வாலிபரிடம் பணம் பறிக்க முயற்சி செய்த 3 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டா கானாறு பகுதியில் தன்வீர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தன்வீர் பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் தன்வீரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை பறிமுதல் செய்ய முயன்றனர். ஆனால் தன்வீர் செல்போன், பணம் ஆகியவற்றை தர மறுத்ததால் […]
Tag: மாவட்ட செய்திகள்
லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு இரண்டு வருடங்கள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. தஞ்சாவூர் தாலுகாவிற்கு உட்பட்ட காவல் நிலையத்தில் சென்ற 2011 ஆம் வருடம் சிவக்குமார் என்பவர் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். அவர் பணியாற்றிய பொழுது ராஜமாணிக்கம் மகன் ஜெயக்குமாருக்கும் அவரின் உறவினர்களுக்கும் எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் ஜெயக்குமாருக்கு சாதகமாக செயல்பட 15,000 ரூபாய் இன்ஸ்பெக்டர் லஞ்சம் கேட்டுள்ளார். இதனால் முதலில் ரூபாய் 5000 லஞ்சம் கொடுத்த பொழுது லஞ்ச […]
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட் விற்பனை செய்த ஐந்து கடை உரிமையாளர்களுக்கு ரூபாய் 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் தொழிலாளர் முதன்மை செயலாளர் ஆணையர் மற்றும் சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி உள்ளிட்டோரின் ஆணையின்படி அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்ட பொழுது சட்டமுறை எடையளவு மற்றும் பொட்டலப்பொருட்கள் விதிகளின் கீழ் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிகரெட் லைட்டர்களில் சட்டமுறை எடையளவுகள் […]
கோவிலில் கொள்ளை அடிக்க முயற்சி செய்த போது அலாரம் ஒலித்ததால் மர்ம நபர்கள் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செங்கப்பள்ளியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான அழகுநாச்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு 9 மணி அளவில் பூஜைகள் முடிவடைந்து பூசாரி கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இதற்கிடையே அதிகாலை 2 மணியளவில் மர்ம நபர்கள் கோவிலின் பூட்டை உடைக்க முயன்றுள்ளனர். அப்போது கோவிலின் கதவில் பொருத்தப்பட்டிருந்த […]
முன்விரோதம் காரணமாக இரும்பு கம்பியால் அடித்து இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சாந்தாங்காடு கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் சுரேஷ். இவர் அப்பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டு வாசலில் நேற்று காலை 9 மணியளவில் ரத்த காயங்களுடன் இறந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதை அடுத்து இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். […]
5 குழந்தைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கஸ்பா பயர்லைன் பகுதியில் சிட்டி பாபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வெங்கடேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கனீஸ்கர், பிரீத்தி மற்றும் 10 மாத குழந்தை உள்ளனர். இந்நிலையில் கூலி தொழிலாளியான சிட்டிபாபு கடந்த வருடம் இறந்து விட்டார். இதனால் வெங்கடேஸ்வரி தனது தாயாருடன் வீட்டு வேலைகளை செய்து வசித்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு […]
சென்ற 2014 ஆம் வருடம் இந்தியாவில் 2,48,554 மின் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் தற்பொழுது 4 லட்சம் மெகா வாட் உற்பத்தி செய்யப்படுகின்றது. நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூரில் இருக்கும் உபாசி அரங்கில் நேற்று முன்தினம் தமிழக மின்சார வாரியம் சார்பாக ஒளிமயமான எதிர்காலம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் மத்திய அரசின் ஊரக மின்மயமாக்கல் கழக பொறியாளர் வரதராஜன் பேசும்போது கூறியுள்ளதாவது, சென்ற 2015 ஆம் வருடம் கிராமப்புறங்களில் சராசரி மின் விநியோகம் 12.5 […]
