தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் கூலி தொழிலாளியான விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு உஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த விஜயகுமார் தனது மனைவி மற்றும் உறவினர்களிடம் இது குறித்து கூறி கவலையில் இருந்துள்ளார். அவருக்கு குடும்பத்தினர் ஆறுதல் கூறி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் விஜயகுமார் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து […]
Tag: மாவட்ட செய்திகள்
ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டிய 2 வாலிபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ரஸ்தாகாடு பகுதியில் பால்ராஜா(63) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஆவார். நேற்று முன்தினம் பால்ராஜ் மோட்டார் சைக்கிளில் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்திற்கு சென்றுள்ளார். அங்கு மீன்களை வாங்கி விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் பால்குடம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது லீபுரம் பகுதியை சேர்ந்த ராபர்ட்சிங்(22), பெலிக்ஸ்(27) ஆகியோர் மோட்டார் சைக்கிளை வழிமறித்து மறைத்து வைத்திருந்த […]
தாய்-மகள் இருவரையும் கொலை செய்த மீன்பிடி தொழிலாளியை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ராஜாக்கமங்கலம் பகுதியில் சகாயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவுலின் மேரி(48) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஆலன்(25), ஆரோன்(19) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். தற்போது சகாயராஜ் ஆலனும் வெளிநாட்டில் தங்கி வேலைப்பார்த்து வருகின்றனர். ஆரோன் சென்னையில் இருக்கும் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் பவுலின் மேரிக்கு துணையாக அவரது தாய் திரேசம்மாள்(90) உடன் இருந்துள்ளார். கடந்த […]
மாணவியை கர்ப்பமாக்கிய மாணவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமிக்கும், 12-ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்நிலையில் மாணவியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதால் அவரது தாய் மகளை […]
சாப்பாடு வாங்கி வந்த தகராறில் பிளஸ் 1 மாணவனை கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையத்தில் இருக்கும் கல்லறைத் தோட்டத்தை சேர்ந்த ஸ்டீபன் என்பவரின் மகன் மாதவன். இவர் பிளஸ்1 தேர்வு எழுதிய நிலையில் சென்ற 18-ஆம் தேதி வீட்டில் இருந்து சென்ற மாதவன் திரும்பி வீட்டிற்கு வராததால் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் செய்ததையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தார்கள். இதனிடையே சென்ற 20ஆம் தேதி கல்லறைத் […]
மது குடிப்பதற்கு பணம் தர மறுத்த தாய்மாமனை கல்லால் அடித்துக் கொன்ற மருமகனை போலீஸார் கைது செய்தனர். தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம் அருகே இருக்கும் கோவிந்தன்பட்டியைச் சேர்ந்தவர் மரியதாஸ். இவர் கட்டிட தொழிலாளி. இவரின் தங்கை செல்வி மற்றும் அவருடைய மகன் ஜெயக்குமார் (24). இவர்கள் இருவரும் மரியதாஸின் வீட்டிலேயே வசித்து வருகின்றனர். இந்நிலையில் சென்ற 12-ஆம் தேதி இரவு வீட்டில் மரியதாஸ் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு […]
படித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடன் மானியம் பெறலாம் என ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் தொழில் மையம் மூலமாக இளைஞர்களுக்கு 3 கோடி கடன் மானியம் வழங்கப்பட்டது. இதுகுறித்து ஆட்சியர் முரளிதரன் செய்திக் குறிப்பை வெளியிட்டிருக்கின்றார். அதில் அவர் கூறியுள்ளதாவது, படித்து வேலை இல்லாமல் உள்ள இளைஞர்களுக்கு தொழில் தொடங்கவும் தொழில்முனைவோர்களாக மாற்ற தமிழக அரசு பல்வேறு திட்டங்களை […]
