தந்தை மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த அனில் பென் தனது […]
மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் ஓட்டுநர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள அப்பிபாளையம் பகுதியில் பேருந்து ஓட்டுனரான கார்த்திக்(36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் ஆண்டாள் கோவில் சாலையில் இருக்கும் வருமான வரித்துறை அலுவலகம் அருகே சென்றபோது அவ்வழியாக வேகமாக வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த […]
தண்ணீரில் மூழ்கி இரண்டு வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கொளத்தூரில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவாகர்(25) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கரூர் மாவட்டம் கடம்பங்குறிச்சியில் இருக்கும் குலதெய்வ கோவிலில் கிடா விருந்து வைத்துள்ளார். இதில் திவாகரின் நண்பர்களான ஐ.டி நிறுவன ஊழியர் விஷ்ணு(25), ஆதர்ஷ்(25), நவீன் குமார், அஜித், சங்கர் 5 பேர் கலந்து கொண்டனர். இந்நிலையில் கடம்பங்குறிச்சி காவிரி ஆற்றில் நண்பர்கள் குளித்து கொண்டிருந்தனர். அப்போது […]
காணாமல் போன இளம்பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கரூர் மாவட்டத்திலுள்ள நொய்யல் தேர் வீதி பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிவேதா ஸ்ரீ(22) என்ற மகள் உள்ளார். இவர் 12- ஆம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து துணிகளை தைத்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற நிவேதா ஸ்ரீ நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் இளம்பெண்ணின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் […]
பெண்ணின் பெயரில் போலியான முகநூல் கணக்கு தொடங்கி தவறாக சித்தரித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 30 வயதுடைய பெண் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் எனது பெயரில் போலியாக முகநூல் கணக்கு துவங்கி தன்னை ஒருவர் அவதூறாக சித்தரித்து பதிவுகள் செய்வதாக குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பிரவீன்(32) என்பவரை கைது செய்து விசாரித்தனர். அப்போது திடுக்கிடும் தகவல் […]
மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் பிரசாந்த்(31) என்பவர் டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பிரசாந்த் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த பிரசாந்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே பிரசாந்த் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள அழிஞ்சிமங்கலம் கிராமத்தில் அரவிந்த்(29) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 22 வயதுடைய இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அடுத்து இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ள அரவிந்த் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் சேத்தியாத்தோப்பு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]
பொதுமக்களை அச்சுறுத்திய மூன்று பாம்புகளை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள ரூபநாராயணநல்லூர் கிராமத்தில் முருகேசன்(70) என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு முன்பு இருக்கும் தோட்டத்தில் 3 சாரை பாம்புகள் ஊர்ந்து சென்றுள்ளது. இந்த பாம்புகள் அடிக்கடி பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால் முருகேசன் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மூன்று பாம்புகளையும் லாவகமாக பிடித்தனர். இதனை அடுத்து பிடிபட்ட பாம்புகள் காப்பு […]
பேருந்து பழுதாகி நடுவழியில் நின்றதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து தினமும் ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகள் பழுதாகி நடுவழியில் நின்று விடுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் சேக்கல் முடி எஸ்டேட் பகுதியில் இருந்து வால்பாறை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து பழுதாகி நடுவழியில் நின்றதால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். எனவே பழுதடைந்த பேருந்துகளை உரிய முறையில் பராமரித்து […]
