நீட் தேர்வுஜூலை 17ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தேர்வு வாரியத்தில் இருந்து இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில பாடங்களில் சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். நீட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு ஏற்கனவே நிறைவடைந்தது. இந்நிலையில் நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களில் திருத்தம் இருந்தால் மே 27ம் தேதிக்குள் மேற்கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி […]
Tag: முக்கிய அறிவிப்பு
பென்சன் வாங்கக்கூடிய ஓய்வூதியதாரர்கள் அனைவரும் தொடர்ந்து பென்ஷன் தொகையை பெற வேண்டும் என்றால் கடைசி தேதிக்குள் தங்களது வாழ்வை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.இன்றே கடைசி நாள் என்பதால் ஓய்வூதியதாரர்கள் உடனடியாக தங்களது வாழ்வை சான்றிதழை சமர்ப்பிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மத்திய பாதுகாப்பு துறையின்கீழ் பென்ஷன் வாங்கக்கூடிய ஓய்வூதியதாரர்கள் தங்களது வாழ்வு சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி மே 25ஆம் தேதி என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து […]
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்காக ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இதன் மூலமாக ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதன்படி விருப்பப்பட்டவர்கள் அவரவர் மாவட்டத்திலேயே பணிக்கு அமர்த்தப் படுகிறார்கள். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் ஆசிரியர்கள் விவரங்கள் சரியாக சேகரிக்கப்படுவதில்லை. எனவே மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று வேலை பார்த்து வரும் ஆசிரியர்கள் பெயரை குறிப்பிட்டு அந்த ஆசிரியர்கள் எந்த மாவட்டத்திற்கு மாறுதல் பணி பெற்றுள்ளார்கள் என்பதை தெளிவாக […]
விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பாக பள்ளி கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 10 முதல் 17 ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெற்று வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இறுதித்தேர்வு முடிந்து மே 14-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை […]
வருங்கால வைப்பு நிதி அமைப்பு தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அதில் மிக முக்கியமான ஒன்று தான் இ-நாமினேஷன். பிஎஃப் உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் இந்த வேலையை முடிக்க வேண்டும். பிஎஃப் உறுப்பினர்கள் தங்களது கணக்கில் நாமினி பெயரை இணைத்தால் அவரது இறப்பிற்கு பிறகு பிஎஃப் பலன்களை பெறலாம். ஒருவர் தனது பிஎஃப் கணக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட நாமினி பெயரை இணைக்கும் வசதி தற்போது உள்ளது. அவர்களுக்கு எவ்வளவு பலன்கள் கிடைக்க வேண்டும் […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான தரிசன டோக்கன் நாளை ஆன்-லைனில் வெளியிடப்படும் என திருப்பதி தேவஸ்தானம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்க்கான 300 ரூபாய் ஸ்பெஷல் என்ட்ரி டிக்கெட்டுகள் நாளை காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என்று தகவல் தெரிவித்துள்ளது. தரிசன டிக்கெட் பதிவு செய்து பெற்ற பக்தர்கள் தங்குவதற்கான அறைகள் வருகின்ற 22ஆம் தேதி காலை 9 மணிக்கு ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி தமிழ் திரைப்பட தயாரிப்பில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கிறார். 2004 ஆண்டு இந்திய கிரிக்கெட்டில் அறிமுகமான தோனி தனது திறமையால் முக்கிய வீரர்களில் ஒருவராக மாறினார். பின் 2007 ஆம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். 2008 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட […]
கேரள மாநிலத்தில் தக்காளி காய்ச்சல் என்ற ஒருவகையான வைரஸ் காய்ச்சல் 85 குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த காய்ச்சல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை குறி வைத்து தாக்குகிறது. இதன் காரணமாக சருமத்தில் சிவப்பு சிவப்பாக திட்டுக்கள் ஏற்படுவதால் இது தக்காளி காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது. கொல்லம் மாவட்டத்தில் மட்டும் அதிக பாதிப்புகள் இருப்பதால் அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் […]
