Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“கமுதி அருகே முற்கால பாண்டியர் மன்னர் கால சிற்பம் கண்டெடுப்பு”….!!!!!!

கமுதி அருகே முற்கால பாண்டியர் மன்னர் கால சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி தாலுகாவிற்கு உட்பட்ட முஷ்டக்குறிச்சி கிராமத்தில் பழமையான நடுகல் சிற்பம் இருப்பதாக வரலாற்று ஆய்வாளர் சக்திபாலன் என்பவர் வரலாற்று ஆய்வாளர்களுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வரலாற்று ஆய்வாளர் செல்வம், தேவாங்கர் கலைக்கல்லூரி வரலாற்றுத் துறை உதவி பேராசிரியர் ரமேஷ் உள்ளிட்டோர் நேரில் சென்று சிற்பத்தை ஆய்வு செய்தார்கள். இது குறித்து அவர்கள் கூறியுள்ளதாவது,  இந்த நடுக்கல் சிற்பமானது முற்கால […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனையின் போது…. வசமாக சிக்கிய டிரைவர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

டிராக்டரில் மணல் கடத்திய டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் காவல்துறையினர் பத்மநாபமங்கலம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அந்த வழியாக வந்த டிராக்டரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் டிராக்டரில் சட்டவிரோதமாக ஆற்று மணல் கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் டிராக்டர் டிரைவரான பேட்மா நகர் பகுதியில் வசிக்கும் பலவேசம் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடமிருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“நாலுபனை கிராமத்தினர் மனு”…. ஆட்சியர் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி….!!!!!!

நாலுபனை கிராமத்தினர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தார்கள். ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள தங்கச்சிமடம் அருகே இருக்கும் நாலுபனை பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஒன்று சேர்ந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு ஒன்றை கொடுத்தார்கள். அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளதாவது, எங்கள் பகுதியில் 400க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றோம். எங்களுக்கு சாலை வசதி இல்லை. இதனால் அவசர காலங்களில் மருத்துவமனைக்கு செல்வதற்கு வாகனங்கள் உள்ளே வந்து செல்ல முடியாததால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றோம். மேலும் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கொட்டும் மழையில் வேலை பார்த்த தொழிலாளர்கள்…. மரம் முறிந்து விழுந்து பலியான பெண்…. நீலகிரியில் பரபரப்பு…!!

வேலை பார்த்து கொண்டிருந்த போது மரம் முறிந்து விழுந்து பெண் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஓவேலி பேரூராட்சி ஹெல்லி தனியார் எஸ்டேட்டில் பெண் தொழிலாளர்கள் கொட்டும் மழையில் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பெண் தொழிலாளர்கள் மீது மரம் முறிந்து விழுந்தது. அந்த மரத்தின் அடியில் 2 தொழிலாளர்கள் சிக்கி சத்தம் போட்டனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டனர். ஆனால் மரத்தின் அடியில் சிக்கி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிறுமியுடன் ஏற்பட்ட பழக்கம்…. தாயை தகாத வார்த்தைகளால் பேசிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சிறுமியின் தாயை தகாத வார்த்தைகளால் திட்டிய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டரமாணிக்கம் பகுதியில் பாண்டி(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாண்டிக்கு 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த சிறுமியின் தாய் பாண்டியை கண்டித்துள்ளார். அப்போது பாண்டி சிறுமியின் தாயை தகாத வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய லாரி…. நண்பருடன் சென்ற வாலிபர் பலி…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி பகுதியில்  நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜான்டேவிட்ராஜ்(23) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு தஞ்சாவூரை சேர்ந்த அருண்(23) என்ற நண்பர் உள்ளார். இருவரும் கோவையில் இருக்கும் தனியார் ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தனர். நேற்று முன்தினம் ஜான்டேவிட்ராஜ் அருணுடன் கோவையில் இருந்து தஞ்சாவூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இவர்கள் கரூர் மாவட்டத்தில் உள்ள […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எரிந்து நாசமான குடிசை வீடு…. உடல் கருகி இறந்த கன்றுகுட்டி…. நொடியில் உயிர் தப்பிய தம்பதியினர்….!!

