தமிழகத்தில் திமுக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் சேலம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் எதிரே போராட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்திற்கு பிறகு ஜிகே வாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, திமுக […]
Tag: மின் கட்டண உயர்வு
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகம் எதிரே அதிமுக கட்சியின் சார்பில் கண்டனப் போராட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமை தாங்கினார். இவர் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் பேசியதாவது, அதிமுக ஆட்சிக் காலத்தின் போது எந்த ஒரு வரியையும் உயர்த்தவில்லை. ஆனால் தற்போது குடிநீர் மற்றும் சொத்து வரியை அதிகரித்ததோடு, மின் கட்டண உயர்வையும் 12 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக அதிகரித்துள்ளனர். நாங்கள் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி அடைந்ததால் எங்கள் […]
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் அதிமுக கட்சியின் சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன போராட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் அதிமுக கட்சியைச் சேர்ந்த ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசியதாவது, எங்களுடைய போராட்டத்தின் மூலம் திமுக கட்சிக்கு ஒரு செய்தி சொல்ல நினைக்கிறோம். அதிமுக கட்சியில் இருந்து கொண்டு 4 முறை […]
தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் தமிழகத்தில் மிக குறைந்த அளவிலேயே மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்றார். அதன் பிறகு கர்நாடகா மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களை விட தமிழகத்தில் குறைந்த அளவிலேயே மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு கோடி பேர் 100 யூனிட் வரை மின்சாரத்தை பயன்படுத்துகிறார்கள். இவர்களுக்கு மின்சார கட்டண உயர்வால் எவ்வித பிரச்சனையும் இருக்காது. அதன்பின் 100 யூனிட் முதல் 300 யூனிட் வரை […]
தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் புதிய மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. 2027 வரை புதிய மின் கட்டண உயர்வு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்குப் பின் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மின் கட்டண உயர்வு குறித்து கரூரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது, […]
தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்வுக்கு தமிழக மின்சாரத்துறைக்கு 1.60 லட்சம் கோடி கடன் இருப்பதால், கட்டணம் உயர்வு என தமிழக மின்சாரத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், மின்கட்டணம் உயர்வுக்கு கடன் தொகை மட்டுமே காரணம் கிடையாது, மத்திய அரசும் அவ்வப்போது அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக மத்திய அரசினுடைய எரிசக்தி அமைச்சகத்தின் உத்தரவின்படி மின் கட்டண திருத்தம் என்பது அவ்வப்போது செய்யப்பட வேண்டும். அப்போதுதான் அவர்கள் கொடுக்கப்படக்கூடிய மானியம், பல்வேறு நலத்திட்டங்கள் நமக்கு கிடைக்கப்பெறும். […]
கடந்த 10 ஆண்டுகளில் தமிழக மின்சார துறையில் கடன் ரூ.12,647 கோடியாக அதிகரித்துள்ளது. இதனை சமாளிக்க தமிழகத்தின் மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசு பரிந்துரை செய்தது. மேலும் இது குறித்து மத்திய அரசு தமிழக அரசுக்கு பல முறை கடிதம் எழுதியது. இதனையடுத்து தமிழக மின் வாரியம் மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டது. மேலும் இந்த மின் கட்டணத்தை உயர்த்த மின் வாரியமானது ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதல் […]
மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக அரசு அறிவித்துள்ள மின்கட்டண உயர்வு அனைத்து தரப்பு மக்களை பாதிக்கும் என்பதை கண்டித்து தமிழக முழுவதும் திங்கட்கிழமை போராட்டம் நடைபெறும் என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி திங்கட்கிழமை தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் சென்னையில் இன்று அதிமுக சார்பில் மின்கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்துப்பட்டி பகுதியில் புதிய ரேஷன் கடை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பகுதிநேர ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் மாநில அரசுகளின் தனிப்பட்ட உரிமைகளில் மத்திய அரசானது தலையிடுகிறது. இந்த மத்திய அரசின் நடவடிக்கைகளில் தலையிட்டு அதை எதிர்க்கும் ஒரே ஒரு முதல்வர் என்றால் அது நம் […]
இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலச் செயலாளர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில செயலாளர் ஜகுருத்தீன் அகமது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்றதிலிருந்து மக்கள் எதிர்பார்த்ததை தவிர மற்ற அனைத்தையும் செய்து கொண்டு இருக்கிறது. அதன் பிறகு தற்போது தமிழக அரசு மின்வாரிய துறையில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தின் காரணமாக மின்கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அதோடு மின்கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால், மத்திய அரசு மானியத்தை ரத்து […]
தமிழகத்தில் மாதம் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50, 301 – 400 வரை பயன்படுத்துவோருக்குரூ.147.50, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவர்களுக்கு ரூ.298.50 கூடுதலாக கட்டும் வகையில் மின் கட்டணம் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரத்துறையில் 12,646 கோடியாக கடன் உயர்ந்துள்ளது.வீட்டு மின் இணைப்புக்கான 100 யூனிட் இலவசத்தில் எந்த மாற்றமும் இல்லை. கேஸ் இணைப்புகளை போல், 100 யூனிட் இலவச மின்சாரத்தை வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கும் திட்டம் அறிமுகமாகிறது. 42% […]
உத்திரப் பிரதேச மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மின் கட்டணம் வசூலிப்பதில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்க அம்மாநில முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று(நவ 6) வெளியிட்டுள்ள அறிக்கையில் மின் கட்டணம் அதிகரித்து வருவதாகவும் , இதனால் சிறு குறு தொழில் நிறுவனத்தினர், கைவினைக் கலைஞர்கள் மற்றும் நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் மின் கட்டண உயர்வு அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி […]