ஜார்கண்ட் மாநிலத்தில் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்கண்ட் முக்தி மோர்சா காங்கிரஸ் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் அங்கு முதல் மந்திரி ஹேமந்த் சோரன் தனக்குத்தானே நிலக்கரி சுலங்கம் ஒதுக்கீடு செய்த விவகாரம் அவருடைய பதவிக்கு பிரச்சினையாக மாறியிருக்கிறது. அவரை எம்எல்ஏ பதவியில் இருந்து நீக்க வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு எதிர் கட்சியான பாஜக கோரிக்கை வைத்துள்ளது. அதன் பேரில் விசாரணை மேற்கொண்டு அவரது எம்எல்ஏ […]
Tag: முதல் மந்திரி
காவலர் நினைவு தினத்தை முன்னிட்டு உத்திரபிரதேசத்தில் பணியின் போது உயிரிழந்தவர்களுக்கு அந்த மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அஞ்சலி செலுத்தியுள்ளார். அதன் பின் நிகழ்ச்சியில் பேசிய அவர் நாட்டின் பாதுகாப்பை பேணுவதில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ராணுவம், துணை ராணுவம் மற்றும் காவல்துறை வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் தருணம் இது. கடந்த ஐந்து வருடங்களில் உத்தரப்பிரதேச போலீஸ் நடத்திய என்கவுண்டரில் 166 குற்றவாளிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர் மேலும் 4,453 பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில் காவலர்களின் குடும்ப நலன் […]
மத்திய பிரதேசத்தில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் சுஹாகி பஹரி என்னும் பகுதி அருகே சென்று கொண்டிருந்த பேருந்தும் லாரியும் எதிரெதிரே மோதி கொண்டது. இந்த விபத்தில் 14 பயணிகள் உயிரிழந்திருக்கின்றனர் மேலும் 40 பேர் காயமடைந்து இருக்கின்றனர். அவர்களில் 20 பேர் உத்திரப்பிரதேசத்தில் பிரக்யா ராஜ் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றனர். […]
நாய்கள் தொல்லை தொடர்பாக கேரளா முதல் மந்திரி பினராய விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, கேரளாவில் நாய்களை கொன்று குவிப்பதனால் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது. அதே சமயம் நாய்களை விஷம் வைத்தும் அடித்தும் கொன்று குவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நிலையில் நாய்கள் கூட்டமாக சுற்றி திரிவதும் கூடுவதும் அவைகளின் குற்றமல்ல. தெரு ஓரங்களில் கண்ட கண்ட இடங்களில் பொதுமக்கள் வீசியயெறியும் மாமிசம் உட்பட கழிவுகளை உன்னத்தான் அவைகள் கூடுகின்றது. அதேசமயம் அந்த வழியாக செல்பவர்களை […]
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான்(48) சென்ற 6 வருடங்களுக்கு முன் முதல் மனைவியை விவாகரத்து செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்த குழந்தைகள் தன் தாயுடன் அமெரிக்க நாட்டில் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் பஞ்சாபில் சென்ற சட்டப்பேரவை தேர்தலில் ஆம்ஆத்மி வரலாறு காணாத வெற்றியை பெற்று ஆட்சியை பிடித்தது. இதனையடுத்து பகவந்த்சிங் மான் அந்த மாநிலத்தின் 17-வது முதல்வராக கடந்த மார்ச் 16ஆம் தேதி பதவியேற்றார். இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் […]
பாகிஸ்தானில் பிரதமராகயிருந்த இம்ரான் கான் தலைமையிலான அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றியடைந்தது. இதையடுத்து இம்ரான்கான் பதவிநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் பஞ்சாப்மாகாண முதல் மந்திரி உஸ்மான் புஸ்தார் தன் ராஜினாமாவை மாகாண கவர்னர் சவுத்ரி முகமது சர்வாரிடம் வழங்கிய நிலையில் அவரும் அதை ஏற்று கொண்டார். அதன்பின் பஞ்சாப் அமைச்சரவை கலைக்கப்பட்டது. அடுத்ததாக பஞ்சாப் மாகாணத்தின் புது முதல்-மந்திரியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு சென்ற 2ஆம் தேதி காலை 11 மணிக்கு […]
பஞ்சாபில் முதல் மந்திரி பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. இங்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கு முன்பு காங்.,கை சேர்ந்த அப்போதைய முதல் மந்திரி சரண்ஜித் சிங்கின் உறவினர் பூபிந்தர் சிங் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ரூ.10 கோடி ரொக்கமானது கைப்பற்றப்பட்டது. இதையடுத்து விசாரணையில் சட்டவிரோத மணல்குவாரி நடத்துபவர்கள் லஞ்சமாக கொடுத்த பணம் என்பது தெரியவந்தது. அதன்பின் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், முன்னாள் […]
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் முதல் மந்திரி உஸ்மான் புஷ்டர் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. பாகிஸ்தானில் கடந்த சில வருடங்களாக நிதி நெருக்கடி அதிகரித்து வருகிறது. இதனால் பிரதமர் இம்ரான்கான் அரசாங்கத்தின் மீது கடும் விமர்சனங்கள் எழுந்திருக்கிறது. எனவே பிரதமர் அரசாங்கத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையற்ற தீர்மானம் தாக்கல் செய்வதற்கு திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு, பிரதமர் இம்ரான்கான் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் சிலரே ஆதரவு தெரிவிக்க வாய்ப்பிருக்கிறது என்று நம்பப்படுகிறது. எனவே, இம்ரான் கானின் ஆட்சிக்கு […]
நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், தற்போது உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் காரணமாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதி வேகமாக பரவி வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் அதிகரித்து வருகிறது. இப்படி கொரோனா தொற்று அச்சுறுத்தி வரும் நிலையில், அசாம் மாநில அரசு ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சி அடையும் செய்தியை அம்மாநில முதல்-மந்திரி. ஹிமாந்தா பிஸ்வா சர்மா அறிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அரசு ஊழியர்கள் ஜனவரி […]
403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு வருகின்ற மார்ச் மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பல்வேறு தரப்பினர் இடையில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், எஐஎம்ஐஎம் உட்பட பல்வேறு கட்சிகள் களமிறங்க இருக்கின்றன. ஆகவே தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு கட்சிகளும் தேர்தல் களத்தில் […]
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களின் மூலம் கேரள முதல்-மந்திரி பினராயிவிஜயனுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. பாலக்காடு எலப்புள்ளி கிராமப் பகுதியில் வசித்து வருபவர் ஜெயபிரகாஷ். 44 வயதுடைய இவர் பா. ஜனதா தொண்டர் ஆவார். இந்தநிலையில் ஜெயபிரகாஷ் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சமூக வலைதளங்கள் மூலம் கேரள முதல்-மந்திரி எனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் ஆபாசமாகவும் பேசி உள்ளதாக சொல்லப்படுகிறது. இதைப் பற்றி அறிந்த கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் ஜெயப்பிரகாஷ் மீது […]
பஞ்சாப் மாநில முதல்-மந்திரியான சரண் ஜித் சிங் சன்னி, கர்தார்பூரின் குருத்வாராவில் தரிசனம் செய்ய பாகிஸ்தானிற்கு இன்று சென்றுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பஞ்சாப் மாநிலத்திற்கு அருகில் இருக்கும் பாகிஸ்தான் எல்லை பகுதியில் கர்தார்பூர் பகுதி இருக்கிறது. சீக்கிய மதத்தை உருவாக்கிய குருநானக், தன் இறுதி நாட்களில் இப்பகுதியில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. குருநானக்கின் நினைவாக, “தர்பார் சாஹிப்” எனும் பெயரில் ஒரு குருத்வாரா அங்கு அமைக்கப்பட்டுள்ளது. சீக்கிய மதத்தை சேர்ந்தவர்கள், அவர்களது வாழ்நாளில் ஒரு தடவையாவது அங்கு சென்று […]
இமாச்சல பிரதேசத்தில் தட்டச்சு பிழையால் முதல் மந்திரிக்கு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதல்-மந்திரியாக ஜெய்ராம் தாக்குர் உள்ளார். பாஜக ஆட்சி நடக்கும் மாநிலங்களான கர்நாடகா, குஜராத், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து முதல்வர் மாற்றப்பட்டு வருகின்றன. இந்த வகையில் இமாசல பிரதேசத்திலும் முதல்வர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் பரவி வந்துள்ளது. இந்நிலையில் மாநில மக்கள் தொடர்பு திட்ட சமீபத்தில் வெளியிட்டது. அதில் முதல் மந்திரி பெயரை […]
குஜராத் மாநில த்தின் முதல்-மந்திரி விஜய் ரூபானி நேற்று முன்தினம் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பாக மாநில கவர்னர் ஆச்சார்யா தேவ்ராத்தை சந்தித்து பேசிய அவர், தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதையடுத்து, குஜராத்தின் அடுத்த முதல் மந்திரி யார்? என்பதை தேர்வு செய்யும் பணியில் கட்சித் தலைமை தீவிர ஆலோசனை நடத்தி வந்தது. அதன் பிறகு குஜராத்தின் புதிய முதல் மந்திரியாக பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டார்.இந்நிலையில் பூபேந்திர படேல் தலைமையிலான […]
பிரதமர் இம்ரான் கான் அப்துல் காயிம் நியாசி என்பவரை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முதல் மந்திரியாக நியமித்துள்ளார். பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி அண்மையில் நடந்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 53 இடங்களைக் கொண்ட சட்டசபை தேர்தலில் 32 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் முதன்முதலாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி ஆட்சி அமைக்கிறது. ஆனால் பாகிஸ்தானின் […]
அயோத்தியில் நடந்த தீப உற்சவ நிகழ்ச்சி இதற்கு முந்தைய சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளதாக முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள அயோத்தியில் ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள் ராமாயணத்தின் படி ராமபிரான் வனவாசம் சென்று விட்டு நாடு திரும்பிய நிகழ்வைக் கொண்டாடும் வகையில் தீப உற்சவம் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, தீப உற்சவம் எப்போதும் உள்ள ஆரவாரத்துடன் நடைபெறுமா? என்ற சந்தேகம் இருந்தது. […]