அரசு ஊழியர்கள் ஓய்வு வயது மீண்டும் 59 லிருந்து 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது எந்த அடிப்படையில் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான அரசாணை தற்போது வெளியாகியுள்ளது. 1979ஆம் ஆண்டுக்குப் பிறகு அரசு அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களின் ஓய்வு வயது 55 இல் இருந்து 58 ஆக உயர்த்தப்பட்டது. அதைத்தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது ஓய்வு பெறும் வயது மீண்டும் 58-ல் இருந்து ஒரு […]
மே மாதத்திற்கான செமஸ்டர் தேர்வு ஜூன் 1 முதல் 14ஆம் தேதி வரை நேரடி எழுத்துத் தேர்வு மூலமாக நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தொலைதூர கல்வி இளங்கலை, முதுகலை பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் வரும் மே மாதத்திற்கான செமஸ்டர் தேர்வு ஜூன் 1ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையே சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
உதவி ஆய்வாளர் (SI) பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் அதற்கான கால அவகாசம் ஏப்ரல் 17ஆம் தேதி வரை நீட்டித்து பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது. தமிழகம் முழுவதும் 444 எஸ்ஐ பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் எஸ்ஐ பணிக்கு விண்ணப்பிக்க இன்றுடன் கால அவகாசம் முடிய உள்ளதால் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் குறித்து அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாது இருந்தது. தற்போது அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில் டிஎன்பிஎஸ்சி தேர்வு முறை மாற்றங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. மேலும் பிற மதங்களில் இருந்தும் 6 பேருக்கு பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு உண்டா, முதல் தலைமுறையாக முஸ்லிமாக மாறி அவர்களுக்கு இட ஒதுக்கீடு […]
பென்சன் வினியோக சேவைகளை தொடங்குவதற்கு கோட்டக் மஹிந்திரா வங்கிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மத்திய அரசிடம் பென்சன் விநியோகம் செய்வதற்கு கோட்டக் மஹிந்திரா வங்கி அனுமதி பெற்றுள்ளது. அதன்படி ஓய்வு பெற்ற நபர்கள் கோடக் மஹிந்திரா வங்கி வாயிலாகவும் பென்சன் பணத்தை பெற்றுக்கொள்ள முடியும். இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “பென்சல் விநியோக செயல்களை தொடங்குவதற்கு கோடக் மஹிந்திரா வங்கிக்கு மத்திய பென்ஷன் கணக்கு அலுவலகம் அனுமதி வழங்கியுள்ளது. பென்சன் விநியோகிக்கும் […]
பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் நடத்தி முடிக்கப் படாத பகுதிகளிலிருந்து கேள்வி கேட்கப்படாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாள் நெருங்கிக் கொண்டு வருகின்றது. இதனால் பொதுத் தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளை பள்ளி கல்வித்துறை மேற்கொண்டு வருகின்றது. கடந்த ஆண்டு தொற்று பரவலின் காரணமாக 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால் தற்போது தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. […]
TN TRB ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2017-18 ஆம் ஆண்டுக்குரிய அரசுப் பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கான பணித் தெரிவு சார்ந்து அறிவிக்கை (அறிவிக்கை எண். 14/2019) வெளியிடப்பட்டது. மேலும், online மூலமாக, விண்ணப்பங்கள் மற்றும் கல்வித்தகுதி தொடர்புடைய ஆவணங்களும் பெறப்பட்டன. இதையடுத்து சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பான பணிகள் மேற்கொள்ள வேண்டி பணிநாடுநர்கள் ஏற்கனவே பதிவேற்றம் செய்துள்ள கல்விச் சான்றிதழ்களுடன் கூடுதலாக சில சான்றிதழ்களை […]
தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 12 நாட்கள் மட்டுமே விடுமுறை என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “11ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 12 நாட்கள் மட்டும் விடுமுறை அளிக்கப்படும். 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும், ஜூன் 24ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் 12ம் […]
ஏப்ரல் 1ம் தேதியான இன்று முதல் ஜிஎஸ்டி விவகாரத்தில் இந்த விதி முறையில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. மார்ச் மாதம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் புதிய நிதி ஆண்டான ஏப்ரல் ஒன்றாம் தேதி இன்று தொடங்கியுள்ளது. நிறைய விதிமுறைகள் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மாறுகின்றன. இந்த விதிமுறையை மாற்றங்கள் உங்களை நேரடியாக அதிக அளவில் பாதிக்கும். அதன்படி இன்று முதல் ஜிஎஸ்டி விதிகளும் மாறுகின்றன. மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் வெளியிட்டுள்ள […]
