இந்தியாவில் மத்திய அரசானது சமீபத்தில் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. அதன் பிறகு மாநில அரசுகளும் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படும். இதேப்போன்று ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் என […]
Tag: முதல்வர் அறிவிப்பு
புதுச்சேரியில் பொங்கல் பண்டிகைக்குள் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் அறிவித்ததை கொடுக்க உள்ளதாக முதல்வர் ரங்கசாமி உறுதியளித்துள்ளார். அதன்படி பொங்கல் பண்டிகைக்குள் அரசின் எந்த உதவி தொகையும் பெறாத குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். மேலும் பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு 34 ரூபாயிலிருந்து 37 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி மற்றும் சைக்கிள் விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அரிசிக்கான நான்கு மாத பணம் […]
மத்திய பிரதேச மாநிலத்தின் முதல்வர் சிவராஜ் ஷௌக்கான் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி 12-ம் வகுப்பில் 75 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு உயர் கல்வி இலவசம் என்று அறிவித்துள்ளார். அதன் பிறகு அதிகபட்சமாக 75 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்பில் சேர்ந்தால் அதற்குரிய கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும். இதேபோன்று ஜேஇஇ நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று ஐஐடி படிக்கும் மாணவர்கள், பொறியியல் […]
தேர்தலை முன்னிட்டு மராட்டிய மாநிலத்தில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது பாஜக கட்சி 27 வருடங்களாக ஆட்சி புரியும் குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 2 மற்றும் 5-ம் தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 182 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் நிலையில், முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கும், 2-ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தின் எல்லையை ஒட்டியுள்ள மராட்டிய பகுதிகளில் குஜராத் தேர்தலுக்கு மக்கள் வாக்களிப்பார்கள். […]
தமிழக அரசால் கட்டுமான தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலனுக்காக தமிழக கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் தோற்றுவிக்கப்பட்டது. இதன் மூலம் தமிழக கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்கள் கல்வி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி, ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வுதியம், விபத்து ஊனம், இயற்கை மரணம், தனிநபர் விபத்து மரணம், பணியிடத்தில் விபத்து மரணம், வீட்டு வசதி நலத்திட்ட உதவி தொகை போன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தொழிலாளர் நலன் […]
கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். இவர் கடத்த 2021-ம் ஆண்டு தன்னுடைய 46-வது வயதில் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். இவர் இறந்து ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் கர்நாடக அரசு புனித் ராஜ்குமாருக்கு உயரிய கர்நாடகா ரத்னா விருது வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் பசுவராஜ் பொம்மை செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் கன்னட மொழிக்காகவும், கர்நாடகா மாநிலத்துக்காகவும் நிறைய தொண்டுகளை செய்துள்ளார். […]
புதுச்சேரி மாவட்டத்தில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று திரு.ரங்கசாமி முதல்வராக பதவியேற்று சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். இவர் சமீபத்தில் புதுவை வளர்ச்சிக்கு ரூ.2000 கோடி நிதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். அதன்படி ஒன்றிய அரசு ரூ.1,400 கோடி நிதி அளிக்க ஒப்புதல் வழங்கி உள்ளது. அதன் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை வழங்க முடியும் என்று முதல்வர் ரங்கசாமி உறுதி அளித்துள்ளார். அதனை தொடர்ந்து 100 ஏக்கரில் மருத்துவ பூங்கா தொடங்குவது, தொழில்நுட்பம் […]
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள மல்லபுரம் பகுதியில் ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பயிற்சி கூடம், கண்காணிப்பு மையம், அறிவியல் ஆய்வு மையம் போன்றவைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதன் பிறகு கட்டிடத்தின் திறப்பு விழாவில் முதல்வர் பசுவராஜ் பொம்மை கலந்து கொண்டு திறந்து வைத்தார். அதன் பின் முதல்வர் பசுவராஜ் பொம்மை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, அரசு பள்ளியில் அமைந்துள்ள ஆய்வு மையத்திற்கு […]
