Categories
உலக செய்திகள்

இந்தியா-மியான்மர் எல்லைப்பகுதியில் தீவிர சோதனை.. ஏராளமான ஆயுதங்கள் மாட்டியது..!!

இந்தியா-மியான்மர் எல்லைப்பகுதியில் காவல்துறையினர் சோதனை நடத்தியதில்  அதிகமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரின் டெக்னோபால் மாவட்டத்தில் இருக்கும் இந்தியா-மியான்மர் எல்லைப்பகுதியில் மணிப்பூர் காவல்துறையினரும், அசாம் ரைபிள் கூட்டுப்படையினரும் தீவிரமாக சோதனை நடத்தியுள்ளனர். அப்போது மோரே நகரில் இருக்கும் ஒரு குடியிருப்பில் அதிகமான வெடி பொருட்களும், ஆயுதங்களும், கருவிகளும் சிக்கியுள்ளது. அதில், ஏ.கே.47 துப்பாக்கிகள் இரண்டு, எம்.16 வகை துப்பாக்கிகள் இரண்டு, எம்.எம். கைத்துப்பாக்கிகள் ஒன்பது, சீனாவின் கையெறி குண்டுகள் மூன்று, தோட்டாவை உருவாக்கக்கூடிய பொருட்கள் போன்றவை இருந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

2020-ல் நடந்த பொதுத்தேர்தல்… தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு… வெளியான பரபரப்பு தகவல்..!!

மியான்மர் தேர்தல் ஆணையம் கடந்த 2020-ஆம் ஆண்டு நடந்த பொது தேர்தலின் முடிவுகளை ரத்து செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மியான்மரில் கடந்த 2020-ஆம் ஆண்டில் நடந்த பொது தேர்தலில் The national league for democracy ( NLD) மகத்தான வெற்றியை பெற்றது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் அந்த பொது தேர்தலின் முடிவுகளை ரத்து செய்வது NLD-ஐ கலைக்க வழிவகுக்கும் என்று பிரபல டிவி தெரிவித்துள்ளது. மேலும் மியான்மர் ராணுவம் கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் […]

Categories
உலக செய்திகள்

மறுபடியும் அதிகமாயிருச்சு…. மீண்டும் பள்ளிகள் மூடல்….முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் பிரபல நாடு…!!

கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளதால் பள்ளிகள் மூடப்படும் என மியான்மர் நாட்டின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து கொண்டு வருகிறது. இதனால் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி மியான்மர் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் சற்று குறைந்ததால் பள்ளிகளை கடந்த மாதம் முதல் திறந்துள்ளனர். இதனையடுத்து சில நாட்களாக மீண்டும் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் அங்கு 4,132 பேருக்கு புதிதாக டெல்டா […]

Categories
உலக செய்திகள்

மியான்மரில் பள்ளிகளை தற்காலிகமாக மூட உத்தரவு…. அரசு அதிரடி….!!!!

மியான்மரில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வந்ததால் கடந்த மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டது. இதற்கிடையே, கடந்த சில தினங்களாக மியான்மரில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்றைய தினம் அங்கு புதிதாக 4,132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதிலும் குறிப்பாக ஆசியா உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவும் தன்மை கொண்ட டெல்டா வகை கொரோனா மியான்மரில் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், மியான்மரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள அனைத்து ஆரம்பப் […]

Categories
உலக செய்திகள்

பயங்கர ஆயுதங்களால் மக்களை தாக்கிய ராணுவத்தினர் …. வெளியான புகைப்படங்கள் …. பிரபல நாட்டில் நடந்த சம்பவம் ….!!!

மியான்மரில் பாதுகாப்பு படையினருக்கு எதிராக நடந்த தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர் .  மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி  ஜனநாயக ஆட்சியை கைப்பற்றி ராணுவத்தினர் சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு அடிக்கடி வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் Depayin கிராமத்தில் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த பாதுகாப்பு படையினர் மீது ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த பயங்கரமான தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் 6 பேர் […]

Categories
உலக செய்திகள்

தலையில் பூச்சூடி ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள்.. காரணம் என்ன..? வெளியான தகவல்..!!

மியான்மரில் மக்கள் சிலர் தங்கள் தலையில் பூச்சூடிக்கொண்டு போராட்டம் நடத்தியுள்ளனர். மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றி முக்கிய அரசியல்  தலைவர்களை சிறை வைத்தது. எனவே அந்நாட்டு மக்கள் இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் நேற்று ஆங் சாங் சூச்சியின் 76வது பிறந்த நாள். எனவே அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மக்கள் சிலர் தங்களின் தலையில் பூ வைத்துக் கொண்டு பேரணி நடத்தியிருக்கிறார்கள். இதுகுறித்து போராட்டத்தில் பங்கேற்ற […]

Categories
உலக செய்திகள்

இவங்களுக்கு இனிமேல் இதை விற்காதீங்க …. ஆதரவு வழங்கிய நாடுகள் …. ஐ.நா-வின் அதிரடி முடிவு …!!!

மியான்மர் நாட்டுடனான ஆயுத விற்பனையை  நிறுத்துமாறு ஐ.நா. அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்க ஆட்சியை ராணுவம் கைப்பற்றி  சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறது. இந்த சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் மக்களை ராணுவத்தினர் தாக்கியும், துப்பாக்கி சூடு போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்நிலையில் ஐ.நா. பொது சபை இந்த ராணுவ ஆட்சிக்கு எதிராக தீர்மானத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. அதில் மியான்மர் நாட்டிற்கு  வழங்கப்படும் […]

Categories
உலக செய்திகள்

மியான்மரில் நடக்கும் வன்முறை.. ஐ.நா. மனித உரிமைகள் கழகம் எதிர்ப்பு..!!

மியான்மரில் மக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழக ஆணையர் கண்டனம் தெரிவித்துள்ளார். மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதியன்று ராணுவ ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்றியது. அதன் பிறகு முக்கிய தலைவர்களை சிறை வைத்தது. எனவே அந்நாட்டு மக்கள் இராணுவத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இராணுவம் அவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் பல பொது மக்கள் கொல்லப்படுகின்றனர். இந்நிலையில் மியான்மர் அரசு தீவிரவாத […]

Categories
உலக செய்திகள்

“கட்டுபாட்டை இழந்த ராணுவ விமானம்” …. “சிறுவன் உட்பட இருவர் தப்பி பிழைத்த அதிசயம்”…! “பிரபல நாட்டில் நடந்த சோக சம்பவம்”….!!!

 ராணுவ விமான விபத்தில் சிக்கி  12 பேர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.   மியான்மரில் ராணுவ விமானம் 14  பயணிகளுடன்  பின் ஓ லிவின் என்ற இடத்திற்கு  புறப்பட்டுச் சென்றுள்ளது. இந்நிலையில் அனிசகன்  என்ற பகுதியில் விமானம் சென்று கொண்டிருக்கும்போது திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது . இந்த விபத்தில்  விமானத்தில் பயணித்த 14 பயணிகளில் 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விமானத்தில் பயணித்த சிறுவன் உட்பட […]

Categories
உலக செய்திகள்

நல்ல உடல் நலத்துடன் உள்ளார்..! வீட்டுக்காவலில் உள்ள தலைவர்… மியான்மரில் வெளியான முக்கிய தகவல்..!!

கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மியான்மரில் வீட்டு காவலில் உள்ள ஆங் சாங் சூச்சி உடல்நிலை குறித்து தற்போது ராணுவ ஆட்சிக்குழு தலைவர் தகவல் தெரிவித்துள்ளார். மியான்மர் ஆட்சிக்குழு தலைவர் ஜெனரல் ஆங் ஹலாய்ங் பிப்ரவரி 1 ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னர் முதன் முறையாக ஹாங்காங்கின் பீனிக்ஸ் தொலைக்காட்சியுடனான நேர்காணலில் 2 மணிநேரம் பங்கேற்று பேசியுள்ளார். ஆனால் இன்னும் முழு நேர்காணல் ஒளிபரப்பப்படவில்லை. அதேசமயம் சமூக ஊடகங்களில் மே 22 அன்று நேர்காணலில் வெளியான சில காட்சிகளில் […]

Categories
உலக செய்திகள்

மியான்மரில் இராணுவ ஆட்சியை எதிர்த்து போராட்டம்.. 1,25,000 ஆசிரியர்கள் பணி இடைநீக்கம்..!!

மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதியன்று ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதோடு, நாட்டின் பிரதமரான ஆங் சாங் சூகி உட்பட பல முக்கிய தலைவர்களை சிறை வைத்திருக்கிறது. எனவே ராணுவ ஆட்சியின் அட்டூழியங்களை எதிர்த்து கடந்த பல மாதங்களாகவே மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் மீது இராணுவம் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் தற்போது வரை […]

Categories
உலக செய்திகள்

69ஆவது உலக அழகி போட்டி.. “மியான்மருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்”.. பதாகையுடன் வந்த அழகி..!!

அமெரிக்காவில் நடந்த உலக அழகி போட்டியில் மியான்மர் நாட்டிலிருந்து பங்கேற்க பெண் “மியான்மருக்காக பிரார்த்தியுங்கள்” என்று எழுதப்பட்ட பதாகையை ஏந்தி வந்துள்ளார்.  அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தின் ஹாலிவுட் அரங்கில் இருக்கும் ராக் ஹோட்டல் & காசினோவில் 69-ஆம் வருட உலக அழகிப் போட்டி நடைபெற்றிருக்கிறது. கொரோனா காரணமாக அதிக பாதுகாப்புகளுடன் 74 நாடுகளிலிருந்து வந்த பெண்கள் இதில் பங்கேற்றுள்ளனர். இதில் மியான்மர் நாட்டிலிருந்து வந்த துசர் விண்ட் லவின் என்ற பெண் இறுதிச்சுற்றுக்கு முன்னேறவில்லை. எனினும் […]

Categories
உலக செய்திகள்

மியான்மரில் நடந்த பயங்கரமான தாக்குதல்.. காவல்துறை-இராணுவம் அதிரடி சோதனை..!!

மியான்மரின் விமானதளங்களில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மியான்மரின் மத்திய நகரம் மாக்வேக்கு அருகில் இருக்கும் விமானத்தளத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் ஒரு தாக்குதலும், தொடர்ந்து மேலும் 2 தாக்குதலும் நடத்தப்பட்டதாக டெல்டா செய்தி நிறுவனம், செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இதில் மியான்மர் விமானப் படையில் உள்ள வீரர்கள் ஆறு பேர் உயிரிழந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர், பிராந்தியத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் சாலைகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து சோதனை […]

Categories
தேசிய செய்திகள்

தாக்குதலை நிறுத்த… மியான்மரில் ராணுவ தலைவர் ஒப்புதல்…!!

மியான்மரில் நடந்து வரும் தாக்குதலை நிறுத்துவதாக அந்நாட்டு ராணுவ தலைவர் ஒப்புதல் கூறியுள்ளார். மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். மேலும் இதுவரை 100க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மியான்மரில் போராட்டம் நடத்துபவர்களை கொலை செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஆசியான் நாடுகள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து தாக்குதலை நிறுத்த அந்நாட்டு ராணுவ தலைவர் தற்போது ஒப்புதல் கூறியுள்ளார்.

Categories
உலக செய்திகள்

மியான்மரில் கொடூரம்.. ஒரே நாளில் 82 பேர் படுகொலை.. மொத்தமாக 700 பேரை கொன்று குவித்த இராணுவம்..!!

மியான்மரில் ராணுவத்தினரால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 700 ஆக உயர்ந்துள்ளது.  மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சுமார் 82 நபர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக உள்ளூர் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மக்களின் ஆர்ப்பாட்டம் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை அன்றும் நடந்துள்ளது. எனினும் ராணுவ ஆட்சி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மிகக் குறைந்த அளவில் வெளியிட்டு வருகிறது. அதன்படி ஒரு ராணுவ செய்தி தொடர்பாளர், கடந்த வெள்ளிக்கிழமை வரை மொத்தமாக உயிரிழந்த நபர்களின் எண்ணிக்கை 248 தான் […]

Categories
உலக செய்திகள்

மியான்மர் இராணுவ அதிகாரத்திற்கு எதிரான நடவடிக்கை.. சுவிட்ஸர்லாந்து அரசு அதிரடி..!!

ஸ்விஸ் அரசாங்கம் மியான்மர் இராணுவ ஆட்சிக்கு எதிராக 2 மாதங்களுக்கு பிறகு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.  மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கவிழ்த்த ராணுவ அதிகாரத்திற்கு  காரணமானவர்களாக கருதப்பட்ட சுமார் 11 நபர்கள் மீது சுவிஸ் அரசு சுமார் இரண்டு மாதங்களுக்கு பின் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நாளிலிருந்து அதனை எதிர்க்கும் மக்கள் மீது கடும் வன்முறை நடத்தப்பட்டு வருகிறது. ஸ்விச் அரசாங்கம் கடந்த வாரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரித்த பொருளாதாரத்தின் தடைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

மியான்மரில் தொடரும் போராட்டம் … ராணுவ ஆட்சியின் அட்டூழியம்… அமெரிக்கா ஊழியர்கள் நாடு திரும்ப உத்தரவு…!!!

ராணுவ ஆட்சியை எதிர்த்து போராடும் மக்களின் மீது ராணுவ வீரர்கள் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வீச்சு போன்ற வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். மியன்மாரில் ஜனநாயக ஆட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கவிழ்த்து கடந்த 1 ஆம் தேதி ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது . அதனால் மக்கள்  அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் ராணுவ வீரர்கள் ஒடுக்குமுறை என்ற பெயரில் மக்களின் மீது துப்பாக்கி சூடு போன்ற வன்முறைகளை தொடர்ந்தனர். அதன் பிறகு […]

Categories
உலக செய்திகள்

மக்களை கொன்று வரும் மியான்மர் இராணுவம்.. இந்திய தொழிலதிபர் நிதியளிக்கிறாரா..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!

மியான்மர் இராணுவத்திற்கு இந்திய தொழிலதிபரான அதானி குழுமத்தின் தலைவர் கோடி கணக்கில் நிதியளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  மியான்மரின் பொருளாதார கழகமான MEC என்ற நிறுவனத்திற்கு சுமார் 30 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்திய தொழிலதிபர், அதானி குழுமம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இவ்வளவு தொகையை நில குத்தகை கட்டணமாக வழங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் யாங்கோன் பிராந்தியத்தின் முதலீட்டு ஆணையத்திலிருந்து வெளிவந்துள்ளது.  அதாவது அதானி குழுமம் பணத்தை அளித்திருப்பது மியான்மர் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் MEC நிறுவனத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

மக்களின் மீது குண்டு மழை பொழிந்த மியன்மர் ராணுவம்…. தாய்லாந்திற்கு தப்பி ஓட்டய மக்கள் ….!!!

