Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“பந்தலூர் அருகே குடியிருப்புகளை முற்றுகையிட்ட காட்டு யானை”…. பொதுமக்கள் பீதி….!!!!!!

பந்தலூர் அருகே குடியிருப்புகளை காட்டு யானை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து இருக்கின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் மழவன் சேரம்பாடியில் இருந்து காவாயில் செல்லும் சாலையில் அமைந்துள்ள குடியிருப்பையொட்டி காட்டு யானை ஒன்று நடந்தது.அப்போது சாலையில் சென்ற பொதுமக்களை துரத்தியது. இதனால் மக்கள் அச்சமடைந்தார்கள். நேற்று அய்யன்கொல்லி- கொளப்பள்ளி இடையேயான சாலையில் அமைந்திருக்கும் கோட்டப்பாடி விநாயகர் கோவில் அருகே காட்டி யானை ஒன்று புகுந்து குடியிருப்புகளை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கூடலூர்-மசினக்குடி இடையே போக்குவரத்து தொடக்கம்”…. பொதுமக்கள் நிம்மதி….!!!!!

மாயாற்றில் நீர்வரத்து குறைந்ததால் கூடலூர்-மசினகுடி இடையே போக்குவரத்து தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் சென்ற இரண்டு வாரங்களாகவே தொடர் கன மழை பெய்தது. இதன் விளைவாக மாயாறு, பாண்டியாறு உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் கரை புரண்டது. மேலும் மாயாறு குறுக்கே இருக்கும் தரைப்பாலும் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் கனரக வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது மழையின் தாக்கம் குறைந்து சென்ற இரண்டு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வாலிபரை தாக்கிய 6 பேர்…. திருவிழாவில் நடந்த சம்பவம்…. போலீஸ் நடவடிக்கை…!!

வாலிபரை தாக்கிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நீர்பழனியில் இருக்கும் கோவிலில் நேற்று முன்தினம் திருவிழாவை முன்னிட்டு புராண நாடகம் நடைபெற்றுள்ளது. அதை காண்பதற்காக ஏராளமான பொதுமக்கள் சென்றுள்ளனர். இந்நிலையில் முருகேசன் என்பவருக்கும், நாகராஜ் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது நாகராஜுக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த பாலாஜி, ராஜா, வெங்கடேசன், மதன்குமார், சதீஷ்குமார் ஆகிய 5 பேரும் இணைந்து முருகேசனை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த முருகேசன் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

காரை பின் தொடர்ந்து சென்ற போலீசார்…. தப்பி ஓடிய மர்ம நபர்கள்…. சோதனையில் தெரிந்த உண்மை…!!

காரில் மது பாட்டில்களை கடத்திய நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி அண்ணா நகரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனாலும் அந்த கார் நிற்காமல் அதிவேகமாக சென்றது. இதனால் போலீசார் அந்த காரை பின்தொடர்ந்து சென்றதால் மர்ம நபர்கள் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதனை அடுத்து போலீசார் நடத்திய சோதனையில் காரில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தனியாக இருந்த மனைவி…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சின்னகுக்குண்டி கிராமத்தில் விவசாயியான சுந்தரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா(26) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட சரண்யா பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்து சரண்யா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து வீட்டிற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மது போதையில் ரகளை செய்த பெயிண்டர்…. வாலிபரின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

