சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே சதுரகிரி மலை அடிவாரத்தில் இருக்கும் யானை கஜம் அருவியில் மழைக்காலத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இந்த அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளிப்பதற்காக செல்வார்கள். இந்த அருவியில் தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்நிலையில் கடந்த வருடம் சதுரகிரி மலைப்பகுதி புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். ஆனால் வனத்துறையினரின் உத்தரவை மீறி சில […]
Tag: மாவட்ட செய்திகள்
ஒரு பெண் 3 பேரை திருமணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே என்ஜினியராக வேலை பார்க்கும் விஜய் போஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2014-ம் ஆண்டு வித்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதியினருக்கு 7 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் வித்யா குடும்பத்தை கவனிக்காமல் அடிக்கடி செல்போனில் யாருடனோ பேசியுள்ளார். இதனால் விஜய் போஸ் மனைவி வித்யாவை கண்டித்துள்ளார். இருப்பினும் வித்யா […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தூத்துக்குடி பொன்னகரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் சாமுவேல்புரம் பகுதியில் வசிக்கும் கோபிகண்ணன், சுடலைமாடசாமி என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் சட்டவிரோதமாக […]
வால்பாறையில் பெய்த கன மழையால் திடீரென தோன்றிய நீர்வீழ்ச்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் இறுதி வாரத்தில் இருந்து கோடைமழை பெய்ய தொடங்கியது. இந்நிலையில் வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் 160 அடி […]
கோவில்களில் உள்ள சாமி சிலைகளை கடத்திய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் கோவில்களில் உள்ள சாமி சிலைகள் மற்றும் தங்க நகைகள் போன்றவைகள் தொடர்ந்து திருடப்பட்டுள்ளது. இதன் காரணமாக போலீஸ் சூப்பிரண்டு நிஷா கடத்தல் கும்பலை கண்டுபிடிப்பதற்காக 6 பேர் கொண்ட தனிப்படை குழுவை அமைத்தார். இவர்கள் சாமி சிலைகள் மற்றும் தங்க நகைகள் திருடப்பட்ட கோவில்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் […]
காவல்துறையினரின் கண்காணிப்பின் கீழ் விவசாயிகள் நெல்லை விதைத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மேல்பருத்திகுடி கிராமம் அமைந்துள்ளது. இங்கு விவசாயிகள் குருவை சாகுபடிக்காக நேரடி நெல் விதைப்பு செய்ய வேண்டும் என திட்டமிட்டுள்ளனர். இதற்கு விவசாய கூலி தொழிலாளர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 27-ஆம் தேதி விவசாயிகள் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது கூலி தொழிலாளர்கள் தகராறு செய்துள்ளனர். இதை தெரிந்து கொண்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 39 பேரை கைது […]
கோவையில் பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கோவையில் தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும் போதிய மழை பெய்யாததால் குளங்கள் வறண்டதுடன், ஆறு, வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்நிலைகளும் வறண்டன. எனவே மழை பெய்யாதா என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல வெயில் அடித்தது. ஆனாலும் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. இந்நிலையில் காலை 11 மணி அளவில் சரவணம்பட்டி, காளப்பட்டி, கோவில்பாளையம் மற்றும் அதை சுற்றி உள்ள சில […]
சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுகிறது. சென்னை தெற்கு ரெயில்வே பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. சென்னை கடற்கரை-தாம்பரம் செல்லும் ரெயில் இரவு 11.20 மணி, 11.40 மணி, 11.59 மணிக்கும், தாம்பரம்- சென்னை கடற்கரை செல்லும் ரெயில் இரவு 10.25 மணி, 11.25 மணி, 11.45 மணிக்கும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 2-ந்தேதி மற்றும் 4-ந் தேதிகளில் மின்சார […]
பொதுமக்களுக்கு மது அருந்துவதால், சிகரெட் பிடிப்பதால் ஏற்பட்டு தீமைகள் குறித்து பொள்ளாச்சி பேருந்து நிலைய சுரங்கப்பாதையில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. பொள்ளாச்சி- பாலக்காடு சாலையில் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் பொதுமக்கள் பேருந்து நிலையங்களுக்கு எளிதில் செல்லும் வகையில் சாலையின் குறுக்கே சுரங்கப் பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப் பாதையை பயணிகள் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. இந்த சுரங்க பாதையில் சில பேர் உட்கார்ந்து மது அருந்தி வருகின்றனர். இந்நிலையில் நகராட்சி […]
