Categories
மாநில செய்திகள்

வெளிநாட்டினர் அலட்சியமாக இருந்ததால் கொரோனாவால் பெரிய இழப்பை சந்தித்துள்ளனர் – முதல்வர் பழனிசாமி!

வெளிநாட்டினர் அலட்சியமாக இருந்ததால் கொரோனாவால் பெரிய இழப்பை சந்தித்துள்ளனர் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,937 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று காலை ஆலோசனை நடத்தினார். 40 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட 12 குழுக்கள் இந்த ஆலோசனையில் பங்கேற்ற நிலையில், மே 3க்கு பிறகு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு அதிகளவு பிசிஆர் பரிசோதனை கருவிகள் வழங்க பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை!

தமிழகத்திற்கு பிசிஆர் பரிசோதனை கருவிகள் அதிகளவில் வழங்க பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக அரசு எடுத்த சிறப்பான நடவடிக்கையால் கொரோனா இறப்பு விகிதம் 1.2 சதவீதமாக குறைந்துள்ளதாக முதல்வர் பழனிசாமி தகவல் அளித்துள்ளார். தமிழகத்திற்கு மத்திய அரசு கூடுதல் பிசிஆர் டெஸ்ட் கிட்டுகள் அனுப்ப வேண்டும் என இன்று காலை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பிரதமருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் சிறு, குறு தொழில்களுக்கு ஆறு மாதம் விலக்கு அளிக்க […]

Categories
மாநில செய்திகள்

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியுடன் மத்தியக் குழு ஆலோசனை!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியுடன் மத்தியக் குழு ஆலோசனை நடத்தி வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மத்திய பேரிடர் மேலாண்மை வாரிய கூடுதல் செயலாளர் திருப்புகழ் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு தமிழகம் வந்துள்ளது. சென்னையில் இந்த குழுவினர் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தனிமைப்படுத்துபவர்களுக்காக அமைக்கப்பட்ட படுக்கை வசதிகளை நேற்று பார்வையிட்டனர். படுக்கை வசதிகள், கழிப்பிட வசதி, தண்ணீர் வசதி, அவர்களுக்கு வழங்கும் உணவு தயாரிக்கும் இடம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். […]

Categories
மாநில செய்திகள்

களப்பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மாத்திரைகள்… நாளை முதல் வழங்க முதல்வர் உத்தரவு!

நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் வகையில் கொரோனா தடுப்பு பணியில் உள்ள அனைத்து துறை களப்பணியாளர்களுக்கும் வைட்டமின், ஸிங்க் (zinc) மாத்திரைகள் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர் வழங்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீரை குடிக்கலாம் என பரிந்துரைத்துள்ள தமிழக அரசு , நிலவேம்பு, கபசுரக் குடிநீர் கொரோனாவுக்கான மருந்து அல்ல, எதிர்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளுக்கு வரும் 30ம் தேதி வரை அளிக்கப்பட்ட சலுகைகள் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு – முதல்வர் அதிரடி!

தமிழக விவசாயிகளுக்கு வரும் 30ம் தேதி வரை அளிக்கப்பட்ட சலுகைகளை மேலும் ஒரு மாதம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. விளை பொருட்களை பாதுகாத்து சேமிக்க கிடங்கு வசதி மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுகிறது. கிடங்கு வாடகை கட்டணத்தை மேலும் 30 நாட்கள் செலுத்த தேவையில்லை என தமிழக அறிவித்துள்ளது. பொருளீட்டு கடன் வசதியும் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுவதாகவும், காய்கறி, பழங்களை குளிர்பதன கிடங்குகளில் பாதுகாக்கும் கட்டணம் முழுவதும் ரத்து செய்யப்படுவதாகவும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்ற முதல்வர் பழனிசாமி… முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்!

சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று உத்தரவிட்டார். முழு ஊரடங்கு காலத்தில் மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த பணிகள் மட்டும் நடைபெறும். அம்மா உணவகங்கள், ஏடிஎம்கள் வழக்கம் போல செயல்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் சென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் கடைகள் இயங்காது என தமிழக அரசு அறிவித்தது. 26ம் தேதி முதல் 29 வரை சென்னையில் மளிகை, இறைச்சி, பேக்கரி கடைகள் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு – முதல்வர் அதிரடி அறிவிப்பு!