பெயிண்டர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தோல்ஷாப் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெயிண்டரான மாரிமுத்து(26) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மாரிமுத்து கீழ்குப்பம் பகுதியில் இருக்கும் முடி திருத்தும் கடை அருகே வைத்து மது போதையில் சிலரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது முடி திருத்தம் செய்ய வந்த மைக்கேல் என்பவரிடமும் மாரிமுத்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதில் கோபமடைந்த மைக்கேல் சேவிங் செய்யும் கத்தியால் மாரிமுத்துவை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“உயர் படிப்பு படிக்க வேண்டும்” மறுப்பு தெரிவித்த பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உத்தமூப்பர்கொட்டாய் பகுதியில் சந்துரு(22) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கணினி அறிவியல் டிப்ளமோ படித்து முடித்த சந்துரு உயர் படிப்பு படிப்பதற்காக தனது பெற்றோரிடம் அனுமதி கேட்டுள்ளார். அதற்கு சந்துருவின் பெற்றோர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்து வாலிபர் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மனைவி இறந்த துக்கம் தாங்காமல்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மனைவி இறந்த துக்கத்தில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ஆவராணி பகுதியில் குமாரசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு அமிர்தவள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 மகன் 2 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அமிர்தவள்ளி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் மனமுடைந்த குமாரசாமி திடீரென வீட்டில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“பழ மரங்களை அகற்றுவதற்கு பதிலாக அந்நியநாட்டு மரங்களை அகற்ற வேண்டும்”…. பொதுமக்கள் கோரிக்கை…!!!!!

அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி வளாகத்தில் பழ மரங்களை அகற்றுவதற்கு பதிலாக அந்நிய நாட்டு மரங்களை முழுமையாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதிகளில் சென்ற 15 நாட்களுக்கு மேலாக தொடர் கனமழை பெய்தது. மேலும் சூறாவளி காற்று பலமாக வீசியதால் பல இடங்களில் வாழைகள் முறிந்து விழுந்தன. மரங்கள் மற்றும் கிளைகள் சரிந்து விழுந்து மின்கம்பங்கள் சேதமானது. மேலும் வீடுகள், கட்டிடங்கள் உள்ளிட்டவையும் சேதம் அடைந்தது. இதனால் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வாலிபருடன் ஏற்பட்ட தகராறு…. பேருந்து கண்டக்டரை தாக்கிய மர்ம கும்பல்…. போலீஸ் வலைவீச்சு…!!

தனியார் பேருந்து கண்டக்டரை தாக்கிய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கம்மங்காடு பகுதியில் மலையப்பன்(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் தனியார் பேருந்து புதுக்கோட்டையில் இருந்து பாச்சிக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது படிக்கட்டில் நின்று பயணம் செய்த வாலிபரை மலையப்பன் கண்டித்த போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த வாலிபர் ஆலங்குடி வடக்காடு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டர் மீது மோதிய வாகனம்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. கோர விபத்து…!!

ஸ்கூட்டர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஆம்பூரில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது ஸ்கூட்டரில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அவதானப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இறக்கி விடாமல் வேகமாக சென்ற வாலிபர்…. மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே குதித்த மாணவி…. போலீஸ் விசாரணை…!!

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே குதித்ததால் மாணவி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குந்துமாரனப்பள்ளி பகுதியில் 18 வயது மாணவி வசித்து வருகிறார். இவர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று மந்திரம் மஞ்சளகிரி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மாணவியை அவ்வழியாக சென்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் மாணவியை கல்லூரியில் இறக்கி விடாமல் அந்த வாலிபர் வேகமாக சென்றுள்ளார். இதனால் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

சைக்கிள் மீது மோதிய வேன்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. கரூரில் கோர விபத்து…!!

சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள சின்னையம்பாளையம் புதுப்பட்டி பகுதியில் நடராஜன்(61) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று குப்பாச்சி பகுதியில் நடராஜன் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த வேன் முதியவரின் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நடராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேலையை குறை கூறிய சக ஊழியர்…. தையல்காரருக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்..!!

தையல்காரர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் 9-வது தெருவில் சரவணன்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு கடையில் தையல்காரராக வேலை பார்த்து வருகிறார். அதே கடையில் சிவன் கோவில் தெருவை சேர்ந்த மாதவன் என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நீ சரியாக துணி வைக்கவில்லை என மாதவன் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த சரவணன் மாதவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது மாதவன் கத்திரிக்கோலால் சரவணன் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“தொடர் கனமழையால் அழுகிய மேரக்காய் கொடிகள்”…. கவலையில் விவசாயிகள்….!!!!!!

