தமிழக துணை முதல்வர் ஓ .பன்னீர்செல்வம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவ பரிசோதனைக்காக சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துமனையில் அனுமதிக்கபட்டார். இது வழக்கமான பரிசோதனை என்றே மருத்துவமனை தரப்பிலும், துணை முதல்வர் தரப்பிலும் சொள்ளபட்டது. அதுமட்டுமல்லாமல் அவர் இன்று மாலை 2 மணிக்கு அவர் வீடு திரும்புவார் என்று சொல்லப்பட்டநிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று விசாரித்தார். இதில் துணை முதல்வருக்கு கொடுக்கப்பட்ட […]
Tag: முதல்வர்
தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பிரமாதமாக இருப்பதாக தமிழக முதல்வர் எட்டாப்படி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார். நேற்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனாவை கட்டுப்படுத்த நாங்கள் தவறி விட்டோமா ? இந்தியாவிலேயே சிறப்பான முறையில் இந்த கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முதல் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. இன்னைக்கு மருத்துவ நிபுணர்கள் பாராட்டிக் கொண்டு இருக்கிறார்கள. படித்தவர்கள் பாராட்டுகிறார்கள், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். ரெண்டு நாளைக்கு முன்னாடி கூட வெளி […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமூக தொற்றாக ஏற்படவில்லை என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். சேலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் கொரோனா சமூக பரவல் கிடையாது.சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதியில் தான் தொற்று கண்டறியப்படுகின்றது. கட்டுப்படுத்தப்பட்டபகுதியில் சின்ன சின்ன வீடு, குறுகிய தெர, நெரிசலான வீடுகள் இருக்கின்றன. ஒரே வீட்டுல பேரில் 7 பேர் வசிக்கிறார்கள். அதுல தான் அந்த பகுதியில் அதிகமானோர் கண்டறியப்படுகின்றார்கள். […]
தமிழகம் முழுவது ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது . கொரோனா தொற்று காரணமாக மார்ச் 24ஆம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இலிருந்து ஆட்டோக்களை இயக்க அனுமதி வழங்கப்படாமல் இருந்தது தங்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருப்பதாக தொடர்ந்து பல மாவட்டங்களிலிருந்தும் ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனையை வெளிப்படுத்தி வந்தனர் . இந்த நிலையில் தமிழகத்தில் சென்னையை தவிர பிற மாவட்டங்களில் நிபந்தனைகளுடன் நாளை முதல் ஆட்டோ இயக்கலாம் என அரசு அனுமதி அளித்திருக்கிறது, முதலமைச்சர் […]
10ஆம் வகுப்பு தேர்வு குறித்து முதல்வர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதால் பல்வேறு தரப்பிலிருந்து குறிப்பாக, ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் இந்த தேர்வை தற்போது நடத்த வேண்டாம் என்று சொல்லி வரக்கூடிய சூழ் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் குறித்தும், அதில் எந்த மாதிரி சிக்கல் இருக்கிறது, அந்த சிக்கலை எப்படி சரிசெய்து ? எவ்வாறாக மாணவர்களை தேர்வு எழுத வைக்கலாம் என்பது […]
ஊரகப் பகுதிகளில் சலூன் கடை திறக்க அனுமதி திறக்க அனுமதிக்கலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படியில் எடுக்கப்பட்டு வருகின்றது. நோய்யின் தாக்கம் குறைய, குறைய தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது முடிதிருத்தும் தொழிலாளர்கள் கோரிக்கையை கனிவுடன் ஏற்று சலூன் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது என்று முதல்வர் தெரிவித்திருக்கின்றார். பெருநகர சென்னை […]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தற்போது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின் திட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்க கூடிய இலவச மின்சாரம் கொடுக்க கூடிய அம்சம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதை திருத்தி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுள்ளது. இது தொடர்பாக கடந்த ஒரு வாரத்துக்கு முன்பும் கூட ஒரு கடிதம் பிரதமர் நரேந்திர மோடிக்கு […]
தமிழகத்தில் அமலில் இருக்கும் பொது முடக்கத்தை சில தளர்வுகள் உடன் மே 31ம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் பொது முடக்கம் 31ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு வரை முறைகளுடன் இருக்கும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே நடைமுறையில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கான தடைகள் மறு உத்தரவு வரும் வரை அமலில் […]