ஈரோடு மாவட்டம் சென்னிமலையை அடுத்த வெள்ளோடு அருகேயுள்ள கே.கே.வலசு பகுதியில் நேற்று முன்தினம் 2 கரும்பு தோட்டங்கள் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இது தொடர்பாக தகவல் அறிந்ததும் பெருந்துறை தீயணைப்புநிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதன் காரணமாக பெரும்சேதம் தவிர்க்கப்பட்டது. இதற்கிடையில் இந்த தீ விபத்துக்கான காரணம் பற்றி எதுவும் தெரியவில்லை. இச்சம்பவம் அந்த பகுதியில் […]
கர்நாடக மாநிலம் ஹனூரிலிருந்து கரும்புபாரம் ஏற்றிக்கொண்டு ஈரோடு சத்தியமங்கலத்துக்கு லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரியை சத்தியமங்கலத்தை அடுத்த சிக்கரசம் பாளையத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் (47) என்பவர் ஓட்டிவந்தார். இதையடுத்து அந்தியூரை அடுத்த தட்டக்கரை அருகில் வந்தபோது லாரி எதிர்பாராத விதமாக சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரவிச் சந்திரன் காயம் இன்றி உயிர்தப்பினார். இது தொடர்பாக தகவல் அறிந்ததும் பர்கூர் காவல்துறையினர் சம்பவ இடதிற்கு விரைந்து சென்று லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதனை தொடர்ந்து […]
சென்னை கொளத்தூரில் வசித்து வரும் சாந்தி என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அவற்றில், ரம்யா, வக்கீல் பாபு போன்றோரிடம் இருந்து தன் மகனை மீட்டுத் தரக்கோரி அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது சென்னை அண்ணா நகரை சேர்ந்த பாபு ஒரு போலி வக்கீல் என்பது தெரியவந்தது. அதாவது பாரதிதாசன் பல்கலையில் சட்டப்படிப்பு படித்ததாக போலியான சான்றிதழை அவர் சமர்ப்பித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலி வக்கீல் பாபுவை கைதுசெய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. […]
சென்னை வடபழனி பஸ் நிறுத்தத்தில் நேற்று அதிகாலையில் பேருந்துக்காக நின்றிருந்த சிவா (41) என்பவரிடம் மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் செல்போனை பறித்துவிட்டு தாம்பரம் நோக்கி மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். மேலும் போகும் வழியில் சென்னை விமான நிலையம் நுழைவுவாயில் அருகில் நின்றிருந்த முகமது இப்ராகிம் (35) என்பவரிடமும் செல்போனை பறித்து விட்டு வேகமாக தப்பிச்சென்றனர். இதையடுத்து மர்ம நபர்கள் தாம்பரம் பேருந்து நிலையம் அருகில் வேகமாக சென்ற போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த […]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்ததலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான 102 வயதான சங்கரய்யா சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் வசித்து வருகிறார். 75வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு குரோம்பேட்டை நியூகாலனியிலுள்ள அவரது வீட்டு அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பாக நடந்த நிகழ்ச்சியில் சங்கரய்யா பங்கேற்றார். அப்போது சங்கரய்யா தேசியக்கொடி ஏற்றினார். அதன்பின் பள்ளி மாணவிகள் ஊர்வலமாக வந்து சங்கரய்யாவுக்கு தேசியகொடி மற்றும் பூக்கள் கொடுத்து காலில் விழுந்து வணங்கினர். இந்நிலையில் மாணவி ஒருவர் சுதந்திர போராட்டத்தில் சங்கரய்யாவின் […]
சென்னை கொருக்குப்பேட்டை அம்பேத்கர்நகர் 2வது தெருவில் வசித்து வருபவர் கரீம் மொய்தீன். இவருடைய குடும்பத்தினர் 9 பேர் நேற்றுமுன்தினம் திருவொற்றியூர்பலகை தொட்டிக்குப்பம் அருகில் கடலில் குளித்தனர். அப்போது திடீரென ராட்சத அலையில் சிக்கி ஆட்டோ டிரைவர் கபீர் (24), சிறுமி அம்ரீன் (18), அவருடைய தம்பி ஆபான் (14), அவர்களது நண்பர் சபரி (16) ஆகிய 4 பேரும் கடலில் மூழ்கினர். இதையடுத்து அவர்களை அருகிலிருந்த மீனவர்களும், உறவினர்களும் காப்பாற்ற முயற்சி செய்தனர். எனினும் 4 பேரும் […]
சென்னை தாம்பரம் அடுத்த நெமிலிச் சேரி, தனபால் சாலை பகுதியில் வசித்து வருபவர் பிரேம்குமார். இவரது மகள் லட்சுமி ஸ்ரீ (17) ரோம்பேட்டை நேருநகர் பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 பயின்று வந்தார். நேற்று முன்தினம் காலை பள்ளியில் நடந்த சுதந்திரதின விழாவில் மாணவி லட்சுமி ஸ்ரீ பங்கேற்றார். அத்துடன் கலை நிகழ்ச்சியில் மாணவி கலந்துகொண்டார். விழா முடிந்ததும் மாணவி லட்சுமி ஸ்ரீ தன் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார். இதையடுத்து அஸ்தினாபுரம் ராஜேந்திர பிரசாத் சாலையில் […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வானவன்மகாதேவி மீனவா் கிராமத்தில் வைத்திலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 4 மாதம் ஆகிறது. இந்நிலையில் வைத்திலிங்கம் கடந்த ஒரு வாரமாக உடல்நலம் சரியில்லாமல் இருந்துள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த வைத்திலிங்கம் திடீரென சேலையால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வைத்திலிங்கத்தை உடனடியாக மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]
நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட் 17) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, 15ஆம் தேதி முதல் 20 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காந்திபுரி பகுதியில் தர்மலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதாகர் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த சுதாகர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த தட்டார்மடம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுதாகரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத […]
2 பேரை அரிவாளால் வெட்டிய வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள மேலப்பாவூர் வடக்கு தெருவில் சுரேஷ், முத்துசாரதி ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த கனிபாண்டி, முத்து ஆகிய இருவருக்கும் இடையே ஒரு கொலை சம்பவம் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த முத்துவும், கனிபாண்டியும் இணைந்து சுரேஷ் மற்றும் முத்துசாரதியை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினர். இதனால் […]
சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள புது கும்மிடிப்பூண்டியில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஜித்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காயத்ரி பரிதா(16) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் தொடர்ந்து செல்போன் உபயோகித்த காயத்ரியை அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த காயத்ரி தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் […]
சுதந்திர தினத்தில் விடுமுறை அளிக்காத 55 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி தொழிலாளர் உதவியாளர் தெரிவித்துள்ளார். தேனி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் சிவக்குமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, சுதந்திர தினமான நேற்று தேனி மாவட்டத்தில் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அழிக்கப்பட்டதா அல்லது மாற்று விடுப்பு அளிக்கப்பட்டதா என உணவு நிறுவனங்கள், கடை நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்டவைகளில் தொழிலாளர் உதவியாளர் சிவக்குமார் தலைமையிலான குழுவினர் ஆய்வு […]
காணாமல் போன இளம்பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள பீமநகர் மார்சிங்பேட்டை போலீஸ் குடியிருப்பில் முத்துக்குமாரசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் உறையூர் காவல் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு விமலாதேவி(21) என்ற மகள் உள்ளார். இவர் திருச்சியில் இருக்கும் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற விமலாதேவி மீண்டும் திரும்பி வரவில்லை. இதனால் விமலாதேவியின் பெற்றோர் அவரை […]
கார் மீது லாரி மோதிய விபத்தில் திமுக பிரமுகர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நாராயணபுரம் கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குபேந்திரன்(45) என்ற மகன் இருந்துள்ளார். தி.மு.க பிரமுகரான குபேந்திரன் திருவள்ளூர் பகுதியில் இருக்கும் சினிமா திரையரங்கு, விடுதி போன்றவற்றை நிர்வகித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆந்திராவில் தங்களுக்கு சொந்தமாக இருக்கும் விவசாய நிலங்களை பார்வையிடுவதற்காக குபேந்திரன் காரில் சென்றுள்ளார். இதனை அடுத்து அங்கிருந்து குபேந்திரன் திருவள்ளூரில் இருக்கும் வீட்டிற்கு […]
காதல் தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள மயிலாடும்பாறை கிராமத்தில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவித்ரா(22) என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே நிறுவனத்தில் வேலை பார்த்த சௌந்தரராஜன்(25) என்பவரை பவித்ரா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் கூறவில்லை. இந்நிலையில் 5 மாத கர்ப்பிணியாக இருந்த பவித்ராவுக்கும், சவுந்தரராஜனுக்கும் இடையே அடிக்கடி தகராறு […]