கொரோனா பரவலை தடுக்க நகர்ப்புறங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை, கோவை, மதுரையில் 26ம் தேதி காலை முதல் 29ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தவும், சேலம், திருப்பூரில் 26ம் தேதி காலை முதல் 28ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு என்றும் கூறியுள்ளார். முழு ஊரடங்கு காலத்தில் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளும் முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,683 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் மொத்தம் 752 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. சுத்திகரிப்பு நிலையங்கள், இரும்பு, சிமெண்ட், பெயிண்ட் உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

பணியின் போது உயிரிழந்தால் ரூ.50 லட்சம் நிதியுதவி – முதல்வர் பழனிசாமி அறிவிப்புக்கு மருத்துவர்கள் நன்றி!

கொரோனாவுக்கு எதிரான பணியில் உயிரிழந்தால் ரூ.50 லட்சம் தரப்படும் என முதல்வர் அறிவித்ததற்கு மருத்துவர்கள் நன்றி கூறியுள்ளனர். கொரோனாவுக்கு தடுப்பு மருந்து தற்போது வரை கண்டுபிடிக்காத நிலையில் கொரோனாவுக்கு எதிராக மருத்துவர்கள் போராடி வருகின்றனர். ஆனால் நாட்டில் பல்வேறு பகுதிகளில் மருத்துவர்கள் மீது தாக்குதல், உயிரிழந்த மருத்துவர்கள் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுப்பது போன்ற சம்பவம் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணியின் போது தொற்று ஏற்பட்டு உயிரிழந்தால் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தொழிற்சாலைகள் செயல்பட அனுமதியா? தொழிலதிபர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

தொழிலதிபர்களுடன் காணொலி மூலம் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமை செயலகத்தில் இருந்து தொழிலதிபர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் சில தொழிற்சாலைகளை படிப்படியாக அனுமதிப்பது, கொரோனா பரவாமல் இருக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமி காணொலியில் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,629 ஆக அதிகரித்துள்ளது என தமிழக சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 […]

Categories
மாநில செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த தாய்….. உதவி கேட்ட பாதுகாப்பு வீரர் – முதல்வர் பழனிசாமி அதிரடி நடவடிக்கை!

குஜராத்தில் பாதுகாப்பு பணியில் இருப்பதால் வீட்டில் தனியாக இருக்கும் தனது 89 வயது தாயாருக்கு மருத்துவ உதவிகள் தேவை என ட்விட்டரில் கோரிக்கை விடுத்த ரவிக்குமார் என்பவருக்கு முதல்வர் பழனிசாமி உடனடியாக உதவி அளித்துள்ளார். ரவிக்குமார் என்பவர் குஜராத்தில் பாதுகாப்பு பணியில் உள்ளார். இவர் தனது ட்விட்டரில், ஐயா நான் மத்திய பாதுகாப்பு படையில் குஜராத் அகமதாபாத்தில் பணியில் உள்ளேன். எனது தாயார் 89 வயது வீட்டில் தனியாக உள்ளார் உடல் நிலை சரியில்லை. எனக்கு தந்தையும் […]

Categories
மாநில செய்திகள்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதல்வர் பழனிசாமி அறிவிப்பார் – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதல்வர் பழனிசாமி அறிவிப்பார் என அமைச்சர் செங்கோட்டையன் தகவல் அளித்துள்ளார். கொரோனா வைரஸ் வேகமாக பரவியதை தொடர்ந்து நாடு முழுவது ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதனால் அனைத்து கல்வி நிலையங்களையும் அரசு காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. அனைத்து கல்லூரி தேர்வுகள் மற்றும் 9ம் வகுப்பு வரையிலான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக மார்ச் 27ம் தேதி நடைபெற இருந்த 10 வகுப்பு பொதுத் தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து மே […]

Categories
சற்றுமுன்

கொரோனா தடுப்பு பணியின் போது உயிரிழந்தால் ரூ.50 லட்சம் நிதியுதவி – முதல்வர் பழனிசாமி அதிரடி!

கொரோனா தடுப்பு பணியின் போது தொற்று ஏற்பட்டு உயிரிழந்தால் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மருத்துவம், காவல், உள்ளாட்சி, தூய்மைப்பணியாளர் உள்பட அனைத்து துறை பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டல் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அவர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ரூ.50 லட்சமாக உயர்த்தி அறிவித்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பு பணியின் போது தொற்று ஏற்பட்டு உயிரிழக்கும் மருத்துவர் உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா உயிரிழப்பு குறித்து காரணமறிய தமிழக அரசு குழு அமைப்பு – 23ம் தேதி முதல்வர் மீண்டும் ஆலோசனை!

