கடல் சீற்றத்தால் அலையில் இழுத்து செல்லப்பட்ட படகை மீட்க சென்ற போது கடலில் தத்தளித்த 7 மீனவர்களை மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கடல் சீற்றம் ஏற்பட்டு வருவதால் இந்திய கடல் தகவல் சேவை மையம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவித்திருந்தது. இதனையடுத்து குமரி மாவட்டத்தில் பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாததால் மீன்பிடி உபகரணங்களை கடற்கரை மணற்பரப்பில் நிறுத்தியிருந்தனர். இந்நிலையில் நேற்று காலையில் கடியபட்டணத்தில் ஏற்பட்ட பயங்கர கடல் சீற்றத்தால் கரையில் நிறுத்தியிருந்த […]
Tag: மாவட்ட செய்திகள்
அரசு பேருந்து-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பிளஸ்-2 மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இடலாக்குடி பறக்கை ரோடு பகுதியில் முகமது ரகீம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹிஷாம் அகமது என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஹிஷாம் அகமது செட்டிகுளம் பகுதியில் உள்ள டியூஷனுக்கு காலையில் சென்று வருவார். அதேபோல் வழக்கமாக ஹிஷான் முகமது காலையில் டியூசனுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் டியூஷன் […]
மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக கூறி மாணவியின் கல்வி சான்றிதழ்களை வாங்கி விட்டு மோசடி செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள நரிகட்டியூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பேபிசித்ரா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரசிகா என்ற மகள் உள்ளார். இவர் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதற்கிடையே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் மற்றும் மதுரையில் கெசிட் […]
சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் ஜூலை 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை 7 5-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமுத பெரு விழா நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு பகுதியான 5-வது நாளான நேற்று குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு துறை […]
ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை ரயில் நிலையத்தில் வாலிபர் ஒருவர் நீண்ட நேரமாக முதலாவது நடைமேடையின் இறுதிப்பகுதியில் அமர்ந்திருந்தார். அப்போது திருச்சியில் இருந்து சரக்கு ரயில் ஒன்று குளித்தலை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது ரயில்வே தண்டவாளத்தின் நடுப்பகுதியில் வாலிபர் திடீரென வந்து நின்றுள்ளார். இதனை பார்த்த சரக்கு ரயில் என்ஜின் டிரைவர் ஹாரன் ஒலி எழுப்பியும் அந்த வாலிபர் ரயிலை தண்டவாளத்தை […]
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பந்தட்டை தாலுகா மேட்டுபாளையத்தில் வசித்து வருபவர் வேல்முருகன். இவருக்கு அனிதா(27) என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு சென்ற 2016 ஆம் வருடம் திருமணம் நடந்தது. இவர்களுக்கு வர்னிகா, வர்ஷினா என 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் 3வதாக அனிதா கர்ப்பமடைந்தார். இதையடுத்து 4 மாத கர்ப்பிணியாக இருந்த அனிதா கடந்த மே மாதம் 5ஆம் தேதி ராமநத்தத்திலுள்ள ஒரு மெடிக்கலுக்கு வந்து வயிற்றில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என பார்த்துள்ளார். […]
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் தாலுகா அலுவலகத்தில் ஆதார் இ-சேவை மையம் சென்ற சில வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இச்சேவை மையத்தில் கடந்த சில நாட்களாக கம்ப்யூட்டர் சரியாக இயங்காமல் இருக்கிறது. அதேபோன்று பணியாளர்கள் பற்றாக்குறையும் நிலவிவருகிறது. இதன் காரணமாக சேவை மையம் சரியான முறையில் இயங்காமல் மூடப்பட்டுள்ளது. இதற்கிடையில் இ-சேவை மையத்தை தேடிவரும் பள்ளி- கல்லூரி மாணவர்கள் முதல் அனைத்துதரப்பு மக்களும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். நேற்று முன்தினம் காலை இந்த மையத்துக்கு மாணவர்கள் உட்பட பலர் […]
தர்மபுரி மாவட்டம் குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்திலுள்ள சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா சென்ற 3ஆம் தேதி துவங்கியது. இந்த விழாவை முன்னிட்டு மாணிக்கவாசகர் குருபூஜை, திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியானது நடந்தது. இதையடுத்து மாணிக்கவாசகர் திருவீதி உலா நடந்தது. அதன்பின் திருநெறிய தெய்வத்தமிழ் வழிபாட்டு சபையினரால் திருமுறை மற்றும் திருப்புகழ் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து நால்வர் திருவீதி உலாவும், அபிஷேக பொருட்கள் வரிசை அழைப்பும் நடந்தது. பின் […]
