இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அரசபட்டி கிராமத்தில் ஈஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூசாமணி(24) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்ட பூசாமணி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்த பூசாமணிக்கு மீண்டும் வயிறு வலி ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் பூசாமணி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் […]
Tag: மாவட்ட செய்திகள்
தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் பயணிகள் ரயில் 1 1/2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. மதுரை மாவட்டத்தில் இருந்து நேற்று காலை தேனிக்கு பயணிகள் ரயில் புறப்பட்டு சென்றது. காலை 8.30 மணியளவில் ரயில் செக்கானூரணி அருகே சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பாறைப்பட்டியில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக ரயில்வே ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் எஞ்சின் டிரைவருக்கு உடனடியாக தகவல் தெரிவித்ததால் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை அடுத்து […]
கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கே பூசாரிப்பட்டி பகுதியில் தெச்சு தொழிலாளியான முருகேசன்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவித்ரா(20) என்ற மகள் இருந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி.ஏ இறுதியாண்டு படித்து வந்துள்ளார். அங்குள்ள விடுதியில் தங்கியிருந்து படித்த பவித்ராவுக்கு கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் முருகேசன் தனது மகளை நேற்று முன்தினம் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். நேற்று […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வேர்கிளம்பி காப்பு விளை பகுதியில் அப்துல் சலாம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலீல் ரகுமான்(27) என்ற மகன் இருந்துள்ளார். வெளிநாட்டில் வேலை பார்த்த ரகுமான் அந்த வேலை பிடிக்காமல் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்து விட்டார். இந்நிலையில் மீண்டும் வெளிநாட்டில் வேலைக்கு செல்ல ரகுமான் முயற்சி செய்தார். ஆனால் அவருக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. இதனால் […]
செல்லியம்மன் கோவிலுக்கு சொந்தமான 9 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள குமாரசாமிப்பேட்டை பகுதியில் செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலம் மற்றும் கடைகள் நேதாஜி பைபாஸ் ரோட்டில் உள்ளது. இந்த இடத்தில் பல வருடங்களாக சோலையப்பன் என்பவர் 9 கடைகள் கட்டி பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் சோலையப்பன் கடைகளுக்கு சில ஆண்டுகளாக முறையான வாடகை செலுத்தாமல் இருந்துள்ளார். இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சாதகமான தீர்ப்பு வந்தது. இதனைதொடர்ந்து […]
கஞ்சா கடத்தி சென்ற இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கலிங்கராஜபுரம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கேரளா பதிவெண் கொண்ட மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை போலீசார் நிறுத்தி விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்த நிஷான் மற்றும் ரதீஷ் என்பது தெரியவந்தது. மேலும் இருவரும் விற்பனை செய்வதற்காக கஞ்சாவை கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் 2 வாலிபர்களையும் கைது […]
பியர்சோலா அருவியை சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் நகரில் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்கும் இடமான பியர்சோலா அருவி அமைந்துள்ளது. கடந்த சில தினங்களாக, கொடைக்கானல் பகுதியில் பெய்து வரும் மழையினால் இந்த அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்நிலையில் அருவி அருகில் காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் வனத்துறையினர் கடந்த சில வருடங்களாக அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை […]
