தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில்இன்று(5.12.22) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து வடதமிழகம் மற்றும் புதுவை அருகே 8ம் தேதி நிகழக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, திருப்பூர், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி மற்றும் காரைக்காலில் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Tag: மிக கனமழை
வங்கக் கடலில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலையால் வரும் 20ஆம் தேதி தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்தமான் அருகே இன்று புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளது. இது புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளதால் தீவிரமாக கண்காணிக்கப் படுகிறது. இது மெல்ல மேற்கு நோக்கி நகர்ந்து 20ஆம் தேதி தமிழகத்திற்கு மிக கனமழையை கொண்டுவர உள்ளது.
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக சென்னையில் இன்று கனமழையும் 11 மற்றும் 12ம் தேதி மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் 13ஆம் தேதி ஓரிரு பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று அநேக இடங்களிலும் 11,12,13ஆம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது. வடக்கு கடலோர மாவட்டங்களிலும் அதை ஒட்டியுள்ள பகுதிகளிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. […]
தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னை தொடர்ந்து கனமழை பெய்தது. இந்த நிலையில் வங்கக் கடலில் பல காற்று சுழற்சிகள் புதிதாக உருவாகியிருக்கின்றன. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று கணக்கிடப் பட்டுள்ளது. இது மெதுவாக மேற்கு நோக்கி நகர்ந்து நாகை – நெல்லூர் இடையே கரையை கடக்க […]
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 29ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. அதன்படி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை தொடர்ந்து பெய்து வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் நீலகிரி, கோவை, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, திருப்பூர், மதுரை, விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை உட்பட 11 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக மாணவர்களின் நலனை கருதி கடந்த இரண்டு நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.’ இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் […]
சென்னையில் வரலாறு காணாத மழை வடகிழக்கு பருவ மழை காரணமாக தமிழகமெங்கும் மிக கன மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் இன்று காலை வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது கடந்த 72 ஆண்டுகளில் மூன்றாவது பெரிய அளவிலான மழை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் கன மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில்அடுத்த 24 மணிநேரங்களுக்கு 8 மாவட்டங்களில் மிக […]
தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை என்பது கடந்த 29ஆம் தேதி முதல் தொடங்கி இருக்கிறது. மேலும் வட இலங்கை ஒட்டியிருக்கக்கூடிய கடற்கரை, தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று மற்றும் அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு […]
தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் துவங்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இன்ற இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நவ.1,3 ஆகிய தேதிகளில் வட தமிழ்நாட்டில் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் “ஆரஞ்சு அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 […]
தமிழகத்தில் மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் கன முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் நீலகிரி, கோவை மாவட்டங்களில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசியில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. மேலும் அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு ஒரு சில இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோவை, சென்னை மாவட்டத்தில் அதிக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் […]
கேரளாவில் கிழக்கு மத்திய அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை மையம் கொண்டுள்ளதால் மேலும் 5 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களாக கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளத்தில் சிக்கியும் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டும் இதுவரை குழந்தைகள் உட்பட 4 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் கேரளாவின் கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள குறைந்த […]
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழகம், டெல்டா மற்றும் காரைக்கால், தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், வேலூர் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும் தெரிவித்துள்ளது. இதனையடுத்து […]