கார்ப்பரேட் நிறுவனங்களை கண்டித்து சலூன் கடைகளை அடைத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களை கண்டிக்கும் வகையில் மருத்துவர் சமூகம் சங்கம், முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் சார்பாக சலூன் கடையினை மூடி போராட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியது. அதன்படி ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள 500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கபட்டு முடிதிருத்தும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி காளைமாட்டு சிலை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். […]
Tag: முடி திருத்தும் தொழிலாளர்கள்
சிவகங்கை மாவட்டத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டியிடம் முடிதிருத்துவோர் சார்பில் மாவட்ட மருத்துவ சமுதாய பேரவை மாவட்ட செயலாளர் அழகர்சாமி தலைமையில் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது, கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக மக்கள் அதிகம் கூடும் இடங்களான உடற்பயிற்சி நிலையங்கள், பெரிய மால்கள், சலூன் கடைகள், அழகு நிலையங்களை முழுமையாக மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக கடைகள் வைத்து நடத்தி வருபவர்கள் […]
திண்டுக்கல்லில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி சலூன் கடைகள் நேற்று மாநிலம் முழுவதும் மூடப்பட்டன. இதனால் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு வருமானம் இன்றி வாழ்வாதாரம் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்த முடிதிருத்தும் தொழிலாளர்கள் சலூன் கடைகளை திறப்பதற்கு அனுமதி வழங்க கோரி மனு […]