பழமையான ஆழமரத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவடத்திலுள்ள பரணிபுத்தூர், மவுலிவாக்கம், அய்யப்பன்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதி குடியிருப்புகளில் பருவ மழைக்காலங்களில் போரூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரால் மழைநீர் சூழ்ந்து வெள்ளம் சூழ்ந்தது. இதனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போரூர் ஏரியில் இருந்து உபரி நீர் செல்ல மதகுகள், மழை நீர் கால்வாய்கள் அமைத்து தந்தி கால்வாயுடன் இணைக்கும் வகையில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் கால்வாய்கள் […]
கடலின் நீர்மட்டம் தாழ்ந்ததால் விவேகானந்தர் மண்டபத்துக்கு ஒரு மணி நேரம் படகு சேவை தாமதமானது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அங்கு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதன் பின்னர் படகில் சென்று கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை பார்த்து விட்டு திரும்பி வருகின்றனர். இதற்காக […]
சர்வ தீர்த்த குளம் தூய்மைப்படுத்தும் பணிகளை மேயர் மகாலட்சுமி தொடங்கி வைத்துள்ளார். காஞ்சிபுரம்-அரக்கோணம் சாலையில் 8 ஏக்கர் பரப்பளவில் சர்வ தீர்த்த குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் நீராடிய பின் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதரை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். இங்கு வழக்கமாக ஏகாம்பரநாதர் பங்குனி திருக்கல்யாண விழாவின்போது தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். இந்த குளத்தில் பக்தர்கள் தற்போது நீராட செல்வதில்லை. இந்த குளத்தை பல்வேறு தரப்பினர் தூய்மைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி […]
கூடுதல் பேருந்து இயக்க கோரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் 10-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அந்த பள்ளிக்கூடத்தில் உளுந்தூர்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடத்தில் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் மாணவ-மாணவிகளுக்கு காலை மற்றும் மாலையில் பயணம் மேற்கொள்ள போதிய பேருந்து வசதி இயக்கப்படாததால் படிக்கட்டில் தொங்கியபடி சென்று வருகின்றனர். இந்நிலையில் மாணவர்கள் உளுந்தூர்பேட்டை-சேந்தநாடு சாலையில் திடீரென […]
படிக்கட்டில் தொங்கிய மாணவர்களை மேலே வரச் சொன்ன அரசு பேருந்து டிரைவர் மீது தாக்குதல் நடத்திய மாணவரை கைது செய்யக்கோரி போக்குவரத்து ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் பணிமனையில் இருந்து அரசு டவுன் பேருந்து வழக்கம் போல் நேற்று முன்தினம் மாலை சென்றது. இப்பேருந்தை சரவணன் என்பவர் ஒட்டி வர மணிகண்டன் என்பவர் கண்டக்டராக இருந்தார். அருங்காட்சியகம் பேருந்து நிலையத்தில் பஸ் வந்தபொழுது பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பயணிகள் ஏறினார்கள். அப்போது […]
பாம்பு கடித்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரியார் நகர் பகுதியில் தினகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். கடந்த 13-ம் தேதி தினகரன் நரியம்பட்டி கிராமத்தில் விவசாய நிலத்தில் உரம் போடும் பணிக்கு சென்றிருந்தார். அப்போது தினகரனை பாம்பு கடித்துவிட்டது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் தினகரனை உடனடியாக மீட்டு ஆரணி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு […]
பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபருக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாலையம்பட்டி அம்பேத்கர் நகரில் கூலி தொழிலாளியான இளையராஜா என்பவர் வசித்து வருகிறார். இதே அதே பகுதியில் வசிக்கும் திருமணமான பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் இளையராஜாவை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் இளையராஜாவுக்கு […]
டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சோ. புதூரில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கல்லூரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜீவா என்ற மனைவி உள்ளார். இவர் அங்குள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். இதனால் கணவன்-மனைவி இருவரும் அவலூர்பேட்டை சாலையில் வாடகை […]