காட்டுயானைகள் பழங்குடியினர் கிராமத்தில் முகாமிட்டு இருப்பதால் அவற்றை விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே இருக்கும் குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள பழங்குடியின கிராமத்தில் விவசாயிகள் பலா மரங்களை பயிரிட்டுள்ளனர். மேலும் ஊடுபயிராக காபி செடிகளையும் பயிரிட்டுள்ளனர். தற்பொழுது பலா மரங்களில் காய்கள் காய்த்து குலுங்கியும் காபி செடிகளில் பழங்கள் பழுத்தும் இருக்கின்றது. இதனால் காட்டு யானை கூட்டம் பழங்களை சாப்பிடுவதற்காக குஞ்சப்பனை, மாமரம், கோழிகரை உள்ளிட்ட பகுதிகளில் […]
சிறு தேயிலை விவசாயிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகின்றது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி தாலுகாவுக்கு உட்பட்ட கட்டபெட்டு அருகே இருக்கும் ஒன்னதலை கிராமத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கான விழிப்புணர்வு கூட்டமானது தலைவர் லிங்கனின் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற தேயிலை வாரிய உதவி இயக்குனர் செல்வம் பேசியதாவது, விவசாயிகளுக்கு மானிய விலையில் தேயிலை வாரியம் மூலமாக கவாத்து வெட்டும் இயந்திரம், இலை பறிக்கும் இயந்திரம் ஆகியவை வழங்கப்படுகின்ற நிலையி ல் சுய உதவிக்குழுவினர் அதை வாங்கி பயன்பெற […]
சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தளவாய்பட்டி கிராமத்தில் கண்மணி என்பவர் வசித்துவருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சௌமியா(16) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி எட்டாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு கடந்த 2 ஆண்டுகளாக வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் கண்மணி வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த சௌமியா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து வீட்டுக்கு திரும்பி வந்த கண்மணி தனது மகள் […]
லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள உருக்கு ஆலையில் இருந்து ஸ்டீல் தகடு ஏற்றிக்கொண்டு சத்தீஸ்கர் மாநிலம் நோக்கி லாரி ஒன்று சென்றது. இந்த லாரியை ரமேஷ்(30) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். மேலும் கிளீனராக மணிகண்டன்(24) என்பவர் உடன் இருந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை கலைஞர் நகர் அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்தது. இந்த […]
தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பிச்சம்பாளையம் கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரூபாவதி(20), தாமரைச்செல்வி(17) என்ற 2 மகள்களும், நிஷாந்த்(16) என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் தாமரைச்செல்வி வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பும், நிஷாந்த் 10-ஆம் வகுப்பும் படித்து வந்துள்ளார். இந்நிலையில் பொதுத் தேர்வு முடிவுகள் வந்தவுடன் தங்களுக்கு தெரிவிக்குமாறு கூறிவிட்டு […]
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தகடி கிராமத்தில் ராமச்சந்திரன்(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராமச்சந்திரன் அப்பகுதியில் இருக்கும் வயலில் வேலை பார்த்து கொண்டிருந்தார். இதனை அடுத்து நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் ராமச்சந்திரனை தேடி சென்றனர். அப்போது மதியழகன் என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தில் ராமச்சந்திரன் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்ததை பார்த்து […]
மோட்டார் சைக்கிள் மீது தனியார் பள்ளி பேருந்து மோதிய விபத்தில் பா.ம.க இளைஞரணி நிர்வாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பு. கிள்ளனூர் கிராமத்தில் விக்னேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பா.ம.க இளைஞரணி நிர்வாகியாக உள்ளார். இந்நிலையில் விக்னேஷ் அதே பகுதியில் வசிக்கும் மணிகண்டன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கிளியூர் கிராமத்தில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். அப்போது எதிரே வேகமாக வந்த தனியார் பள்ளி பேருந்து மோட்டார் […]