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் வரும் 23ம் தேதி மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரஸால் உயிரிழப்பதற்கான சரியான காரணத்தை கண்டறிய மாநில, மாவட்ட அளவில் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள குழு அளிக்கும் அறிக்கையை விளக்கமாக ஆய்வு செய்து மாநில அளவிலான குழு முடிவு செய்யும் என கூறப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவர்களின் அர்ப்பணிப்புக்கு மரியாதை அளித்து மனிதநேயத்துடன் நடந்து கொள்ளுங்கள் – முதல்வர் பழனிசாமி!

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 55 வயது மருத்துவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிறுநீரக கோளாறு காரணமாக டயாலிசிஸ் உள்ளிட்ட சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து அந்த மருத்துவரின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மயானத்திற்கு அடக்கம் செய்ய எடுத்து செல்லப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையினருடன்‌ வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 110 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்படுமா? – முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை தொடங்கியது!

தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்படுவது குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை தொடங்கியது. தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,477 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் சில தொழில்களுக்கு ஊரடங்கில் இருந்து தளர்வு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு எடுத்தும் கொள்ளும் அதிகாரத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆனால் ஊரடங்கு நெறிமுறைகள், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு மீது வேண்டுமென்றே ஸ்டாலின் குற்றம் சாட்டி வருகிறார் – முதல்வர் பழனிசாமி பேட்டி!

தமிழக அரசு மீது வேண்டுமென்றே ஸ்டாலின் குற்றம் சாட்டிவருகிறார் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். இன்று சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் உயரதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி, சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதித்த 24 பேரில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என கூறியுள்ளார். சேலம் […]

Categories
மாநில செய்திகள்

யாரும் பயப்படாதீங்க… 15 நாட்களில் கொரோனா இருக்காது… முதல்வர் சொன்ன இனிப்பான செய்தி!

இன்னும் 15 நாட்களில் பாசிட்டிவ் அனைத்தும் நெகட்டிவ் ஆகிவிடும் என்று முதல்வர் பழனிசாமி மக்களுக்கு இனிப்பான செய்தியை தெரிவித்துள்ளார்.. கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக்கு பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,242 ல் இருந்து 1,267 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 62 பேர் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா நோயை வைத்து எதிர்கட்சிகள் அரசியல் செய்வது வேதனை அளிக்கிறது – முதல்வர் பழனிசாமி வருத்தம்!

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1267 ஆக உயர்ந்துள்ள நிலையில், வெளிநாடுகளுக்கு சென்று திரும்பிய பணக்காரர்கள்தான் கொரோனாவை இறக்குமதி செய்துள்ளனர், ஏழைகளுக்கு எந்த நோயும் இல்லை என முதல்வர் தெரிவித்துள்ளார். மக்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. மலர்கள் வீணாவதை தடுக்க வாசனை திரவிய தொழிற்சாலைகளுடன் பேசி தீர்வு காணப்பட்டுள்ளது என கூறியுள்ளார். மேலும் சிவப்பு பகுதிகளில் தற்போதைய ஊரடங்கு நடைமுறை தொடர்ந்து இருக்கும். 15 பேருக்கு அதிகமாக கொரோனா பாதித்துள்ள மாவட்டங்கள் […]

Categories
மாநில செய்திகள்

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.134.64 கோடி வந்துள்ளது – முதல்வர் நன்றி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.134.64 கோடி வந்துள்ளது என முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பத்திரிகையாளர்கள் உயிரிழந்தால் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1267 ஆக உயர்ந்துள்ள நிலையில், வெளிநாடுகளுக்கு சென்று திரும்பிய பணக்காரர்கள்தான் கொரோனாவை இறக்குமதி செய்துள்ளனர், ஏழைகளுக்கு எந்த நோயும் இல்லை என முதல்வர் தெரிவித்துள்ளார். ஏப் 20க்கு பிறகான நடவடிக்கைகள் குறித்து நிதித்துறை செயலாளர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துவிடும் – முதல்வர் நம்பிக்கை!

தமிழகத்தில் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துவிடும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா மேலும் 25 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1267 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 180 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனாவுக்கு இன்று ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் மிகப் பெரிய சவாலாக […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து மாவட்டங்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டுள்ளது – முதல்வர் பழனிசாமி விளக்கம்!