தொடர் கனமழை காரணமாக கூடலூரில் மேரக்காய் கொடிகள் அழுகியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான ஸ்ரீமதுரை, முதுகலை ஊராட்சிகள், பாடந்தொரை, கம்மாத்தி, குற்றிமுற்றி, ஒற்றவயல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மேரக்காய் விவசாயம் நடந்து வந்தது. இதனிடையே தொடர் கனமழை பெய்ததன் காரணமாக ஏராளமான தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த மேரக்காய் கொடிகள் அழுகிவிட்டது. மேலும் சூறாவளி காற்று வீசியதால் பல இடங்களில் பந்தல்கள் சரிந்து மேரக்காய் கொடிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றது. மேரக்காய் விளைச்சல் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“சிறந்த சமூக சேவைக்கான மாநில இளைஞர் விருது”…. கூடலூரைச் சேர்ந்த இளைஞருக்கு வழங்கல்…!!!!!!

சிறந்த சமூக சேவைக்கான மாநில இளைஞர் விருது கூடலூரை சேர்ந்த முகமது ஆஷிக் என்பவருக்கு முதல்வர் வழங்கினார். இந்தியா முழுவதும் இன்று 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழா கொண்டாடப்பட்டது. இதனால் தமிழக அரசின் சார்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார். இதில் சிறந்த சமூக சேவை செய்ததற்காக நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கூடலூர் ஜீவசக்தி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“இருட்டனை, மேல்சாத்தம்பூர் கிராமங்களில் செயல்பட்டு வரும் உழவர் நலத்துறை திட்ட பணிகள்”…. அதிகாரி ஆய்வு…!!!!!!

இருட்டனை, மேல்சாத்தம்பூர் உள்ளிட்ட கிராமங்களில் உழவர் நலத்துறை திட்ட பணிகளை அதிகாரி ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி அருகே இருக்கும் மேல்சாத்தம்பூர், இருட்டனை உள்ளிட்ட கிராமங்களில் வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்ட பணிகளை விதைச்சான்று மற்றும் அங்கக சான்றளிப்புத்துறை வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் 2021-22 ஆம் வருடத்திற்கான ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செய்த திட்டப்பணிகளை பார்வையிட்டார். பின் பண்ணை கருவிகள், தென்னங்கன்றுகள், கைத்தெளிப்பான்கள், தார்பாய்கள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“மகா மாரியம்மன் கோவில் திருவிழா”…. தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக வந்த மக்கள்….!!!!!

நாமக்கல் கவராநகர் மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு பொதுமக்கள் வந்தார்கள். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள என்.கொசவம்பட்டி கவரா நகர் மகா மாரியம்மன் கோவில் திருவிழாவானது வருகின்ற 21ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. இதனால் பக்தர்கள் நேற்று காவேரி ஆற்றிற்கு சென்று பம்பை, செண்டை மேளம் முழங்க தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக சென்றார்கள். மாலையில் பொங்கல் வைத்து பூஜை செய்தனர். இவ்விழாவையொட்டி வருகின்ற […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சமையல் செய்து கொண்டிருந்த பெண்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

புடவையில் தீப்பிடித்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள சைதாப்பேட்டை பகுதியில் மணியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டில் சமையல் செய்வதற்காக மண்ணெண்ணெய் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மணியம்மாளின் புடவையில் தீ பற்றிக்கொண்டது. இதில் மணியம்மாளின் உடல் முழுவதும் தீ பற்றி எரிந்தது. அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக சென்று தீயை அணைத்தனர். அன்பின் மணியம்மாளை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