சென்னையில் மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறிய விஷயங்கள் பின்வருமாறு: கோயம்பேடு சந்தையை முதலிலேயே வேறு இடத்திற்கு மாற்ற விரும்பினோம். ஆனால் அதற்குவியாபாரிகள் ஒத்துழைக்கவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அரசு நடவடிக்கை எடுக்காததால் கோயம்பேட்டில் கொரோனா தொற்று அதிகரித்தது என்று சொல்வது தவறு என அவர் கூறியுள்ளார். கோயம்பேடு வியாபாரிகளிடம் பல முறை அரசு பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் ஒத்துழைக்கவில்லை என கூறியுள்ளார். […]
கோயம்பேடு சந்தையை முதலிலேயே வேறு இடத்திற்கு மாற்ற விரும்பினோம். ஆனால் அதற்குவியாபாரிகள் ஒத்துழைக்கவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சென்னையில் மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், ” ஆசியாவின் மிகப்பெரிய மார்க்கெட்டாக கோயம்பேடு திகழ்ந்து வருகிறது. சுமார் 20 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவமனைகளில் இருந்து படிப்படியாக வீடு திரும்புகின்றனர். தமிழக அரசின் தீவிர முயற்சியால் கொரோனா தொற்று பரவல் […]
கொரோனா காரணமாக பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை தொடங்கி நடைபெற்று வருகிறது. 3ம் கட்ட ஊரடங்கு நிறைவு பெற உள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில், […]
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை தொடங்கியது. 3ம் கட்ட ஊரடங்கு நிறைவு பெற உள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்னன், சென்னை மாநகராட்சி ஆணையர், சுகாதாரத்துறை […]
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை தொடங்கியது. 3ம் கட்ட ஊரடங்கு நிறைவு பெற உள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்னன், சென்னை மாநகராட்சி ஆணையர், சுகாதாரத்துறை […]
கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் வடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக காயமடைந்த காவலர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிவாரணம் அறிவித்துள்ளார். பலத்த காயமடைந்த காவலர் சக்திவேலுக்கு ரூ.2 லட்சம் நிவாரண உதவியும், லேசான காயமடைந்த காவல் ஆய்வாளர் அந்தோணி ஜெகதாவுக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவியும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் இதுவரை 13 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார். திருநெல்வேலி […]
12ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார் தமிழகத்தைப் பொருத்தவரை கடந்த ஒருவார காலமாகவே ஒவ்வொரு நாளும் 500க்கும் மேற்பட்டோர் என்ற அளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை என்பது தொடர்ச்சியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் வருகின்ற 17ஆம் தேதி முதல் ஊரடங்கு நிறைவு பெற இருக்கின்ற நிலையில் தமிழக பல்வேறு விதமான தவறுகளை தமிழக அரசு கடந்த ஒரு வாரமாக காலமாகவே கொடுத்து வருகின்றனது. அந்தந்த மாவட்ட வாரியாக […]
சினிமா, சீரியல்களின் படத்தொகுப்பு, குரல்பதிவு உள்ளிட்ட தயரிப்புக்குப் பிந்தைய பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தயாரிப்புக்கு பிந்தைய பணிகளை மட்டும் மே 11ம் தேதி முதல் மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தயாரிப்பாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதி அளித்துள்ளார் என அரசு தகவல் வெளியாகியுள்ளது. படத்தொகுப்பு, குரல் பதிவு, பின்னணி இசை, ஒலிக்கலவை ஆகிய பணிகளில் அதிகபட்சம் 5 பேர் மட்டும் ஈடுபடலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. கிராபிக்ஸ் பணிகளை மட்டும் […]
விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்குவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக-கர்நாடக எல்லையான ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் பணியில் இருந்தபோது தலைமைக்காவலர் சேட்டு விபத்தில் பலியானார். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தை சேர்ந்த சேட்டு என்பவர் ஓசூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். நேற்று இவர் கர்நாடக – தமிழக எல்லையில் உள்ள ஜூஜூவாடியில் கொரோனா […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் 2570 செவிலியர்கள் பணி நியமனம் செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஒப்பந்தம் அடிப்படையில் 2,570 செவிலியர்கள் அடுத்த 6 மாத காலம் பணியில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி நியமன ஆணை பெற்ற செவிலியர்கள் 3 நாட்களுக்குள் பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளில் மிகவும் முக்கிய பங்கு வகிப்பவர்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆவர். இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு […]