குடிசை வீடு தீப்பிடித்து எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பன்னிஅள்ளி கிராமத்தில் பெரியண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு துளசியம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர்கள் குடிசையில் வசித்து வருகின்றனர். மேலும் பெரியண்ணன் பசு மாடும், கன்று குட்டியும் வளர்த்து வந்துள்ளார். நேற்று மின்கசிவு காரணமாக குடிசையில் திடீரென  தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அங்கு சென்று கணவன், மனைவி ஆகிய இருவரையும் பத்திரமாக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட வாலிபர்…. நீண்ட நேர தேடுதல் வேட்டை…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி-தர்மபுரி சாலையில் மஞ்சமேடு பகுதியில் இருக்கும் தென்பெண்ணை ஆற்றில் தினமும் ஏராளமானோர் குளித்து செல்கின்றனர். நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பலர் ஆற்றுக்கு குளிக்க சென்றனர். இந்நிலையில்  தர்மபுரி காந்தி நகரை சேர்ந்த அறிவழகன்(26) என்பவர் குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அவரை தண்ணீர் அடித்து சென்றது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு  வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அழுகிய நிலையில் ஓடையில் கிடந்த சடலம்….. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கழிவுநீர் ஓடையில் தொழிலாளி அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அவ்வை சண்முகம் சாலையோரத்தில் இருக்கும் கழிவு நீரில் அழுகிய நிலையில் ஆணின் சடலம் கிடைப்பதை பார்த்து அதிர்ச்சடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எரிந்த நிலையில் கிடந்த சடலம்…. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் விசாரணை….!!

புதருக்கு அருகே எரிந்த நிலையில் சடலமாக கிடந்த நபரின் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் அருகே சாலையோரம் இருக்கும் புதரில் எரிந்த நிலையில் ஆணின் சடலம் கிடப்பதை பார்த்த அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சூறைக்காற்றில் சேதமடைந்த அரசு பள்ளியின் மேற்கூரை…. வகுப்பறைக்குள் நிற்கும் தண்ணீர்…. அதிர்ச்சியில் ஆசிரியர்கள்…!!

சூறைக்காற்றில் அரசு பள்ளியின் மேற்கூரை சேதமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வீரநாராயணமங்கலம் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 34 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் இருக்கும் கான்கிரீட் கட்டிடத்தில் 2 வகுப்புகளும், ஓட்டு கட்டிடத்தில் 3 வகுப்புகளும் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று காலை ஓட்டு கட்டிடத்தின் மேற்கூரை ஓடுகள் மழை மற்றும் சூறைகாற்றால் பறந்து விழுந்து கிடப்பதை பார்த்து ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் வகுப்பறைக்குள் தண்ணீர் தேங்கி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கல்லூரி வாகனம்…. துடிதுடித்து இறந்த மூதாட்டி…. குமரியில் கோர விபத்து….!!

தனியார் கல்லூரி வாகனம் மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருப்பதிசாரத்தில் பிச்சை பால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தவமணி(81) என்ற மனைவி இருந்துள்ளார்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிச்சைபால் இறந்துவிட்டதால் தவமணி தனது தம்பியான இஸ்ரவேல் என்பவரது பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது தம்பியை தவமணி கரையான்குழிக்கு சென்று பார்த்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டார். இவர் நால்கால்மடம் பகுதியில் நடந்து சென்ற போது பின்னால் வேகமாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தாய் இறந்த துக்கம்…. மகள் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

தாய் இறந்த துக்கத்தில் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முத்துலாபுரத்தில் ராக்கம்மாள்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகாத நாகலட்சுமி(44) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 6-ஆம் தேதி உடல்நல குறைவு காரணமாக ராக்கம்மாள் உயிரிழந்தார். இந்நிலையில் தாய் இறந்த துக்கத்தில் இருந்த நாகலட்சுமி யாரிடமும் பேசாமல் அழுது கொண்டே இருந்துள்ளார். நேற்று காலை அப்பகுதியில் இருக்கும் தோட்டத்து கிணற்றில் குதித்து நாகலட்சுமி தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கணவரை தீர்த்து கட்டிய மனைவி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…. போலீஸ் நடவடிக்கை…..!!!!

கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் 4வது வட்டம் புண்ணாக்கு தெருவிலுள்ள என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வந்தவர் நாராயணன் மகன் சண்முகம் (50). இவர் என்.எல்.சி. 1வது சுரங்கத்தில் இன்கோசர்வ் சொசைட்டி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு நிர்மலா(எ)ஷகிலா(48) என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள், ஒரு மகன் இருக்கின்றனர். இவர்களில் மூத்தமகளுக்கு திருமணம் நடைபெற்று, அவர் விஜயவாடாவில் வசித்து வருகிறார். 2வது மகள் மற்றும் மகன் சேலத்திலுள்ள பாட்டி வீட்டில் வசித்து வருகின்றனர். இதில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“மருந்து, மாத்திரை வாங்க துட்டு இல்லை”…. வாலிபர் செய்த காரியம்…. கலெக்டரிடம் மனு….!!!!

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்றுகாலை 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வந்தார். இதையடுத்து அவர் முகத்தில் சந்தனம் பூசிக்கொண்டும், நெற்றியில் குங்குமம் வைத்துக்கொண்டும் நூதனமுறையில் போராட்டத்தில் ஈடுபட்டார். அத்துடன் தான் கொண்டு வந்திருந்த மருந்து, மாத்திரைகளை தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவரிடம்விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் விருத்தாசலம் அடுத்த கார்குடல் பகுதியில் வசித்து வரும் மணிகண்டன் (37) என்பதும், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“கோட்டாட்சியர் அலுவலகம்”… மகள், மருமகளுடன் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி…. போலீஸ் விசாரணை…..!!!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள தில்லைவிடங்கன் தெற்கு தெருவில் வசித்து வருபவர் சந்தானம். இவருக்கு ராஜவல்லி (80) என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு பீமாராவ் (56), ராமாராவ்(50) என்ற 2 மகன்களும், சஞ்சய் காந்தி (54) என்கிற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜவல்லி, தன் மகள் சஞ்சய் காந்தி, மருமகளான ராமாராவ் மனைவி கயல்விழி போன்றோருடன் நேற்று சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்து, தங்களது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கிருந்த காவல்துறையினர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாணவர் விடுதியை இடிப்பதில் ஒரு சிக்கல் இருக்கு…. என்னென்னு தெரியுமா?…. அதிகாரி வெளியிட்ட தகவல்….!!!!

கோவை மாவட்டம் பாலசுந்தரம் சாலையில் ஆதி திராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் டாக்டர் அம்பேத்கர் ஆதிதிராவிடர் நல மாணவர்கள் விடுதி கட்டிடம் இருக்கிறது. இங்கு அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தங்கியிருந்தனர். 30 வருடம் பழமையான விடுதி கட்டிடம் உறுதித்தன்மை இழந்து இடிந்துவிழும் நிலை ஏற்பட்டது. ஆகவே அந்த கட்டிடத்தை இடித்து அகற்ற தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுத்துறை (தாட்கோ) முடிவு செய்தது. இதன் காரணமாக அங்கு தங்கியிருந்த மாணவர்கள் அருகேயுள்ள விடுதிகளுக்கு மாற்றப்பட்டனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இங்கு பிளாஸ்டிக் பொருட்களை யூஸ் பண்ண கடைகளுக்கு…. ரூ.15 ஆயிரம் அபராதம்…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

