தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு டிசம்பர் 5ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவான் ஓடை தர்கா கந்தூரி விழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும். இந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.. குறிப்பாக இவ் விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு நிகழ்வுக்கு மட்டும் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள். இந்நிலையில் திருவாரூர் ஜாம்புவான் ஓடை தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு […]
Tag: முத்துப்பேட்டை
திருவாரூரில் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு டிசம்பர் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்தது மாவட்ட நிர்வாகம். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவான் ஓடை தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் டிசம்பர் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். டிசம்பர் 5ஆம் தேதி விடுமுறை விடப்படுவதால் அதை ஈடு செய்யும் விதமாக டிசம்பர் 10ஆம் தேதி பணி நாளாக கருதப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள முத்துப்பேட்டை-ஜாம்புவானோடை தர்ஹா மஹான் செய்குதாவுது ஒலியுல்லா ஆண்டவரின் 720 வது ஆண்டு விழா கொடி ஊர்வலமாக புறப்பட்டு பழைய, புதிய பேருந்து நிலையம், ஆசாத் நகர் வழியாக சென்று மீண்டும் தர்ஹாவை அடைந்து கந்தூரி விழா கடந்த டிசம்பர் 5 தேதி கொடி ஏற்றப்பட்டது . கடந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக இந்த விழாவிற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த வருடம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முத்துப்பேட்டை கந்தூரி […]
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள முத்துப்பேட்டை-ஜாம்புவானோடை தர்ஹா மஹான் செய்குதாவுது ஒலியுல்லா ஆண்டவரின் 720 வது ஆண்டு விழா கொடி ஊர்வலமாக புறப்பட்டு பழைய, புதிய பேருந்து நிலையம், ஆசாத் நகர் வழியாக சென்று மீண்டும் தர்ஹாவை அடைந்து கந்தூரி விழா கொடி ஏற்றப்பட்டது . கடந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக இந்த விழாவிற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த வருடம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முத்துப்பேட்டை கந்தூரி விழாவையொட்டி வரும் டிசம்பர் 15ஆம் […]
சட்டவிரோதமாக முயல்களை வேட்டையாடிய 5 பேரை வனத்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை வனச்சரக அலுவலர் தாஹிர் அலி தலைமையில் வனக்காப்பாளர்கள் சகிலா, சிவநேசன், கணேசன் ஆகியோர் தொண்டியகாடு முதல் அதிராம்பட்டினம் வரை இரவு வேளையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மரவக்காடு அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 5 பேரை வனக்காப்பாளர்கள் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை கிராமத்தைச் சேர்ந்த முருகேசன், […]
வெளிநாட்டுக்கு திமிங்கலத்தின் உமிழ்நீரினை கடத்துவதற்கு முயற்சி செய்த 2 நபர்கள் கையும் களவுமாக பிடிபட்டனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை பகுதிகளில் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட திமிங்கலத்தின் உமிழ்நீர் விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இந்நிலையில் முத்துப்பேட்டை அருகிலுள்ள உப்பூர் பகுதியிலிருந்து திமிங்கலத்தின் உமிழ்நீர் வெளிநாட்டுக்கு கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி தஞ்சை ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் இளகுமணன் மற்றும் வனத்துறையினர் அப்பகுதிக்குச் […]
பறிமுதல் செய்யப்பட்ட சணல் வெடிகுண்டுகளை காவல்துறையினர் செயலிழக்க செய்தனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள முத்துப்பேட்டையில் வியாபாரம் செய்வதற்காக கடந்த 2019-ஆம் ஆண்டு அனுமதியின்றி ஒரு இடத்தில் சணல் வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது. அப்போது அங்கு சென்ற காவல்துறையினர் சணல் வெடிகுண்டுகள், அதற்கு பயன்படுத்தப்படும் திரி, புஸ்வானம் தயாரிப்பதற்கான மண் குடுவை, ஒலக்கை வெடி போன்றவற்றை பறிமுதல் செய்ததோடு சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களை காவல்துறையினர் பாதுகாத்து வந்த நிலையில் அதனை […]
திருமணமான 4 மாதத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள உப்பூர் கிராமத்தில் ரத்தினவேல் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கும் பாளையங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கிருபாகரன் என்பவரின் மகள் பிரதீபாவுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 வயதில் நிவிதா என்ற பெண் குழந்தை இருக்கின்றது. இதில் ரத்தினவேல் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் பிரதீபா வீட்டின் பின்புறத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து […]
முத்துப்பேட்டை அருகில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வடகாடு கிராமத்தில் காசிநாதன் மனைவி கோவிந்தம்மாள் (103) வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 மகனும், 1 மகளும், 8 பேரன்களும், 5 பேத்திகளும், 8 கொள்ளுப் பேரன்களும், 5 கொள்ளு பேத்திகளும் இருக்கின்றனர். இதனையடுத்து மூதாட்டி கோவிந்தம்மாள் உடல் ஆரோக்கியத்துடன் தினசரி தனது பணிகளை தானே சுறுசுறுப்பாக செய்து வந்துள்ளார். அதன்பின் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் […]