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலையில் விஷவாயு கசிவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். விஷவாயு கசிவு காரணமாக பலர் உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையும், துயரமும் அடைந்தேன் என அவர் கூறியுள்ளார். விஷவாயு சம்பவத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் குணமடைய பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் 5,000-திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். ஒரு குழந்தை உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக […]
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் காவலர் முதலமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவில்லை என சென்னை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. முதலமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் காவலருக்கு கொரோனா என வெளியான தகவலுக்கு சென்னை காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. பெண் காவலருக்கு முதலில் கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அடுத்த பரிசோதனையில் கொரோனா இல்லை என முடிவு வெளியானதாக தகவல் கூறப்படுகிறது. சென்னை பாதுகாப்பு காவல் பிரிவில் பணியாற்றிவந்த பெண் தலைமை காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. […]
தமிழக முதல்வர் இல்லத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் காவலருக்கு கொரோனா இல்லை என்று தெரியவந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக இன்று மட்டும் 700க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரசுக்கு முன் களப்பணியாளர்களாக பணியாற்றக்கூடிய மருத்துவர்கள் சுகாதாரப் பணியாளர்கள் காவலர்கள் என யாரும் தப்பவில்லை. இந்த நிலையில் தற்போது அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி […]
மே.17க்கு பிறகும் ஊரடங்கு நீடித்தால் மாநிலத்தின் பொருளாதாரம் முற்றிலுமாக அழிந்து விடும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். மேலும், ஊரடங்கு நீட்டிப்பில் மாநில முதலமைச்சர்களை கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும், இல்லையெனில் மாநில அரசு கேட்கும் நிதியையாவது மத்திய அரசு வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார். கொரோனா பரவல் நாட்டில் வேகமெடுக்க ஆரம்பித்ததில் இருந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக அனைத்து வணிக நிறுவனங்கள், தொழிசாலைகள், கடைகள் என அனைத்தும் மூடப்பட்டன. 21 நாட்களை […]
தமிழகத்தில் 50 பரிசோதனை மையங்கள் மூலம் நாளொன்றுக்கு சுமார் 12,000 பேர் பரிசோதனை செய்கிறார்கள் என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றி வருகிறார். அதில் அவர் கூறியதாவது: அதிகளவில் பரிசோதனை செய்வதால் தான் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் தான் கொரோனா பரிசோதனை மையங்கள் அதிகமாக உள்ளன. கொரோனா தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனைகளும் அதிக அளவில் நடத்தப்படுகின்றன என தெரிவித்துள்ளார். […]
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 6 மணிக்கு தமிழக மக்களுக்கு உரையாற்றுகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தொலைக்காட்சி மூலம் தமிழக மக்களுக்கு முதல்வர் உரையாற்றுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக அவரின் உரையில் பல்வேறு அறிவிப்புகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் மிகவும் அதிகமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் முன்னெப்போதும் இல்லாத அளவில், 527 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக உறுதியாகியுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த […]
கேரளாவில் இன்றும் புதிதாக யாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இன்று செய்தியாளர்களை சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது, ” கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 499 என தெரிவித்தார். குறிப்பாக, அதில் தற்போது 34 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து சிகிச்சை பெற்று 461 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 42 ஆயிரத்தை கொரோனா […]
புதுச்சேரி அரசுக்கு வருவாயை பெருக்க முடியாத நிலை ஏற்பட்டால், அரசு ஊழியர்கள் ஊதியத்தை தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும் என முதல்வர் நாராயணசாமி தகவல் அளித்துள்ளார். புதுச்சேரியில், மாஹேவில் இன்று 51 வயது நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் வெளிநாடு சென்று வந்ததாக கூறப்படுகிறது. தற்போது இந்த நபர் மாஹே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக […]