இறந்தவரின் உடலை தனியாருக்கு சொந்தமான வயல் வழியாக கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவரங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு தோப்புப்பட்டி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றார்கள். இந்நிலையில் மக்கள் மயான கரைக்கு சென்று வருவதற்கு சாலை வசதி இல்லாமல் பல வருடங்களாக அவதிப்பட்டு வருகின்றார்கள். மேலும் இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல தனியாருக்கு சொந்தமான வயலில் கொண்டு செல்கின்றார்கள். இந்நிலையில் நேற்று முதியவர் ஒருவர் இறந்துவிட அவரின் உடலை […]
ரேஷன் கடையில் முறைகேட்டில் ஈடுபட்டவருக்கு ஒரு வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் நியாய விலை கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார் அடைக்கலம். இவர் நியாய விலை கடையில் முறைகேடு செய்ததாக புதுக்கோட்டை குடிமைபொருள் வழங்கல் துறையினர் வழக்குப்பதிவு செய்தார்கள். பின் இந்த வழக்கானது புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டதில் அடைக்கலத்திற்கு ஒரு வருட சிறை தண்டனையும் ரூபாய் 1000 அபராதமும் விதிக்கப்பட்டது. அவர் ஜாமின் மூலம் விடுதலை […]
கூடலூரில் இருந்து தாளூருக்கு சென்ற அரசு பேருந்து இடையில் மூன்று இடங்களில் பழுதாகி நின்றதால் பேருந்தில் பயணித்த பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அவதிப்பட்டார்கள். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் 50 பேருந்துகள் இயக்கப்படுகின்றது. இதில் பெரும்பாலான பேருந்துகள் காலாவதியாகி போதிய பராமரிப்பு இல்லாமலும் இயக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று காலை கூடலூரில் இருந்து தாளூருக்கு காலை எட்டு மணி அளவில் அரசு பேருந்து புறப்பட்டு சென்ற நிலையில் இடையில் மூன்று முறை பழுதானது. ஒவ்வொரு முறையும் […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த 6 பேரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள சோழவரம் அருகே புதிய எருமை வெட்டிபாளையம் கிராமத்தில் செங்கல் சூளை அமைந்துள்ளது. இங்கு புதுச்சேரியை சேர்ந்த 10 வயது சிறுமி பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சிறுமி இறப்பதற்கு 4 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பாலு(65) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மேலும் அதே பகுதியில் வசிக்கும் சதீஷ், விஜயகுமார், […]
மின்கம்பத்தில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் மிதமான மழை பெய்தது. இந்நிலையில் கலையரங்கம் பகுதியில் இருக்கும் மின் கம்பத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும் அப்பகுதியில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது. […]
கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒக்கூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான மூர்த்தி(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செல்வி(50) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட செல்வி மிகவும் சிரமப்பட்டுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்து மூர்த்தி கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சத்திரப்பட்டிக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து மூர்த்தி அங்குள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து […]
பேருந்தில் வைத்திருந்த 6 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் கல்குவாரி உரிமையாளரான சுந்தர வடிவேல்(40) என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் சுந்தரவடிவேல் தனது குடும்பத்தினருடன் தனியார் பேருந்தில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். மேலும் மகனின் படிப்புக்காக வைத்திருந்த 6 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை சுந்தர வடிவேல் ஒரு பையில் எடுத்து சென்றுள்ளார். இந்நிலையில் பேருந்து ஓட்டுநர் பெரியகுளம்- […]
தொடர்ந்து மழை பெய்து வந்ததால் பொம்மசமுத்திரம் ஏரி நிரம்பியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையில் சென்ற சில நாட்களாகவே கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் சேந்தமங்கலம் அருகே இருக்கும் பொம்மை சமுத்திரம் ஏரிக்கு நீர்வரத்தானது அதிகரித்ததைத் தொடர்ந்து ஏரி நிரம்பி தண்ணீர் மறுக்கால் வழியாக பாய்ந்து செல்கின்றது. ஏரி நிரம்பியுள்ளதால் விவசாயிகள் சந்தோஷத்தில் உள்ளனர்.