6 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. தொழிலாளிக்கு தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள கிளித்தான்பட்டரை பகுதியில் அப்துல்கனி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அப்துல்கனி அதே பகுதியில் வசிக்கும் 1-ஆம் வகுப்பு சிறுமியை அழைத்து சென்று ஜூஸ் வாங்கி கொடுத்துள்ளார். அதன்பின் மதுபோதையில் இருந்த அப்துல்கனி சிறுமியை ஒதுக்குப்புறமாக அழைத்துச் சென்றுள்ளார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து அப்துல்கனியிடம் விசாரித்துள்ளனர். அப்போது அவர் சிறுமிக்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வி.பி.எம்.எஸ் நகர் பகுதியில் குமார பாலசுதர்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெள்ளக்கோவில் அருகில் உள்ள தனியார் நூல் மில்லில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சாமுண்டீஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 12 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் வேலைக்கு சென்ற குமார பாலசுதர்சன் மாலையில் வீட்டிற்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரோந்து சென்ற போலீசார்…. சோதனையில் சிக்கிய 350 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்….!!!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நெல்சன், ஏட்டு செல்வகுமார் போன்றோர் நேற்று முன்தினம் இரவு குளச்சல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் லியோன் நகர் பகுதியில் சென்ற போது, அங்கு மறைவான இடத்தில் சந்தேகப்படும் விதமாக பிளாஸ்டிக் கேன்கள் இருந்ததை கண்டனர். உடனடியாக காவல்துறையினர் அவற்றை சோதனை மேற்கொண்டபோது, அதில் மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய விலை மண்ணெண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் காவல்துறையினர் அவற்றை பறிமுதல் செய்து குளச்சல் போலீஸ் நிலையத்துக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தொடர் விடுமுறை!…. குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்…. வெளியான புகைப்படம்…..!!!!

75வது சுதந்திரதினம் இன்று நாடு முழுதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலாதலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் களை கட்டியது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அதிகாலையிலேயே சுற்றுலா பயணிகள் திரண்டு வந்தனர். அங்கு அவர்கள் கடற்கரையில் திரண்டு சூரியஉதயத்தை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். இந்நிலையில் பலர் தங்களது செல்போனில் செல்பி எடுத்துக் கொண்டனர். இதையடுத்து முக்கடல் சங்கமத்தில் புனிதநீராடி பகவதியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். அதன்பின் சுற்றுலா பயணிகள் கடலின் நடுவே […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அமைச்சர் கார் மீது வீசப்பட்ட செருப்பு…. கண்டனம் தெரிவித்த ஷாநவாஸ் எம்.எல்.ஏ….!!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவனின் 60வது பிறந்தநாள் விழா கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியிலுள்ள அம்பேத்கர் சிலை முன் நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் ஷாநவாஸ் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு கேக் வெட்டினார். இதையடுத்து அவர் நிரூபர்களிடம் பேசியதாவது “தமிழக அரசியல் கலாசாரத்தில் பா.ஜனதா கட்சி அதன் பன்முகத் தன்மையை காட்டி வருகிறது. அக்கட்சியின் அணுகு முறை எவ்வளவு கீழ்த் தரமாக இருக்கும் என்பதற்கு மதுரையில் நடைபெற்ற சம்பவம் சாட்சியாக உள்ளது. சென்ற 10 தினங்களுக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண் மருத்துவரிடம் ரூ.13 லட்சத்தை மோசடி செய்த போலி டாக்டர்…. பின் நடந்த அதிரடி சம்பவம்….!!!!

சென்னை அடையாறு பகுதியில் வசித்து வரக்கூடிய பெண் மருத்துவர் ஒருவர், இணையதளம் வாயிலாக திருமண தகவல் மையம் ஒன்றில் பதிவு செய்து மாப்பிள்ளை தேடி வந்துள்ளார். இந்த பெண் மருத்துவரின் தகவலை சென்னை நாவலூரை சேர்ந்த கார்த்திக்ராஜ் என்ற தினேஷ் கார்த்திக் (28) பார்த்துள்ளார். உடனடியாக தன்னை மருத்துவர் என அறிமுகப்படுத்தி கொண்ட கார்த்திக்ராஜ், அந்த பெண் மருத்துவருடன் பழகியுள்ளார். அத்துடன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கார்த்திக்ராஜ் கூறி, அவரிடமிருந்து ரூபாய்.12 லட்சத்து 95 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண் பயணியிடம் நகை பறிப்பு…. அதிகாரிகள் போல் நாடகமாடிய 2 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமானம் நிலையத்திற்கு இலங்கையைச் சேர்ந்த நதிஷா ரோஷினி (47), வசீகா (45) போன்றோர் சென்ற 8-ஆம் தேதி அதிகாலை கொழும்பிலிருந்து பயணிகள் விமானத்தில் வந்தனர். இவர்கள் சுங்க இலாகா மற்றும் குடிஉரிமை சோதனையை முடித்து விட்டு வெளியே வந்தனர். இதையடுத்து சென்னை மண்ணடி செல்வதற்காக விமான நிலையத்திலுள்ள மெட்ரோ ரயில் நிலையத்துக்கு நடந்து சென்றனர். அப்போது கார் பார்க்கிங் அருகே நடந்து வந்தபோது அவர்களை 2 பேர் வழிமறித்து, “நாங்கள் சுங்கத்துறை அதிகாரிகள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மது குடிக்காதீங்க!… காந்தி போல் வேடமணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய குடும்பத்தினர்….!!!!

