வீடு கட்டுவதில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம் அருகே இருக்கும் பாப்பாடியை அடுத்துள்ள தச்சாங்காட்டூர் பகுதி சேர்ந்தவர் மாரிமுத்து. இவரின் மனைவி வள்ளி. இருவரும் கூலி தொழிலாளர்களாக இருந்த நிலையில் சென்ற 2017 ஆம் வருடம் மாரிமுத்து புதிய வீடு ஒன்றை கட்ட தொடங்கிய போது, வீடு கட்டுவதில் அதிகம் செலவு ஏற்படுவதாக மனைவியிடம் கூறி […]
Tag: மாவட்ட செய்திகள்
பேருந்து வசதி இல்லாததால் மலை கிராம மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கிழக்கு தொடர்ச்சி மலை மீது கல்வராயன் மலை அமைந்துள்ளது. அப்பகுதியில் ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் அந்த மலைப்பகுதியில் வாழும் மலை கிராம மாணவர்கள் கல்வி செல்வதை பெறுவதற்கு போராடி கொண்டிருக்கின்றனர். ஆனால் தற்போது மலைகிராம மாணவர்கள் பல சுமைகளை கடந்து உயிரை பணயம் செய்து தான் கல்வி கற்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இந்நிலையில் சமவெளி பகுதியில் […]
என் குப்பை, என் பொறுப்பு என்ற தலைப்பில் 14 பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பள்ளி சுவற்றில் ஓவியம் வரைந்தனர். இந்தியா முழுவதும் திடக்கழிவு மேலாண்மை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் என் குப்பை, என் பொறுப்பு என்ற தலைப்பில் 14 பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு ஓவியம், கட்டுரை மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் ஆகிய போட்டி நடைபெற்றது. அதன்படி காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஓவிய ஆசிரியர் உதவியுடன் […]
காதல் மனைவியிடம் வரதட்சனை கேட்டு அடித்துக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள தம்மம்பட்டி அருகே இருக்கும் நாகியம்பட்டி கரிகாலன் குட்டையை சேர்ந்த செம்புலிங்கம் என்பவரின் மகன் மணிகண்டன்(34). இவரின் முதல் மனைவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் அதே ஊரை சேர்ந்த மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த அகல்யா(29) என்ற பெண்ணை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அகல்யாவின் தாயார் தனது விவசாய நிலம் […]
கடன் தொகைக்கு கூடுதல் பணம் வசூலித்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அம்மகளத்தூர் கிராமத்தில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமரேசன் என்ற மகன் உள்ளார். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சியில் வசிக்கும் சுப்பிரமணியன் அவரது மகன் முருகன், கார்த்திகேயன் மனைவி பெரியநாயகம் ஆகியோரிடமிருந்து ரூ.25 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இந்த கடனை 2 ஆண்டுகளுக்குள் வழங்கும் வகையில் தனது வீட்டை வைத்து ஒரு ஆவணத்தையும் ஏற்படுத்தி கொண்டுள்ளார். […]
மத்திய சிறைச்சாலையில் மூன்று கைதிகள் செல்போன், சிம் கார்டு, டேட்டா கேபிள் வைத்திருந்ததை போலீசார் சோதனையின் போது பறிமுதல் செய்தார்கள். மதுரை மாவட்டத்திலுள்ள மத்திய சிறைச்சாலையில் போலீசார் திடீர் சிறை சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது கைதிகள் அடைத்து வைக்கப்பட்ட ஒரு அறையில் சோதனை செய்ததில் செல்போன், சிம் கார்டு, டேட்டா கேபிள் உள்ளிட்டவை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அந்த அறையில் விக்னேஷ், அருண் பாண்டியன், சாமுவேல் உள்ளிட்ட மூன்று பேர் பயன்படுத்தி வந்தது தெரிய […]
தேன்கனிக்கோட்டையில் ரத்ததான முகமானது நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டையில் இருக்கும் கெலமங்கலம் அரசு வட்டார ஆரம்பி சுகாதார நிலையத்தின் சார்பாக ரத்ததான முகமானது சௌடேஸ்வரி மஹாலில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் பேரூராட்சி தலைவர் சீனிவாசன், செயல் அலுவலர் மனோகரன், தாசில்தார் குருநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்கள். இதையடுத்து அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் விஜயன், கெலமங்கலம் பள்ளி சீரார் நல மருத்துவர்கள் […]
வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனபள்ளியில் இருக்கும் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக மாற்று திறனாளிகள் ஊரக வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மேலும் கோஷங்கள் எழுப்பினார்கள். இதையடுத்து தகவல் அறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசமூர்த்தி மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து உடன்பாடு ஏற்பட்ட பின் போராட்டத்திலிருந்து கலைந்து சென்றார்கள். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பாக கிராம ஊராட்சி தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்கள் நலச்சங்கம் சார்பாக பல கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அவர்கள் போராட்டத்தில் முன்வைத்த கோரிக்கைகள் என்னவென்றால், டேங்க் ஆபரேட்டர்களுக்கு தொகுப்பூதியமாக 250 ரூபாய் வழங்கப்படுகின்றது. இவற்றை மாற்றி சிறப்பு காலமுறை ஊதியம் அல்லது காலம் முறை ஊதியம் வழங்க […]
ஓசூரில் வரலாற்றில் கிருஷ்ணகிரி மாவட்டம் என்ற நூல் வெளியீட்டு விழாவானது நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் இன்று வரலாற்றில் கிருஷ்ணகிரி மாவட்டம் என்ற வரலாற்று நூல் வெளியீட்டு விழாவானது தொல்லியல் அறிஞர் பூங்குன்றன் தலைமையில் நடைபெற்றது. இந்த நூலை வரலாற்று ஆய்வு மைய தலைவர் கிருஷ்ணன் எழுதியுள்ளார். மேலும் இந்நிகழ்ச்சியில் வணங்காமுடி, வேல்முருகன், டிவிஎஸ் மோட்டார் தொழிற்சங்க தலைவர் குப்புசாமி, நந்தவனம், சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முன்னிலை வகித்தார்கள். ஏ.கே.ராஜு வரவேற்றார். இதையடுத்து நடிகர் […]
குளிப்பதை வீடியோ எடுத்ததாக கூறி வாலிபர் மிரட்டியதால் மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கண்டாச்சிபுரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் 18 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் விழுப்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் உளுந்தூர்பேட்டை பகுதியில் வசிக்கும் சுதாகர் என்பவர் மாணவி கல்லூரிக்கு சென்று வரும்போது தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மேலும் சுதாகர் மாணவியிடம் வழிமறித்து ‘நீ குளிக்கும்போது வீடியோ எடுத்து […]
கரும்பு தோட்டத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரியலூர் கிராமத்தில் பாவாடை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோவிந்தசாமி என்ற மகன் உள்ளார். இவர் அதே பகுதியில் 3 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில் கரும்பு தோட்டத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சங்கராபுரம் தீயணைப்புத்துறையினர் தண்ணீரை […]
ஈரோடு மாவட்டம் சாஸ்திரி நகர் கல்யாணசுந்தரி வீதியில் வசித்து வந்தவர் முருகன். இவரது மனைவி ஜீவா (45) ஆவார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார். இவர்களில் முருகன் இறந்து விட்டதால் வீட்டுவேலை செய்து குடும்பத்தை ஜீவா நடத்தி வருகிறார். சென்ற சில தினங்களுக்கு முன் ஜீவாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் ஈரோட்டிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் ஜீவாவுக்கு கர்ப்பப்பையில் கட்டி உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவர் ஈரோடு […]
காசநோய் இல்லா தமிழ்நாடு 2025 எனும் இலக்கினை எட்ட அரசு மேற்கொண்டு வருகிற பல நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரால் டிஜிட்டல் எக்ஸ்ரே பொருத்தப்பட்ட 23 நடமாடும் வாகனங்கள் துவங்கி வைக்கப்பட்டன. இதில் ரூபாய் 46 லட்சம் மதிப்பீட்டிலான டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் தர்மபுரி மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த வாகனம் வாயிலாக காசநோய் கண்டறியும் சேவையை தர்மபுரியில் கலெக்டர் சாந்தி துவங்கி வைத்து பார்வையிட்டார். இதையடுத்து கலெக்டர் கூறியிருப்பதாவது “தர்மபுரியில் காசநோய் ஏற்படும் […]
நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் டேவிட்பால் என்ற சின்னப்பன் (57). இவர் கோவை மாவட்டம் துடியலூர் அருகேயுள்ள விஸ்வநாதபுரத்தில் வசித்து வருகிறார். இதனிடையில் இவர் பெரியநாயக்கன் பாளையத்தில் வெளிநாட்டிற்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனம் நடத்திவந்தார். இந்நிலையில் டேவிட்பால் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக ஆன்லைன் வாயிலாக தகவல் கொடுத்தார். இதை நம்பி டேவிட்பாலை தொடர்பு கொண்ட பலரிடம் பணம் பெற்று மோசடி செய்தார். அதன்படி தமிழகம் முழுதும் 44 பேரிடம் ரூபாய் […]
கோவை மாவட்டம் வால்பாறையில் பல எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சக்தி எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் காட்டுயானைகள் புகுந்தது. அவை திடீரென தொழிலாளர்களின் வீடுகளின் சுவரை இடித்து சேதப்படுத்தி அட்டுழியம் செய்தது. இதனையடுத்து யானைகள் அந்த வீட்டிலிருந்த உணவுபொருட்களை எடுத்து சாப்பிட்டது. அதன்பின் வீட்டுக்குள் இருந்த பொருட்களை எடுத்து வீசி சேதப்படுத்திது. இது தொடர்பாக தகவலறிந்த நகராட்சி தலைவர் அழகுசுந்தர வள்ளி அதிகாரிகளுடன் சென்று பாதிக்கப்பட்ட […]
ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிதம்பரநகர் பேருந்து நிலையம் அருகில் ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாவட்ட தலைவர் பெ.சாம்பசிவன் தலைமையில் நடைபெற்றது. மேலும் வட்ட செயலாளர் த.சம்பத் சாமுவேல் முன்னிலை வகித்தார். இந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர் எம்.ஏ.எச்.முத்தையா, மாநில பொதுக்குழு உறுப்பினர் பே.சங்கரலிங்கம், அனைத்து துறை […]
விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் என். ஜி.ஆர் ரோடு கடைவீதியில் வணிக வளாகங்கள், வியாபாரக் கடைகள் நிறைந்திருப்பதால் எப்போதும் அங்கு போக்குவரத்து நெரிசல் காணப்படும். இந்நிலையில் கடைவீதிக்கு வரும் வாகனங்களை பொதுமக்கள் சிலர் அங்குமிங்கும் நிறுத்தி விட்டுச் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில் வாகனங்களை நிறுத்த போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் மஞ்சள் கோடுகளை வரைந்துள்ளனர். ஆனால் சிலர் விதிகளை பின்பற்றாமல் வாகனங்களை நிறுத்துகின்றனர். […]
பிரதோஷ விழாவை முன்னிட்டு புற்றுக்கோவிலில் சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் கோவிலில் பிரதோஷ விழா சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோவிலில் சங்கல்பம், கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபண கும்பகலச பூஜை, ருத்திர ஜெபம், வருணஜெபம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து சங்கரலிங்க சுவாமி, நந்தியம் பெருமானுக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற […]
கடன் தொல்லை அதிகரித்ததால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள மடத்துக்குளம் பகுதியில் மைக்கேல் ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இவருக்கு கடன் சுமை அதிகரித்ததால் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இவருக்கு டெய்லரான மெர்சி ராணி என்ற மனைவி உள்ளார். இவர் சோழமாதேவி பகுதிக்கு வேலை தேடி சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு வந்து பார்த்த போது […]
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம் பகுதியில் நவநாயகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரத்னாதேவி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் நவநாயகம் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் புதியம்புத்தூரில் காய்கறி வாங்கிவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது இந்திராநகர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது ரத்னாதேவி திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரத்னா தேவியை உடனடியாக மீட்டு […]
தகராறில் உருட்டுக் கட்டைகளுடன் மோதிக்கொண்ட இரு தரப்பினரில் 10 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள கிராமத்தில் 26 வயதுடைய நர்ஸ் ஒருவர் வசித்து வருகிறார். இவர் புதுச்சேரியில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அந்த நர்ஸ் தனது வீட்டில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் அரவிந்த் என்பவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த நர்ஸ் தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதனை அவரது தந்தை […]