சென்னையில் மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் கடற்கரை பகுதிகளை பிளாஸ்டிக் இல்லா கடற்கரை பகுதிகளாக மாற்ற கடந்த 5- ஆம் தேதி முதல் தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் என்று மாநகராட்சி சார்பாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இருப்பதாவது, இங்கு உள்ள கடற்கரை பகுதிகளை பிளாஸ்டிக் இல்லாதவாறு பராமரிக்கும் விதமாக சுகாதார அலுவலர்களின் தலைமையில் காலை மற்றும் மாலை ஆய்வு மேற்கொள்ளப்படும். அந்த ஆய்வின்போது பிளாஸ்டிக் பொருட்களானது பறிமுதல்செய்யப்பட்டு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்”…. நீண்ட வரிசையில் நின்று குளித்த சுற்றுலா பயணிகள்…!!!!!

குற்றாலத்தில் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளித்தனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் இருக்கும். தற்பொழுது சீசன் நன்றாக இருக்கின்றது. அவ்வபோது சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகின்றது. மேலும் குளிர்ந்த காற்று வீசுகின்றது. ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகின்றது. நேற்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு குவிந்தனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர்கள்…. ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்த மாணவி…. பட்டப்பகலில் பரபரப்பு ….!!!!

சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வரும் 14 வயது மாணவி தண்டையார்பேட்டையிலுள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவி வழக்கம்போல பள்ளி செல்ல ஷேர் ஆட்டோவில் ஏறிஇருக்கிறார். அந்த ஆட்டோவில் முன்பே 25 வயது மதிக்கதக்க 2 வாலிபர்கள் டோல்கேட்டிலிருந்து தங்கசாலை செல்வதற்காக பயணித்து வந்தனர். இதையடுத்து புது வண்ணாரப்பேட்டையை ஆட்டோ நெருங்கிய போது மாணவியிடம் அந்த வாலிபர்கள் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த மாணவி ஓடும் ஆட்டோவிலிருந்து கீழே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்து சென்ற பெண்…. கைவரிசை காட்டிய வாலிபர்…. பின் நடந்த அதிரடி சம்பவம்….!!!!

சென்னை தியாகராய நகர் ராஜாச்சார் தெருவில் வசித்து வருபவர் காயத்ரி (45). இவர் நேற்று முன்தினம் மாலை 6.20 மணி அளவில் தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலை வழியாக நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 2 பேர் காயத்ரி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு தப்ப முயன்றனர். இதனால் காயத்ரி கூச்சலிட்டார். இதையடுத்து பொதுமக்கள் அந்த 2 பேரையும் மடக்கிப் பிடித்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் 2 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அன்னதானம் வழங்குவதில் சண்டை…. ஒருவரை ஒருவர் தாக்கியதால் விபரீதம்…. பரபரப்பு….!!!!!

சென்னை பல்லவன் சாலை சிவசக்தி மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா நடந்தது. அப்போது நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிலையில் அங்குவந்த ஆறுமுகம் (27) என்பவர் வழக்கமாக இரவு 12 மணிக்குதான் அன்னதானம் வழங்கப்படும். இந்த வருடம் ஏன் இவ்வளவு சீக்கிரம் வழங்குகிறீர்கள்..? என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவருக்கு ஆதரவாக அஜித், ராஜ்குமார், பிரகாஷ் ஆகிய 3 பேர் குரல் கொடுத்தனர். இவர்கள் அனைவரையும் குமார்(36) என்பவர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

முல்லைப் பெரியாறு அணை…. “நான்காவது நாளாக நேற்றும் கேரளாவுக்கு தண்ணீர் திறப்பு”….!!!!!

