அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் தேர்வு முடிவுகளில் வெளிப்படை தன்மையை கடைபிடிக்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்தி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றால் தமிழகத்தில் காலியாக இருக்கும் அரசு பணியிடங்கள் மற்றும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்கள். ஆனால் இதுவரை 10 விழுக்காடு பணியிடங்களை கூட நிரப்ப நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் தமிழ்நாடு அரசு தேர்வு […]
Tag: முதல்வருக்கு கோரிக்கை
தமிழக சட்டசபையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப் பட்ட நிலையில், 17 காவல்துறை அதிகாரிகள் மற்றும் பல அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி தமிழக அரசு தற்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி […]
தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ். செந்தில்குமார் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, கடந்த 2012-ம் ஆண்டு தமிழகத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் பகுதி நேர ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களில் மூப்பு மற்றும் இன சுழற்சி முறையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான குழு தேர்வு செய்து 16 ஆயிரம் பேரை பணியில் அமர்த்தியது. இவர்கள் அரசு பள்ளிகளில் 6 முதல் 8-ம் […]
தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ். செந்தில்குமார் முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், திமுக ஆட்சிக்கு வந்து 16 மாதங்கள் ஆகியும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை. பணி நிரந்தரம் செய்யாததால் நாங்கள் பணி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளோம். எனவே பணி நிரந்தரம் செய்யுமாறு கோரிக்கை விடுத்துக் கொள்கிறோம். பணி நிரந்தரம் எப்போது செய்யப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் கூற வேண்டும். தற்போது […]
தமிழகத்தில் நிதித்துறை அமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இருக்கிறார். இவர் எப்போதும் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்று பேசுவார். இதனால் திமுக தொண்டர்கள் மத்தியில் பீடிஆருக்கு செல்வாக்கு பெருகி வருகிறது. அதோடு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஜிஎஸ்டி, பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பு போன்றவைகளுக்கு செம டஃப் கொடுக்கிறார். இவருக்கு நிர்வாக ரீதியாகவும் அதிகாரிகள் மத்தியில் நல்ல பெயர் தான் இருக்கிறது. இந்த நல்ல பெயர்களால் அமைச்சருக்கு செல்வாக்கு பெருகினாலும், ஒரு […]
சென்னையில் ஜாக்டோ-ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் 60 வயது வரை பணியாற்றலாம் என்றும், பணி மாறுதல் வழங்கப்படும் எனவும் அறிவித்தார். இந்த அறிவிப்பால் பகுதிநேர ஆசிரியர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ். செந்தில்குமார் […]
கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் கடந்த 1986-ஆம் ஆண்டு கலப்பு திருமணம் செய்வதற்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என அரசாணை இயற்றப்பட்டது. அதன்படி மாற்றுத்திறனாளிகள், விதவைகள் மற்றும் பணியில் இருக்கும் போது உயிரிழந்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு அடுத்தபடியாக அரசு வேலைவாய்ப்பில் கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு […]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் தமிழக முதல்வருக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் உள்ள நுங்கம்பாக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தலைமையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதித்ததை எதிர்த்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் மத்தியிலாலும் மோடி அரசு அம்பானி மற்றும் அதானி குழும்பங்கள் விற்பனை செய்யும் பொருட்களுக்கு எந்த ஒரு […]
பகுதி நேர ஆசிரியர்கள் தமிழக முதல்வருக்கு ஒரு கோரிக்கையை விடுத்துள்ளனர். தமிழக முழுவதும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களை மூப்பு அடிப்படையில் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமையிலான குழு கடந்த 2012-ம் ஆண்டு பகுதி நேர ஆசிரியர்களாக தேர்ந்தெடுத்தனர். இந்த ஆசிரியர்கள் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சிறப்பு பாடங்களை நடத்துவதற்கு நியமிக்கப்பட்டனர். இவ்வாறு நியமிக்கப்பட்ட 16,549 ஆசிரியர்களுக்கும் ரூபாய் 5000 மாதந்தோறும் சம்பளமாக […]
சீரான முறையில் பால் வினியோகம் செய்யப் படுவதில்லை என ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மற்றும் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் மற்ற சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதை விட விலை குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் ஆவின் பாலகத்தையே பெரும்பாலும் நாடுகின்றனர். இந்நிலையில் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் பாலின் விலை குறைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தது. […]