மியன்மர் மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருவதால் அவர்களின் மீது இரக்கம் காட்டாமல் குண்டு வீச்சு நடத்தியுள்ளனர். மியன்மரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்த்து ராணுவம் தனது ஆட்சியைக் கைப்பற்றியது. ஆகையால் இதனை எதிர்த்து போராடி வந்த மக்களின் மீது அடக்குமுறை என்ற பெயரில் ராணுவ வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தி மக்களை குருவியைப் போல் சுட்டுத் தள்ளினர். இதில் 114 போராட்டக்காரர்கள் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.  ராணுவ ஆட்சிக்கு பிறகு நூற்றுக்கணக்கான மக்கள் […]

Categories
உலக செய்திகள்

மியான்மரில் தொடரும் போராட்டம்… மக்களை சுட்டு குவிக்கும் ராணுவம்… சர்வதேச நாடுகள் கண்டனம்…!!!

மியான்மரில் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தி வருவதற்கு சர்வதேச நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மியான்மரில் கடந்த சில மாதங்களாகவே ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். அதனால் இந்தப் போராட்டத்தை தடுக்கும் வகையில் ராணுவத்தினர் அடக்கு முறையை நடத்தி வருகின்றனர். ஆனால் அதை எல்லாம் மக்கள் பொருட்படுத்தி கொள்ளாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதனால் ராணுவத்தினரால் பல […]

Categories
உலக செய்திகள்

அதிகரித்து வரும் ராணுவ தாக்குதல்…. பயத்தில் நாட்டை விட்டு வெளியேறிய மக்கள்…. திருப்பி அனுப்பும் தாய்லாந்து…!!

மியான்மர் ராணுவத்தினரின் தாக்குதலுக்கு பயந்து மக்கள் தாய்லாந்திற்கு செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மியான்மரில் நடைபெற்று வந்த மக்கள் ஆட்சியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்நாட்டு மக்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்தப் போராட்டத்தை அடக்குவதற்காக ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றது. இந்த துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 510 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் மியான்மர் ராணுவம் இன ஆயுத குழுவால் ஒன்றிணைந்த கிராமங்களின் மீது விமானம் மூலம் […]

Categories
உலக செய்திகள்

“அதிர்ச்சி!”.. துக்கம் அனுசரிக்க வந்த மக்களை கொன்ற ராணுவம்.. மியான்மரில் தொடரும் கொடூரம்..!!

மியான்மர் இராணுவத்தினரால் சுட்டு கொல்லப்பட்ட இளைஞரின் இறுதி சடங்கில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மியான்மரின் வணிக தலைநகரான யாங்கோனிற்கு அருகில் இருக்கும் Bago என்ற பகுதியில்  கடந்த சனிக்கிழமை அன்று Thae Maung Maung என்ற 20 வயது இளைஞரை இராணுவம் சுட்டுக்கொன்றது. இவரின் இறுதி சடங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்து கொண்டிருந்தபோது திடீரென பாதுகாப்பு படையினர் அந்த பகுதிக்குள் நுழைந்தனர். அதன் பின்பு துக்கம் விசாரிக்க சென்ற மக்களை […]

Categories
உலக செய்திகள்

ஒரு வயது குழந்தையின் கண்ணில் சுட்ட கொடூரம்.. மியான்மரில் தொடரும் அட்டூழியம்.. ஒரே நாளில் 114 பேர் சுட்டுக்கொலை..!!

மியான்மரில் இராணுவ ஆட்சி இரக்கமின்றி ஒரு வயது குழந்தையின் கண்ணில் சுட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  மியான்மர் ராணுவம் கடந்த மாதத்தில் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றியதுடன் முக்கிய தலைவர்களையும் சிறை வைத்தது. இதனைத்தொடர்ந்து நாடு முழுவதும் பொதுமக்கள் இராணுவத்தின் அதிகாரத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் ராணுவம்  கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தியும், மக்களை சுட்டுக் கொன்று குவித்துவருகிறது. Heartbreaking images of a one-year-old baby in Thamine, Yangon, who was […]

Categories
உலக செய்திகள்

“இது ஆயுதப்படை தினம் அல்ல”…. கண்மூடித்தனமாக தாக்கிய ராணுவம்….கண்டனம் தெரிவித்த ஐக்கிய நாடுகள்…!!