மசாலா நிறுவன உரிமையாளரிடம் இருந்து 2 1/4 லட்ச ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பழையபாளையம் பகுதியில் ஸ்ரீ வர்ஷன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்மபிரியா(45) என்ற மனைவி உள்ளார். இவர் மசாலா நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் மூலப்பொருட்கள் தேவையான மிளகு வாங்குவதற்கு பத்மபிரியா ஆன்லைனில் பார்த்துள்ளார். அப்போது ஒரு நிறுவனத்தில் மிளகு இருப்பதாக விளம்பரம் இருந்துள்ளது. அதனைப் பார்த்து பத்மபிரியா 1 டன் மிளக்கிற்கு […]
தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செங்காடு மாதா கோவில் தெருவில் அமலோபர்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோமன்ராஜ்(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் திண்டிவனத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜோமன்ராஜ் வணிக கணிதம் பாடத்தில் தோல்வி அடைந்ததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். பின்னர் வீட்டிற்கு […]
பிறந்தநாள் கொண்டாடிய நெல்சனுக்கு இணையத்தில் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து கூறியுள்ளார் விக்னேஷ் சிவன். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் விக்னேஷ் சிவன். இவர் ஏழு வருடங்களாக நயன்தாராவை காதலித்து வந்த நிலையில் சென்ற ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தனது நெருங்கிய நண்பர் நெல்சன் நேற்று பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து விக்னேஷ் சிவன் வாழ்த்து கூறியுள்ளார். Happy […]
அரக்கோணம் அருகே மின்னல் நோக்கி வந்த தனியார் பேருந்து பள்ளத்தில் சிக்கியதால் ஒரு மணி நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணத்தை அடுத்த இருக்கும் மின்னல் கிராமத்தில் நெமிலி செல்லும் சாலையில் குறுகலாக உள்ள பகுதியின் வழியே பேருந்துகள், வாகனங்கள் சென்று வருகின்றன. சாலையின் குறுக்கே மழைநீர் செல்வதற்காக சரிவான சாலை அமைக்கப் பட்டிருக்கின்றது. இந்த இடத்தில் அடிக்கடி வாகனங்கள் சிக்கி விபத்துக்குள்ளானதாக பொதுமக்கள் கூறுகின்றனர். சென்ற சில நாட்களாக மழை பெய்வதால் […]
கண் பார்வை இழந்த மாணவி பிளஸ் 2 தேர்வில் 443 மதிப்பெண்கள் பெற்றதால் காவல் நிலையத்தில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட எல்லைபாறையை சேர்ந்த மாணவி யோகலட்சுமி. இவர் உடல்நலக்குறைவால் கண் பார்வை இழந்தார். இவருக்கு நிதி வழங்கக் கோரி சட்டசபையில் வலியுறுத்தப்பட்டு பின் அமைச்சர்கள் பலர் மாணவியை நேரில் சென்று பார்த்தார்கள். இதையடுத்து மாணவியின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் ஆர்.காந்தி மாணவியின் மேற்படிப்புக்கு உதவி செய்வதாகக் கூறினார். […]
அரக்கோணம் அருகே ஓட்டு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் மூதாட்டி உயிரிழந்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அரக்கோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சென்ற சில நாட்களாகவே மழை பெய்து வருகின்ற நிலையில் அரக்கோணத்தை அடுத்து இருக்கும் குருவராஜப்பேட்டை கிராமத்தில் பெய்த மழையால் அலமேலு(90) என்ற மூதாட்டியின் ஓட்டு வீடு மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால் மூதாட்டி உயிரிழந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து விரைந்து வந்த தாசில்தார், வருவாய் துறையினர், போலீஸார், தீயணைப்புத் துறையினர் […]
ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டிடம் சினிமா நடிகர் ஹலோ கந்தசாமி புகார் ஒன்றை கொடுத்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கமுதி அருகே இருக்கும் பெருநாழியை சேர்ந்தவர் சினிமா நடிகர் ஹலோ கந்தசாமி. இவர் தனது மனைவி சந்தானலட்சுமி சார்பாக ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சுப்பிரண்டிடம் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது, சென்ற 2009ம் வருடம் முதல் 16 பேருடன் இணைந்து பெருநாழியில் மகளிர் மன்றம் ஆரம்பித்து நடத்தி வந்த நிலையில் மூன்று லட்சம் ரூபாயை வங்கி கடனாக […]