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகில் மாவட்டத்தின் பிரதான அணையான மணிமுத்தாறு அணை உள்ளது. அணைக்கு அருகில் இயற்கை எழில் கொஞ்சும் அருவியும் உள்ளது. இந்த அணை கட்டும் போதே அதன் அருகில் இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக, குழந்தைகளுக்கு விளையாட்டு சாதனங்கள், சுற்றுலா பயணிகளை கவரும் சிலைகள், காட்சி கோபுரம், ஓய்வுக்கூடம் போன்ற அம்சங்களுடன் பூங்கா ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் காலப்போக்கில் 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பூங்கா முறையான பராமரிப்பில்லாததால் அங்குள்ள சிலைகளை […]
இந்தியாவில் தேசிய கல்விக் கொள்கையில் முன்மொழி கல்விக் கொள்கை வலியுறுத்தப்பட்டு வருகின்றது. அதாவது தாய்மொழி அல்லது வட்டார மொழி, ஆங்கிலம் மற்றும் வேறொரு மொழி ஆகியவையே இந்த மும்மொழி கொள்கையில் தத்துவமாகும். இந்நிலையில் மத்திய கல்வி நிறுவனங்களின் முழுவதுமாக இந்தி மொழியை கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்து வருகின்றது.இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் இடையில் இந்தி மொழியிலான எம்பிபிஎஸ் பாடப்புத்தகங்களை உள்துறை அமைச்சர் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய […]
உத்திரபிரதேச மாநிலத்தில் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவருமான முலாயம் சிங் இன்று காலமானார். முலாயம் சிங் யாதவியின் மறைவை முன்னிட்டு உத்திரபிரதேசத்தில் மூன்று நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்ற முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். முலாயம் சிங் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்றும் உத்தர பிரதேச மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் முலாயம் சிங் யாதவின் இறுதிச் சடங்கு உத்தர பிரதேசத்தில் உள்ள அவரின் சொந்தமான கிராமமான சைஃபாய் பகுதியில் நடைபெறும் […]
புதுச்சேரியில் உள்ள 9 அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் மற்றும் 5 தனியார் தொழில் பயிற்சி நிலையங்களின் பயிற்சியை முடித்த மாணவ, மாணவிகளுக்கு பட்டயம் வழங்கும் விழா கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் ரங்கசாமி 2021, 2022 ஆம் ஆண்டு வரை பயின்ற 884 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தலைவர் செல்வம், தொழில்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, தொழில்நுட்ப கல்லூரி செயலர் முத்தம்மா, அரசு அதிகாரிகள், மாணவ, […]
மதுரையில் இன்று நடைபெற்ற தோள் கொடுப்போம் தொழில்களுக்கு மண்டல மாநாட்டில் மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தியை வெளியிட்டார் முதல்வர். மதுரையில் டைடல் மற்றும் மதுரை மாநகராட்சியுடன் இணைந்து முன்னோடி டைடில் பூங்கா அமைக்கப்படவுள்ளது. இந்த பூங்கா டைடல் லிமிடெட் நிறுவனத்தால் இயக்கப்பட்டு நிறுவப்படுவதன் மூலமாக மதுரையின் மையப்பகுதியான மாட்டுத்தாவணி பகுதியில் இரு கட்டமாக இந்த டைடல் பூங்கா பார்க் வரவுள்ளது என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். முதற்கட்டமாக 600 கோடி திட்ட மதிப்பீட்டில் 5ஏக்கரில் டைடல் […]
நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் அரசு ரேஷன் கடைகள் மூலமாக உணவு பொருட்களை வழங்கி வருகிறது. ரேஷன் அட்டை வைத்துள்ள மக்களுக்கு மட்டுமே அரசியல் இந்த சலுகைகள் சென்றடையும். ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மற்றொரு சிறப்பு சலுகையும் உள்ளது. அதாவது அந்தோதயா ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் ஆயுஸ்மான் கார்டையும் இலவசமாக வாங்கிக் கொள்ளலாம். இந்நிலையில் ரேஷன் அட்டை வைத்திருக்கும் அனைவரிடமும் இந்த அட்டைகள் இருக்க வேண்டும் என்பதற்கான உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. […]
அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை இன்று தொடங்கி செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த ஓணம் பண்டிகை கேரளாவில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த பண்டிகையை முன்னிட்டு மாநில முதல்வர் பினராயி விஜயன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி அரசு ஊழியர்களுக்கு ரூபாய் 4000 போனஸ் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த போனஸ் பெற தகுதி இல்லாத ஊழியர்களுக்கு […]
பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி வீடு கட்டி தடுக்கப்படும் என முதல்வர் கூறி உள்ளார். புதுச்சேரியில் இன்று 7-ம் நாள் சட்டப்பேரவை கூறியது. இந்த கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது திமுக எம்எல்ஏ செந்தில்குமார் தனது தொகுதியில் வசிக்கும் இருளர் இன மக்கள் வீடு இல்லாமல் சிரமப்படுவதாகவும், பல மதங்களாக முகாம்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். அதன் […]
முதியோர் உதவி தொகையை அதிகரிக்கப் போவதாக சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்துள்ளார். புதுச்சேரியில் இன்று 7-ம் நாள் சட்டப்பேரவை கூடியது. இந்த கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது எதிர் கட்சி தலைவர் சிவா முதியோர் உதவித்தொகை மற்றும் விதவைப் பெண்களுக்கான உதவி தொகை வழங்கப்படாமல் இருக்கிறது. இந்த உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் எந்த நிலையில் இருக்கிறது என்று கூட தெரியவில்லை. உதவித்தொகை கிடைக்காமல் பலர் சிரமத்திற்கு […]
பள்ளிகளை வருமான நோக்கத்தோடு நடத்தக்கூடாது என முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள குரு நானக் கல்லூரியின் 50வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டார். பின்னர் பேசிய அவர் தொற்று பாதிப்பால் என் தொண்டை பாதிக்கப்பட்டுள்ளது. தொண்டை பாதிக்கப்பட்டாலும் தொண்டு பாதிக்க கூடாது என்பதால் என் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறேன். சமீப காலமாக நடந்து வரும் நிகழ்வுகள் என்னை […]
புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் மருத்துவர்கள் தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. அதில் கலந்து கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி சிறப்பாக மருத்துவ பணியாற்றிய 25 மருத்துவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மாநிலத்தில் அனைவருக்கும் சிறப்பான மருத்துவம் கிடைக்க வேண்டும் என்பதுதான் அரசின் முக்கிய எண்ணம். புதுச்சேரியில் செயல்படுத்தப்பட்டு வருகின்ற மருத்துவ காப்பீடு திட்டம் சிவப்பு அட்டைகளுக்கு மட்டுமே தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் மக்களின் கோரிக்கையை ஏற்று மஞ்சள் […]
சென்னையில் பணியின் போது உயிரிழந்த ஒப்பந்தத் தொழிலாளர் நெல்சன் குடும்பத்திற்கு நிவாரண தொகையாக ரூபாய் 15 லட்சம் வழங்கிட முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய ஒப்பந்த தொழிலாளர் நெல்சன் இயந்திரத்தில் தவறி விழுந்தார். அவரை மீட்பதற்காக ஒப்பந்த தொழிலாளி ரவியும் இயந்திரத் துளையில் விழுந்து விட்டார். இருவரையும் உயிருடன் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் […]
வன்முறையில் இறந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது . மேற்கு வங்கம் பிர்பூம் மாவட்டத்தில் போக்டுயி கிராமத்தில் கடந்த மாதம் திரினாமூல் காங்கிரஸ் கட்சியின் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இதனால் ஏற்பட்ட வன்முறையில் 3 வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதில் 2 சிறுவர்கள், 3 பெண்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கை கொல்கத்தா நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. […]
நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் குறைந்து வந்த நிலையில் தென் ஆப்ரிக்காவில் ஒமிக்ரான் என்ற புதிய வைரஸ் பரவத் தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் நாட்டின் 16 மாநிலங்களில் பரவத் தொடங்கியுள்ளது. அதன்படி மத்திய பிரதேசத்தில் இந்த வைரஸ் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய பிரதேச மாநில முதல்வர் […]
கேரள மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக கன மழை கொட்டி தீர்த்தது. அதனால் இடுக்கி மற்றும் எர்ணாகுளம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கடந்த இரண்டு மாதங்களில் பெரும்பாலான நாட்கள் கனமழை பெய்ததால் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியவில்லை. மாநிலத்தில் உள்ள 1,59,481 மீனவர்களுக்கு தலா 3,000 […]
புதுச்சேரியில் தற்காலிக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதியம் 7 ஆயிரம் ரூபாயிலிருந்து 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ சர்க்கரை மற்றும் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல மாநில அரசுகளும் பொதுமக்களுக்கு பல பரிசுகள் மற்றும் அறிவிப்புக்களை வெளியிட்டு வரும் நிலையில், புதுச்சேரி முதல்வர் மக்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் இந்த […]