சுருக்குமடி வலையை பறிமுதல் செய்த மீன்வளத்துறை அதிகாரிகளை மீனவர்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறதா? எஸ்.டி.பி., ஐ.பி. விசைப்படகுகளில் விதிமுறைகளுக்கு உட்பட்டு மீன்பிடிக்க செல்கின்றனரா? என மீன்வளத்துறை அதிகாரிகள் கடலிலும், மீன்பிடி துறைமுகத்திலும் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கடலூர் தேவனாம்பட்டினம் கடல் பகுதியில் மீன்பிடிக்க படகில் தயாராக இருந்த மீனவர்களை விரட்டியடித்தனர். இந்நிலையில் சொத்திக்குப்பம் மீனவ கிராமத்தில் மீனவர்கள் சுருக்குமடி வலையை […]
ஃபேன்சி வியாபாரியை கத்தியால் குத்தி கொலை செய்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள விடிவெள்ளி நகரில் முனியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஃபேன்ஸி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஊர் ஊராக ஃபேன்ஸி பொருட்களை இருசக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு சத்யா என்ற மனைவியும், திவ்யதர்ஷினி என்ற மகளும், ஆகாஷ் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் முனியப்பனும் விடிவெள்ளிநகரில் வசிக்கும் ஈஸ்வரன் என்ற தொழிலாளியும் உறவினர்கள். […]
லாரிகள்-கார், அரசு பேருந்து அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு ஆயில் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை ஆந்திராவை சேர்ந்த டிரைவர் நரசிம்மையா ஓட்டி வந்துள்ளார். இவருடன் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ரமணன் மாற்று டிரைவராக உடன் வந்துள்ளார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் வழியாக சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி முன்னால் சென்ற கார் […]
கல்லூரி மாணவியுடன் விஷம் குடித்து காதலனும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள கொல்லப்பட்டி பகுதியில் முனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சினேகா என்ற மகள் இருந்துள்ளார். இவர் பாலக்கோடு பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவரும் குளிக்காடு பகுதியில் வசிக்கும் தமிழரசு என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதனையறிந்த மாணவியின் பெற்றோர் மகளுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருந்தனர். இதனால் இவர்கள் இருவரும் வீட்டை […]
மாநில அளவிலான கபடி போட்டியானது பழனியில் நடைபெற்றது. இவற்றில் திண்டுக்கல், திருப்பூர், மதுரை, திருச்சி மற்றும் கோவை உட்பட பல மாவட்டங்களிலிருந்து 56 அணிகள் பங்கேற்றது. இந்த போட்டியை வணிக வரித்துறை கூடுதல் ஆணையர் தேவேந்திர பூபதி துவங்கி வைத்தார். அத்துடன் கபடி கழக மாநில துணை செயலாளர் ரமேஷ் இதற்கு முன்னிலை வகித்தார். போட்டிகள் நாக் அவுட் முறையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து போட்டியில் பழனி அ.கலையம்புத்தூர் அணி முதலிடத்தை பிடித்தது. உடுமலை, தாராபுரம் அணிகளானது […]
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியிலிருந்து செம்பட்டி போகும் சாலையில் சின்னாளப்பட்டி பேரூராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு இருக்கிறது. இங்கு மின்மயானம் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் சார்பாக முடிவு செய்யப்பட்டது. இதனிடையே குப்பைகிடங்கு அருகேயுள்ள அஞ்சுகம் காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மின்மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் அப்பகுதி பொதுமக்கள் 200க்கும் அதிகமானோர் சின்னாளப் பட்டி பேரூராட்சி அலுவலகத்திற்கு திரண்டுவந்தனர். இந்நிலையில் அவர்கள் பேரூராட்சி அதிகாரிகளிடம் புகார்மனு கொடுக்க வேண்டும் என்று கேட்டனர். எனினும் […]
கோவை மாவட்டத்திலுள்ள வால்பாறையில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கிறது. இந்நிலையில் நேற்று வால்பாறை மற்றும் சுற்றுப் புற பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த தொடர்மழை காரணமாக நடு மலை, வெள்ளி மலை டனல் ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனிடையில் பரம்பிக் குளம்-ஆழியாறு திட்டத்தின் அடிப்படை அணையாக திகழும் சோலையாறு அணை நிரம்பியது. அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரின் அளவானது வினாடிக்கு வினாடி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சோலையாறு அணையின் பாதுகாப்புகருதி எப்போது வேண்டுமானாலும், அணை […]