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நான்காவது நாளாக நேற்றும் கேரளாவுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. தமிழக-கேரள எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணை 152 அடி உயரம் கொண்டதாகும். இதில் 142 அடி வரை தண்ணீரை தேக்கி கொள்ள சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்திருக்கிறது. மேலும் இந்த அணையில் பருவ காலத்திற்கு ஏற்ப நீர்மட்ட உயர்வை நிர்ணயிக்கும் ரூல்கர்வ் விதி சென்ற வருடம் அமல்படுத்தப்பட்டது. அதன்படி ஆகஸ்ட் மாதம் அணையில் 137.5 அடி வரை தண்ணீரை தேக்கிக் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மின்சார சட்ட திருத்த மசோதா”….. எதிர்ப்பு தெரிவித்து மின்வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்….!!!!!!

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மின்சார சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து மின்வாரிய தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். நேற்று முன்தினம் மின்சார சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தேனி என்.ஆர்.டி நகரில் இருக்கும் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு சார்பாக காலை 8:30 மணி அளவில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மின்வாரிய தொழிலாளர்கள் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (09.08.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட் 09) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் 31 ஆம் தேதி  முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசுகளிலிருந்து, 1 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மத்திய அரசை கண்டித்து…. போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள்…. நாகையில் பரபரப்பு….!!

மத்திய அரசை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பினர் நாகை மாவட்ட தமிழ்நாடு சட்டையப்பர் கீழ வீதியில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் நாடாளுமன்றத்தில் மின்சாரத்துறையை தனியார் மயமாக்கும் மின் திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்து நடைபெற்றது. இந்த போராட்டம் வட்டார தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஏராளமான மின்வாரிய ஊழியர்கள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“திற்பரப்பில் நிலவும் குளுகுளு சீசன்”…. அருவியில் குளித்து சுற்றுலா பயணிகள் உற்சாகம்….!!!!!!

திற்பரப்பில் சாரல் மழை பெய்து வருவதால் குளுகுளு சீசன் நிலவுகின்றது. பிரபல சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகின்றது குமரி. இதில் திற்பரப்பு அருவி முக்கிய இடத்தை பெற்றிருக்கின்றது. இந்நிலையில் இப்பகுதியில் அவ்வபோது சாரல் மழை பெய்து வருவதால் குளுகுளு சீசன் நிலவுகின்றது. இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புறிந்தனர். மேலும் அங்கு குளித்து மகிழ்ந்தார்கள். தற்பொழுது நீர்வரத்து கோதை ஆற்றில் மிதமாக பாய்வதால் அருவியின் மேற்பகுதியில் இருக்கும் தடுப்பணையில் அதிகளவு தண்ணீர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மது போதையில்…. அதிக மாத்திரைகளை சாப்பிட்ட வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மாத்திரைகளை அதிகளவில் சாப்பிட்ட வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரன்பட்டினம் பகுதியில் ராஜசூர்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஆடி கொடை விழாவிற்கு சென்னையிலிருந்து குலசேகரன்பட்டினம் வந்த ராஜசூர்யா தனது பாட்டி வீட்டில் தங்கியுள்ளார். கடந்த 4-ஆம் தேதி ராஜசூர்யா குடிபோதையில் வீட்டிலிருந்த மாத்திரைகளை அதிகளவில் சாப்பிட்டு மயக்கமடைந்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து ராஜசூர்யாவை உடனடியாக மீட்டு உடன்குடி தனியார் மருத்துவமனைக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்…. “கேரளாவுக்கு டெம்போவில் கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்”…..!!!!!

கேரளாவுக்கு டெம்போவில் 4 டன் ரேசன் அரிசி கடத்த முயன்ற நிலையில் போலீசார் பறிமுதல் செய்தார்கள். நித்திரவிளை போலீஸ் நிலைய தனி பிரிவு ஏட்டு ஜோசப்புக்கு, விரிவினை கணபதியான்கடவு பாலம் வழியாக கேரளாவிற்கு டெம்போ மூலம் ரேஷன் அரிசி கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் போலீஸ்சார் நேற்று அதிகாலை 5 மணி அளவில் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது அவ்வழியாக மீன்பாடி டெம்போ ஒன்று வந்தது. அதை நிறுத்த முயன்றபொழுது நிறுத்தாமல் செல்ல முயர்ச்சித்தார்கள். உடனே […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 42 அடியை எட்டியது”…. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!!!!