ஆந்திர மாநிலத்தில் இன்று முதல் மாநிலம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும். இதற்குள் கூடுதல் அறைகள், கழிவறைகள் மற்றும் தண்ணீர் வசதி போன்றவற்றை முடிக்க வேண்டும். ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும். புதிய கல்வித் திட்டத்தை கண்டிப்பாக அமல்படுத்துவோம். இதன் […]
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கல்வியாண்டு ஆன்லைன் மூலமாகவே நடத்தப் படுமா அல்லது பள்ளிகள் திறக்கப் படுமா என்று மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால், பள்ளிகள் திறப்பு குறித்து […]
திருவள்ளூர் மாவட்டம் புது கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள அங்காளம்மன் பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் உட்பட 5 பேர் சம்பவத்தன்று அங்கு உள்ள குளத்திற்கு குளிக்க சென்றுள்ளனர். அப்போது குளத்தில் துணி துவைத்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கியவரை காப்பாற்ற முயன்ற போது ஒன்றன்பின் ஒன்றாக நீரில் மூழ்கியுள்ளனர். இதில் அதிதா(14), ஜீவிதா(14), ஜோதி(10), சுமதி(38), சுகந்தி ஆகிய 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 5 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.5 […]
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் கடந்த ஆண்டு அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நடப்பு கல்வியாண்டில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடங்கி விட்டது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருவதால் ஒவ்வொரு மாநிலத்திலும் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. அதன்படி மத்திய பிரதேச மாநிலத்தில் 11 […]
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தது. இதில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளிக்கப்பட்டு, கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் இன்றுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில் 19ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி இன்று காலை 6 மணி முதல் ஊரடங்கு நீட்டிப்பு அமலுக்கு வந்தது. இதில் ஒரு சில தளர்வுகள் மட்டும் […]
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார நெருக்கடிக்குள்ளான மக்களுக்கு உதவும் வகையில் ரூ.1,690 கோடி நிதி ஊக்குவிப்பு திட்டத்தை கடந்த மாதம் ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்தார். அந்த வகையில் தற்போது தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் கடந்த 3 மாதங்களாகப் […]
ஆந்திர மாநிலத்தில் ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். நேற்று முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் பேசிய அவர், ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும். இதற்குள் கூடுதல் அறைகள், கழிவறைகள் மற்றும் தண்ணீர் வசதி போன்றவற்றை முடிக்க வேண்டும். வருகின்ற 12ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும். […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் மாணவர்களின் நலனைக் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு சில மாநிலங்களில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் திட்டமிட்டபடி ஜூலை 19ஆம் […]
தமிழகத்தில் முதல்வர் தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன் பல்வேறு அதிரடியான அறிவிப்புகளும், சலுகைகளும் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் சென்னையில் விளையாட்டு வீரர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இதையடுத்து ஒலிம்பிக்கில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு தலா ரூபாய் 5 லட்சம் ஊக்கத் தொகையை வழங்கினார். மேலும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ரூ.3 கோடியும், வெள்ளி வென்றால் ரூ.2 கோடியும், வெண்கலம் வென்றால் ரூ.1 கோடியும் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவில் காலதாமத கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப் போவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தாமதமாக இறப்புச் சான்றிதழ் கோரினால் அதற்கு வசூலிக்கப்படும் தாமத கட்டணத்தை ரத்து செய்து முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில்,விருதாச்சலம் நகராட்சியில் இறப்பு சான்றிதழுக்கு கட்டணம் வசூலிக்க படுவதாக புகார் எழுந்துள்ளது.அரசு சார்பில் வாய்மொழி உத்தரவு மட்டுமே பிறப்பிக்கப்பட்டு உள்ளது எனவும் அரசாணை மற்றும் வழிகாட்டுதல் இல்லை எனவும் தெரிவிக்கின்றனர்.