டயர் வெடித்து தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் 6 பயணிகள் காயமடைந்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து ராஜசேகர்(34) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோட்டைமேடு பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக பேருந்தின் முன் சக்கரம் வெடித்து தாறுமாறாக ஓடியது. அப்போது பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து பயணிகள் மீது விழுந்தது. இதில் துரைசாமி(40), நவீன்குமார்(38), கிருஷ்ணமூர்த்தி(23), முனுசாமி(52), சின்னபையன்(59), […]
ஆட்டோவில் இருந்த பெண்ணிடம் 1 3/4 லட்சம் திருடிய 2 பெண்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள ராஜாக்கல் கிராமத்தில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜகுமாரி என்ற மனைவி உள்ளார். இவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் குடியாத்தம் நேதாஜி சவுக் பகுதிக்கு ராஜகுமாரி தனது மகளுடன் நகை உள்ளிட்ட பொருட்கள் வாங்க பணத்துடன் வந்துள்ளார். அங்கிருந்து ஆட்டோவில் ஏறி உறவினர்களை பார்க்க மகளுடன் லிங்குன்றம் கிராமத்திற்கு சென்றுள்ளார். […]
நாமக்கல் அரசு மருத்துவமனையில் காசநோய் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காச நோய் குறித்து விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் கல்லூரி வளாக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதற்கு காசநோய் பிரிவு துணை இயக்குனர் வாசுதேவன் தலைமை தாங்க மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் கண்ணன் முன்னிலை வகித்தார். இதையடுத்து காசநோய் அறிகுறிகள், பரவும் விதம் உள்ளிட்டவற்றை பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற டாக்டர்களுக்கு துணை இயக்குனர் […]
பள்ளி மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சாத்தாங்குப்பம் பகுதியில் திவ்யநாதன்(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொரக்கால்பட்டியில் இருக்கும் தனியார் மேல்நிலை பள்ளியில் தோட்ட வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளியின் முதல் மாடியில் ஜன்னல் சிலாப் பகுதியில் நின்று திவ்யநாதன் மர கிளைகளை வெட்டி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்து படுகாயமடைந்த திவ்யநாதனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]
12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பகுதியில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகாமி(17) என்ற மகள் இருந்துள்ளார். இவர் பெரியார் நகரில் இருக்கும் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று இரவு சிறுமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவகாமியின் உடலை பற்றி அரசு மருத்துவமனைக்கு […]
வேளாங்கண்ணிக்கு வருகின்ற ரயில்கள் வெள்ளிக்கிழமை முதல் இயக்கப்பட உள்ளதாக திருச்சி ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. நாகை- வேளாங்கண்ணி இடையேயான ரயில்பாதை சுமார் 12 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இதனால் 12 கிலோ மீட்டர் தொலைவைக் கடக்க 30 முதல் 40 நிமிடங்கள் ஆகின்றது. இந்த நிலையில் மண் சரிவு ஏற்படாமல் தடுக்கும் வகையில் பாதையில் இருபுறங்களிலும் தடுப்பு சுவர்கள் அமைக்கும் பணியும் அகல ரயில் பாதையை மின் பாதையாக மாற்றும் பணியும் சென்ற இரண்டு வருடங்களாக […]
கணவரை கொலை செய்த மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை உதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டியில் கூலித்தொழிலாளியான சீனிவாசன்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது உறவினர் மகளான கல்பனா(25) என்பவர் பண்ருட்டியை சேர்ந்த தினேஷ்(27) என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த கல்பனாவின் பெற்றோர் அவரை கடந்த 2012-ஆம் ஆண்டு சீனிவாசனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். பின்னர் இருவரும் சென்னையில் வசித்து வந்தனர். திருமணத்திற்கு பிறகு கல்பனா […]
மின்கம்பி அறுந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேவரடியார்குப்பம் கிராமத்தில் காசி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் காசி வீட்டின் முன்பு உள்ள குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது மேலே இருந்த மின்சார கம்பியில் திடீரென அறுந்து கீழே விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி காசி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த தானிப்பாடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகில் புது உச்சிமேடு ஊராட்சிக்குட்பட்ட பட்டி கிராமத்தில் சென்ற 1982ம் வருடம் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இருக்கிறது. இந்த பள்ளியில் 35 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று வழக்கம்போல மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையினால் பள்ளி கட்டிடத்தின் மேற்கூரையில் உடைந்த ஓடுகள் வழியாகவும், தாழ்வான பகுதியில் பள்ளி அமைந்துள்ளதாலும் 2 வகுப்பறைக்குள் மழைநீர் புகுந்து குளம் போல் தேங்கிநின்றது. அதுமட்டுமின்றி பள்ளியிலிருந்த […]