அனைத்து மாவட்டங்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டுள்ளது என முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1267 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 180 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனாவுக்கு இன்று ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் மிகப் பெரிய சவாலாக அமைந்துள்ளது, எனினும் தமிழக அரசின் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் அரசிடம் 2,501… தனியாரிடம் 870… மொத்தம் 3,371 வெண்டிலேட்டர் இருக்கு… முதல்வர் பழனிசாமி!  

கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் வெண்டிலேட்டர்  அரசிடம் 2501, தனியாரிடம் 870 என தமிழகத்தில் 3,371 கருவிகள்  கைவசம் உள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக்கு பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், மத்திய அரசு அறிவிப்பதற்கு முன்னதாகவே ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியது; 12 முறை என்னுடைய தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்குதான் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தொற்று எளிதாக பரவும் என்பதால் மிகப்பெரிய சவாலாக உள்ளது: முதல்வர் பழனிசாமி

கொரோனா தொற்று எளிதாக பரவும் என்பதால் மிகப்பெரிய சவாலாக உள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனாவை தடுப்பதற்கான அனைத்து மருத்துவ உபகரணங்களும் தமிழகத்தில் போதிய அளவு உள்ளன என கூறினார். மேலும் அவர் கூறியதாவது, ” நாள்தோறும் சராசரியாக 5,590 பேருக்கு பரிசோதனை செய்யும் வசதி தமிழகத்தில் உள்ளது. கொரோனா பரவல் தடுப்பு பணிகளுக்கான நடவடிக்கைகள் ஜனவரி மாதமே தமிழகத்தில் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா… பாதிப்பு 1,267 ஆக உயர்வு.. முதல்வர் பழனிசாமி!

தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக்கு பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், பிரதமர் மோடியும் 2 முறை மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். கொரோனா தடுப்பு பணிக்காக சிறப்பு மருத்துக்குழு அமைக்கப்பட்டது. மத்திய அரசு அறிவிப்பதற்கு முன்னதாகவே ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியது. 12 முறை என்னுடைய தலைமையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

நாளை காலை 10.30 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1242 ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இதுவரை 118 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு […]

Categories
அரசியல்

“முதல்வரால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது”…. அமைச்சர் விஜயபாஸ்கர்!

முதலமைச்சரின் தொடர் நடவடிக்கைகள், முன்னேற்பாடுகளால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் இன்று 38 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,242 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 37 பேர் குணமாகியுள்ளனர். இதுவரை 117 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக ஆறுதல் தகவல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஊரடங்கை 14 நாட்கள் நீட்டிக்க மருத்துவர் குழு பரிந்துரை…. நாளை தமிழக அமைச்சரவை கூடுகிறது!

முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த ஊரடங்கை நீட்டிப்பது பற்றி முடிவெடுக்க வாய்ப்பு ள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 834ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் ஏப்., 14ம் தேதி வரை ஓரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

2,500 வென்டிலேட்டர் கருவிகள் வாங்க உத்தரவு – முதல்வர் பழனிசாமி!

2500 வென்டிலேட்டர் கருவிகள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழகத்தில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை கொண்டு 12 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த குழுக்களுடன் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்திய பின் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், கொரோனா சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சுமார் 32 ஆயிரம் படுக்கைகள் உள்ளன. 12 ஐஏஎஸ் குழுக்களுக்கும் தனித்தனி பணிகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா […]

Categories
அரசியல்

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது? – முதல்வர் சொன்ன பதில்!

10ம் வகுப்பு தேர்வை எப்போது நடத்துவது என்பது ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதை தொடர்ந்து 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து கல்வி நிலையங்களையும்  அரசு காலவரையின்றி மூடியது. இதில் குறிப்பாக மார்ச் 27 ஆம் தேதி நடைபெற இருந்த 10 வகுப்பு பொதுத் தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து 14 ஆம் தேதி ஊரடங்கு முடிந்த பின் தேர்வு  நடக்குமா? நடக்காதா? […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா தொற்று 3ம் நிலைக்கு செல்ல வாய்ப்பு உள்ளது – முதல்வர் பழனிசாமி அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் 738 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் மேலும் 344 பேரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளன என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று தற்போது 2ம் நிலையில் இருக்கும் நிலையில், இனி வரும் காலங்களில் 3ஆம் நிலைக்கு செல்ல வாய்ப்பு உள்ளதாக தெரிவித்த அவர், கொரோனாவின் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா ஒருங்கிணைப்புக்குழு சிறப்பாக பணியாற்றி வருகிறது என்றும் கொரோனா […]

Categories
அரசியல்

BREAKING : தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?… முதல்வர் பழனிசாமி பதில்!