செல்போன் உதிரி பாகங்கள் வாங்க வந்த பெண்ணிடம் 2 3\4 லட்சம் பணம் பறித்த மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிவன்குடியேற்று பகுதியில் ரேணுகா என்பவர் வசித்து வருகிறார். இவர் செல்போன் சர்வீஸ் சம்பந்தப்பட்ட பாடத்தை படித்திருப்பதால் ரேணுகாவும் அவருடைய பெரியப்பா குருபரன் என்பவரும் தனது ஊரில் சொந்தமாக செல்போன் விற்பனை கடை வைக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக செல்போன் உதிரிபாகங்கள் வாங்குவதற்காக ஆன்லைன் மூலம் விசாரித்துள்ளனர். அப்போது ரேணுகா ஒருவரது செல்போன் […]
ஊட்டியில் சிறுத்தை நடமாடியதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டபெட்டா. கவர்னர்சோலை, கேர்ன்ஹில் உள்ளிட்ட அடர்ந்த வனப்பகுதிகள் இருக்கின்ற நிலையில் இங்கு கரடி, காட்டெருமை, கடாமான், சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளும் வாழ்ந்து வருகின்றது. இவைகள் உணவு மற்றும் தண்ணீருக்காக வன பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிக்கு வந்து விடுகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் சிறுத்தை ஒன்று சாலையில் நடமாடும் பொழுது வாகனத்தின் முகப்பு வெளிச்சம் தெரிந்ததை பார்த்து சிறுத்தை சாலையோரத்தில் பதுங்கி இருந்தது. அவ்வழியாக […]
ஊட்டியில் தொடர் மழை காரணமாக மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகின்ற நிலையில் நிலத்தில் ஈரப்பதம் அதிகரித்து ஊட்டியில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் லவ்டேல் என்ற இடத்தில் நேற்று இரவு மரம் முறிந்து விழுந்ததனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மரத்தை எந்திரம் மூலம் துண்டு […]
குன்னூர் அருகே பழங்குடியின மக்கள் எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் தவித்து வருகின்ற நிலையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் தாலுகாவிற்கு உட்பட்ட உலிக்கல் பேரூராட்சியில் குரங்குமேடு கிராமம் உள்ள நிலையில் சென்ற 25 வருடங்களாக வசித்து வரும் பழங்குடியின மக்கள் தேயிலை விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழிலை செய்து வருகின்றார்கள். இவர்களுக்கு அடிப்படை வசதிகளான மின்சாரம், சாலை, குடிநீர் எந்த அடிப்படை வசதியும் இல்லை. […]
வனவிலங்கு நடமாடும் அதிகரித்து இருப்பதால் அவற்றை தொந்தரவு செய்யக்கூடாது என சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை என அறிவுரை கூறியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலையில் புலிகள் காப்பகம் இருக்கின்ற நிலையில் சில மாதங்களாகவே கோடை வெயிலின் தாக்கத்தால் வறட்சியாக காணப்பட்டது. இதனால் அங்குள்ள வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீருக்காகத் இடம்பெயர்ந்தது. இதனால் யானைகள் ஊருக்குள் வர தொடங்கியது. இதனிடையே கோடை மாதத்தில் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து பசுமையாக இருக்கின்றது. இதனால் வனவிலங்குகள் வனப்பகுதிக்கு திரும்பியது. இதனால் […]
சாலையில் சென்று கொண்டிருந்த லாரியை சோதனை செய்த பொழுது 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் கடத்தப்பட்டதையடுத்து போலீசார் பறிமுதல் செய்தனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள நாடுகாணி சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி டிரைவரிடம் விசாரித்த பொழுது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் வாகனத்தை சோதனை செய்த போது காய்கறி மூட்டைகளுக்கு நடுவே சிறிய பைகள் இருப்பதை கண்டு திறந்து பார்த்த பொழுது தடை செய்யப்பட்ட புகையிலை […]
வேப்பனபள்ளி அருகே 25 கோடி ரூபாய் மோசடி செய்ததில் ஒருவர் சரண் அடைந்ததையடுத்து அவரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியதில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனப்பள்ளி அருகே இருக்கும் மாதேபள்ளி கிராமத்தில் முனிரத்தினம் மற்றும் கிருஷ்ணமூர்த்தி என்பவர்கள் மாத ஏலச் சீட்டு நடத்தி வந்த நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அவர்களிடம் சீட்டு போட்டு வந்த நிலையில் சென்ற மாதம் முனிரத்தினம் மற்றும் கிருஷ்ணமூர்த்தி 25 கோடி அளவில் சீட்டு பணத்தை மோசடி செய்து […]
பெட்ரோல் குண்டு வீசிய வக்கீல் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தையூர் குப்பம்மாள் நகர் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் வேலைக்கு சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போடுவதற்காக சங்கர் கேளம்பாக்கத்தில் உள்ள பெட்ரோல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது வரிசையில் நின்று கொண்டிருந்த போது பெட்ரோல் போட்டுவிட்டு நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தவரை சங்கர் போகும்படி கூறினார். அப்போது […]
