Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி!… 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்த ஒகேனக்கல் நீர்வரத்து…. பயணிகள் குளிக்க தடை….!!!!

கர்நாடக மற்றும் கேரளமாநில பகுதிகளில் சென்ற சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்திலுள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இந்த அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. அந்த வகையில் கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து வினாடிக்கு 26 ஆயிரத்து 143 கன அடி தண்ணீரும், கபினி அணையிலிருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீரும் என மொத்தம் வினாடிக்கு 51 ஆயிரத்து 143 […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

டைல்ஸ் அனுப்புவதாக ரூ.5 லட்சம் மோசடி…. சிக்கிய பெங்களூர் நபர்…. போலீஸ் நடவடிக்கை…..!!!!!

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகில் பி.முட்லூரில் டைல்ஸ் மற்றும் சானிட்டரி கடை நடத்தி வருபவர் பாலகிருஷ்ணன் மகன் ராஜா (35). இவரது கடைக்கு அதிகப்படியான டைல்ஸ் தேவைப்பட்டதால் அவரும், அவரது மேலாளர் மீனா பாண்டியும் ஆன்லைன் வாயிலாக டைல்ஸ் கடையை தேடினர். இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பெங்களூரு பணசங்கரி 7வது மெயின் ரோட்டில் வசிக்கும் வெங்கமராஜூ மகன் சுதர்சனராஜூ (44) என்பவர் டைல்ஸ் நிறுவனம் நடத்தி வருவதாக இருந்தது. இதனை நம்பிய அவர்கள் சுதர்சனராஜூவை தொடர்புகொண்டு ஆன்லைன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

TNPL (2022): வெற்றியை தட்டி தூக்கிய கோவை கிங்ஸ் அணி…. குவியும் பாராட்டுகள்….!!!!!

கோவை ஸ்ரீராம கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடந்த டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 15வது லீக் ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணியும், திருச்சி வாரியர்ஸ் அணியும் மோதி கொண்டது. அப்போது டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணியின் கேப்டன் ஷாருக்கான் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து திருச்சி வாரியர்ஸ் அணியின் வீரர்கள் அமித்சாத்விக், சந்தோஷ் ஷிவ் போன்றோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆரம்பத்தில் இருந்தே இருவரும் அதிரடியாக விளையாடினர். இதன் காரணமாக அணியின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தேரோட்டத்தை முன்னிட்டு…. நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை….!!

நாளை நடைபெறவுள்ள தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற ஆலயமான நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு முழுவதும் நடைபெறும் ஆனித்திருவிழா கொரோனா காரணமாக 2 ஆண்டுகள் நடைபெறவில்லை. இந்த ஆண்டு கடந்த 3-ந் தேதி ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது. இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதற்கு தேவையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது. இந்த ஆனிதேரோட்டத்தில் 4 ரத வீதிகளிலும் விநாயகர், சுவாமி நெல்லையப்பர், […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தை கூறி…. சிறுமியை ஏமாற்றிய வாலிபர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள குப்பக்குறிச்சி பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியுள்ளார். இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து நெல்லை ஊரக அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சுரேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வாரியூர் கிராமத்தில் விவசாயியான தங்கராஜ்(65) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று காலை தங்கராஜ் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணன் புதூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அவர் சாலையில் திரும்ப முயன்ற போது பின்னால் வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் தங்கராஜின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த தங்கராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கணவரை கண்டித்த மனைவி…. குழந்தையின் பிறந்தநாளில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

மனைவி கண்டித்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் அப்பகுதியில் தருண்(29) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மைதிலி(24) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 வயதுடைய விஷால் என்ற ஆண் குழந்தை இருக்கிறது. நேற்று முன்தினம் விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு தருண் நண்பர்களுடன் அமர்ந்து மது குடித்துள்ளார். இதனை அடுத்து வீட்டிற்கு வந்து மீண்டும் மது […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சமையல் செய்த தாய்…. கொதிக்கும் ரசத்தில் விழுந்து குழந்தை பலி…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

கொதிக்கும் ரசத்தில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒட்டை கிராமத்தில் ராஜாமணி(29) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோமளா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 வயதுடைய தவான் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் கோமளா வீட்டில் சமையல் செய்துள்ளார். அப்போது சூடாக இருந்த ரசத்தை பாத்திரத்தில் ஊற்றி அறையில் இருந்த கட்டிலின் கீழ் வைத்துள்ளார். இந்நிலையில் கட்டிலின் மேல் இருந்த தவான் எதிர்பாராதவிதமாக பாத்திரத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கல்லூரியில் தேங்காய், பூசணிக்காய் உடைத்து ஆரத்தி எடுத்த மாணவர்….. வைரலாகும் வீடியோ…!!