கோவை மாவட்டத்திலுள்ள சூலூர் சடையப்பதேவர் வீதியில் வசித்து வருபவர் கந்தவேல் (48). இவரது மனைவி ரமாபிரபா (41). இந்த தம்பதியினரின் மகன் அருண் (16). இதில் கந்தவேல் சென்னை வண்டலூரிள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றியதால் அவர் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தார். இதனால் மகன் அருண் சென்னையிலுள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இதையடுத்து கொரோனா காரணமாக ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி கள்ளிப்பாளையத்திலுள்ள அவருடைய நண்பரது பண்ணை வீட்டில் கந்தவேல் குடும்பத்துடன் வசித்து […]
தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவிந்தன்பட்டி கிராமத்தில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான மணிராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு பேச்சியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். மேலும் மணிராஜ் குடித்துவிட்டு அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் மணிராஜ் வழக்கம்போல் மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதில் […]
மகன் மற்றும் உறவினரின் மோட்டார் சைக்கிளை தந்தை தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடம்போடுவாழ்வு பகுதியில் ஓட்டுநரான பேச்சுமுத்து என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பேச்சுமுத்துவின் தந்தை முருகன் என்பவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தனது மனைவியான சண்முகதாயிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டு முருகன் தொந்தரவு செய்துள்ளார். இதனை […]
கருக்கலைப்பு செய்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி பகுதியில் பெற்றோரை இழந்த 16 வயது சிறுமி உறவினர் வீட்டில் வசித்து வருகிறார். அந்த சிறுமியை அதே பகுதியில் வசிக்கும் போலீஸ்காரர் மற்றும் அவரது தம்பி உள்பட 5 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததால் அவர் கர்ப்பமானார். இதுகுறித்து அறிந்த 5 பேரும் சிறுமியின் கருவை கலைக்க நர்ஸ் ஒருவரிடம் பேசி பணம் கொடுத்துள்ளனர். அதன்படி அந்த நர்ஸ் கருவை […]
தண்ணீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் ஐயங்கார் தெருவில் கார்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசன்னா(16) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரசன்னா அதே பகுதியில் வசிக்கும் ஹரிஹரன் மற்றும் நண்பர்கள் 5 பேருடன் கொற்கை முப்பகோவில் பகுதியில் இருக்கும் குடமுருட்டி ஆற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஹரிஹரனும், பிரசன்னாவும் எதிர்பாராதவிதமாக ஆற்றில் மூழ்கினர். இதனை […]
வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபி கிறிஸ்டின் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பாலிடெக்னிக் படித்து முடித்த அபி கிறிஸ்டின் பல்வேறு நிறுவனங்களில் வேலை தேடி வந்துள்ளார். ஆனால் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த வாலிபர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் […]
வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இன்ஜினியர் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குன்னங்காடு பகுதியில் மகாலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரான ரமேஷ்(28) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனது நண்பரான சுபாஷ்(32) என்பவருடன் பிளாஸ்டிக் கேனில் குடிநீர் வினியோகம் செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இருவரும் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் இரணியல் மேலத்தெரு […]
கார் மீது வேன் மோதிய விபத்தில் 8 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தேசிகாபுரம் விலக்கு பகுதியில் தனியார் மில் மேன் சென்று கொண்டிருந்தது. இந்த வேன் சாலையில் திரும்ப முயன்ற போது ராஜபாளையம் நோக்கி சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் ஓட்டுநர் தாரிக், அவரது நண்பர் ஹக்கீம், மினி வேனில் பயணித்த வள்ளி, சித்தம்மாள், மணிகண்டன், கணபதியம்மாள், தேசியம்மாள், பேச்சியம்மாள் ஆகிய 8 பேரும் […]
பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்கார பூஜைகள் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மிகவும் சிறப்பு பெற்ற கட்டாரிமங்கலம் சிவகாமி அம்பாள் சமேத அழகிய கூத்தர் திருக்கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்நிலையில் அழகிய கூத்தர், சிவகாமி அம்மாளுக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பொருட்களை வைத்து சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. மேலும் அழகிய கூத்தருக்கும் சிவகாமி அம்பாளுக்கும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதனையடுத்து கோவில் வளாகத்தில் அமைந்துள்ள நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை, […]
ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அகஸ்தியர் அருவியில் ஆண்டுதோறும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிக்கு சென்று குளித்து மகிழ்வர். இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தனர். இதனை அடுத்து நீண்ட வரிசையில் வாகனங்கள் சோதனை சாவடியில் அணிவகுத்து நின்றது. பின்னர் வனத்துறையினர் சோதனை நடத்தி வாகனங்களை அனுமதித்தனர்.
மர்ம நபர்கள் இன்ஜினியரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேட்டை பகுதியில் ஜலாலுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவில் இன்ஜினியரான முகமது பீர்கான்(23) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் முகமது அவரது வீட்டிற்கு அருகே நின்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வேகமாக சென்றனர். அவர்களை மெதுவாக செல்லும்படி முகமது கூறியுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த மர்ம நபர்கள் முகமது பீர்கானை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி […]
மின்சாரவாரிய அலுவலர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மின்வாரிய அலுவலர்கள், பணியாளர்களுக்கான மாநில அளவிலான ஆண்கள் விளையாட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் தூத்துக்குடி மாவட்ட அளவிலான மின்சார வாரிய அலுவலர்களுக்கான விளையாட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகள் தூத்துக்குடி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் தலைமையில் நடைபெற்றது. […]
திருப்பூர் மாவட்டத்திலுள்ள பி.என்.ரோடு புதிய பேருந்து நிலையம் அருகில் பெருமாநல்லூர்-திருப்பூர் சாலையில் சரக்கு ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த மற்றொரு ஆட்டோ முன்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் 2 ஆட்டோக்களும் ஒன்றோடொன்று சிக்கிக் கொண்டன. இதனால் நடுரோட்டில் நீண்ட நேரமாக 2 ஆட்டோக்களும் நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் டிரைவர்கள் ஆட்டோவை எடுக்க முயற்சி செய்தும் அதை எடுக்க முடியவில்லை. இதன் காரணமாக பிச்சம்பாளையம்புதூர் முதல் புதிய பேருந்து […]
மனைவி கண் முன்னே பாறைக்குழியில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள ஆரியூர் சக்தி நகர் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குப்புசாமி என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு மஞ்சுளாதேவி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் வெள்ளகோவிலுக்கு தேங்காய் களத்தில் வேலை கேட்பதற்காக மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். இதனையடுத்து ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்த போது இழுப்பைக்கிணறு பாறைக்குழி அருகில் மோட்டார் சைக்கிளை குப்புசாமி நிறுத்தினார். அதன்பின் […]