“கொரோனா தொற்றின் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில்  கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி இன்று 12 குழுக்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் 12 குழுக்கள் திறம்பட செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 344 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வர […]

Categories
மாநில செய்திகள்

கொரோனாவின் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு – முதல்வர் பழனிசாமி பேட்டி!

கொரோனா தொற்றின் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் 12 குழுக்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். தலைமை செயலாளர் உட்பட அரசு அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி, கொரோனா தடுப்பு பணிக்கு 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன, ஒவ்வொரு குழுவுக்கும் தனித்தனியாக பணிகள் அளிக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார். 2,500 வென்டிலேட்டர் […]

Categories
அரசியல்

BREAKING : இன்று இரவு 50,000 ரேபிட் டெஸ்ட் கருவிகள் வரும் – முதல்வர் பழனிசாமி!

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக  இன்று இரவு 50 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வரும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில்  கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி இன்று 12 குழுக்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் 12 குழுக்கள் திறம்பட செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 344 பேருக்கு பரிசோதனை […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை… 12 குழுக்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளர் உட்பட 12 குழுக்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் 12 குழுக்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. தலைமை செயலாளர் உட்பட அரசு அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். முன்னதாக நமக்காக உழைக்கும் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா வைரஸ் குறித்து ஐவிஆர்எஸ் குரல் வழி சேவை… முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்!

கொரோனா வைரஸ் தொடர்பான ஐவிஆர்எஸ் தானியங்கி குரல் வழி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்திலிருந்து முதலமைச்சர் பழனிசாமி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்துள்ளார். 94999 12345 என்ற அவசர உதவி எண்ணில் கொரோனா தொடர்பான விளக்கங்களை பெறலாம் என கூறப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு கொரோனா அறிகுறி உள்ளதா என்பதை கண்டறியவே இந்த குரல் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தாராளமாக நிதி தாருங்கள் – முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிதி வழங்குமாறு முதல்வர் பழனிசாமி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தாராளமாக நிதி தாருங்கள் என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குமாறு 2வது முறையாக வேண்டுகோள் விடுத்துள்ளார். பேரிடர் நேரத்தில் நீங்கள் அளிக்கும் சிறு தொகை கூட ஏழை, எளிய மக்களைக் காப்பாற்ற பேரூதவியாக இருக்கும் அனைத்து நன்கொடைகளுக்கும் ரசீது அனுப்பப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பு பணிக்காக முதல்வர் பொது […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளின் விளைபொருட்களை விற்பனை செய்ய அவசரகால தொலைபேசி எண்கள் – முதல்வர் அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் முதல்வர் பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தெரிவு செய்யப்பட்ட உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என்றும் விவசாயிகளிடம் காய்கறி வாங்கி விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படும் என்றும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். காய்கறிகள் மற்றும் பழங்களை குளிர்பதன கிடங்குகளில் பாதுகாப்பதற்கான கட்டணம் ரத்து செய்யப்படுவதாகவும், குளிர்பதன கிடங்கு பயன்பாட்டு கட்டணம் ஏப்ரல் 30 வரை […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது?… முதல்வர் பழனிசாமி பதில்!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்..  தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்ததையடுத்து, அனைத்து கல்வி நிறுவனங்களும் காலவரையின்றி மூடப்பட்டது. குறிப்பாக, 10 வகுப்பு பொதுத் தேர்வு ஒத்தி வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. தற்போது தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதனால் 14 ஆம் தேதிக்கு பிறகு தேர்வு எப்போது நடைபெறும் என்று 10 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள் மற்றும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு மத்திய அரசு ரூ.500 கோடி வழங்கி உள்ளது – முதல்வர் பழனிசாமி தகவல்!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வாணலி மூலம் இன்று காலை முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் அனைத்து மாவட்ட முதல்வர்களும் பங்கேற்ற நிலையில், இந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, கொரோனோவை தடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது என கூறியுள்ளார். தமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனைகளில் 1,848 பேர் சிகிச்சை பெறுகின்றனர் தமிழகத்தில் 17 கொரோனா பரிசோதனை மையம் உள்ளது மேலும் 21 […]

Categories
அரசியல்

மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனாவை ஒழிக்க முடியும் – முதல்வர் பழனிசாமி!

