மாணவியின் வாக்குமூலத்தில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமியின் கருமுட்டை எடுக்கப்பட்ட விவகாரம் நாட்டையே உலுக்கியது. இந்த சிறுமியின் கருமுட்டைகளை எடுத்த தனியார் மருத்துவமனைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி தான் தற்போது எழுந்துள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி புகார் கொடுக்கவில்லை என்றால் இப்படி ஒரு கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்திருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஈரோடு மாவட்டம் முழுவதாக மிகப்பெரிய மாபியா கும்பல் சிறுமிகளின் கரு முட்டைகளை […]
Tag: மாவட்ட செய்திகள்
மகன் கண்டித்ததால் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அன்னியூர் கிராமத்தில் லட்சுமணன்(76) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இதனால் லட்சுமணன் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த லட்சுமணனின் மகன் சக்தி தனது தந்தையை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த லட்சுமணன் அப்பகுதியில் இருக்கும் மாட்டுக் கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். […]
லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆசூர் கிராமத்தில் வசிக்கும் கலைமணி என்பவருக்கு கடந்த 2007-ஆம் ஆண்டு இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்த மனை பட்டாவில் கலைவாணியின் பெயர் மற்றும் ஆவணங்களை பதிவு செய்வதற்கு அவரது மகன் யுவராஜ் திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது கிராம, வட்ட ஆவணங்களில் திருத்தம் செய்ய 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என பதிவறை எழுத்தாளரான சிவஞானவேல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து […]
கொரோனா தாக்கல் காரணமாக நிறுத்தப்பட்ட திருச்சி-காரைக்குடி டெமு ரயில் வருகின்ற 18ஆம் தேதி முதல் இயக்கப்படுகின்றது. புதுக்கோட்டை மாவட்டம் வழியாக திருச்சி-காரைக்குடி-விருதுநகர் இடையேயான ரயில் சேவை இயக்கப்பட்டு வந்த நிலையில் கொரோனா தாக்கல் காரணமாக சென்ற இரண்டு வருடங்களாக ரயில் சேவை நிறுத்தப்பட்டு விருதுநகர்-காரைக்குடி இடையேயான ரயில் சேவை மட்டும் சென்ற நவம்பர் மாதம் முதல் தொடங்கப்பட்ட நிலையில் காரைக்குடி-திருச்சி இடையேயான ரயில் சேவையை மீண்டும் தொடங்குமாறு பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தார்கள். இந்நிலையில் வரும் 18ம் […]
சாகுபடி செய்யப்பட்ட நிலக்கடலை பயிருக்கு களை வெட்டும் பணியில் விவசாய பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நிலக்கடலை பயிரிடப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் பெரம்பலூர்-எளம்பலூர் இடையேயான சாலையில் உப்போடை பகுதியில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நிலக்கடலை பயிருக்கு களை வெட்டும் வேலையில் விவசாய பெண் கூலித் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள்.
சீர்காழி நகர் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழி நகர் பகுதிக்கு உட்பட்ட பல பகுதிகளில் உள்ள சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் சுற்றித் திரிவதால் அடிக்கடி வாகனங்களுக்கு விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் காயம் அடைந்து விடுகின்றனர். சுற்றித் திரியும் மாடுகள் சாலையின் குறுக்கே திடீரென ஓடுகின்றது. மேலும் நாய்கள் வாகனங்களில் செல்பவர்களை விரட்டி சென்று கடிக்கின்றது. இதனால் வாகன ஓட்டிகள் […]
கொள்ளிடம் அருகே ரயில்வே கேட் பாதையில் கற்கள் சிதறிக் கிடப்பதால் வாகன ஓட்டிகள் அவதி பட்டு வருகின்றார்கள். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கொள்ளிடத்தில் இருந்து மங்கனாம்பட்டு, ஆச்சாள்புரம் என 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நெடுஞ்சாலை செல்கின்ற நிலையில் சாலையின் குறுக்கே ரயில்வே கேட் அமைந்திருக்கின்றது. மேலும் ரயில் நிலையமும் இருக்கின்றது. இந்த நிலையில் ரயில்வே கேட் பகுதியில் கற்கள் பெயர்ந்து இருப்பதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் அவ்வழியாக மருத்துவமனைக்கும் பழையாறு […]
வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் இருந்து வேன் ஒன்று சென்னை நோக்கி புறப்பட்டது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்பேட்டை பகுதியில் சென்ற போது திடீரென வேனின் டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவர்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சென்னை மாவட்டத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன்(51), பிரியங்கா(21), பிரேமலதா(48), சசிரேகா(50), பிரிவினிகா(15), மார்பிரேட்(52), மேனகா(60) உள்பட 10 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் தி.மு.க கட்சியானது தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்ததற்கு முக்கிய காரணம் மாவட்ட செயலாளர்கள் அனைத்து வசதிகளையும் தங்கள் குடும்பத்தினருக்கு மட்டுமே செய்து வந்ததுதான். இதனால் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கட்சி பயங்கர தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்து அமைச்சர் சக்ரபானியை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக அமைச்சர் செந்தில் பாலாஜியை முதல்வர் மாவட்ட பொறுப்பாளராக நியமித்தார். இவரின் கடின உழைப்பின் காரணமாக நடந்து முடிந்த […]
உளுந்து விலை அதிகரித்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். விருதுநகரில் வாரம் தோறும் அத்தியாவசிய பொருட்களின் விலைப்பட்டியலானது வெளியிடப்படும். அந்த வகையில் இந்த வாரமும் விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த வாரத்தை விட உளுந்தம் பருப்பின் விலை அதிக அளவில் உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். இதனையடுத்து அதிகரித்துள்ள பொருட்களின் விலைப்பட்டியல் குறித்து பார்க்கலாம். அதன்படி பட்டாணி பருப்பின் விலை 5,750 ரூபாய்க்கும், பர்மா எப்.ஏ.கியூ உருட்டு உளுந்தம் பருப்பு 9,100 ரூபாய்க்கும், உருட்டு உளுந்தம் பருப்பு 10,200 […]
சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலத்தானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 22 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று சத்துணவு ஆயா காமாட்சி விடுமுறையில் சென்றுள்ளார். இதனால் குட்டூர் பள்ளியில் சமையல் செய்து வந்த சத்துணவு ஊழியர் விஜயா 2 பள்ளி மாணவ மாணவிகளுக்கும் சத்துணவு பரிமாறியுள்ளார். அப்போது காரிமங்கலத்தானூர் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 7 மாணவர்கள் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். இதனை பார்த்து […]
மளிகை கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அப்பட்டுவிளை எழுந்தன் கோட்டு கோணத்தில் பகவத்குமார்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு ஆஷ்மி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் உடல் நலம் சரியில்லாத காரணத்தால் குமாரால் கடையை சரியாக நடத்த முடியவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் […]
நாமக்கலில் அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி செல்போன்களை அதிகாரிகளிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டமானது கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாண்டிமாதேவி தலைமை தாங்க மாநில துணைத்தலைவர் ஜெயக்கொடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசியபின் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு சார்பில் கொடுக்கப்பட்ட செல்போன்களை வரும் 9-ஆம் தேதி குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் […]
நாகையில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை நகராட்சி மன்றத் தலைவர் நேரில் சென்று ஆய்வு செய்தார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் நகர்மன்றத் தலைவர் மாரிமுத்து, துணைத் தலைவர் செந்தில்குமார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார்கள். நாகையில் நடந்துவரும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஏடிஎம் மகளிர் கல்லூரி சாலையில் சிறிய பாலத்துடன் கூடிய தார் சாலை அமைக்கும் பணி ஆகிய வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டார்கள். இதையடுத்து […]
வீட்டின் கதவை உடைத்து 4 பவுன் நகை மற்றும் 1 லட்சம் திருடிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தார்கள். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருச்செங்காட்டங்குடி வடக்கு தெருவைச் சேர்ந்த ராஜாங்கம் என்பவர் சென்ற 7-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் காரைக்கால் சென்று விட்டு மறுநாள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 4 பவுன் […]
தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு முகாம் தரங்கம்பாடி பேரூராட்சியில் நடைபெற்றது. தரங்கம்பாடி பேரூராட்சியில் தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு முகாமானது பொறையாறு 15வது வார்டில் நடைபெற்றது. இம்முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுகுணசங்கரி தலைமை தாங்கினார். பின் தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு பற்றிய இம்முகாமை தொடங்கி வைத்தார். இம்முகாமிற்க்கு சுகாதார ஆய்வாளர் இளங்கோ, செயல் அலுவலர் கமலக்கண்ணன், வார்டு உறுப்பினர்களான குமரவேல், ஜோன்ஸ் செல்லப்பா, ஆனந்தி, ரவி என பலர் பங்கேற்றனர்.
