Categories
பல்சுவை

ப்ளீஸ் அதை விட்ருங்க பாவம்!…. மீனை காப்பாற்ற நாய் செய்த செயல்…. நெகிழ்ச்சி வீடியோ…..!!!!

விலங்குகளின் வீடியோகளுக்கு மட்டும் இணையத்தில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தற்போது ஒரு சுவாரசியமான வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு இடையிலுள்ள பிணைப்பையும் நட்பையும் வெளிக்காட்டும் பல வீடியோக்கள் சமூகஊடகங்களில் பகிரப்படுகிறது. அந்த வகையில் அண்மையில் பிற உயிர்கள் மீது பரிவுகொண்ட நாய் ஒன்று, ஒரு நபர் மீனை வெட்டுவதைத் தடுக்கும் வீடியோ டுவிட்டரில் பகிரப்பட்டது. அந்த வீடியோவின் தொடக்கத்தில் நபர் ஒருவர் தன் கையில் கசாப்புக் கத்தியை வைத்திருப்பதை காண […]

Categories
உலக செய்திகள்

மீனின் வாய்க்குள் புகுந்து…. நாக்கை தின்னும் விசித்திர ஒட்டுண்ணி…

இங்கிலாந்து நாட்டில் மீனின் வாய்க்குள் புகுந்து நாக்கை தின்னும் வித்தியாசமான ஒட்டுண்ணி கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இங்கிலாந்தில் இருக்கும் சபோல்க் என்னும் நகரத்தில் இறக்குமதியான மீன்களில் ஒரு மீனின் வாய் மட்டும் வித்தியாசமாக இருந்துள்ளது. அது, ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. அதன்படி வெளியான தகவலில். அந்த மீனின் வாய் பகுதியில் நாக்கு இருக்கும் இடத்தில் ஒரு ஒட்டுண்ணி இருந்திருக்கிறது. சிமோதோவா எக்சிகுவா என்ற பெயர் கொண்ட இந்த ஒட்டுண்ணி மீனின் சுவாச பகுதியினுள் சென்று வாய்க்குள் புகுந்திருக்கிறது. அதன் பிறகு நாக்கை தின்று […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே….! இவ்வளவு பெருசா…. மீனை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த மக்கள்…. வெளியான பகீர் காரணம்…..!!!!!

சிலி நாட்டில் உள்ள அரிகா என்ற பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சில தினங்களுக்கு முன்பாக கடலுக்கு சென்று மீன் பிடிக்க சென்றனர். அப்போது வலையை வீசி மீனுக்காக காத்திருந்தபோது ஏதோ பிரம்மாண்டமான மீன் ஒன்று வலையில் சிக்கியதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். Now that’s the real #CatchOfTheMatch. 16 ft long magnificent #Oarfish was caught by fishermen off the coast of Chile. #FridayFacts pic.twitter.com/NfYE2onxjY — KunalSarangi (@KunalSarangi) July 15, […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பொதுமக்களை ஏமாற்றும் கடைகள்” மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…. ஆய்வு செய்த அதிகாரிகள்….!!!!

அனைத்து மீன் கடைகளையும்  ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள மீன் கடைகளில் ரசாயனம் கலந்த மீன்கள் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மாவட்ட ஆட்சியர் சமீரன் 3  குழுக்களை அமைத்து அனைத்து கடைகளிலும் ஆய்வு செய்ய அதிரடியாக உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பெயரில் உணவுத்துறை அதிகாரிகள் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் ரசாயன பொருட்கள் கலந்த மீன் விற்பனை […]

Categories
மாநில செய்திகள்

அசைவ பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

அசைவ பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக மீன்பிடி தடைக்காலம் உள்ளிட்ட காரணங்களால் மீன் விலை உச்சத்தில் இருந்தது. தற்போது மீன் பிடி தடை காலம் முடிவடைந்து மீனவர்கள் மீண்டும் பழையபடி மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளதால் இன்று மீன் விலை சற்று குறைந்துள்ளது. சென்னை காசிமேடு உள்ளிட்ட தமிழகத்தின் பல மார்க்கெட்டுகளில் மீன் விலை குறைந்து காணப்பட்டது. அதன்படி சராசரியாக ஒரு கிலோ நெத்திலி 150 ரூபாய்க்கும்,  இறால் – நண்டு ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

மீன் குழம்பு சாப்பிட்டவர்களுக்கு வயிறு வலி…. பச்சை மீன் சாப்பிட்ட பூனைகள் பலி….!!!