மாணவர் ஒருவர் கல்லூரியில் தேங்காய், பூசணிக்காய் உடைத்து ஆரத்தி எடுத்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனூரில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் கீழ பெரும்பாக்கத்தில் இருக்கும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ 3-ஆம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 4-ஆம் தேதி இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கான கடைசி தேர்வு நடந்தது. இந்நிலையில் கடைசி தேர்வை எழுத சொல்லும்போது பிரசாந்த் கல்லூரி வாயிலில் வைத்து தேங்காயில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து படிக்கட்டு உடைந்து விவகாரம்…. “இரண்டு பேர் பணியிடை நீக்கம்”…!!!!!

திருவாரூர் அருகே சென்று கொண்டிருந்த அரசு பேருந்து படிக்கட்டு உடைந்த விவகாரம் சார்பாக இரண்டு பேரை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளார் போக்குவரத்து கழக பொது மேலாளர். திருவாரூரில் இருந்து கங்காளஞ்சேரி, வைப்பூர், சோழங்கநல்லூர், நரிமணம் வழியாக நாகூர் வரை அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகின்ற நிலையில் இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் படிக்கட்டுகளில் நின்று பயணித்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் சென்ற சில நாட்களுக்கு முன்பாக இந்த பேருந்தில் நாகூரில் இருந்து திருவாரூர் சென்று கொண்டிருந்த […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த கார்…. மாணவிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சுற்றுலா சென்ற இடத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் மருத்துவக்கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் கேரள மாநிலம் மதுவாடா கிராமத்தை சேர்ந்த நிஷாத் அகமத், ஆந்திர மாநிலம் திருப்பதி ராமச்சந்திர நகரை சேர்ந்த சண்முகி, அந்தமான் போர்ட் பிளேரை சேர்ந்த அலினா, சாஜான், ஆந்திர மாநிலம் மகுண்டாலே அவுட்டை சேர்ந்த ரித்தின், கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த சுப்ரீத் ஆகியோர் படித்து வருகின்றனர். இவர்கள் 6 பேரும் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற வலுதூக்கும் போட்டி…. வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாராட்டு….!!

வலுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் வசிக்கும் சசிகுமார் என்பவர் திருப்பூர் அவினாசியில் நடந்த மாநில அளவிலான வலுதூக்கும் போட்டியில் ஜூனியர் பிரிவில் முதலிடம் பெற்றுள்ளார். இதேபோன்று திருவாரூர் மாவட்டத்தில் வசிக்கும் வீரர்களான விமல்ராஜ், முகிலன், விஜயகுமார் ஆகியோர் வலுதூக்கும் போட்டிகளில் பல்வேறு பிரிவுகளில் பங்குபெற்று வெற்றி பெற்றுள்ளனர். இதனால் வெற்றி பெற்ற வீரர்களை நேரில் அழைத்து திருவாரூர் மாவட்ட வலுதூக்கும் சங்க தலைவர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. பாராட்டினார். மேலும் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“மூதாட்டியை கொலை செய்த இளைஞர்”…. ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு….!!!!!

மூதாட்டி கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவள்ளூர் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையத்தைச் சேர்ந்த ருக்மணி(65) என்பவர் சென்ற 2015 ஆம் வருடம் வீட்டில் தனியாக இருந்த பொழுது நாகராஜ்(22) என்ற இளைஞர் ருக்மணியின் வீட்டிற்குள் புகுந்து அவர் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க கம்மல் மற்றும் இரண்டு பவுன் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதையடுத்து […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சாகுபடி நிலத்தை மனையாக மாற்ற முயற்சி…. கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் மீட்பு….!!