கீழக்கரையை சேர்ந்த மாணவன் யோகாவில் தண்ணீரில் மிதந்து சாதனை படைத்து அசத்தியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கீழக்கரையில் இருக்கும் வடக்கு தெருவில் வசித்து வரும் இம்பாலா சுல்தான் என்பவரின் மகன் இன்சாப் முகமது. சிறுவன் கொடைக்கானலில் இருக்கும் தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வருகின்ற நிலையில் தண்ணீரில் மிதந்து ரெக்கார்டு புக் ஆஃப் இந்தியா புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளார். முன்னதாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிறுவன் 60 நிமிடம் தண்ணீரில் மிதந்து சாதனைபடைத்த நிலையில் […]
சொத்து தகராறில் மகன் தந்தையை அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கண்டிசாலை பகுதியில் பொங்கியான்(70) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகராஜ் என்ற மகனும், ஒரு மகளும் இருந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மகள் இறந்து விட்டதால் பேரனான மகேஷ் என்பவருடன் பொங்கியான் வசித்து வருகிறார். இந்நிலையில் சொத்துப் பிரச்சினை காரணமாக பொங்கியானுக்கும், நாகராஜூக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நாகராஜ் தனது தந்தையை சந்தித்து சொத்தை பிரித்து […]
பணி நேரத்தில் சுற்றுலா சென்ற தலைமை மருத்துவர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் தினகர் என்பவர் தலைமை மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்த மருத்துவமனையில் பெண் டாக்டர் சண்முகவடிவு உள்பட 4 உதவி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தினகர் மற்றும் சண்முகவடிவு ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது மருத்துவ பயிற்சி முடித்த தினகரின் மகன் நோயாளிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை அன்று […]
லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் ஓட்டுநர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் சுரேஷ்(50) என்பவர் மேற்பார்வை தலைமை என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இதேபோல் நெடுஞ்சாலைத்துறையில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பச்சையப்பன்(46) என்பவர் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பணி நிமித்தமாக சுரேஷ் சேலத்தில் இருந்து கோவைக்கு காரில் சென்றுள்ளார். இந்த காரை பச்சையப்பன் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தோடு […]
கல்லூரி மாணவர் எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மூனாண்டிப்பட்டியில் முனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு துளசிமணி(20) என்ற மகன் இருந்துள்ளார். இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் தனியார் கலைக் கல்லூரியில் 3-ஆம் அண்டு படித்து வந்துள்ளார். கடந்த 13-ஆம் தேதி துளசிமணி கல்லூரிக்கு காலதாமதமாக சென்றதாக தெரிகிறது. இதனால் கல்லூரி நிர்வாகத்தினர் துளசிமணியின் அடையாள அட்டையை வாங்கிக்கொண்டு பெற்றோரை அழைத்து வருமாறு கூறியுள்ளனர். இதனால் […]
ரயிலில் அடிபட்டு 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்கிரவாண்டி மேட்டு தெருவில் விஜயகுமார்(48) என்பவர் வசித்து வருகிறார். இவர் ம.தி.மு.க நகர செயலாளர் ஆவார். இவருக்கு அஸ்வின் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அஸ்வின் தேர்ச்சி அடைந்தார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் அப்பகுதியில் இருக்கும் தண்டவாளத்தில் அஸ்வின் சடலமாக […]
பலாப்பழம் சாப்பிட்ட தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள ஆலம்பாடி கிராமத்தில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரணி என்ற மனைவியும், இனியா என்ற மகளும், பரணிதரன் என்ற மகனும் இருந்துள்ளனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பாக பரணி தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் உணவு அருந்திவிட்டு பலாப்பழம் சாப்பிட்டு குளிர்பானம் குடித்துள்ளார். அதன்பின் சிறிது நேரத்தில் 3 பேருக்கும் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் 3 […]