மக்களைத் துன்புறுத்த வேண்டும் என்பது அரசின் நோக்கம் அல்ல, மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார், அப்போது அவர் பேசுகையில், “மத்திய அரசிடம் இருந்து முதற்கட்டமாக ரூ.500 கோடி வந்துள்ளது. பல்வேறு தொழிலாளர் நல வாரியங்களில் உள்ளவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும். அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே ரூ 1000 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஏப்., 10 முதல் தமிழகத்தில் அதிதீவிர பரிசோதனை கருவிகள் மூலம் கொரோனா சோதனை – முதல்வர் பழனிசாமி!

தமிழகத்தில் சுமார் 571 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலில் தமிழகம் தொடர்ந்து 2ம் கட்டத்தில் உள்ளது. 3ம் நிலைக்கு போகக்கூடாது என ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காணொலி மூலம் இன்று காலை முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் அனைத்து மாவட்ட முதல்வர்களும் பங்கேற்ற நிலையில், இந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் […]

Categories
அரசியல்

BREAKING : 30 நிமிடங்களில் பரிசோதனை… 1 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் விரைவில் வாங்கப்படும்… முதல்வர் பழனிசாமி!

30 நிமிடங்களில் பரிசோதனை செய்யும் வகையில் 1 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்பட்ட உள்ளன என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார், அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் குறைவு தடுப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விமானநிலையத்தில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 538 பயணிகள் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர் என்றார். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் 4,067 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. கடந்த 6 நாட்களாகவே கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுமார் 571 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலில் தமிழகம் தொடர்ந்து 2ம் கட்டத்தில் உள்ளது. 3ம் நிலைக்கு போகக்கூடாது என ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என தமிழக அரசு […]

Categories
மாநில செய்திகள்

நாளை முதல் நேரக்கட்டுப்பாடு… காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே கடைகள் செயல்படும்… முதல்வர் அதிரடி உத்தரவு!

நாளை முதல் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் வெளியே வர வேண்டும் எனவும், மளிகை கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை திறந்திருக்கும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKIGN : தமிழ்நாட்டில் நாளை முதல் காலை 6 – மதியம் 1 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க முதல்வர் உத்தரவு!

நாளை முதல் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தமிழகத்தில் 110 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், சென்னையில் அதிகபட்சமாக 11 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் அளித்துள்ளார். நோய் தொற்று இருப்பவர்கள் வரையறுக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு கூடுதலாக ரூ. 3000 கோடி ஒதுக்க முதல்வர் பழனிசாமி கோரிக்கை!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு கூடுதலாக ரூ. 3000 கோடி ஒதுக்க முதல்வர் பழனிசாமி மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். தமிழகத்தில் கொரோனோவால் 234 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது எண்ணிக்கை 236ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டுமே 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த 110 பேரும் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என தெரியவந்தது. மேலும் நூற்றுக்கணக்கானோர் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கின்றனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இந்த […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கொரோனா நடவடிக்கை – அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலியில் பிரதமர் மோடி ஆலோசனை!

கொரோனா பாதிப்புகள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் ஆலோசனையில் பங்கேற்றுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி முதலமைச்சரிடம் கேட்டு அறிகிறார். மருத்துவமனை மற்றும் சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா நிவாரண உதவி ரூ. 1000 மற்றும் அத்தியாவசிய பொருட்கள்… ரேஷனில் வினியோகம் தொடங்கியது!

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி கொரோனா நிவாரண உதவித்தொகை ரூ. 1000 வழங்கப்படும் என அறிவித்தார். இன்று முதல் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண உதவித்தொகை ரூ. 1000 மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. எனவே அனைத்து நியாய விலை கடைகளுக்கான வாராந்திர விடுமுறை நாளான ஏப்ரல் 3ம் தேதி ரேஷன் கடைகள் வழக்கம்போல் செயல்படும் என்றும் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

ஈஷாவில் கொரோனா தொற்று இல்லை… வதந்தி பரப்பினால் நடவடிக்கை – ஈஷா மையம் விளக்கம்!

ஈஷாவில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என ஈஷா யோகா மையம் விளக்கம் அளித்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் இருந்தே மாநில சுகாதார அதிகாரிகள் ஈஷா மையத்தில் மருத்துவ சோதனைகளை பார்வையிட்டு வருகின்றனர். தற்போது வரை ஈஷாவில் கொரோனா தொற்று இல்லை. வதந்தி பரப்புவோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பிப்ரவரி மாதம் ஈஷா யோகா மையம் சார்பில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். இதில் வெளிநாட்டினர், மற்றும் […]

Categories

Tech |