சாகுபடி நிலத்தை மனையாக மாற்ற முயற்சி நடந்ததைத் தொடர்ந்து திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.12 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டன. திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி பகுதியில் பிறவி மருந்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலுக்கு சொந்தமாக ஏராளமான நிலங்கள் உள்ளது. இதனை பலர் வாடகைக்கும் குத்தகைக்கும் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான சாகுபடி நிலங்களில் சிலர் சாகுபடி செய்யாமல் அதனை தரிசு நிலமாக்கி மனையாக மாற்ற […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“திருத்தணி முருகன் கோவிலில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள்”…. அதிகாரிகள் அகற்றியதற்கு வியாபாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம்….!!!!!

திருத்தணி முருகன் கோவிலில் இருக்கும் ஆக்கிரமிப்பு கடைகளை அதிகாரிகள் அகற்றியதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி முருகன் கோவிலில் வருகின்ற 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை ஆடி கிருத்திகை விழா மற்றும் தெப்ப திருவிழா நடைபெற இருப்பதால் ஆந்திரா கர்நாடகா புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து…. சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்…. பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள்….!!

பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள ராதாநல்லூர் பகுதியில் தொழிலாளியான பாஸ்டின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெஞ்சுவலி காரணமாக குடவாசல் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளனர். இதனையடுத்து வீட்டிற்கு வந்த பாஸ்டினுக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து அவரை உறவினர்கள் குடவாசல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பாஸ்டினை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“ஆட்டுபட்டியில் இருந்த 15 ஆடுகள்”…. மர்ம விலங்கு கடித்து உயிரிழப்பு….!!!!!

ஆட்டுப்பட்டியில் இருந்த 15 ஆடுகள் மர்ம விலங்குகள் கடித்து உயிரிழந்துள்ளது. திருவண்ணாமலையில் மாவட்டத்தில் உள்ள வேட்டவலத்தை அடுத்து இருக்கும் காட்டேரி ஊராட்சியை சேர்ந்தவர்கள் கண்ணன் மற்றும் முனுசாமி. இவர்கள் 130 க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை ஆட்டுப்பட்டி அமைத்து வளர்த்து வருகின்ற நிலையில் நேற்று நள்ளிரவு நேரத்தில் ஆட்டுப்பட்டியில் இருந்து ஆடுகள் அலறும் சத்தம் கேட்டதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது முனுசாமியின் பட்டியலில் இருந்த பத்து ஆடுகளும் கண்ணன் பட்டியலில் இருந்த ஐந்து ஆடுகளும் குடல் சரிந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“அண்ணன் தம்பிக்கு இடையே ஏற்பட்ட நிலத்தகராறு”…. 2 பேர் கொலை, 6 பேர் படுகாயம்….!!!!!

நிலத்தகராறு காரணமாக 2 பேர் கொலை மற்றும் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பைரவபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன். இவரின் அண்ணன் செல்வம். இவர்களுக்கு இடையே நில தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்த நிலையில் நேற்று மதியம் சுப்பிரமணியன் அவரது அண்ணன் செல்வத்தின் மனைவி சங்கீதாவிடம் தகராறில் ஈடுபட்டு சங்கீதாவை தாக்கிய பொழுது வெங்கடேசன் என்பவரின் மனைவி வேண்டாமிர்தம் தடுக்க வந்திருக்கின்றார். இதில் ஆத்திரம் அடைந்த சுப்பிரமணியன் வேண்டாமிருதத்தை கத்தியால் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“கட்டுமான பணியின் போது சரிந்து விழுந்த சாரம்”…. நான்கு பேர் படுகாயம்….!!!!!

கட்டுமான பணியின் போது சாரம் சரிந்து விழுந்ததில் நான்கு பேர் படுகாயம் அடைந்தார்கள். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் காட்பாடி அருகே இருக்கும் ஓடை பிள்ளையார் கோவில் பகுதியில் புதிதாக வணிக வளாகம் ஒன்றை கட்டி வருகின்ற நிலையில் அதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கட்டிடத்திற்கான சாரம் போடும் பணி நடைபெற்று வருகின்ற நிலையில் எதிர்பாராத விதமாக சாரம் சரிந்து விழுந்ததால் அங்கிருந்த தொழிலாளர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஆம்புலன்ஸில் சென்ற பெண்ணுக்கு வழியிலேயே பிறந்த ஆண் குழந்தை…. நலமுடன் இருக்கும் தாய்-சேய்…!!!!!