தமிழக-கேரள எல்லையில் உள்ள சோதனை சாவடியில் நுழைவு வரி வசூலிக்கும் ரசீது வழங்கப்படாததால் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி அடைந்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் பிரபல சுற்றுலா தளமாக இருக்கின்றது. இங்கே கேரளா கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலத்தில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் கேரளா, கர்நாடகம், தமிழகம் இணையும் பகுதி என்பதால் சோதனை சாவடி அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றது. மாநில எல்லைகளில் நுழைவு வரியானது வசூலிக்கப்படுகிறது. சென்றமாதம் நீலகிரியில் மலர் கண்காட்சிகள், கோடை விழா […]
மஞ்சூர்- கோவை இடையேயான சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தை காட்டு யானைகள் வழி மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மஞ்சூரிலிருந்து முள்ளி வழியாக கோவை மாவட்டத்தில் உள்ள காரமடை சாலை செல்கின்ற நிலையில் சமீபகாலமாக சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து இருக்கிறது. இதன் அருகே வனப்பகுதியில் இருக்கின்றது. இந்நிலையில் கோவையில் இருந்து மஞ்சூர் அருகே நேற்று மாலை அரசு பேருந்து 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த பொழுது 5 காட்டு யானைகள் […]
ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் பிளக்ஸ் பேனரில் கோரிக்கை எழுதி வந்ததால் பரபரப்பு நிலவியது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள செல்லம்பட்டி அருகே இருக்கும் மேற்கு பகுதியை சேர்ந்த காந்தியவாதி ரமேஷ் என்பவர் அகிம்சா சோசலிஸ்ட் கட்சியின் நிறுவன தலைவராக பணியாற்றி வருகின்றார். இவர் செல்லம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு திட்டத்தில் ஊழல்களும் முறைகேடுகளும் நடந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று ஏற்கனவே மனு கொடுத்த நிலையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் அதிகாரிகளின் […]
அரசு மருத்துவமனை நுழைவாயிலில் உள்ள இரும்பு கம்பிகிடையே பெண்ணின் கால் சிக்கியதை அடுத்து நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் மீட்டார்கள். காரைக்காலைச் சேர்ந்த உஷாராணி என்பவர் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று வரும் தனது உறவினரை பார்ப்பதற்காக வந்தபொழுது மருத்துவமனையின் நுழைவாயிலில் இருக்கும் இரும்பு கம்பிகளுக்கு இடையே அவரின் கால் மாட்டிக்கொண்டது. அவர் எடுக்க முயற்சித்தும் அவரின் காலை எடுக்க முடியவில்லை. இதையடுத்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து விரைந்து […]
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி யோகாவில் பல பதக்கங்களை குவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வேட்டங்குடி கிராமத்தை சேர்ந்த 18 வயது மாணவி சுபானு. இவர் சிறுவயதில் இருந்தே யோகா மீது ஆர்வம் கொண்டார். இவர் சிங்கப்பூர், அமெரிக்கா, மலேசியா, ஆப்பிரிக்கா, தாய்லாந்து உள்ளிட்ட பல வெளிநாடுகளுக்கு சென்றும் யோகாவில் சாதனை படைத்திருக்கிறார். இந்நிலையில் மாணவியின் தந்தை கொரோனோவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதனால் குடும்பம் சோகத்தில் மூழ்கியது. இருப்பினும் மாணவி விடாமுயற்சியுடன் சாதனை படைக்க வேண்டும் என […]
உயிரோடு இருக்கும் மூதாட்டிக்கு இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வெங்கந்தூர் கிராமத்தில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது பாட்டி குப்பச்சி(89) என்பவருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனக்கு மோகன் என்ற தம்பி உள்ளார். அவர் குப்பச்சி பாட்டி உயிருடன் இருக்கும் போதே கடந்த 2008-ஆம் ஆண்டு அவர் இறந்துவிட்டதாக கூறி போலியான இறப்பு சான்றிதழை தயாரித்துள்ளார். இதனை அடுத்து […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சுந்தரராஜபுரத்தில் என்ஜினீயரான ராஜேஷ் குமார்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் […]
மருமகள் பிரிந்து சென்றதால் மாமியார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் மாரியம்மாள்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் பூ வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு ரேவதி என்ற மருமகள் உள்ளார். இந்நிலையில் மாரியம்மாளும், ரேவதியும் இணைந்து குழு மூலம் கடன் வாங்கியுள்ளனர். ஆனால் வியாபாரத்தில் போதிய வருமானம் இல்லாததால் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்க இயலவில்லை. இதனால் ரேவதி தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் மருமகள் […]
8 வயது சிறுமி ஆணி பலகையில் யோகா செய்து அசத்தியுள்ளார். தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலத்தில் நஸ்ருதீன்- ஜலீலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 4-ஆம் வகுப்பு படிக்கும் ஷாஜிதா ஸைனப் என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ரவணசமுத்திரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து மத நல்லிணக்கம் மற்றும் வேளாண்மை செழிக்க வேண்டி 8 வயது சிறுமி ஷாஜிதா ஸைனப் யோகா செய்துள்ளார். இந்த சிறுமி தேசியக்கொடியுடன் உடலில் தீபம் ஏந்தி, ஆணி பலகையில் யோகா செய்துள்ளார். இந்த […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் வங்கி ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குறிச்சிகுளம் பகுதியில் சங்கு(44) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 17-ஆம் தேதி சங்கு மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். அப்போது நெல்லை ரகுமத் நகர் அருகே வேகமாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் […]
புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தென்காசி மாவட்டத்திலுள்ள பாவூர்சத்திரம் அருகே நெல்லை-தென்காசி மெயின் ரோட்டில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கு அருகில் நடராஜன் என்பவர் பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளார். இந்த கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேலும் நடராஜன் மீது பாவூர்சத்திரம் காவல்துறையினர் 7 முறை வழக்குபதிந்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடராஜனின் […]
காவலாளியை தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பொய்லான் நகரில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாளையங்கோட்டை சித்தா மருத்துவமனையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பாஸ்கர் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்த போது திடீரென அங்கு வந்த சுப்பையா என்பவர் அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் சுப்பையா பாஸ்கரை செங்கல்லால் தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த பாஸ்கர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த […]
கார் மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் குருநாதன்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெல்லை வண்ணார்பேட்டை ரவுண்டானா பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் குருநாதன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த குருநாதனை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று குருநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். […]
வேன் ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை பகுதியில் தங்கராஜ்(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேன் ஓட்டுனர் ஆவார். இவருக்கு அனிதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அனிதா தங்கராஜை விட்டு பிரிந்து சென்றார். கடந்த 18-ஆம் தேதி தங்கராஜ் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு சவாரி சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிய போது அனிதா […]
தஞ்சை பெரிய கோவில் கோட்டை சுவரில் விளம்பரம் செய்ய தடை விதித்து தொல்லியல் துறை அறிவிப்பு பலகை வைத்துள்ளது. தஞ்சையில் உள்ள புகழ் வாய்ந்த தஞ்சை பெரிய கோவில் கிபி 1010 வருடம் கட்டப்பட்டது. கட்டிடக்கலைக்கு பெயர் போன இக்கோவில் தற்போது மத்திய அரசு தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கின்றது. இந்நிலையில் கோவில் சுவற்றில் பல்வேறு சுவரொட்டிகள் ஓட்டுவது விளம்பர பேனர்கள் கட்டுவது போன்ற செயல்கள் நடந்து வந்த நிலையில் தொல்லியல் துறை கோட்டைச் சுவரில் விளம்பரங்கள் […]
நம்பியூர் பகுதியில் பூட்டியிருந்த அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள நம்பியூரில் இருக்கும் காந்திபுரம் பகுதியில் வசித்து வரும் வேணுகோபால் என்பவர் அரசு போக்குவரத்து பணிமனையில் மெக்கானிக்காக வேலை செய்து வருகின்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் தனது வீட்டை பூட்டி விட்டு திருப்பூரில் இருக்கும் தனது மற்றொரு வீட்டிற்கு குடும்பத்துடன் சென்று விட்டு நேற்று காலை வந்து பார்த்த பொழுது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து […]
கொங்கர்பாளையம் வனப்பகுதியில் ஒரு நாட்டுத் துப்பாக்கி இருந்ததை அடுத்து போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். ஈரோடு மாவட்டத்தில் உள்ள டி.என்.பாளையத்தை அடுத்திருக்கும் கொங்கர்பாளையம் வனப்பகுதியில் உள்ள வினோபா நகர் ஆவின் பால் கொள்முதல் நிலையத்தின் அருகில் ஒரு நாட்டு துப்பாக்கி இருப்பதாக அப்பகுதி மக்கள் காவலர்களுக்கு நேற்று தகவல் கொடுத்ததை அடுத்து போலீசார் அங்கு வந்து பார்த்த பொழுது கீழே ஒரு நாட்டு துப்பாக்கி இருந்திருக்கிறது. இதையடுத்து போலீசார் நாட்டு துப்பாக்கியை கைபற்றிய காவல் நிலையத்திற்கு […]
ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசலை சேர்ந்த தமிழரசன் என்பவர் ஈரோடு மாநகராட்சி பாதாள சாக்கடை திட்ட பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரரிடம் தொழிலாளியாக வேலை செய்து வருகின்ற நிலையில் இவர் ஈரோடு நாச்சியப்பா வீதியில் சக தொழிலாளர்களுடன் தங்கியிருக்கின்றனர். இந்த நிலையில் சென்ற வாரம் ஒப்பந்ததாரரின் கணக்காளருக்கும் இவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக வாக்குவாதமும் ஏற்பட்டதையடுத்து கைகலப்பில் […]
மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்த பிறகும் ஈரோட்டில் மீன்களின் விலை குறையாமல் இருக்கின்றது. சென்ற இரண்டு மாதங்கள் மீன்பிடி தடைக்காலம் இருந்ததால் மீன்களின் வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் மீன்களின் விலை உயர்ந்து ஒரு கிலோவுக்கு 250 முதல் 300 வரை விலை உயர்ந்தது. இந்நிலையில் தற்போது மீன்பிடி தடை காலம் முடிவடைந்து இருக்கின்றது. ஆனால் ஈரோட்டுக்கு குறைந்த அளவிலான மீன்களே வருவதால் மீன்களின் விலை குறையாமல் நேற்று விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் ஒரு கிலோ வஞ்சிரம் மீன் […]
இளம்பெண்ணை கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அன்னூர் அருகே கரியாம்பாளையம் மசக்கவுண்டன்புதூர் பகுதியில் சண்முக சுந்தரம் (38) என்பவர் வசித்து வருகிறார். இதே பகுதியில் வசிக்கும் 27 வயது இளம்பெண்ணை சண்முகசுந்தரம் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சண்முகசுந்தரம் தன்னுடைய காதலை அந்த பெண்ணிடம் சொல்ல இளம்பெண் அதற்கு மறுப்பு தெரிவித்து தன்னுடைய பெற்றோரிடம் சென்று பெண் கேட்குமாறு கூறியுள்ளார். உடனே சண்முக சுந்தரமும் இளம் பெண்ணின் பெற்றோரிடம் பெண் கேட்டுள்ளார். […]
மாநில அளவிலான வூசு போட்டியில் ஏராளமான சிறுவர்-சிறுமிகள் கலந்து கொண்டுள்ளனர். மாநில அளவிலான சப் ஜூனியர் வூசு போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டி தமிழ்நாடு வூசு சங்கம் சார்பில் நடைபெற்றது. இப்போட்டியானது கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஈச்சனாரி பகுதியில் நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட 28 மாவட்டங்களைச் சேர்ந்த சிறுவர்-சிறுமிகள் கலந்து கொண்டனர். இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட சிறுவர்-சிறுமிகள் கலந்து கொண்டனர். இதில் டாவுலு, சான்சூ போன்ற 2 பிரிவுகளில் […]
வரவேற்பு நிகழ்ச்சியில் இருதரப்பினர் மோதி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் மைக்கேல்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் கப்பியாம்புலியூரை சேர்ந்த பரணிஷா என்பவருக்கும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் விக்கிரவாண்டியில் இருக்கும் மண்டபத்தில் நேற்று முன்தினம் இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பெண் வீட்டை சேர்ந்த ஒரு வாலிபர் அதிக சத்தத்துடன் இசை நிகழ்ச்சியில் நடனம் ஆடிக்கொண்டிருந்தார். இதனை பார்த்த மாப்பிள்ளை வீட்டார் […]