நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட் 08) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் 31 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 20 காசுகளிலிருந்து, 1 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tag: மாவட்ட செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள கனிச்சி கிராமத்தில் வசித்து வருபவர் சுப்பிரமணி மகன் சிபிசரண் (36). இவர் கடலூர் போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் இருப்பதாவது “நான் காவேரிப் பட்டிணத்திலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நகைக் கடன் பிரிவில் காசாளராக பணியாற்றி வந்தேன். அப்போது வங்கிக்கு அடிக்கடி வந்துசென்ற தர்மபுரியை சேர்ந்த சிவசங்கர் (48) என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் என்னிடம் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் பலரிடம் […]
கோவை மாவட்டம் வால்பாறைபகுதியில் அவ்வப்போது காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நடுமலைஆறு உட்பட ஆறுகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. அதேபோன்று சோலை ஆறு அணைக்கு வினாடிக்கு வினாடி தண்ணீர் வரத்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் 7வது நாளாக சோலை ஆறு அணையின் நீர்மட்டமானது முழு கொள்ளளவை தாண்டிய நிலையில் இருக்கிறது. ஆகவே பாதுகாப்பு கருதி அணையிலிருந்து உபரிநீர் கேரளாவுக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த மழை காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு 11 […]
கோவை மாவட்டம் சூலூரை அடுத்த அப்பநாயக்கன் பட்டியில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கிவைத்து விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் அப்பகுதியில் புகையிலை பொருட்களை பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து சூலூர் சிந்தாமணிபுதூர் பகுதியை சேர்ந்த பொன்ரமேஷ் (47), கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்த கண்ணன் (37) மற்றும் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் (42) ஆகிய 3 பேரை […]
கோவை மாவட்டம் ஜோதிபுரம் முதல் வீதியில் வசித்து வருபவர் கார்த்திகேயன். இவருடைய மனைவி மாலதி தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் ரத்தினபுரி காவல் நிலையத்தில் ஒரு புகார்மனு அளித்தார். அவற்றில், நான் ரத்தினபுரியிலுள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறேன். சென்ற 2020 ஆம் வருடம் ஜெய் கணேஷ் என்பவர் என்னிடம் வந்து தான் ரத்தினபுரி சுந்தரம் வீதியில் வசிப்பதாக கூறி அறிமுகமானார். மேலும் அவர் என்னிடம் பிரதமமந்திரி யோஜன திட்டத்துக்காக வந்துள்ளேன். […]
சென்னை தாம்பரம் அடுத்த மதுரப்பாக்கம் ஊராட்சியில் கலைஞர்நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 137 வீடுகளில் 600க்கும் அதிகமான மக்கள் பல ஆண்டுக்களாக வசித்து வருகின்றனர். இப்பகுதி அரசுக்கு சொந்தமான நிலம் என்பதால் ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி வீடுகளை காலிசெய்யும்படி வருவாய்த்துறை சார்பாக நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. எனினும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் தாம்பரம் தாசில்தார் கவிதாவுக்கு ரூபாய்.25 ஆயிரம் அபராதம் விதித்த உயர்நீதிமன்றம், வரும் 11-ஆம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து […]
சென்னை வில்லிவாக்கம், பஜனை கோயில் தெருவில் வசித்து வருபவர் தில்லைவாணி (56). இவரது கணவர் சிரார்த்தனன்(67) ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இந்த தம்பதியினரின் மகன் சூரியபிரதாபன் (36). இதில் சூரியபிரதாபன் என்ஜினீயரிங் முதுகலை பட்டதாரி ஆவார். இவருடன் பிளஸ் 2 வரை பயின்ற அதே பகுதியைச் சேர்ந்த மணிமாறன்(36) ரயில்வேயில் பணிபுரிந்து வருகிறார். சென்ற ஏப்ரல் மாதம் தில்லைவாணியிடம் மணிமாறன் கூறியதாவது “மத்திய மந்திரி ஒருவரின் சிபாரிசில் தான் நான் ரயில்வேயில் பணிக்கு சேர்ந்தேன். அதேபோன்று […]
சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் ஏற்ற தேசிய கொடியை ஆட்சியர் வழங்கினார். வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்றுமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிவகங்கை அடுத்து கீழப்பூங்கொடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு கூறியுள்ளதாவது, இந்திய திருநாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து 75 வருடங்கள் ஆனதை […]