ஆம்புலன்ஸில் செல்லும் பொழுதே பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு தாலுகா உட்பட்ட பிஞ்சமந்தை கிராமத்தைச் சேர்ந்த குமரேசன் என்பவரின் மனைவி ரோஜா. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் 108 ஆம்புலன்ஸ்க்கு தொடர்பு கொண்டு உள்ளனர். இதையடுத்து விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் அவரை ஏற்றுக் கொண்டு வேப்பங்குப்பம் அரசு மருத்துவமனையை நோக்கி சென்ற பொழுது, செல்லும் வழியிலேயே அவருக்கு பிரசவ வலி மிகவும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“திருப்பூர் மாநகராட்சி சார்பில் மின்னணு கழிவு சேகரிக்கும் முகாம்”…. 980 கிலோ மின்னணுக்கழிவுகள் சேகரிப்பு…!!!!

திருப்பூர் மாநகராட்சியில் 980 கிலோ மின்னணு கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சி மற்றும் துப்புரவாளன் அமைப்பு சார்பாக மின்னணு கழிவு சேகரிக்கும் முகமானது திருப்பூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று காலை நடைபெற்றதில் ஆணையாளர் முகாமை தொடங்கி வைக்க துணை மேயர் முன்னிலை வகித்தார். இதில் பிரிக்ஸா ஸ்ரீ சாய் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் 200 கிலோ அவர்கள் பயன்படுத்திய மின்னணு கருவிகளை கொடுத்து அதற்கான தொகையை பெற்றுக் கொண்டார்கள் மொத்தம் 980 கிலோ மின்னணு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பால் வியாபாரி அளித்த புகார்…. போலீஸ்காரரின் மகன் உள்பட 2 பேர் கைது…. அதிரடி நடவடிக்கை…!!

வழிப்பறியில் ஈடுபட்ட போலீஸ்காரரின் மகன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தூங்காவி பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் பால் வாங்கி கடைகள் மற்றும் வீடுகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துக்குமார் பால் விற்பனை செய்த பணத்துடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலக்கல் தரைப்பாலம் அருகே சென்ற போது 4 மர்ம நபர்கள் முத்துக்குமாரின் மோட்டார் சைக்கிளை வழிமறித்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்” ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!

மலை கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஏரியூர் ஊராட்சி ஒன்றியம் சிகரலஅள்ளி மலைக்கிராமத்திற்கு மாவட்ட ஆட்சியர் சாந்தி நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள இருளர் இன மக்களிடம் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர் பேசியதாவது, தமிழக அரசு மக்களுக்கான பொருளாதார மேம்பாட்டிற்காகவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், அனைவருக்கும் முழுமையான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேடிக்கை பார்க்க சென்ற நபர்…. சுவர் இடிந்து விழுந்து பலியான சோகம்…. சென்னையில் பரபரப்பு…!!

சுவர் இடிந்து விழுந்து வேடிக்கை பார்க்க சென்ற தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சூளைமேடு வீரபாண்டியன் நகர் 1-வது தெருவில் இருக்கும் பழைய வீட்டை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்துக் கொண்டிருந்தனர். அதனை தனியார் நிறுவன ஊழியரான ஹரிபாபு(43) என்பவர் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். மேலும் வீட்டிற்குள் தூசி மற்றும் அதிக சத்தம் வருவது தொடர்பாக ஹரிபாபு பேசிக் கொண்டிருந்தபோது திடீரென சுவர் இடிந்து அவர் மீது விழுந்தது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…. செல்போனில் பேசிய மர்ம நபர்…. பணத்தை இழந்த பெண் டாக்டர்…. போலீஸ் விசாரணை…!!