கடைக்குள் நுழைய முயன்ற பாம்பை பொதுமக்கள் அடித்து கொன்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் போலீஸ் குடியிருப்பு பகுதியில் பாம்பு ஒன்று கடந்த ஒரு வாரமாக உலா வந்துள்ளது. நேற்று முன்தினம் பாம்பு விக்டோரியா சாலையில் ஊர்ந்து சென்று அங்கிருந்த பேக்கரி கடைக்குள் நுழைய முயன்றது. அப்போது வேடிக்கை பார்த்து கொண்டிருந்த 2 வாலிபர்கள் பாம்பை வெளியே தள்ளி விட்டனர். இதனை அடுத்து கற்கள், கம்பு ஆகியவற்றை கொண்டு பாம்பை அடித்து கொன்று சாக்கடையில் வீசியுள்ளனர். இந்த […]
அரசரடி வனப்பகுதியில் இரை தேடி வந்த பொழுது பாறையில் வழுக்கி விழுந்து காட்டெருமை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள மேகமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட அரசரடி வனப்பகுதியில் நேற்று வனத்துறையினர் ரோந்து பணி சென்ற பொழுது காட்டெருமை ஒன்று உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதை பார்த்த வனத்துறையினர், மேகமலை வனச்சரகர் அஜய்க்கு தகவல் கொடுத்தனர். இதன்பின் கால்நடை மருத்துவர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டார். பின் மருத்துவக் குழுவினர் காட்டெருமையை உடல் பிரேத பரிசோதனை செய்தார்கள். இதை தொடர்ந்து […]
புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள முருகன் புதூரில் கூலி தொழிலாளியான மோகன்குமார்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மோகன்குமார் கோமதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மோகன் குமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த மோகன்குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த […]
லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் மலை பாதையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி திம்பம் மலைப்பாதையின் 12-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயன்றது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் இருந்த கரும்புகள் சாலையில் சிதறியதால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து கடுமையாக […]
மோட்டார் சைக்கிள் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி பி.கே.எஸ் காலனியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குணாளன்(18) என்ற மகன் இருந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் சந்தோஷ்(22) என்பவரும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் குணாளன், சந்தோஷ் மற்றும் தனது நண்பர்களுடன் இணைந்து ஆழியாறுக்கு மோட்டார் சைக்கிளில் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு உள்ள அனைத்து இடங்களையும் […]
கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாப்பாக்குடி புது கிராமம் நடுத்தெருவில் சுப்பையா(53) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சுப்பையா மோட்டார் சைக்கிளில் முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் முக்கூடல்- கடையம் மெயின் ரோட்டில் சுப்பையா கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]
போடியில் தேசியக்கொடி ஏற்றுவதில் இரு தரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நேற்று சுதந்திர தின விழாவையொட்டி தேனி மாவட்டத்திலுள்ள போடியில் காங்கிரஸ் கட்சி நகர் தலைவர் முபராக் மந்திரி தலைமையில் சுதந்திர தின விழா நடைபெற்றது. அப்பொழுது காங்கிரஸ் கட்சியினர் பேண்ட் வாத்தியங்களுடன் நகரின் முக்கிய சாலையில் ஊர்வலமாக வந்து பின் தேவர் சிலை, இந்திரா காந்தி சிலை, வள்ளுவர் சிலை அருகே இருக்கும் கொடி கம்பங்களில் தேசிய கொடி ஏற்றினார்கள். இதன் பின்னர் பெருமாள் கோவில் […]
புகையிலைப் பொருள்களை கடத்தி வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த லோடு ஆட்டோவை காவல்துறையினர் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். ஆனால் லோடு ஆட்டோவில் இருந்தவர்கள் காவல்துறையினரை சோதனை செய்ய விடாமல் தடுத்துள்ளனர். இதனையடுத்து அந்த லோடு ஆட்டோவை காவல்துறையினர் சோதனை செய்ததில் 517 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் […]
