குஜராத்தில் இந்த வருடம் இறுதியில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரசாரம் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக அகமதாபாத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசினார். அப்போது, கல்வியால் மட்டுமே இந்தியாவை உலகில் சிறந்த நாடாக மாற்ற முடியும் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். நேற்று காலை அரசு பள்ளியில் காவலாளியின் மகனை சந்தித்தேன். அவன் தந்தைக்கு மாதம் 12 ஆயிரம் ரூபாய் சம்பளம். இந்த சிறுவன் […]
Tag: முதல்வர் கெஜ்ரிவால்
எனது நாட்டின் விவசாயிகளுக்கு நான் துரோகம் இழைக்க முடியாது என்று கூறி வேளாண் சட்ட நகலை சட்டப்பேரவையில் முதல்வர் கெஜ்ரிவால் கிழித்தார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு […]
கொரோனா தாக்கத்தால் டெல்லியில் ஒருவாரத்துக்கு எல்லைகள் மூடப்படுவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே டெல்லிக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஆட்டோ, இ-ரிக்ஷாக்களில் பயணம் செய்ய விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். முன்னதாக ஓட்டுனருடன் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. மேலும் டெல்லியில் சந்தைகள், சலூன் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுளது. அனைத்து தொழிற்சாலைகளும் இயங்க அனுமதி அளிப்பதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். […]
டெல்லியில் நிபந்தனைகளுக்கு பேருந்து, ஆட்டோ, டாக்ஸி சேவைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு வழங்கியுள்ளது. மேலும் பச்சை,ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களை அந்தந்த மாநில அரசுகள் தீர்மானித்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஏற்கனவே ஊரடங்கில் சில கட்டுப்பாடு தளர்வுகளை அறிவித்திருந்த மத்திய அரசு, நேற்றும் சில ஊரடங்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டது. அதன்படி பல்வேறு மாநிலங்களவை […]
டெல்லியில் கொரோனா வைரசால் வயதானவர்களே அதிகம் உயிரிழந்துள்ளனர் என முதல்வர் கெஜ்ரிவால் தகவல் அளித்துள்ளனர். டெல்லியில் கொரோனா வைரஸால் 7,000 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 1,500 நோயாளிகள் மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். மீதமுள்ளவர்களில் சுமார் 75 சதவீதம் பேர் நோயின் அறிகுறியே இல்லாதவர்கள். சிலருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளன. 1500 பேரில் 27 பேர் மட்டுமே வெண்டிலெட்டரில் உள்ளனர். டெல்லியில் இதுவரை கொரோனா நோயிலிருந்து 2,069 […]
கொரோனா பணியின் போது உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார் . இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1637 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் 38 பேர் பலியான நிலையில், 132 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் என அனைவருமே இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர். தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் […]
டெல்லி மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றில் ஒருவர் கூட புதிதாகப் பாதிக்கப்படவில்லை என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் தகவல் அளித்துள்ள அவர், கொரோனா நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். पिछले 24 घंटों में दिल्ली में कोई नया केस नहीं आया। 5 लोग इलाज करवाकर जा चुके हैं। अभी खुश नहीं […]
டெல்லி வன்முறையில் கொல்லப்பட்ட புலனாய்வுப் பிரிவு அதிகாரியின் குடும்பத்திற்கு முதல்வர் கெஜ்ரிவால் அரசு ரூ .1 கோடி இழப்பீடு அறிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கிடையே கடந்த வாரம் நடந்த மோதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 46ஆக அதிகரித்துள்ளது. போராட்டத்தில் நடந்த மோதல் கலவரமாகி, பொதுச் சொத்துகள், தனியார் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன. அதேபோல வீடுகள், கடைகள் சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார், துணை ராணுவப் படையினர் களத்தில் இறங்கியதையடுத்து […]