முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மீண்டும் மாணவர்களுக்காக களமிறங்கியுள்ளார். இதனால் கல்லூரி மாணவர்கள் அனைவரும் குஷியில் உள்ளனர். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “நோய் தொற்று காரணமாக சுமார் 20 மாதங்களுக்கு மேலாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் எடுக்கப்பட்டு வந்தது. இதில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் கடைசி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது. […]
Tag: முதல்வர் எடப்பாடி
சசிகலா என்னை முதல்வராக்கவில்லை எம்எல்ஏக்கள் தான் என்னை முதல்வராக்கினார்கள் என்று எடப்பாடி பேட்டியளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் சசிகலா விரைவில் விடுதலையாக இருக்கிறார். எனவே சசிகலா விடுதலைக்குப் பிறகு அதிமுக அரசு எந்த மாதிரியான மாற்றங்களை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. முதல்வராக […]
தமிழகத்தில் மேலும் 26 புதிய தொழில் திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தை நோக்கி முதலீடு வரும் நிலையில் உயர்மட்ட அதிகாரக் குழு கூட்டம் நடத்தப்பட்டு இதுவரை 34 தொழில் திட்டங்களுக்கு அனுமதி என்பது வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழ்நாட்டுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் தொழில் முதலீடு வந்துள்ளதாகவும், இதன் மூலம் 23 ஆயிரம் நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்றும் தமிழக முதலமைச்சர் […]
தேவிஸ்ரீ துர்காவின் மரணம் மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் பட்டியலின பகுதியை சார்ந்த காவல்துறையின் காவல் உதவி ஆய்வாளர் பணி புரிந்துவரும் முருக சுந்தரத்தின் மகள் தேவி ஸ்ரீ துர்கா. இவர் சென்ற இரு ஆண்டுகளாக நீட் தேர்விற்காக படித்து வந்துள்ளார். இந்த வருடம் தீவிரமாக படித்து வந்த நிலையில் திடீரென்று அவருக்குள் ஒரு பயம் ஏற்பட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தலைவர்கள் பலர் […]
தமிழக அரசு பெண்களுக்கும், பொதுமக்களுக்கும் அரணாக இருக்கும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் சந்தித்த தமிழக முதல்வர், கொரோனா காலத்திலும் தமிழ்நாட்டில்தான் அதிகம் முதலீடு ஈர்த்து, நாட்டிலேயே முதல் மாநிலமாக விளங்குகின்றது தமிழ்நாடு. நேற்று சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஒரு சிறுமி சாலையில் நடந்து செல்லும், போது தலைக்கவசம் அணிந்த ஆட்டோ ஓட்டும் இளைஞர் சிறுமியின் முகத்தில் மயக்க மருந்து தெளித்து கடத்த முயன்றார். அதற்குள் சுதாரித்துக் கொண்ட சிறுமி ஓட்டுநர் கையை […]
மருத்துவ உபகரணம் வாங்க ரூ.1,000 கோடி உடனடியாக ஒதுக்க வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். வேளாண்துறைக்கு என தனி சிறப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும். மேலும் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் உதவ வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளார். பிரதமர் மோடி 3வது முறையாக மாநில முதலைவர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தினார். 4 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் சார்பில் பல்வேறு […]
தமிழகத்தில் வீட்டின் வாடகையை உரிமையாளர்கள் வாங்க கூடாது என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ஆம் தேதி வரை அத்தியாவசியதேவைகளை தவிர அனைத்தும் முடங்கியுள்ளதால் பொருளாதார ரீதியாக பல்வேறு வகையில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் டெல்லி மாநில முதல்வர் அடுத்த 3 மாதங்களுக்கு வீட்டு வாடகையை கேட்டு கட்டாயப்படுத்த வேண்டாம், அவர்கள் கொடுக்கவில்லை என்றால் டெல்லி அரசு உங்கள் வீட்டின் வாடகையை கொடுக்கும் என்று வீட்டின் […]
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக கூடுதலாக ரூ.500 கோடி நிதி ஒதுக்கி உத்தராவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படுகின்றது. ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் பேருந்து சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளன. பெரிய பெரிய கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்கனவே 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. மேலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் தமிழகத்திற்கு […]