மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநில செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: பண்டிகை காலம் வருவதால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பெரிய திருவிழாக்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும். பொதுக்கூட்டங்கள் மற்றும் வழிபாட்டு கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் காற்றோட்ட வசதிகளை உறுதிசெய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Tag: மீண்டும் கொரோனா
மெக்ஸிகோ நாட்டின் ஜனாதிபதிக்கு இரண்டாம் முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ நாட்டின் ஜனாதிபதியான, ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோ தன் இணையதள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, “எனக்கு இரண்டாவது தடவையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. லேசான அறிகுறிகள் தான் இருந்தது. எனினும், என்னை தனிமைப்படுத்திக்கொண்டேன். எனக்கு குணமாகும் வரை இணையதளம் வழியே பணியில் ஈடுபடுவேன். உள்துறை செயலாளரான, அடன் அகஸ்டோ லோபஸ் ஹெர்னாண்டஸ், எனது மற்ற பணிகளை செய்வார்” என்று தெரிவித்திருக்கிறார். இவருக்கு இதற்கு […]
போலந்து நாட்டின் அதிபருக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போலந்து அதிபர், ஆண்ட்ரெஜ் துடாவின் அலுவலகத்தில் இருக்கும் பணியாளர்களுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது. அதனையடுத்து அதிபர் பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனினும் அவருக்கு அதற்கான அறிகுறிகள் ஏற்படவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு, கடந்த 2020 ஆம் வருடம், அக்டோபர் மாதத்திலும் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், இரண்டாவது தடவையாக அவருக்கு கொரோனா பாதிப்பு […]
செவிலியர் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி போட்ட பின்பு கொரோனா ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவை சேர்ந்த செவிலியர் Mathew W. இவர் கடந்த டிசம்பர் 18ஆம் தேதி கொரோனோவிற்கு எதிரான தடுப்பு ஊசி போட்டுள்ளார். இவர் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட பின் வழக்கமாக அனைவரும் செய்வது போல சமூக வலைதளத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக புகைப்படத்துடன் தகவல் வெளியிட்டுள்ளார். இதனை தொடர்ந்து டிசம்பர் 24 ஆம் தேதி அன்று மாலை Mathewக்கு குளிர் காய்ச்சல் […]
சீன தலைநகர் பெய்ஜிங்கில் மீண்டும் கடும் கொரோனவைரஸ் பாதிப்புகள் பதிவாகி உள்ளதால் சீன அரசு அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் உருவாகியுள்ள உருமாறிய […]
தாய்லாந்தில் 100 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் முதல் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. ஆனால் தென் கொரியா, நியூசிலாந்து மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் சில நாட்களாக கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது. அதிலும் சில நாடுகள் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக விடுபட்டு விட்டன. இந்நிலையில் தாய்லாந்து நாட்டில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்புகள் […]
கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களை மீண்டும் தொற்று தாக்கி வருவது குறித்து உலக சுகாதார அமைப்பு பதில் இல்லை என கூறியுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் மீண்டும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவது ஏன் என்ற கேள்விக்கு தங்களிடம் பதில் இல்லை என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சுகாதார மைய பணியாளர் மைக் ராயன் தெரிவித்ததாவது கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த அனைவருக்கும் மீண்டும் தொற்று ஏற்படவில்லை. சிலருக்கு மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகாததை தொடர்ந்து […]