கூட்டுறவு மார்க்கெட்டிங் சொசைட்டியில் வியாபாரிகள் வராததால் பருத்தி விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் கூறைநாடு பெரியசாலியத் தெரு உள்ள கூட்டுறவு மார்க்கெட்டிங் சொசைட்டியில் தனியார் வியாபாரிகள் பருத்தி கொள்முதல் செய்வார்கள். இந்நிலையில் நேற்று விற்பனை கூட குடோனில் இடமில்லாததால் பருத்தி கொள்முதல் நடக்காது என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் விவசாயிகள் கூறைநாடு பெரியசாலிய தெருவில் இருக்கும் கூட்டுறவு மார்க்கெட்டிங் சொசைட்டிக்கு சென்று கேட்டபோது சனிக்கிழமை வியாபாரிகள் வந்தால் […]
இந்தியாவில் சமீப காலமாகவே பல்வேறு பகுதிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு மற்றும் சமஸ்கிருதத்தை முன்னிலைப்படுத்துவது போன்ற பல்வேறு விதமான சம்பவங்கள் அரசு விழாக்களில் நடந்து பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் மீண்டும் அப்படி ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. அதாவது புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிகள் சர்வதேச பொது சுகாதார பள்ளி திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்து […]
மின்சாரம் தாக்கி 3 வயது ஆண் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பி. என் பாளையம் புதூரில் கட்டிட மேஸ்திரியான சின்னத்தம்பி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 வயதுடைய யோகேஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பவித்ரா வேலை பார்க்கும் கோழிப்பண்ணையில் யோகேஷ் விளையாடி கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக குழந்தை மின் கம்பியை பிடித்துள்ளான். இதனால் மின்சாரம் தாக்கி யோகேஷ் சம்பவ […]
இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாகராஜன் நகரில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சௌந்தர்யா(21) என்ற மகள் இருந்துள்ளார். இவர் திருப்பத்தூரில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். சிறுவயதிலிருந்தே சௌந்தர்யாவுக்கு உடல்நலத்தில் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை நினைத்து மன உளைச்சலில் இருந்த சௌந்தர்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம் […]
கட்டுப்பாட்டை இழந்த லாரி கார் மீது மோதிய விபத்தில் 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள திருமுருக்கு என்ற இடத்தில் கார் மீது சரக்கு லாரி மோதியது. இதனையடுத்து கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். […]
வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை மிரட்டிய கணவரை காவல் துறையினர் கைது செய்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள காட்டுபாளையத்தில் திருநாவுக்கரசு(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருநாவுக்கரசு மகாலட்சுமி(25) என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் திருநாவுக்கரசு, அவரது தாயார் மணிமேகலை, உறவினர் ராஜேந்திரன் ஆகியோர் இணைந்து மகாலட்சுமியை வரதட்சணை கேட்டு மிரட்டியுள்ளனர். இதுகுறித்து மகாலட்சுமி கரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள ஓந்தாம்பட்டியில் விவசாயியான தர்மலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு என்ஜினீயரான நவீன்குமார்(24) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கோவையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலம் சரியில்லாததால் நவீன்குமார் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த வாலிபர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் காவல்துறையினருக்கு தகவல் […]
காணாமல் போன இளம்பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள கஸ்தூரி குரும்பப்பட்டி பகுதியில் ராமராஜன்(30) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி(25) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 6 வயதுடைய மகள் இருக்கிறார். இந்நிலையில் கலைச்செல்வி தான் வேலை பார்த்த வடமதுரை மில்லுக்கு சென்று பி.எப் பணத்தை வாங்கி வருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். ஆனால் நீண்ட நேரமாகியும் கலைச்செல்வி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் கலைச்செல்வியின் உறவினர்கள் அவரை […]
கண்டெய்னர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தம்பதியினர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பையூர்மேடு மாரியம்மன் கோவில் தெருவில் ராதாகிருஷ்ணன்- அம்சவள்ளி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். நேற்று தம்பதியினர் பக்கரிபாளையம் பகுதியில் இருக்கும் செங்கல் சூளையில் வேலையை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் விழுப்புரம்-செஞ்சி புறவழிச்சாலையில் முத்தாம்பாளையம் ஏரி அருகே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் சாலையோரம் நின்ற கண்டெய்னர் […]