கொரோனாவால் 2 ஆண்டுகள் நிறுத்தப்பட்ட ஈரோடு-திருச்சி பயணிகள் ரெயில் மீண்டும் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஈரோட்டில் இருந்து திருச்சிக்கு தினசரி பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக ரெயில் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக இந்த ரெயில்களில் பயணம் செய்யும் ஏராளமான பயணிகள் பாதிக்கப்பட்டனர். இதனால் பயணிகள், அரசியல் கட்சியினர், பொது அமைப்பினர் சார்பில் ஈரோடு-திருச்சி, திருச்சி-ஈரோடு பயணிகள் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும் என ரெயில்வே […]
ரகசியமாக சந்திக்க வந்த மனைவியின் கள்ளக்காதலனை அரிவாளால் வெட்டி கொலை செய்த டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள சொக்ககிழவன்பட்டி பகுதியில் ஆண்டிக்காளை என்பவர் வசித்து வருகிறார். இவர் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நெவ்வாயி என்ற மனைவி உள்ளார். இவருக்கும் வேங்கைபட்டி பகுதியில் வசிக்கும் இளையராஜா என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இளையராஜா வீட்டில் ஆண்டிக்காளையின் வீட்டில் நெவ்வாயியை இரகசியமாக சந்தித்துள்ளார். இதனை பார்த்து ஆத்திரமடைந்த ஆண்டிக்காளை அரிவாளால் இளையராஜாவை […]
ரூ.10 லட்சம் மோசடி செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பாண்டியூர் பகுதியில் செல்லப்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை நாகனாகுளம் பகுதியில் வசிக்கும் சதீஷ் என்பவரிடம் கார் வாங்கித் தருமாறு ரூ.5 லட்சத்து 36 ஆயிரத்தை கொடுத்துள்ளார். ஆனாலும் இவர் இன்னும் கார் வாங்கி தரவில்லை. இதனால் சதீஷிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது ரூ.3 லட்சத்தை கொடுத்துவிட்டு மீதமுள்ள பணத்தை கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து செல்லப்பாண்டி தல்லாகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]
கார் மோதி போலீஸ் ஏட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் முருகன் என்பவர் ஏட்டாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் உளுந்தூர்பேட்டை-திருச்சி மெயின் சாலையில் இருசக்கர வாகனத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சாலையை கடக்க முயன்ற போது திடீரென சென்னையில் இருந்து திருச்சி நோக்கி அதிவேகமாக வந்த கார் முருகன் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த முருகன் சம்பவ […]
மைத்துனரை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து கைதான தனியார் நிறுவன மேலாளர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை கோட்டூர் ரோடு திருஞானசம்பந்தர் நாயனார் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சுரேஷ் என்ற மகனும், உமா என்ற மகளும் இருந்தனர். இந்நிலையில் உமாவுக்கும் மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் வசிக்கும் கணேஷ்கைலாஷ் என்பவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கணேஷ் கைலாஷ் தனியார் தண்ணீர் கேன் […]
வார விடுமுறையை முன்னிட்டு நேற்று பழனிமுருகன் கோயிலில் தரிசனம் செய்வதற்காக பக்தர்களின் கூட்டமானது அதிகளவு காணப்பட்டது. அதிலும் குறிப்பாக அதிகாலையிலேயே சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் திரண்டதால் மலைக் கோயில், அடிவாரம் மற்றும் கோயிலுக்கு போகும் பாதைகள், தரிசன வழிகளில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. இதன் காரணமாக சுமார் 2 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். அதேபோன்று மின்இழுவை ரயில் நிலையத்திலும் பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து கோயிலுக்கு சென்றனர். இதனிடையில் பக்தர்கள் சிலர் காவடி […]
ஈரோடு மாவட்டம் தாளவாடி வனச்சரகத்துக்குட்பட்ட இரிபுரம், தொட்டகாஜனூர், தர்மாபுரம் பகுதியில் வனப் பகுதியிலிருந்து கருப்பன் என்ற காட்டு யானை வெளியேறி மக்களை தாக்கி கொன்றதுடன், விவசாய பயிர்களையும் சேதப்படுத்தி அட்டுழியம் செய்து வந்தது. இதையடுத்து அந்த யானையை கட்டுபடுத்த பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பத்திலிருந்து சின்னதம்பி மற்றும் ராஜவர்தன் என்ற 2 கும்கி யானைகள் சென்ற 4 நாட்களுக்கு முன் தாளவாடியை அடுத்த இரிபுரம் பகுதிக்கு கொண்டு வரபட்டது. இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் […]