தஞ்சை மாரியம்மன் கோவில் பகுதிகளில் வரும் பத்தாம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது என உதவி செயற்பொறியாளர் செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில் துணை மின் நிலையத்தில் வரும் 10-ம் தேதி பராமரிப்பு பணி நடைபெற இருக்கிறது. இதனால் புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில், ஞானம்நகர், சித்தர்காடு, கடகடப்பை, களக்குடி, ஆலங்குடி, நெட்டாநல்லூர், நெல்லிதோப்பு, காந்தாவனம், குளிச்சப்பட்டு, அன்னை இந்திராநகர், பணங்காடு, எடவாக்குடி, யாகப்பாசாவடி, அம்மாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என […]
வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் என்ஜினியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள புஷ்பவனம் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு என்ஜினியரான கணேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனது மோட்டார்சைக்கிளில் செம்போடை கடைத்தெருவிற்கு சென்று விட்டு புஷ்பவனம் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்தகாயமடைந்த கணேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு […]
கோவிலில் திருடிய 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிறுத்தொண்டநல்லூரில் பலவேசக்காரன் சாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 3-ந் தேதி இரவு மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று 4 குத்து விளக்குகளை திருடி சென்றனர். மேலும் அங்கு திருட வந்த மர்மநபர்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவையும் உடைத்துள்ளனர். இது குறித்து கோவில் நிர்வாகி மகன் பலவேசம் முத்து ஏரல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு […]
பேருந்து நிலையத்தில் கத்தியை காட்டி மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மாத்தாங்காடு பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனோஜ் பிரபாகர் என்ற மகன் உள்ளார். இவர் வேளாங்கண்ணி பேருந்து நிலையப் பகுதிகளில் கத்தியை காட்டி பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மேலும் இதுகுறித்து 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த வேளாங்கண்ணி காவல்துறையினர் மனோஜ் பிரபாகரை கைது செய்து விசாரணை […]
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்த நிலையில் தமிழக பொதுப்பணி துறை முதன்மைச் செயலாளர் ஆய்வு மேற்கொண்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் சென்ற 16ஆம் தேதி தனது முழு கொள்ளளவை எட்டியது. அப்பொழுது காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாகவே இருந்து வந்த நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தது. இதனால் சென்ற […]
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள வடமலை பாளையம் காலனியில் கிட்டான் ஆறுச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் தேவராஜ் என்பவரது தோட்டத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஆறுச்சாமி வழக்கம்போல் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார். அங்கு மின்மோட்டாரை இயக்கிய போது எதிர்பாராத விதமாக ஆறுச்சாமி மீது மின்சாரம் பாய்ந்து மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஆறுச்சாமியை உடனடியாக மீட்டு பல்லடம் அரசு […]
பசு மாடு ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்வதை பார்த்து பொதுமக்கள் கதறினர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கொள்ளிடம் அருகில் அளக்குடி என்ற இடத்தில் ஆற்றில் பசுமாடு உயிருடன் அடித்துச்செல்லப்பட்டது. இந்நிலையில் கடலை நோக்கி அதிவேகமாக சென்ற அந்த வெள்ளத்தில் பசுமாடு உயிருடன் அடித்து செல்வதை பார்த்து அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மேலும் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் பசுமாட்டை யாராலும் காப்பாற்ற இயலவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மல்லூரில் செல்போன் கோபுரம் மீது ஏறி இரும்பு வியாபாரி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மல்லூரில் இருக்கும் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் குப்பன். இவரின் மகன் ராமு. இவர் அப்பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வருகின்றார். இந்நிலையில் ராமுவுக்கும் அவரின் அத்தை மகன் ராஜா என்பவருக்கும் பூர்வீக சொந்தமான வீடு சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்த நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்திருக்கின்றது. இதில் […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள ஆலங்கனேரி கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவீன்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. இந்நிலையில் திருமணமான சில நாட்களிலேயே கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் நவீன்குமாாின் மனைவி கோபித்து கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் நவீன் குமார் ஒரு வருடம் ஆகியும் மனைவி வீட்டுக்கு வராததால் மன வேதனையில் […]