மனைவியின் வளைகாப்புக்கு சென்ற வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னகவுண்டம்பாளையத்தில் பிரபு(31) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி(27) என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கர்ப்பிணியான புவனேஸ்வரிக்கு ஆமணக்கு நத்தத்தில் இருக்கும் அவரது பெற்றோர் வீட்டில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபு திடீரென உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உயிருக்கு […]
நீதிமன்ற வளாகத்திலேயே மனைவியை தாக்கிய நபரை கைது செய்யுமாறு நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள செம்பட்டி வடக்குத் தெருவில் விஜயலட்சுமி(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேல்முருகன்(56) என்ற கணவர் உள்ளார். கடந்த 12 ஆண்டுகளாக கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜெயலட்சுமி வேல்முருகனை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் ஜீவனாம்சம் கேட்டு ஜெயலட்சுமி அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி, வேல்முருகன் விஜயலட்சுமிக்கு மாதம் […]
ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள பூம்பிடாகை ஊராட்சி மன்ற தலைவராக நிரஞ்சனா(31) என்பவர் உள்ளார். இவருக்கு பெரியசாமி(40) என்ற கணவர் இருந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் வெளியே சென்ற பெரியசாமி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் வயல்பகுதியில் பெரியசாமியின் சடலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு […]
கீழே கிடந்த செல்போனை போலீசாரிடம் ஒப்படைத்த மாணவியை அனைவரும் பாராட்டியுள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஜெகஜீவன்ராம் தெரு பகுதியில் செல்போன் ஒன்று கீழே கிடந்துள்ளது. இதனை அதே பகுதியில் வசிக்கும் 6-ஆம் வகுப்பு படிக்கும் கௌசல்யா என்ற மாணவி பார்த்துள்ளார். இந்நிலையில் மாணவி அந்த செல்போனை எடுத்து காரியாபட்டி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். நேர்மையாக செயல்பட்ட மாணவியை காரியாபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் தலைமையிலான காவல்துறையினர் பாராட்டியுள்ளனர். இதனை அடுத்து செல்போன் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சின்னக்காமன்பட்டியில் பஞ்சவர்ணம்(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பன்குளத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவரை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். […]
வாலிபரை உல்லாசத்திற்கு அழைத்து சென்று பணம் பறித்த பெண்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள வடபழனியில் இருக்கும் விடுதியில் கடந்த 2 வருடமாக 27 வயதுடைய வாலிபர் தங்கியுள்ளார். இந்த வாலிபர் சமையல் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சமையல் வேலையை முடித்துவிட்டு வாலிபர் வடபழனி செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது 35 மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஆபாச சைகை காட்டியும், ஆசை வார்த்தைகள் கூறியும் வாலிபரை […]
கோத்தகிரி அருகே உள்ள விநாயகர் சிலையின் கண் திறந்ததாக தகவல் பரவியதால் கோவிலுக்கு பக்தர்கள் குவிந்தனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரியிலிருந்து குன்னூர் செல்லும் சாலையில் பெட்டட்டி சுங்கம் கிராமம் இருக்கின்றது. இந்த கிராமத்தில் விநாயகர் கோவில் உள்ள நிலையில் நேற்று காலை வழக்கம்போல் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின் சுவாமிக்கு தீபாராதனை நடந்த பொழுது விநாயகர் சிலையின் கண் திறந்து மூடியதாக சொல்லப்படுகின்றது. சில […]
பந்தலூர் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகள் முற்றுகையிட்டு பலாப் பழங்களை தின்றது. நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் தாலுகாவுக்கு உட்பட்ட மூலக்கடை, தட்டாம்பாறை, செம்பக்கொல்லி போன்ற பகுதிகளில் உள்ள தோட்டங்களில் வாழை, தென்னை, பாக்கு மரங்கள் இருக்கின்றது. இந்தத் தோட்டங்களில் காட்டு யானைகள் அடிக்கடி புகுந்து நாசம் செய்து வருகின்ற நிலையில் நேற்று முன்தினம் இரவு 3 காட்டு யானைகள் மூலக்கடை பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் புகுந்தது. அப்போது அங்கிருந்த பலா மரங்களில் இருந்த […]