சென்னை புளியந்தோப்பு குட்டிதம்பிரான் தெருவில் வசித்து வருபவர் நாகராஜன் (55). இவர் மகாத்மாகாந்தியை போல் வேடம் அணிந்து பொதுமக்களிடம் அவரது கொள்கைகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா முழுதும் தன் மனைவி, மகள் ஆகியோருடன் நாகராஜன் பயணம் மேற்கொண்டு காந்திகொள்கை பற்றி மக்களிடம் பேசி வருகிறார். இந்நிலையில் நேற்று புளியந்தோப்பு கொடுங்கையூர் பகுதியிலுள்ள மதுக்கடை முன் காந்தி வேடம் அணிந்த நாகராஜன் தன் குடும்பத்தினருடன் மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அங்குவந்த மதுபிரியவர்களிடம் இருகைகளையும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

டார்ச்சர் கொடுத்த கல்லூரி பேராசிரியர்கள்…. விபரீத முடிவு எடுத்த நர்சிங் கல்லூரி மாணவி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

நர்சிங் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நகை செய்யும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கார்த்திகாதேவி என்ற மகள் இருந்துள்ளார். இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் தொடர்ந்து கல்லூரி மாணவி கார்த்திகாதேவிக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சாலை விபத்துகளை தடுக்க…. ரூ.2 கோடியில் 4 வழிச்சாலை…. அரசு வெளியிட்ட தகவல்….!!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பல்லடம் ரோடு வழியே தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களிலிருந்து பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு போகும் முக்கிய சாலை என்பதால் எப்போதும் வாகன போக்குவரத்து மிகுந்து காணப்படும். இந்நிலையில் பொள்ளாச்சியிருந்து புளியம்பட்டி வரை 4 வழிசாலை அமைக்கப்பட்டு இருக்கிறது. ராசக்கா பாளையத்தில் மட்டும் இருவழிச்சாலையாக இருக்கிறது. இதன் காரணமாக அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில் விபத்துக்களை தடுப்பதற்கு இருவழிச்சாலையை 4 வழிச்சாலையாக மாற்றப்பட இருக்கிறது. இதனால் சாலை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

டாஸ்மாக் மதுபான கடை ஊழியர் வெட்டி கொலை…. வெளியான பரபரப்பு தகவல்…..!!!!!

கோவை மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் அருகில் சிறுமுகையை அடுத்த வெள்ளிக்குப்பம் பாளையத்தில் டாஸ்மாக் மதுபான கடை இருக்கிறது. அதனருகே உள்ள பாரில் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் கண்டணப் பட்டியைச் சேர்ந்த காளையப்பன் (27) என்பவர் ஊழியராக சென்ற 3 மாதமாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் பாரின் உள்அறையில் 2 ஊழியர்கள் தூங்கிக்கொண்டிருந்தனர். இதனிடையில் அறைக்கு வெளியே காளையப்பன் சமையல் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது திடீரென்று அங்குவந்த அடையாளம் தெரியாத சில மர்மஆசாமிகள் காளையப்பனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (15.08.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட் 15) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, 15ஆம் தேதி முதல் 20 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு…. சிற்பி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சிற்பி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவினாசி-மங்கலம் சாலையில் சிவலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோவிந்தராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள சிற்ப சாலையில் சிற்பியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கோவிந்தராஜூக்கும் இவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்துள்ளது. இதில் மனமுடைந்த கோவிந்தராஜ் வீட்டில் யாருமில்லாத சமயத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையறிந்த அவினாசி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருந்த தொழிலாளி…. கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பகுதியில் நித்தியானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ்குமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சதீஷ்குமார் முத்தையாபுரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கிருஷ்ணாநகர் பகுதியில் வசிக்கும் பாலகிருஷ்ணன், பூவிழிராஜா, விமல் ஆகியோர் மது குடிப்பதற்கு சதீஷ்குமாரிடம் பணம் கேட்டுள்ளனர். அதற்கு சதீஷ்குமார் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் சதீஷ்குமாருக்கு கொலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இணையத்தில் கசிந்த விக்ரம் திரைப்படத்தின் கதை”…. கவலையில் படக்குழு….!!!!!!!