மீன் குழம்பு சாப்பிட்டவர்களுக்கு வயிற்று வலி ஏற்பட்ட நிலையில் பச்சை மீனை சாப்பிட பூனைகள் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . கேரள மாநிலம் இடுக்கி  நெடுங்கண்டம் தூக்கு பாலம் பகுதியில் மீன் குழம்பு சாப்பிடவர்களுக்கு வயிற்று வலி மற்றும் பச்சை மீன் சாப்பிட்ட பூனைகள் இறந்ததால் மீன் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த  சம்பவம் குறித்து விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை […]

Categories
உலக செய்திகள்

காதலர்கள் வலையில் மாட்டி கொண்ட டைனோசர் மீன்…. வெளியான புகைப்படம்…..!!!!!

கனடாவில் பொழுதுபோக்குக்காக ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காதர்களின் வலையில் 159 கிலோ எடையுள்ள வாழும் டைனோசர் என்று அழைக்கப்படும் ஸ்டர்ஜன் மீன் சிக்கியது. கனடாவின் ஆல்பெர்ட்டா பகுதியில் பிரேடன் ரூஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொழுதுபோக்குக்காக ஆல்பர்ட்டா பகுதியிலுள்ள ஆற்றில் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது திடீரென்று அவரது வலையில் 8 அடி நீளமுள்ள மிகப்பெரிய மீன் ஒன்று சிக்கி உள்ளது. இதையடுத்து அவர் உடனே அதனை வெளியே எடுக்க முயற்சி செய்தார். எனினும் அவரால் அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“வலையில் சிக்கிய அரியவகை மீன்”…. மீனவர் மீண்டும் செய்த வியக்க வைக்கும் செயல்….!!!!

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ராமேஸ்வரம் பகுதியில் மீனவர் ஒருவரின் வலையில் அரிய வகை ஆழ்கடல் கவச மீன் ஒன்று சிக்கியுள்ளது. இந்திய பெருங்கடலில் ஆழமான பகுதிகளில் காணப்படும் இந்த மீன்கள் கரடுமுரடான வெளிப்புறம் கொண்டது. மேலும் கொம்புகள் கூரான செவில்களுடன் காணப்படுகிறது. இவ்வாறு மீன்பிடி வலையில் சிக்கிய இந்த மீனை மீனவர்கள் மீண்டும் கடலில் விட்டுள்ளனர்.

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“மீன் வலையில் சிக்கிட்டு”…. அப்படியே முதலை போல இருக்கு…. வியப்புடன் பார்த்த பொதுமக்கள்….!!!!!

நாகை மாவட்டத்திலுள்ள அக்கரைப்பட்டி மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றபோது அவர்கள் வலையில் முதலை மீன் ஒன்று சிக்கிக் கொண்டது. இதனை அறிந்த பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்து அந்த முதலை மீனை வியப்புடன் பார்த்துச் சென்றனர். இந்நிலையில் அங்கு இருந்த ஒரு நபர் அந்த மீனின் சுவை எவ்வாறு இருக்கும் என்று அறிந்துகொள்வதற்காக அதை வாங்கிச் சென்றுள்ளார்.

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பெய்து வரும் தொடர்மழை…. இதை காயவைக்கும் தொழில் பாதிப்பு…. தவிக்கும் தொழிலாளர்கள்….!!

மழையின் காரணமாக கருவாடு காயவைக்கும் தொழில் பாதிக்கப்பட்டதால் 500-க்கும் மேற்பட்டவர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கொள்ளுக்காடு, மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், மந்திரிபட்டினம், செம்பியன்மாதேவிபட்டினம் உட்பட 34 கிராமங்களில் 4 ஆயிரத்து 500 நாட்டுப்படகு வைத்திருப்பவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். மேலும் மல்லிபட்டினம், கள்ளிவயல்தோட்டம், சேதுபாவாசத்திரம் போன்ற பகுதிகளில் 134 விசைப்படகு வைத்திருப்பவர்களும் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இந்தப் படகுகளில் அன்றாடம் வரக்கூடிய இறால், நண்டு, மீன், கணவாய் போன்றவற்றை மீனவர்கள் விற்றுவிட்டு பின் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மீன்பிடிக்க சென்ற வாலிபர்…. வழியில் நடந்த விபரீதம்…. தூத்துக்குடியில் சோகம்….!!