சாலையோர ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி பேருந்து நிலையம், அடிவாரம் ரோடு ஆகிய இடங்களில் சாலையோரத்தில் ஆக்கிரமிப்பு அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதனைதொடர்ந்து அங்குள்ள ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் நகராட்சி நிர்வாகம் சார்பில் பேருந்துநிலையம், அடிவாரம் ரோடு ஆகிய இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் ஆகியோர் பொக்லைன் எந்திரம் மூலம் திண்டுக்கல் சாலை, புதுதாராபுரம் […]
பணத் தகராறில் பெண் ஒருவரை அடித்துக் கொன்ற வழக்கில் ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் அருகே இருக்கும் கணவாய் புதூர் ஊராட்சியில் உள்ள ராமமூர்த்தி பகுதியில் சென்ற 17ஆம் தேதி ரயில்வே தண்டவாளம் அருகே 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதையடுத்து தகவல் அறிந்து வந்த தீவெட்டிபட்டி போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். பின் இது […]
வேளாங்கண்ணியில் இருந்து 110 கிலோமீட்டர் வேகத்தில் நாகைக்கு ரயிலை இயக்கி சோதனை செய்யப்பட்டது. நாகை- வேளாங்கண்ணி இடையிலான ரயில் பாதை சுமார் 12 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இதனால் 12 கிலோ மீட்டர் தொலைவைக் கடக்க 30 முதல் 40 நிமிடங்கள் ஆகின்றது. ஆகையால் ரயில் பாதையின் தரத்தை மேம்படுத்துமாறும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்குமாறும் ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தார்கள். இந்த நிலையில் மண் சரிவு ஏற்படாமல் தடுக்கும் வகையில் பாதையில் இருபுறங்களிலும் தடுப்பு […]
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகள் வரும் 28ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 10ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுதும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் திண்டுக்கல் மாவட்டத்திலும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சென்ற சில நாட்களாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்ட விளையாட்டு அரங்கிலுள்ள நீச்சல் குளத்தில் மிதக்கும் விதமாக செஸ் போர்டுகள் வைக்கப்பட்டது. அதாவது 16 குழுக்கள் […]
மாமல்லபுரத்தில் வசித்து வருபவர் சுரேஷ். இவருடைய மகள் கஜசுபமித்ரா (14) மாமல்லபுரம் பூஞ்சேரியிலுள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு பயின்று வருகிறார். நேற்று 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதாந்திர தமிழ்பாட செய்முறை தேர்வு நடந்தது. அப்போது மாணவி கஜசுபமித்ரா கையில் பிட்பேப்பர் வைத்துக் கொண்டு தேர்வு எழுதியதாக தெரிகிறது. இதற்கிடையில் தேர்வில் அவர் காப்பி அடிப்பதை வகுப்பில் இருந்த ஆசிரியை கையும் களவுமாக பிடித்து, அறிவுரை கூறி கண்டித்தார். மேலும் மறுநாள் பள்ளிக்கு வரும்போது பெற்றோரை அழைத்து […]
திண்டுக்கல் மாவட்டம் அருகே ரெட்டிய பட்டியில் கன்னிமார் கோயில் இருக்கிறது. இந்த கோயிலின் அருகில் தனியார் தோட்டத்தில் சுமார் 40அடி ஆழம் உள்ள கிணறு இருக்கிறது. இப்போது கிணற்றில் 6 அடி தண்ணீர் உள்ளது. நேற்று அந்த கிணற்றின் பக்கவாட்டு பகுதியில் 2 பாம்புகள் பின்னிப் பிணைந்து நடனமாடி கொண்டிருந்தது. அவற்றில் ஒன்று கரு நாகம், மற்றொன்று சாரைப் பாம்பு ஆகும். அவ்வாறு பாம்புகள் பின்னிப்பிணைந்த காட்சியை சில பேர் வேடிக்கை பார்த்தனர். இத்தகவல் அப்பகுதியில் காட்டுத் […]
ஓய்வுபெற்ற பள்ளி முதல்வரிடம் ரூ.13 லட்சம் மோசடி செய்த மர்மநபர் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆசீர்நகர் பகுதியில் செல்வ விநாயகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற பள்ளி முதல்வராக உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர் ஒருவர் இவரது வாட்ஸ்-அப் நம்பருக்கு வெளிநாட்டைச் சேர்ந்த காரை இந்தியாவில் முதன்முதலாக உங்களுக்கு வழங்க இருக்கிறோம் என கூறியுள்ளார். அதற்கு நீங்கள் முன்பணம் செலுத்த வேண்டும் என்றும் வங்கி […]
கல்லணையிலிருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோரம் உள்ள கிராமங்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். கல்லணையிலிருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் வருவாய், பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிப்பவர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீரோட்டத்தில் வலுவிழக்கும் ஆற்றின் […]