சென்னை கொளத்தூர் அய்யப்பா நகரில் வசித்து வருபவர் நேரு (48). இவர் விவசாய பொருட்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்துவருகிறார். இவரை மர்மநபர் ஒருவர் செல்போனில் பேசி மிரட்டி வந்தார். அந்நபர் கூறியதாவது “தன்னை ஜி.எஸ்.டி. அதிகாரி என கூறிக்கொண்டார். மேலும் நேருவின் நிறுவனம் ரூபாய் 4 கோடி வரிஏய்ப்பு செய்துள்ளதாகவும், உரிய நடவடிக்கை மேற்கொண்டால் நிறுவனத்தை இழுத்து மூடவேண்டியதுதான். ஆகவே இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருக்க ரூபாய் 25 லட்சம் கொடுக்க வேண்டும்” என்று […]
திருச்சிமாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் ரைபிள்கிளப் இயங்கி வருகிறது. இங்கு 47வது மாநில அளவிலான துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடுதல் பிரிவுகள் சென்ற 24-ஆம் தேதி முதல் துவங்கியது. இப்போட்டி வரும் 31ம் தேதி வரை நடைபெற இருகிறது. இவற்றில் தமிழகம் முழுதும் துப்பாக்கி சுடுதலில் பயிற்சிபெற்ற 1,300 போட்டியாளர்கள் பங்கேற்று இருக்கின்றனர். இதில் 10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் சுடுதளத்தில் பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கிசுடுதல் போட்டிகளில் […]
நெல்லையில் நேற்று காலை முதல் மதியம் 2 மணிவரை வெயில் வாட்டி வதைத்தது. இதையடுத்து 2:30 மணியளவில் திடீரென்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின் 3 மணியளவில் சாரல் மழை தூவியது. 3:5 மணிக்கு இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய தொடங்கியது. அதாவது நெல்லை சந்திப்பு, டவுன், வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை பகுதிகளில் 1 மணிநேரம் இடைவிடாது மழை கொட்டித்தீர்த்தது. இந்நிலையில் மழைநீர் சாலை, தெருக்களில் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழை […]
நெல்லை மாவட்டம் ராதாபுரம் மதகனேரி பகுதியில் வசித்து வருபவர் டேவிட் (46). இவர் மீது தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, நெல்லை நீதிமன்றத்தில் சென்ற 2018 ஆம் வருடம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து டேவிட் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்துவந்தார். இந்நிலையில் சிறையிலிருந்தபோது டேவிட் எந்த தவறும் செய்யாமல் சிறை விதிகளை கடைபிடித்து நடந்ததால், அவரை நன்னடத்தை கைதி என […]
ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பாலக்காடு டவுன் பகுதியில் இருந்து ஈரோடு செல்லும் ரயில் நாளை முதல் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ரயில் வியாழக்கிழமை தவிர மற்ற எல்லா நாட்களிலும் இயங்கும். இந்த ரயில் பாலக்காட்டில் இருந்து தினமும் மதியம் 2:40 மணிக்கு புறப்பட்டு இரவு 7:10 மணி அளவில் ஈரோட்டை வந்தடையும். அதன் பிறகு கோயம்புத்தூருக்கு மாலை 4:17 மணிக்கும், வட கோவைக்கு 4:27 மணிக்கும், பீளமேடு பகுதிக்கு 4:37 […]
திருப்பூர் ரயில் நிலையம் அருகில் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இருக்கிறது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் மதியஉணவு இடைவேளையில் அருகேயுள்ள கடைகளுக்கு சென்று தின்பண்டங்கள் வாங்கி சாப்பிடுவார்கள். இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த 18 வயதுக்கு கீழே பள்ளி படிப்பை பாதியிலேயே விட்ட சிறுவர்கள் சில பேர் மாணவர்களை மிரட்டி பணத்தை பறித்து செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதேபோன்று நேற்று மதியம் மாணவர் ஒருவர் சென்ற போது சிறுவர்கள் அவரை வழிமறித்து […]
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகேயுள்ள கலப்பைபட்டி கிராமத்தில் ரூபாய் 23 ½ லட்சம் செலவில் பஞ்சாயத்து அலுவலகம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஓட்டப்பிடாரம் யூனியன் கூடுதல் ஆணையாளரான பாண்டிய ராஜன் தலைமை தாங்கினார். அத்துடன் இதில் கலப்பைபட்டி பஞ்சாயத்து தலைவர் சண்முகசுந்தரி முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற யூனியன் தலைவர் ரமேஷ் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டி பணியை துவங்கி வைத்தார். இதையடுத்து அவர் நாரைக்கிணறு கிராமத்தில் ரூபாய் 6 […]
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2 ஆம் கட்டமாக 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இந்த வழித்தடங்களில் வரும் 2025ம் வருடம் ஜூலை மாதம் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. அதாவது இந்த வழித்தடங்களில் டிரைவர் இன்றி இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 26 மெட்ரோ ரயில்களை (78 பெட்டிகள்) தயாரிப்பதற்காக “அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட்” இந்தியா நிறுவனத்திற்கு ரூபாய் 946 கோடியே 92 லட்சம் மதிப்பில் […]
