மின் கட்டண உயர்வு விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தமிழக அரசின் மின்கட்டணம் உயர்வுக்கு தடை இல்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் 3 மாதத்தில் சட்டத்துறை அதிகாரியை நியமிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. தமிழக அரசு நியமனம் செய்யவில்லை என்றால் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாட மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்..
Tag: மின்கட்டணம் உயர்வு
தமிழகத்தில் மாதம் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50, 301 – 400 வரை பயன்படுத்துவோருக்கு ரூ.147.50, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவர்களுக்கு ரூ.298.50 கூடுதலாக கட்டும் வகையில் மின் கட்டணம் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் , வீட்டு மின் இணைப்புக்கான 100 யூனிட் இலவசத்தில் எந்த மாற்றமும் இல்லை. கேஸ் இணைப்புகளை போல், 100 யூனிட் இலவச மின்சாரத்தை வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கும் திட்டம் அறிமுகமாகிறது. 42% வீடுகளுக்கான மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் […]
இலங்கையில் வரலாறு காணத அளவாக, மின்கட்டணத்தை 264 சதவீதம் உயர்த்த அந்நாட்டு மின்சார வாரியம் முடிவெடுத்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளில், இதுவரை இல்லாத அளவாக இந்த விலை உயர்வு உள்ளது. இந்த மின் கட்டண உயர்வானது, மிகவும் குறைந்த அளவில் மின்சாரத்தை பயன்படுத்துபவர்களுக்கு அதிக சிரமத்தையும், அதே வேளையில் அதிகமாக மின்சாரத்தை பயன்படுத்துபவர்களுக்கு குறைந்த அளவில் விலை உயர்வு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் மீது பழிபோட்டு மின் கட்டணத்தை தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளது. தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்குவதை நிறுத்திவிட்டு, அரசு மின்னுற்பத்தி நிலையங்களில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தினார். மேலும் தமிழக அரசு, மின் செயற்கை தட்டுபாட்டை ஏற்படுத்தி, வெளி மார்க்கெட்டில் இருந்து, அதிக பணம் கொடுத்து வாங்குகிறார்கள். நஷ்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் வெளியில் இருந்து மின்சாரத்தை வாங்குவது சரியா? வரும் 23ம் தேதி மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, மின் கட்டண உயர்வுக்கு மத்திய அரசை குறை கூற வேண்டாம். மின் கட்டணத்தை உயர்த்துமாறு மத்திய அரசு வலியுறுத்தவில்லை. மத்திய அரசு கொடுப்பது மானியம். தேவை எனில் பெற்றுகொள்ளலாம். மின்வாரியத்தை முறையாக நடத்தினால், அரசுக்கு இழப்பு ஏற்படாது என்றார். மத்திய அரசின் மீது பழிபோட்டு மின் கட்டணத்தை தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளது தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்குவதை நிறுத்திவிட்டு, அரசு மின்னுற்பத்தி நிலையங்களில் உற்பத்தியை அதிகரிக்க […]
கர்நாடகா மாநிலத்தில் மின் விநியோக நிறுவனங்கள் மூலமாக நுகர்வோருக்கு மின்சார விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மாதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இங்கு வருடந்தோறும் ஏப்ரல் 1ஆம் தேதி மின்கட்டணம் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. சராசரியாக யூனிட் ஒன்றுக்கு 25 பைசா உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் நிலக்கரி விலை உயர்வு, அனல் மின் நிலையங்கள் பராமரிப்பு செலவு அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக மின் விநியோக நிறுவனங்கள் இழப்பை சந்தித்து […]
தமிழகத்தில் கடந்த 7 ஆண்டுகளாக மின்சார கட்டணத்தை உயர்த்தவில்லை. மின்சாதன பொருட்களின் விலையேற்றம், ஊழியர்களின் வருமானம் அதிகரிப்பால் செலவு அதிகரித்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்குவதே எங்கள் ஆட்சியில் நோக்கமாக இருந்தது. மின் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் பெரும்பாலும் திமுக ஆட்சியில்தான் போடப்பட்டது என்று தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறையில் ஊழல் நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் கூறியுள்ளது. ஆனால் அந்த அறிக்கையில், மின்துறையில் ஊழல் ஏற்படவில்லை எனவும், இழப்புதான் ஏற்பட்டுள்ளது எனவும் […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து உள்ளதால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கர்நாடகாவில் வீட்டு உபயோகத்துக்கான மின் கட்டணம் 10 பைசா உயர்த்தப்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரு உட்பட நகரப் பகுதிகளில் தற்போது 50 யூனிட் வரை ஒரு யூனிட்டிற்கு ரூ.4-இலிருந்து ரூ.4.10 ஆகவும், 100 […]