இந்தியாவின் 75வது சுதந்திர பெருவிழாவை கொண்டாடும் அடிப்படையில் மூத்தகுடிமக்களை கவுரவிக்கும் விதமாக திருச்சி மத்திய மண்டல தபால் துறை சார்பாக தஞ்சை கோட்டத்தில் அகவை 60 அஞ்சல் 20 என்ற மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தை துவங்கியுள்ளது. இதன் சிறப்புமுகாம் தஞ்சை தலைமை தபால் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது முகாமில் திருச்சி மத்திய மண்டல தபால் துறை தலைவர் அப்பாக்கண்ணு கோவிந்தராஜன் பங்கேற்று மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான சிறப்பு லோகோவை வெளியிட்டார். இவற்றில் மண்டல […]
தூத்துக்குடி ஸ்டெர்லைட்ஆலை மேலாளரான சுமதி, மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் இருப்பதாவது “தூத்துக்குடி சிப்காட்டிலுள்ள ஸ்டெர்லைட் ஆலையானது, மக்களின் போராட்டத்தை தொடர்ந்து கடந்த 2018ம் ஆண்டு மூடப்பட்டது. அங்கு ஆசிட், ரசாயனம் மற்றும் ஆபத்தான பல்வேறு மூலப்பொருட்கள் இருக்கிறது. கொரோனா 2ஆம் அலையின்போது அந்த ஆலையில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டது. அந்த ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதற்காக பயன்படுத்திய எண்ணெய், மூலப் பொருட்கள், கழிவுகள் போன்றவற்றையும், ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள மூலப்பொருட்கள் மற்றும் கழிவுகளை அகற்ற […]
கால்நடை சந்தையில் ரூ.50 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டத்திலுள்ள புஞ்சைபுளியம்பட்டியில் வியாழக்கிழமை தோறும் கால்நடை சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இந்த சந்தையில் தமிழக அரசின் சார்பில் வெள்ளாடுகள் பயனாளிகளுக்கு வழங்குவதற்காக கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஆடுகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் ஆடுகளின் எடைக்கு ஏற்ப அதனுடைய விலை ரூ.4000 முதல் ரூ.8000 வரை விற்பனையானது. கடந்த […]
குறுக்கே நாய் பாய்ந்ததால் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ கவிழ்ந்து தம்பதி காயமடைந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழியில் இருந்து நாகர்கோவில் நோக்கி ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் கணவன், மனைவி இருவரும் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் வெள்ளமடம் கிறிஸ்து நகர் பகுதியில் ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நாய் குறுக்கே சென்றது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கணவன் மனைவி இருவரும் பலத்த காயமடைந்தனர். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் 2 […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் மளிகை கடைக்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தோப்பூர் பகுதியில் அந்தோணி பீட்டர் என்பவர் வசித்து வருகிறார். இவர் சத்தியமங்கலம் பெரிய பள்ளிவாசல் அருகில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இதனால் அந்தோணி பீட்டர் சத்தியமங்கலம் கொங்கு நகரில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும் மற்றும் ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் தனது மகளின் 3 பேரும் பள்ளியில் […]
புதிதாக உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடசென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் கொண்டு செல்வதற்காக கடலும் ஆறும் கலக்கும் எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் புதிதாக உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. அப்பகுதியில் கோபுரங்கள் அமைக்கப்பட்டால் அங்கு வசிக்கும் 8 மீனவ கிராமத்தை சேர்ந்த 20 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்வதில் பல பிரச்சினைகள் ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்படும் […]
பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் கடலின் நடுவில் அமைந்துள்ள ஒரு பாறையில் 133 அடிஉயர திருவள்ளுவர் சிலை எழுப்பப்பட்டுள்ளது. இந்த சிலையானது உப்பு காற்றினால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக 4 வருடங்களுக்கு ஒரு முறை சிலிக்கான் என்ற ரசாயன கலவை பூசப்படுவது வழக்கம் ஆகும். சென்ற 2017 ஆம் வருடம் திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசப்பட்டது. இதையடுத்து கடந்த வருடத்தில் ரசாயன கலவை பூச அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக அந்த […]
மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் அருகில் கப்பலூரில் சுங்கச்சாவடி இருக்கிறது. நேற்று அதிகாலை மதுரையிலிருந்து காய்கறிகளை ஏற்றிக் கொண்டு சிவகாசி நோக்கி கனரக லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி கப்பலூர் சுங்கச் சாவடி வசூல் மையத்திற்குள் நுழைந்தது. அப்போது லாரியின் முன்புறம் ஒட்டப்பட்டிருந்த “பாஸ்ட் டிராக்” ஸ்டிக்கர் ஸ்கேன் ஆகவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக பணியிலிருந்த திருமங்கலம் சொக்கநாதன்பட்டியைச் சேர்ந்த தினேஷ் என்ற ஊழியர் அந்த லாரிக்கான கட்டணத்தை வசூலிக்க தான் வைத்திருந்த ஸ்கேன் கருவி […]
சென்னை திருவொற்றியூரில் பக்கிங்காம் கால்வாய், சாத்தாங்காடு, மணலியில் காமராஜ் சாலை, மாதவரத்தில் சி.எம்.டி.ஏ. டிரக் முனையம், தண்டையார் பேட்டையில் வடக்கு அவென்யூ சாலை, வியாசர்பாடி, மகாகவி பாரதியார்நகர், ராயபுரத்தில் கால்நடை டிப்போ, சூளை, அவதான பாப்பையா சாலை, திரு.வி.க.நகரில் ஜமாலியா பழைய லாரி நிலையம், பெரம்பூர் நெடுஞ்சாலை, அம்பத்தூரில் மாணிக்கம் பிள்ளை தெரு, அண்ணா நகரில் செனாய் நகர், முதல் பிரதான சாலை, தேனாம் பேட்டையில் லாயிட்ஸ் காலனி, கோடம்பாக்கத்தில் குருசிவா தெரு எஸ்.எம்.பிளாக், ஜாபர்கான்பேட்டை, வளசரவாக்கத்தில் […]
போலீஸ் பாதுகாப்புடன் அகல ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்றது. நாகை மாவட்டத்தில் உள்ள செம்பகராயநல்லூர், ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட பகுதிகளில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியானது நடந்து வருகின்றது. தெற்கு பூசாரி தோட்டத்தில் சுரங்கப்பாதை அமைக்க முடியாது என ரயில்வே நிர்வாகம் கூறியது. இதனால் அப்பகுதி மக்கள் முன்பு இருந்த ரயில்வே கேட்-டை பயன்படுத்தி வந்த நிலையில் சுரங்கப்பாதை அமைக்காமல் ரயில் பணி நடைபெற்று வருகின்றது. மேலும் மண்ணிறப்பும் பணிகள் நடந்து வருகின்றது. இதனால் அப்பகுதி மக்கள் தடுத்து […]
ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்சி சாலையில் இருக்கும் ஜெய்நகரை சேர்ந்தவர் குமரேசன். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் சென்ற 18ஆம் தேதி சேந்தமங்கலம் சாலையில் உள்ள டாஸ்மாக்கில் இரவு நேரத்தில் தனது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பி இருக்கின்றார். அப்போது நாமக்கல்-திருச்சி இடையிலான சாலை பழைய கோர்ட் கட்டிடம் அருகே காரை நிறுத்தியதாக சொல்லப்படுகின்றது அப்போது அங்கு வந்த […]
பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பூந்தோட்டம் ரயில்வே காலனியில் பெயிண்டரான சுந்தரம்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலா(34), லட்சுமி(30) என்ற இரண்டு மனைவிகள் இருந்துள்ளனர். இதில் கலாவுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். கடந்த 6 ஆண்டுகளாக கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கலா தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இதில் 2-வது மனைவி லட்சுமிக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் […]
கூலி தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இடைக்கோடு குடுக்கச்சி விளை மலமாரி பகுதியில் தி.மு.க பிரமுகரான தாஸ்(52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சாந்தா என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் தாசுக்கும் அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க பிரமுகரான ஸ்டான்லி என்பவருக்கும் உள்ளாட்சி தேர்தலின் போது முன்விரோதம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் ஸ்டான்லி தாசை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அப்போது […]
எருமப்பட்டி பற்றி அருகே இருக்கும் தொடக்கப் பள்ளியில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமப்பட்டி அருகே இருக்கும் ரெட்டிபட்டியில் பாரதி மானிய தொடக்கப்பள்ளியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திடீரென ஆய்வு மேற்கொண்டார்கள். அப்பொழுது அவர்கள் சமையல் கூடத்திற்குச் சென்று சுகாதாரத்தை ஆய்வு செய்தார்கள். பின் அங்கே சமைக்கப்பட்டிருந்த உணவை சாப்பிட்டுவிட்டு தரம் குறித்து கேட்டறிந்தார்கள். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள், சத்துணவு சாப்பிடும் குழந்தைகளின் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை விசாரணை செய்தார்கள். மேலும் ஆய்வின்போது […]
முதியவரை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் ராம்நகர் பகுதியில் கூலி தொழிலாளியான சின்னசாமி(70) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் மணிகண்டன்(30) என்பவருக்கும் இடையே வீட்டின் எல்லை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த மணிகண்டன் சின்னச்சாமியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் மணிகண்டன் சின்னச்சாமியை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் காயமடைந்த சின்னசாமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]
காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் சென்ற இரண்டு நாட்களுக்கு முன்பாக தொரப்பள்ளி வனத்துறையின் சோதனைசாவடியில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டவர்கள். அப்போது நள்ளிரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் நடந்து வந்தது. இதையடுத்து சோதனை சாவடியை தாண்டி சென்றது. இதனால் வன ஊழியர்கள் அங்கிருந்து அச்சத்துடன் ஓடினார்கள். தொடர்ந்து காட்டு யானை குனில், புத்தூர் வயல் […]
கத்தலூர் ஊராட்சியில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை ஒன்றியத்திற்குட்பட்ட ரோட்டாத்துப்பட்டி, குளத்தாத்துபட்டியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இந்நிலையில் சென்ற 10 நாட்களுக்கு மேலாக இங்கு குடிநீர் வராமல் இருந்திருக்கின்றது. இதனால் பொதுமக்கள் கிணறு மற்றும் கோரையாற்றில் குழி தோண்டி தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்திருக்கின்றார்கள். இதுகுறித்து ஊராட்சி செயலாளரிடம் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் […]
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வலியவிளை பகுதியில் ஜெரின்(22) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அருமனை பகுதியில் 11-ஆம் வகுப்பு மாணவி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது ஜெரின் வீட்டிற்குள் நுழைந்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனை அடுத்து வீட்டிற்கு வந்த பெற்றோரிடம் மாணவி நடந்தவற்றை தெரிவித்து கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் மார்த்தாண்டம் […]
ரயிலில் அடிபட்டு தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விநாயகர் நகரில் கூலி தொழிலாளியான நாச்சான்(72) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொட்டிசெட்டிபட்டி ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது மதுரையை நோக்கி சென்ற ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் உடலை மீட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி […]
ஆற்றில் படகு கவிழ்ந்து பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கொள்ளிடம் கரையோரம் இருக்கும் நாதல்படுகை கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். அவரின் மனைவி காந்திமதி, மகன் ராசுகுட்டி. இவர்கள் ஆடுகளை வளர்த்து வருகின்றார்கள். இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வருவதற்கு முன்பே நாதல்படுகை கிராமத்திற்கு கணேஷ் வந்துவிட்டார் ஆனால் காந்திமதி மற்றும் ராசுகுட்டி உள்ளிட்டோர் மட்டும் திட்டு பகுதியில் ஆடுகளை பாதுகாத்துக் கொண்டு அங்கேயே தங்கியிருந்தார்கள். இந்நிலையில் நேற்று தண்ணீரின் வரத்து அதிகரித்ததால் அவர்கள் […]
குத்தாலம் அருகே அறிவாளால் வெட்டப்பட்டவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கீழமாந்தை மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் ஆல்பர்ட். இவருக்கும் ஆரோக்கியஸ்ரீதேவி என்பவருக்கும் சென்ற 2019 ஆம் வருடம் திருமணம் நடந்தது. ஆனால் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் திருமணம் நடந்த இரண்டு மாதத்திலேயே ஆரோக்கியஸ்ரீதேவி கணவரை விட்டு பிரிந்து தந்தையை வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் இவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த பொழுது ஆல்பர்ட் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் […]
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 10ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. தற்போது வேலூர் மாவட்ட கல்லூரி மாணவ-மாணவிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் அடிப்படையில் சாய்நாதபுரத்திலுள்ள டி.கே.எம். மகளிர் கல்லூரி வளாகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு செஸ் போட்டி நடைபெற்றது. இவற்றில் டி.கே.எம். மகளிர் கல்லூரி, ஊரீசு கல்லூரி, அக்சீலியம் கல்லூரி, குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரி உட்பட பல கல்லூரி மாணவர்கள் பங்கேற்று தங்களது […]
வேலூர் மாவட்டத்திலுள்ள ஒடுகத்தூரை அடுத்த பீஞ்சமந்தை சின்ன எட்டிபட்டி கிராமத்தில் வசித்து வருபவர் துரைசாமி மகன் குள்ளையன் (28). இவருக்கும் ஜார்த்தான் கொல்லை ஊராட்சிக்குட்பட்ட எலந்தம்புதூர் மலை கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் மகள் காஞ்சனாவுக்கும் (22) சென்ற 2 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து காஞ்சனா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். எலந்தம்புதூர் மலை கிராமத்திலுள்ள தாய் வீட்டில் இருந்த காஞ்சனாவுக்கு நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் பிரசவவலி ஏற்பட்டது. இதனிடையில் காஞ்சனாவின் கணவர் வெளியூருக்கு […]
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஊசாம்பாடி பகுதியில் வசித்து வரும் சுலோச்சனா,கனகா மற்றும் குப்பு ஆகிய 3 பெண்களும் முதியோர்உதவித்தொகை பெற்று வந்தனர். இவர்களுக்கு சென்ற 4 மாதங்களுக்கு முன் உதவித்தொகை திடீரென்று நிறுத்தப்பட்டது. இதனால் மீண்டும் முதியோர் உதவித் தொகை வழங்கக் கோரி கலெக்டர் அலுவலகத்தில் 3 பேரும் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட நிர்வாகமானது புது மல்லவாடி வருவாய் ஆய்வாளரான ஷாயாஜி பேகத்தை விசாரணைக்காக அனுப்பிவைத்துள்ளது. இதில் வருவாய் ஆய்வாளர் ஷாயாஜி பேகம், […]
சாலை தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மின்வாரிய ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள மேட்டுபிரான்சேரி பகுதியில் சுப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெருமாள் என்ற மகன் இருந்துள்ளார். இவர் நெல்லை மகாராஜபுரம் மின்வாரிய அலுவலகத்தில் போர் மேனாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கயத்தாறிலிருந்து மேட்டுபிரான்சேரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது ராஜாபுதுக்குடி சாலையில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையில் வைத்துள்ள […]
நாய்களிடம் சிக்கிய புள்ளி மானை வனத்துறையினர் மீட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள துளசிப்பட்டி காட்டுப்பகுதியில் 3 வயதுடைய ஆண் புள்ளிமான் ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்பகுதியில் உள்ள நாய்கள் புள்ளி மானை துரத்தி கடித்தனர். இதனை பார்த்த அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் நாய்களிடம் இருந்து பலத்த காயத்துடன் இருந்த புள்ளிமானை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து வனத்துறையினர் மானை விளாத்திகுளம் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கால்நடை மருத்துவர்கள் மானுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றி குருமலை […]
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் பரிசு வழங்கி பாராட்டினார். சென்னையில் நடைபெற இருக்கிற செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் தற்போது பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கென விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி காமராஜ் பெண்கள் கல்லூரியில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கான செஸ் போட்டிகள் நேற்று காலை நடந்தது. அந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா […]
