இலங்கையில் வரலாறு காணத அளவாக, மின்கட்டணத்தை 264 சதவீதம் உயர்த்த அந்நாட்டு மின்சார வாரியம் முடிவெடுத்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளில், இதுவரை இல்லாத அளவாக இந்த விலை உயர்வு உள்ளது. இந்த மின் கட்டண உயர்வானது, மிகவும் குறைந்த அளவில் மின்சாரத்தை பயன்படுத்துபவர்களுக்கு அதிக சிரமத்தையும், அதே வேளையில் அதிகமாக மின்சாரத்தை பயன்படுத்துபவர்களுக்கு குறைந்த அளவில் விலை உயர்வு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tag: மின்சார வாரியம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு மற்றும் ஐக்கியஅரபு நாடுகளிடையே பொருளாதார, வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் அடிப்படையிலும், தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் துபாய் மற்றும் அபுதாபிக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் நேற்று அதிகபட்ச மின்சாரம் வழங்கி சாதனை படைத்துள்ளதாக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீரிய முன்னெடுப்புகள் மூலம் மின்வாரிய வரலாற்றில் உச்சபட்ச மின் தேவையாக நேற்று […]
மின் இணைப்பு உடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்புதல் கேட்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்படுகிறது. இதேபோன்று சுமார் 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு அந்த கட்டணத்தை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்ற முறையும் தொடர்கிறது. மின்சாரத்திற்காக வருடத்திற்கு 3 ஆயிரத்து 500 கோடி ரூபாயை மின்சார வாரியத்திற்கு தமிழ்நாடு அரசு வழங்குகிறது. இந்த நிலையில் ஒரே நபர் 2, 3 மின் இணைப்புகள் வாயிலாக […]
தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் அனைத்து பகுதிகளிலும் உள்ள மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள மின்தடை அறிவிக்கப்படுகிறது. அவ்வாறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுவதால் பல்வேறு விபத்துக்கள் குறைகிறது. இதன் காரணமாக பராமரிப்பு பணிகள் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மின்வாரியத்தில் 45 ஆயிரம் காலிப்பணியிடங்கள் இருக்கிறது. அதனால் களப்பணியாளர்கள் மிகவும் பணிச்சுமையில் இருப்பதாக மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில செயலாளர் உமாநாத் அவர்கள் வருத்தம் தெரிவிக்கிறார். அதுமட்டுமல்லாமல் இது குறித்து மின் ஊழியர் மத்திய அமைப்பின் […]
வீடுகளில் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவை கணக்கிட செல்போன் செயலியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் செல்போன் செயலியில் மின்சாரப் பயன்பாட்டை பதிவு செய்ததும், செலுத்த வேண்டிய கட்டணம் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். இதுவரையிலும் 27 பகுதிகளில் பரிசோதனை செய்யப்பட்ட இந்த செயலி சரியாக செயல்படுவதால் சென்னை மற்றும் வேலூரில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். டேன்ஜெட்கோ முற்றிலும் கணினிமயமாக்கப்பட்டு வருவதன் ஒரு பகுதிதான் இந்த செயலி ஆகும்.
தமிழகத்தில் மின் இணைப்பு ஒருவர் பெயரில் இருந்து மற்றொரு பெயருக்கு மாற்றும் முறையை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் மின்னிணைப்பு ஒருவர் பெயரில் இருந்து மற்றொருவர் பெயருக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறையை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி பெயர் மாற்றத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்கள் www.tangedco.org என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவில் பெயர் மாற்றம் செய்து உடனடியாக வழங்க திட்டமிட்டுள்ளது. அதனால் மின் இணைப்பில் ஒருவர் […]
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் உதவி கணக்கு அலுவலர் (Assistant Accounts Officer) பணிக்கான காலியிடங்கள் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 16.03.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கிலாம். நிறுவனம் :தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் பணி : உதவி கணக்கு அலுவலர் (Assistant Accounts Officer) மொத்த காலியிடங்கள் : 18 கல்வி தகுதி : சி.ஏ […]
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் (TNERC) இருந்து தகுதியான பட்டதாரிகள் விண்ணப்பிக்குமாறு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Member காலியிடங்கள்: 01 தகுதி: பதிவு செய்யும் பதிவாளர்கள் நல்ல திறன், ஒருமைப்பாடு, துறை ரீதியிலான செயல்பாடுகளில் போதுமான அறிவு பெற்றிருக்க வேண்டும். மேலும் Engineering, Finance Commerce, Economics, Law or Management போன்ற செயல்பாடுகளில் ஏற்படும் சிக்கல்களை தீர்ப்பதில் நல்ல நிபுணத்துவம் பெற்று இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: 25.01.2021 […]
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் பின்வரும் நாட்களில் மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கீழுள்ள பல்வேறு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து கொண்டிருப்பதால் பின்வரும் நாட்களில் மின் வினியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார பராமரிப்பு பணி காரணமாக, மன்னடி மற்றும் மணலி பகுதிகளில் மின்சாரம் இருக்காது. மண்ணடி தெருவில் ஆர்மேனியன் […]