திடீரென ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் தனியார் தூய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ரீத்தம்மாள் உட்பட 47 பேர் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களை தரக்குறைவாக நடத்துவது, பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களிடம் மரியாதை குறைவாக பேசுவது போன்ற பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு சரியான […]
கடலூர் மாவட்டத்திலுள்ள நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பாதியில் வசித்து வருபவர் ஜெயலட்சுமி. இவரது கணவர் சில தினங்களுக்கு முன் இறந்துவிட்டார். இதனையடுத்து ஜெயலட்சுமி வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து இருந்தார். எனினும் அவருக்கு சான்றிதழ் கொடுக்காமல் நீண்ட நாட்களாக அதிகாரிகள் காலம்தாழ்த்தி இருக்கின்றனர். அதன்பின் ஜெயலட்சுமியின் சகோதரர் ரவி, மேல்பாதி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்துக்கு சென்று அங்கு இருந்தவர்களிடம் சான்றிதழின் நிலை தொடர்பாக கேட்டறிந்தார். அப்போது கிராம உதவியாளர் பாட்ஷா என்ற முஜிப்பூர் ரகுமான் ரூபாய் 4 […]
கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப் புலியூரிலுள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழாவானது 12 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம் ஆகும். அந்த வகையில் இந்த வருடத்துக்கான பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை முன்னிட்டு திருமஞ்சனம், அனுக்ஞை, வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம் நடைபெற்றது. நேற்று காலை 5மணிக்கு திவ்யபிரபஞ்ச சேவை, 6 மணிக்கு காப்புகட்டுதல், பின் பெருமாள் திருமலையப்பன் அலங்காரத்தில் கோயில் கொடிமரம் அருகில் வந்தார். இதையடுத்து காலை 7 மணியளவில் கோவில் கொடி […]
கார் ஓட்டுநரிடம் மர்ம கும்பல் வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள மதுரவாயில்-தாம்பரம் பைபாஸ் ரோட்டில் போரூர் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் இளம்பெண் ஒருவர் தனியாக நின்று கொண்டிருந்தார். அவர் சாலையில் வரும் ஒரு காரை நிறுத்தி தனக்கு லிப்ட் தருமாறு கேட்டுள்ளார். உடனே கார் ஓட்டுனரும் அந்த இளம் பெண்ணை தன்னுடைய காரில் ஏற்றிக் கொண்டார். அப்போது திடீரென வந்த 4 பேர் கொண்ட கும்பல் கார் ஓட்டுனரின் […]
விமானம் தாமதமானதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் ஜெர்மன் நாட்டில் உள்ள பிராங்பர்ட் நகரில் விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இங்கிருந்து நேற்று முன்தினம் 292 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு விமானம் சென்னையை நோக்கி கிளம்பியது. இது இரவு 11.50 மணிக்கு மீனம்பாக்கம் விமான நிலையத்தை வந்தடையும். ஆனால் திடீரென சென்னைக்கு வரவேண்டிய விமானம் துருக்கியில் தரை இறங்கியுள்ளது. அங்கிருந்து மீண்டும் கிளம்பிய விமானம் அதிகாலை 2:55 மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த விமானம் […]
பழமையான கண் மருத்துவமனை குறித்த சில தகவல்களை பார்க்கலாம். இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டனில் கடந்த 1809-ம் ஆண்டு மார்பீல்டு கண் மருத்துவமனை தொடங்கப்பட்டது. இந்த மருத்துவமனை கடந்த 1819-ம் ஆண்டு சென்னையிலும் தொடங்கப்பட்டது. இந்த மருத்துவமனையை டாக்டர் ராபர்ட் ரிச்சஸ்டன் என்பவர் தொடங்கினார். இந்த மருத்துவமனையானது தற்போது எழும்பூரில் இருக்கிறது. இந்த மருத்துவமனையை ஆங்கிலேயர் ஆட்சி முடிவடைந்து இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு அரசாங்கம் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. இது உலகின் 2-வது […]
ஊட்டி பஸ் நிலையம் அருகே தனியார் பஸ் மோதியதில் காசாளர் பலியாகி உள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி காந்தல் பகுதியைச் சேர்ந்த நூருதீன்(60) என்பவர் ஊட்டி பஸ் நிலையம் அருகே இருக்கும் தனது தம்பி காஜா என்பவருக்கு சொந்தமான பிரியாணி கடையில் காசாளராக பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஒன்பது மணி அளவில் பணி முடித்துவிட்டு வீடு திரும்புவதற்காக பஸ் நிலையம் அருகே சாலையை கடக்க முயன்ற பொழுது ரவுண்டானா பகுதி பெங்களூருக்கு […]
கரடி முதியவரை கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்ன பொன்னேரி பகுதியில் கூலித்தொழிலாளியான திருப்பதி(70) என்பவர் வசித்து வருகிறார். இந்த முதியவர் தனது மகன் வெங்கடேசனுடன் ஏலகிரி மலை அடிவாரத்தில் இருக்கும் புன்னன் வட்டம் பகுதிக்கு விறகு சேகரிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென வந்த கரடி திருப்பதியை கடித்து குதறியது. அவரது அலறல் சுத்தம் கேட்டு ஓடிவந்த வெங்கடேசன் மற்றும் பொதுமக்கள் கரடியை காட்டுப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். அதன் பிறகு […]
மர்ம விலங்கு கடித்து ஆடு பலியான நிலையில், 3 ஆடுகள் படுகாயமடைந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளியில் சாமிக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் மேய்ச்சலுக்காக சென்ற ஆடுகளை ஈஸ்வரி பார்ப்பதற்கு சென்றுள்ளார். அப்போது 4 ஆடுகள் மயங்கி கிடந்ததை பார்த்து ஈஸ்வரி அதிர்ச்சி அடைந்தார். அதில் ஒரு ஆடு இறந்து கிடந்தது. மற்ற 3 ஆடுகள் […]
மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வளையாம்பட்டு பகுதியில் பெரியதாய் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி வளையம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட ஏரி பகுதியில் 100 நாள் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென மூதாட்டி மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சடைந்த சக பணியாளர்கள் மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் […]
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக சென்ற பெண் திடீரென உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்கும் முயற்சி செய்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பெண் கூறியதாவது, நான் மேளக்களத்தூர் பகுதியில் வசித்து வருகிறேன். எனது பெயர் மலர். நான் எனது தாய் […]
கோத்தகிரி அருகே மேகமூட்டத்துடன் காட்சி அளித்த கோடநாடு காட்சி முனையை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்வர். இதில் முக்கியமான ஒன்றாக கோடநாடு காட்சி முனை இருக்கிறது. இந்நிலையில் சென்ற சில வாரங்களாகவே கோத்தகிரி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக மேகமூட்டத்துடன் கூடிய சீதோஸ்ண நிலை நிலவிய வருகின்றதால் கோடநாடு காட்சி முனையில் இருந்து சம வெளிப்பகுதிகளை காண முடியவில்லை. ஆனால் அழகிய மேக […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மூலங்குடி பெருமாள் கோவில் தெருவில் கருப்பையன்(50) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கருப்பையின் அதே பகுதியில் வசிக்கும் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்! அந்த […]
விபத்துக்கள் தொடர்ந்து நடைபெறுவதால் தடையை மீறி கல்லட்டி மலைப்பாதையில் வெளி மாநில பதிவெண் கொண்ட வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் இருந்து கல்லட்டி செல்லும் மலைப்பாதை வழியாக வெளியூர் மற்றும் வெளி மாநில பதிவெண் கொண்ட சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் சென்னையிலிருந்து 20க்கும் மேற்பட்டோர் சுற்றுலா வேனில் ஊட்டிக்கு வந்த பொழுது இவர்கள் ஊட்டியை சுற்றிவிட்டு மசினக்குடிக்கு கல்லட்டி மலைப்பாதை […]
சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் காட்டுக்குப்பம் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சோனிகா(11) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சோனிதாவை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுமி தனது வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் அண்ணன் தங்கை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பாக்கம் அறிஞர் அண்ணா தெருவில் குணசுந்தரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சகோதரரான முருகன் என்பவருடன் திருப்பாச்சூரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். பின்னர் திருவிழா முடிந்த பிறகு இருவரும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் காக்களூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக […]
சாலையை கடக்க முயன்ற மூதாட்டி லாரி மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள செதுவாலை பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோவிந்தம்மாள்(80) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த மூதாட்டி சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கண்டெய்னர் லாரி மூதாட்டி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மூதாட்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு […]
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள சதுப்பேரி ஏரியில் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் மிதந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த பெண்ணின் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் கொணவட்டம் பகுதியைச் […]
காலி நிலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 28 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்த நிலையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள துறையூர் செல்லும் சாலையில் கொசவம்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் பட்டறை நடத்திய வருகின்ற நிலையில் பழைய சக்கர வாகனங்களை வாங்கி விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் இரவு வழக்கம் போல் பணி முடித்துவிட்டு பட்டறையை பூட்டிவிட்டு வீட்டிற்கு […]
தற்காலிக ஆசிரியர் பணியிடத்திற்கான விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்ட நிலையில் ஏராளமான வாங்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 2022-23 கல்வியாண்டில் 01.6.2022 நிலவரப்படி பள்ளி கல்வித்துறையின் கட்டுப்பாடின் கீழ் இயங்கும் ஒன்றிய நகராட்சி அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பணிகளுக்கான காலி இடங்களை நிரப்ப இடைநிலை பட்டதா,ரி முதுகலை ஆசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டதையடுத்து தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து மூலமாக விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ உரிய […]
தொடர்ந்து திருட்டு மற்றும் வழிப்பறி போன்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ் புரம் பகுதியில் தொடர்ந்து திருட்டு ,வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் காரணமாக காவல்துறையினர் ஆர்.எஸ்.புரம் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பேருந்து நிலையம் அருகே ஒரு முதியவரிடமிருந்து சில நபர்கள் செல்போன் மற்றும் பணத்தை திருடுவதை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் மூதியவரிடம் திருடிய […]
தொட்டியில் தவறி விழுந்த பசுமாட்டை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டார்கள். நாமக்கல் மாவட்டத்திலுள்ள வேலகவுண்டம்பட்டி அருகே இருக்கும் நறுவலூரை சேர்ந்த விவசாயி பழனிச்சாமி என்பவர் பசுமாடு ஒன்றை வளர்த்து வந்த நிலையில் அந்த பசு மாடு நேற்று வீட்டின் அருகே உள்ள எட்டு அடி ஆழம் உள்ள தரைமட்ட தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்ததையடுத்து தீயணைப்பு நிலையத்திற்கு பழனிச்சாமி தகவல் கொடுத்ததின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பொக்கலைன் இயந்திரத்தின் உதவியோடு தொட்டியின் அருகிலேயே குழி […]
விபச்சாரத்தில் ஈடுபட்ட சேலம் பெண் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு அருகே இருக்கும் வாலரை கேட் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து போலீசார் மாறுவேடத்தில் சென்று பார்த்த பொழுது அங்குள்ள ஒரு கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருக்கும் அறைக்குள் விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சேலத்தைச் சேர்ந்த 40 வயது உடைய பெண் உட்பட மூன்று பெண்களை போலீசார் விசாரணை நடத்தியதில், சேலத்தைச் சேர்ந்த பெண் […]
ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் செய்துள்ள சாதனை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்ன வேடம்பட்டி பகுதியில் சத்தியமூர்த்தி – வினயகஸ்தூரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு யத்தீந்திரா (12), வஹிந்திரா (11) என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் யத்தீந்திராவுக்கு ஆட்டிசம் நோய் இருக்கிறது. இவர்கள் 2 பேரும் கடந்த 11-ஆம் தேதி பயிற்சியாளர் ஆண்ட்ரூ ஜோன்ஸூடன் சேர்ந்து இமாச்சலப் பிரதேசத்திற்கு சென்றனர். அதன் பிறகு 17 ஆயிரம் அடி உயரமுள்ள ப்ரன்ஷிப் […]
தட்டிக்கேட்ட வாலிபரிடம் டிரைவர், கண்டெக்டர் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் அரசு, தனியார் பேருந்துகள் நாகல்நகர் மேம்பாலம் வழியாகவே செல்கின்றன. இதேபோன்று நத்தத்தில் இருந்து திண்டுக்கல் வரும் பேருந்துகளும் இதே பாலத்தில் வந்து நாகல்நகர் ரவுண்டானாவை கடந்து மெங்கில்ஸ் ரோடு வழியாக பேருந்து நிலையம் செல்கின்றன. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க சாலையின் நடுவே இரும்பு, சிமெண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் நத்தத்தில் இருந்து திண்டுக்கல் […]
அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தூய்மை பணியாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள மணலி பகுதியில் 49 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாததால் பிச்சை எடுத்து பிழைத்து வருகிறார். இந்நிலையில் அந்த பெண் கடந்த மாதம் 27-ந்தேதி சிறுநீரக பாதிப்பு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து கடந்த 30-ந்தேதி அறுவை சிகிச்சை முடிந்து இரவு படுக்கையில் இருந்த பெண்ணிடம், தூய்மை […]
தற்காலிக ஆசிரியர் பணியை ரத்து செய்ய பரிந்துரைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் தகுதி தெரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் மனு கொடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் ஏராளமான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். இதனால் கோரிக்கை மனு பதிவு செய்யப்படும் இடத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த […]
சட்ட விரோதமாக போதை காளான் விற்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மன்னவனூர் கைகாட்டி பகுதியில் கொடைக்கானல் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் கிருஷ்ணன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்ட விரோதமாக ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் […]
தவறான சிகிச்சையால் காலை இழந்த பெண் அரசு வேலை கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஒற்றைக்கால் இல்லாத நிலையில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தனது மகன், மகளுடன் அழுதபடி வந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர், நத்தம் அசோக்நகர் பகுதியில் வசிக்கும் உமா மகேஸ்வரி என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த பெண் கூறியதாவது , கடந்த 2½ வருடங்களுக்கு முன்பு என்னுடைய […]
டிராக்டர் மோதி 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள நஞ்சுண்டாபுரம் பகுதியில் சன் பவுலரிங் என்ற பெயரில் கோழி பண்ணை செயல்பட்டு வருகிறது. அந்த பண்ணையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அன்சாயி பசு மாத்திரி என்பவர் தனது மனைவி ஹசாரி மற்றும் 2 வயது குழந்தையான புஞ்சா ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் பண்ணைக்கு சொந்தமான டிராக்டரில் கோழித் தீவன மூட்டைகள் ஏற்றி கொண்டுவரப்பட்டது. அந்த டிராக்டரை நஞ்சுண்டாபுரம் பகுதியில் வசிக்கும் […]
கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக முத்தையாபுரம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் மோகன்குமார், […]
2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு பழம்பேட்டை பகுதியில் ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஏழுமலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஏழுமலை ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பலத்த காயமடைந்த ஏழுமலையை உடனடியாக […]
கண்டெய்னர் லாரி-வேன் மோதிய விபத்தில் டிரைவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொங்கலூர் சக்தி நகர் அருகில் பேட்டரிகளை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி கோவையை நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் சிமெண்ட் ஏற்றிக்கொண்டு காங்கேயம் நோக்கி சென்ற வேன் எதிர்பாராதவிதமாக கண்டெய்னர் லாரியின் மீது பயங்கரமாக மோதியது. இதில் கண்டெய்னர் லாரி நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கண்டெய்னர் லாரி மற்றும் வேன் டிரைவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால் அப்பகுதியில் […]
பலத்த சூறைக்காற்று வீசியதில் பனைமரம் முறிந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கே.வி.கே.நகர் பகுதியில் இசக்கியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 1 1\4 வயதில் முத்து பவானி என்ற குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் குழந்தை முத்து பாவனி இரவில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது வீசிய சூறைக் காற்றினால் வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்த உயரமான பனை மரம் ஒன்று சாய்ந்து […]
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அண்மையில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கான திறனாய்வு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பால சுப்பிரமணியம் பங்கேற்று, தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட மெல்லும் புகையிலை, குட்கா, பான்மசாலா ஆகிய பொருட்கள் புற்றுநோயை உண்டாக்குவதால் அனைத்து கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டு புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்கவேண்டும். மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மற்றும் விற்பனை செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்குமாறு அறிவுறுத்தினார். அத்துடன் விதிகளை மீறி தடை செய்யப்பட்ட குட்கா, […]