மியான்மரில் ஆயுதப்படை தினத்தன்று ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 97 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மியான்மரில் நடைபெற்றுக்கொண்டிருந்த மக்கள் ஆட்சியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தை அடக்குவதற்காக இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மியான்மரில் ஆயுதப்படை தினத்தன்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தின் போது பொதுமக்கள் சிலர் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு […]

Categories
உலக செய்திகள்

தொடரும் போராட்டம் …ஒடுக்கும் ராணுவம்… மியான்மாரில் பதற்றம்…!!!

மியான்மர் இராணுவ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்போது வரை 320 பேர் உயிரிழந்துள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அறிவித்து ராணுவம் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி ஆட்சியை கைப்பற்றியது. மேலும் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்து வீட்டிலேயே சிறை வைத்தது. அதனால் ஜனநாயக ஆட்சி அமையவும் அரசியல் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்யவும் கோரி […]

Categories
தேசிய செய்திகள்

மியான்மர் வன்முறை… பலி எண்ணிக்கை 370 ஆக உயர்வு..!!

மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதற்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் 320 பேர் பலியாகி உள்ளனர். மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி, பிப்ரவரி 1ஆம் தேதி ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. மேலும் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து ராணுவ ஆட்சிக்கு எதிராக அங்கு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் . நாட்டில் ஜனநாயகத்தை […]

Categories
உலக செய்திகள்

ராணுவம் நடத்திய துப்பாக்கி சூடு…. இளவயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மியான்மர் ராணுவத்தால் கொல்லப்பட்ட 7 வயது சிறுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மியான்மர் ராணுவம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்நாட்டில் நடைபெற்று கொண்டிருந்த மக்களாட்சியை கைப்பற்றியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் ராணுவம் ஆட்சியினை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை அடக்குவதற்காக மியான்மர் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றது. மேலும் மியான்மர் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை 20 சிறுவர்கள் உட்பட 164 பேர் கொல்லப்பட்டுள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

மியான்மரில் 7 வயது சிறுமி சுட்டுக்கொலை …உச்சகட்ட அதிர்ச்சி செய்தி…!!!

மியான்மர் இராணுவத்தால் 7 வயது சிறுமி சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . மியான்மர் நகரில் கடந்த சில மாதங்களாகவே ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்தப் போராட்டத்தில் ஏராளமான மக்கள் பங்கேற்று உள்ளனர். மேலும் அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள்சிலர் ராணுவத்தினரால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி படுகாயமடைந்தோர் ஏராளம். அதையெல்லாம் பொருட்படுத்தி கொள்ளாமல் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

குடியிருப்புக்குள் சீறி பாய்ந்த குண்டு…. இளவயது சிறுமி துடி துடித்த கொடூரம்…. மியான்மரில் பரபரப்பு…!!

மியான்மர் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 வயது சிறுமி பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மியான்மர் ராணுவம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்நாட்டில் நடைபெற்று கொண்டிருந்த மக்களாட்சியை கைப்பற்றியுள்ளது. மேலும் மியான்மர் ராணுவம் அந்நாட்டின் முக்கிய தலைவர்களையும் சிறை வைத்துள்ளது. இதனால் மியான்மர் மக்கள் ராணுவ ஆட்சியை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை அடக்குவதற்காக மியான்மர் ராணுவம் அவ்வப்போது துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றது. மேலும் மியான்மரில் இதுவரை நடைபெற்ற […]

Categories
உலக செய்திகள்

“மியான்மரில் தொடரும் பாதுகாப்பு படையினரின் அராஜகம்”… படுகொலை செய்யப்பட்ட 14 வயது சிறுவன்… கதறி அழுத தாய்…!!

மியான்மரில் குடியிருப்புக்குள் புகுந்து பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 14 வயது சிறுவன் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். மியான்மரில் ஆங் சான் சூகியின் ஜனநாயக கவிழ்க்கப்பட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனால் நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டத்தில் இதுவரை 250 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பு படையினரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 2665 பேர் கைது செய்யப்பட்டதில் 2290 பேர் இன்னும் விடுதலை ஆகவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ராணுவ ஆட்சிக்கு எதிராக […]

Categories
உலக செய்திகள்

இதுவரை 235 மக்களை கொன்ற இராணுவம்.. மியான்மரில் கொடூரம்.. உலக தலைவர்கள் கண்டனம்..!!

மியான்மரில் 200 க்கும் அதிகமான மக்கள் இராணுவத்தால் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  மியான்மர் நாட்டில் ராணுவத்தின் அதிகாரத்திற்கு கண்டனம் தெரிவித்து போராடி வரும் மக்களில் சுமார் 235 நபர்கள் ராணுவத்தால் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதனை மியான்மரின் சிவில் உரிமைகள் குழு உறுதிப்படுத்தி இருக்கிறது. மேலும் கடந்த வியாழக்கிழமை அன்று உயிரிழந்த நபர்களின் எண்ணிக்கை 224 ஆக அதிகரித்திருக்கிறது. அதற்கு மறுநாளே மீண்டும் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் மேலும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதும் சிவில் உரிமைகள் […]

Categories
உலக செய்திகள்

43நாட்களில்…. 138பேர் படுகொலை…. ஐநாவின் அதிர்ச்சி அறிக்கை…!!

மியான்மரில் சென்ற 43 நாட்களில் ராணுவத்தினருக்கு எதிராக அறவழியில் போராடிய 138 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நடப்பு ஆண்டின் பிப்ரவரி 1ஆம் தேதி மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சாங் சூகியின் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அந்நாட்டு ராணுவ ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதனால் மியான்மர் மக்கள் எங்களுக்கு ராணுவ ஆட்சி வேண்டாம் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். அதனை ஒடுக்குவதற்காக ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தி மக்களை கொன்று குவிக்கின்றனர் […]

Categories
உலக செய்திகள்

“மியான்மர் ராணுவத்தின் கொடூரச் செயல்” … 22 பேர் சுட்டுக் கொலை… 2 நகரங்களில் அமலுக்கு வந்தது ராணுவ சட்டம்…!!

மியான்மரில் உள்ள யாங்கூன் நகரின் 2 முக்கிய பகுதிகளில் ராணுவ சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. மியான்மரில் ஆங் சாங் சூகியின் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு அந்நாட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதனால் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்டம் நடத்தும் மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவது, கண்ணீர் புகை குண்டுகளை வீசுவது போன்ற அடக்குமுறைகள் கையாளப்பட்டது. இருப்பினும் நாளுக்கு நாள் ராணுவத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் வலுவடைந்து கொண்டுதான் இருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

அங்க நிலைமை சரியில்லை… “சரியாகுற வரைக்கும் இங்க வந்து தங்கிக்கோங்க”… மியான்மர் மக்களுக்கு அழைப்பு விடுத்த அமெரிக்கா…!!

மியான்மரில் வன்முறை அதிகரிப்பதால் மியான்மர் குடிமக்கள் அமெரிக்காவில் வந்து தற்காலிகமாக வசிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  மியான்மரில் ஆங் சான் சூகியின் ஜனநாயக ஆட்சிக் கவிழ்க்கப்பட்டு ராணுவம் நாட்டு ஆட்சியை கைப்பற்றியது. இதனால்  மியான்மர் குடிமக்கள் தங்களுக்கு ராணுவ ஆட்சி வேண்டாம் என்று வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்தும் மக்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு துறை செயலாளர் Alejandro Mayorkas அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் […]

Categories
உலக செய்திகள்

இந்த நாட்ல இருக்காதீங்க… “சீக்கிரமா வெளிய போங்க”… பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிரபல நாடு…!!

மியான்மரில் வசிக்கும் பிரிட்டன் மக்கள்  உடனடியாக மியான்மரை விட்டு வெளியேறவேண்டுமென்று பிரிட்டன் வெளியுறவுத்துறை எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மியான்மரில் ஆங் சான் சூகியின் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவம்  அந்நாட்டு ஆட்சியை கைப்பற்றியது. இதனால் மியான்மரில் பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மியான்மர் ராணுவம் தனது அதிகாரத்தை தக்க வைப்பதற்காக பொதுமக்களுக்கு  எதிராக குற்றங்களை செய்யத்  துணியும் என்று ஐ.நா. எச்சரிக்கை விடுத்தது. இதனால் பிரிட்டன் வெளியுறவுத்துறை மியான்மரில் வசிக்கும் பிரிட்டனை […]

Categories
உலக செய்திகள்

ராணுவ சேனல்கள் அனைத்தும் முடக்கம்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

மியான்மரில் ராணுவம் சார்ந்து இயங்கும் 5 யூடியூப் சேனல்கள் நீக்கியுள்ளதாக அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. மியான்மார் நகரில் கடந்த சில நாட்களாக ராணுவத்துக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடந்துகொண்டு வருகிறது . அதன்பிறகு நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் ஆங்சான் சூச்சி யின் தேசிய கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதாக இருந்து ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி ராணுவத்துக்கும் மியான்மார் அரசுக்கும் மோதல் நீடித்து வந்த நிலையில் ஆங்சான்சூச்சியின் ஆட்சியை களைத்து ராணுவம் […]

Categories
உலக செய்திகள்

கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லையா…? 9 பேரை சுட்டுக் கொன்ற போலீஸ்… மியான்மரில் வலுக்கும் போராட்டம்…!!

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் 9 பேரை காவல்துறையினர் சுட்டு கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மியான்மரில் ஆங் சாங் சூகியின் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவம் அந்நாட்டு ஆட்சியை கைப்பற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மியான்மரின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் தற்போது  9 பேரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மியான்மரில் Mandaley  என்ற நகரத்தில் நடத்தப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

மியான்மரில் தொடரும் கொடூரம்…. மக்களுக்கு எங்கள் ஆதரவு…. கண்டனம் தெரிவித்த அமெரிக்கா….!!