மே 3ம் தேதிக்கு பிறகு கடைபிடிக்க வேண்டிய ஊரடங்கு நெறிமுறைகள் பற்றிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதித்துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் தலைமையிலான 17 பேர் கொண்ட வல்லுனர் குழு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தனர். முதல்வர் முகாம் அலுவலகத்தில் நிதி துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன், தலைமை செயலாளர் சண்முகம், தொழில் துறையின் முதன்மை செயலாளர் முருகானந்தம், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டனர். மே 3-க்குப் பிறகு தொழில் நிறுவனங்களை […]
மே 3-க்குப் பிறகு தொழில் நிறுவனங்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக தொழில்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். முதல்வர் முகாம் அலுவலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில், தலைமைச் செயலாளர் சண்முகம், தொழில்துறை செயலாளர், நிதித்துறை செயலர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஊரடங்கு முடிந்த பிறகு தொழில் நிறுவனங்களை படிப்படியாக திறக்க அனுமதிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறு, குறு நிறுவனங்களை திறப்பது குறித்தும் ஆலோசனையில் முடிவெடுக்கப்படுகிறது. மே 3ம் தேதியோடு 2ம் […]
மே 3-க்குப் பிறகு தொழில் நிறுவனங்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக தொழில்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார். முதல்வர் முகாம் அலுவலகத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம், தொழில்துறை செயலாளர், நிதித்துறை செயலர் உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். ஊரடங்கு முடிந்த பிறகு தொழில் நிறுவனங்களை படிப்படியாக திறக்க அனுமதிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறு, குறு நிறுவனங்களை திறப்பது குறித்தும் ஆலோசனையில் முடிவெடுக்கப்படுகிறது. மே 3ம் தேதியோடு […]
தமிழகத்தில் ஊரடஙகை படிப்படியாகத்தான் தளர்த்த முடியும் முதல்வருடன் ஆலோசைத்த மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர். தமிழக முதலமைச்சர் உடன் 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழு முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டது. ஆலோசனை முடிவில் பல்வேறு விதமான பரிந்துரைகளை மருத்துவ நிபுணர் குழு தமிழக அரசு அளித்தது. அதனடிப்படையில் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று என்பது மிகவும் அதிகரித்து இருப்பதாகவும், குறிப்பாக ஊரடங்கு தளர்வை படிப்படியாகத்தான் பண்ண முடியுமே தவிர, ஒரே நேரத்தில் தளர்த்த முடியாது […]
மே முதல் நாளை நினைவு கூர்ந்திடும் வகையில், திமுக சார்பில் அனைத்து தொழிலாளர்களுக்கும் மே தின வாழ்த்துக்களை மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ” தொழிலாளர் சமுதாயத்தின் பக்கம் எப்போதுமே உறுதியுடன் திமுக துணை நிற்கும். கொரோனா பேரிடராலும் மத்திய, மாநில அரசுகளின் பாராமுகத்தாலும் தொழிலாளர்கள் பரிதவிக்கின்றனர். தொழிலாளர்களின் உரிமைகளை மீட்டெடுக்க திமுக போராடும் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச தொழிலாளர் அமைப்பு 101வது ஆண்டில் காலடி எடுத்து வைப்பது, […]
சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக காணொலி மூலம் மருத்துவ நிபுணர் குழுவுடன் இன்று மாலை முதல்வர் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள சவால்களுக்கு தீர்வு காணும் நோக்கில், சிறப்பு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய 19 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்திருந்தது. ஏற்கனவே, இந்த மருத்துவக்குழு பரிந்துரைத்ததன் படி, ஏப்ரல் 14ம் தேதியோடு முடிவடைய […]
எந்தெந்த தொழில்களை படிப்படியாக தொடங்கலாம் என அறிக்கை அனுப்புங்கள் என மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கூறியதாவது, ” அரசின் நிவாரண உதவிகள் கிடைக்காமல் விடுபட்டவர்களை கண்டறிந்து வழங்குங்கள். நோய்த்தடுப்பு பகுதிகளில் நகரும் கழிப்பறை வசதிகளை மேற்கொள்ள வேண்டும். விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல விவசாயிகளுக்கு தடை இருக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளார். 100 நாள் வேலைத்திட்டம், சமூக விலகலுடன் முகக் கவசம் அணிந்து நடைபெறுவதை உறுதி […]
பஞ்சாப் மாநிலத்தில் மேலும் 2 வாரத்துக்கு முழு ஊரடங்கை நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காலை 7 மணி முதல் 11 மணி வரை கடைகள் திறக்கப்பட்டு மக்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 35வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இதன் காரணமாக தான் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட […]
கேரளாவில் வளர்த்து வந்த ஆட்டை விற்பனை செய்து முதல்வர் நிவாரண நிதிக்கு பெண்ணொருவர் பணம் வழங்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கொரோனா ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாக முதல்வர் பினராஜி விஜயன் அறிவித்த நிலையில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வறுமையான குடும்ப சூழலில் வாழ்ந்து வரும் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த சுபைதா என்ற பெண், முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் அனுப்பி உள்ளார். சுபைதாவின் கணவர் இதயநோயாளி. டீ கடை நடத்தி வாழ்க்கையை நகர்த்துபவர் […]
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியுடன் மத்தியக் குழு ஆலோசனை நடத்தி வருகிறது. தமிழகத்திற்கு தேவையான நிதி குறித்து மத்தியக்குழுவிடம் அறிக்கை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய அளவில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழகமும் இருப்பதால், இங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆய்வு செய்ய மத்தியக் குழு கடந்த சனிக்கிழமை தமிழகம் வந்தது. தேசியப் பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் கூடுதல் செயலாளா் வி.திருப்புகழ் தலைமையிலான அக்குழுவில் டெல்லி சப்தா்ஜங் மருத்துவமனையின் டாக்டா் அனிதா கோகா், தேசிய […]
கொரோனா வைரஸ் பரவல் குறித்து காணொலிக் காட்சி மூலம் இன்று அனைத்து மாநில முதல்வர்கள் உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். நாடு முழுவதும் கொரோனாவால் 27,892 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 872 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், கொரோனா பரவலை தடுக்க அமலில் உள்ள நாடு தழுவிய ஊரடங்கு இன்னும் 6 நாட்களில் முடிவடைய உள்ளது. கடந்த மார்ச் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்கு 2ம் கட்டமாக 34வது நாளாக அமலில் உள்ளது. […]
ஜூன் 30 வரை எந்தவொரு பொதுக்கூட்டத்தையும் மாநிலத்தில் அனுமதிக்க வேண்டாம் என்று உத்தரபிரதேச முதலமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். நிலைமையைப் பொறுத்து மேலும் சில முடிவு எடுக்கப்படும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலகம் தகவல் அளித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் 32வது நாளாக அமலில் உள்ளது. மே 3ம் தேதியோடு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், 27ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி கட்சி மூலம் 3வது முறையாக ஆலோசனை நடத்த உள்ளார். மேலும், […]
நாளை முதல் நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் பகுதிக்கு முதல்வர் தற்போது ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூ மாநகராட்சி பகுதியிலும், திருவள்ளூர் ,செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளில் நாளை முதல் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவையான மளிகை பொருட்களை வாங்குவதற்கு கடை வீதிகளில் கூடினர். பல பகுதிகளில் […]
ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி இன்று சுய உதவிக் குழுக்களான டி.டபிள்யு.சி.ஆர்.ஏ எனப்படும் கிராமப்புறங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சி அமைப்புகளுக்கு ஒய்.எஸ்.ஆர் ஜீரோ வட்டி கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன் மூலம், 91 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு பயனடைவார்கள் என மணிலா அரசு தெரிவித்துள்ளது. மேலும், சுமார் 8.78 லட்சம் குழுக்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.1,400 கோடி செலுத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அலுவலகம் தகவல் அளித்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 31வது நாளாக […]
சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் ஏப்.26ம் தேதி காலை முதல் 29ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த 3 மாநகராட்சிகளில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக, சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய மாநகராட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சேலம், திருப்பூரில் 26ம் தேதி காலை முதல் 28ம் […]
கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவரின் குடும்பத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது ஆறுதலை தெரிவித்துள்ளார். மருத்துவரின் மனைவி மற்றும் மகனிடம் பேசிய முதல்வர் தனது ஆறுதல்களை வழங்கியுள்ளார். தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்யும்போது தொடர்ச்சியாக எழும் எதிர்ப்பு மருத்துவ சமூகத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. சென்னையில் உள்ள நியூ ஹோப் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும் நரம்பியல் நிபுணருமான மருத்துவர் சைமன் ஹெர்குலிஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று சென்னை […]
ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி, மாநிலத்தில் உள்ள அனைத்து மசூதிகள், கோயில்கள் மற்றும் தேவாலயங்களுக்கு ரூ .5 ஆயிரம் உதவி வழங்கப்படும் என்று அறிவித்தார். கொரோனா வைரசுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முஸ்லிம் மதத் தலைவர்களுடன் இன்று வீடியோ கான்பரென்ஸ் நடத்திய போது ஆந்திர முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த கூட்டத்தில், புனித ரமலான் மாதத்தில் வீடுகளில் பிரார்த்தனை செய்யுமாறு சமூகத்தை வலியுறுத்தியதற்கான தனது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட […]
ஊரடங்கின் போது முடிதிருத்தும் கடைகளைத் திறக்க முன்னர் ஒரு முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் பல நிபுணர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கேரள அரசு இந்த முடிவை வாபஸ் பெறுவதாக பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். முன்னதாக, கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், பல்வேறு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கேரளத்தில் இன்று புதிதாக 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 6 பேரும் கண்ணூரை சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், […]
சத்தீஸ்கர் மாநிலத்தில் கொரோனவால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரே ஒரு சிவப்பு மண்டல மாவட்டம் மட்டுமே உள்ளது. இங்கு கடந்த 72 மணி நேரத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. எனவே, சத்தீஸ்கர் முழுவதும் விரைவில் பசுமை மண்டலமாக இருக்கும் என்று தான் நம்புவதாக அம்மாநில முதல்வர் கூறியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மாநிலத்தில் ஒரே ஒரு ரெட் சோன் பகுதி மட்டுமே […]
ஈரானில் சிக்கி தவிக்கும் மீனவர்கள் 650 பேரை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் தரைவழி, வான்வழி மற்றும் கடல் வழி போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், ஊரடங்கு அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாகவே தமிழக மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். தற்போது, ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் ஈரானில் உணவின்றி தவித்து […]
சேலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 7 பேர் குணமடைந்துள்ளனர் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு தகவல்களை தெரிவித்தார். அதில், சேலத்தில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்படுவதற்கு […]
சேலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 7 பேர் குணமடைந்துள்ளனர் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சேலத்தில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்படும் அதற்க்கு ஏற்ப சேலம் மாவட்டத்தில் அரசு நடவடிக்கை […]
கடந்த மாதத்தை ஒப்பிடும் போது காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது என்று முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு தமிழக அரசு திறம்பட மேற்கொண்டு வருகிறது. தமிழக முதல்வரும் இதுகுறித்து பலகட்ட ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, பல்வேறு நடவடிக்கைகளையும், உத்தரவுகளையும், அறிவிப்புகளையும் பிறப்பித்து வருகிறார். இந்நிலையில் மாவட்டம்தோறும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வகையில் மாவட்ட ஆட்சியருடன் தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். […]
வெளிநாடுகளுக்கு சென்று திரும்பிய பணக்காரர்கள்தான் கொரோனாவை இறக்குமதி செய்துள்ளனர் என்று முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு தமிழக அரசு திறம்பட மேற்கொண்டு வருகிறது. தமிழக முதல்வரும் இதுகுறித்து பலகட்ட ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, பல்வேறு நடவடிக்கைகளையும், உத்தரவுகளையும், அறிவிப்புகளையும் பிறப்பித்து வருகிறார். இந்நிலையில் மாவட்டம்தோறும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வகையில் மாவட்ட ஆட்சியருடன் தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். […]