Categories
மாநில செய்திகள்

பணி நியமனம்.! தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கான வாய்ப்புகளை உறுதி செய்திட வேண்டும்…. தமிழில் தேர்வு நடத்திட கோரி முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்..!!

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணி நியமனங்களில் தமிழர்களின் வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு மற்றும் ஒன்றிய பொதுத்துறை நிறுவனங்களின் பணி நியமனங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கான வாய்ப்புகளை உறுதி செய்திட வேண்டும் என்று வலியுறுத்தி மாண்புமிகு இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் இன்று கடிதம் […]

Categories
அரசியல்

கை கட்டி, வாய் பொத்தி…. நான் காவடி தூக்கவா போறேன்…? கலைஞர் பையன் நான்….!!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனின் 60-வது பிறந்த நாள் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமாவளவனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திருமாவளவன் நினைவு பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது: திமுக – விசிக இடையே உள்ளது அரசியல் நட்பு அல்ல, கொள்கை உறவு. கொள்கையில் உறுதியாக இருப்பதால் பெரியாரை எதிர்ப்பவர்கள் திமுகவையும் எதிர்க்கின்றனர். தேர்தல் வரும், போகும், ஆனால் இயக்கங்களும், கொள்கைகளும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தேசியக்கொடி ஏற்றினார் முதலமைச்சர் ஸ்டாலின்…!!!!

நாட்டின் 76ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை கோட்டைக் கொத்தளத்தில் தற்போது, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக, கோட்டைக் கொத்தளத்திற்கு வந்த முதலமைச்சர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

Categories
மாநில செய்திகள்

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று டிஸ்சார்ஜ்…. ஒரு வாரம் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுரை…….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடந்த வாரம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனால் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் முதல்வர் ஸ்டாலின் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அதன் பிறகு காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு இருந்ததன் காரணமாக அவர் கடந்த ஜூலை 14ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை முடிந்த முதல் பஸ் ஸ்டாலின் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். அவரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் ஒரு வார காலத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் தலைதூக்கும் கொரோனா…. மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் போட்ட உத்தரவு…. அலர்ட் ஆகுங்க….!!!!

அதிகரித்துவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு மு க ஸ்டாலின்  மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அரசு துறைகளில் உள்ளவர்களுக்கு முக்கிய உத்தரவை தெரிவித்துள்ளார். கடந்த 2 வருடங்களாக கொரோனா எனும் கொடிய வைரஸ் உலகம் முழுவதும் பரவி கோரத்தாண்டவம் ஆடி வந்தது. இந்த நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சியில் மாவட்ட ஆட்சியர் தலைவர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்தும்ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய முதலமைச்சர்.” கொரோனா வைரஸ் […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

முதல்வருடன் சைக்கிள் ஓட்ட விரும்பும் ராகுல்…. வெளியிட்ட அமைச்சர்…!!!

தமிழக சட்ட பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டதற்கு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை நன்றி தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், போதிதர்மரின் மரபணுவில் வந்தவர்தான் முதலமைச்சர் ஸ்டாலின் எனவும்  குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து முதலமைச்சரின் உங்களில் ஒருவன் நூல் வெளியிட்டு விழாவிற்கு ராகுல் காந்தி வந்திருந்தபோது, முதலமைச்சர் ஸ்டாலினின் வயது குறித்து பேசுகையில்,அவர் வாரம்தோறும் சைக்கிள் ஓட்டுவது தான் என்று கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக முதல்வரிடம் பேசிய ராகுல், அடுத்த முறை வரும்போது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது #Make in Tamilnadu தான்…. ஆனால் #Madeby Amma Arasu…. எதிர்க்கட்சித் தலைவர் விமர்சனம்…!!!

தமிழகத்தில் அதிமுக அரசின் சாதனைகளை, தங்கள் சாதனைகளாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவதாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இந்நிலையில் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, ஆப்பிள் ஐபோன்களை தயாரிக்கும் பணிக்கான ஒப்பந்தமானது, கடந்த அம்மா அரசின் ஆட்சியிலேயே போடப்பட்டுள்ளது. ஆனால் திமுக அரசு வழக்கம் போல் இந்த திட்டத்தையும், தங்கள் சாதனை போல காட்டிக் கொள்ள முயல்கிறது. இதையடுத்து மு.க.ஸ்டாலினுக்கு மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துகிறேன் என பழனிசாமி கூறியுள்ளார். மேலும் இது #Make in Tamilnadu […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சமூகநீதி காவலரின் வாரிசு”க்கு முதல் முறையாக…. முதலமைச்சருக்கு பிரபல இயக்குனரின் வாழ்த்து….!!!!

முதலமைச்சர் ஸ்டாலின் 69 ஆவது பிறந்தநாளுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.  முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று தனது 69 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வந்தார். அவருக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் இணையதள பக்கங்களில் வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும் சிலர் வாழ்த்து மடல்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்தனர். இந்த வகையில் கமலஹாசன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்,, ரஜினிகாந்த் இயக்குனர் பாரதிராஜா என பல பிரபலங்கள் முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்தனர். […]

Categories
மாநில செய்திகள்

உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்கள்… முதல்வன் ஸ்டாலினிடம் பெற்றோர்கள் கோரிக்கை…!!!

உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரஷ்ய அதிபர் புதின் நேற்று உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் நேற்று காலை முதல் போர் தொடங்கியுள்ளது. இந்த போரில் உக்ரைனில் உள்ள ராணுவ நிலைகள், விமான தளங்கள், இராணுவக் இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது நாளாக ரஷ்ய படைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் உக்ரைனில் […]

Categories
மாநில செய்திகள்

ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு… ஹெக்டருக்கு ரூ.20,000…. தமிழக அரசு அறிவிப்பு!!

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க ரூபாய் 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பயிர்கள் பெரும் சேதம் அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.. அதுமட்டுமில்லாமல் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியதில் சாலைகள் மிகவும் மோசமடைந்துள்ளது.. இந்நிலையில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள், வடிகாலை சீரமைக்க 300 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு.. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் மழையில் முழுமையாக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஆக்சிஜன் வசதியுடன் 200 படுக்கைகள்… புதிய கொரோனா சிகிச்சை மையத்தை… திறந்து வைத்த தமிழக முதலமைச்சர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் ஆக்சிஜன் வசதியுடன் 200 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை தமிழக முதலமைச்சர் நேற்று திறந்து வைத்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் நோய் தாக்கத்தை பொறுத்து 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சிகிச்சை வழங்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தற்போது கொரோனாவிற்கு சிகிச்சை அளிப்பதற்கு அரசு மருத்துவமனைகளில் 1,500 படுக்கைகள் தயாராக உள்ளது. இந்நிலையில் மாவட்டம் முழுவதிலும் 18 கொரோனா சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனையடுத்து  கூடுதலாக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதலமைச்சர் ஸ்டாலினுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட தல அஜித்….. இணையத்தில் வைரல்…!!!

முன்னணி நடிகர் அஜித் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வலிமை எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் ஆரம்பக் கட்டத்தில் இருந்தே வலிமை படத்தின் அப்டேட்டை வெளியிட கூறி ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதன்படி கடந்த மே 1 ஆம் தேதி […]

Categories

Tech |