தேவூர் அருகே காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டார்கள். காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததன் காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு சென்ற 4-ம் தேதி வினாடிக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இந்த தண்ணீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் காவேரி கரையோர பகுதிகளில் […]
அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஆறாக்குளம் பிரிவு அருகில் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மொபட்டில் சென்ற ஒருவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் சாலையோரம் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த பல்லடம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் கொத்துமுட்டி பாளையம் […]
சேலத்தில் வருகின்ற 12ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகின்றது. சேலம் மாவட்டத்தில் உள்ள கோரிமேட்டில் இருக்கும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 12ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகின்றது. இம்முகாமிற்கு உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளை சேர்ந்த பல்வேறு பகுதிகளில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் தங்களின் காலி பணியிடங்களுக்கு […]
மோட்டார் சைக்கிளில் மது பாட்டில்களை கடத்தி வந்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதை தடுக்க மணியாச்சி காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அவர் கவர்னகிரி கிராமத்தில் வசிக்கும் சாமுவேல் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர் முப்பிலிவெட்டி அருகில் உள்ள மதுக்கடையில் இருந்து 50 மதுபாட்டில்களை வாங்கி சட்டவிரோதமாக […]
சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்த டீக்கடைக்காரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மதுரை- தூத்துக்குடி பைபாஸ் ரோடு பகுதியில் சிப்காட் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திரு.வி.க. நகர் பகுதியில் வசிக்கும் அருண்குமார் என்பவரது டீக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அருண்குமாரை கைது செய்ததோடு அவரிடம் இருந்த ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள 3 கிலோ புகையிலை […]
வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் ஐந்து நாட்களுக்குப் பிறகு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் இருக்கும் மெயின் அருவி ,ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்த நிலையில் சென்ற சில நாட்களுக்கு முன்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்ததன் எதிரொலியாக அறிவியலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சென்ற 1-ம் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்கு குறிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. […]
மகளை கொலை செய்த தம்பதியினருக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் வாழைகுளம் தெருவில் இன்ஜினியரான முனீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ரேவதி என்ற மனைவி உள்ளார். இவர் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட 9 வயது மகள் இருந்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆம் ஆண்டு குலதெய்வ கோவிலில் வைத்து தம்பதியினர் தங்களது மகளுக்கு […]
நாற்காலியில் இருந்து தவறி விழுந்து குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆனையூரில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 வயதுடைய ஜனனி என்ற மகள் இருந்துள்ளார். பிறக்கும்போதே ஜனனியின் தலையில் நீர்க்கட்டி இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக மதுரை பெரிய மருத்துவமனையில் ஜனனிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2-ஆம் தேதி வீட்டில் உள்ள நாற்காலி மீது ஏறி ஜனனி விளையாடி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராமல் தவறி விழுந்ததால் ஜனனியின் பின் […]
வீட்டுக்குள் புகுந்து வாலிபர் செல்போனை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி அருகே இருக்கும் இந்திரா நகரில் மாரியம்மாள் என்பவர் தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கடந்த வாரம் இரவு நேரத்தில் உறவினர்களுடன் பேசி விட்டு மாரியம்மாள் செல்போனை வீட்டில் வைத்துள்ளார். அடுத்த நாள் காலை எழுந்து பார்த்த போது செல்போன் காணாமல் போனதை கண்டு மாரியம்மாள் அதிர்ச்சடைந்தார். இதனை அடுத்து அதே பகுதியில் வசிக்கும் […]
சரக்கு வாகனத்தில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதியில் இருந்து டான்போஸ்கோ செல்லும் சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ஆட்டோவில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த போது மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சரக்கு ஆட்டோவில் பற்றி எரிந்த தீயை அனைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு […]