சவுதி அரேபியாவில் இருந்து சென்னை வந்த பெண் என்ஜினீயரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மருத்துவப் பேராசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு சவுதி அரேபியாவில் இருந்து விமானத்தில் கடந்த 18-ஆம் தேதியன்று 239 பயணிகள் பயணம் செய்துள்ளனர். அதில் அமெரிக்காவில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக ஆதம்பாக்கம் பகுதியில் வசிக்கும் பெண் பணிபுரிந்து வருகிறார். அவர் சவுதி அரேபியா வழியாக சென்னை வந்துள்ளார். அப்போது தஞ்சாவூர் பகுதியில் வசிக்கும் மருத்துவ பேராசிரியரான ஸ்ரீ ராம் என்பவர் […]
போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தேன் விற்பனை களை கட்டியது. கோயம்புத்தூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 5 தளங்களுடன் கட்டிடம் அமைந்துள்ளது. அந்தக் கட்டிடத்தில் மலைத் தேனீக்கள் 10 இடங்களில் கூடு கட்டி இருந்தது. இந்நிலையில் வடமாநில வாலிபர்கள் அங்கிருந்த 4 தேன் கூடுகளை எடுத்து அதில் இருந்த 40 கிலோ தேனை விற்பனை செய்தனர். அந்த விற்பனை கமிஷனர் அலுவலகத்தில் விறுவிறுப்பாக நடந்தது. இந்நிலையில் கலப்படமற்ற தேன் என்பதால் பொதுமக்கள் பலரும் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து ஆர்வமுடன் […]
திடீரென நில அதிர்வு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயத்தை சுற்றி மருதுறை, கீரனூர், நால்ரோடு, ஆலம்பாடி, சிவன்மலை உள்ளிட்ட 10-ம் மேற்பட்ட கிராமங்கள் இருக்கிறது. இந்த கிராமங்களில் நேற்று இரவு திடீரென நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வின் போது பெரிய சத்தம் ஒன்றும் கேட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த நில அதிர்வின் போது வீட்டில் உள்ள பாத்திரங்கள் கீழே உருண்டு விழுந்தததோடு, வீட்டில் உள்ள அனைத்துப் […]
கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் அருகே நொய்யல் ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் மூலம் சுற்றுவட்டார மக்கள் பெரிதும் பயன்பெறுகின்றனர். இந்த ஆற்றில் தண்ணீர் குடித்த சில ஆடுகள் இறந்த நிலையில் நீரில் மிதந்து கிடந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆடுகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் ஆடுகளை மீட்க முடியாததால் வட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு மீனவர்கள் உதவியுடன் […]
தொழிலாளியை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பனைமரத்தூர் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் திருநங்கை ஒருவரை திருமணம் செய்துகொண்டு அப்பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருநங்கை பெங்களூருக்கு சென்று விட்டார். இதனால் ரமேஷ் மாரியம்மன் கோவில் வளாகத்தில் படுத்து வந்துள்ளார். இதே போன்று அதே பகுதியில் வசிக்கும் தனியார் […]
வீட்டிற்குள் கொள்ளையடிக்க வந்த வந்த மர்மநபர் தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அப்பநாய்க்கன்பட்டி பகுதியில் நிர்மலா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தாயாரான ராதா என்பவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் ராதாவை தாக்கிவிட்டு அங்கிருந்த பணம் மற்றும் செல்போனை கொள்ளையடித்து சென்றுள்ளார். இந்நிலையில் வேலைக்கு சென்ற நிர்மலா வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது தனது தாயார் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி […]
வேப்பனப்பள்ளி அருகே ஊருக்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்து வருகின்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனப்பள்ளி அருகே இருக்கும் கொங்கணபள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வனப்பகுதி இருக்கின்ற நிலையில் 11-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அங்கு முகாமிட்டு இருக்கின்றது. இந்த காட்டு யானைகள் அடிக்கடி கிராமங்களில் புகுந்து விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை நாசம் செய்து விடுகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு இரண்டு காட்டு யானைகள் கிராமத்தில் புகுந்து நந்தகோபால் என்பவரின் விவசாய […]
