திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முத்தரசன்,கடந்த முறை அண்ணா திமுக தான் ஆட்சியில் இருந்தது. எடப்பாடி பழனிச்சாமி தான் முதலமைச்சராகவும் இருந்தார். அந்த ஆளுநர் இப்போது பஞ்சாப் மாநிலத்தில் ஆளுநராக இருக்கிறார். இங்க இருந்து குடைச்சல் கொடுத்துட்டு, இப்ப நேர அங்க குடைச்சல் கொடுக்க போயிட்டார். யாருமே ஆளுநர் கிடையாது, எல்லாருமே குடைச்சல் கொடுப்பவர்கள் தான். […]
Tag: முத்தரசன்
கோவை சிரியன் சர்ச் சாலையிலுள்ள ஜீவா இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன் செய்தியாளர்கள் சந்தித்து பேசியதாவது, எம்பி ஆ.ராசா சனாதனம் பற்றி பேசியதை இந்துமதத்தை குறித்து பேசியதாக கலவரத்தை உண்டாக்க நினைக்கின்றனர். மத்திய அரசின் சிபிஎஸ்இ 6ம் வகுப்பு பாடத்திட்டத்தில் சனாதன குறித்து இருக்கிறது. அதாவது மேல்ஜாதி, கீழ்சாதி என படத்தோடு இருக்கிறது. இதற்கு மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும். இதனிடையில் இதனை நீக்கவில்லை எனில் இந்த பாடத்திட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் எரிக்கவேண்டிய […]
புதுச்சேரி ராஜ்நிவாசில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சித்திரை முழுநிலவு விருந்து முதல் முறையாக கவர்னர் தமிழிசை அழைத்தார். அதில் பல்வேறு கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த விருந்தை காங்கிரஸ் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன. புதுச்சேரியில் கவர்னர் தமிழிசைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு போட்டியாக கவர்னர் தமிழிசை சூப்பர் முதல்வராக செயல்பட்டு வருகிறார் என்று கூறினார். இது குறித்து பேசிய கவர்னர் […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முத்தரசன் கூறியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை 10 ஆண்டுகளுக்குப் பின்னர் நடத்த முயற்சி எடுத்துள்ள திமுக அரசுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இத்தனை காலமாக நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இல்லாமல் அதிகாரிகளின் செயல்பாடுகளால் மக்கள் கடும் […]
நேற்று புதுவையில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன், “தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பில் 21 விதமான பொருள்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பொங்கல் முடிந்தும் புதுவையில் மட்டும் இன்னும் அறிவிக்கப்பட்ட பொருட்கள் மக்களுக்கு சென்றடையவில்லை. அதேபோல் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக புத்தாண்டு மற்றும் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் புதுவையில் தடை ஏதும் விதிக்கப்படவில்லை. இதன் காரணமாக இப்போது புதுவையில் கொரோனா தொற்று பாதிப்பு மூவாயிரமாக உயர்ந்துள்ளது. அரசின் செயல்பாடுகளால் […]
“பெரியார் சிலையை அவமதிப்பது மனநிலை பாதித்த காரியம் இல்லை. இது திட்டமிட்ட சதிச்செயல் எனவே இதனை செய்தவரை கடுமையாக தண்டிக்க வேண்டும்” என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெள்ளலூரில் பெரியார் சிலைக்கு கடந்த சனிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் செருப்பு மாலை போட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவைக் கொண்டு காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இச்சம்பவத்தில் […]
இல்லம் தேடி கல்வித்திட்டத்தை மரக்காணம் முதலியார் குப்பத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விழுப்புரம், கடலூர், நாகை, தஞ்சை, காஞ்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் பள்ளி முடிந்த பிறகு தினமும் மாலை ஒரு மணி நேரம் ஆடல், பாடல், நாடகம் மூலம் பள்ளி குழந்தைகளுக்கு தன்னார்வலர்களால் கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இல்லம் தேடி கல்வித்திட்டம் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை அரசு பரிசீலிக்க வேண்டும் என்று இந்திய […]
முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடைபெறும் சோதனை பழிவாங்கும் நடவடிக்கை கிடையாது என்று கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.. கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்து முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர் விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி, ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், கடந்த ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக […]
செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், தமிழ்நாட்டில் நடைபெற இருக்கின்ற தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தேர்தல் என்பது மிக மிக முக்கியமான தேர்தலாகும். இந்த தேர்தலில் தொகுதிகளின் எண்ணிக்கையா ? இலட்சியமா என்று கேட்டாள் லட்சத்திற்கு தான் முதலிடம் கொடுக்கப்படும். ஏனென்றால் தமிழ்நாடு வகுப்புவாததிற்கு எதிராக களம் கொண்ட மாநிலம். சாதிவெறிக்கு மதவெறிக்கு இடமளிக்காத தமிழ்நாட்டு மக்கள் ஒற்றுமையை கட்டி காத்து வருகின்றனர். சமூக நீதிக்காக போராடி வெற்றி பெற்ற மாநிலம். அப்படிப்பட்ட […]
தமிழகத்தில் மூன்றாவது அணிக்கு வாய்ப்பில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அவர்களின் போராட்டத்திற்கு அரசு எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி தான் ஒரு விவசாயி என்பதை மறந்து வேளாண் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். வேளாண்சட்டதை திரும்ப பெரும் வரும் வரை […]
ரஜினி மற்றும் கமல் ஒரு போதும் கருணாநிதி,ஜெயலலிதாவின் வெற்றிடத்தை நிரப்ப முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி அளித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தேனி மாவட்டத்தில் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியது, பா.ஜ.க வரும் சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வென்று விடலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறது. ஆனால் அவர்களின் கனவை நாங்கள் முறியடிப்போம். அதுவே எங்கள் முதல் பணி. ஜாதி மத பேதமற்ற பொதுவுடைமை சமுதாயத்தை […]
அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்க்கு சலுகைகள் கிடைக்கக்கூடாது என்பதில் மத்திய பாரதிய ஜனதா அரசு மிகவும் உறுதியாக உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் திரு முத்தரசன் அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருவதாக சாட்டினார்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் திரு முத்தரசன், கார்ப்பரேட் முதலாளிகளுக்காக விவசாயிகளுக்கு எதிராக சட்டம் இயக்குகின்றனர் என குற்றம் சாட்டியுள்ளார். விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை மத்திய பாஜக அரசு ஏற்று நடைமுறைப்படுத்துவதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் திரு முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு நன்மை செய்ய, விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை மத்திய அரசு இயக்குவதாக சாடினார்.