தேனியில் விதிகளை மீறி செயல்பட்ட 3 வணிக நிறுவனங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தார்கள். தேனி மாவட்டத்தில் தொழிலாளர் உதவி ஆணையர் சிவகுமார் தலைமையில் தொழிலாளர் துறை அதிகாரிகள் வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டார்கள். இதில் மாவட்டத்தில் உள்ள 24 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 3 நிறுவனங்களில் பொட்டல பொருட்கள் விதி மீறல்கள் செய்யப்பட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த மூன்று நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு தலா ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்பட்டது. இது குறித்து உதவியாளர் சிவகுமார் கூறியுள்ளதாவது, […]
திறப்பு விழா செய்யப்பட்டும் செயல்பாட்டுக்கு வராத தொழிற் பயிற்சி நிலையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி-ஆலங்காயம் சாலையில் புதிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் கட்டப்பட்டிருக்கின்றது. இத்தொழிற்பயிற்சி நிலையத்தை சென்ற இரண்டு மாதங்களுக்கு முன்பாக காணொளி காட்சி மூலம் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிலையில் திறந்து வைக்கப்பட்டு இரண்டு மாதமாகியும் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. தற்பொழுது தனியார் கட்டிடத்தில் பல லட்சம் ரூபாய் வாடகை கொடுத்து […]
ஜோலார்பேட்டையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் தாமலேரிமுத்தூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்க எம்எல்ஏ முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தின் போது ஆட்சியர் பேசியுள்ளதாவது, வருடத்தில் நான்கு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்ற நிலையில் தற்போது ஆறு கிராம சபை கூட்டங்கள் நடத்த ஆணையிடப்பட்டிருக்கின்றது. கிராம சபை கூட்டத்தில் அனைத்து பொதுமக்கள், வாக்காளர் பங்கேற்று […]
இளம் பெண்ணை கடத்திச் சென்ற வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் ரொட்டி தோப்பு பகுதியை சேர்ந்த அப்பு என்பவர் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர் சில நாட்களுக்கு முன்பாக ஆம்பூர் பகுதி சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றதாக சொல்லப்படுகின்றது. இதுப்பற்றி பெண்ணின் தாயார் ஆம்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் […]
ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி பகுதியில் சுதந்திர தின விழா சிறப்பாக நடந்தது. இந்தியாவில் நேற்று 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அலுவலகத்தில் மாவட்ட திமுக பொறுப்பாளரும் எம்.எல்.ஏ-வுமான தேவராஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நாட்டறம்பள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பலர் கலந்துகொண்டார்கள். நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றினார். பின் […]
தற்போது பெரம்பலூரில் ஒரு சுதந்திரபோராட்ட தியாகி உயிருடன் இருக்கிறார். அவர் ஆலத்தூர் தாலுகா, காரை கிழக்கு தெருவில் வசித்து வரும் கிருஷ்ணசாமி ஆவார். இந்நிலையில் சுதந்திர போராட்ட தியாகி கிருஷ்ணசாமியை கவுரவப்படுத்தும் வகையில் தாசில்தார் முத்துகுமார் தலைமையில் அலுவலர்கள் அவரின் வீட்டிற்கே நேரடியாக சென்றனர். இதையடுத்து அலுவலர்கள் கிருஷ்ணசாமிக்கு பொன்னாடை அணிவித்து இனிப்புகளை வழங்கினர். அத்துடன் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினர் சில பேர் சுதந்திரதின விழா நடந்த இடத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் அமர்ந்திருந்த இடத்துக்கு கலெக்டர் […]
சுதந்திர தினத்தை முன்னிட்டு 13, 14, 15 ஆம் தேதிகள் தொடர் விடுமுறை விடப்பட்டது. இந்த விடுமுறையையொட்டி நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சுற்றுலாப்பயணிகள் திரண்டனர். கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்தனர். அந்த வகையில் நேற்று ஊட்டி அரசுதாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகையானது அதிகமாக இருந்தது. கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மலர்களை கண்டு அவர்கள் ரசித்தனர். இதையடுத்து சுற்றுலா பயணிகள் பெரிய புல்வெளி மைதானத்தில் குடும்பத்தினருடன் அமர்ந்து ஓய்வெடுத்தனர். […]