டெல்லியில் கொரோனா நோயை விரட்டியடிக்க முக கவசம் மட்டுமே மிக சிறந்த மருந்து என்று அம்மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், “கொரோனாவின் இரண்டு அலைகளை டெல்லி மக்கள் விரட்டி விட்டனர். ஆனால் கொரோனா மூன்றாவது அலையில் சிக்கியுள்ளனர். இதனை மிக விரைவில் கடந்து விடுவார்கள். இந்த கொடூர கொரோனா பொருளாதாரம், பாலின மற்றும் வயது என்ற எந்த வேறுபாடும் காட்டாமல் […]
கர்நாடக மாநிலத்தில் தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என்ற தடை உத்தரவை அம்மாநில முதல்-மந்திரி எடியூரப்பா இன்று அறிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் வருகின்ற 16ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகளை வெடிக்க தடை விதிப்பது பற்றி அம்மாநில அரசு பரிசீலனை செய்து வந்துள்ளது. மக்களின் நலனை கருத்தில் கொண்டு இராஜஸ்தான் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் […]
மராட்டிய மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மராட்டிய மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியான தேவேந்திர பட்னாவிஷிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது பற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ” கொரோனா தொடங்கிய நாள் முதல் இன்று வரை ஒவ்வொரு நாளும் நான் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறேன். அதனால் தற்போது கடவுள் என்னை ஓய்வு எடுக்கச் சொல்லி இருக்கிறார். எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் என்னைத் தனிமைப் […]
மராட்டிய மாநிலத்தில் 7 மாதங்களுக்கு மேலாக வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளதால் பாரதிய ஜனதா கட்சியினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மராட்டிய மாநிலத்தில் 7 மாதங்களுக்கு மேலாக கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.அதனால் கோவில்களை திறக்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் கவர்னர் பகத்சிங், முதல் மந்திரி உத்தவ் தாக்கரேக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், “இந்து மதத்தின் தீவிர பக்தராக இருந்த நீங்கள் தற்போது வரை வழிபாட்டுத் தலங்கள் […]
கர்நாடக மாநிலத்தில் பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்று மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்-மந்திரி எடியூரப்பா இன்று பெங்களூரில் ஆலோசனை நடத்த உள்ளார். கர்நாடக மாநிலத்தில் தற்போது கொரோனா பாதிப்பு வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. அதனால் தினந்தோறும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் வருகின்ற 15ஆம் தேதிக்கு பின்னர் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பது பற்றி மாநில அரசுகள் முடிவு செய்துகொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து பள்ளி திறப்பதற்கு கர்நாடக அரசு மிக தீவிரமாக […]
உத்திரப்பிரதேச மாநில முதல்-மந்திரி பதவியிலிருந்து விலக வேண்டும் இல்லையென்றால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் கூறியுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி அம்மாநிலத்தில் உள்ள பல்ராம்பூர் என்ற மாவட்டத்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட 22 வயதுடைய இளம் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த கொடூர சம்பவங்களுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் […]
மேற்கு வங்காளத்தில் கொரோனா பரவல் காரணமாக செப்டம்பர் 20ஆம் தேதி வரையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்தியாவில் ஜூன் மாதத்திலிருந்து ‘அன்லாக்’ என்ற முறையின் மூலமாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீடிக்கப்பட்டு வருகின்றது. இருந்தாலும் கொரோனா பரவல் காரணமாக பெரும்பாலான மாநிலங்களில் உள்ள குறிப்பிட்டப் பகுதிகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது. மத்திய அரசு ‘அன்லாக் 4’ பற்றி […]
கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பாவுக்குக் கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் தற்போது அவரின் மகளுக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. முதல் மந்திரியாக எடியூரப்பா இருந்து கொண்டிருக்கிறார். 77 வயது நிறைவடைந்த இவர்தான், பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் அதிக வயதுடைய முதல்-மந்திரி ஆவார். இந்நிலையில் கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு அதிவேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில், எடியூரப்பா கொரோனா தடுப்பு பணி தொடர்பாக மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுடன் அடிக்கடி ஆலோசனை கூட்டம் நடத்தி […]