விக்ரம் நடிப்பில் வெளியாக இருக்கும் கோப்ரா திரைப்படத்தின் கதை இணையத்தில் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சியான் விக்ரம் கோப்ரா திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஸ்ரீநிதி செட்டி ஹீரோயினாக நடிக்க, ஜான் விஜய், மிருணாளினி, கனிகா, இர்பான் பதான், மியா ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க, […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உடல் நலக்குறைவால் இறந்த சிறுமி…. தந்தை எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மகள் இறந்த துக்கத்தில் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி மேற்கு எஸ்.பி.ஐ காலனியில் செந்தில் முருகன்(37) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் வங்கியில் கடன் வாங்கி கொடுக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஜூன் மாதம் செந்திலின் மகள் ஸ்ரீநிதி(11) உடல்நலக் குறைவு காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார். இதனை நினைத்து மன உளைச்சலில் இருந்த செந்தில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கடித்து குதறிய மர்ம விலங்கு…. இறந்து கிடந்த ஆடுகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

மர்ம விலங்கு கடித்து ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீரணாமூர் கிராமத்தில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று காலை பட்டியில் அடக்கப்பட்டு இருந்த 7 ஆடுகள் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த கோவிந்தசாமி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர் சபரிமலைநாதன் ஆகியோர் இறந்து கிடந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மரத்தின் மீது மோதிய ஆம்புலன்ஸ்…. காயமடைந்த 2 பேர்…. விழுப்புரத்தில் கோர விபத்து…!!

ஆம்புலன்ஸ் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிவராகநல்லூர் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வெடி விபத்தில் பாலமுருகனுக்கு காயம் ஏற்பட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனை அடுத்து மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ்சில் பாலமுருகனை உறவினர்கள் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த ஆம்புலன்ஸை பாலசுப்பிரமணியன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோனேரிகுப்பம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விதிமுறையை மீறிய ஆம்னி பேருந்துகள்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

விதிமுறைகளை மீறிய ஆம்னி பேருந்து ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து, ஆம்னி பேருந்து, வேன் ஆகியவற்றை போலீசார் சோதனை செய்துள்ளனர். அப்போது விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 21 ஆம்னி பேருந்து ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். மேலும் அவர்களிடமிருந்து 18000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

திடீரென காணாமல் போன மாணவி…. பெற்றோர் அளித்த புகார்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மாணவியை கடத்தி சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்பெரும்பாக்கம் பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் உடல்நலம் சரியில்லாமல் வீட்டில் இருந்த மாணவி திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் விஜய்(21) என்பவர் ஆசை வார்த்தைகள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கிணற்றிலிருந்து கேட்ட சத்தம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. பத்திரமாக மீட்ட தீயணைப்புதுறையினர்….!!

