நியாய விலை கடைகளுக்குச் சென்று ரேஷன் பொருட்கள் வாங்க இயலாத முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இனி அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மூலம் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று உணவு பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. ரேஷன் கடைகளில் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மூலம் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான படிவத்தை நியாயவிலை கடைகளில் பெற்று பூர்த்தி செய்து அவர்களிடம் பொருட்களை வழங்க வேண்டும். இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “நியாயவிலை கடைகளுக்கு வர முடியாத முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் அங்கீகரிக்கப்பட்ட […]
Tag: முதியோர்கள்
இந்தியாவில் ஏழை மற்றும் முதியவர்களின் நலனுக்காக மாதம் 300 ரூபாய் வழங்கும் திட்டத்தை மோடி அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் ஏழை மற்றும் முதியவர்களுக்காக மத்திய அரசு பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மன்தன் என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அந்தத் திட்டத்தில் அமைப்புசாரா துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 60 வயதிற்கு பிறகு மாதம் 3,000 ரூபாய் ஊதியம் வழங்கப்படும். இந்த திட்டத்தை மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கியது. இந்தத் திட்டத்தின் கீழ் மார்ச் 4 […]
பிரான்சில் முதியோர் இல்லங்களில் வசிக்கும் முதியவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் வெளியில் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பிரான்சில் பரவ ஆரம்பித்த நிலையில் தற்போது பிரிட்டனில் உருமாற்றம் அடைந்த கொரோனாவும் பிரான்சில் தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது. எனவே இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரான்சில் தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் முதியவர்கள் தாங்கள் வசிக்கும் முதியோர் இல்லங்களில் […]
சென்னையில் மாநகரப் பேருந்துகளில் பயணிக்க இன்று முதல் முதியவர்களுக்கு இலவச டோக்கன் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. […]