பேன்சி கடையில் பணத்தை திருடிச் சென்ற வாலிபருக்கு 5 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவில் வளாகத்தில் பேன்சி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த மார்ச் 14-ஆம் தேதி அவரது கடையில் ரூ.560-ஐ மர்ம நபர் திருடிச் சென்று விட்டார். இதுகுறித்து சரவணன் கோவில் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். […]
செல்போன் திருடியவருக்கு 14 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தாறு பகுதியில் சங்கர நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த மார்ச் 25-ஆம் தேதி குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். இந்நிலையில் சாமி தரிசனம் செய்து விட்டு அங்குள்ள மண்டபத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது தலைமாட்டில் வைத்திருந்த செல்போனை மர்மநபர் ஒருவர் திருடி சென்று விட்டார். அந்த செல்போனின் மொத்த மதிப்பு ரூ.40 […]
10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இசை பயிற்சி பள்ளி ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் பாரதி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் இசை பயிற்சி பள்ளி ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாரதி தனது உறவினர் மகளான 17 வயது மாணவி பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால் திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு டுட்டோரியல் பயிற்சி மையத்தில் சேர்த்துள்ளார். மேலும் தந்தையை […]
சாலையோர பழக்கடை வியாபாரிகள் பழங்களை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தென்னம்பாளையம் மார்க்கெட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. அங்கு திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் தாங்கள் பயிரிடும் காய்கறி, பழங்களை தென்னம்பாளையம் உழவர் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் திருப்பூர் பல்லடம் சாலையில் வியாபாரிகள் சிலர் காலை 4:00 மணி முதல் காலை 8 மணி வரை சாலையோரம் பழம் வியாபாரம் செய்து வந்துள்ளனர். இதனால் […]
இருவரிடையே ஏற்பட்ட தகராறில் உறவினரை கம்பால் தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாணல்காடு பகுதியில் கைலாசம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கணேசன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கணேசன் மதுபோதையில் தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை அவரது உறவினரான அதே பகுதியில் வசிக்கும் உலகுமுத்து என்பவர் கணேசனை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணேசன் உலகுமுத்துவிடம் தகராறில் ஈடுபட்டு அவரை கம்பால் தாக்கியுள்ளார். இது குறித்து உலகுமுத்து முறப்பநாடு காவல்நிலையத்தில் […]
கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தருவைகுளம் காவல்துறையினர் வே.பாண்டியாபுரம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் 2 போரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் கழுகாசலபுரம் பகுதியில் வசிக்கும் கணேசன், கருப்பசாமி என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு […]
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகில் சகாயநகர் ஊராட்சிக்குட்பட்ட வீரமார்த்தாண்டன் புதூர் பகுதியில் முப்பாத்து ஓடை அருகே சுடலைமாடசாமி கோயில் இருக்கிறது. இந்த கோயிலுக்கு ஒருவர் இடத்தை தானமாக கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோயில் உள்ள இடத்தின் வாசல் பகுதி ஓடை புறம்போக்கில் உள்ளதாக பொதுப் பணித்துறை மற்றும் வருவாய்த்துறைக்கு புகார் வந்தது. இதையடுத்து எந்த முன் அறிவிப்பும் இன்றி பொதுப் பணித்துறை உதவி செயற்பொறியாளர் வல்சன் போஸ், மண்டல துணை தாசில்தார் ஆறுமுகம், வருவாய் ஆய்வாளர் சதீஷ், […]
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டு உறுப்பினர்கள் இருக்கின்றனர். இவற்றில் 11 பேர் தி்.மு.க., 2 பேர் பா.ஜ.க., ஒருவர் அ.தி.மு.க., ஒருவர் கொ.ம.தே.க. ஆவர். மொடக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட 5-வது வார்டான காட்டுப் பாளையம் பகவதி நகரில் 2 ஏக்கர் பரப்பளவில் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை அமைக்க கட்டிட அனுமதி வழங்குவது குறித்த தீர்மானம் நேற்று முன்தினம் 8 தி.மு.க. உறுப்பினர்களால் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக அறிந்த அந்த பகுதி […]