குடிபோதையில் கிணற்றுக்குள் விழுந்தவரை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் பகுதியில் சுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. அதில் சுமார் 7 அடி அகலமும் 30 அடி ஆழமும் உடைய கிணறு உள்ளது. இந்நிலையில் அந்த கிணற்றுக்குள் இருந்து ‘காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்’ என்று சத்தம் கேட்டுள்ளது. அந்த சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தபோது ஒருவர் உள்ளே இருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் பல்லடம் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“சிறப்பாக பணியாற்றிய கிருஷ்ணகிரி தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர்”…. மத்திய அரசின் பதக்கம்….!!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் மத்திய அரசின் பழக்கம் பெறுகின்றார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குமாரசாமிபேட்டையில் சேர்ந்தவர் எஸ்.சசிகலா. இவர் சென்ற 2004 ஆம் வருடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தார். பின் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் பணி புரிந்த நிலையில் பதவி உயர்வு பெற்று போலீஸ் இன்ஸ்பெக்டராக ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நியமிக்கப்பட்டார். 2017 ஆம் வருடம் முதல் 2020 ஆம் வருடம் வரை 14 போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“கொதிக்கும் எண்ணெயில் கையால் அதிரசம் எடுத்து சாமிக்கு சிறப்பு வழிபாடு”…. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு…!!!!!!

போச்சம்பள்ளி அருகே சின்னம்மாள் கோவிலில் கொதிக்கும் எண்ணெயில் பக்தர்கள் கையால் அதிரசம் எடுத்து சாமிக்கு படைத்து வழிபாடு செய்தார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜம்புகுட்டப்பட்டி அருகே இருக்கும் வண்டிக்காரன் கொட்டாய் கிராமத்தில் சென்னம்மாள் கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை நடைபெற்றது. இதில் நேற்று முக்கிய நிகழ்வாக கொதிக்கும் எண்ணெயில் அதிரசம் சுட்டு கைகளில் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கொதிக்கும் எண்ணெயிலிருந்து அதிரசங்களை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“மூதாட்டியை தாக்கி நகையை பறித்துச் சென்ற வாலிபர்”…. கைது செய்த போலீசார்….!!!!!

மூதாட்டியை தாக்கி நகையை பறித்து சென்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பில்லம்மா என்கின்ற மூதாட்டி தனியாக வசித்து வருகின்றார். நேற்று முன்தினம் அங்கு வந்த வாலிபர் ஒருவர் மூதாட்டியை கட்டையால் தலையில் அடித்து விட்டு அவர் காதில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க கமலை பறித்துக் கொண்டு தப்பிவிட்டார். பின் மூதாட்டியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து, மூதாட்டியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்கள். இதை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“நச்சலூர் அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்ட மோட்டார் சைக்கிள்கள்”…. 2 பேர் உயிரிழப்பு…!!!!!

நச்சலூர் அருகே இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உயிரிழந்த நிலையில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். கரூர் மாவட்டத்திலுள்ள கஸ்பா பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவர் தனது வேலை நிமித்தமாக பெட்டவாய்த்தலைக்கு மோட்டார் சைக்கிளில் வந்துவிட்டு இனங்கூருக்கு சென்று கொண்டிருந்தார். இது போலவே திருச்சி சிறுகமணியை சேர்ந்த சதீஷ்குமார், பெட்டவாய்த்தலையை சேர்ந்த ரமேஷ் உள்ளிட்ட 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இனுங்கூரிலிருந்து பெட்டவாய்த்தலைக்கு வந்து கொண்டிருந்தார்கள். இந்நிலையில் இந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மின் அலங்காரத்தில் ஜொலிக்கும் கரூர் ரயில் நிலையம்”…..!!!!!!

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கரூர் ரயில் நிலையம் மின் அலங்காரத்தில் ஜொலிக்கின்றது. இந்தியாவில் ஆகஸ்ட் 15ஆம் தேதி 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது. இதற்காக நாட்டில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வருகின்றது. இந்நிலையில் கரூர் ரயில் நிலையம் வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருக்கின்றது. நமது தேசியக்கொடி நிறத்தில் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 1/2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்”…. கைது செய்த போலீசார்….!!!!!!

