இன்று கொண்டாடப்பட்டது. அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அந்தவகையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தென்னகத்து போஸ் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பதிவில், “கொடுங்கோல் சட்டத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டியவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நேதாஜியின் கரத்தை வலுப்படுத்தியவர். “தென்னகத்து போஸ்” ஐயா பசும்பொன் திருமகனார் முத்துராமலிங்கத் தேவரின் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Tag: முத்துராமலிங்க தேவர்
முத்துராமலிங்க தேவரின் 115 வது ஜெயந்தி விழா மற்றும் அறுபதாவது குருபூஜை விழா பசும்பொன்னில் இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சூழலில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவரது குருபூஜை நாளில் வழங்குகிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தமிழில் வெளியிட்டுள்ள twitter பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, பெருமதிப்பிற்குரிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகின்றேன். சமூக மேம்பாடு, விவசாயிகள் […]
பிரதமர் நரேந்திரமோடி முத்துராமலிங்கத்தேவரை வணங்குவதாக ட்விட் செய்துள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 115 ஆவது ஜெயந்தி மற்றும் 60ஆவது குருபூஜை விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்தவிழாவையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் என பலரும் பசும்பொன் கிராமத்திற்கு சென்று முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திரமோடி முத்துராமலிங்கத்தேவரை வணங்குவதாக ட்விட் செய்துள்ளார். அதில், பெருமதிப்பிற்குரிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகிறேன். சமூக […]
தென் மாவட்டங்களில் புரட்சித் தாய் சின்னம்மா சுற்றுப்பயணம் மேற்கொண்ட சூழலில் டுவிட்டரில் சின்னம்மா என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங் ஆகியுள்ளது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் 59வது குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் பல்லாயிரக்கணக்கான கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் புடைசூழ புரட்சித் தாய் சின்னம்மா மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். இதேபோல் மதுரையில் உள்ள மருது சகோதரர்கள் சிலைகளுக்கும் புரட்சி தாய் சின்னம்மா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். […]