கார் ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பட்டணம் காலனி பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகப்பன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சொந்தமாக கார் வைத்து தொழில் நடத்தி வந்தார். ஆனால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் நாகப்பன் காரை விற்று விட்டு ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை சரியாக கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்த நாகப்பன் திண்டிவனம்-செஞ்சி பேருந்து நிறுத்தத்தில் வைத்து விஷம் […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வழக்கறிஞர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வி.சாத்தனூர் கிராமத்தில் வழக்கறிஞரான பிரகதீஸ்வர் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பிரகதீஸ்வர் விக்கிரவாண்டியில் இருக்கும் தனது தாத்தா வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் விக்கிரவாண்டி தெற்கு புறவழிச் சாலையை கடக்கும் முயன்ற போது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரகதீஸ்வர் சம்பவ […]
பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதியம்புத்தூர் சோனியா நகர் பகுதியில் சிவசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் சமையல் மாஸ்டராக உள்ளார். இவர் பொன்மணி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சிவசங்கர் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து சிவசங்கர் ஒரு பெண்ணிடம் செல்போனில் பேசிக்கொண்டிருந்ததை பொன்மணி கண்டித்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இருவருக்கும் […]
சுருக்கு கம்பி வேலியில் சிக்கி தவித்த புள்ளி மானை பொதுமக்கள் மீட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை அருகே இருக்கும் நெல்லுகுந்தி கிராமத்தையடுத்து வனப்பகுதி இருக்கின்றது. இங்கு புள்ளி மான்கள் அதிகளவு வாழ்ந்து வருகின்ற நிலையில் உணவு மற்றும் தண்ணீருக்காக புள்ளிமான் ஒன்று வெளியேறிய நிலையில் நெல்லுகுந்தி அருகே சென்ற பொழுது சுருக்கு கம்பி வேலியில் சிக்கி தவித்ததையடுத்து தெருநாய்கள் கூட்டம் கடித்து குதறி இருக்கின்றது. இதனை பார்த்த கிராமமக்கள் புள்ளி மானை மீட்டு வன காவலருக்கு […]
சின்னசேலம் பகுதியில் விபத்துக்களை தடுப்பதற்காக சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சின்ன சேலத்தை அடுத்த அம்மையகரம் கிராம எல்லையில் செல்லும் சேலம்- சென்னை இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகின்ற நிலையில் விபத்துக்களை தடுப்பது மற்றும் சாலையை விரிவாக்கம் செய்வது பற்றி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவின் பேரில் கோட்டாட்சியர் பவித்ரா, போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன், தேசிய நெடுஞ்சாலை திட்ட மேலாளர் சதீஷ் உள்ளிட்டோர் சம்பவ […]
கள்ளக்குறிச்சி நகர பகுதியில் சிறிதான விமானங்கள் தாழ்வாக பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் சென்ற சில நாட்களாகவே சிறிய அளவிலான விமானங்கள் அடிக்கடி தாழ்வாக பறந்து செல்கின்றது. இந்நிலையில் நேற்று காலை 10 மணி மேலும் 11 மணியளவில் ஐந்து சிறிய அளவிலான விமானங்கள் மாவட்டத்தின் நகர பகுதியில் தாழ்வாக பறந்து சென்ற பொழுது கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு மைதானத்தில் மாணவர்கள் நின்று பார்த்தனர். மேலும் பொதுமக்களும் பார்த்தார்கள். […]
தாயை பிரிந்து தவித்து நின்ற புள்ளி மான் குட்டியை பிடித்து பாதுகாப்பாக வனத்துறையினரிடம் ஒப்படைத்த விவசாயியை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புளியங்குளம் கிராமத்தில் விவசாயியான ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்திற்கு பருத்தி எடுப்பதற்காக சென்றுள்ளார். அங்கு புள்ளி மான் குட்டி ஒன்று தனது தாயை பிரிந்து தோட்டத்திற்குள் நின்றுள்ளது. இதனை பார்த்த ரமேஷ் அந்த மான் குட்டியை பாதுகாப்பாக பிடித்து செல்போனில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். […]
குடிபோதையில் மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதுமை கிணறு பகுதியில் அந்தோணி ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தொழிலாளியான செல்வமணி என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு ரோசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். கடந்த 5 வருடங்களாக செல்வமணியும் ரோசியும் குடும்ப பிரச்சினை காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் ரோசி திருநெல்வேலி மாவட்டத்தில் வசிக்கும் தாத்தா சுப்பையா வீட்டில் மகனுடன் […]
ஏரியில் டிராக்டர் கவிழ்ந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள புதூர் பகுதியில் விவசாயியான முருகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முருகன் மங்கலத்தில் இருந்து சோமாசிபாடி சாலையில் டிராக்டரை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் திடீரென ஏரியில் கவிழ்ந்து பலத்த காயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகனின் உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு […]