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலையில் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதன் பலனாக சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இருந்தாலும் கொரோனா பாதிப்பு முழுமையாகக் குறையும் வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று பல மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் ஜூன் 21-ஆம் […]
நாடு முழுவதும் அதி தீவிரமாக பரவி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இருந்தாலும் சில மாநிலங்களில் அமலில் இருக்கும் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆந்திராவில் அமலில் உள்ள ஊரடங்கு மூன்று நாட்களில் முடிவுக்கு வர உள்ள […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்து செய்வதாக அறிவித்த […]
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டது. அதன்படி ஜூன் 7-ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன் பலனாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு […]
இந்தியா முழுவதிலும் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு,வருகின்ற ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், முக்கியமான 5 கோப்பில் கையெழுத்திட்டார். அதில் முக்கியமான ஒன்று மாநகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், ஆவின் பால் விலை குறைப்பு, கொரோனா நிவாரண நிதி ரூ.4000 ஆகிய கோப்புகளில் கையெழுத்திட்டார். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நகரப் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதனால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதன் காரணமாக மக்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி கடந்த மாதம் முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கப்பட்டது. அதன் பிறகு இரண்டாவது தவணை 2000 ரூபாய் பெறுவதற்கான டோக்கன் வினியோகம் நேற்று தொடங்கியது. மேலும் ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் 13 […]
இந்தியா முழுவதிலும் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜூன் 15ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்க படுவதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே […]
ஆந்திர மாநிலத்தில் மாவட்ட தலைநகர் மற்றும் மாநகராட்சிகளில் மருத்துவமனைகள் துவங்க முன் வருபவர்களுக்கு ஐந்து ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். விஜயவாடாவில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு பேசிய அவர், மாநிலத்தில் உள்ள 13 மாவட்ட தலைநகர் மற்றும் திருப்பதி, விஜயவாடா உள்ளிட்ட மூன்று மாநகராட்சிகள் என மொத்தம் 16 இடங்களில் தலா 30 முதல் 50 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும் என கூறியுள்ளார். மூன்று ஆண்டுக்குள் […]
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் கொரோனாவால் உயிர் இழக்கும் நபர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பலரும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்நிலையில் கொரோனாவால் தாய் மற்றும் தந்தையை இழந்த குழந்தைகளுக்கு உடனடி நிவாரண தொகையாக […]
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மக்கள் நலனை கருத்திக்கொண்டும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்தவகையில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பல்வேறு மாநில அரசுகள் சலுகைகளை அறிவித்து வந்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கொரோனா நோய் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி […]
தமிழகம் முழுவதும் மீன்பிடி தடை காலம் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. இழுவைப் படகுகள் மூலம் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் லட்சக்கணக்கான மீனவர்கள் வேலை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக மீனவர்களுக்கு தலா 5 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மீன்பிடி தடைக்கால நிவாரணத்தால் 1.72 லட்சம் மீனவ குடும்பங்கள் பயன் பெறுவர் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதிலும் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அமலில் […]
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக ஏற்கனவே மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதன்படி நாளையுடன் முழு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் ஒரு வாரத்திற்கு தளர்வில்லா முழு ஊரடங்கை அமல்படுத்தும் நடைமுறைகள் குறித்தும், மாவட்டங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் ஆட்சியர்களிடம் முதல்வர் ஆலோசனை […]
தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. அதனை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி […]