Categories
மாநில செய்திகள்

வழக்கம் போல பக்தர்களுக்கு அனுமதி…. தடுப்பூசி உத்தரவு வாபஸ்…!!!!

கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் செல்ல அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தடுப்பூசி 2 தவணை செலுத்தியவர்கள் மட்டுமே டிச.13-ம் தேதி முதல் மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர் என்றும், கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான ஏதாவது ஓர் சான்றிதழை பக்தர்கள் வழங்கினால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த அறிவிப்பை கோயில் நிர்வாகம் வாபஸ் பெற்றது. மேலும், வழக்கம் போல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

அர்ச்சகர் திட்டம்…. விண்ணப்பங்கள் வரவேற்பு…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் சைவ அர்ச்சகர்க்கான பயிற்சி பள்ளி தலைமை ஆசிரியர், ஆகம ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் திருக்கோயில் அலுவலகத்திலோ அல்லது நேரிலோ அல்லது www.maduraimeenakshi.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் சமய வகுப்புகள் தொடங்கப் பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

டிச-16 முதல் நடை திறப்பில் மாற்றம்…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருப்பள்ளி எழுச்சி பூஜைக்காக டிச.16 முதல் 2022 ஜன.13 வரை நடைதிறப்பில் மாற்றம் செய்யப்படுகிறது. இந்நாட்களில் கோயில் வெளிக்கோபுர கதவுகள் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படும். உச்சிகால பூஜை முடிந்து மதியம் 12 மணிக்கு நடை சாத்தப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு இரவு 8:30 மணிக்கு பல்லாக்கு புறப்பாடாகி பூஜை ஆரம்பமாகி இரவு 9 மணிக்கு பூஜை முடிந்து கோயில் நடைசாத்தப்படும். இந்நாட்களில் அதிகாலை 4:30 மணி முதல் […]

Categories
ஆன்மிகம் மாநில செய்திகள்

அனைத்து கோபுரங்கள் வழியாக வர அனுமதி – நிர்வாகம் அறிவிப்பு…!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த வருடம் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பக்தர்களுக்காக கோவில் திறக்கப்பட்டு 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களும், வயதானவர்களும் கோவிலுக்கு வர தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் இன்று முதல் வயதானவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதேபோன்று பூஜை பொருட்கள் மற்றும் சுவாமிக்கு மாலை சாத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இன்று முதல் சுவாமிக்கு மாலை […]

Categories

Tech |