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகேயுள்ள நரசிங்கபுரம் மகாலட்சுமியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் தலையில் தேங்காய்உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. முன்பாக காப்புகட்டி விரதம் இருந்த பெண்கள் வலையபட்டியிலிருந்து சேர்வை ஆட்டம், வாணவேடிக்கையுடன் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜை நடந்தது. அதன்பின் நேர்த்திக்கடன் செலுத்தவந்த பெண்கள், ஆண்கள் என 50 பேர் கோயில் முன் வரிசையாக அமர்ந்தனர். அதனை தொடர்ந்து கோவில் பூசாரி தேங்காய்களை வைத்து பூஜைசெய்து, […]
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கடைகள், உணவு மற்றும் மோட்டார்போக்குவரத்து நிறுவனங்கள், வணிகவளாகங்கள் போன்றவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சுதந்திரதினத்தை முன்னிட்டு விடுமுறை விடப்படவேண்டும். இதை ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்படி தொழிலாளர் உதவி ஆணையர் சிவசிந்துவுக்கு தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் உத்தரவு பிறப்பித்தார். அந்த வகையில் மாவட்ட பகுதிகளில் தொழிலாளர் உதவி ஆணையர் தலைமையில் அதிகாரிகள் திடீரென்று ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வின்போது 48 கடைகள், 49 உணவு நிறுவனங்கள், 4 மோட்டார்போக்குவரத்து நிறுவனங்கள் என 101 நிறுவனங்களில் […]
நாடு விடுதலை அடைந்து 75 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் நாடு முழுதும் ஓராண்டுக்கு சுதந்திரதின கொண்டாட்டத்தில் ஈடுபடுவது என மத்திய அரசு முடிவு செய்தது. அந்த வகையில் கடந்த வருடம் சுதந்திரதினம் முதல் அது நடைமுறைக்கு வந்தது. ஓராண்டாக சுதந்திரதின திருநாள் அமுதப் பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் 76வது சுதந்திரதின விழா நேற்று நாடு முழுதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டதால் சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் களை கட்டியது. […]
கோவை மாவட்டம் வால்பாறை அருகேயுள்ள கருமலை எஸ்டேட் பகுதியில் வசித்து வருபவர் முருகேசன் (25). இவர் கோவையில் தங்கியிருந்து தனியார் உணவு விநியோக நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த 12-ஆம் தேதி இரவு 11:30 மணிக்கு இவர் கணபதி பகுதியிலுள்ள ஒரு வீட்டுக்கு உணவை விநியோகம் செய்துவிட்டு காந்திபுரம் திரும்பினார். இதையடுத்து அவர் கணபதி டெக்ஸ்டூல் பாலம் அருகில் வந்தபோது சாலையின் ஓரத்தில் தன் மோட்டார்சைக்கிளை நிறுத்தி சிறுநீர் கழித்தார். இந்நிலையில் அங்கு மோட்டார் சைக்கிளில் […]
கோவை மாவட்டம் பேரூர் அருகில் மத்வராயபுரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இருக்கிறது. இப்பள்ளியில் நேற்று 75-வது சுதந்திர தின விழா நடந்தது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியரான ஜெயந்தி தலைமைதாங்கினார். இவ்விழாவில் ஊராட்சி தலைவர் கிட்டு சாமி, முன்னாள் ஊராட்சி தலைவர் குணா, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் விஜய சேகர், வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இந்நிலையில் நிகழ்ச்சியின் போது அங்கு இருந்தவர்கள் ஊராட்சி தலைவர் தேசியக்கொடியை ஏற்றவேணடும் என கூறினர். இதற்கு தலைமை […]
நேற்று 75-வது சுதந்திரதினத்தை முன்னிட்டு எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக கோவை உக்கடம் ஜி.எம்.நகரில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து அக்கட்சி நிர்வாகிகள் 75 அடி நீள தேசியக்கொடியுடன் அணிவகுத்து ஊர்வலமாக சென்றனர். இந்நிலையில் அவர்கள் சுதந்திர தினத்தை போற்றும் அடிப்படையில் முழக்கமிட்டனர். இவற்றில் கவுன்சிலர் அலிமாராஜா, மண்டல தலைவர் ராஜா உசைன், மாவட்ட தலைவர் முஸ்தபா, வர்த்தக அணி மாநில செயலாளர் அப்துல் கரீம், விமன் இந்தியா முவ்மென்ட் மாவட்ட தலைவர் காமிலா உட்பட பலர் […]
மேட்டூர் பூங்காவில் நேற்று அதிக அளவு சுற்றுலா பயணிகள் திரண்டதால் அதிக நுழைவு கட்டணம் வசூலானது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் பூங்காவிற்கு விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அதிக அளவு சுற்றுலா பயணிகள் மேட்டூருக்கு வந்தார்கள். ஒரு சிலர் பூங்காவை சுற்றிப் பார்த்த பிறகு அணையின் வலது கரையை பகுதியில் இருக்கும் பவள கோபுரத்திற்கு சென்று அணையின் அழகை ரசித்தார்கள். மேட்டூரில் சுற்றுலா […]