மசினகுடி பகுதியில் உள்ள மதுக்கடைகளில் காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறப் படுகின்றதா? என ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார். நீலகிரி மாவட்டம் பிரபல சுற்றுலாத் தலமாக இருந்து வருகின்றது. இதனால் மாவட்டத்தில் இயற்கை அழகை பாதுகாப்பதற்காக பல்வேறு விதிமுறைகள் நடைமுறையில் இருந்து வருகின்றது. இந்நிலையில் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மதுக்கடைகளில் விற்பனை செய்யும் மதுபாட்டில்கள் திரும்ப பெறப்படும் நடைமுறையானது அமலில் இருக்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர் திடீரென நேரில் சென்று […]
தொழிற்சாலைகள் தேயிலையை கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் அறுவடி செய்த தேயிலையை கீழே கொட்டி வருகின்றார்கள். நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் தான் பிரதான தொழிலாக உள்ள நிலையில் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் இருக்கின்றனர். கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தற்போது தேயிலை செடிகளில் குழந்தைகள் துளிர்விட்டு இருக்கின்றது. இதனால் தேயிலை மகசூல் அதிகரித்ததன் காரணமாக சென்ற மாதத்தை விட தற்போது தேயிலை அதிகமாக பறிக்கப்பட்டு வருகின்றது. […]
திருவாடானையில் ஒருங்கிணைந்த மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானையில் ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாமானது நடந்தது. இந்த முகாமில் மாற்று திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, தனித்துவ அடையாள அட்டைக்கான விண்ணப்பங்கள், மாதாந்திர உதவித்தொகை, வங்கி கடன்கள், வேலை வாய்ப்பு போன்ற அரசின் சலுகைகளை மாற்றுத்திறனாளிகள் பெறுவதற்கான விண்ணப்பங்கள், மத்திய அரசு அலிம்கோ நிறுவனத்தின் மூலமாக செயற்கை கால், ஊன்றுகோல், மூன்று சக்கர மோட்டார், சைக்கிள் வீல் சேர், காது வலி […]
மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையின் வளாகத்தில் நடிகர் சூரி தனியார் உணவகத்தை கட்டியுள்ளார். இந்த உணவகத்தை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூரி, மேயர் இந்திராணி, டீன் ரத்தினவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் சூரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் விடுதலை படம் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது என்றும், இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளார் என்றும் கூறினார். […]
தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் இருந்து கூடுதலாக சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி மதுரையில் இருந்து காலை 11:30 மணிக்கு புறப்படும் ரயில் மாலை 3:20 மணிக்கு செங்கோட்டையை சென்றடையும். இந்த ரயில் செங்கோட்டையில் இருந்து மறுநாள் காலை 11:50 மணிக்கு புறப்பட்டு மாலை 3:35 மணிக்கு மதுரையை வந்தடையும். இந்த ரயில் தென்காசி, கடையநல்லூர், பாம்பகோவில் சந்தை, சங்கரன்கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, […]
அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள கோணம்பட்டி விலக்கு அருகில் கடந்த 6 மாதமாக மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி அப்பகுதியில் இருக்கும் கோவில்களிலும், மரத்தடியிலும் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மூதாட்டி சிவகாசி-சாத்தூர் சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள டி.என்.பாளையம் வாய்க்கால் தோட்டத்தில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவசாயியான சிதம்பரநாதன்(42) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று சிதம்பரநாதன் வீட்டிலிருந்த பழைய ரேடியோ ஒன்றை பழுது பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சிதம்பரநாதன் தூக்கி வீசப்பட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மின் இணைப்பை துண்டித்தனர். அதற்குள் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக […]
பெங்களூரு இன்டர்சிட்டி ரயில் வழித்தடம் வருகின்ற 27-ஆம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஓமலூர் – மேட்டூர் அணை பகுதியில் ரயில் தண்டவாள பராமரிப்பு பணி நடந்து வருவதால் வருகின்ற 27ஆம் தேதி பெங்களூர் இன்டர்சிட்டி ரயில் வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டு எர்ணாகுளம் கே.எஸ் பெங்களூர் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் 9:10 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து கிளம்பி சேலம், திருப்பத்தூர், பங்காருபேட்டை, பையப்பனகள்ளி வழியாக மாற்று தடத்தில் இயக்கப்பட உள்ளது. […]
சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்துத்தேர்வில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலமாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்துத் தேர்வு நடைபெற இருக்கின்றது. இத்தேர்விற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் 6965 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்காக மாவட்டத்தில் 7 தேர்வு மையங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தேர்வு மையத்தில் போலீசார் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய துறைமுக கடற்கரையில் கடல் சாகச விளையாட்டுகள் நடத்துவதற்கான இடங்களை சுற்றுலா துறை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் கடல் சாகச விளையாட்டுகள் நடத்துவதற்கான இடங்களை தமிழ்நாடு சுற்றுலாத் துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி சென்ற வெள்ளிக்கிழமை அன்று ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடியில் இருக்கும் முள்ளக்காடு புதிய துறைமுக கடற்கரையில் சுற்றுலாத்துறை, கலை பண்பாடு மற்றும் இந்து அறநிலையத் துறை இயக்குனர் சந்திரமோகன்சென்ற சில மாதங்களுக்கு முன்பாக ஆய்வு மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செய்திக் குறிப்பில் வேளாண் எந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயக்கப்படும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் மையத்தை மானியத்தில் அமைப்பதற்கான புதிய திட்டம் செயல்படுத்துவதாக கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தமிழ் அரசின் வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் பழுது நீக்கும் மையத்தை இப்பொழுது மானியத்தில் […]
பெருந்திரள் துரித போக்குவரத்திற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. திருச்சி மாவட்டத்தில் பெருந்திரள் துரித போக்குவரத்திற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டமானது மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வைத்து நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சித்திக் தலைமை தாங்கினார். இவர் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் பேசியதாவது, சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவனமானது மக்களுக்காக […]
வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பை தீயணைப்பு துறையினர் பத்திரமாக பிடித்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். அவரது வீட்டிற்குள் நேற்று நல்ல பாம்பு ஒன்று புகுந்து அலமாரியில் பதுங்கி இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அலறி அடித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே ஓடிவந்தனர். இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நல்ல பாம்பை பத்திரமாக பிடித்தனர். இதனையடுத்து வனத்துறையினரிடம் […]
மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள செமினிபட்டி மேற்கு தெருவில் தியாகராஜன்(52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தியாகராஜன் டீ வாங்குவதற்காக மதுரை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் குட்லாடம்பட்டி மேம்பாலம் அருகே மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது தியாகராஜனின் மொபெட் மீது பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த தியாகராஜன் சம்பவ […]
வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி பகுதியில் ஓட்டுநரான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு வரதட்சணை கொடுமையால் சசிகலா தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், அவரது தாயார் தங்கதாய், தந்தை ராமன், சகோதரி மாலதி, மாலதியின் கணவர் கிங், […]
யானைகள் கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நொகனூர் காப்பு காட்டில் முகாமிட்டுள்ள 3 காட்டு யானைகள் இரவு நேரத்தில் கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்கிறது. நேற்று அதிகாலை அகலக்கோட்டை கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானைகள் நர்சரி பண்ணைக்குள் நுழைந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள செடிகளை நாசப்படுத்தியுள்ளது. பின்னர் காட்டு யானைகள் ஜவளகிரி சாலையை கடந்து சென்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதனை அடுத்து வனத்துறையினர் […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள திருமாநிலையூர் பகுதியில் மேகநாதன்(63) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் காய்கறி கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் மேகநாதன் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியை மிரட்டி 6 மாதமாக பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்து கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் கரூர் அனைத்து […]