பேச்சுப்பாறை அணையின் நீர்மட்டம் 42 அடியை எட்டியதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சுப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணை பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் மலையோர பகுதிகளிலும் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததன் காரணமாக அணைகளுக்கு நீர் வந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை எட்டு மணி அளவில் 48 அடி கொள்ளளவை கொண்ட பேச்சுப்பாறை அணையின் நீர்மட்டம் 42 அடியை எட்டியது. இதனால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“மணவாளக்குறிச்சி மின்சாரம் தாக்கி பத்தாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு”…. போலீசார் விசாரணை….!!!!!

மணவாளக்குறிச்சியில் மின்சாரம் தாக்கியதில் பத்தாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணவாளக்குறிச்சி கரியப்பட்டணம் கிறிஸ்தவராஜா தெருவை சேர்ந்தவர் ஜேம்ஸ். இவரின் மகன் நிகிலன். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் விடுமுறை நாள் என்பதால் நேற்று தனது நண்பர்களுடன் சேர்ந்து ஐ.ஆர்.இ. பகுதிக்கு சென்று விளையாடினார்கள். அப்பொழுது அங்குள்ள மதில் சுவர் மீது ஏறி குதிக்க முயன்ற பொழுது நிகிலன் மீது உயர் அழுத்த மின்கம்பிபட்டு மின்சாரம் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நாவல் பழம் பறித்த காவலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

நாவல் பழம் பறித்த காவலாளி மரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள வள்ளலார் பிள்ளையார் கோவில் தெருவில் ரகுநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டில் இரவுநேர காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மீனா என்ற மனைவியும், 1 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் ரகுநாதன் வள்ளலார் டபுள்ரோட்டின் நடுவே உள்ள நாவல் மரத்தில் ஏறி நாவல் பழங்கள் பறித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராவிதமாக மரக்கிளை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“சாலையோர புதரில் எரிந்த நிலையில் ஆண் பிணம் மீட்பு”…. போலீசார் தீவிர விசாரணை…!!!!!

சாலையோர புதரில் எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றார்கள். நாகர்கோவில் கன்னியாகுமாரி இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் சுசீந்திரத்தை அடுத்துள்ள கரியமாணிக்கப்புரம் பகுதியில் ரெயிவே பாலத்தின் சாலையோரம் இருக்கும் புதருக்குள் எரிந்த நிலையில் ஆண் பிணம் கிடந்துள்ளது. இதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்கள். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ்சார் எரிந்த நிலையில் கிடந்த உடலை பார்வையிட்டார்கள். மேலும் அவருக்கு சுமார் 50 […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“குமரியில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்”…. நீண்ட நேரம் காத்திருந்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டனர்….!!!!!

கன்னியாகுமரியில் நேற்று சுற்றுலா பயணிகளில் கூட்டம் அலைமோதியது. பிரபல சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றார்கள். இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அதிகாலையில் திரிவேணி சங்கமம் கடற்கரையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண காத்திருந்தார்கள். ஆனால் மேகமூட்டம் காரணமாக சூரிய உதயம் தெளிவாக தெரியவில்லை. மேலும் காலை நேரத்தில் மழை பெய்தும் மழையை பொருட்படுத்தாமல் முக்கடல் சங்கமத்தில் சுற்றுலா பயணிகள் புனித நீராடினார்கள். […]

Categories
தஞ்சாவூர்

“கும்பகோணத்தில் பராமரிப்பின்றி காணப்படும் ஜான்செல்வராஜ்நகர் பூங்கா”…. மக்கள் கோரிக்கை….!!!!!

கும்பகோணத்தில் பராமரிப்பின்றி காணப்படும் பூங்காவை அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் 26 வது வார்டு ஜான்செல்வராஜ்நகர் பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்துக்கு சொந்தமான பூங்கா இருக்கின்றது. இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இளைப்பாறவும் உடற்பயிற்சி செய்வதற்கும் பயன்படுத்தி வருகின்றார்கள். மேலும் பள்ளி மாணவ-மாணவிகள் பூங்காவில் விளையாடி பொழுதை கழிப்பார்கள். இந்நிலையில் இந்த பூங்கா முறையாக பராமரிக்கப்படாமல் பூங்காவை சுற்றி பல்வேறு குப்பைகள் சூழ்ந்து அசுத்தமாக காணப்படுகின்றது. மேலும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்று வந்த மூதாட்டி…. திடீரென தீப்பிடித்து எரிந்த வீடு…. போலீஸ் விசாரணை….!!

மூதாட்டி வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் கூலி வேலை செய்து தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் செல்வி கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்துகொண்டிருந்தார். அப்போது வீடு திடீரென்று தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தண்ணீரை ஊற்றி வீட்டில் பிடித்த தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த விபத்தில் வீட்டில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த முதியவர்…. கொலை மிரட்டல் விடுத்த நபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

முதியவரை கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிலுவைப்பட்டி பகுதியில் அந்தோணிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மைக்கேல்ராஜ் என்ற மகன் உள்ளார். இவருக்கும் அவரது மருமகன் சிலுவைப்பட்டி பகுதியில் வசிக்கும் நெல்சன் ஜான்ராஜாசிங் என்பவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் மைக்கேல்ராஜ் அவரது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்பாது அங்கு வந்த நெல்சன் ஜான் ராஜாசிங் மைக்கேல்ராஜிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் நெல்சன் ஜான் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“வழக்கை ரத்து செய்ய 20,000 லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர்”….. அதிரடியாக கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸ்சார்…!!!!!

ஒரு பிரச்சினைக்கு இரண்டு முறை வழக்கு பதிவு செய்யப்பட்டதால் அதில் ஒரு வழக்கை ரத்து செய்வதற்கு ரூபாய் 20,000 லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீஸ்சார் கைது செய்தார்கள். மதுரை மாவட்டத்தில் உள்ள கருங்காலங்குடியை சேர்ந்தவர் ஹக்கீம். இவர் மீது இடப்பிரச்சனை சார்பாக மதுரை மாவட்ட போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த பிரச்சனை தொடர்பாக சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் ஒரு பிரச்சனை சம்பந்தமாக ஒரு வழக்கு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

2 குழந்தைகளை கொன்று தற்கொலை செய்த தாய்…. அதிர்ச்சியில் உறவினர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கந்த பொடிகார தெருவில் வெங்கடேசன்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நிஷாந்தி(28) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு தியாலினி(4) என்ற மகளும், ரூபன்(2) என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்று வரலாம் என வெங்கடேசன் தனது மனைவியை அழைத்துள்ளார் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பில் பற்றி எரிந்த தீ…. அலறியடித்து ஓடி வந்த குடும்பத்தினர்…. சென்னையில் பரபரப்பு…!!

அடுக்குமாடி குடியிருப்பில் பற்றி எறிந்த தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் 2-வது மெயின் ரோட்டில் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் அடுக்குமாடி குடியிருப்பில் 4-வது தளத்தில் வசிக்கும் ஈஷா என்பவரது வீட்டில் உள்ள ஸ்விட்ச் போர்டில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ வீடு முழுவதும் வேகமாக பரவியது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தோழியின் வீட்டிற்கு அழைத்து சென்ற தாய்…. நீச்சல் குளத்தில் மூழ்கி பலியான சிறுமி…. பரபரப்பு சம்பவம்…!!

நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் பானு நகர் பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்மணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தனன்யா(8) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவருடன் கனுஷியா என்ற சிறுமியும் படித்து வந்துள்ளார். அப்போது கனினுஷியாவின் தாயாருடன் கண்மணிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கனுஷ்யாவின் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வயிற்று வலியால் அவதிப்பட்ட பெண்…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தென்னூர் பகுதியில் இப்ராஹிம் ஷெரிப் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரஷிமாபிவி(49) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ரஷிமா நீண்ட காலமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த ரஷிமா தனது கணவர் வேலைக்கு சென்ற பிறகு விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரஷிமா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த பெற்றோர்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மேடவாக்கம் சிவகாமி நகரில் ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ராஜேஷ் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்துள்ளார். நேற்று முன்தினம் மது போதையில் வீட்டிற்கு வந்த ராஜேஷை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜேஷ் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்….. சோதனையில் சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி…!!

மொபட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காசிம்புதுப்பேட்டை பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மொபட்டில் வந்த நபரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் 17 கஞ்சா பாக்கெட்டுகளை மொபட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் நடத்திய […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. அ.தி.மு.க நிர்வாகி பலியான சம்பவம்…. புதுக்கோட்டையில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் அ.தி.மு.க நிர்வாகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழஎண்ணெய் பகுதியில் மாயாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெரியசாமி(24) மகன் இருந்துள்ளார். இவர் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பெரியசாமி தனது நண்பரான ரஞ்சித்குமார் என்பவருடன் கடந்த 2-ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். அதேசமயம் முக்கண்ணாமலைப்பட்டி பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அதே பகுதியில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

திருமணமான 40 நாட்களில்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

புதுபெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் கிராமத்தில் நதியா என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 40 நாட்களுக்கு முன்பு நதியாவுக்கு திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஆடி மாதத்தை முன்னிட்டு நதியா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். நதியா நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நதியா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சவாரி ஏற்றுவது தொடர்பாக தகராறு…. ஆட்டோ ஓட்டுநரின் கொடூர செயல்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

ஆட்டோ ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். சென்னை மாவட்டத்தில் உள்ள அமைந்தகரை பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 2010-ஆம் ஆண்டு செல்வகுமாருக்கும், மற்றொரு ஆட்டோ ஓட்டுனரான கருணாநிதி என்பவருக்கும் சவாரி ஏற்றுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த கருணாநிதி கத்தியால் செல்வகுமாரை குத்திக்கொலை செய்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கருணாநிதியை கைது செய்தனர். இந்த […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

சுவர் இடிக்கும் பணி…. கல்லூரி மாணவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சுவர் இடிந்து விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் பகுதியில் ஓட்டுனரான செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதர்சன்(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வம் பழைய ஓட்டு வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சுவர் இடிந்து சுதர்சன் மீது விழுந்தது. இதனால் படுகாயமடைந்த சுதர்சன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தர்மபுரி: “தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்”…. தொடங்கி வைத்த துணை போலீஸ் சூப்பிரண்டு….!!!!

தர்மபுரியில் போக்குவரத்து விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்கும் விதமாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக தர்மபுரி பகுதியில் ஒட்டப்பட்டி முதல் பழைய தர்மபுரி வரை 25 இடங்களில் தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தர்மபுரி 4 ரோடு மற்றும் புற நகர்-டவுன் பேருந்து நிலையங்களில் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்கும் விதமாக ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் துவக்கவிழா தர்மபுரி 4 ரோட்டில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவாஸ் தலைமை தாங்கினார். இதையடுத்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கொள்ளிடம் ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம்…. குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த தண்ணீர்…. மக்கள் அவதி….!!!!

மேட்டூர் அணையிலிருந்து காவிரியாற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் கன அடி உபரிநீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் வினாடிக்கு 2 லட்சத்து 15 ஆயிரம் கன அடி தண்ணீரானது வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் நிலவரப்படி வினாடிக்கு சுமார் 2 லட்சம் கன அடி தண்ணீரானது சென்றது. அத்துடன் கீழணையிலிருந்தும் கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 2 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கொள்ளிடம்ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இந்த சூழ்நிலையில் […]

Categories

Tech |