பஜாருக்குள் புகுந்த காட்டு யானைகளை பார்த்து பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள அய்யன்கொல்லி பஜாரில் உலா வந்த 2 காட்டு யானைகள் ஜனார்த்தனன் என்பவரது கடையின் இரும்பு கதவை உடைத்து சேதப்படுத்தியது. இதனை அடுத்து அப்பகுதியில் இருந்த வாழைகளை தின்றும், மிதித்தும் நாசப்படுத்திய காட்டு யானை அரசு, உண்டு உறைவிட பள்ளியின் சுற்றுசுவரை உடைத்து சேதப்படுத்தியது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு […]
காட்டு யானை ஸ்கூட்டர் மற்றும் ஜீப்பை சேதப்படுத்திய சம்பவம் பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகிறது. இந்நிலையில் நேற்று காலை பாலம்வயல் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானையை பார்த்ததும் பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். அப்போது விஸ்வநாதன் என்ற கூலி தொழிலாளி ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அந்த […]
பள்ளிகளில் இருந்து அபாயகரமான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது. நீலகிரி மாவட்டத்திலுள்ள சேரம்பாடி, பந்தலூர் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகங்களில் அபாயகரமான மரங்கள் இருக்கிறது. இந்நிலையில் பலத்த காற்று வீசும் போது மரங்கள் சாய்ந்து விழும் அபாயம் இருப்பதால் அதனை வெட்டி அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று கொண்ட ஆர்.டி.ஓ சரவண கண்ணன், பந்தலூர் தாசில்தார் நடேசன் மற்றும் அதிகாரிகள் அபாயகரமான மரங்கள் குறித்து ஆய்வு செய்தனர். […]
ரேஷன் அரிசி கடத்தி சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குப்பச்சிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சரக்கு வாகனத்தில் சரக்கு வாகனத்தில் சாக்கு மூட்டைகளில் ரேஷன் அரிசியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து சரக்கு வாகன ஓட்டுனரிடம் நடத்திய விசாரணையில் அவர் பாலப்பட்டி பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார்) (32)என்பது தெரியவந்தது. […]
மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அத்திமரப்பட்டி பகுதியில் ஜெயராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முத்தையாபுரத்தில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் மின் ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடன் இந்திராநகர் பகுதியில் வசிக்கும் மாரியப்பன் என்பவரும் மின் ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 1-ஆம் தேதி கீழவேலாயுதபுரம் பகுதியில் உயர் மின்வயர் பாதையில் உள்ள கருவேல மரங்களை வெட்டி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மின் […]
காற்றாலை விசிறி ஏற்றி வந்த லாரி சாலையில் திரும்ப முடியாமல் நின்றதால் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் இருந்து 300 அடி நீள காற்றாலை விசிறியை ஏற்றுக்கொண்டு கரூர் நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரி தவிட்டுப்பாளையம் போலீஸ் சோதனை சாவடி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்ததால் நெடுஞ்சாலையின் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சாலையில் திரும்ப முடியாமல் லாரி நின்றதால் சேலம்-கரூர் தேசிய […]
சிறுமியை தாயாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி அருகே இருக்கும் கிராமத்தில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவிக்கு விழுப்புரத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்ததாக பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் படி போலீசார் மருத்துவமனைக்கு சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் […]
ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமியிடம் கரு முட்டை எடுத்து விற்பனை செய்த விவகாரத்தில் அங்குள்ள தனியார் மருத்துவமனையின் ஸ்கேன் மையங்களுக்கு சீல்வைத்து தமிழ்நாடு அரசு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகமானது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மருத்துவமனையின் ஸ்கேன் மையத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றவேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். அதன்பின் கடந்த சில தினங்களாக வழக்கம்போல் மருத்துவமனை இயங்கி வந்தது. இந்நிலையில் தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை […]