மியான்மரில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதால் அங்குள்ள மக்கள் ராணுவத்தின் அடக்குமுறையால் கடும் வேதனைக்கு ஆளாகியுள்ளனர். மியான்மரில் பிப்ரவரி 1 முதல் ராணுவ ஆட்சி முறை அமல்படுத்தப்பட்டதோடு அனுமதியின்றி விமானங்களை இயக்கவும் இணையதள சேவையை முடக்கியும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தியும் ராணுவத்தினர் மக்களை வன்கொடுமை செய்து வருகின்றனர். தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது எனக்கூறி அதிபர் வின் மைண்ட் அரசு ஆலோசகர் ஆங் சான் சுகி உள்ளிட்டோரை தடுப்புக் காவலில் […]

Categories
உலக செய்திகள்

எத்தனை பேர வேணாலும் கொல்லுங்க… எங்க போராட்டம் தொடரும்… மியான்மரில் மக்கள் ஆவேசம்…!!!

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மியான்மரில் சில நாட்களாகவே ராணுவத்துக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது. அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது என்று இதனை கண்டித்து கடந்த 4 வாரங்களாக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆங் சாங் சூகியும் அரசியல் தலைவர்களையும் விடுவிக்கக்கோரி ஞாயிற்றுக்கிழமை பல்லாயிரக்கணக்கானோர் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் யாகூன்,டாவே, மாண்டலே, மியேக் […]

Categories
இராணுவம் உலக செய்திகள்

இராணுவத்தின் கொடூர தாக்குதல்… கொன்று குவிக்கப்பட்ட மக்கள்… உலக தலைவர்களின் கடும் கண்டனம்…!!

மியான்மரில் நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு பல்வேறு உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். மியான்மரில் ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளது. அங்கு ராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதலில் 18 பேர் உயிரிழந்த நிலையில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி  அந்நாட்டு ராணுவத்தால் கவிழ்க்கப்பட்டு ஆங் சான் சூகி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலை கண்டித்து அந்த நாட்டு மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் அந்நாட்டு ராணுவம் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

ராணுவத்தின் வெறிச்செயல்….ரத்த கொலைவெறித் தாக்குதல்…. பீதியில் போராட்டக்காரர்கள்

மியான்மரில் ராணுவத்தினர் ரத்த கொலைவெறி தாக்குதலை தொடங்கியுள்ளதால் போராட்டக்காரர்கள் பீதியில் உள்ளனர். மியான்மரில் தேர்தல் முறைகேடு நடந்திருப்பதாக கூறி வெற்றி பெற்ற ஆங் சான் சூச்சியை  இராணுவத்தினர் சிறைபிடித்து ஆட்சியை கைப்பற்றினர். இதனால் பொதுமக்கள் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல இடங்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ராணுவத்தினர் ரத்தக் கொலைவெறி தாக்குதலில் களமிறங்கியுள்ளனர். கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30 பேர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் நேற்று […]

Categories
உலக செய்திகள்

பொது வெளியில் காணாமல் போன ஆங் சான் சூச்சி… எப்படி இருக்கிறார்..? வழக்கறிஞர் வெளியிட்ட தகவல்…!!

மியான்மரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதால் ஆங் சான் சூச்சி வெளியில் தென்படாத நிலையில் அவர் நலமாக இருப்பதாக அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.  மியான்மரில் கடந்த மாதத்தில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. அன்றிலிருந்து ஆங் சான் சூச்சி பொதுவெளியில் காணப்படவில்லை. இந்நிலையில் அவரின் வழக்கறிஞர் Min Min Soe என்பவர் அவர் நலமுடன் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். ஆட்சி கை மாறிய பின்பு ஒரு மாதத்திற்கு முன் ஆங் சான் சூச்சி மீது புது வழக்கு ஒன்று பதியப்பட்டது. அதாவது […]

Categories
உலக செய்திகள்

மூணு உயிர் பறிபோயாச்சு…. ராணுவ ஆட்சி வேண்டாம்…. போராடும் மக்கள் கைது….!!

மியான்மரில் ராணுவ ஆட்சியை புறக்கணித்து ஜனநாயக ஆட்சி வேண்டும் என்று நடத்தப்படும் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தால் பரபரப்பு நிலவி வருகிறது. மியான்மரில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ஆட்சியை கவிழ்த்து ஆளும் அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட தேர்தலில் மோசடி நடந்ததாக ஜனநாயக ஆட்சியை கவிழ்க்க ராணுவ ஆட்சி முற்பட்டது. மியான்மர் தலைவர் ஆங் சான் சூகி அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் […]

Categories
உலக செய்திகள்

மியான்மரில் போலீசார் வெறிச்செயல்… ஐநா கடும் கண்டனம்… பெரும் பரபரப்பு…!!!

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடும் மக்களை போலீசார் கொடூரமாக தாக்கி வருவதற்கு ஐநா கண்டனம் தெரிவித்துள்ளது. மியான்மரில்நகரில்  ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது. அந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நூற்றுக்கணக்கானோரை போலீசார்  கைது செய்துள்ளனர். இந்நிலையில் 18 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராகவும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களை, விடுவிக்கக் கோரியும் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு […]

Categories
உலக செய்திகள்

ஃபேஸ்புக் பக்கங்கள் அனைத்தும் முடக்கம்… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!

மியான்மர் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் அனைத்து பேஸ்புக் பக்கங்களும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மியான்மர் நாட்டின் தற்சமயம் நடைபெற்ற தேர்தலில் புதிதாக ஆட்சி அமைந்தது. இதனால் அந்நாட்டு ராணுவத்திற்கும், புதிதாக அமைந்த ஆட்சிக்கும் எதிரான கருத்து மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் அந்நாட்டின் ஆலோசகரான ஆங் சான் சூகி மற்றும் அந்நாட்டின் அதிபர்களை ராணுவம் சிறை பிடித்துள்ளது. இதன் காரணமாக மியான்மரில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் ஓர் ஆண்டிற்கான அவசரநிலை பிறப்பித்துள்ளதாக அந்த நாட்டு […]

Categories
உலக செய்திகள்

இராணுவ தலைவர்கள் மீது அதிரடி நடவடிக்கை… பிரபல நாடு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!

மியான்மர் ராணுவ அதிகாரிகள் மீது அமெரிக்கா கடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மியான்மர் இராணுவ ஆட்சிக்குழு தலைவர்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடையை விதித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி ப்ளிகேன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மியான்மரில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி ஆளும் இராணுவத் தலைவர்கள் குழுவைச் சேர்ந்த விமானப் படைத் தளபதி ஜெனரல் மங் க்யாவ் மற்றும் மோ மைண்ட் டன் ஆகியோர் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அமெரிக்காவில் உள்ள அவர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் […]

Categories
உலக செய்திகள்

“நீங்க என்ன செஞ்சாலும் நாங்க கைவிடவே மாட்டோம்”… மியான்மரில் வலுக்கும் சாமானிய மக்களின் போராட்டம்…!!

மியான்மரில் ராணுவத்தின் எச்சரிக்கையை மீறி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மியான்மரில் ஆங் சாங் சூகியின் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவம் அந்நாட்டு ஆட்சியை கைப்பற்றியது. மேலும் ஆங்சான் சூகி உட்பட முக்கிய தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் கடந்த மூன்று வாரங்களாக ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆங்சான் சூகி மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களை விடுவிக்கக் கோரியும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் பல பேர் உயிரிழக்க நேரிடும் என்று அந்நாட்டு […]

Categories
உலக செய்திகள்

“அநியாயத்தை கைகட்டி வேடிக்கை பார்க்க முடியாது”.. பிரபல நாட்டின் மீது பொருளாதார தடை… ஜெர்மன் எச்சரிக்கை…!

மியான்மரில் நடந்து கொண்டிருக்கும் அநியாயத்தை கைகட்டி வேடிக்கை பார்க்க முடியாது என்று ஜெர்மன் வெளியுறவுத் துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மியான்மரில் நடைபெற்ற தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி ஆங் சான் சூகி உள்ளிட்ட அதிகாரிகளை ராணுவம் சிறை பிடித்து வைத்துள்ளது. மியான்மர் மக்களும் ராணுவத்தின் செயலுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் பலத்த மோதல் ஏற்பட்டுள்ளது . மேலும்  2 பேர் கொல்லப்பட்ட நிலையில் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

“எங்களோட முக்கிய கொள்கைகளை மீறிட்டாங்க”… மியான்மர் ராணுவத்தின் Main Page நீக்கம்… Facebook அதிரடி…!!

வன்முறையை தூண்டும் விதமான பதிவுகளுக்கு எதிராக வரையறுக்கப்பட்ட கொள்கைகளை மியான்மர் ராணுவம் மீறியதால் ஃபேஸ்புக் நிறுவனம் அதிரடியான செயல் ஒன்றை செய்துள்ளது. மியான்மரில் ஆங் சான் சூகியின் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவம் அந்நாட்டு ஆட்சியை கைப்பற்றியது. இதற்கு எதிராக மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் காவல்துறையினர்  போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஃபேஸ்புக்கில் இன்று  காலை முதல் மியான்மர் ராணுவத்தின் Main Page காணாமல் போயுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

“ராணுவ ஆட்சி எங்களுக்கு வேண்டவே வேண்டாம்”… ஆர்ப்பாட்டம் செய்த பணியாளர்கள்… துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸ்….!!

மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடத்திய பணியாளர்கள்  மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மியான்மரில் ஆங் சான் சூகியின் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவம் அந்நாட்டு ஆட்சியைக் கைப்பற்றியது. பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆங் சான் சூகி உட்பட முக்கிய தலைவர்களை விடுவிக்க வேண்டுமென்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஒருபகுதியாக மியான்மரில் மாண்டலே என்னும் நகரில் உள்ள […]

Categories

Tech |