மீன் பிடிக்கச் சென்ற வாலிபர் மீது மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி பகுதியில் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. இந்நிலையில் வெள்ளப்பட்டி 50 வீடு காலனியில் வசித்து வரும் மீனவர் அந்தோணி ஜெசுலர் தனது சகோதரர் சதீஸ் என்பவருடைய பைபர் படகில் மீன்பிடிக்க சென்றார். இதனையடுத்து அந்தோணி ஜெசுலர் மீன்களைப் பிடித்துக் கொண்டு வெள்ளப்பட்டியில் இருந்து சுமார் 3 மைல் தொலைவில் வந்து கொண்டிருந்தார். அப்போது […]

Categories
தேசிய செய்திகள்

வெளுத்து வாங்கும் மழை… ‘உயிரை பனயம் வைத்து இதற்காக ஆற்றில் குதித்த கேரள இளைஞர்கள்’…. வைரலாகும் வீடியோ….!!!

கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் தென்மலை அணை திறக்கப்பட்டு அதில் பொதுமக்கள் மீன்பிடித்து வருகின்றனர். கேரளாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றது. மேலும் அணைகளும்  அதன் கொள்ளளவு எட்டியுள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இடுக்கி, இடமலையார், பம்பா மற்றும் காக்கி  உட்பட மாநிலத்தின் மொத்தம் 78 அணைகளில் இருந்து அதிகமான தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதேபோன்று கேரளாவின் இடுக்கி நீர்த்தேக்கத்தின் ஒரு பகுதியான செருதோணி அணை கடந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? குவியல் குவியலாக மீன்கள்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

ஏரியில் திடீரென மீன்கள் செத்து மிதந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள அல்லிக்குட்டை ஏரியில் தொடர் மழை காரணமாக தற்போது தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதனால் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள அந்த ஏரியை பராமரிக்கவும், மீன்கள் பிடிக்கவும் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டது. இந்நிலையில் அல்லிக்குட்டை ஏரியில் மீன்கள் குவியல் குவியலாக செத்து மிதந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். எனவே ஏரி தண்ணீரில் யாராவது விஷம் கலந்து மீன்கள் செத்து இருக்கலாம் என்று பொதுமக்கள் கருதுகின்றனர். கடந்த 2 நாட்களாக […]

Categories
உலக செய்திகள்

பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா இடையில்…. மீன்பிடித்தல் விவகாரம்…. மோதல் வெடிக்கும் நிலை….!!

மீன்பிடித்தல் விவகாரத்தில் பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய நாடுகளுக்கு இடையில் மீண்டும் மோதல் வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரெக்சீட்டுக்குப் பிந்தைய உரிமைகளின்படி பிரித்தானிய கடல் பகுதியில் மீன் பிடிப்பதற்கு 47 ஐரோப்பிய ஒன்றிய சிறிய படகுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் வெறும் 12 படகுகளுக்கு மட்டுமே பிரித்தானிய கடல் பரப்பில் மீன் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் பிரித்தானியாவுக்கு சொந்தமான தீவான Jersey, தன் கடற்கரையில் எத்தனை ஐரோப்பிய ஒன்றிய படகுகள் மீன் பிடிக்கலாம் என அறிவிக்க […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

புரட்டாசி மாதம் வந்துட்டு…. குறைவாக வந்த பொதுமக்கள்…. வியாபாரிகளின் தகவல்….!!

புரட்டாசி மாதம் வந்ததை அடுத்து பொதுமக்கள் மீன்கள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டவில்லை என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழவாசல் பகுதியில் இயங்கி வந்த மீன் மார்க்கெட் கொரோனா தொற்று பரவல் காரணமாக திறக்கப்படவில்லை. இதனால் கொண்டிராஜபாளையம் பகுதி மற்றும்  மாநகரின் பல்வேறு இடங்களில் மீன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் கொண்டிராஜபாளையத்தில் 20-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகிறது. இங்கு வழக்கம்போல் ஞாயிறு, திங்கள், புதன், வியாழன் போன்ற கிழமைகளில் பொதுமக்கள் அதிகமாக காணப்படுவர். […]

Categories
உலக செய்திகள்

மனிதர்கள் போலவே பற்கள் கொண்ட மீன்.. இணையத்தளத்தில் வைரலாகும் புகைப்படம்..!!

அமெரிக்காவில் மனிதர்களைப் போலவே பற்கள் உடைய மீன் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட ஒரு மீனின் பற்கள், மனிதர்களின் பற்கள் போன்றே இருந்துள்ளது. எனவே அதனை புகைப்படம் எடுத்து இணையதளத்தில் ஒருவர் வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த இணையதளவாசிகள் பலரும் ஆச்சரியம் அடைந்தார்கள். இந்த மீன், ஷிப்ஷீட்  வகையை சேர்ந்தது என்று சிலர் கூறுகிறார்கள். இந்த மீனின் பற்கள் கடினமாக இருக்கக்கூடிய இறையை மென்று உண்பதற்கு பயன்படுகிறதாம். தற்போது இந்த மீனின் புகைப்படம் சமூக […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மீன் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு…. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. காவல்துறையினரின் நடவடிக்கை…..!!

மீன் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் புதுபத்தூரில் உள்ள குளத்தில் கிராம மக்கள் மீன் பிடித்து விற்பனை செய்து அதில் கிடைக்கும் பணத்தில் கிராமத்திற்குத் தேவையான பொதுவான செலவிற்கு பயன்படுத்தி வந்ததாக தெரிகின்றது. இந்நிலையில் கடந்த ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. ஒன்றிய பொருளாளரும், ஒன்றிய கவுன்சிலருமான நடராஜன் அந்தக் குளத்தை தனது ஆக்கிரமிப்பில் வைத்துக் கொண்டதாகவும், வேறு யாரும் மீன் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

முக கவசம் போடல…. கூட்டம் அதிகமா இருக்கு…. பொதுமக்களின் கோரிக்கை….!!

மீன் மார்க்கெட்டில் சமூக இடைவெளி இன்றி பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி வேலூர் மாவட்டம் மக்கான் மீன்மார்க்கெட்டில் மொத்த மீன் விற்பனையும், அங்குள்ள பேருந்து நிலையத்தில் சில்லரை மீன் விற்பனையும் நடைபெற்று வருகின்றது. எனவே கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, விழுப்புரம் போன்ற பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கடலில் ஏற்பட்ட சீற்றம்…. பாதியில் திரும்பிய மீனவர்கள்…. ஏமாற்றத்துடன் சென்ற பொதுமக்கள்….!!

கடல் சீற்றத்தால் கட்டுமர மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஏமாற்றத்துடன் சென்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வள்ளங்களும் வைத்து மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து மீன்கள் இனப்பெருக்கம் பருவகாலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிக்க கடந்த மே மாதம் 31-ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக விசைப்படகுகள் வைத்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“தேடி வந்த அதிர்ஷ்டம்” ஒரே நாளில் ஏழை மீனவரை…. லட்சாதிபதி ஆக்கிய மீன்…!!!

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி பகுதியைச் சேந்த மீனவர் சிங்கராஜூ. இவர் வழக்கம்போல சம்பவத்தன்று ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது அவருடைய வலையில் கச்சிலி (கடல் தங்க மீன் ) சிக்கியுள்ளது. இதையடுத்து அந்த மீன் வித்தியாசமாக இருந்ததால் இதுகுறித்து அவர் பலரிடம் கேட்டுள்ளார். அப்போது இந்த மீனின் மூலம் பல வகையான மருந்துகள் தயாரிக்க படுவதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த மீன் வணிகரீதியாக சந்தையில் அதன் தேவை அதிக அளவில் உள்ளது. இதையடுத்து கரைக்கு வந்த அவர் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

குளத்தில் இருந்து பிடித்தோம்…. சில மணி நேரத்தில் விற்பனை…. ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள்…..!!

நன்னிலம் அருகில் குளத்தில் பிடிக்கப்பட்ட மீன்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அறிவித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனால் மருந்தகம் உள்ளிட்ட சில கடைகளைத் தவிர்த்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருக்கின்றது. எனவே இறைச்சி பொருட்களான மீன், ஆடு, கோழி போன்றவை விற்பனை செய்ய முடியாததால் மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனையடுத்து கிராமத்தில் இருப்பவர்களுக்கு கடல்மீன் கிடைக்காததால் குளத்தில் பிடிக்கப்படும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் இவ்வளவு கூட்டமா… அடித்து பிடித்து வாங்கிய வியாபாரிகள்… போலீஸ் சூப்பிரண்டின் எச்சரிக்கை…!!

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் முழு ஊரடங்கையொட்டி மீன் வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் ஒரே நேரத்தில் குவிந்தனர்.  கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் விசைப் படகுகளையும், கட்டுமரங்களையும், வள்ளங்களும் தங்கு தளமாக கொண்டு  மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு என்பதால் நேற்று அனைத்து கடைகளையும் திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியது. இதனால் குளச்சல் மீன் சந்தையில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

அசைவப் பிரியர்களே… இறைச்சி மற்றும் மீன் கெட்டுப் போகாமல் இருக்க… இந்த டிப்ஸ மட்டும் ஃபாலோ பண்ணுங்க..!!

இறைச்சி, மீன் போன்றவற்றை கெட்டுப்போகாமல் எப்படி பாதுகாப்பது என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். இறைச்சி மற்றும் மீனை பாலிதீன் கவர்களில் வைத்து பிரிட்ஜின் உள்ளே வைக்க வேண்டும். சமைக்காத அசைவ  பொருளையும், சமைத்த அசைவ பொருளையும் சேர்த்து வைக்ககூடாது. சமைக்காத இறைச்சியை  மூன்று அல்லது நான்கு நாட்கள் பிரிட்ஜில் வைத்து அதை டிபுரோஸ்ட் செய்ய பிரிட்ஜின் உள்ளேயே வைப்பது நல்லது. அதாவது பிரிட்ஜில் இருந்து எடுத்து பிரிட்ஜின் அடியில் உள்ள அறையில் 24 மணி நேரம் […]

Categories
லைப் ஸ்டைல்

அடிக்கடி மீன் சாப்பிடுவது… உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா..? கெட்டதா..? வாங்க பார்க்கலாம்..!!

அடிக்கடி நம் உணவில் மீனை சேர்ப்பது நல்லதா என்பதை குறித்து இதில்தெரிந்து கொள்வோம். மீனில் இருக்கும் வைட்டமின் டி, எலும்புகள், பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவும். தினமும் ஏதாவது ஒரு மீன் சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் டி சத்துக்கள் கிடைக்கும். மீன் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. மனச்சோர்வு மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் தினமும் மீன் சாப்பிட்டு வரலாம். மீனில் உள்ள ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள். வைட்டமின்கள் போன்றவை மனநிலை பிரச்சனையை தடுக்கும். மீனில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

இறைச்சிக்காக வெட்டிய போது… மீனின் வயிற்றுக்குள் இருந்த…”முழு பிளாஸ்டிக் பை”… இது பெரிய ஆபத்து..!!

பெங்களூருவை அடுத்த மங்களூருவில் இறைச்சிக்காக வெட்டப்பட்ட மீனில் ஒரு முழு பிளாஸ்டிக் பை இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூருவில் மீன் கடை ஒன்றில் கடை உரிமையாளர் ஒருவர் இறைச்சிக்காக மீனை வெட்டியுள்ளார். அதில் ஒரு முழு பிளாஸ்டிக் பை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்த மீன் முரு  வகையை சேர்ந்தது. அதன் எடை 10 கிலோ இருக்கும். இதனை கடை உரிமையாளர் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இது […]

Categories
தேசிய செய்திகள்

மீனின் வயிற்றில் நீர் ஆமை… என்ன ஒரு அதிசயம்… வியப்பில் ஆழ்ந்த ஆராய்ச்சியாளர்கள்…!!!

மீனுக்கு இணையான ஒரு குட்டி நீ ஆமை ஒன்று எவ்வித சேதமும் இல்லாமல் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரியலாளர் ஒருவர் மீன்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது அவரின் உதவியால் இந்த ஆமை காப்பாற்றப்பட்டது. ஒரு லார்ஜ் மவுத் பாஸ் என்ற மாமிசம் மீன் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் போது உயிரியலாளர்கள் மீனின் வயிற்றுப்பகுதியில் ஏதோ ஒன்று விசித்திரமாக இருப்பதை கண்டனர். அப்போது அதன் வயிற்றைத் திறந்து பார்த்தபோது ஒரு சிறிய ஆமை ஒன்று உயிருடன் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“அடிக்கடி மீன் சாப்பிடுவது நல்லதா”..? வாங்க பார்க்கலாம்..!!

அடிக்கடி நம் உணவில் மீனை சேர்ப்பது நல்லதா என்பதை குறித்து இதில்தெரிந்து கொள்வோம். மீனில் இருக்கும் வைட்டமின் டி, எலும்புகள், பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவும். தினமும் ஏதாவது ஒரு மீன் சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் டி சத்துக்கள் கிடைக்கும். மீன் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. மனச்சோர்வு மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் தினமும் மீன் சாப்பிட்டு வரலாம். மீனில் உள்ள ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள். வைட்டமின்கள் போன்றவை மனநிலை பிரச்சனையை தடுக்கும். மீனில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

இந்த மீனுக்கு ஓவர் கான்பிடன்ட்… இவ்ளோ பெருச முழுங்க பார்க்குது….வைரலாகும் வீடியோ…!