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகில் டி.என்.பாளையம் இருக்கிறது. இங்கு உள்ள பெட்டிக்கடை பேருந்து நிறுத்தம் அருகே அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பிலுள்ள மாடிப்படி வழியாக தெரு நாய் ஒன்று நேற்று சென்றுள்ளது. இதையடுத்து 2வது மாடிக்கு சென்ற அந்த நாய் அங்குள்ள ஜன்னல் சிலாப்பில் இறங்கி இருக்கிறது. அதன்பின் மீண்டும் அந்த நாயால் மாடிக்கு ஏறவும் முடியாமல், சிலாப்பில் இருந்து கீழே இறங்கவும் முடியாமல் சிக்கி தவித்தது. இதனால் சிலாப்பில் அங்கும் இங்குமாக அந்த நாய் […]
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகேள்ள பூதப்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலமானது நடந்தது. இந்த ஏலத்திற்கு கர்நாடக மாநிலம் மைசூரு, ஊக்கியம் மற்றும் தர்மபுரி, சேலம், கொளத்தூர், கொங்கணாபுரம், மேட்டூர், ஈரோடு மாவட்டம் பெருந்துறை, பவானி, அந்தியூர், அம்மாபேட்டை பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 8 ஆயிரத்து 348 மூட்டை பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இவற்றில் பி.டி ரக பருத்தி குவிண்டால் குறைந்தபட்சம் விலையாக 11 ஆயிரத்து 732 ரூபாய்க்கும், அதிகபட்சம் 12 ஆயிரத்து […]
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் 1வது வார்டு கல்வி அவென்யூ குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ஆட்டோ டிரைவர் பார்த்திபன். இவரது மகன் பிரவீன் (6) ஆவார். இதில் பிரவீன் நேற்று மதியம் தன் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சுற்றித் திரிந்த ஒரு பன்றி பிரவீனின் கழுத்து, தோள்பட்டை, முதுகு பகுதிகளில் கடித்துக்குதறியது. இதனால் வலி தாங்க முடியாமல் அலறிய அவனது சத்தத்தை கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் பன்றியை […]
கர்நாடக மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து அங்கு உள்ள அணைகளிலிருந்து காவிரியில் அதிகப்படியான உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் தமிழகத்தில் மேட்டூர் அணையை வந்தடைந்து அங்கு இருந்து உபரிநீராக வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் காவிரி ஆற்றுப்படுகை பகுதியில் கடும் வெள்ளபாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் திருச்சி முக்கொம்பிலிந்து காவிரியில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் அதிகளவு தண்ணீர் திறக்கபட்டுள்ளது. இதனால் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகில் தஞ்சை மாவட்ட எல்லையில் கொள்ளிடம் ஆற்றின் […]
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதிகளில் சென்ற 2 மாதங்களாக தென் மேற்கு பருவமழை தீவிரமாக பெய்துவருகிறது. இதனால் குரங்கு நீர் வீழ்ச்சியில் நேற்று 3வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக நீர்வீழ்ச்சிக்கு போக சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டது. இதேபோன்று பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலை வெள்ளம் சூழ்ந்ததனால் அங்கு பக்தர்கள் தரிசனத்துக்கு தடைவிதிக்கப்பட்டது. இதையடுத்து ஆழியாறு அணையிலிருந்து நேற்று 3வது நாளாக உபரி நீர் திறந்துவிடப்பட்டது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி அணைக்கு […]
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து சூலூர்பேட்டை போகும் மின்சார ரயிலில் சென்டிரல் ரயில்வே போலீஸ் டி.எஸ்.பி. முத்துக் குமார், கொருக்குப்பேட்டை ரயில்வே இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் பயணிகள் அமரும் இருக்கைக்கு அடியில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி மூட்டையை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து விசாரணையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலுள்ள ரேஷன் கடைகளிலிருந்து அரிசியை வாங்கி மூட்டை மூட்டையாக கொருக்குப் பேட்டை, தண்டையார் பேட்டை, திருவொற்றியூர், மீஞ்சூர் போன்ற […]
சென்னை அண்ணா நகரிலுள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் பணம் செலுத்தும் எந்திரத்தில் பணம் போடுவதற்காக பாடியை சேர்ந்த தனுஷ் (21) என்பவர் வந்தார். அப்போது அவருக்கு எந்திரத்தில் எவ்வாறு பணம் செலுத்துவது என்பது தெரியாமல் தவித்தார். இதனால் அங்குவந்த மர்மநபர் எந்திரத்தில் பணம் செலுத்த உதவி செய்வதாக தனுசிடம் கூறினார். இதையடுத்து பணம் செலுத்துவது போன்று நடித்த மர்ம நபர், எந்திரத்தில் பணம் செலுத்த முடியாததால் தன் செல்போனிலிருந்து ஆன்லைன் வாயிலாக உங்கள் வங்கி கணக்கிற்கு பணத்தை […]
கடையம் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதியதில் விவசாயி உயிரிழந்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம் அருகே இருக்கும் காக்கநல்லூர் பகுதியை சேர்ந்த விவசாயி தங்கபாண்டி என்பவர் மோட்டார் சைக்கிளில் பாபநாசம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்பொழுது ஆம்பூர் ரயில்வே கேட் அருகே சென்றபோது அவ்வழியாக வந்த ட்ராக்டரும் மோட்டார் சைக்கிளும் எதிர்பாரவிதமாக மோதிக்கொண்டதில் தங்கபாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.