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கு தேர்வுத் துறை மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர மார்ச் 9ஆம் தேதி முதல் 15ம் தேதிக்குள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். பயிற்சி வகுப்பு நடக்கும் நாள், மையம் போன்ற விவரங்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்களை அணுக வேண்டும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.அரசு தேர்வு சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம் […]
பிரபல நிறுவனமான நோக்கியா தற்போது ‘ பியூர்புக் புரோ லேப்டாப்’-ஐ அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகில் மிகவும் பிரபலமான நிறுவனமாக நோக்கியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பின்லாந்து நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் இந்த நிறுவனம் தற்போது ‘பியூர்புக் புரோ லேப்டாப்’-ஐ அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த லேப்டாப் 15.6 இன்ச் மற்றும் 17.3 இன் என இரண்டு விதமாகவும் அறிமுகம் செய்ய உள்ளனர். மேலும் இந்த லேப்டாப்பில் அலுமினியம் […]
டிஎன்பிசி குரூப் 2 குரூப் 2ஏ பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 23 ஆம் தேதி கடைசி நாள் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்ற குரூப்-2, 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி 18 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தேர்வுக்கு விண்ணப்பிப்பது குறித்தும் மற்றும் தேர்வை நடத்துவது தொடர்பான அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கான தேர்வு மூன்று நிலைகளில் நடத்தப்படும். அவை முதல் நிலை, முதன்மை மற்றும் நேர்முகத்தேர்வு […]
தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி இயக்குனர்கள் நிலை- 1, கணினி பயிற்றுநர்கள் நிலை 1 பணியிடங்களை நிரப்புவதற்கான, ஆசிரியர் தேர்வு வாரியம் வழியாக போட்டி தேர்வு நடத்தப்பட உள்ளது. இதனை தொடர்ந்து வரும் 12-ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை முதல் கட்ட தேர்வுகளும் 16ஆம் தேதி முதல் 20ம் தேதி வரை இரண்டாம் கட்டம் தேர்வுகளும் நடத்தப் படும் என அறிவிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் […]
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் குரூப் 2 தேர்வுக்கான முக்கிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்படி டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு OTR எனப்படும் ஒருமுறை நிரந்தர கணக்கு முறையின்படி இணையதளத்தில் பதிவு செய்த தேர்வர்கள் அதனுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. எனவே டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு OTR முறையில் விண்ணப்பித்த தேர்வர்கள் வருகிற 28-ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. […]
ஜனவரி மாதம் தமிழ் பாரம்பரிய மாதமாக அமெரிக்காவின் நான்கு முக்கிய நகரங்களில் அறிவிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவிற்கு தமிழ் வழியில் வந்தவர்களில் பெரும்பாலானோர் முக்கிய பங்களிப்பை அளித்துள்ளனர். அதிலும் குறிப்பாக சுந்தர் பிச்சை, கமலா ஹாரிஸ், இந்திரா நூயி ,விஜய் அமிர்தராஜ்,சி. கே. பிரகலாத் , மிண்டி கெய்லிங் , இவர்கள் அனைவரும் பல்வேறு துறைகளில் முக்கிய பங்களித்துள்ளனர். தமிழகத்திலிருந்து புலம் புலம்பெயர்ந்தவர்களில் சுமார் 60 ஆயிரம் பேர் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருகின்றனர். அங்கு இருப்பவர்களுக்கு தமிழின் சிறப்பை […]
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் ஆண்டுதோறும் குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த 2019 ஆம் ஆண்டிற்கான குரூப் 4 தேர்வு 01.9.2019 அன்று நடைபெற்றது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் குறித்த விபரங்கள் 12.11.2019 அன்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தொடர்ந்து குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தேர்வாணைய அலுவலகத்தில் தட்டச்சர் பதவிக்கு […]
நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் இரண்டு நாளில் ஜீரோ ஹவர் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற பிப்ரவரி 1ஆம் தேதி 2020- 23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் முதல் நாளில் குடியரசுத்தலைவர் உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு பட்ஜெட் தாக்கலின் இரண்டாம் நாளில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பட்ஜெட் தாக்கலின் முதல் இரண்டு நாட்களில் ஜீரோ ஹவர் […]
தமிழகத்தில் 2021-22 ஆம் ஆண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கை நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மருத்துவ கவுன்சில் நேற்று ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவ கல்லூரியில் நடைபெற்றது. முதல் நாள் கவுன்சிலிங்கிற்க்கு 761 பேர் வந்தனர் அதில் 541 பேருக்கு மருத்துவ படிப்பிற்கான ஆணை வழங்கப்பட்டது. அப்போது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசினார். அதில் அவர் கூறியதாவது, அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்னும் கவுன்சிலிங் நடைபெற உள்ளது. […]
திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வு பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி துவங்க உள்ளது. அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்புகள் தற்போது வெளியாகி உள்ளன. இந்தத் துறை தேர்வுகள் பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்கி 9ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொள்குறி வகை கணித தேர்வு பிப்ரவரி மாதம் 1 2 3 6 7 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும், 4 5 9 ஆகிய […]
புதுச்சேரி அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தமிழகம், கேரளா, ஆந்திராவில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை தமிழக அரசு எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஆசிரியர் தகுதி தேர்வு […]
தமிழக பேருந்து நிலையங்களில் ஒரு மாற்றுத்திறனாளி நின்று கொண்டிருந்தாலும் பேருந்தை நிறுத்தி அவரை ஏற்றி செல்ல வேண்டும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து வசதிகளும் கிடைக்கப் பெறும் வகையில் தமிழக பேருந்துகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. மேலும் 10 சதவிகிதம் பேருந்துகள் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் எனவும் தமிழக அரசு உறுதியளித்தது. மேலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இதன் […]
ஹரியானா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவும் வேகம் அதிகரித்து வருவதால் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு உருவாக்கியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் ஜனவரி 26 ஆம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் ஜிம்கள் மற்றும் ஸ்பாகள் 50 சதவிகித திறனுடன் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் மதுபான கடைகள் இரவு 10 மணி வரை திறந்திருக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ஹரியானா மாநிலத்தில் முன்பை விட அதிக வேகத்தில் கொரோனா பரவி வருவதால் பள்ளிகளை திறப்பது […]
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இ.எம்.ஐ.எஸ் பதிவு, பள்ளி வருகை பதிவேடு பராமரிப்பு, சம்பள விடுப்பு செயல்பாடுகள் நலத்திட்ட பொருட்கள் வழங்குதல் மற்றும் நலத்திட்ட பொருட்கள் பராமரிப்பு உள்ளிட்ட வேலைகளுக்காக இளநிலை உதவியாளர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள். இதற்காகவே இளநிலை உதவியாளர் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கோயம்புத்தூரில் மொத்தம் உள்ள 264 பள்ளிகளில் 40% இளநிலை உதவியாளர்கள் […]
தூய்மை பணியாளர்களுக்கு நிரந்தர ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கே.பாரதி என்பவரின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதாவது நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 190 ரூபாய் மட்டுமே சம்பளமாக வழங்கப் படுவதாகவும், நிரந்தர பணியாளர்களுக்கு 17 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப் படுவதாகவும் இருவரும் சம அளவிலேயே உழைக்கும் பட்சத்தில் எதற்கு இந்த சம்பள […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் கல்லூரிகள் திறக்கப்பட்ட ஒரு சில மாதங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதால் கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் மூடப்பட்டுள்ளன. அதனால் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி […]