ஐபிஎஸ் அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்திய வனத்துறை ஐபிஎஸ் அதிகாரியான சுசாண்ட நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் மீன் ஒன்று விலாங்கு மீனை வேட்டையாடிக் கொண்டிருப்பதை வீடியோவாக எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் விலாங்கு மீனின் உருவம் மீனை விட பெரியதாக இருந்ததால் விலாங்கு மீனை உண்ண முடியாமல் அந்த மீன் அதனை வெளியே கக்கியது. If you haven’t seen this pic.twitter.com/pNoSKBbHtv […]

Categories
உலக செய்திகள்

மீன் முள்ளு தொண்டையில் சிக்கி பார்த்திருக்கோம்…. “ஆனா இங்க மீனு தொண்டையில மாட்டிகிச்சு”…வைரலாகும் வீடியோ..!!

கொலம்பியா நாட்டில் ஒரு மனிதனின் தொண்டையிலிருந்து ஏழு அங்குல நீளம் உள்ள மீனை மருத்துவர்கள் அகற்றிய வீடியோ வைரலாகி வருகிறது. ஜனவரி 23 அன்று கொலம்பியாவில் பிவிஜய் நகரில் உள்ள ஏரியில் மீன் பிடிக்க சென்ற போது அவர் வலையில் ஒரு மீன் சிக்கியது. அந்த மீனை எடுத்து கையில் வைத்துள்ளார். மீண்டும் வலையை விரித்த போது இரண்டாவது மீன் சிக்கியது. அதையும் இழக்க விரும்பாததால் அந்த மீனை வாயில் வைத்துள்ளார். துரதிஷ்டவசமாக அந்த அவரது தொண்டைக்குள் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“அடிக்கடி மீனை உணவுடன் சேர்த்துக் கொள்கிறீர்களா”..? இனிமே கொஞ்சம் குறைத்து கோங்க..!!

அடிக்கடி உணவுடன் மீனை சேர்த்துக் கொள்வதால் எவ்வளவு நன்மைகள் நமக்குக் கிடைக்கிறது என்பதை பற்றி இதில் பார்ப்போம். மீன் பிடிக்காதவர்கள் என்பவர்கள் இருக்கவே முடியாது. மீன் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. ஆனால் அளவுக்கு மீறினால் அதுவும் நஞ்சுதான். மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்: அடிக்கடி நாம் இதை சாப்பிடுவதால் நம் பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது. மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அதிக அளவில் உள்ளதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற […]

Categories
லைப் ஸ்டைல்

“இந்த மீனை உங்கள் வீட்டில் கிழக்கு திசையில் வையுங்கள்”… அப்புறம் பாருங்க…!!

உங்கள் வீட்டில் மகிழ்ச்சி நிரந்தரமாக இருக்க வேண்டுமென்றால் உங்கள் மீனை எந்த திசையை நோக்கி வைத்தால் சிறப்பாக இருக்கும் என்பதை பற்றி இதில் பார்ப்போம். அரோவானா மீனைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? இந்த மீன் வீட்டில் வைத்திருந்தால் பல நன்மைகள் உண்டாகும். வாஸ்து சாஸ்திரத்தின் கூற்றுப்படி அரோவானா மீன்கள் வீட்டில் வைத்திருப்பது நல்லதாக கருதப்படும். இந்த மீன் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, சேமிப்பு, செல்வம், மற்றும் சக்தி ஆகியவற்றின் அடையாளமாக விளங்குகிறது. இது வீட்டில் உள்ள தீய […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

தினமும் மீன் சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா…? என்னனு தெரிஞ்சுக்கலாமா..!!

மீன் இறைச்சியை  அடிக்கடி உண்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  உணவு முறையைப் பொறுத்த வரையில், இறைச்சிகளை காட்டிலும், காய்கறிகளை அதிகம் உண்பது சிறந்தது. அதுவே உடலுக்கு ஆரோக்கியம் தரும் என மருத்துவர்கள் பரிந்துரைப்பதை  நாம் பார்த்திருப்போம். ஆனால் இறைச்சிகளிலும்  மீன், இறால், நண்டு, உள்ளிட்ட இறைச்சிகளை தினமும் உண்டாலும் கூட, அது நமக்கு ஆரோக்கியத்தை தரும். அந்த வகையில், ஆரோக்கியமான உணவுகளில் மீன் இன்றியமையாதது. ஏதாவது ஒரு வகை மீனை அடிக்கடி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஒரு மீனின் விலை ரூ.26,000… மீனவருக்கு அடித்த அதிர்ஷ்டம்….!!

மீனவரின் வலையில் சிக்கிய 110 கிலோ எடையுள்ள சுறா மீன் 26 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது.  நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கோடியக்கரையில் ஆண்டுதோறும் மீன்பிடி பருவமானது வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கிய உடன் மிகவும் சிறப்பாக இருக்கும். மேலும் அக்டோபர் மாதத்தில் தொடங்கும் மீன்பிடி பருவமானது மார்ச் மாதம் வரை நீடிப்பது வழக்கமாக உள்ளது. இவ்விடத்திற்கு ஆண்டுதோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான படகுகளுடன் மீனவர்கள் வந்து முகாமிட்டு தங்குவர். அங்குள்ள படகுத்துறையில் தங்களது படகுகளை […]

Categories
பல்சுவை

கா…. கா…. தந்தா பெருசா தா…. இல்லனா வேண்டாம்….. காக்காவின் லட்சியம்…. வெளியான காணொளி…!!

காக்கை ஒன்று மீன் கடைக்காரரை ஏமாற்றி சென்ற காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  கொக்கு ஓடு மீன் ஓட உறு மீன் வரும் என்று காத்திருப்பதை ஒற்றை வரியில் அவ்வையார் கூறியிருப்பார். ஆனால் தற்போது வெளியாகியிருக்கும் காணொளியில் கொக்கு மட்டுமில்லை காக்கையும் காத்திருக்கும் என்பது உறுதியாகியுள்ளது. அந்த காணொளியில் காகத்திற்கு மீன் கடை வைத்திருப்பவர் சிறிய மீன்களை கொடுக்கிறார். ஆனால் அது வாங்கி கீழே வைத்தது. பின்னர் அவர் பெரிய மீன் ஒன்றை கொடுத்ததும் காக்கை […]

Categories
தேசிய செய்திகள்

ஏழை பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்…. ஒரே மீன் தான்… எவ்ளோ ரூபாய் தெரியுமா…?

ஆற்றில் கிடைத்த ஒரு மீனால் ஏழை பெண்ணொருவர் லட்சாதிபதி ஆகிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது மேற்கு வங்கத்தில் இருக்கும் சாகர் தீவை சேர்ந்த புஷ்பா கார் என்ற பெண் ஆற்றில் இருந்து பெரிய மீன் ஒன்றை பிடித்தார். அதோடு அந்த மீனை கிலோவுக்கு 6,200 ரூபாய் வைத்து உள்ளூர் சந்தையில் 3 லட்சம் ரூபாய்க்கும் மேல் விற்பனை செய்தார். ஒரு மீன் தனக்கு 3 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதித்து கொடுத்ததால் அது தனக்கு ஜாக்பாட் என்று […]

Categories
பல்சுவை

கடலில் துள்ளி குதித்த மீன்கள்… ஒவ்வொன்றாக தூக்கி வீசிய மீனவர்கள்… மீண்டும் பார்க்க தூண்டும் வீடியோ காட்சி..!!

தூண்டிலில் மீன் பிடிக்கும் சுவாரஸ்யமான காணொளி சமூக வலைத்தளத்தில் பரவி வைரலாகி வருகிறது மீன் என்றாலே பலருக்கும் நாக்கில் எச்சில் ஊற ஆரம்பிக்கும். அசைவ பிரியர்களுக்கு மீனின் மேல் அலாதி பிரியம் உண்டு. பொதுவாக மீன்கள் சாப்பிடும் பொழுது அதில் இருக்கும் முட்களை எடுத்துவிட்டு சாப்பிடுவது வழக்கம். முட்களை எடுக்காமலும் சாப்பிடுவதுண்டு. ஒவ்வொரு மீனும் ஒவ்வொருவிதமான சுவையைக் கொண்டிருக்கும். அத்தகைய சுவைமிக்க மீனுக்கு பின்னால் ஏராளமான மீனவர்களின் கடின உழைப்பு மறைந்துள்ளது. எத்தனை கடினமான வேலையாக இருந்தாலும் […]

Categories
உலக செய்திகள்

மீன் சாப்பிட்டவருக்கு நேர்ந்த நிலை… இந்தத் தவறை இனி பண்ணாதீங்க…!!

சரியாக வேகாத ஒரு மீனை உண்டு ஒருவரின் கல்லீரல் முழுவதும் புழுக்களின் முட்டைகள் நிறைந்திருந்த எக்ஸ்ரே காட்சி அதிரவைத்துள்ளது.

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கண் பார்வையை அதிகரிக்க இந்த 5 உணவுகளை உண்ணுங்கள்…..!!