பெண் டாக்டரிடம் பணத்தை மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜா அண்ணாமலைபுரம் கற்பகம் அவன்யூ பகுதியில் டாக்டர் ஆனால் ஷோபனா(53) என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மர்ம நபர் ஒருவர் ஷோபனாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நான் மின்சார துறையில் இருந்து பேசுகிறேன். நீங்கள் மின்கட்டணம் செலுத்தாமல் இருக்கிறீர்கள். கட்டணத்தை உடனே செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும். எனவே நான் அனுப்பும் லிங்கில் பணத்தை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காதலியை கிண்டல் செய்த நண்பர்…. வாலிபரின் வெறிச்செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

நண்பரை கத்தியால் வெட்டிய குற்றத்திற்காக வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி சர்மா நகர் 6-வது தெருவில் சிவா(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு எலக்ட்ரீசியனான பிரதீப்குமார்(24) என்ற நண்பர் உள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பிரதீப்குமாரின் காதலியை சிவா கிண்டல் செய்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த பிரதீப்குமார் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மளிகை கடைக்கு சென்ற சிறுமி…. சகோதரர்கள் செய்த காரியம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சிறுமியை கடத்தி சென்று சகோதரருக்கு திருமணம் செய்து வைத்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி அருகே இருக்கும் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த 15 வயது சிறுமி தனது தாயுடன் சென்றுள்ளார். கடந்த 6-ஆம் தேதி மளிகை கடைக்கு சென்ற சிறுமி நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சிறுமியின் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி…. 16 1\2 லட்சம் மோசடி செய்த நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

தலைமைச் செயலகத்தில் பணியில் இருப்பதாக கூறி அரசு வேலை வாங்கித் தருவதாக வாலிபரிடம் ரூ.16 1\2 லட்சம் மோசடி செய்த 2 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சிந்தாகவுண்டம்பாளையம் பகுதியில் அங்கமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில் அங்கமுத்துவிற்கு ஈரோட்டில் வசிக்கும் குருதேவ் என்பவர் அறிமுகமானார். இந்நிலையில் குருதேவ் தன்னுடைய கல்லூரி நண்பர் என ராஜேஷ்குமார் என்பவரை அங்கமுத்துவுக்கு அறிமுகபடுத்தி வைத்துள்ளார். அப்போது அங்கமுத்துவிடம் ராஜேஷ்குமார் ‘நான் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய லாரி…. 5 பேருக்கு காயம்…. போலீஸ் விசாரணை….!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடிய விபத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி டிரைவர் உள்பட 5 பேர் காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஒசகோட்டாவில் இருந்து லாரி ஒன்று இரும்பு காயில் ரோல் பாரம் ஏற்றிக்கொண்டு தர்மபுரி மாவட்டத்திலுள்ள கணை தொப்பூர் கணவாய் வழியாக பெருந்துறைக்கு சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள உத்தனப்பள்ளி பகுதியில் வசிக்கும் சிவராஜ் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் அருகில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிறுநீரகம் தானம் பெறணுமா?…. அப்போ 4 லட்சம் தாங்க…. மோசடியில் சிக்கிய பெண்…. நடந்தது என்ன?….!!!!

கோவை ரத்தினபுரி பகுதியில் வசித்து வருபவர் 40 வயது பெண். இவர் கூலி வேலைக்கு சென்று வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து கணவர் மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். குடும்ப வறுமையின் காரணமாக இவர் சிரமப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த வருடம் அப்பெண்ணிடம் உறவினர் ஒருவர் பெங்களூருவிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஒரு சிறுநீரகத்தை கோடிக்கணக்கான ரூபாய்க்கு வாங்குவார்கள் என கூறினார். இதனையடுத்து அப்பெண் அந்த தனியார் மருத்துவமனை தொடர்பாக இணையதளத்தில் தேடியுள்ளார். இந்நிலையில் அவருக்கு ஒரு மருத்துவரின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உயிர் போகும் முன்புவரை தாயின் கடைசி ஆசை…. நிறைவேற்றிய மகள்கள்….. நெகிழ்ச்சி சம்பவம்…..!!!!

சென்னை திருவொற்றியூர் ராமானுஜம்நகர் ஒத்தவாடை பகுதியில் வசித்து வந்தவர் மீனா (53). அச்சகத் தொழில் நடத்திவந்த இவருடைய கணவர் முருகானந்தம் கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களுக்கு காயத்ரி, சுவாதி என்ற 2 மகள்கள் இருக்கின்றனர். இந்த 2 மகள்களுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. சென்ற ஒரு சில வருடங்களாக மீனா, சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதன் காரணமாக அவரது சிறுநீரகம் செயல் இழந்து விட்டது. இதில் மீனா சமூகசிந்தனையும், பல முற்போக்கு கருத்துகளையும் கொண்டிருந்தவர் ஆவார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய 9 பேர்…. அதிரடி காட்டிய வனத்துறையினர்….!!!!