தமிழகத்தில் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருவதால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கூடாது என்றும், தேர்தலை தள்ளி வைக்க கோரியும், தமிழக அரசின் ஓய்வு பெற்ற மருத்துவர் நக்கீரன் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி ,நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில், மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கொரோனா தொற்று போன்ற பேரிடர் காலத்தில் தேர்தலை […]
தமிழகத்திலுள்ள அரசுத்துறைகளில் பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியத்தால் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 வருடங்களாக காரணமாக தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. அதன் பின்னர் தொற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில், சில தேர்வுகள் நடத்துவது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் அரசு துறையில் உள்ள கெமிஸ்ட் பணியிடத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 18 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இந்த பணிக்கு வேதியியல் […]
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் துறை தேர்வுக்கான தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழக அரசுத்துறையில் காலியாக இருக்கும் பணியிடங்கள், அரசு ஊழியர்களுக்கான பதவி உயர்வு ஆகியவற்றுக்கான அனைத்து ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மேற்கொண்டு வருகிறது. இதில் TNPSC நடத்தும் துறைத்தேர்வுகளுக்கான முடிவுகள் அச்சிடப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டு வந்தது. ஆனால் இனி வரும் காலங்களில் இத்தேர்வு முடிவுகள் அனைத்தும் இ-புல்லட்டின் மூலம் வெளியாகும் என்று அறிவக்கப்பட்டுள்ளது.இது குறித்து நில […]
தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக போட்டித்தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு பொது சார்நிலைப் பணிகளில் அடங்கிய ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு ஜனவரி 22ஆம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தேர்வர்கள் http://tnpsc.gov.in என்ற இணையதளத்திலிருந்து […]
மத்திய அரசு பணி ஓய்வு பெற்ற ஊழியர்களின் சிடிஜி தொகை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசால் பணி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிடிஜி மானியத்திற்கான வரம்பை நீக்குவதாக முடிவு அரசு செய்துள்ளது. சிடிஜி என்பது பணி ஓய்வு பெறும் அரசு ஊழியர் வேறு ஊருக்கு செல்ல ,அவர்களுக்கு தேவையான நிதியை அரசு வழங்குவது ஆகும். அதாவது அரசு ஊழியர்கள் வேலை செய்த ஊரில் இருந்து வேறு ஏதாவது 20 கிலோமீட்டருக்குள் உள்ள […]
வரும் ஜனவரி 13ஆம் தேதி சொர்க்கவாசல் திறப்பு முன்னிட்டு திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக திருப்பதியில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் அப்போது தரிசனத்துக்கு முன்பதிவு செய்திருந்த பக்தர்களால் திருப்பதிக்கு வர இயலவில்லை. இதனை கருத்தில் கொண்டு கடந்த நவம்பர் 15ஆம் தேதி முதல் டிசம்பர் 18ஆம் தேதி வரை முன்பதிவு செய்திருந்த பக்தர்கள் அடுத்த ஆறு மாதங்களுக்குள் எப்போது […]
2020 21 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கு கடைசி தேதி இன்று ஆகும். இதற்கு முன்னதாக ஜூலை 31 மற்றும் செப்டம்பர் 30 என்று இரண்டு முறை வருமான வரி செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில் மூன்றாவது முறையாக டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த கால அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ளது. அதன்படி, 2020 – 21 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக் […]
தமிழகத்தில் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் ஒமைக்ரான் நுழைந்துள்ளது. இந்த நிலையில் ஒமைக்ரான் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமைச் செயலகத்தில் […]
2021 ஆம் ஆண்டு முடிவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. எனினும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டிய சில முக்கிய பணிகள் உள்ளது. குறிப்பிட்ட பணிகளுக்கான காலக்கெடு டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகின்றது. அதற்குள் இந்த வேலைகளை முடித்துக் கொள்வது நல்லது. PF கணக்கு: உங்களிடம் பிஎஃப் கணக்கு இருந்தால், கட்டாயம் இந்த வேலையை உடனடியாக முடித்து விடுங்கள். பிஎஃப் கணக்கு வைத்திருப்போர் தங்களது அக்கவுண்டுக்கு நாமினியை நியமிக்கவேண்டும். அதற்கான கடைசி தேதி […]