அரசு பேருந்தில் சென்ற மூதாட்டியிடம் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டோனாவூர் செட்டிநாடு பகுதியில் தளவாய் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோமதி என்ற மனைவி உள்ளார். இவர் அரசு பேருந்து ஒன்றில் களக்காட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் தளவாய் களக்காடு பேருந்து நிலையத்திற்கு வந்து கீழே இறங்கியபோது அவர் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்நிலையில் […]
மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கக்கன் நகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். இதனையடுத்து மணிகண்டன் மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து மணிகண்டன் களக்காடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]
மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சென்னாவரம் கிராமத்தில் கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சேதுராகுப்பம் கிராமத்தில் உள்ள நிலத்திற்கு தங்கராசு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். அப்போது பம்புசெட்டில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி பலத்த காயமடைந்த தங்கராஜ் சம்பவ […]
பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள பாரதி நகர் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஒரு பெண்ணின் வீட்டிற்கு சென்ற பாலமுருகன் அங்கு யாரும் இல்லாததை அறிந்து வாய் பேச முடியாத நிலையில் இருந்த அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்த மற்றொரு பெண் ஒருவர் பாலமுருகனை கண்டித்துள்ளார். அதற்கு பாலமுருகன் இங்கு நடந்ததை யாரிடமும் கூறக்கூடாது என […]
கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள வாசுதேவநல்லூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் வாலிபர் அதே பகுதியில் வசிக்கும் மாயசுடலை என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் […]
ஆட்டோ ஓட்டுனர்களை போலீஸ் சூப்பிரண்டு கடுமையாக எச்சரித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரப்பட்டினத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆட்டோ டிரைவர்களை நேரில் சந்தித்து பேசினார். அவர் ஆட்டோ ஓட்டுனர்களிடம் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி விபத்து இல்லாமல் வாகனங்களை ஓட்டுமாறு அறிவுரை வழங்கினார். அதன்பிறகு முறப்பநாடு பகுதியில் ஆட்டோவில் அளவுக்கு அதிகமாக குழந்தைகளை பள்ளிக்கு ஏற்றி சென்றதால் தான் 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான் எனவும் கூறினார். அந்த 4 வயது குழந்தை பள்ளிக்கு சென்ற […]
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சுந்தரராஜபட்டினம் பகுதியில் முடி திருத்தம் தொழிலாளியான ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பவானி என்ற மனைவியும், சுரேகா என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சுரேகாவுக்கு 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்து கொண்டிருந்தபோது அவரின் தந்தை மாரடைப்பால் இறந்துவிட்டார். இதனையடுத்து ரவியின் உடலுக்கு இறுதி சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகள் வீட்டில் நடந்தது. இருப்பினும் சுரேகா மிகுந்த மன வேதனையுடன் பொதுத்தேர்வை எப்படியாவது எழுதி விட வேண்டும் என்ற எண்ணத்தில் தந்தையின் சடலம் […]
கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 9 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் காட்டுமன்னார் கோவில், புவனகிரி, சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, கடலூர் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு மாவட்ட செயலாளராக உழவர் மற்றும் வேளாண் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் இருக்கிறார். இதனையடுத்து திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி ஆகிய பகுதிகளுக்கு மாவட்டச் செயலாளராக தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ கணேசன் இருக்கிறார். இந்நிலையில் கடலூரில் கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளுக்கு மாவட்ட செயலாளர் தேர்தலை நடத்துமாறு தி.மு.க […]
ஓடும் பேருந்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில் உடன்குடி உள்ளது. இங்கிருந்து தனியார் ஆம்னி பேருந்து ஒன்று நேற்று இரவு கிளம்பியது. இப்பேருந்து கோவைக்கு சென்றது. இந்த பேருந்து தூத்துக்குடி டோல்கேட் பகுதிக்கு அருகில் சென்றது. அப்போது திடீரென பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் தீ விபத்து பற்றி ஓட்டுநரிடம் உடனடியாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஓட்டுனர் பேருந்தை சாலையின் ஓரமாக நிறுத்தினார். அதன்பிறகு பேருந்தில் […]