சேலம் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள டேனிஷ்பேட்டை-லோகூர் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாள பாதையில் 55 வயது உடைய ஒரு நபர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடந்துள்ளார். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேலம் ரயில்வே போலீசார்கள், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை மேற்கொண்டு […]
செல்வா மகா காளியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பனங்குடியில் செல்வ மகா காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் ஆடி திருவிழா நடந்தது. அதனை முன்னிட்டு திருவிளக்கு பூஜையும், காஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியும் நடந்தது. மேலும் பால், பன்னீர், இளநீர், சந்தனம், தேன், திரவியம், மாப்பொடி உள்ளிட்ட பொருட்களால் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து செல்வ மகா காளியம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் […]
பாறைக்குழி நீரில் மூழ்கி 14 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமுருகன்பூண்டி பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சூர்யா என்ற மகன் இருந்துள்ளான். கடந்த வருடம் சூர்யா அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு இந்த ஆண்டு பள்ளி செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் சூர்யா பள்ளியில் படித்த நண்பர்களுடன் ராக்கியாபாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழிக்கு […]
சங்ககிரி அருகே ஏரியை ஆக்கிரமித்து பயிரிடப்பட்டிருந்த 2 கோடி மதிப்பிலான 5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி அருகே இருக்கும் இருகாலூர் ஊராட்சியில் உள்ள புது ஏரி 27 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலையில் இந்த ஏரியை ஆக்கிரமித்து சில விவசாயிகள் வாழை, தென்னை, மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்டவற்றை பயிரிட்டு இருந்தார்கள். இதனால் சங்ககிரி தாசில்தார் பானுமதிக்கு புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் தாசில்தார் சங்ககிரி கிழக்கு வருவாய் ஆய்வாளர் ராஜு, சங்ககிரி வட்ட […]
நீதிமன்றத்தில் இருந்து தவறுதலாக அனுப்பப்பட்ட 1.50 லட்சத்தை திரும்பி வழங்காத மூதாட்டி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சேலம் தலைமை குற்றவியல் கோர்ட்டு சிராஸ்தார் செந்தில்குமார் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, சென்ற 2016 ஆம் வருடம் தாரமங்கலம் அருகே இருக்கும் பாறைக்கல்லூர் பகுதியை சேர்ந்த சுசிலா என்பவர் ஒரு வழக்கு சம்பந்தமாக 1.50 லட்சம் அவருக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. இந்த தொகையானது அவரின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டது. […]
இடங்கணசாலை நகராட்சியில் மின் மயானம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை நகராட்சிக்கு உட்பட்ட சின்னேரி பகுதியில் மின் மயானம் அமைக்க இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு கஞ்சமலையூர், இ.காட்டூர், மெய்யனூர் மற்றும் இடங்கணசாலையைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அலுவலகத்துக்குள் திரண்டு தலைவர் கமலக்கண்ணனிடம் மனு அளித்தார்கள். அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளதாவது, சின்னேரி பகுதியில் மின் […]
துப்பாக்கிகள் தயாரித்த வழக்கில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இரண்டாவது நாளாக நேற்றும் விசாரணை செய்தார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் அருகே இருக்கும் புளியம்பட்டி பகுதியில் சென்ற மே மாதம் போலீசார் வாகன சோதனை நடத்திய பொழுது இன்ஜினியர் சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தி உள்ளிட்ட இருவரிடம் இருந்து இரண்டு கை துப்பாக்கிகளை பறிமுதல் செய்தார்கள். மேலும் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் அவர்கள் ஏற்காடு அடிவாரம் கருங்காலி என்ற இடத்தில் வீடு வாடகைக்கு எடுத்து […]