மின்சாரவாரியம் தனியார் மயமாக்கப்படாது என்று அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாடு மின்சாரவாரியம் எக்காரணத்தைக் கொண்டும் தனியார்மயம் ஆக்கப்படாது என்றும், மின் வாரிய அலுவலகங்களில் 50 சதவீதத்துக்கும் மேல் உள்ள காலிப் பணியிடங்கள் மட்டுமே தனியார் மூலம் நிரப்பப்படுகிறது என்றும், அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார். கேங்க்மன் பணி குறித்த வழக்கு நிலுவையில் உள்ளதால் பத்தாயிரம் கேங்க்மன் பணியிடங்களுக்கு இன்னும் நியமனம் வழங்கப்படவில்லை. வழக்கு தொடர்ந்துள்ளவர்கள், வழக்கை வாபஸ் பெற்றால் உடனே கேங்க்மன் பணி நியமனம் செய்யப்படும் […]
தமிழக மின்சார வாரியத்தில் காலியாக உள்ள இடங்கள் அனைத்தும் தனியாருக்கு செல்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மின்சார வாரியத்தில் ஐடிஐ படித்தவர்கள் அதிக அளவு வேலை செய்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தமிழக மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 12 ஆயிரம் இடங்கள் தனியாருக்கு செல்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 12000 உதவியாளர், வயர் மேன் பணியிடங்களுக்கு தனியார் நிறுவனம் மூலம் ஆட்கள் நியமனம் நடைபெறுகிறது. மேலும் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுபவர்கள் […]
நிவர் புயல் பாதிப்புகள் குறித்து தொடர்பு கொள்வதற்காக மின்சார வாரியத் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், நிவர் புயல் கட்டுப்பாட்டு உதவி மையம் மீட்பு நடவடிக்கைகாக 24ஆம் தேதி முதல் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 24 மணி நேரமும் தொலைபேசி, செல்போன் எண்களில் தொடர்பு கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு உதவி மையத்தில் பெறப்படும் மின்சாரம் சம்பந்தமான புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை தெற்கு 1 -9445850434, 044-24713988 சென்னை […]
தாழ்வழுத்த நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்பிற்கான மின்கட்டணத்தை செலுத்த ஜூன் 6ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுவதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. ஜூன் 6ம் தேதி வரை தாமத கட்டணம், மறுமின் இணைப்பு கட்டணமின்றி செலுத்தலாம் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதால் தாழ்வழுத்த நுகர்வோர்கள் மின்கட்டணம் செலுத்த ஜூன் 6ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதறகான கால அவகாசம் ஜூன் 6ம் […]
மின் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் வரும் 22ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஏப்ரல் 13ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகை செலுத்துவதற்கான இறுதி நாள் மாா்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை உள்ள தாழ்வழுத்த மின் பயனீட்டாளா்கள் ஊரடங்கு அமல்படுத்தியதன் காரணமாக தாமதக் கட்டணம் மற்றும் மின் துண்டிப்பு அல்லது மறு இணைப்புக் கட்டணமின்றி […]
டெல்டா பகுதிக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. நெய்வேலி – கடலங்குடி இடையே புதிய மின்பாதை செயல்பாட்டிற்கு வந்துள்ளது. எனவே, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நெய்வேலி – கடலங்குடி இடையே 77.31 கி.மீ நீள 230 கி.வோ புதிய மின்பாதை செயலாக்கத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ரூ.100.82 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய மின்பாதை பயன்பாட்டிற்கு வந்தவுடன் டெல்டா […]
ஊரடங்கு ஏப்., 30ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் மின் கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இன்றைய நிலவரப்படி 1173 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக நாளையுடன் நிறைவடைய இருந்த ஊரடங்கு உத்தரவை ஏப்.,30 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் […]
தமிழகத்தில் நாளை இரவு 9 மணிக்கு மின் விளக்குகளை மட்டும் அணையுங்கள், மின் சாதனங்களை அணைக்க வேண்டாம் என தமிழ்நாடு மின்சார வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அனைத்து மின்சாதனங்களையும் அணைத்து விட்டு ஒரே நேரத்தில் ஆன் செய்தால் மின்சார பிரச்னை ஏற்படும் என பிரதமரின் வேண்டுகோளை ஏற்று மின்சார வாரியம் அட்வைஸ் செய்துள்ளது. எனவே அனைத்து மின் ஊழியர்களும் தவறாமல் பணியில் இருக்க வேண்டும். 9 நிமிடங்கள் மின்விளக்குகளை அணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்படும் […]
தமிழ்நாடு மின்சார வாரியம் செய்திகள் (TNEB Recruitment 2020): தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. பணிகள்: கள உதவியாளர் பணியிடம்: தமிழ்நாடு முழுவதும் மொத்த காலியிடங்கள்: 2900 மாத சம்பளம்: ரூ. 18,800 – 59,900/- ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 24.03.2020 ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.04.2020 அதிகாரபூர்வ வலைத்தளம்: https://www.tangedco.gov.in/ கல்வி தகுதி: Field Assistant(Trainee) – ITI (National Trade certificate/National Apprenticeship certificate) in Electrician (OR) Wireman (OR) Electrical […]
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த அறிவிப்புகள் உதவியாளர் Field Assistant (Trainee) பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 2900 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதி வாய்ந்தவர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். இந்த வேலைவாய்ப்பிற்கு 23.04.2020 அன்று தங்களுடைய விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க கடைசி தேதியாகும். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி […]