தூத்துக்குடி, நெல்லை மாவட்ட மீனவர்களுக்கு மீன் வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதையடுத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் – புதுவை கடற்கரை நோக்கி நகர்ந்து வரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை நாட்டு படகு, விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tag: மீனவர்களுக்கு எச்சரிக்கை
நெல்லை, தூத்துக்குடி உள்பட 7 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு வங்க கடல்பகுதியில் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும் எனவும், இது மேலும் மேற்கு, வடமேற்கு திசையில் வரும் நாட்களில் தமிழக கரையை நோக்கி நகரக் கூடும் எனவும், இதன் காரணமாக இன்றும் […]
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன், தென்கிழக்கு வங்கக் கடல் முதல் தமிழக கடலோர பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவித்தார். இந்நிலையில் நாளை தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக […]
தமிழகத்தில் சில தினங்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது. கோடை வெயிலால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். குறிப்பாக சென்னையில் வெயில் கடுமையாக உளது. அளிக்கும் இதையடுத்து கோடை வெயிலுக்கு விதமாக சில நாட்களாகவே தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சில இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது. இந்நிலையில் அரபிக் கடலில் வரும் 15ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அரபிக்கடல் நோக்கி நகரக்கூடும் எனவும் இது புயலாக உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை […]
சூறைக்காற்று வீசுவதால் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் மீன் பிடிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் கடல் பகுதி ஏராளமான மீனவர்கள் சென்று மீன்பிடிப்பது வழக்கம். ஆனால் சூறாவளி காற்று மற்றும் அதிக மழை காலங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படும். அந்த சமயங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்லமாட்டார்கள். இந்நிலையில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. சூறைக்காற்று வீசுவதால் மறு […]
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவ காற்று காரணமாக கோவை, நீலகிரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் […]
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என கூறப்பட்டுள்ளது. வெயில் தாக்கம் மதுரை, திருச்சி, கரூர், தர்மபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என தகவல் அளித்துள்ளது. மீனவர்களுக்கு […]
சூறாவளி காற்று வீசும் என்பதால் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தெற்கு அந்தமான், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியா பெருங்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வரை சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வெளிமண்டல மேலடுக்கு […]