கண் பார்வையை அதிகரிக்க கூடிய ஐந்து உணவுகளை உண்பதால் ஏற்படும் நன்மைகள்.    1.கேரட்: கேரட் கண்பார்வைக்கு எவ்வளவு முக்கியமுன்னு  உங்க எல்லாருக்கும் ரொம்ப நல்லா  தெரியும் இதுல நிறைய பீட்டா கரோட்டின், வைட்டமின் எ,  இருக்குறதுனால டெய்லி ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் கேட்ராக்ல இருந்து விடுபடலாம்.     2.முட்டை : மூட்டைகளில் யூடின் என்ற பொருளில் அதிகமாக இருப்பதினால் வயது முதிர்ச்சியால் வரக்கூடிய கண்பார்வை கோளாறுகளில் இருந்து நாம் விடுபட […]

Categories
உலக செய்திகள்

மீன் சாப்பிட்ட பின் ஏற்பட்ட தொண்டை வலி… பரிசோதித்த மருத்துவர்கள்… இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

ஜப்பானில் தொண்டை வலி காரணமாக மருத்துவரிடம் சென்ற பெண்ணிடம் இருந்த சுமார் 3.8 செமீ அளவு கொண்ட ஒட்டுண்ணி புழுவை டாக்டர்கள் எடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தொண்ட வலி ஏற்பட்டதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் அங்குள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.. அப்போது டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்து பார்த்த போது, தொண்டைக்கு உள்ளே எதோ ஒரு புழு போன்ற ஒட்டுண்ணி இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து, […]

Categories
உலக செய்திகள்

சிறகை சிறிதும் அசைக்காமல்… பெரிய மீனை அலேக்காக தூக்கிச்சென்ற கழுகு.. மிரளவைக்கும் வைரல் வீடியோ..!!

கடற்கரையில் வைத்து பெரிய மீன் ஒன்றை கழுகு தூக்கி செல்லும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது. அமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியில் அமைந்துள்ள கடற்கரைக்கு கெல்லி என்பவர் கடந்த வாரம் சென்ற போது கழுகு பெரிய மீன் ஒன்றை தூக்கிக்கொண்டு போவதை வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்தப் பதிவை வனத்துறை அதிகாரியான சுஷாந்த் நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த பலரும் வெகுநேரமாக சிறகுகளை அசைக்காமல் பறக்கும் கழுகு ஆச்சரியத்துடன் குறிப்பிட்டுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

மீன்களையும் விட்டு வைக்காத கரோனா வதந்தி – கலக்கத்தில் மீனவர்கள்!

கோழியால் கரோனா பரவுகிறது என்ற வதந்தியால் கறிக்கோழி மற்றும்  முட்டையின் விலை கடும் சரிவை கண்டது இதைத்தொடர்ந்து  சென்னையில் மீன் கடைகளும் காற்று வாங்கத் தொடங்கியுள்ளன. சீனாவில் உருவான கரோனா வைரஸ் நாடெங்கும் பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த மத்திய  மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது. கரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது என்பதைவிட அது மிருகங்களிடமிருந்து பரவியிருக்கலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இருப்பினும் மக்கள் தேவையற்ற […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா பீதி – சிக்கன் விலை சரிந்தது… மீனின் விலை எகிறியது..!!

கொரோனா வைரஸ் மற்றும் பறவைக்காய்ச்சல் அச்சுறுத்தல் காரணமாக கோழியின் விலை சரிந்துள்ளது, மீன்களின் விலை எகிறியது..! சென்னை புதுப்பேட்டை பகுதியில் கடந்த வாரம் ஒரு கிலோ 120 ரூபாய்க்கு விற்ற கோழிக்கறி இன்று 100 ரூபாயாக சரிந்தது. ஆனால் நாட்டுக்கோழி கிலோ ரூபாய்280 விற்பனை ஆனாலும் மக்கள் அச்சமின்றி வாங்கிச் செல்வதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஆட்டுக்கறி கிலோ ரூபாய் 740 ருக்கு விற்கப்பட்டதாக, மீன்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த விடுமுறை தினமான […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

இந்த மீன்களை வாங்காதீர்கள்..! உங்கள் உடலுக்கு கேடு விளைவிக்கும்.!!

பெரும்பாலான மக்கள் விரும்பி உண்ணும் உணவு பட்டியலில் மீன் இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. மீன்கள் தனிச்சுவையும் ஊட்டச்சத்துக்களும் மிகுந்த சிறந்த மாமிச உணவாகும். வைட்டமின் ஏ, டி, இ மற்றும் பி போன்ற உயிர்ச்சத்துகளும் நிறைந்துள்ளன எனவே மருத்துவர்கள் மீன் உணவு வகைகளை அதிகமாக பரிந்துரை செய்கின்றனர். குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மீன் சாப்பிடுவது மிகவும் நல்லது. வாரத்திற்கு ஒருமுறையாவது மீன் எடுத்துக்கொள்ளவது அவசியம். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மீன்களில் நல்ல மீன்கள் எப்படி […]

Categories

Tech |