தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் சென்னையில் உள்ள பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆனால் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் சில இடங்களில் நிறைவு பெற்றதால் அந்த இடங்களில் தண்ணீர் வடிந்து விடுவதால் மக்கள் நிம்மதியாக இருக்கின்றனர். ஆனால் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நிறைவடையாத இடங்களில் சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதோடு மக்களும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். […]
Tag: மீட்பு பணிகள்
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளத்தில் மீனவர் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் நேற்று தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கடந்த 23 தினங்களுக்கு மேலாக அருவிகளில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் […]
காற்றுக்கு தாக்கு பிடிக்காமல் மரம் முறிந்து 2 வீடுகள் மீது விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் ஊட்டி டம்ளர்முடுக்கு பகுதியில் இருக்கும் மரம் முறிந்து இரண்டு வீடுகள் மீது விழுந்தது. இதனால் வீடுகளின் மேற்கூரை சேதமடைந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக வீடுகளில் இருந்தவர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு […]
பிரேசில் நாட்டில் பெய்து வரும் கனமழையின் காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 24 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரேசில் நாட்டின் தென் கிழக்கில் சாவ் பாவ்லாஎன்னும் மாநிலம் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வந்துள்ளது. கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு மற்றும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளன. இதனிடையே சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். […]
சீன நாட்டில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதில் 14 பணியாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சீன நாட்டின் தென்மேற்கு பகுதியில் இருக்கும் குய்சோவ் என்னும் மாகாணத்தில் உள்ள பீஜி நகரத்தில் ஒரு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று மாலை நேரத்தில் அங்கு கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கட்டுமானப் பணியாளர்கள் ஏராளமானோர் பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு 3000 […]
மழையினால் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கையாள தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் களமிறங்கியுள்ளனர். வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்துள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதிலும் சென்னையில் நான்கு நாட்களாக தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் ஏற்படும் இடர்பாடுகளை கையாளுவதற்காக சென்னையில் உள்ள 42 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையங்களில் இருக்கும் 1,000 தீயணைப்பு வீரர்கள் களப்பணியில் உள்ளனர். இவர்கள் நீரை வெளியேற்றுவது மற்றும மீட்பு பணியில் ஈடுபடுவது ஆகியவற்றில் தீவிரமாக இறங்கியுள்ளனர். மேலும் […]
அமெரிக்காவில் 12 மாடி அடுக்கு கட்டிடம் இடிந்து விழுந்ததில், இதுவரை எவரும் உயிருடன் மீட்கப்படாத நிலையில் 3 நாட்களாக தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவிலிருக்கும் ஃபுளோரிடாவில் கடந்த வியாழக்கிழமை 12 மாடி அடுக்கு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர்கள் தொடர்ந்து 3 நாட்களாக இடிந்து விழுந்த கட்டிடத்தில் இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் இதுவரை கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கிய […]