மின்தடை செய்ய வரும் பணியாளர்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம் என தமிழக மின்வாரியம் அறிவித்துள்ளது. வீடுகளில் ஏதாவது மின்தடை ஏற்பட்டால் அத சரி செய்ய மின்வாரியதிலிருந்து ஒரு பணியாளர் வந்து சரிசெய்து கொடுப்பர். அவருக்கு அரசாங்கம் மாதாமாதம் சம்பளம் கொடுக்கிறது. இருப்பினும் அவர்கள் மின்தடையை சரிசெய்து கொடுத்துவிட்டு பணம் வாங்குவதாக புகார்கள் வந்தன. இந்நிலையில் மின் இணைப்புகளில் ஏற்படும் மின்தடையை சரிசெய்ய வரும் பணியாளர்களுக்கு பணம் கொடுக்க தேவையில்லை என தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது. மின்தடையை சரிசெய்ய, […]
Tag: மின்வாரியம்
தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தனியார் நிறுவனம் மூலம் ஆட்கள் நியமனம் செய்யப்படும் என்ற உத்தரவு ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதிலும் மின்வாரிய ஊழியர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், சென்னையில் அமைச்சர் தங்கமணி இதுபற்றிய செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் அவுட்சோர்சிங் முறையில் மின்வாரிய ஊழியர்கள் தேர்வு தொடர்பான அரசாணையை திரும்பப் பெறப்படுகின்றது. மின்வாரியத்தின் கேங்மேன் பணியிடங்களை நிரப்புவதற்கு எதிர்த்து நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தொழிற்சங்கங்களால் […]
சென்னையில் இன்று (செப்டம்பர் 1) மின்தடை ஏற்படும் பகுதிகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மின்தடை தொடர்பாக செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “சென்னையில் செப்டம்பர் 1ஆம் தேதி ( இன்று ) மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணிமுதல் மதியம் 2.00 மணிவரை பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். பின்னர் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். கொட்டிவாக்கம் […]
கேன்மங் பணியிடத்திற்கு 5000 நபர்களை பணியில் அமர்த்த வைகோ கோரிக்கை விடுததற்க்கு கண்டனம் தெரிவித்து மயிலாடுதுறையில் தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் நல சங்கம் பிறர் கண்டனம் தெரிவித்தனர். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணி நியமனம் செய்யப்படாமல் 12000 ஒப்பந்த தொழிலாளிகள் கூலிக்கு பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மின்சார வாரியத்தில் காலியாக உள்ள காலி பணியிடங்களுக்கு 86000 பேர் விண்ணப்பித்தும், 15,000 நபர்கள் தேர்வு எழுதியும், 5 ஆயிரம் நபர்களை தேர்ந்தெடுத்து […]
ஊரடங்கு காலத்தில் மின் கட்டணம் கணக்கீடு செய்வது எப்படி? என்பது குறித்து விளக்கமளித்து எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மனுதாரருக்கும், மின் வாரியத்திற்கும் இது குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, மின் அளவீடு மற்றும் கணக்கீட்டு முறையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு ஜூலை 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கு விவரம்: கொரோனா பரவல் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, தாழ்வழுத்த மின்நுகர்வோர் முந்தைய மாதத்திற்கு […]
மின் அளவீடு செய்யும் முறையிலும், கட்டணம் நிர்ணயிக்கும் முறையிலும் எந்த விதிமீறலும் இல்லை என மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு காலத்தில் விதிகளின்பிடி கட்டணம் நிர்ணயிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. முந்தைய மின் அளவீட்டின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்க உத்தரவிடக் கோரி எம்.எல்.ரவி என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கொரோனா பரவல் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, தாழ்வழுத்த மின்நுகர்வோர் முந்தைய மாதத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள் அடிப்படையில் இந்த இரு […]
சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்ப்பட்ட பகுதிகளில் மின்கட்டணம் கட்ட அடுத்த மாதம் 15ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் மின்கட்டணம் செலுத்த ஜூலை 15ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் ஜூலை 15ம் தேதி வரை தாமதக்கட்டணம், மறு மின் இணைப்பு கட்டணம் இல்லாமல் மின் நுகர்வோர் செலுத்தலாம் என […]
விவசாயிகளுக்கு தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய மின்சார திருத்த சட்டம் அமலாக்கினால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்க முடியாது, எனவே புதிய மின்திருத்த சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது, அதில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க தடைசெய்ய இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களை நீக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தான் தற்போது மின்சார வாரியம் விவசாய மின்சாரத்துக்கு மின்மோட்டார் பொருத்தும் பணி நடைபெற்று வருகின்றது. […]
தொழிற்சாலைகளை மின் அளவீட்டை புகைப்படம் எடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அனுப்பலாம் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் தற்போது ஒரு அறிக்கை வெளியிடப்படுள்ளது. தொழிற்சாலை மற்றும் வணிக வளாகங்களை குறிப்பிட்டு அனுப்பப்பட்டுள்ள அறிக்கையில் ஊரடங்கு அமலில் இருப்பதனால் மார்ச், ஏப்ரல் மாதங்களில் செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை முந்தைய மாதத்தை ஒப்பீட்டு செலுத்தலாம் என்று தெரிவித்துள்ளனர். இதில் வீடுகளில் உள்ள பயனீட்டாளர்களுக்கு செலுத்திய மின்கட்டணம் அதிகமாக இருந்தால் வரக்கூடிய […]
மின்கட்டணம் குறித்த தேதிக்குள் செலுத்த வில்லை என்றாலும் மின் இணைப்பு துண்டிக்கப்படாது என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில் மக்கள் யாரும் வெளியே வராமல் வீட்டுக்குளே இருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் மார்ச் மாதத்திற்குள் செலுத்த வேண்டிய கட்டணத்தை ஏப்ரல் 15ஆம் தேதி வரை செலுத்தலாம் என்றும் மின் வாரியம் அறிவித்துள்ளது. முன்னதாக மார்ச் மாதத்திற்கான மின் கட்டணம் செலுத்தப்படவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற குறுஞசெய்தி வந்ததையடுத்து […]
முந்தைய மின்கட்டணத்தையே செலுத்தலாம் என்று தமிழ்நாடு மின்சாரவாரியம் அறிவித்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள போக்குவரத்து சேவை, ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பெரிய பெரிய மால்கள், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. பள்ளி , கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அனைத்து அரசு ஊழியர்களும் வீட்டில் இருந்து பணியை மேற்கொள்ள அறிவுத்தப்பட்டுள்ளது. இன்று நாடு தழுவிய சுய ஊரடங்கு உத்தரவு […]
கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க தமிழகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மார்ச் 31ம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை, திரையரங்குகள் , திருமண மண்டபங்கள் , மால்களில் திறக்க வேண்டாம் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் மக்கள் அதிகமாக கூட வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பிரசித்தி பெற்ற கோயில்களும் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா எதிரொலியால் மின் நுகர்வோர்கள் ஆன்லைன் அல்லது மின்சார வாரிய ஆப் மூலம் கட்டணம் […]