அடுத்த 2 நாட்களுக்கு மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக் கடலில் உருவாகி அதி தீவிரமடைந்த ஆம்பன் புயல் நேற்று வடக்கு-வடகிழக்கை நோக்கி நகர்ந்தது. பின்னர் மேற்கு வங்கம் மற்றும் வங்க தேசத்தின் இடையே, திஹா மற்றும் சுந்தர்பன் ஹத்தியா தீவுகள் இடையே நகர்ந்து சென்றது. பிற்பகல் 3 மணிக்கு திஹா – சுந்தர்பன் பகுதிக்கு இடையே கரையைக் கடக்க தொடங்கிய புயல் சுமார் 4 மணி […]
Tag: மீனவர்கள்
ஆம்பன் புயல் கரையை கடக்கும் போது மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். மேலும் காற்றின் வேகம் கூடும் என்பதால் மீனவர்கள், மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். வடக்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் 180 […]
ஆம்பன் புயல் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார். மேலும் நிலைமையை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது எனவும் கூறியுள்ளார். சென்னை எழிலக வளாகத்தில் மாநில பேரிடர் மற்றும் வருவாய்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ” தற்போது மிக அதி தீவிர புயலாக மாறியது ஆம்பன் மாறியது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆம்பன் புயல் காரணமாக தமிழகத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. எனவே […]
மீனவர் நலனுக்காக ரூ.20,000 கோடி ஒதுக்கீடுசெய்யப்படுவதாகும் , மீன்பிடித் தொழில்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாகவும் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். இந்த நிலையில் பிரதமரின் ‘சுயசார்பு’ திட்டம் குறித்து 3ம் கட்டமாக விவசாயம், கால்நடை, மீன்வளம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை […]
கிசான் கடன் அட்டை திட்டத்தில் மீனவர்களும், கால்நடை வளர்ப்பவர்களும் சேர்க்கப்படுவார்கள் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி சிறப்பு நிதித் தொகுப்பு திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். இந்த நிலையில் ‘தன்னிறைவு இந்தியா’ திட்டத்தின் இரண்டாம் கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். அதில் மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களுக்கு கிசான் கிரெடிட் கார்டு திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது என அறிவித்துள்ளார். 2.50 கோடி […]
தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு, கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, வடதமிழகத்தில் வரும் 16ம் தேதி முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்ஸியஸ் வரை உயரக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் […]
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. கோவை, நீலகிரி, ராமநாதபுரம், விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டையில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பலத்த காற்று, இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மணிக்கு 30-40 கி,மீ, வரை சூறைக்காற்று வீசும் என்பதால் […]
தமிழகத்தில் அடுத்து வரும் 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, மதுரை, சேலம், கரூர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய […]
தமிழக அரசு மீனவர்களுக்கு நிவாரணம் அறிவித்துள்ளது மகிழ்ச்கியை ஏற்படுத்தியுள்ளது. வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வருகின்ற 3ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த மக்களும் வீடுகளுக்குள் முடங்கிக் இருக்கின்றனர். அவர்களின் பொருளாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலன் கருதி மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றது. இந்த நிலையில்தான் மீன்பிடி தடை காலம் என்பதை கருத்தில்கொண்டு மீனவர்களுக்கு […]
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியின் சில பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. கடலூர், விழுப்புரம், திருச்சி, சேலம், பெரம்பலூர், மதுரையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ஆங்காங்கே இடியுடன் கூடிய மழையும், காற்றுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளகவும் கூறப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் […]
ஈரானில் சிக்கி தவிக்கும் மீனவர்கள் 650 பேரை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் தரைவழி, வான்வழி மற்றும் கடல் வழி போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், ஊரடங்கு அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாகவே தமிழக மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். தற்போது, ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் ஈரானில் உணவின்றி தவித்து […]
பன்னாட்டு நிறுவனங்களின் கப்பல்கள் நமது எல்லைக்குள் மீன்பிடிப்பது என்ன நீதி என்றும் கமலஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 15ம் தேதி முதல் மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்படும். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் ஏப்., 15ம் தேதி முதல் மே 15ம் தேதி ஜூன் 15ம் தேதி வரை மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை , […]
ஊரடங்கு காலத்தில் மீனவர்கள் நாட்டு படகில் சென்று மீன்பிடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதேநேரம், நோய்த்தொற்று பரவாமல் தடுக்க முகக்கவசம் உள்ளிட்டவற்றை மீனவர்கள் பயன்படுத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. மீன்பிடி துறைமுகம், மீன்பிடி இறங்குதளம், கடற்கரை பகுதிகளில் மீன்களை ஏற்றும்போதும் இறங்கும் போதும் மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை 1173 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 58 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து, தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் […]
தமிழகத்தில் நாட்டு படகில் சென்று மீன் பிடிக்க அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழக அரசு மீனவர்களுக்கென்று சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. தற்போதைய ஊரடங்கு காலம் மீன்பிடி தடை காலம் கருதி விசைப்படகுகள் மீன் பிடிப்பில் ஈடுபட அனுமதி இல்லை. தமிழகத்தில் நாட்டுப் படகுகள், இயந்திரம் பொருத்திய நாட்டுப் படகுகள் தொடர்ந்து மீன் பிடிக்கலாம். படகு […]
கேரளாவில் இன்று 12 பேருக்கு புதிதாக கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கண்ணூர் மற்றும் காசராகோடு பகுதிகளில் தலா 4, மலப்புரத்தில் 2, கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் பகுதிகளில் தலா ஒருவரும் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் கூறினார். இதையடுத்து, கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 357 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் இதுவரை 8 வெளிநாட்டவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். அதில் சிலர் […]
ஆந்திராவைச் சேர்ந்த மீன்பிடி தொழிலாளர்களுக்கு தகுந்த உதவிகள் செய்த தமிழக முதல்வர் பழனிசாமிக்கு, தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இந்தியா முழுவதும், அடுத்த மாதம் 21ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தொழில்கள் முடங்கி கிடக்கின்றன. தினக்கூலி தொழிலாளி தொடங்கி திரையுலக பிரபலங்கள் வரை அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் இந்த திடீர் அறிவிப்பால், தங்கள் ஊரிலிருந்து மற்ற மாநிலங்களுக்கு மீன்பிடிக்க […]
ஆந்திரா மீனவர்களுக்கு உதவ வேண்டும் என்று நடிகர் பவன் கல்யாண் வைத்த கோரிக்கைக்கு தமிழக முதல்வர் பழனிசாமி ட்விட்டரில் பதிலளித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இந்தியா முழுவதும், அடுத்த மாதம் 21ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தொழில்கள் முடங்கி கிடக்கின்றன. தினக்கூலி தொழிலாளி தொடங்கி திரையுலக பிரபலங்கள் வரை அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் இந்த திடீர் அறிவிப்பால், தங்கள் ஊரிலிருந்து மற்ற மாநிலங்களுக்கு மீன்பிடிக்க வந்தவர்கள், இதர தொழிலாளர்கள் […]
சென்னையில் சிக்கித்தவிக்கும் ஆந்திரா மீனவர்களுக்கு உதவ வேண்டும் என்று நடிகர் பவன் கல்யாண், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இந்தியா முழுவதும், அடுத்த மாதம் 21ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தொழில்கள் முடங்கி கிடக்கின்றன. தினக்கூலி தொழிலாளி தொடங்கி திரையுலக பிரபலங்கள் வரை அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் இந்த திடீர் அறிவிப்பால், தங்கள் ஊரிலிருந்து மற்ற மாநிலங்களுக்கு மீன்பிடிக்க வந்தவர்கள், இதர […]
எல்லை தாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படும் சம்பவம் அடிக்கடி நடைபெறுகிறது. பொதுவாக கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தாலும் அவர்களை விரட்டுவதில் அதிக கடுமையான முறையை பின்பற்றுகிறது இலங்கை கடற்படை. அதே போன்று சில சமயங்களில் வலைகளை அறுத்தல் மற்றும் படகுகளை குறிவைத்தும், மீனவர்களை குறி வைத்தும் துப்பாக்கிச்சூடு நடத்துவதையும் தொடர்ந்து ஒரு பழக்கமாகவே கொண்டுள்ளது. இதனால் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் மாயமாவது தொடர்கதையாகவே உள்ளது. இந்த நிலையில் கடந்த […]
நாகப்பட்டினம் மாவட்டம் பூம்புகாரில் 18 கிராம மீனவர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. அரசால் தடை செய்யப்பட்ட சுருக்கு வலையை மூன்று ஆண்டுகள் வரை பயன்படுத்த அனுமதிக்க கோரி மீனவர்கள் ஆலோசித்து வருகின்றனர். அரசால் தடை செய்யப்பட்ட சுறுக்கு வலையை மூன்று ஆண்டுகள் வரை பயன்படுத்த அனுமதிக்க கோரி 18 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். வேலை நிறுத்தம் நடைபெறும் நிலையில் இதுகுறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். பூம்புகார் ஆலோசனை கூட்டத்தில் நாகை, கடலூர், […]
ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை மீட்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். ஈரானில் உள்ள பல்வேறு துறைமுகங்களில் 450 இந்திய மீனவர்கள் பணிபுரிகன்றனர். அவர்களில் 300 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவில் 2,700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் எளிதில் பரவும் தன்மை கொண்டதால் கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் […]