கொரோனா பரவல் காரணமாக மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதுவரை மாநிலம் முழுதும் 8,970 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் நெல்லை மாவட்டத்தில் 195 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் திருநெல்வேலியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஒரு முக்கிய அறிவிப்பை விடுத்துள்ளார். அதன்படி மக்கள் கூடும் பொது இடங்களில் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் […]
வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அற்பிசம்பாளையம் கிராமத்தில் பிரபு(36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அபிராமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கீர்த்திகா, கார்த்திகா என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் பிரபு வாத்து மேய்க்கும் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக வாத்துகள் நோய்வாய்ப்பட்டு இருந்ததால் மன உளைச்சலில் இருந்த பிரபு மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி […]
மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் மெக்கானிக் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெரிய அகரம் பகுதியில் வசந்த ராஜா(36) என்பவர் வசித்து வந்துள்ளார். கம்ப்யூட்டர் மெக்கானிக்கான வசந்தராஜா மோட்டார்சைக்கிளில் புதுச்சேரிக்கு சென்று கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் வாங்கியுள்ளார். பின்னர் வசந்த ராஜா மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் தீவனூர் மெயின் ரோட்டில் சென்றபோது எதிரே வேகமாக வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் […]
வெற்றி பெற்ற இறகு பந்து வீரர்- வீராங்கனைக்கு பாராட்டு. ஈரோடு மாவட்ட இறகுப்பந்து சங்கத் தலைவர் செல்லையன், செயலாளர் சுரேந்திரன், இணை செயலாளர்-பயிற்சியாளர் கே.செந்தில்வேலன் உள்ளிட்டோர் மாநில தரவரிசை போட்டியில் வெற்றி பெற்ற இறகு பந்து வீரர்-வீராங்கனைகளை பாராட்டினார்கள்.
ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக மூன்று லட்சம் ரூபாய் மோசடி செய்த நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை அருகே இருக்கும் லட்சுமணன் என்பவரின் மகன்களுக்கு ரயில்வேயில் வேலை வாங்கிய தருவதாக மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிப்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன், ரகு, கோவிந்தன் மற்றும் கல்லடிபட்டியை சேர்ந்த சந்தானம் உள்ளிட்ட நான்கு பேரும் ஆசை வார்த்தை கூறி வேலை வாங்கி தருவதற்காக மூன்று லட்சம் கேட்டிருக்கின்றனர். இதையடுத்து லட்சுமணனும் […]
வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கிராம மக்கள் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தை அடுத்து இருக்கும் வன்னியபாறைப்பட்டியை சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக நேற்று திரண்டு தீக்குளிப்பதற்காக மண்ணெண்ணெய் கேனுடன் வந்தனர். இவர்களைப் பார்த்த போலீசார் துரிதமாக செயல்பட்டு அவர்களிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்திய பொழுது அவர்கள் கூறியதாவது, வன்னியபாறைப்பட்டியில் நிலம் வாங்கி வீடு கட்டி முப்பது குடும்பத்தினர் வசித்து வருகின்றோம். நாங்கள் […]
பழனி-கோவை இடையேயான மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியிலிருந்து கோவை வரை ரயில்வே துறை சார்பாக மின்மயமாக்கல் பணியானது சென்ற சில வருடங்களாகவே நடந்து வந்த நிலையில் தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளது. இதனால் நேற்று மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. பழனியில் இருந்து கோவைக்கு மின்சார ரயில் இன்ஜின் பொருத்தப்பட்டு சோதனை ஓட்டமானது தொடங்கியது. பின் பழனி வந்த பிறகு டீசல் என்ஜின் கழற்றப்பட்டு மின்சார ரயில் என்ஜின் […]
மாற்றுத்திறனாளி கொடுத்த மனுவிற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு மூன்று சக்கர சைக்கிள் அவருக்கு உடனடியாக வழங்கப்பட்டது. தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரந்தோறும் திங்கட்கிழமை என்று ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டமானது நடைபெறும். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டமானது நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். நேற்று மொத்தம் 447 மனுக்கள் ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் கொட்டுமாரன மாறானஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி முனுசாமி என்பவர் […]