Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உலக முதலுதவி தினம்….. “ஒரே இடத்தில் 5386 மாணவ-மாணவிகள் பயிற்சி”….உலக சாதனை படைப்பு…..!!!!!

உலகம் முதலுதவி தினத்தை முன்னிட்டு ஒரே இடத்தில் 5386 மாணவ-மாணவிகள் பயிற்சி பெற்று உலக சாதனை படைத்தார்கள். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மைதானத்தில் உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் இணைந்து மாபெரும் உலக சாதனையாக பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற முதல் உதவி விழிப்புணர்வு செய்முறை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்க அரசுப்பள்ளி கல்லூரி, அண்ணா […]

Categories
மாநில செய்திகள்

சல்யூட்….. “கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுவன்”….. விரைந்து சென்று உயிரை காப்பாற்றிய டிஜிபி சைலேந்திரபாபு….!!

கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுவனை தக்க சமயத்தில் முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றினார் டிஜிபி சைலேந்திரபாபு. தமிழக டிஜிபி ஆக பொறுப்பு வகித்து வருபவர் சைலேந்திரபாபு. இவர் தினமும் நடைப்பயிற்சி செய்வது மற்றும் தனது குழுவினருடன் சைக்கிளில் பல கிலோமீட்டர் பயணிப்பது என எப்போதுமே ஆக்டிவாக இருப்பார்.. உடற்பயிற்சியில் ஆர்வம் காட்டும் இவர் அவ்வப்போது அது தொடர்பாக விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.. இந்நிலையில்  நேற்று மாலை சைலேந்திர பாபு மெரினா கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார்.. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“மனிதாபிமானத்துடன் நடந்து கொண்ட இன்ஸ்பெக்டர்”… குவிந்து வரும் பாராட்டு…!!!!!

கோவை குனியமுத்தூர் என்னும் பகுதியை சேர்ந்தவர் முஜிபூர் ரகுமான் (34). பிளம்பர் ஆக பணியாற்றி வரும் இவர் நேற்று காலையில் வேலைக்காக கோவை உக்கடம் பைபாஸ் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் வாலாங்குளம் அருகே வந்தபோது திடீரென நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்து ரத்தம் சொட்ட சொட்ட அவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இந்தநிலையில் சிங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் தனது வாகனத்தில் அந்த வழியாக வந்து கொண்டிருந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“கடற்பகுதி கரையில் காயத்துடன் தவித்த வெளிநாட்டவர்”…. கடற்படையினர் முதலுதவி செய்து விசாரணை…!!!!!

இரையுமன்துறை கடற்பகுதி கரையில் காயத்துடன் தவித்துக் கொண்டிருந்த வெளிநாட்டவருக்கு கடற்படையினர் சிகிச்சையளித்து விசாரணை செய்தார்கள். கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு அருகே இருக்கும் இரையுமன்துறை கடற்கரை கரையில் இரண்டு  நாட்டிக்கல் கடல்மைல் தூரத்தில் வெளிநாட்டு மர்ம படகு ஒன்று நேற்று மாலையில் நங்கூரமிட்டு நின்று கொண்டிருந்ததை பார்த்த அப்பகுதி மக்கள், கடலோர காவல் படைக்கு தகவல் கொடுத்ததை அடுத்து சிறிய படகு மூலம் அங்கு சென்று விசாரணை செய்தார்கள். விசாரணையில் நெதர்லாந்து நாட்டைச் சார்ந்த ஜெயின் என்பதும் […]

Categories
உலக செய்திகள்

வெட்டப்பட்ட கையை வைத்துக்கொண்டு ஓடி வந்த நபர்… அதிர்ச்சியில் உறைந்த மக்கள்…!!

அமெரிக்காவில் வெட்டப்பட்ட தன் ஒரு கையை மற்றொரு கையில் வைத்துக்கொண்டு அலறியடித்தபடி ஓடி வந்த நபரால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் Lewiston என்னுமிடத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று சந்தையில் பணியாற்றிய நபர் திடீரென்று அலறியடித்துக்கொண்டு ஓடி வந்திருக்கிறார். மேலும் அவரின் கையில் வெட்டப்பட்ட அவரின் மற்றொரு கையை வைத்திருந்திருக்கிறார். இதைப்பார்த்த பொதுத்துறை ஊழியர்கள் இருவர் ஓடிச்சென்று அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன்பிறகு, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பொதுத்துறை பணியாளர்கள் தகுந்த நேரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

7 கோவில்களில் முதலுதவி மருத்துவ மையங்கள்…. முதல்வர் ஸ்டாலின் திறப்பு….!!

முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அதில் கோயில் நிலங்களை கையகப்படுத்துதல், பழைய நகைகளை உருக்குதல் மற்றும் தல மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். இந்நிலையில் 7 கோவில்களில் முதலுதவி மருத்துவ மையங்களை காணொளி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். அதன்படி திருச்செந்தூர், திருவண்ணாமலை, மேல்மலையனூர், சோளிங்கர், மருதமலை, திருத்தணி மற்றும் பழனி ஆகிய கோவில்களில் மருத்துவ மையம் திறக்கப்பட்டுள்ளது.  

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய குரங்கு குட்டி…. வாயோடு வாய் வைத்து ஓட்டுநர் செய்த காரியம்…. நெகிழ்ச்சியான சம்பவம்….!!!

 நாய் கடித்ததில் உயிருக்கு போராடிய குரங்கை ஓட்டுநர் ஒருவர் வாயோடு வாய் வைத்து மூச்சு கொடுத்து அதை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் குன்னம் அடுத்த ஒதியம் கிராமத்தில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரம் பகுதியில் சுற்றித் திரிந்த குரங்கு குட்டி ஒன்றை தெரு நாய்கள் கடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் காயங்களுடன் அந்த குரங்கு மயங்கி கிடந்தது. இந்த நிலையில் அந்த பகுதியில் வசித்து வரும் கார் டிரைவரான பிரபு உடனே மயங்கி கிடந்த குரங்கை […]

Categories
தேசிய செய்திகள்

சாலை விபத்தில் சிக்கி மூச்சு பேச்சின்றி கிடந்த வாலிபர்… முதலுதவி செய்து சுவாசத்தை மீட்ட காவலர்… குவியும் பாராட்டு…!!!

சாலை விபத்தில் மூச்சுப் பேச்சு இன்றி கிடந்த இளைஞருக்கு காவல்துறையினர் ஒருவர் உதவி செய்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. தெலுங்கானா மாநிலம் பொம்மக்கலைச் சேர்ந்த அப்துல்கான் என்பவர், பைக்கில் சாலையை கடக்க முயன்றபோது எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், அப்துல் காயமடைந்து மூச்சுப் பேச்சு எதுவும் இல்லாமல் கிடந்துள்ளார். இதை அடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் சிபிஆர் எனப்படும் முதலுதவியை செய்தார். மார்பில் அழுத்தம் கொடுத்து சுவாசத்தை மீட்கும் […]

Categories
தேசிய செய்திகள்

மதம் என பிரிந்தது போதும்…. மனிதம் ஒன்றே தீர்வாகும்…. சீக்கியர் செயலுக்கு குவியும் பாராட்டு..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் விபத்தில் சிக்கிய ஒருவருக்கு சீக்கியர் உதவிய வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் பல இந்து, கிறிஸ்தவம், முஸ்லீம், சீக்கியர்கள், பௌத்தம் என பல பல மதங்களும், அந்த மதங்களை பின்பற்றுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆயிரம் வேற்றுமை இருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு இந்தியா என்பதற்கிணங்க, அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக பெரும்பாலும் பழகி வருகிறார்கள். ஒரு சிலர் மட்டுமே மத ரீதியாகவும், சாதி ரீதியாகவும் கலவரங்களில் அடித்துக் கொள்கிறார்களே தவிர, மற்றவர்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து

எலுமிச்சை தொங்கவிடுவது திருஷ்டிக்காகவா.? ஒளிந்திருக்கும் அறிவியலை அறிவோம்..!!

கண் திருஷ்ட்டி என்று வீட்டு வாசலில் தொங்கவிடப்படும் எலுமிச்சையில் இருக்கும் அறிவியலை பற்றி அறிவோம்..! நம் முன்னோர்களின் பல அறிவியல் சார்ந்த செயல்கள் மூடநம்பிக்கையாக சித்தரிக்கப்பட்டு இன்று நாமும் அதை மூட நம்பிக்கை என்று எண்ணத் தொடங்கி விட்டோம். அதில் ஒன்றுதான் இன்றும் தமிழகத்தில் பல வீட்டு வாசலில் தொங்கிக் கொண்டிருக்கும் எலுமிச்சை பழம். பெரும்பாலான மக்கள் இதை வீட்டு வாசலில் தொங்க விட்டால் கண் திருஷ்டி நீங்கும் என்று நினைத்து தொங்க விடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் […]

Categories

Tech |