தமிழகத்தில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைகளின் கீழ் ஜனவரி 5 ஆம் தேதி முதல் மதிப்பெண் தேர்வு நடத்த உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்தது கொரோனா தொற்று தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பள்ளி கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டது. இதனால் மாணவ மாணவர்களுக்கு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு […]
தமிழக ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் கருவியில் முதியவர்களின் கைவிரல் ரேகை பதிவு வைக்க முடியவில்லை. இது தொடர்பாக தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்ட்டுகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த ஸ்மார்ட் கார்டுகளை பயன்படுத்தி நிறைய முறைகேடுகள் நடந்து வருவதாக கூறி, புதியதாக பயோமெட்ரிக் கருவியின் மூலம் குடும்ப தலைவர்கள் அல்லது உறுப்பினர்களின் கைவிரல் பதிவு செய்யப்பட்டது. அதை பயன்படுத்தி ரேஷன் கார்டுகளுக்கு பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றது. […]
டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் குரூப் 2 மற்றும் குரூப் 4 ஆகிய இரண்டு தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடங்களில் 40 மதிப்பெண்கள் கட்டாயம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டு அதன் மூலம் பணி நியமனம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் நடத்தப்படும் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் தொடங்க உள்ளது என்று […]
தமிழகத்தில் 2013ம் ஆண்டு TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு தற்போது வரை பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. அதனை தொடர்ந்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தகுதி தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார் . தமிழகத்தில் ஆசிரியர் பணியில் சேர்வதற்கு மத்திய மாநில அரசுகள் மூலமாக ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுவது வழக்கம். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலமாக சான்றிதழை பெற முடியும். அந்த சான்றிதழ் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதன் […]
தமிழக அரசு பணிகளுக்கான தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தி வருகிறது. இனி அரசு வேலைகளுக்கு தமிழ் மொழி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும் என்ற அரசாணையை சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில் குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்ற கேள்வி இலட்சக்கணக்கானவர்களிடம் நிலவி வந்தது. அதன்படி , 2022-ல் நடத்தப்பட உள்ள தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் வெளியிட்டார். 2022 பிப்ரவரியில் குருப் 2 தேர்வுகள், மார்ச் […]
தமிழகத்தில் நடைபெறும் அனைத்து அரசு விழாக்கள் மற்றும் தனியார் விழாக்களிலும் நாட்டுப்புற கலைகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக பல்வேறு தொழில்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க அனைத்து பொது நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டதால், நாட்டுப்புற கலைஞர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டன.ர் இதன் விளைவாக கலைநிகழ்ச்சியில் ஈடுபடும் நாட்டுப்புற கலைஞர்கள் தங்களது நாட்டுப்புற கலைகளை விட்டுவிட்டு வேறு வேலைக்கு சென்றனர். இவ்வாறு நாட்டுப்புற கலைகள் தொடர்ந்து அழிந்து […]
பள்ளி சாரா கல்வி மூலமாக கிராமப்புறத்தில் உள்ள முதியவர்கள் மற்றும் பகுத்தறிவு இல்லாத அவர்கள் அனைவருக்கும் கையெழுத்துப் போட கற்றுக் கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பகுதியில் 10 ஆயிரம் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் […]
தடுப்பூசி எடுத்துக் கொண்டால் மட்டுமே ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருள் வழங்கும் என்று விரைவில் உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக தமிழ்நாடு வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று கடந்த ஆண்டு முதல் தீவிரமாக பரவி வந்தது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதமாக உள்ளது. இதனால் மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு, தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. வாரத்திற்கு இரண்டு முறை தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு மக்கள் தங்கள் […]