கடலூர் மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுதகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பாக 2-வது மேல் முறையீட்டு மனுக்கள் குறித்து மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார் விசாரணை நடத்தினார். இதையடுத்து பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் அனைத்துதுறை அலுவலர்கள் மத்தியில் மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியிருப்பதாவது “தகவலறியும் உரிமை சட்டத்தில் தகவல் அளிப்பதை எதிரிபோல் பார்க்க கூடாது. இந்த சட்டம் 10 ரூபாயில் தகவலறியும் உரிமையை பொதுமக்களுக்கு அளிக்கிறது. இதனிடையில் மனுதாரர்கள் கொடுக்கும் மனுக்கள் […]
கடலூர் மாவட்டம் கிள்ளை அருகே சி.மனம்பாடி கிராமத்திலுள்ள அங்கன்வாடி மையம் மழைக் காலத்தில் ஒழுகியது. இந்த அங்கன்வாடி மையம் அதே கிராமத்திலுள்ள சமுதாய நலக்கூடத்தில் 3 வருடமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் எம்.ஜி.ஆர். திட்டு நடுநிலைப் பள்ளி சமையலர் ஒருவர், குழந்தைகளை வெளியேற்றிவிட்டு அங்கன்வாடி மையமாக செயல்பட்ட சமுதாய நலக்கூடத்தை இழுத்துமூடினார். இதன் காரணமாக என்னசெய்வது என்று தெரியாமல் குழந்தைகள், அருகிலுள்ள வீட்டின் முன்பு அமர்ந்திருந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் தாசில்தார் ஹரிதாஸ் நேரில் சென்று […]
கோவை – திருச்சி சாலையில் புதியதாக மேம்பாலம் ஒன்று அமைக்கப்பட்டு போக்குவரத்து பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது. இந்த மேம்பாலத்தில் அதி வேகமாக இருசக்கர வாகனத்தில் சென்ற 2 வாலிபர்கள் தடுப்பு சுவரில் மோதி தூக்கிவீசப்பட்டு உயிரிழந்தனர். இதையடுத்து திருச்சி ரோடு மேம்பாலத்தில் விபத்து தடுப்பு பணிக்காக மூடப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் மேம்பாலத்தில் விபத்துகளை தடுக்க வேகத் தடை அமைக்கும் பணிகள், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் அடிப்படையில் அறிவிப்பு பலகைகள் வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இது […]
ஆப்பிரிக்கா கண்டத்திலுள்ள எத்தியோப்பியா நாட்டிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு சரக்கு விமானம் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் எத்தியோப்பியாவிலிருந்து சென்னைக்கு பயணிகள் விமானம் சேவையை துவங்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்து வந்தனர். சென்ற 2020 ஆம் வருடம் கொரோனா காலத்திற்கு முன்னதாக பயணிகள் விமான சேவையை துவங்க திட்டமிடப்பட்டது. எனினும் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பணிகள் தொடங்க காலதாமதம் ஏற்பட்டது. இந்தநிலையில் எத்தியோப்பியாவிலிருந்து ஒவ்வொரு வாரமும் ஞாயிறு, செவ்வாய், வியாழன் போன்ற நாட்களில் சென்னை […]
வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல் போட்டனர். தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவியில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மேலும் தொடர்ந்து பெய்த சாரல் மழையால் மெயின் அருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றமடைந்து குளிக்க முடியாமல் திரும்பிச் சென்றனர். இந்நிலையில் தற்போது மழை […]
தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்த நண்பரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள கீழக்கடையம் பகுதியில் செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சக்திவேல் முருகன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சக்திவேல் முருகன் அவருடைய நண்பரான கீழக்கடையம் ஆர்.சி.சர்ச் தெருவில் வசிக்கும் ராஜரத்தினம் என்பவருடன் சேர்ந்து புதுவயல் பகுதிக்கு சென்று அங்கு இருவரும் அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் ராஜரத்தினம், சக்திவேல் முருகனை கத்தியால் […]
சொத்தை பிரித்து கேட்ட மகனை கத்தியால் குத்தி கொலை செய்த தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள துவரங்குறிச்சி மேட்டுக்கொல்லை கிராமத்தில் விவசாயியான சந்திரகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிர்மலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மார்க் டிக்சன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மார்க் டிக்சன் தஞ்சாவூரில் இருந்து துவரங்குறிச்சிக்கு வந்து அங்கு தனது தந்தையிடம் தன் சொத்துக்களை பிரித்துக் கேட்டுள்ளார். இதனால் தந்தை […]