கோவையை அடுத்த காரமடை பகுதியில் யானை தந்தங்கள் விற்பனைக்கு இருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது காரமடை அருகில் கோடதாசனூர் கிராமத்தை சேர்ந்த நாகராஜன் (51), அதே பகுதியை சேர்ந்த பிரபு (27), ஏழுசுழி கிராமத்தை சேர்ந்த வெள்ளிங்கிரி (40), ராமமூர்த்தி ( 39), குமரேசன் (31), அஜீத் (25), ரஞ்சித் (25) காரமடையை சேர்ந்த ஆறுமுகம் ( 56) […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சவ ஊர்வலத்தில் சண்டை…. போலீஸ்காரர் மனைவியை தாக்கிய கும்பல்…. பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னை மாதவரம் பிருந்தா வனம் கார்டனில் வசித்து வருபவர் கோடீஸ்வரன் (32). இவர் மாதவரம் பால் பண்ணை காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் தன்னுடைய மனைவி யுவஸ்ரீ (24) என்பவருடன் பெரம்பூர் மேல்பட்டி பொன்னையன் தெருவிலுள்ள யுவஸ்ரீயின் தாய் வீட்டுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார். அப்போது எதிரே சவஊர்வலம் வந்ததால் கோடீஸ்வரன் மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்தினார். அந்த சவஊர்வலத்தில் வந்த ஒருவர் கையிலிருந்த மாலையை கோடீஸ்வரனின் மோட்டார்சைக்கிள் மீது போட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை வாசிகளே!…. குப்பைகளை தரம் பிரித்து தந்தால் பரிசு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

சென்னை மாநகராட்சி மணலி மண்டலத்தில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து குப்பையை தரம் பிரிக்கும் போட்டி துவக்கவிழா நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பங்கேற்று “என் குப்பை எனது பொறுப்பு” என்ற தலைப்பில் குப்பையை தரம் பிரிக்கும் சவால் எனும் போட்டியின் அறிவிப்பு பலகையை திறந்து வைத்தார். இதையடுத்து மேயர் தன் வீட்டில் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம்பிரித்த தன் புகைப்படங்களை இப்போட்டியின் இணையதள செயலியில் பதிவிட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“வீட்டில் தனியாக இருந்த முன்னாள் ராணுவ வீரரின் மனைவி”…. மதுக்காக கழுத்தை நெரித்து கொலை செய்த இரண்டு பேர்….!!!!!

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை படுகொலை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர் அருகே இருக்கும் காந்தி கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பாண்டி என்பவரின் மனைவி காந்திமதி. இத்தம்பதியினர்க்கு குழந்தை இல்லை. 10 வருடங்களுக்கு முன்பாக பாண்டி இறந்துவிட்டார். இந்த நிலையில் அவரின் உதவித்தொகையை வைத்து காந்திமதி வாழ்ந்து வந்த நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் மர்மமான முறையில் அவர் இறந்து கிடந்ததை பார்த்த உறவினர்கள் போலீசாரக்கு தகவல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திருமணம் செய்து கொள்ள மறுத்த பெண்…. வீட்டில் புகுந்து கழுத்தை அறுத்து கொலை…. தப்பி சென்ற இளைஞருக்கு போலீசார் வளைவீச்சு….!!!!!

திருமணம் செய்து கொள்ள மறுத்த இளம் பெண்ணை கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பிச் சென்ற இளைஞரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள். மதுரை மாவட்டத்தில் உள்ள பைபாஸ் ரோடு பொன்மேனி பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவரின் மூத்த மகள் அபர்ணா (19) இவர் பள்ளி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருக்கின்றார். விராட்டிப்பத்தை சேர்ந்த ஹரிஹரன்(23) என்பவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த வருகின்ற நிலையில் அவர் அபர்ணாவை காதலித்து வந்திருக்கின்றார். அபர்ணாவும் முதலில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தில் மெட்ரோ ரயில் வழித்தடம்”…. அதிகாரிகள் ஆய்வு….!!!!!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் மெட்ரோ ரயில் வழித்தடம் அமைய இருப்பதாக சொல்லப்படுகின்றது. மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோப்பூர் ஊராட்சி கோ.புதுப்பட்டியில் உலக தரம் வாய்ந்த எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருக்கின்றது. இதற்கு சென்ற 2019 ஆம் வருடம் ஜனவரி மாதம் 27ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணி விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் மருத்துவமனைக்கு மெட்ரோ ரயில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில்13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த செங்கல் காட்சிக்கு வைப்பு”….!!!!

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியத்தில் பதிமூன்றாம் நூற்றாண்டு சேர்ந்த செங்கல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் 13ஆம் நூற்றாண்டு செங்கல் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த செங்கலானது சிகரமானபள்ளி காட்டு பகுதியில் இடிந்த நிலையில் உள்ள கோவிலை ஆய்வு செய்த பொழுது கண்டுபிடிக்கப்பட்டதாகும். இந்த நிலையில் தற்பொழுது பொதுமக்கள் பார்வைக்காக அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இதுபற்றி அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியுள்ளதாவது, “விஜயநகர காலத்தில் பெரிய கற்களை கொண்டு கோட்டைகள் கட்டும் பொழுது அவற்றின் மேல் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“ஆசையாய் வளர்த்த காளை” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருக்கட்டளை பகுதியில் சுரேஷ் என்பவர் ரசித்து வருகிறார். இவருக்கு நரேந்திர குமார்(22) என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் நரேந்திர குமார் மாங்கனாம்பட்டி கோவில் வனப்பகுதியில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குமாரின் உடலை கைப்பற்றிய அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற தொழிலாளர்கள்…. ஓட ஓட விரட்டிய கரடி…. வனத்துறையினரின் கண்காணிப்பு…!!

கரடி தொழிலாளர்களை விரட்டிய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குண்டூர் காலனி மற்றும் வள்ளுவர் காலனி ஆகிய பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் குண்டூர் காலனியில் வசிக்கும் சில தொழிலாளர்கள் வேலைக்கு நடந்து சென்றனர். அப்போது புதர் மறைவில் இருந்து வந்த கரடி பொதுமக்களை விரட்டி சென்றது. இதனால் அவர்கள் அங்கிருந்து அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வழுக்கி விழுந்து இறந்ததா….? யானையின் உடல் பாகங்கள் சேகரிப்பு…. வனத்துறையினரின் விசாரணை…!!

5 வயது யானை இறந்து கிடந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஓவேலி பேரூராட்சி எல்ல மலை ஆதிவாசி கிராமத்தை காட்டு யானைகள் முற்றுகையிட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்தனர். இந்நிலையில் இரவு நேரத்தில் காட்டு யானைகள் தொடர்ந்து பிளிறியதால் மறுநாள் காலை ஆதிவாசி மக்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது யானை ஒன்று இறந்து கிடப்பதை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குட்டியை ஈன்ற காட்டு யானை…. தேயிலை தோட்டத்தில் குவிந்த பொதுமக்கள்…. எச்சரித்த வனத்துறையினர்…!!

தேயிலை தோட்டத்தில் காட்டு யானை குட்டியை ஈன்றதால் பொதுமக்கள் அங்கு செல்லக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் தேவாலா ஆகிய பகுதிகளில் இருக்கும் தேயிலை தோட்டங்களில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் இருக்கின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் பாண்டியாறு அரசு தொழிலை தோட்டத்தில் காட்டு யானைகள் முகாமிட்டதால் தோட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். தொடர்ந்து காட்டு யானைகள் பிளிறியதால் சந்தேகமடைந்த பொதுமக்கள் நேற்று காலை தோட்டத்திற்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் கண்விழித்து பார்த்த தந்தை…. திடீரென காணாமல் போன மகன்…. போலீஸ் விசாரணை…!!

சிறுவன் திடீரென மயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அக்கராயாப்பாளையம் பொட்டியம் சாலை பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பர்வேஷ்(8), தருண் ஆதித்யா(4) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன் தூங்கிக் கொண்டிருந்த லோகநாதன் திடீரென எழுந்து பார்த்துள்ளார். அப்போது தருண் ஆதித்யா காணாமல் போனதை கண்டு லோகநாதன் அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“கிருஷ்ணகிரியில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 2 டன் பிளாஸ்டிக் பறிமுதல்”…. 1 லட்சம் ரூபாய் அபராதம்…!!!!

கிருஷ்ணகிரியில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 2 டன் பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நகர்புற பகுதிகளில் நகராட்சி தலைவர் தலைமையிலான அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டபோது கார்னேசன் திடலுக்கு செல்லும் சாலையில் உள்ள குடோன் ஒன்றில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து அங்கு சென்று பார்த்த பொழுது மூன்று லட்சம் மதிப்பிலான இரண்டு டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் இருந்ததைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டது. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குறுந்தகவலில் வந்த செய்தி…. “நம்பி 4 1/2 லட்சம் முதலீடு செய்த பெண்”…. பணம் அபேஸ்….!!!!!

குறுந்தகவலில் வந்த செய்தியை நம்பி 4 லட்சத்து 37 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்த பெண்ணிடம் மோசடி செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் ஜெகதேவி ரோடு பகுதியில் வசித்து வரும் ஹேமபிரியா என்பவர் ஜவுளிக்கடை ஒன்றை வைத்துள்ளார். இவரின் செல்போன் எண்ணுக்கு குறைந்த அளவில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபத்துடன் வருமானம் கிடைக்கும் எனவும் ஒரு நாளைக்கு 500 ரூபாய் முதல் 6 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திருட சென்ற இடத்தில்…. போதையில் தூங்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

திருட சென்ற இடத்தில் போதையில் தூங்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள பராசக்தி நகர் பகுதியில் ரத்தினவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிளைவுட் கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்ற ரத்தினவேல் நள்ளிரவு 2 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 7 […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்து வரும் கனமழை…. ஒகேனக்கல் நீர்வரத்து அதிகரிப்பு…. கண்காணித்து வரும் நீர்வளத்துறை அதிகாரிகள்….!!

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல் நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. கேரள மாநிலத்தில் கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 1500 கனஅடி நீரும் பாதுகாப்பு கருதி திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் தர்மபுரி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்…. சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…. பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள்….!!

அடிக்கடி நேரும் விபத்துகளால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள கம்மாபுரம் பகுதியில் வசிக்கும் 10-க்கும் மேற்பட்டோர் வேனில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கருக்கை கிராமத்தில் நடந்த உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் கார்குடல் கிராமம் அருகில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் கவிழ்ந்த விபத்தில் கம்மாபுரம் பகுதியில் வசிக்கும் ராஜமாணிக்கம், வேல்முருகன், சுப்பிரமணியம், பழனியம்மாள் உள்ளிட்ட 8 பேர் பலத்த காயமடைந்தனர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“பக்ரீத் பண்டிகை முன்னிட்டு குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் 2 1/2 கோடிக்கு நடைபெற்ற விற்பனை”….. ஒரு ஆடு 67 ஆயிரத்துக்கு விலைபோனது….!!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வாரச்சந்தையில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ஆடுகள் ரூபாய் இரண்டரை கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள குருபரப்பள்ளி அருகே இருக்கும் குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் நேற்று வழக்கத்தை காட்டிலும் அதிகமாக ஆடுகள் கொண்டுவரப்பட்டது. நாளை நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இதனால் பண்டிகையை முன்னிட்டு ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டவரப்பட்டு அதிகாலை 5 மணி முதல் ஆடுகள் விற்பனை தொடங்கியது. இங்கு ஆடுகளை வாங்குவதற்காக பெங்களூர், ஆந்திரா உள்ளிட்ட மாநிலத்திலிருந்தும் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“நடைபெற இருக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு”….. கள்ளக்குறிச்சியில் மாதிரி தேர்வு…. செய்தி குறிப்பில் வெளியிட்ட ஆட்சியர்….!!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு பற்றி ஆட்சியர் தகவலை செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சு உள்ளிட்ட பணிகளுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது. இத்தேர்வானது வருகின்ற 24ஆம் தேதி அன்று நடைபெற இருக்கின்றது. இதனால் இத்தேர்விற்கு தயாராகும் கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் விதமாக இலவச மாதிரி தேர்வுகள் நாளை மற்றும் வருகின்ற 17ஆம் தேதி […]

Categories

Tech |