குமரி வழியாக கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற ஒன்றரை டன் ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தார்கள். கன்னியாகுமரி மாவட்டம் வழியாக அடிக்கடி கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகின்றது. இதை தடுக்கும் விதமாக போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் களியக்காவிளை காவல் துறையினர் குழித்துறை பழைய பாலத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்கள். அப்பொழுது வேகமாக வந்த காரை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் 1 1/2 டன் அரிசி இருந்தது தெரியவந்தது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“வட்ட வழங்கல் அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த மீனவர்”…. போலீஸ்சார் வலைவீச்சு….!!!!

வட்ட வழங்கல் அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த மீனவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள். கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராம மீனவர்களுக்கு மீன்பிடி படகுகளுக்கு தேவையான மண்ணெண்ணெய் அரசு சார்பாக மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சிலர் இந்த மண்ணெண்ணையை பாதுக்கி வைத்து கேரளாவுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வருவது தொடர்ந்து நடந்து வருகின்றது. இந்த நிலையில் ராமன்துறை பகுதியைச் சேர்ந்த மீனவர் ஜேசுபாலன் என்பவர் அவரின் வீட்டில் சட்ட விரோதமாக மானிய […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“உறவினரிடம் 70 லட்சம் கடன் பெற்று மோசடி”… 4 பேர் மீது வழக்குப்பதிவு….!!!!!

நாகர்கோவிலில் 4 பேர் உறவினரிடம் 70 லட்சம் கடன் வாங்கி மோசடி செய்த நிலையில் அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பொதுப்பணித்துறை அலுவலக சாலை சிதம்பர நகர் சந்திப்பு பகுதியை சேர்ந்த பாரதி என்பவரிடம் உறவினர்களான சிவகார்த்திக், அம்பிகா, ராஜேஸ்வரி, சுடலைமுத்து உள்ளிட்ட நான்கு பேரும் புதிய தொழில் தொடங்குவதாக சிவகார்த்திக் கூறி கடனாக பணம் கேட்டதாக சொல்லப்படுகின்றது. இதனால் பாரதி முதலில் 19,97,000 கொடுத்துள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“இயற்கை விவசாய திருவிழா”…. காண வந்த ஊர் பொதுமக்கள்…. விவசாயிகளுக்கு பாராட்டு சான்றிதழ்…..!!!!

திண்டுக்கல் மாவட்டம் ஓம் சாந்தி மேல்நிலைப் பள்ளியில் இயற்கை விவசாய திருவிழாவானது நேற்று துவங்கியது. இதனை முன்னிட்டு இயற்கை முறையில் விளைந்த காய்கறிகள், பழங்கள், சிறு தானியங்கள், சிறுதானிய உணவுவகைகள், மரச்செக்கு எண்ணெய், மாட்டு சாணத்தில் தயாரிக்கப்பட்ட அகல் விளக்கு, ரசாயனம் இல்லாத சாம்பிராணி, பனை ஓலை கூடை மற்றும் அலங்கார பொருட்கள், நாட்டு மாட்டு நெய், ஆயுர்வேத மருந்துகள் ஆகியவை கண்காட்சியாக வைக்கப்பட்டு இருந்தது. இதேபோன்று இயற்கை முறையில் விவசாயம் செய்வதற்கு உரிய இடுப்பொருட்கள், பாரம்பரிய […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சுதந்திரதின விழா எதிரொலி!…. பேருந்து நிலையத்தில் மூவர்ணத்தில் ராட்சத பலூன்….!!!!

நாடு முழுதும் 75வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு வீடுகள், அரசு அலுவலகங்கள் உட்பட அனைத்து கட்டிடங்களிலும் 3 நாட்கள் தேசியகொடி பறக்கவிடப்படுகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாநகராட்சியில் 40,000 வீடுகள், பழனி நகராட்சியில் 12,875 வீடுகள், கொடைக்கானல் மற்றும் ஒட்டன்சத்திரம் போன்ற நகராட்சிகளில் தலா 12,000 வீடுகள், 23 பேரூராட்சிகளில் 1 லட்சத்து 7ஆயிரத்து 100 வீடுகள், 306 ஊராட்சிகளில் 4 லட்சத்து 6 ஆயிரத்து 437 வீடுகள் என மொத்தம் 5 லட்சத்து 91 ஆயிரத்து […]

Categories

Tech |