அரசு பேருந்து கண்டக்டர் பஸ் மோதியதில் உயிரிழந்த நிலையில் போலீசார் விபத்து ஏற்படுத்திய பேருந்து டிரைவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சேமங்கலம் கிராமத்தை சேர்ந்த மணிவண்ணன் என்பவர் அரசு போக்குவரத்து கழகத்தில் பேருந்து கண்டக்டராக பணியாற்றி வந்த நிலையில் நேற்று மதியம் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் மணிவண்ணன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]
அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மாப்பிள்ளையூரணி பகுதியில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேல்முருகன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மோட்டார்சைக்கிளில் தூத்துக்குடியில் வந்த வேல்முருகன் மீண்டும் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது எட்டயபுரம் சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த அரசு பேருந்து வேல்முருகனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த […]
போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கோவில்பதாகை இந்திரா காந்தி நகரில் திருநாவுக்கரசு(39) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கலைச்செல்வி(30) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரசிகா(10) என்ற மகளும், ரஷன்(6) என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த […]
கிளியனூர் ஊராட்சியில் புதிதாக ஆரம்ப நிலையம் கட்ட அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் அருகே உள்ள கிளியனூர் ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்தின் கட்டிடம் சேதமடைந்ததால் சென்ற ஐந்து வருடங்களுக்கு முன்பாக இடிக்கப்பட்ட நிலையில் தற்போது 60 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டவுள்ளனர். இந்த நிலையில் அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு கிளியனூர் ஊராட்சி மன்ற தலைவர் முகமது ஹாலிது […]
தொழிலாளியை மது பாட்டிலால் குத்தியவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓடக்கரை பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணன் என்ற மகன் உள்ளார். மேலும் தொழிலாளியான இவர் தைக்காபுரத்தில் பதநீர் காய்ச்சும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கண்ணன் பதநீர் காய்ச்சும் வேலையை முடித்துவிட்டு சக தொழிலாளியான ஹரிராம் கிருஷ்ணனுடன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் செந்தில்வேல் என்பவர் மோட்டார்சைக்கிளில் வேகமாக சென்றுள்ளார். இதனை […]
பெட்ரோல் பங்கில் நூதன முறையில் திருடிய பெண் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெதப்பம்பட்டியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் நூதன முறையில் பெட்ரோல் திருடுவதாக வெளியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஆணும் பெண்ணும் சேர்ந்து காருக்கு பெட்ரோல் நிரப்பும்போது அந்த ஆண் வாகனம் டிரைவரிடம் பேச்சுக் கொடுத்து கவனத்தை திசை திருப்பியுள்ளார். அந்த பெண் பின்னால் உள்ள பிளாஸ்டிக்கேனில் பெட்ரோல் திருடுகிறார். […]
குத்தாலம் அருகே டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள குத்தாலம் அருகே ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ் தலைமையிலான அரசு உயர்நிலைப்பள்ளியில் சுகாதாரத்துறை சார்பாக டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ- மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலம் சென்றார்கள். இதைத்தொடர்ந்து பள்ளி மாணவ – மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் டெங்கு ஒழிப்பு உறுதி மொழியை எடுத்துக் கொண்டார்கள். முன்னதாக டெங்கு விழிப்புணர்வு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டிகளில் […]
தொழிலாளியிடம் செல்போன் பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அபிராமி நகர் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஆறுமுகம் காந்திநகர் 80 அடி சாலை வழியில் செல்போனில் பேசிக்கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் திடீரென ஆறுமுகத்தின் செல்போனை பறித்து மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி […]
காணாமல் போன மூன்று மாணவிகளின் வழக்கில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் பகுதி சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவி ஒருவர், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இரண்டு பேர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றார்கள். இந்த நிலையில் நேற்று மாலை அவர்களது வீட்டின் முன்பு இருந்தனர். திடீரென அவர்களை காணவில்லை. இதைத்தொடர்ந்து அவர்களின் பெற்றோர்கள் பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் […]
கணவர் மற்றும் குழந்தையுடன் கோவிலுக்கு சென்ற இளம்பெண் லாரி சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் பால்பண்ணை பேங்கர்ஸ் காலனியில் யுவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சினேகா(21) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 11 மாத கைக்குழந்தை இருக்கிறது. நேற்று யுவராஜ் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக […]